Sunday, October 24, 2010

எந்திரன், மருதநாயகத்துக்கு வழிகாட்டி?



கமல், ரஜினியை தொழிலில் போட்டியாளராக, ரைவலாக நினைப்பது என்றுமே (இன்றும்) மறுக்கமுடியாத உண்மை. ஏன் ரஜினி, கமலை நினைப்பதில்லையா? னு கேக்காதீங்க. ரெண்டும் ஒண்ணுதான்! கமல், படையப்பா இருநூறாவது நாள் வெற்றிவிழாவில் பேசும்போது சொன்னார். ரஜினிக்கும் எனக்கும் நட்பும் உண்டு, அதே சமயத்தில் போட்டியும் உண்டு! என்று . ஆமா சொன்னார்! தொழிலில் போட்டி இருந்தாலும் எங்களுடைய போட்டி, ஒரு ஹெல்த்தியான ஒண்ணு என்றும் அதே விழாவில் தெளிவு படுத்தினார். அதுக்கப்புறம் கே எஸ் ரவிக்குமாருடன் சேர்ந்து தெனாலியுடன் வந்து வெற்றியடைந்தார், கமல்.

அந்தப் போட்டி மனப்பாங்கு, கமலிடம் எப்போவுமே, அதாவது இன்றும் இருக்குனு நான் நம்புகிறேன். அதெப்படிப் போகும்? கூடவே பிறந்ததாச்சே! இதை மூடிமறைக்காமல் தெளிவாக கமல் ஒத்துக் கொளவது பாராட்டுக்குரியது.

கடந்த 2007 லில் எ வி எம் மின் சிவாஜி த பாஸ், மிகப்பெரிய பொருட்செலவில் (70 கோடியில்) தயாரித்து முதல் முறையாக, புது மாதிரியாக ஒரே சமயத்தில் நூற்றுக் கணக்கான பிரதிகள் (படப் பொட்டிகள்) வெளியிடப் பட்டது. அந்த ஃபார்முலாவில் முதல்முறையாக சிவாஜி மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது.

கமல், சும்மா இருப்பாரா? அடுத்த வருடமே (2008 ல்) , சிவாஜிக்குப் போட்டியாக, கமல் உயிரைக்கொடுத்து நடித்து, ஆஸ்கர் ரவி தயாரிக்க மிகப் பெரிய பொருட்செலவில் தசாவதாரம் படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் எடுத்தார். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தசாவதாரம், 70 கோடி தயாரிப்பில் தயாரிக்கப்பட்டு வெளி வந்தது. 1000 பிரதிகள் ஒரே நேரத்தில் வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது. இந்த முறையும் இந்த ஹெல்த்தியான போட்டியில் கமலும் வெற்றிதான் அடைந்தார்!

இப்போ, சிவாஜி, தசாவதாரம் எல்லாவற்றையும் சாப்பிடும் அளவுக்கு, ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் 150 கோடி செலவில் எடுக்கப்பட்டு, எந்திரன் த ரோபாட், இரெண்டாயிரம் பிரதிகளுடன் உலகளவில் வெளியிடப்பட்டு, மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. எந்திரன் படத்தின் வெற்றி பற்றி மற்றவர்கள் எப்படியோ, கமல் நிச்சயம் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டுதான் இருப்பார். ஏன் என்றால் மருதநாயகத்துக்கும் இதே போல் பெரிய இன்ஸ்வெஸ்ட்மெண்ட் மற்றும் வெற்றியும் தேவை! நிச்சயமாக எந்திரனுக்கு பயன்படுத்திய இதே வியாபாரத் தந்திரம் செய்து (அவர் எந்திரன் வழிநடந்துதான் ஆக வேண்டும்) மருதநாயகம் எடுத்து வெளியிட்டால் - போட்ட காசை எடுக்க முடியும். மேலும் ஒரு லாண்ட் மார்க் தமிழ்ப் படத்தையும் தரமுடியும்.

இதுபோல் பணத்தைக்கொட்டி படம் தயாரிக்கும்போது திரைப்படம் ஒரு கலை, சினிமா என்பது வியாபாரம்னு கமல் நெனைக்கக்கூடாது, அது இதுனு பிதற்றும் மேதாவிகளை எல்லாம் கமல் திருப்திப்படுத்த நெனச்சுக்கூடப் பார்க்கக் கூடாது!

எந்திரன், மூன்று மொழியில் வெளிவந்தாலும், ஹிந்தியில் வெளியான ரோபாட் ஒண்ணும் மிகப்பெரிய வெற்றியல்ல! சுமார் 25 கோடிபோல் ஹிந்தியில் மொத்தக் கலக்சன் வரும் என்கிறார்கள். ஆனால், தமிழ், தெலுகு மற்றும் ஓவெர் சீஸ் கலக்சனே எந்திரன் வெற்றிக்கு போதுமானதாகிவிட்டது.

அதேபோல் மருதநாயகம் மும்மொழியில் வெளிவந்தால் ஹிந்தியில் வெற்றியடையாவிட்டாலும் (வெற்றியடைந்தால் இன்னும் நல்லது), தமிழ் , தெலுகு பிரதிகளே வெற்றிக்குப் போதுமானது. ஹிந்தியில் பெருசா சாதிச்சுத்தான் பணத்தை எடுக்கனும்னு இல்லை, என்பது ஒரு நல்ல விசயம்.

கமல், மருதநாயகத்தையோ அல்லது மர்மயோகியையோ விரைவில் ஆரம்பிப்பாரா? ஆஸ்கர் ரவிச்சந்திரனுடனோ அல்லது சன் நெட்வொர்க் உடனோ சேர்ந்து மருதநாயகத்துடன் விரைவில் வருவார் என நம்புவோம்! If he follows endhiran/robot business strategy I dont see him failing!

18 comments:

  1. நீங்கள் சொன்னபடி நடந்தால் தக்கராகவே இருக்கும்... உங்கள் பதிவினை இன்றுதான் முதல் முறையாக வாசிக்கிறேன்... இனி பின்தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. கைகாட்டி எங்கே? கு.கு விடையளிப்பார்!

    ReplyDelete
  3. ஆரம்ப முடிச்சில் ஏராளமான அரசியல் இருககிறது. அதை கடைசிவரை நீங்கள் அவிழ்க்கவேயில்லை..

    ..கமல், ரஜினியை தொழிலில் போட்டியாளராக, ரைவலாக நினைப்பது என்றுமே (இன்றும்) மறுக்கமுடியாத உண்மை. ஏன் ரஜினி, கமலை நினைப்பதில்லையா? னு கேக்காதீங்க...

    ReplyDelete
  4. kindly go thro "neerodai" blog by Mr.Muralikannan regarding this. his last para was good

    ReplyDelete
  5. ***philosophy prabhakaran said...

    நீங்கள் சொன்னபடி நடந்தால் தக்கராகவே இருக்கும்... உங்கள் பதிவினை இன்றுதான் முதல் முறையாக வாசிக்கிறேன்... இனி பின்தொடர்கிறேன்...

    24 October 2010 4:50 PM**

    Nice adjective (prefix). Prabhakaran! :-)

    Thanks for stopping by! :)

    ReplyDelete
  6. ***Blogger பழமைபேசி said...

    கைகாட்டி எங்கே? கு.கு விடையளிப்பார்!

    24 October 2010 5:04 PM***

    LOL!

    அவருக்கு இந்தப் பதிவு பிடிக்காதுனு எனக்குத் தெரியும் :)

    ReplyDelete
  7. ***J. Ramki said...

    ஆரம்ப முடிச்சில் ஏராளமான அரசியல் இருககிறது. அதை கடைசிவரை நீங்கள் அவிழ்க்கவேயில்லை..

    ..கமல், ரஜினியை தொழிலில் போட்டியாளராக, ரைவலாக நினைப்பது என்றுமே (இன்றும்) மறுக்கமுடியாத உண்மை. ஏன் ரஜினி, கமலை நினைப்பதில்லையா? னு கேக்காதீங்க...

    24 October 2010 11:15 PM***

    கமலின் நேர்மையை நீங்க பாராட்டலாம்! :)

    ReplyDelete
  8. ***Blogger ravikumar said...

    kindly go thro "neerodai" blog by Mr.Muralikannan regarding this. his last para was good

    25 October 2010 5:14 AM***

    I went thru that post and responded too. My opinion differs on this. :)

    ReplyDelete
  9. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று!

    ReplyDelete
  10. ***எஸ்.கே said...

    பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று!

    25 October 2010 11:50 AM***

    வாங்க எஸ் கே!

    மருதநாயகம் எடுக்கனும்னா இன்றைய தேதிக்கு தேவையான பணம் (பட்ஜெட்) என்ன? என்பது மொதல்ல தெரிய்னும்.

    யாருக்காவது தெரியுமா?

    ReplyDelete
  11. இதில் வஞ்ச புகழ்ச்சி அணி எதுவும் இல்லையே? ஹா,ஹா,ஹா,ஹா...

    ReplyDelete
  12. வாங்க, சித்ரா! :)

    ***Blogger Chitra said...

    இதில் வஞ்ச புகழ்ச்சி அணி எதுவும் இல்லையே? ஹா,ஹா,ஹா,ஹா...

    26 October 2010 10:43 PM***

    இருக்கமாதிரி தெரியுது போல. ஆனால் இல்லங்க! :)))

    ReplyDelete
  13. வருண் said...
    ***Blogger பழமைபேசி said...

    கைகாட்டி எங்கே? கு.கு விடையளிப்பார்!

    24 October 2010 5:04 PM***

    LOL!

    அவருக்கு இந்தப் பதிவு பிடிக்காதுனு எனக்குத் தெரியும் :)
    //

    யாரோ படம் எடுக்கிறான், படம் பிடிச்சா பார்ப்பேன், இந்த பதிவு ஏன் எனக்கு பிடிக்காம போகனும், படம் நல்லா இல்லாட்டி மருதநாயகம் வேணுமின்னா பிடிக்காம போகலாம்.

    ReplyDelete
  14. ஆனாலும் நீர் குசேலனையே நல்லா இருக்குன்னு எழுதுனதா ஞாபகம், நாடோடிகள் போன்ற கீழ்த்தரமான படத்தை கிழித்துப்போடும் போது உள்ள நேர்மை ரஜினி என்று வந்தால் உம்மிடம் இருப்பதில்லை என்பது உமக்கே தெரியும்.

    ReplyDelete
  15. ***குடுகுடுப்பை said...

    ஆனாலும் நீர் குசேலனையே நல்லா இருக்குன்னு எழுதுனதா ஞாபகம், நாடோடிகள் போன்ற கீழ்த்தரமான படத்தை கிழித்துப்போடும் போது உள்ள நேர்மை ரஜினி என்று வந்தால் உம்மிடம் இருப்பதில்லை என்பது உமக்கே தெரியும்.

    27 October 2010 1:09 PM***

    நேர்மை, நீதி, நியாயம், இதெல்லாம் ஒருவர் ரசனையை வைத்து சொல்ல முடியாதுங்க! ஒரு பிரச்சினையினு (உண்மையான) வரும்போது எப்படி நடந்துகொள்கிறோம் என்பதுதான் முக்கியம். அந்த ஒரு சூழலில்தான் "நேர்மை" நியாயம் எல்லாம் பத்தி பேசனும். ரசனைங்கிறது வேற மேட்டர்.

    நாடோடிகள் படம் எடுத்தவன் என்ன நான் திங்கிற சோத்துலயா மண் அள்ளிப்போட்டான்?

    காதல் என்பதே விவாதத்துக்குரிய ஒரு மேட்டர். அதில், தனக்கு பொழைப்புக்கு வழியில்லாமல் இருக்க ஒரு நிலையில், கையை காலக் கொடுத்து காதலைக் காப்பாத்துவதெல்லாம் எனக்கு புரியாத மேட்டர்ங்க. Seriously, I would care about my life, first. I would care about my parents' first. "friendship" and "love" do not have a long life. I dont think I would lose my arm for helping my friend's love to work out. It is ridiculous because love dont go LONG WAY! I believe that always. I am seeing couples they did "love marriage" and the love hardly exists between them these days. That is the only reason I could not enjoy nadOdigaL. I expressed that! :)

    ReplyDelete
  16. நாடோடிகள் படம் பற்றிய உங்கள் கருத்துடன் 100% ஒத்துப்போகிறேன்.மற்றபடி உங்கள் ரசனையை மதிக்கிறேன்.நான் இங்கே நேர்மை எனக்குறிப்பிட்டது ரஜினி ரசிகன் என்ற மனநிலையைத்தாண்டி உங்களால் பார்க்க இயலாது என்பதைக்குறிப்பிடவே:)

    ReplyDelete
  17. ***குடுகுடுப்பை said...

    நாடோடிகள் படம் பற்றிய உங்கள் கருத்துடன் 100% ஒத்துப்போகிறேன்.மற்றபடி உங்கள் ரசனையை மதிக்கிறேன்.நான் இங்கே நேர்மை எனக்குறிப்பிட்டது ரஜினி ரசிகன் என்ற மனநிலையைத்தாண்டி உங்களால் பார்க்க இயலாது என்பதைக்குறிப்பிடவே:)***

    Thanks for sharing your opinion. It does help! Take it easy :)

    ReplyDelete
  18. நாடோடிகள் படம் பற்றிய உங்கள் கருத்துடன் 100% ஒத்துப்போகிறேன்.மற்றபடி உங்கள் ரசனையை மதிக்கிறேன்.நான் இங்கே நேர்மை எனக்குறிப்பிட்டது ரஜினி ரசிகன் என்ற மனநிலையைத்தாண்டி உங்களால் பார்க்க இயலாது என்பதைக்குறிப்பிடவே:)***

    ........


    yes true

    ReplyDelete