Monday, May 24, 2010

அங்காடி தெரு- நாடார்களை கேவலப்படுத்தவா?




அங்காடி தெரு பார்த்த கடைசி ஆள் நாந்தான்! வலையுலகில் அந்தப்படத்துக்கு கடைசி விமர்சனம் எழுதுவதும் நாந்தான் போல இருக்கு. இருந்தாலும் என்னுடைய கண்ணோட்டம் முற்றிலும் வேறு மாதிரியா இருக்கப் போவுது. “என்ன லூசுத்தனமாவா?” இல்லைனா "குருட்டுப்பார்வையா?"நு கேக்குறீங்களா? அப்படியும் எடுத்துக்கலாம். முழுக்க முழுக்க சாதிச்சாயம் பூசப்போகிறேன் இந்தப் படத்துக்கு! நான் பூசவில்லை! வசந்தபாலனால் பூசி மொழுகப்பட்டு இருந்ததை "unveil" பண்ணுகிறேன்.

வசந்தபாலனை எல்லாரும் பாராட்டிப் பாராட்டி டயர்டாகிட்டாங்க. சரி, நானும் அதையே செய்யனுமா? அது சுத்தமான போர்!

இந்தப்படத்தில் சரவணா ஸ்டோர் போன்ற கடைகள் வைத்து நடத்தும் நாடார்களை "மெயினா"கவும், கொஞ்ச வயசு ஏழைப் பெண்களை வேலைக்கு வைத்து இருக்கும் சென்னையில் வாழும் பார்ப்பனர்களையும் சைட்-லயும் கடுமையாக சாடுகிறார், வசந்தபாலன். இல்லை , நேரிடையாகவே திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்து சம்பாரிச்சு முன்னேறி பெரிய பணக்காரகளான “அண்ணாச்சி போல” நாடார்களை கேவலப்படுத்துறார். பிழைப்புக்காக வேலைக்கு வந்து இருக்கும் அதே சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளையும் பிச்சைக்காரகளைவிட கேவலமாக எவ்வளவு மட்டமாக் காட்டமுடியுயுமோ காட்டியுள்ளார், வசந்தபாலன்.

சரி, அதிலென்ன தப்பு? அதுபோல் இவர்களை விமர்சிப்பதால் நாலு பணமுதலைகள் திருந்தட்டுமே? நாலு ஏழைகள் பட்டணத்தில் வந்து அடிமைபோல் வாழ்ந்து பிச்சை எடுக்காமல் திருநெல்வேலியிலேயே இருந்து வயக்காட்டில் வேலை செய்யட்டுமே? ங்கிற நல்ல எண்ணத்தில் வசந்தபாலன் இந்தப்படத்தை எடுத்தார்னு விவாதம் செய்ய முடியாத அளவுக்கு இந்த வொர்த்த்லெஸ் சிறுவர்கள் காதல் சப்ஜெக்கட்டை பெருசுபடுத்தி வீணாக்கிவிட்டார்.

மனிதாபிமானமே இல்லாத மேனேஜர் "கருங்காலி" போன்ற மிருகங்களை மேனேஜர்களாக் ஒரு பக்கம் காட்டியது சரினு வச்சுக்கிட்டாலும். கருங்காலி போலில்லாமல் நல்ல மேனேஜர்கள் ஒருவர் கூட இருப்பதாக இந்தப்படத்தில் காட்டப்படவில்லையே! அது ஏன்? இதுபோல் மேனேஜர்களில் நல்லவர்களே இல்லையா? இல்லை நாடார்களை கேவலப்படுத்த இவர் செய்த சதியா?

சரி, ஒரு வியாபாரி, கடையில் உள்ள கஸ்டமர்களை வச்சுக்கிட்டே கூட வேலை பார்ப்பவனை அடிச்சு அடிதடியில் இறங்குவானா? வியாபாரிகள் பொதுவா கஸ்டமர் முன்னால நல்லவனாக நடிப்பார்கள். கருங்காலி மாதிரி ஒரு மேனேஜர் கஸ்டமரை வச்சுக்கிட்டே அடிதடியில் இறங்கினால், அண்ணாச்சிகள் கருங்காலியத்தான் முதலில் வீட்டுக்கு அனுப்புவார்கள். இது ஒண்ணும் பெரிய பரோபகாரம் எல்லாம் இல்லை! தன் வியாபாரத்தில் மண் விழுந்துவிடக்கூடாது என்கிற அண்ணாச்சிகளின் சுயநலமதான்.

அதென்ன இப்போ எல்லாம் நம்ம ஊர்ல காதல், காதல், செக்ஸ், ஏமாத்து, பொய் சொல்றது இதெல்லாம் சரி என்பதுபோலவும், அதுதான் இன்றைய சுதந்திரம் போலவும் எல்லாரும் நினைக்கிறாங்களா?? அதாவது, அந்த “கருங்காலி மேனேஜரை” இவ்வளவு கெட்டவனாக்கி (ஃபிசிக்கல் மற்றும் செக்ஸூவல் அப்யூஸ் பண்ணுவதாக) , சின்னப்பொண்ணுக பசங்க செக்ஸ் வச்சுக்கிட்டு பொறுப்பில்லாமல் இருப்பதையும்தான் சரினு சொல்றமாதிரி படம் எடுத்தால்தான் எல்லாரும் கை தட்டுவாங்களா?

ஏழைகள் ஒழுக்கமானவர்களாகவும், வொர்க் எத்திக்ஸுடன் வாழமுடியாதுனு சொல்றாரா வசந்தபாலன்?

இதுல இன்னொரு மேட்டர்! நின்னுக்கிட்டு 10 மணி நேரம் வேலை செய்தால் கொடிய வியாதி வந்துவிடும்னு ஒரு பொய் பிரச்சாரம்! இதெல்லாம் என்ன மிஸ்டர் வசந்ந்தபாலன்? படுகேவலமா இருக்கு நீங்க செய்ற இந்தக் காரியம்!

ஐ டி கார்ட், பங்க்ச்சுவாலிட்ட்டியை இண்ஸிஸ்ட் பண்றதெல்லாம் ஏதோ பெரிய தப்பு மாதிரி காட்டுறாரு. Why? I thought punctuality and proper identification are the things we need to work on and improve ourselves!

தன் மகள்கள் இருவரையும் வேலைசெய்யவிட்ட பொறுப்பில்லாத அப்பாவைக்கூட சுமாரான நல்லவராக்கிட்டாரு. கவனமாப் பார்த்தால் கனியுடைய அப்பா செய்றதுதான் மிகப்பெரிய துரோகம். ஆனால் வசந்தபாலன், அதை ஏதோ சாதாரணமான விசயம் மாதிரி பேருக்கு சொல்லி விட்டுவிட்டார்.

சரி, திருநெல்வேலியில் இருந்து வந்து வேலைபார்க்கும் நாடார் சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் உண்மையிலேயே பிச்சைக்காரனைவிட கேவலமாகத்தான் வாழ்கிறார்களா? நாடார் சமூக ஏழைகள் கண்ணீரைத் தொடைக்கத்தான் வசந்த பாலன் இதுபோல் ஒரு ப்ளாட்டுடன் வந்து போராடுகிறாரா? இல்லை அவர்களை கேவலப்படுத்துதான் இவரோட ஒரே குறிக்கோளா?

சரி திருநெல்வேலியில் இருந்து வந்து இப்படித்தான் வாழ்கிறார்கள் என்றால், அவர்கள் இங்கே இருந்து கிராமத்துக்கு ஓடிப்போகும் உரிமையை யார் தடுத்தது?

இதுபோல் வேலையில் இன்றைக்கு இருக்கும் சிறுவர்கள் "ஆமாம்" எங்களை பிச்சைக்காரனைவிட கேவலமாக நடத்துறாங்கனு, எங்களுக்கு வாழ்வு கொடுத்த "பெரியார்" வசந்தப்பாலன் னு சொல்வார்களா? இல்லைனா, ஏன்யா இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி படம் எடுக்குறேன்னு எங்களை கேவலப்படுத்துற? சினிமா எடுக்க சப்ஜெக்ட் இல்லைனா நாங்கதான் உனக்கு கெட்ச்சாமானு சொல்லுவாங்களா?

இன்னைக்கு எடுபிடியாக இருக்கும் இவர்கள் நாளைக்கு கருங்காலியாகவும் அண்ணாச்சியாகவும் ஆவதே இல்லையா?

இந்தப்படத்தில் வசந்தபாலன் சாதிச்சது.. சென்னையில் வந்து எப்படியோ (by hook or crook) முன்னேறி இன்னைக்கு தொழிலதிபர்களாகி இதுபோல் தொழில் நடத்தும் நாடார்களையும், அங்கே வந்து தன் எஜமானுக்கு லாயலாக வேலை செய்யும் ஏழை நாடார்களையும் அவமானப்படுத்துவது மட்டும்தான் என்று சொலலாம்.

மணிரத்னம் அக்னிநட்சத்திரத்தில் ஒரு சிவகாசி தொழிலதிபருடைய (அண்ணாச்சிதான்) அயோக்கியத்தனத்தை அழகா காட்டியிருப்பார். அதேபோல் சாமியில் ஹரியும் ஒரு "அண்ணாச்சி" வில்லனை அழகா உருவாக்கி இருப்பார். மிஸ்கின்கூட ஒரு அண்ணாச்சியை நல்லாவே காட்டியிருப்பார். அதெல்லாம் ரசிக்கத்தக்க இருந்தது. ஆனால் "அங்காடி தெரு"வில் வசந்தபாலன் "அண்ணாச்சிகளை" கேவலப்படுத்தனுமே இப்படி ஒரு ப்ளாட் டுடன் வந்து இருப்பதால் கொஞ்சம் வரம்பு மீறி எரிச்சலைக் கிளப்புது!

அப்புறம் இன்னொரு விதமாகவும் இந்த மேட்டரை ஜோடிக்கலாம்! ஐங்கரன், எப்படி இப்படி ஒரு கதையை தேடி எடுத்தார்கள்? சமீபத்தில் ஒரு தவறே செய்யாத ஈழத்தமிழரை சென்னையில் இதுபோல் இரக்கமே இல்லாமல் ஒரு அண்ணாச்சி கடையில் அவமானப் படுத்தியதாகப் படித்து இருப்பீர்கள். அந்த அநியாயத்திற்கு பதிலடி கொடுக்கத் (பழிக்குப் பழி) தான் இந்தப்படம் ஐங்கரன் எடுத்துள்ளார்கள் என்றும் கதைவிடலாம்!

40 comments:

  1. I was reading your blogs for a long time. But when you brought in the caste, I HATE your post....

    Think twice... still do you need to prmote caste related thoughts???

    I never expected this from you...

    //“என்ன லூசுத்தனமாவா?” இல்லைனா "குருட்டுப்பார்வையா?"நு கேக்குறீங்களா? அப்படியும் எடுத்துக்கலாம். //

    This is TRUE . . .

    ReplyDelete
  2. Vijay: The movie is about caste. How can I blindly overlook that? I am sorry for causing you a BIG disappointmer!

    ReplyDelete
  3. //சரி திருநெல்வேலியில் இருந்து வந்து இப்படித்தான் வாழ்கிறார்கள் என்றால், அவர்கள் இங்கே இருந்து கிராமத்துக்கு ஓடிப்போகும் உரிமையை யார் தடுத்தது?//

    இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன். எப்படிங்க இப்படி எல்லாம்?

    ReplyDelete
  4. ***வடகரை வேலன் said...
    //சரி திருநெல்வேலியில் இருந்து வந்து இப்படித்தான் வாழ்கிறார்கள் என்றால், அவர்கள் இங்கே இருந்து கிராமத்துக்கு ஓடிப்போகும் உரிமையை யார் தடுத்தது?//

    இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன். எப்படிங்க இப்படி எல்லாம்?

    24 May 2010 7:23 PM ***

    நல்லவேளை "மொக்கை" னு ஒரு குறிச்சொல்லும் போட்டு அதுகயும் சேர்த்துவிட்டேன் :)

    எப்படியோ உங்களை சிரிக்க வச்சதுல எனக்கு சந்தோஷ்ம்ங்க, வேலன் :)

    ReplyDelete
  5. ஊர்ல போய் மண்ணையா திங்கன்னு ஒரு வசனம் வரும். படத்தின் அடிநாதமே அதுதாங்க. ஊருல இளைஞர்கள் வாழ வழியே இல்லை. உங்களுக்குத் தெரியுமா வேலிக்காத்தான்னு ஒரு முள் இருக்கு. முன்னெல்லாம் அதப் பயிருக்குக் காவலா சுத்தி வச்சு வேலி மாதிரி வச்சிருப்போம். இப்ப பயிரே அதான் நிலம் பூரா வேலிக்காத்தான வளார்த்து விறகுக்கு வெட்டி விக்குறதுதான் தொழில். ஒரு மாசத்துக்கு ஒரு நாளோ இரு நாளோதான் இந்த வேலையும் இருக்கும். மத்த நாட்கள்ல என்ன செய்ய?

    எல்லா அரசும் சென்னை அதைச் சுற்றிய பகுதிகளை டெவெலப் செய்யவே விரும்புகின்றன. கிரமாத்து இளைஞன் எப்படிப் போனா யாருக்கு என்னங்க?

    கொஞ்சம் நிதர்சனத்தையும் பாருங்க சார்.

    ReplyDelete
  6. திர். வேலன்: நெஜம்மாவே சென்னை, மும்பை போற தமிழர்கள் இப்படி வாழ்றது பார்க்க கஷ்டமா இருக்குங்க!

    இதுபோல் சீரழிவதைதவிர வேற வழியே இல்லையா?

    இந்த வயதில் எதுக்கு காதல் கல்யாணம் கருமாதி எல்லாம் னு எரிச்சல் வருது. நம்புங்க, தட்ஸ் ஹவ் ஐ ஃபீல் :(

    ReplyDelete
  7. காதல்ங்கிறது மனசு சார்ந்த ஒரு உணர்வுங்க. அதுக்கு லாஜிக் எல்லாம் கிடையாது.

    கை கால் இரண்டும் முடமான ஒருவனை தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளி வரும் பிச்சைக் காரியைப் பார்த்திருக்கிறீர்களா. அவள் அவனின் காதலியாம். நான் பழனிக்காரன் இதைப் போன்ற காதல் அங்கே சகஜம்.

    அதுவும் இல்லைன்னா வாழ்க்கையே நரகமாயிடும்.

    ReplyDelete
  8. என் சொந்த ஊர் திருனெல்வேலி மாவட்டம் என் உறவின இளைஞர்கள் ஒன்று வளைகுடா நாடுகளில் அல்லது கேரளச் சேட்டன்மாரிடம் அடிமைத் தொழில்.

    இத்தனைக்கும் எங்கள் பரம்பரை நிலம் எல்லாம் இருக்கு. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது என்பது போய் கைமுதலைக் காப்பத்தவே இயலாது என்ற சூழ்னிலைதான் இருக்குங்க. எல்லாம் இடைத் தரகர்கள் தின்றதுபோக மீதம் இருந்தால் கிடைக்கும். எதோ வெளியூர்ல கச்டப் பட்டு ஊர்ல அப்பா அம்மா தங்ககள் நல்லா இருந்தாப் போதும்னு ஒரு நப்பாசைலதான் ஓடுறாங்க.

    பேசுனா நெறையாப் பேசலாம் தொக்கி நிற்பது கண்ணீராகத்தான் இருக்கும்.

    படித்த, கையாலாகத ஒரு சமுதாயத்தை வளார்த்துக் கொண்டிருக்கிரோம் நாம். என்று வெடிக்குமோ தெரியவில்லை.

    ReplyDelete
  9. நான் எல்லாம் பிறந்தது ஏழையாத்தான். கஷ்டப்பட்டுதான் படிச்சு வந்தேன். இருக்கிறதை வச்சு அப்பா அம்மா ப்ரவைட் பண்ணீனாங்க. ஒரு நிலையை அடையும் வரையில் காதலை எல்லாம் கவனமாக தூக்கி எறிந்துதான் வளந்து வந்தேன். 17 வய்தில் காதல் கல்யாணம்னு பேசுறதெல்லாம் புரியாத ஒண்ணு.

    நீங்க சொல்றது வேற விசயம்! I am talking about guys who come to chennai for "survival" and "for money" :)

    ReplyDelete
  10. ***வடகரை வேலன் said...
    என் சொந்த ஊர் திருனெல்வேலி மாவட்டம் என் உறவின இளைஞர்கள் ஒன்று வளைகுடா நாடுகளில் அல்லது கேரளச் சேட்டன்மாரிடம் அடிமைத் தொழில்.

    இத்தனைக்கும் எங்கள் பரம்பரை நிலம் எல்லாம் இருக்கு. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது என்பது போய் கைமுதலைக் காப்பத்தவே இயலாது என்ற சூழ்னிலைதான் இருக்குங்க. எல்லாம் இடைத் தரகர்கள் தின்றதுபோக மீதம் இருந்தால் கிடைக்கும். எதோ வெளியூர்ல கச்டப் பட்டு ஊர்ல அப்பா அம்மா தங்ககள் நல்லா இருந்தாப் போதும்னு ஒரு நப்பாசைலதான் ஓடுறாங்க.

    பேசுனா நெறையாப் பேசலாம் தொக்கி நிற்பது கண்ணீராகத்தான் இருக்கும்.

    படித்த, கையாலாகத ஒரு சமுதாயத்தை வளார்த்துக் கொண்டிருக்கிரோம் நாம். என்று வெடிக்குமோ தெரியவில்லை.***

    உண்மையிலேயே கஷ்டமாத்தான் இருக்கு நீங்க சொல்வதை எல்லாம் கேட்டால் :(

    ReplyDelete
  11. //
    இன்னைக்கு எடுபிடியாக இருக்கும் இவர்கள் நாளைக்கு கருங்காலியாகவும் அண்ணாச்சியாகவும் ஆவதே இல்லையா?
    //

    அஃதே அஃதே

    ReplyDelete
  12. //சரி திருநெல்வேலியில் இருந்து வந்து இப்படித்தான் வாழ்கிறார்கள் என்றால், அவர்கள் இங்கே இருந்து கிராமத்துக்கு ஓடிப்போகும் உரிமையை யார் தடுத்தது?//

    இதற்கான பதில் என் பதிவில் உள்ளது

    ReplyDelete
  13. //படத்தின் அடிநாதமே அதுதாங்க. ஊருல இளைஞர்கள் வாழ வழியே இல்லை.//

    வாழ வழி உள்ளது
    ஆனால் முன்னேற வழி இல்லை

    --

    அவர்கள் சென்னைக்கு வருவதற்கு காரணமே, நாமும் இது போல் ஒரு கடை வைக்க வேண்டும் என்பது தான்

    நான் என் இடுகையில் கூறியுள்ள படி அவர்களில் இந்த ஆசை தான் exploit செய்யப்படுகிறது

    --

    ஏன் ஒருவன் அசிஸ்டெண்ட் டைரக்டராக கஷ்டப்பட வேண்டும். டைரக்டர் ஆக வேண்டும் என்பதால் தான். அந்த டைரக்டர் ஆசை தான் exploit செய்யப்படுகிறது

    --


    //எல்லா அரசும் சென்னை அதைச் சுற்றிய பகுதிகளை டெவெலப் செய்யவே விரும்புகின்றன. கிரமாத்து இளைஞன் எப்படிப் போனா யாருக்கு என்னங்க?//

    அப்படியா ??? :) :) :)

    --

    // நெஜம்மாவே சென்னை, மும்பை போற தமிழர்கள் இப்படி வாழ்றது பார்க்க கஷ்டமா இருக்குங்க!//

    மும்பை வேற கணக்கு. அது வேற பாலிடிக்ஸ்.

    //இளைஞர்கள் ஒன்று வளைகுடா நாடுகளில் அல்லது கேரளச் சேட்டன்மாரிடம் அடிமைத் தொழில்.
    //

    இது வேறு விஷயம்

    ஆனால் அங்காடித்தெருக்களில் நடக்கும் exploitation முற்றிலும் நவீன குருகுல சுரண்டல்

    --

    //படித்த, கையாலாகத ஒரு சமுதாயத்தை வளார்த்துக் கொண்டிருக்கிரோம் நாம். என்று வெடிக்குமோ தெரியவில்லை.//

    ஏற்கனவே வெடித்து விட்டது
    24 May 2010 7:39 PM

    ReplyDelete
  14. டாக்டர்,

    வாழ வழி இல்லை என்பதுதான் நான் கண்ட உண்மை. ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போது 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் என்னை வந்து பார்ப்பதும் ஏதாவது வழி ஏற்படுத்தித் தாடுங்கள் என அவர்கள் பெற்றோர் கேட்பதுமாக அது ஒரு துன்ப நிகழ்வு.

    முடிந்தவரை திருப்பூர் மற்றும் கோவையில் வாங்கித் தருகிறேன். ஏதோ ஒன்றுமில்லாததற்கு அரை வயிற்றுக் கஞ்சியாவது குடிக்கிறார்கள்.

    பீடி சுற்றும் தொழிலில் ஓரளவு சம்பாதித்தாலும் அப்பா அல்லது பெரியண்ணன் குடிக்க அதுவும் போய் விடுகிறது. என்ன செய்வார்கள்?

    மேலும் குருகுலச் சுரண்டல் என்பதை நான் ஏற்கவில்லை. ஒரு மளிகைக் கடையில் அது நடக்க வாய்ப்பு இருக்கு. டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வாய்ப்பு மிகக் குறைவே. கருங்காலி போன்ற மேனேஜர்களுக்குத்தான் எல்லாத் துறையிலும் அனுமதி. கருங்காலி அளாவுக்கு உயரவே இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆகி விடும். நீங்கள் சொன்ன வக்கீல் எஞ்சினியர்களுக்கு ஒரு உத்திரவாதம் இருக்கு. இவர்களுக்கு?

    இவன் போனால் இன்னும் இருபது இளைஞர்கள் என்ற அபரிமிதமான் அதர் ஆப்சன் முதலாளிகளுக்கு வரப்ரசாதம்.

    வெடித்து விட்டதாக்ச் சொல்கிறீர்கள். அப்படியா? கொஞ்சம் விபரம் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  15. //மேலும் குருகுலச் சுரண்டல் என்பதை நான் ஏற்கவில்லை. //

    குருகுல சுரண்டல் என்று ஒன்று இன்று சமூகத்தில் இல்லவே இல்லை என்று கூறுகிறீர்களா

    ReplyDelete
  16. வருண் ஆச்சர்யப்பட்டு போனேன். முதல் நாள் படம் பார்த்து விட்டு வந்து அன்று இரவு இந்த பதிவின் ஒவ்வொரு வரியையும் அட்சரம் பிசகாமல் திரும்பவும் சொல்கிறேன் ஒவ்வொரு வரியையும் அட்சரம் பிசகாமல் மாநக்கல் சிபியிடம் போனில் சொன்னேன். எழுதுங்கன்னு சொன்னார். ஆனா நான் எழுதலை. சிபியே வந்து பின்னூட்டம் போட்டா நல்லது. இந்த இன்னும் ஒரு கோணத்தில் ஏன் யாருமே பார்கலைன்னு நினைச்சுகிட்டேன்.

    வாவ் நல்லா எழுதியிருக்கீங்க!

    ReplyDelete
  17. அது இருக்குங்க. ஆனா நான் சொல்வது அண்ணாசி டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் இல்லை என்பதுதான். அதே ஒரு பலசரக்குக் கடை என்றால் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். குறைந்த பட்சம் 5 வருடங்களில் முழுத் தொழிலும் கைவரும்.

    சப்றையர்கள், கஸ்டமர்கள் பழக்கமாகலாம். அதே வீதியில் கடை வைக்க முடியும். அண்ணாச்சி கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தினம் தினம் புதுசு.

    சப்ளையர்கள் அண்ணாச்சியைப் பார்க்கவே தவமிருப்பார்கள். அதில் கனி எங்கே பார்க்க?


    It is only a distant and remote possibility with a .001% chance

    ReplyDelete
  18. அய்யா எப்படி இப்படி எல்லாம் யோசிச்சு இருக்கீங்க ... வசந்தபாலனும் ஒரு நாடார். உங்கள மாதிரி ஆளுகள எல்லாம் அந்த காமராஜ் வந்தாலும் காப்பத்தமுடியது

    -கார்த்திகேயன் நாடார்

    ReplyDelete
  19. Totally different way of seeing it..... Interesting write-up.

    ReplyDelete
  20. disgusting blog

    Anna means brother- ji from Hindi.

    who told annachi means nadar. funny.

    nadar means sanan, thats in govt record.

    donot criticize, a valid person.
    think before you blog.

    cool man

    ReplyDelete
  21. *** புருனோ Bruno said...

    இது தொடர்பான எனது இடுகையை படித்து பாருங்கள்

    24 May 2010 7:58 PM***

    நன்றி, டாக்டர் புருனோ. உங்க பதிவை இப்போதான் பார்த்தேன் டார்க்டர் புருனோ :)இந்த மேட்டர் பற்றி ஏற்கனவே அழகா சொல்லீட்டிங்க போல இருக்கு! :-)

    ReplyDelete
  22. ***அபி அப்பா said...

    வருண் ஆச்சர்யப்பட்டு போனேன். முதல் நாள் படம் பார்த்து விட்டு வந்து அன்று இரவு இந்த பதிவின் ஒவ்வொரு வரியையும் அட்சரம் பிசகாமல் திரும்பவும் சொல்கிறேன் ஒவ்வொரு வரியையும் அட்சரம் பிசகாமல் மாநக்கல் சிபியிடம் போனில் சொன்னேன். எழுதுங்கன்னு சொன்னார். ஆனா நான் எழுதலை. சிபியே வந்து பின்னூட்டம் போட்டா நல்லது. இந்த இன்னும் ஒரு கோணத்தில் ஏன் யாருமே பார்கலைன்னு நினைச்சுகிட்டேன்.

    வாவ் நல்லா எழுதியிருக்கீங்க!

    24 May 2010 8:20 PM***

    எனக்கும் ஆச்சர்யமாத்தான் இருக்கு, இதே கோணத்தில் நீங்களும் யோசித்து உள்ளது. பகிர்தலுக்கு நன்றிங்க அபி அப்பா :)

    ReplyDelete
  23. *** வடகரை வேலன் said...

    அது இருக்குங்க. ஆனா நான் சொல்வது அண்ணாசி டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் இல்லை என்பதுதான். அதே ஒரு பலசரக்குக் கடை என்றால் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். குறைந்த பட்சம் 5 வருடங்களில் முழுத் தொழிலும் கைவரும்.

    சப்றையர்கள், கஸ்டமர்கள் பழக்கமாகலாம். அதே வீதியில் கடை வைக்க முடியும். அண்ணாச்சி கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தினம் தினம் புதுசு.

    சப்ளையர்கள் அண்ணாச்சியைப் பார்க்கவே தவமிருப்பார்கள். அதில் கனி எங்கே பார்க்க?


    It is only a distant and remote possibility with a .001% chance

    24 May 2010 8:23 PM***

    என்ன சொல்றது? ஏழைகள் கஷ்டங்களை நெறையவே நேரிடையா பார்த்து இருக்கீங்க! உங்க அனுபவம் எனக்கு கெடச்சதில்லை. ஆனால் நீங்க சொல்றது நல்லாப் புரியுது, திரு வேலன் :(

    ReplyDelete
  24. ***Blogger carthickeyan said...

    அய்யா எப்படி இப்படி எல்லாம் யோசிச்சு இருக்கீங்க ... வசந்தபாலனும் ஒரு நாடார். உங்கள மாதிரி ஆளுகள எல்லாம் அந்த காமராஜ் வந்தாலும் காப்பத்தமுடியது

    -கார்த்திகேயன் நாடார்

    24 May 2010 8:26 PM***

    கார்த்திகேயன் சார், வசந்தபாலன் என்ன "பெரியார்"னு சொல்றீங்களா?
    எனக்கு அவர் ஒரு கேவலமான வியாபாரி மாதிரித்தான் தோனுது!

    ReplyDelete
  25. ***Chitra said...

    Totally different way of seeing it..... Interesting write-up.

    24 May 2010 9:41 PM***

    வாங்க சித்ரா! :-))

    ReplyDelete
  26. ***Blogger first said...

    disgusting blog***

    Really?!

    ***Anna means brother- ji from Hindi.***

    OK, first ji! LOL

    ***who told annachi means nadar. funny.***

    Nope, aNNAchi means "grandmA"! LOL

    ***nadar means sanan, thats in govt record.***

    Good to know that! :)

    ** donot criticize, a valid person.
    think before you blog.

    cool man***

    Valid person?? Just like you! LOL

    Take care! Thanks for educating me quite a bit! :)

    25 May 2010 7:11 AM

    ReplyDelete
  27. உங்கள் இடுகையின் தலைப்பை பின்னூட்டக்காரர்கள் பின் தள்ளி விட்டார்கள்.

    ReplyDelete
  28. ***ராஜ நடராஜன் said...

    உங்கள் இடுகையின் தலைப்பை பின்னூட்டக்காரர்கள் பின் தள்ளி விட்டார்கள்.

    25 May 2010 9:42 AM***

    உண்மைதாங்க நடராஜன். பின்னூட்டங்கள் எல்லாம் ரொம்ப உணர்வுப்பூர்வமாகவும் உள்ளப்பூர்வமாகவும் இருக்கு. என் தலைப்போ, அல்லது பதிவோ அந்த அளவுக்கு இல்லை :)

    ReplyDelete
  29. நீங்க நாடரீயம்(நாடர்களின் குணம்) என்று குறிப்பிடுவது இப்படி தொழிலாளிகளை அடிமையாக நடத்துவதா? ஏன் தனி மனித குணத்தை ஜாதியுடன் பார்க்கவேண்டும்? உண்மை ஊருக்குத் தெரிந்தால் அதை எதிர்த்து ஜாதி சாயம் பூசவேண்டுமா? (திருவாளர் முதல்வர் ராஜாவை காப்பாற்ற பூசியது போல)

    இதே படம் பார்ப்பனீயத்தை மட்டும் பேசியிருந்தால் நீங்கள் பாராடியிருப்பீர்கள் ஆனால் இப்படம் உங்கள் நாடரீயத்தை பேசுவதால் எதிர்கிறீர்கள்

    ReplyDelete
  30. **** smart said...
    நீங்க நாடரீயம்(நாடர்களின் குணம்) என்று குறிப்பிடுவது இப்படி தொழிலாளிகளை அடிமையாக நடத்துவதா? ஏன் தனி மனித குணத்தை ஜாதியுடன் பார்க்கவேண்டும்? உண்மை ஊருக்குத் தெரிந்தால் அதை எதிர்த்து ஜாதி சாயம் பூசவேண்டுமா? (திருவாளர் முதல்வர் ராஜாவை காப்பாற்ற பூசியது போல)***

    ஜாதிச்சாயம் ஏற்கனவே பூசியிருக்குங்க. அதை மூடி மறைக்கவே முடியாது!

    ***இதே படம் பார்ப்பனீயத்தை மட்டும் பேசியிருந்தால் நீங்கள் பாராடியிருப்பீர்கள்****

    நிச்சயமா கெடையாது. உங்களுக்கு என்னை இன்னும் சரியாத் தெரியலை.

    *** ஆனால் இப்படம் உங்கள் நாடரீயத்தை பேசுவதால் எதிர்கிறீர்கள்

    25 May 2010 5:48 PM****

    எங்க நாடரீயமா??? அண்ணே காமெடி பண்ணாதீங்க!

    ReplyDelete
  31. //Anna means brother- ji from Hindi.

    who told annachi means nadar. funny.

    nadar means sanan, thats in govt record.

    donot criticize, a valid person.
    think before you blog.//

    anna means அண்ணா இன் தமிழ்.
    அது மருவி அண்ணாச்சி என்ற விளிச்சொல்லாகிவிட்டது. மேலும் அண்ணாச்சி என்பது காலப்போக்கில் நாடார்களின் ஆகுபெயராக ஆகிவிட்டது. ஆனால் இன்னும் நெல்லையைச் சுற்றி உள்ள மாவட்டங்களில் அண்ணாச்சி என்றால் பெரியவர் என்ற அர்த்தம்தாம். இதரப் பகுதிகளில்தான் அண்ணாச்சி என்றால் நாடார்.

    நாடார் என்பவ்ர் வேறு சானார் என்பவர் வேறு. நாடார்கள் நில உடமைக்காரர்களாகவும், சானார்கள் அவர்களிடம் வேலை செய்பவர்களாகவும் இருந்தனர் ஆதியில். காலப் போக்கில் தங்கள் இடங்களை இழந்து நாடர்களும் வேஎரு வேலைகள் செய்யத் துவங்கினர். சானார்கள் மரமேறும் தொழிலைக் கைகொண்டனர்.

    இன்றும் நாடர்கள் சானார்கள் இடையே பெண் கொடுக்கும் எடுக்கும் பழக்கம் இல்லை. இட ஒதுக்கீட்டுக்குகாக நாடர்கள் சானார்கள் இருவரும் ஒன்று என்றுதான் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அடிப்படை வேறுபாடு இன்னும் நிலவுகிறது.

    Please think before you comment.

    ReplyDelete
  32. //நாடார் என்பவ்ர் வேறு சானார் என்பவர் வேறு. நாடார்கள் நில உடமைக்காரர்களாகவும், சானார்கள் அவர்களிடம் வேலை செய்பவர்களாகவும் இருந்தனர் ஆதியில். காலப் போக்கில் தங்கள் இடங்களை இழந்து நாடர்களும் வேஎரு வேலைகள் செய்யத் துவங்கினர். சானார்கள் மரமேறும் தொழிலைக் கைகொண்டனர்.

    இன்றும் நாடர்கள் சானார்கள் இடையே பெண் கொடுக்கும் எடுக்கும் பழக்கம் இல்லை. இட ஒதுக்கீட்டுக்குகாக நாடர்கள் சானார்கள் இருவரும் ஒன்று என்றுதான் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அடிப்படை வேறுபாடு இன்னும் நிலவுகிறது.//

    completely agree (nadar veetula ponnu edutha anupavathula)

    ReplyDelete
  33. ***Please think before you comment.

    25 May 2010 8:53 PM***

    When an anonymous guy comes with a id called "first" with no profile, he really thinks a "LOT" before commenting! His intention is "causing trouble" and "provoking"! That is all. Anyhow some good information also comes out because of such comments!

    I think marrying within a "subcaste" is not going to bring out good intelligent sons or daughters!

    ஏங்க தன் பிள்ளைக்கு சாப்பாடு போட முடியாது படிக்கவைக்க முடியாது, நான் எழை னா குழந்தை பெத்துக்காம இருக்கலாம் இல்லையா?

    பெத்து இப்படி அண்ணாச்சிட்ட விக்கனுமா என்ன அடிமையா?

    என்னவோ போன்க்கப்பா!

    ReplyDelete
  34. *** முகிலன் said...

    //நாடார் என்பவ்ர் வேறு சானார் என்பவர் வேறு. நாடார்கள் நில உடமைக்காரர்களாகவும், சானார்கள் அவர்களிடம் வேலை செய்பவர்களாகவும் இருந்தனர் ஆதியில். காலப் போக்கில் தங்கள் இடங்களை இழந்து நாடர்களும் வேஎரு வேலைகள் செய்யத் துவங்கினர். சானார்கள் மரமேறும் தொழிலைக் கைகொண்டனர்.

    இன்றும் நாடர்கள் சானார்கள் இடையே பெண் கொடுக்கும் எடுக்கும் பழக்கம் இல்லை. இட ஒதுக்கீட்டுக்குகாக நாடர்கள் சானார்கள் இருவரும் ஒன்று என்றுதான் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அடிப்படை வேறுபாடு இன்னும் நிலவுகிறது.//

    completely agree (nadar veetula ponnu edutha anupavathula)

    26 May 2010 1:43 PM***

    முகிலனை நான் இங்கே ஃப்ரீயா விட்டுடுறேன்! எதுக்கு வம்பு, நான் எதையாவது சொல்லி.. :))))

    ReplyDelete
  35. முக்கியமான விஷயம் என்னென்னா,வசந்தாபாலன் விருதுநகர் தேவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்.அவருக்கு நாடார் களைப்பிடிக்காது.அதனால் வெறுப்பில் நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தியுள்ளார்.
    அவர் எடுத்த வெயில் படத்தில் தேவர் சமுதாயத்தை உயர்வாக காட்டியிருப்பார் வசனத்தில்.மற்ற படி தேவர்கள் செய்யும் கந்துவட்டி,மணல் கடத்தல் ரவுடித்தனம் போன்றவற்றை கொஞ்சம் படம் எடுத்து காட்டுவாரா?

    ReplyDelete
  36. உண்மையதான் இயக்குனர் சொல்லி இருக்கார்,இதுக்கு யென் சாதி சாயம் பூசுரீர்......

    ReplyDelete
  37. முற்றிலும் எனக்கு தோன்றிய, மற்ற பதிவர்கள் எழுதாத பார்வை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. //நாடார் என்பவ்ர் வேறு சானார் என்பவர் வேறு. நாடார்கள் நில உடமைக்காரர்களாகவும், சானார்கள் அவர்களிடம் வேலை செய்பவர்களாகவும் இருந்தனர் ஆதியில். காலப் போக்கில் தங்கள் இடங்களை இழந்து நாடர்களும் வேஎரு வேலைகள் செய்யத் துவங்கினர். சானார்கள் மரமேறும் தொழிலைக் கைகொண்டனர்.

    இன்றும் நாடர்கள் சானார்கள் இடையே பெண் கொடுக்கும் எடுக்கும் பழக்கம் இல்லை. இட ஒதுக்கீட்டுக்குகாக நாடர்கள் சானார்கள் இருவரும் ஒன்று என்றுதான் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அடிப்படை வேறுபாடு இன்னும் நிலவுகிறது.//
    மிக சரி.

    ReplyDelete
  39. நாடார் @ அண்ணாச்சி ,
    all should agree this.

    ReplyDelete