Friday, January 29, 2010

ரஜினி விசிறிகளுக்கு எரிச்சலூட்டும் தமிழ்ப்படம்


ஓம் சாந்தி ஓம் படத்தின் ரீமேக் அல்லது அதை தழுவிய படம்தான் இப்போ வந்திருக்கிற "தமிழ்ப்படம்". இந்த காமெடிப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இளையதளபதி விஜய் படங்களை நக்கலடிப்பதுபோல எடுத்துள்ளதால், ரஜினி/விஜய் ரசிகர்கள் இந்தப்படத்தை ரசிக்கவில்லையாம். மாறாக பயங்கர கடுப்பாகி விட்டார்களாம். என்ன எங்க தலைவரை வச்சு காமெடி பண்ணூறானுகனு கோபத்தில் ரஜினி/விஜய் ரசிகர்கள்/விசிறிகள் இந்தப்படத்தை முழுமையாகப் புறக்கணித்தால் படம் ஃப்ளாபாகிவிடக்கூடும் என்ற பயத்தில் இருக்கிறதாம் படத்தயாரிப்புக்கூட்டம். ரசிகர்களை விடுங்க, ரஜினியும் விஜய்யும் இந்தப் படத்தை ரசிப்பார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி!

சிரிப்புப்படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கும். உங்களை கேலிபண்ணி காமெடிபண்ணி சிரிக்காத வரைக்கும். கடவுளுக்கே அவரை கேலி பண்ணினால் அவரால் ரசிக்க முடியாதாம், பிடிக்காதாம்! அப்படியிருக்கும்போது ரஜினியும் விஜய்யும் மனுஷங்கதானே? இதில் பாதிக்கப்படாத நடிகர்களின் விசிறிகள் இந்தப்படத்தை ரசிக்க வாய்ப்புகள் அதிகமாம்!

6 comments:

  1. நகைச்சுவை படம் என்கிறது விளம்பரங்கள். ஓம் சாந்தி ஓம் பார்த்திருக்கிறேன். உங்கள் விமர்சனம் வித்தியாசமான கோணத்தில்.

    ReplyDelete
  2. விமர்சனம் வித்தியாசமான கோணத்தில்
    Try to a post a good post

    ReplyDelete
  3. **** ராமலக்ஷ்மி said...
    நகைச்சுவை படம் என்கிறது விளம்பரங்கள். ஓம் சாந்தி ஓம் பார்த்திருக்கிறேன். உங்கள் விமர்சனம் வித்தியாசமான கோணத்தில்.***

    வாங்க ராமலக்ஷ்மி!

    அடிப்படையில் அடுத்தவர்கள் படங்களை கிண்டலடிச்சு ஒரு க்ரியேஷனாக வெளியிடுவது எனக்குப் பிடிக்காத ஒண்ணுங்க.

    கடுமையாக விமர்சிப்பது பொதுவாக ஆதாயத்திற்காக கிடையாதுங்க. ஆனால் அதையே வைத்து ஒரு படம் தயாரித்து ஆதாயம் அடைவது வேறு.

    ஷாருக் போன்ற நடிகர்கள் தென் மாநில ப்படங்களை கிண்டலடித்தது பிடிக்கலை.

    அதை காப்பியடிச்ச தமிழ்ப்படம்தான் இந்தத் "தமிழ்ப்படம்". ஒரு சிலரசிகர்களுக்கு இது நிச்சயம் எரிச்சலையும் கோவத்தையும் உருவாக்கும் என்கிற கோணத்தில் இதை எழுதினேன் :-)

    தங்கள் பகிர்தலுக்கு நன்றிங்க ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  4. ***Vijays said...
    விமர்சனம் வித்தியாசமான கோணத்தில்
    Try to a post a good post

    29 January 2010 7:33 PM***

    Hi Vijays :-)

    Thanks for the suggestion. I will try in the future! :-)))

    ReplyDelete
  5. யார் மனமும் புண்படாத வகையில் தான் காமெடி இருக்கு..என்ன சிம்பு ரசிகர்கள்(??) தான் பாவம் :)

    ReplyDelete
  6. ***வெற்றி said...
    யார் மனமும் புண்படாத வகையில் தான் காமெடி இருக்கு..என்ன சிம்பு ரசிகர்கள்(??) தான் பாவம் :)

    30 January 2010 8:04 PM***

    :-))))

    ReplyDelete