Friday, July 23, 2010

எந்திரன் ரஜினி ரசிகர்களுக்காக இந்தப் புதிர்கள்!



எந்திரன் பாடல் வெளியீட்டுவிழா மலேசியாவில் ஜூலை 31 ல நடக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்துவிட்டது! இந்த நிலையில் ஒரு வாரம் எப்படி டென்ஷன் ஆகாமல் காத்திருப்பது? என்கிற கவலையைப்போக்க நான் கொஞ்சம் பெரியமனது செய்து இந்த ரஜினிபடப் புதிரை தயார் செய்துள்ளேன்.

இது ரஜினி ரசிகர்களுக்காக மட்டும்! சப்போஸ் நீங்க ரஜினி விசிறியில்லை, தெரியாமல் இங்கே வந்துட்டீங்கனா, தயவுசெய்து ஒதுங்க்கிக்கொள்ளவும்! மீண்டும் சந்திப்போம்! :)

ரஜனி படப்புதிர்கள்!



* 1) இவர் ரஜினிக்கு, ஜோடியாகவும், அக்காவாகவும், அம்மாவாவும் மற்றும் மாமியாராகவும் நடித்துள்ளார். வேறெந்த நடிகையும் இதுபோல் ரஜினிக்குப் பல உறவுகளாக நடித்ததில்லைனு நம்புறேன்! யாருங்க இந்த நடிகை?

* 2) ரஜினி- ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த படங்கள் பல! ரஜினி - ஸ்ரீதேவி ஜோடிப்பொருத்தம் ஒண்ணும் பிரமாதம்னு சொல்லமுடியாது. ஆனால் இவைகளில் ஒரு படம் ரஜனிக்கு ஒரு செட்-பேக் கு அப்புறம் மிகபெரிய ப்ரேக்-த்ரு வாக அமைந்தது! இதில் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடிப்பொருத்தமும் நல்லாவே இருக்கும்! அது என்ன படம்னு சொல்லுங்க!

* 3) இந்த வெற்றிப்படத்தில் ரஜினியின் ஹீரோயினுக்கு இவர் குரல் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்தப்படம் இன்னும் பெரிய வெற்றியடைந்து இருக்கும்னு பலர் நம்புறாங்க. இது என்ன படம்? அந்த குரல் கொடுத்த மேதாவி யார்?

* 4) ரஜினிக்கு பெஸ்ட் சப்போர்டிங் ஆக்டர் அவார்ட் கொடுக்கனும்னா கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 படங்களை தேர்ந்து எடுக்கலாம். இதில் நான் தேர்வு செய்யும் படத்தை நீங்க செய்வீங்களானு தெரியலை. நீங்க எதை பெஸ்ட்னு சொல்லுவீங்க?

* நான் வாழவைப்பேன்

* 16 வயதினிலே

* புவனா ஒரு கேள்விக்குறி

* 5) இந்த தமிழ்ப்பதிவுலகில் ரஜினியை வெறுக்கும் பதிவர்கள் பலர் உண்டு, அவர்களை விட்டுடுவோம். தமிழ் வலைபதிவர்களில் ரஜினி விசிறிகளும் பலர் இருக்காங்க! இதில் #1 ரஜினி விசிறி பட்டம் கொடுக்கனும்னா எந்தப் பதிவருக்குக் கொடுக்கலாம்? எனக்கு ஒண்ணு பிடிக்காது, அதனால நான் ரெண்டாவே இருந்துட்டுப் போறேன்! #1 பதிவுலக ரஜினி விசிறி யாருங்க? :)))

21 comments:

  1. 1 ஸ்ரீவித்யா
    2 ஜானி
    3 ம்ம் தெரியல்லையே
    4 புவனா ஒரு கேள்விக்குறி
    5 பதிவர் கிரி

    ReplyDelete
  2. 1. Srividya
    2. Naan Adimai illai
    3. Shobana/ thalapathi / suhasini
    4. 16 vayathinilae
    5. Chitrakka (naannu sola aasai thaan)

    ReplyDelete
  3. இந்த தமிழ்ப்பதிவுலகில் ரஜினியை வெறுக்கும் பதிவர்கள் பலர் உண்டு, அவர்களை விட்டுடுவோம். தமிழ் வலைபதிவர்களில் ரஜினி விசிறிகளும் பலர் இருக்காங்க! இதில் #1 ரஜினி விசிறி பட்டம் கொடுக்கனும்னா எந்தப் பதிவருக்குக் கொடுக்கலாம்? எனக்கு ஒண்ணு பிடிக்காது, அதனால நான் ரெண்டாவே இருந்துட்டுப் போறேன்! #1 பதிவுலக ரஜினி விசிறி யாருங்க?


    .........மாலையையும் மரியாதையும் நானா தேடி போறதில்லை. அதான், அடக்கி வாசிக்கிறேன்....இது எப்படி இருக்கு? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

    ReplyDelete
  4. ***தர்ஷன் said...

    1 ஸ்ரீவித்யா
    2 ஜானி
    3 ம்ம் தெரியல்லையே
    4 புவனா ஒரு கேள்விக்குறி
    5 பதிவர் கிரி
    23 July 2010 10:17 AM ***

    நன்றி, தர்ஷன்!

    1) சரி
    2) நான் நெனச்சது வேற
    3) முகிலன் சரியா சொல்லிட்டார்
    4) விவாதத்துக்குரியது
    5) நண்பர் கிரி சந்தோஷப்படுவார் :))

    ReplyDelete
  5. ***Blogger முகிலன் said...

    1. Srividya
    2. Naan Adimai illai
    3. Shobana/ thalapathi / suhasini
    4. 16 vayathinilae
    5. Chitrakka (naannu sola aasai thaan)

    23 July 2010 10:29 AM***

    1) சரி
    2) நான் நெனச்சது வேற படம்ங்க
    3) ரொம்ப சரி! :)))
    4) விவாதத்துக்குரியது
    5) சித்ராவா இல்லை நீங்களா? நாந்தான் ஆனா சித்ராவுக்கு விட்டுக்கொடுக்கிறேன்னு நீங்க சொல்றாப்பிலே இருக்கு :))) எனக்கு #2 கெடைக்காது போல இருக்கு :(

    ReplyDelete
  6. ***இனியா said...

    5. mukilan

    23 July 2010 10:56 AM***

    வாங்க இனியா . :))

    நீங்க சொல்லித்தான் அவர் #1க்கு தகுதியானவர்னு எனக்குத் தெரிய வந்ந்திருக்கு. :))

    ReplyDelete
  7. ***Chitra said...

    .........மாலையையும் மரியாதையும் நானா தேடி போறதில்லை. அதான், அடக்கி வாசிக்கிறேன்....இது எப்படி இருக்கு? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

    23 July 2010 2:12 PM***

    வாங்க, சித்ரா! :))

    உங்களுக்கு ஒண்ணரை ஓட்டு விழுந்திருக்குங்க. ஒண்ணு உங்க ஓட்டு. இன்னொரு முகிலனுடைய அரை ஓட்டு. நான் இன்னும் ஓட்டுப் போடலை :))))

    ReplyDelete
  8. 1.ஸ்ரீ வித்யா
    2.இது கேள்வியே சரியில்லை. ஜானிக்கு முன்னாடி என்ன செட்பேக்.
    3.தளபதி- சுஹாசினி
    4.இளமை ஊஞ்சலாடுகிறது.
    5.சுந்தர்

    ReplyDelete
  9. 1. Srividya
    2. Aduthavaarisu
    3. Shobana/ thalapathi / suhasini
    4. 16 vayathinilae
    5. Giri

    ReplyDelete
  10. 1. ஸ்ரீவித்யா
    2. --
    (ஜானிக்கு முன்னாடி setback இருந்ததா என்ன? ஜானிக்கு முன் ரிலீஸ் ஆன படங்கள் அன்புக்கு நான் அடிமை, பில்லா, அன்னை ஒரு ஆலயம், தர்மயுத்தம், ஆறிலிருந்து அறுபது வரை, நான் வாழ வைப்பேன், நினைத்தாலே இனிக்கும்.)
    3. --
    4. 16வயதினிலே.
    5. நாந்தானுங்க அந்த #1... நாந்தானுங்க அந்த #1... நாந்தானுங்க அந்த #1...

    ReplyDelete
  11. ***rajkumar said...

    1.ஸ்ரீ வித்யா
    2.இது கேள்வியே சரியில்லை. ஜானிக்கு முன்னாடி என்ன செட்பேக்.
    3.தளபதி- சுஹாசினி
    4.இளமை ஊஞ்சலாடுகிறது.
    5.சுந்தர்
    23 July 2010 11:35 PM ***

    நன்றி, ராஜ்குமார் :)

    ReplyDelete
  12. ***ARAN said...

    1. Srividya
    2. Aduthavaarisu
    3. Shobana/ thalapathi / suhasini
    4. 16 vayathinilae
    5. Giri

    24 July 2010 12:02 AM***

    நன்றி, அரண் :)

    ReplyDelete
  13. *** SenthilMohan said...

    1. ஸ்ரீவித்யா
    2. --
    (ஜானிக்கு முன்னாடி setback இருந்ததா என்ன? ஜானிக்கு முன் ரிலீஸ் ஆன படங்கள் அன்புக்கு நான் அடிமை, பில்லா, அன்னை ஒரு ஆலயம், தர்மயுத்தம், ஆறிலிருந்து அறுபது வரை, நான் வாழ வைப்பேன், நினைத்தாலே இனிக்கும்.)
    3. --
    4. 16வயதினிலே.
    5. நாந்தானுங்க அந்த #1... நாந்தானுங்க அந்த #1... நாந்தானுங்க அந்த #1...

    25 July 2010 10:37 PM***

    நன்றி, செந்தில்மோஹன் :)

    ReplyDelete
  14. பதில்கள்:

    1) ஸ்ரீவித்யா!

    படங்கள்: அ ரா (ஜோடி), தளபதி (அம்மா), மாப்பிள்ளை (மாமியார்) & மனிதன் (அக்கா)

    2) தர்மயுத்தம்

    ரஜினி ஓவெர்வொர்க் பண்ணி மதுரையில் ஏர்போர்ட்டில் தகறாறு, அது இதுனு மீடியா அவரை ஒரு வழி பண்ணிவிட்டது.

    அந்த மோசமான காலகட்டதிற்கு பிறகு தர்மயுத்தம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதில் ரஜிந் ஸ்ரீதேவி ஜோடிப்பொருத்தம் நல்லாவேயிருக்கும்

    3) தளபதி/சுஹாஷினி

    4) 16 வயதினிலே பரட்டை ரோல்

    5) Here are the list of #1 Rajni fans (alphabetical order)

    * Chitra

    * Dharshan

    * Giri

    * Mukilan

    * Senthilmohan

    * Sundhar

    * VaruN

    ReplyDelete
  15. டாக்டர் ப்ருனோ,

    நீங்கள் கமல் விசிறினு இன்னும் நம்புறேன் :))))

    ReplyDelete
  16. ரஜினிக்குக் சகோதரியாகவும், ம்களாகவும், மனைவியாவும் நடித்த நடிகை யாருங்க?

    ReplyDelete
  17. ***ஆளவந்தான் said...

    ரஜினிக்குக் சகோதரியாகவும், ம்களாகவும், மனைவியாவும் நடித்த நடிகை யாருங்க?
    15 August 2010 7:34 PM **

    யாருனு தெரியலைங்க!

    ReplyDelete
  18. VijayaShanthi

    Netrikann - ( Daughter/Sister)
    Mannan - Wife

    ReplyDelete
  19. நெற்றிக்கண்ல சக்கரவர்த்திக்கு மகள்னு மறந்துட்டேன் :(

    நன்றி, ஆளவந்தான் :)

    ReplyDelete