Saturday, May 22, 2010

சுறா, செத்து கருவாடானது!

சன் க்ரூப் வினியோக உரிமை பெற்ற எல்லாப்படத்தையும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிப் ப்ரமோட்ப் பண்ணி வெற்றியடைய வைக்க முடியாது! விஜய் இனிமேல் ரிஸ்க் எடுக்காமல் இப்படியே சுறா, புறானு எதையாவது பண்ணி பொழப்பு ஓட்டமுடியாது! நு நம்ம மக்கள் தற்காலிகத் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்!

உடனே இவருக்கு விசய்னா பிடிக்காது அது இதுனு என்னை குற்றம் சாட்டும் முன்னர். Sify, behindwoods எல்லாத்திலேயும் சுறாவுடைய பாக்ஸ் ஆஃபிஸ் அவுட்கம் பத்தி விசாரிச்சு தெரிந்து கொள்ளவும்.

சரி, சென்னைலதான் படம் தேறலைனா விஜயோட கோட்டை பி, சி செண்டர்களில் எப்படிண்ணே போகுதுனு விசாரிச்சுப்பார்த்தால், இந்த சுறா ரொம்ப தூரம் நீந்தமுடியலைண்ணே அதானால மிதக்கவிட்டுத்தான் கரையேத்த முடியும்போலனு சொல்றாங்க!

சுறா விஜயோட தோல்விப்பட வரிசையில் இடம்பிடித்துவிடும் என்பது விநியோகஸ்தர்களாலும் நம்பப்படுகிறது. சன் க்ரூப்பும் சுறாவை இனிமேல் தேத்த முடியாதுனு ஒரு முடிவுக்கு வந்து சூர்யாவுடைய சிங்கத்தை ரெடி பண்ணுறாங்க போல இருக்கு!

விஜய், தன் அரசியல் கனவை கொஞ்சம் தூக்கி ஓரமா வச்சுப்புட்டு ஏதாவது கொஞ்சமாவது வித்தியாசமான கதையம்சங்களுடன் நடிக்க முயற்சிப்பது நல்லது! இல்லை நான் இப்படியேதான் ஓட்டுவேன்னா நம்ம சூர்யாவுக்கு அடுத்து அவர் தம்பி கார்த்தி விஜயை முந்திக்கொண்டுபோய் விடுவார்.

விஜய் அண்ணா! தமிழ்மக்கள் முழிச்சுக்கிட்டாங்க போல இருக்கு! எம் ஜி ஆர் படம் பார்க்கனும்னா அவங்க அதை டி வி டி யில் பார்த்துக்குவாங்க! நீங்க எதுக்கு சும்மா எம் சி யார் “படம்” எல்லாம் காட்டுறீங்க? இப்படியே போனா நம்ம கார்த்தியும் உங்க முன்னாலே போயிடுவார்! அது ஏன் இப்படி புது மாதிரியா எதுவும் நடிக்கிறதுக்கு பயப்படுறீங்க? இப்படியே அரச்ச மாவ அரச்சா உங்க விசிறிகள்கூட உங்களை காப்பாத்த முடியாது. உங்களுக்கு நான் சொல்லவேண்டியதை சொல்லிப்புட்டேன்.

9 comments:

  1. ஏனப்பா உனக்கு தேவையில்லாத வேலை அவன் ஏதவது நல்லபடம் தவறியும் நடிச்சா பிறகு நம்மளபோல பிளாக்கர் எல்லாம் எத வச்சு எழுதுறது!!! அவன் அப்பிடியே நடிக்கட்டும் எங்களுக்கும் யோசிக்காம எழுதவரும்!!!!

    ReplyDelete
  2. நீங்க வேற சார், என் விமர்சனம் படிச்சு அவர் திருந்தி, நடிச்சு...அதெல்லாம் ஒண்ணும் நடக்காது!

    அடுத்து ஏதாவது திமிங்கலம்னு வந்து நிப்பாரு பாருங்க!

    ReplyDelete
  3. ////நீங்க வேற சார், என் விமர்சனம் படிச்சு அவர் திருந்தி, நடிச்சு...அதெல்லாம் ஒண்ணும் நடக்காது!

    அடுத்து ஏதாவது திமிங்கலம்னு வந்து நிப்பாரு பாருங்க!/////



    ....ha,ha,ha,ha,ha,ha....

    ReplyDelete
  4. //எம் ஜி ஆர் படம் பார்க்கனும்னா அவங்க அதை டி வி டி யில் பார்த்துக்குவாங்க! நீங்க எதுக்கு சும்மா எம் சி யார் “படம்” எல்லாம் காட்டுறீங்க?//

    :-))

    ReplyDelete
  5. அரசியல் கனவு... திருத்திக்கொள்ளவும்.. முதல்வர் ஆசை.. இளையதளபதி அதற்கு மிக சரியான ஒரேத்தலைவன்.

    ReplyDelete
  6. அரசியல் கனவு... திருத்திக்கொள்ளவும்.. முதல்வர் ஆசை.. இளையதளபதி அதற்கு மிக சரியான ஒரேத்தலைவ// ஸ்ஸப்பா..................

    ReplyDelete
  7. ***Chitra said...
    ////நீங்க வேற சார், என் விமர்சனம் படிச்சு அவர் திருந்தி, நடிச்சு...அதெல்லாம் ஒண்ணும் நடக்காது!

    அடுத்து ஏதாவது திமிங்கலம்னு வந்து நிப்பாரு பாருங்க!/////



    ....ha,ha,ha,ha,ha,ha....

    22 May 2010 3:34 PM
    ------------------------------

    கிரி said...
    //எம் ஜி ஆர் படம் பார்க்கனும்னா அவங்க அதை டி வி டி யில் பார்த்துக்குவாங்க! நீங்க எதுக்கு சும்மா எம் சி யார் “படம்” எல்லாம் காட்டுறீங்க?//

    :-))

    22 May 2010 6:05 PM

    ------------------------
    raja said...
    அரசியல் கனவு... திருத்திக்கொள்ளவும்.. முதல்வர் ஆசை.. இளையதளபதி அதற்கு மிக சரியான ஒரேத்தலைவன்.

    23 May 2010 4:57 AM

    --------------------
    ஷாகுல் said...
    அரசியல் கனவு... திருத்திக்கொள்ளவும்.. முதல்வர் ஆசை.. இளையதளபதி அதற்கு மிக சரியான ஒரேத்தலைவ// ஸ்ஸப்பா

    23 May 2010 5:10 AM ****

    வாங்க சித்ரா, கிரி, ராஜா & ஷாகுல்!!!

    உங்களுடைய வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி!

    ReplyDelete
  8. "விஜய், தன் அரசியல் கனவை கொஞ்சம் தூக்கி ஓரமா வச்சுப்புட்டு ஏதாவது கொஞ்சமாவது வித்தியாசமான கதையம்சங்களுடன் நடிக்க முயற்சிப்பது நல்லது" --- நடிக்க முயற்சிப்பது நல்லது--- நடிக்க முயற்சிப்பது நல்லது-- நடிக்க முயற்சிப்பது நல்லது-- நடிக்க முயற்சிப்பது நல்லது..
    தயவு செஞ்சு அவர வி ஆர் எஸ் வாங்கிட்டு கிளம்ப சொல்லுங்க... அவரால ஒரு புண்ணியம்.. நம்ம மக்கள் சர்தார் ஜோகுகள மறந்துட்டாங்க.. பணம் வேஸ்ட்டு, டைம் வேஸ்ட்டு, பாக்குறவங்க மெண்டலி ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆவாங்க வேற...

    ReplyDelete
  9. ***nila said... தயவு செஞ்சு அவர வி ஆர் எஸ் வாங்கிட்டு கிளம்ப சொல்லுங்க... அவரால ஒரு புண்ணியம்.. நம்ம மக்கள் சர்தார் ஜோகுகள மறந்துட்டாங்க.. பணம் வேஸ்ட்டு, டைம் வேஸ்ட்டு, பாக்குறவங்க மெண்டலி ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆவாங்க வேற...***

    LOL

    ReplyDelete