Tuesday, April 13, 2010

2010 ல் வெற்றிப்படங்கள் மூன்று!


தமிழ் சினிமா, டி வி யால் (சின்னத் திரை) பாதிக்கப்பட்டது என்னவோ உண்மைதான். இருந்தாலும் தமிழ்ப் படங்கள் வருகைகள் எதுவும் குறையவில்லை. வாரத்துக்கு 2 படமாவது புதுசு புதுசா வந்துகொண்டேதான் இருக்கு. 2010 ஆரம்பித்ததிலிருந்து ஒரு 50க்கு மேல்ப் பட்ட படங்கள் வந்துவிட்டன. இதில் சந்தேகமே இல்லாமல் வெற்றி பெற்றவைனு பார்த்தால் ஒரு மூனு பட்ங்கள்தான்!

* தமிழ்ப் படம்

* விண்ணைத்தாண்டி வருவாயா?

* பையா

மற்றபடி முக்கியமான படங்கள் கோவா, அசல், தீராதவிளையாட்டுப் பிள்ளை எல்லாம் வெற்றியடைந்ததாக சொல்ல முடியாது.

தமிழ்ப்படம் கொஞ்சம் வித்தியாசமான படம் என்பதால் வெற்றி. இதுபோல் தமிழில் வந்த முதல்ப் படம் இதுதான்! இதுபோல் கிண்டல்களை பாஸிட்டிவாக நடிகர்களும் ரசிகர்களும் எடுத்துக்கொண்டதுதான் மிகப்பெரிய வெற்றிதான்!

விண்ணைத்தாண்டி வருவாயா? ஒரு சாதாரண காதல்ப் படம். காதலுக்கு குறுக்கே நிற்பது மதம். நம்ம ஏதோ முன்னேறிட்டோம்னு பிதற்றிக்கொண்டு இருக்கோம். இன்னும் நம்ம கலாசாதத்தில் காதலிச்சவரை கலயாணம் பண்ண தில்லு உள்ள இளசுகள் இல்லை என்பதை அடிப்படையாக வச்சு எடுத்த படம். அந்தக்காலத்தில் காதல்னா, சும்மா ஒருவரை ஒருவர் பார்த்துக்கிறது, ஏதாவது சூழ்நிலையில் பேசிக்கிறது அப்புறம் லவ் லெட்டெர் கொடுக்கிறதுனு போச்சு, இப்போ என்னனா காதல் ப்ரிமேரிட்டல் செக்ஸுடனும் அது போகுதுனு எல்லோருமே அடிச்சு சொல்றாங்க! ஆனால் ப்ரிமாரிட்டல் செக்ஸ் வச்சுக்கிறது தப்பில்லையாம். அவங்களை கல்யாணம் பண்ணினால்தான் பெரிய தப்பாம்! அதனால நம்ம முதலிரவு இன்னும் சிறப்பத்தான் போகும். அதுதான் அவங்க ரெண்டு பேருக்கும் முதலிரவு என்பதால்! இதுபோல் இருக்க நம்ம அரைவேக்காட்டுக் கலாச்சாரத்தில் உள்ள காதல் தோல்வியடைந்த கோழைகள் எல்லாம் இந்தப் படத்தைப்பார்த்து அழுதழுது கண்ணீர்விட்டுப் பார்த்து வெற்றியை பெற்றுத் தந்துவிட்டார்கள் போல இருக்கு! பெருமைப்பட வேண்டிய விசயம்தான்னு சொல்றீங்களா?

பையாவும் ஒரு சாதாரண காதல் கதைதான். அதே லிங்குசாமி ஸ்டயிலில் வந்து இருக்கு! ஆரம்பத்திலேயே முடிவு தெரியும். இருந்தாலும் ஒரு பொண்ணோட பையன் படம் முழுவதும் சுத்துவதையும், அந்த ஹீரோவுடைய அசாத்திய ஹீரோயிசத்தையும் நம்ம ஆளு இன்னும் ரசிக்கிறாங்க. பாடல்களும் நல்லா இருப்பது ஒரு பெரிய ப்ளஸ்னும் சொல்லலாம்! லிங்குசாமிக்கு இந்தப்படம் ஃப்ளாப் ஆகாம எப்படியோ தப்பிச்சிருச்சு! அண்ணே லிங்கு, காதல், சண்டை, பாட்டுனு எடுத்தால் நம்மாளு எப்போவுமே பார்ப்பான்னு நெனச்சா இதுக்கப்புறம் கஷ்டம்தான்.

அப்புறம் நெறையப் படங்கள் 10 லட்சம் போட்டு 20 லட்சம் அலல்து 40 லட்சம் எடுத்து இருக்கலாம். அதுபோல சின்ன பட்ஜட் சின்ன வெற்றியை எல்லாம் கணக்குல எடுக்கலை :)))

16 comments:

  1. U haven't mention Angadi theru ?
    not even in the average list ?

    ReplyDelete
  2. இந்தக்கேள்வி வரும்னு எதிர்பார்த்தேங்க! கமர்சியல்லா இது எந்தளவுக்கு வெற்றினு கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்துதாங்க என்னால சொல்ல முடியும். மன்னிச்சுக்கோங்க!

    ReplyDelete
  3. Tamil padam is koliwood version of super hero movie(holiwood.) .box office result ok. But vinnai thandi , i dont think its a box office hit, coz when i went to that movie in 2 wk at cuddalore just few seats only occupied.may be in chennai it may got gud response.chennila kuppai padam kooda odume!

    ReplyDelete
  4. வவ்வால்:

    விண்ணைத்தாண்டி வருவாயா? எனக்கும் படம் பிடிக்கலை. ஆனால், எ மற்றும் பி செண்டர்களில் நல்லாப் போஒயிருக்குங்க! சி செண்டரில் போகலை. ஓவெரால்லா படம் வெற்றிதான் னு நெனைக்கிறேன் :)

    ReplyDelete
  5. How u include PAIYAA...............???????????
    Angadi theru is HIT
    VTV blockbuster at chennai but in rural not a big because i watched with 50 people in 4th day in madurai .............
    only TAMIL PADAM and ANGADI THERU are hit in A B C dont include that in HIT

    ReplyDelete
  6. sorry to say this varun...VTV is not a hit movie they just crossed wat they invested... even paiyya didnt crossed angadi theru collection...def angadi theru is hit movie in all circumstances...

    ReplyDelete
  7. only 33 Films released

    HERE THE LIST

    PUGAIPADAM 01.01.2010
    THUNICHAL 01.01.2010
    KALASAARAM 08.01.2010
    KUTTY 14.01.2010
    AYIRATHIL ORUVAN14.01.2010
    PORKALAM 14.01.2010
    NAANAYAM 14.01.2010
    DHAIRIYAM 29.01.2010
    KATHAI 29.01.2010
    TAMIL PADAM 29.01.2010
    GOA 29.01.2010
    JAKKUBHAI 29.01.2010
    ASAL 05.02.2010
    THEERATHA VILAYATTU PILLAI 12.02.2010
    RASIKKUM SEEMANE 12.02.2010
    AZUKKAN 19.02.2010
    VINNAITHANDI VARUVAYA 26.02.2010
    INNISAI KAAVALAN 26.02.2010
    THAMBIKKU INTHA OORU 05.03.2010
    VEERA SEKARAN 05.03.2010
    AVAL PEYAR TAMILARASI 05.03.2010
    KUMERIPENNIN ULLATHILE 05.03.2010
    YAADUMAGI 12.03.2010
    MATHI YOSI 12.03.2010
    AZAGANA PONNUTHAAN 12.03.2010
    KATCHERI AARAMBAM 19.03.2010
    MUNTHINAM PAARTHENE 19.03.2010
    ORU KADHALAN ORU KHADALI 19.03.2010
    KARUNAI 19.03.2010
    ANGADI THERU 26.03.2010
    PADAGASALAI 26.03.2010
    PAYA 02.04.2010
    SIVAPPU MAZAI 09.04.2010

    ReplyDelete
  8. ***வெண்ணிற இரவுகள்....! said...
    How u include PAIYAA...............???????????
    Angadi theru is HIT
    VTV blockbuster at chennai but in rural not a big because i watched with 50 people in 4th day in madurai .............***

    My relatives in madurai gave an impression that it did do well in madurai but not great.

    *** only TAMIL PADAM and ANGADI THERU are hit in A B C dont include that in HIT
    13 April 2010 8:59 PM ***

    It is yet to see how big "hit" angadi theru is.

    I think payya is a hit. :)

    ReplyDelete
  9. ***Blogger லோகேஷ்வரன் said...

    sorry to say this varun...VTV is not a hit movie they just crossed wat they invested... ***

    It has earned more than 6 cores in chennai itself! How can you say it is not a hit?

    ***even paiyya didnt crossed angadi theru collection...***

    It will soon :)

    ***def angadi theru is hit movie in all circumstances...

    13 April 2010 10:10 PM***

    I do not disagree on this :)

    ReplyDelete
  10. ***Blogger Mani said...

    only 33 Films released

    HERE THE LIST

    PUGAIPADAM 01.01.2010
    THUNICHAL 01.01.2010
    KALASAARAM 08.01.2010
    KUTTY 14.01.2010
    AYIRATHIL ORUVAN14.01.2010
    PORKALAM 14.01.2010
    NAANAYAM 14.01.2010
    DHAIRIYAM 29.01.2010
    KATHAI 29.01.2010
    TAMIL PADAM 29.01.2010
    GOA 29.01.2010
    JAKKUBHAI 29.01.2010
    ASAL 05.02.2010
    THEERATHA VILAYATTU PILLAI 12.02.2010
    RASIKKUM SEEMANE 12.02.2010
    AZUKKAN 19.02.2010
    VINNAITHANDI VARUVAYA 26.02.2010
    INNISAI KAAVALAN 26.02.2010
    THAMBIKKU INTHA OORU 05.03.2010
    VEERA SEKARAN 05.03.2010
    AVAL PEYAR TAMILARASI 05.03.2010
    KUMERIPENNIN ULLATHILE 05.03.2010
    YAADUMAGI 12.03.2010
    MATHI YOSI 12.03.2010
    AZAGANA PONNUTHAAN 12.03.2010
    KATCHERI AARAMBAM 19.03.2010
    MUNTHINAM PAARTHENE 19.03.2010
    ORU KADHALAN ORU KHADALI 19.03.2010
    KARUNAI 19.03.2010
    ANGADI THERU 26.03.2010
    PADAGASALAI 26.03.2010
    PAYA 02.04.2010
    SIVAPPU MAZAI 09.04.2010

    13 April 2010 10:46 PM***

    சரியான எண்ணிக்கைக்கும், என் கணக்கை திருத்தியதற்கும் நன்றி மணி!

    ReplyDelete
  11. சினிமாவுக்கு பரிட்சை வச்சா நீங்க எத்தனை மார்க் வாங்குவீங்க?

    ReplyDelete
  12. உங்க வெற்றிப்படம் மூன்றையும் நான் பார்க்கவேயில்லை.

    அங்காடி தேறுதான்னு பார்க்கலாம்!

    ReplyDelete
  13. ***Blogger ராஜ நடராஜன் said...

    சினிமாவுக்கு பரிட்சை வச்சா நீங்க எத்தனை மார்க் வாங்குவீங்க?

    14 April 2010 7:49 AM***

    தடவித் தடவி பாஸ் மார்க் தேத்திடுவேன்னு நெனைக்கிறேன், தல :))

    ReplyDelete
  14. ***ராஜ நடராஜன் said...

    உங்க வெற்றிப்படம் மூன்றையும் நான் பார்க்கவேயில்லை.

    அங்காடி தேறுதான்னு பார்க்கலாம்!

    14 April 2010 7:51 AM***

    ஆண்லைன்ல எல்லாம் பார்க்க மாட்டீங்களா!!

    அங்காடி தெரு நான் இன்னும் பார்க்கலை :)))

    ReplyDelete
  15. see..Aayirathil oruvan is really a good movie..

    ReplyDelete
  16. ***ANAND said...
    see..Aayirathil oruvan is really a good movie..

    14 April 2010 8:24 AM ***

    I understand that so many people (like you) liked that movie a LOT. But it is commercially flop movie, I believe!

    ReplyDelete