Monday, November 15, 2010

நாங்க கலாச்சாரம் இல்லாத காட்டுமிராண்டிகள்! புதுமைப்பெண்

ப்ரியா அவர்களின் இதுதாண்டா கலாச்சாரம், தொடருகிறது! அடுத்த பகுதியை "இதுதாண்டி கலாச்சாரம்!" ஆக்கனும் அவங்கனு தாழ்மையுடன் கேட்டுக்கிறேன்! ஆமா ஏன் இந்த டிஸ்க்ரிமினேசன்??? ஆம்பளைகளை மட்டும்தாம் இப்படி விளிக்கனுமா? இல்லை தமிழ்க் கலாச்சாரம் இவங்கள தடுக்குதா? அது தெரிஞ்சா ஏன் இப்படி கலாச்சாரம் எல்லாம் கரச்சிகுடிச்ச மாதிரி வியாக்யானம் பேசுறாங்க?

ப்ரியா அவர்கள் என்ன சொல்ல் வர்றாங்கனா...அதாவது அவங்க எப்பிசோட்கள் மூலமாக

நிற்க,

கெளசல்யா அவர்களின் பதிவை
இவங்க விமர்சிச்சது தனி நபர் தாக்குதல் இல்லைனா இதெப்படி தனிநபர் தாக்குதலாகும்?
லாஜிக் இடிக்கல?

தொடரலாம்ங்க இப்போ!

ஆமா, நாங்க கலாச்சார்ம் இல்லாத காட்டுமிராண்டிகள்தான். மிருகங்கள் போல ஐந்தறிவோடதான் வாழ்ந்துக்கிட்டு இருந்ததோம். மேலும் எங்க அப்பா அம்மா தாத்தா பாட்டிக்கெல்லாம் 5 அறிவுதான்னு ஒத்துக்கிறோம். அதான் எங்களோட கலாச்சாரம் இப்படி இருக்கு! இப்போத்தான் எனக்கு ஆறாவது அறிவு வந்திருக்கு அதுவும் வெள்ளைக்காரன் பரிச்சயம், மேலும் கமலஹாசன், குஷ்பு, சாருநிவேதிதா போன்ற ஞானிகளின் எப்படி வாழனும்னு சொல்ற ஒப்பீனியனை கேட்டவுடன்!

அதுவும் ஆடையில்லாம்ல் திரிஞ்ச எங்களுக்கு வெள்ளைக்காரன்தான் எப்படி ஜீன்ஸ் போடற்துனு சொல்லிக்கொடுத்தான். அதனால நாங்க இனிமேல் வெள்ளைக்காரனுக்குத்தான் கோயில் கட்டி கும்பிடுவோம். திருவள்ளுவர், பாரதியெல்லாம் எங்க கலாச்சாரத்தை நாறடிச்சவங்க! நான் அடுத்த ஜெண்மத்திலாவது, பொண்டாட்டியிருக்கும்போது கேர்ள் ஃப்ரெண்ட் வச்சுகிட அனுமதிக்கிற வெள்ளைக்காரியாப் பிறக்கனும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்னு சொல்றாங்களா?

இதுதாண்டா எங்க அசிங்கமான காட்டுமிராண்டி கலாச்சாரம்னு நம்மை நாமே இழிவு படுத்துவது யாருக்கும் நோபல் சமாதானப் பரிசு தரப்போவதில்லை! இதுபோல் நம்மை நாமே கேவலப்படுதுவதால்தான் வெள்ளைக்காரன் இன்னும் நம்மை காட்டுமிராண்டியாவே நினைக்கிறானா?

அப்புறம் நம்ம புதுமைப்பெண்கள் தெரிஞ்சுக்க வேண்டியது!

நான் பார்த்தவரைக்கும்,

ஒரு கன்சர்வேட்டிவை, கேலிசெய்யும் "புதுமைப்பெண்" மற்றொரு "மாபெரும் புதுமைப்பெண்" பார்வையில் கன்சர்வேட்டிவாகவே தெரிகிறார். இதுல இருந்து என்ன தெரியுது?

16 comments:

  1. பதிவின் தலைப்பு “ரிலாக்ஸ் ப்ளீஸ்”

    ReplyDelete
  2. தலைவரே தனக்கு ஒரு கருத்து, ஊருக்கு ஒரு கருத்து என்று பேசுபவர்கள் பலரை பார்த்தாகி விட்டது. விட்டுத்தள்ளுங்க.

    ReplyDelete
  3. **ILA(@)இளா said...

    பதிவின் தலைப்பு “ரிலாக்ஸ் ப்ளீஸ்”***

    வாங்க இளா! :) ஐ ஆம் கூல்! :)

    ReplyDelete
  4. ***ப்ரியமுடன் வசந்த் said...

    கூல் மச்சி !

    15 November 2010 8:14 AM***

    நன்றி, வசந்த்.

    நான் என்ன சொல்றென்னா நீங்க லிபெரெலா இருங்க, அதுதான் உங்களுக்கு சரி என்றால். ஒரு சிலருக்கு கன்செர்வேட்டிவா வாழ்றதுதான் அர்த்தமுள்ளதா இருக்கும்.

    இதுல யார் செய்றது சரினு சொல்றதெல்லாம் கஷ்டம்!

    ReplyDelete
  5. ***பாலா said...

    தலைவரே தனக்கு ஒரு கருத்து, ஊருக்கு ஒரு கருத்து என்று பேசுபவர்கள் பலரை பார்த்தாகி விட்டது. விட்டுத்தள்ளுங்க.
    15 November 2010 8:20 AM ***
    வாங்க, பாலா! :)

    கன்செர்வேட்டிவ் லிபெரல் ஆகிற மாதிரி, லிபெரல் கன்செர்வேட்டிவா மாறுறதையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கோம்!

    ReplyDelete
  6. இரெண்டு பேரும் இரண்டு பேர் மாதிரியும் இருக்கறது அவங்க இஷ்டம், இரண்டு அவங்க அது சரியில்லைன்னு இவங்க சரியில்லைன்னு சொல்லும் போது விவாதம் தவிர்க்கமுடியாதது.

    ReplyDelete
  7. ***குடுகுடுப்பை said...

    இரெண்டு பேரும் இரண்டு பேர் மாதிரியும் இருக்கறது அவங்க இஷ்டம், இரண்டு அவங்க அது சரியில்லைன்னு இவங்க சரியில்லைன்னு சொல்லும் போது விவாதம் தவிர்க்கமுடியாதது.
    15 November 2010 12:20 PM ***

    எங்கம்மா கன்சர்வேட்டிவ், நான் லிபெரல்- உண்மையைத்தான் சொல்றேன்.

    அவங்கள என்னால புரிச்ஞுக்கமுடியுது. ஆனால் என்னை அவங்க புரிஞ்சுக்கிறது கஷ்டம்னு எனக்குத் தெரியும்.

    இங்கே நாந்தான் ரெண்டுபேரையும் புரிஞ்சு நடந்துக்கிறேன்- அவங்கள கஷ்டப்படுத்தாமல். நான் சொல்ல வர்றது உங்களுக்குப் புரியும்னு நம்புறேன்.

    கன்சர்வேட்டிவா அழகா வாழ்றவங்களும் இருக்காங்க இல்லையா? லிபெரல்லா அசிங்கமா வாழ்றவங்களும் இருக்காங்க!

    எந்த கல்ச்சருமே பர்ஃபெக்ட் கிடையாதுங்க. ந்ம்மை நாம எவ்வளவு திட்டினாலும், ந்ம்ம பழைய தமிழ் கலாச்சாரத்தில் இருந்து வந்தவங்கதான். அதை எப்படி மாத்த முடியும்?

    ReplyDelete
  8. எந்த கல்ச்சருமே பர்ஃபெக்ட் கிடையாதுங்க. ந்ம்மை நாம எவ்வளவு திட்டினாலும், ந்ம்ம பழைய தமிழ் கலாச்சாரத்தில் இருந்து வந்தவங்கதான். அதை எப்படி மாத்த முடியும்?
    //

    மாத்த விரும்புறவங்க மாறிட்டு போனா ஏன் தடுக்கனும்?

    ReplyDelete
  9. ***குடுகுடுப்பை said...

    எந்த கல்ச்சருமே பர்ஃபெக்ட் கிடையாதுங்க. ந்ம்மை நாம எவ்வளவு திட்டினாலும், ந்ம்ம பழைய தமிழ் கலாச்சாரத்தில் இருந்து வந்தவங்கதான். அதை எப்படி மாத்த முடியும்?
    //

    மாத்த விரும்புறவங்க மாறிட்டு போனா ஏன் தடுக்கனும்?
    15 November 2010 1:50 PM ***

    யாரையும் யாரும் தடுக்கவோ கண்ட்ரோல் செய்யவோ முடியாதுங்க. அவர்கள் வாழ்க்கை அவங்க இஷ்டப்படிதான். But people will have opinions based on their beliefs and they will say what they believe as right or wrong! That is all. If one is smart enough to turn a deaf ear to it, there is no problem! :) But often we dont!

    ReplyDelete
  10. வருண்

    ப்ரீயா விடுங்க... பதிவுலகில் மாற்று கருது என்பது தனிப்பட்ட நபரை தாக்குவதே என்பதை எத்தனையோ முறை பார்த்தாச்சு. அவ்வளவுதான்...

    ReplyDelete
  11. ***LK said...

    வருண்

    ப்ரீயா விடுங்க... பதிவுலகில் மாற்று கருது என்பது தனிப்பட்ட நபரை தாக்குவதே என்பதை எத்தனையோ முறை பார்த்தாச்சு. அவ்வளவுதான்...
    15 November 2010 5:35 PM ***

    வாங்க எல் கே!

    நான் ஒரு பின்னூட்டமாத்தான் இந்த கருத்தை எழுதினேன்ங்க. ரொம்ப ஹார்ஷா இருந்ததாலே வெளிய வருமானு சந்தேகமா இருந்துச்சு. சரி இங்கேயே அதை சொல்லிருவோம்னு பதிவாப் போட்டுட்டேன்ங்க.

    ReplyDelete
  12. ஒரு கன்சர்வேட்டிவை, கேலிசெய்யும் "புதுமைப்பெண்" மற்றொரு "மாபெரும் புதுமைப்பெண்" பார்வையில் கன்சர்வேட்டிவாகவே தெரிகிறார். இதுல இருந்து என்ன தெரியுது?//

    :)

    ட்ரு.

    கெளசல்யா சொல்ல வந்த கருத்து ஏற்புடையதோ இல்லையோ மென்மையான விதத்தில் சொல்லப்பட்டது..

    கலகல - ஹிஹி.. அரொகண்ட் எப்பவும் போல..

    //கன்சர்வேட்டிவா அழகா வாழ்றவங்களும் இருக்காங்க இல்லையா? லிபெரல்லா அசிங்கமா வாழ்றவங்களும் இருக்காங்க!//

    உண்மை..& vice versa also true..

    ReplyDelete
  13. **சங்கவி said...

    Cool...**

    வாங்க, சங்கவி! :)

    ReplyDelete
  14. ***பயணமும் எண்ணங்களும் said...

    ஒரு கன்சர்வேட்டிவை, கேலிசெய்யும் "புதுமைப்பெண்" மற்றொரு "மாபெரும் புதுமைப்பெண்" பார்வையில் கன்சர்வேட்டிவாகவே தெரிகிறார். இதுல இருந்து என்ன தெரியுது?//

    :)

    ட்ரு.

    கெளசல்யா சொல்ல வந்த கருத்து ஏற்புடையதோ இல்லையோ மென்மையான விதத்தில் சொல்லப்பட்டது..

    கலகல - ஹிஹி.. அரொகண்ட் எப்பவும் போல..

    //கன்சர்வேட்டிவா அழகா வாழ்றவங்களும் இருக்காங்க இல்லையா? லிபெரல்லா அசிங்கமா வாழ்றவங்களும் இருக்காங்க!//

    உண்மை..& vice versa also true..

    15 November 2010 8:08 PM***

    You have summarized it well, Mrs. Shanthi and I have nothing to disagree!

    YES, TRUE! :)

    ReplyDelete