
ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் ஆனபிறகு ரஜினியை வைத்து பாலச்சந்தர் இயக்கிய கடைசிப்படம் இது. எம் எஸ் விஸ்வநாதன் இசை.
சரிதாவின் தங்கை இதில் ரஜினியின் தங்கையாக நடித்து இருப்பார். பூர்ணம் விஸ்வநாதன் ரஜினியின் குடும்ப நண்பராக வந்து அழகா நடித்து இருப்பார்.
எனக்குப் பொதுவாக தேங்காய் சீனிவாசனுடைய காமெடி பிடிக்காது. ஆனால் இந்தப் படத்தில் ரஜினி-தேங்காய் மற்றும் ரஜினி- தேங்காய்-செளகாரை வைத்து பாலச்சந்தர் வயிறுவலிக்க சிரிக்க வைத்துள்ளார்.
எனக்கு இந்தப் படத்தில் சில பிடித்த விசயங்கள்
* ரஜினி - மாதவி ரொமாண்ஸ் உண்மையிலேயே படு சூப்பர்.
* மீசையில்லாத ரஜினியும், மாதவியும் பாடும் ராகங்கள் பதினாறு உருவான வரலாறு பாடல் ரொம்ப ரொம்ப ரொமாண்டிக்கா நல்லா இருக்கும். மாதவி படு செக்ஸி
* ரஜினி- பூர்ணம் விஸ்வநாதன் பேசும்போது சொல்லும் சில நிதர்சனங்கள்.
ரஜினி: என்னை ஏன் பிடிக்காது? என்னை எல்லாருக்கும் பிடிக்கும்!
பூர்ணம்: நீ எதுல குப்பை கூட்டுறயோ இல்லையோ நிச்சயமா நீ ஒரு நல்ல நடிகனா குப்பை கூட்டுவடா!
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் படத்தை on-line (திருட்டு வீடியோவானு என்னனு தெரியலை) ல பார்க்கனும்னா இங்கே க்ளிக் செய்யவும்!
“குட்டி” விமர்சனம் எங்க?
ReplyDeleteOne of my fav movie..:)
ReplyDelete***முகிலன் said...
ReplyDelete“குட்டி” விமர்சனம் எங்க?
8 March 2010 10:40 PM***
LOL! kutty here is an adjective for vimarsanam! :-)))
***வினோத்கெளதம் said...
ReplyDeleteOne of my fav movie..:)
9 March 2010 6:39 AM***
It is a classic! Love watching this even today!!! :)))