Friday, January 8, 2010

திரட்டிகளை புறக்கணிக்கும் வலைதளங்கள் சாகின்றன!

வலைதளங்களை வளர்ப்பதுடன் தன்னையும் வளர்த்துக்கொள்பவைதான் திரட்டிகள். வலைதளங்கள் இல்லை என்றால் திரட்டிகளும் தேவையில்லை என்பதும் எல்லோரும் அறிந்த உண்மைதான். ஆனால் வலைதளங்களும் திரட்டிகளும் ஒருவருக்கொருவர் ம்யூச்சுவல் ரெஸ்பக்ட் வச்சிருக்கனும் என்பது வலை உலகில் புரிந்துகொள்ள வேண்டிய, வெளியில் சத்தமாக சொல்லப்படாத, எழுதப்படாத ஒரு சட்டம்.

பொது நன்மைக்காக திரட்டிகளில் நாளுக்கு நாள் மாற்றப்பட்டுவரும் சில, பல சட்டதிட்டங்களையும், மாற்றங்களையும் வலைதளங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மாறாக, இல்லை என் வலைதளம் வளர்ந்துவிட்டது, என் வலைதளம் திரட்டிகள் உதவியில்லாமலே சாதிக்கும் என்ற தப்புக்கணக்கு போட்டு திரட்டிகளை புறக்கணிக்கும் சில வலைதளங்களில் ட்ராஃபிக் மந்தமாகி விசிட்டர்கள் குறைந்துவிட்டதாக தெளிவாகத் தெரிகிறது.

சரி, முழு எழுத்துச் சுதந்திரம் என்பது உண்மையிலேயே யாருக்கும் இருக்கிறதா?

முழு எழுத்துச்சுதந்திரம் என்பது எந்தப் பெரிய எழுத்தாளன், க்ரிட்டிக்கும் கிடையாது என்பது எழுத்து உலகம் அறியும். அந்தச் சுதந்திரம் பத்திரிக்கைகளில் பல பிரபலங்களுக்குக்கூட இல்லாததால்தான் ஞாநி விகடனிலிருந்து குமுதம் போனார்.

வலைதளத்தில் எழுதும் ஃப்ரஃபெஷனல் எழுத்தாளர்கள்கூட தன் விசிறிகளை என்றுமே மனதில் கொண்டு, அவர்களை அனுசரித்தே எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. விசிறிகள் இல்லைனா வலைதளம் ஏது? அதனால் தன் வாசகர்களை இழக்க பயந்துகொண்டு தன் சுதந்திரத்தை இழப்பதும் உண்டு. வலைதளங்களில்கூட ஒருவரும் முழுச்சுதந்திரம் கிடையாது.

சமீபகாலமாக, தன் வலைதளத்தில் நானே ராஜா என்ற அகந்தையுடன் பொய்யையும், ஜோடிக்கப்பட்ட புரட்டுக்ளையும் எழுதி நடந்த உண்மையை மறைத்து எழுதுபவர்கள் நிலைமை இப்போது கேலிக்கூத்தாகிறது. இவர்கள் எழுதும் பொய்களை, உண்மை தெரிந்த பலர் விமர்சிப்பதால் இவர்கள் வலைதளம் இப்போது பெரிதும் பாதிக்க்கப்படுகிறது. இவர்களுக்கு வலைதள உலகில் இருந்த மரியாதை காற்றில் பறக்கிறது. இவ்வளவு நாள் சம்பாரித்த இவர்களுடைய ரெப்யுட்டேஷன் மிகவும் பாதிக்கப்படுகிறது.

"எனக்கும் என் வலைதளத்துக்கும் முழு எழுத்துச்சுதந்திரம் வேணும்" என்று மனப்பால் குடிப்பவர்கள், தாங்களே எழுதி தாங்களே படிச்சுக்க வேண்டியதுதான். திரட்டிகளின் சட்ட திட்டங்களையும் மாற்றங்களையும் புரிந்துகொண்டு திரட்டிகளின் உதவியுடன் வலைதளம் நடத்துபவர்கள்தான் புத்திசாலி!

3 comments:

  1. வாங்க, தல :)

    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. // என் வலைதளம் வளர்ந்துவிட்டது, என் வலைதளம் திரட்டிகள் உதவியில்லாமலே சாதிக்கும் என்ற தப்புக்கணக்கு போட்டு திரட்டிகளை புறக்கணிக்கும் சில வலைதளங்களில் ட்ராஃபிக் மந்தமாகி விசிட்டர்கள் குறைந்துவிட்டதாக தெளிவாகத் தெரிகிறது.//

    இது மறுக்க முடியாத உண்மை

    //வலைதளத்தில் எழுதும் ஃப்ரஃபெஷனல் எழுத்தாளர்கள்கூட தன் விசிறிகளை என்றுமே மனதில் கொண்டு, அவர்களை அனுசரித்தே எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. விசிறிகள் இல்லைனா வலைதளம் ஏது?//

    இதுவும் சரி.. ஆனால் வாசகர்களை தக்க வைக்க எழுத ஆரம்பித்தால் சுய தன்மை போய் விடும்.

    //அதனால் தன் வாசகர்களை இழக்க பயந்துகொண்டு தன் சுதந்திரத்தை இழப்பதும் உண்டு. வலைதளங்களில்கூட ஒருவரும் முழுச்சுதந்திரம் கிடையாது.//

    வழிமொழிகிறேன்

    //எனக்கும் என் வலைதளத்துக்கும் முழு எழுத்துச்சுதந்திரம் வேணும்" என்று மனப்பால் குடிப்பவர்கள், தாங்களே எழுதி தாங்களே படிச்சுக்க வேண்டியதுதான். //

    :-)))

    ReplyDelete
  3. வாங்க கிரி! தங்கள் கருத்துக்கு நன்றி :)

    ReplyDelete