Sunday, December 12, 2010

தத்துப்பித்து பிரபாகரருக்கு சூப்பர் ஸ்டார் பதில்கள்!

கிளிமாஞ்சாரோ பாடல் உருவான விதம் குறித்தும் ஐஸ்வர்யா ராயின் பேரழகை குறித்தும் (பாடி ஸ்டெடியா இருக்கு... மைன்ட் ஆப் ஆயிடுச்சு) உங்களது பேட்டி ஒன்றில் சிலாகித்து ஜொள்ளியிருந்தீர்கள். நல்லது. இப்பொழுது கேள்வி அது பற்றியதல்ல. கிளிமாஞ்சாரோ பாடலில் ஏதோவொரு ஸ்டெப்பை முப்பது நாப்பது முறை ப்ராக்டீஸ் செய்து பார்த்ததாக சொன்னீர்களே. அது எந்த ஸ்டெப் என்று தெரிந்துக்கொள்ளலாமா...? அந்த பாடலில் அதிக பட்சம் கடினமான ஸ்டெப் என்றால் அது தோள்பட்டையை உலுக்குவதும், தொடையை தட்டிக்கொண்டு துள்ளிகுதிப்பதும் தான். அந்த ஸ்டெப்பையா முப்பது நாப்பது முறை ப்ராக்டீஸ் செய்தீர்கள்...

இப்போ இதுக்கு ரஜினி பதில் சொல்லனுமா, உங்க வலைதளத்துக்கு வந்து? சரி, அந்த தோள்பட்டையை உலுக்கிற ஸ்டெப்னே வச்சுக்கோவோம். 60 வயசுல அவரால் ஆட முடியல போல இருக்கு ரொம்ப ப்ராக்டிஸ் தேவைப்பட்டு இருக்கு. உங்களுக்கு இதிலென்ன பிரச்சினை? நீங்க இதைவிட நல்லா செஞ்சிருப்பீங்களா? இதிலே ரஜினி எதுக்கு பொய் சொல்லுவதா நீங்க புரளியக் கிளப்பி விடுறீங்க?

* எந்திரன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு உங்கள் இரண்டாவது மகளின் திருமணம் நடந்து முடிந்தபிறகு ஒரு பிரஸ்மீட்டில் ரசிகர்களுக்காக தனியாக ஒரு விருந்து ஏற்பாடு செய்ய இருப்பதாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் பிற்பாடு அதுபற்றி மறந்துவிட்டீர்கள் போல. அந்த விருந்தை உங்கள் பேத்தியின் திருமணத்திற்காவது வைப்பீர்களா...? எந்திரன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அதைவிட பெரிய விருந்து வைத்துவிட்டேன் என்று சொல்லி டபாய்க்க வேண்டாம். ஏனெனில் எந்திரன் படத்தை நாங்கள் ஒவ்வொருவரும் டிக்கட் எடுத்து தான் பார்த்தோம்.

நீங்க யார் சார்? ரஜினி ரசிகரா? ரஜினி படப்பாடல்கள் புதிர்ல ஒண்ணுகூட தெரியலைனு சொன்னீங்க? உங்களுக்கும் விருந்து தர்றேன்னு சொன்னாரா? இது ரஜினி ரசிகர்களுக்கும் ரஜினிக்கும் உள்ள பிரச்சினை சார். நீங்க ஏன் சார் சம்மன் இல்லாம ஆஜர் ஆகுறீங்க?

* மைனா படத்தை பார்த்துவிட்டு இதுபோன்ற படத்தில் நான் ஒரு சின்ன பாத்திரத்தில் கூட நடிக்கவில்லை என்று வருத்தப்பட்டிருந்தீர்கள். உண்மையில் மைனா படத்தை எடுப்பதற்கு முன்பு உங்களிடம் கதையை கூறி அதில் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கச் சொல்லி கேட்டிருந்தால் நடித்திருப்பீர்களா...? அய்யா... நீங்கள் வருத்தப்படவே வேண்டாம். அடுத்ததாக பிரபு சாலமன் இன்னொரு பட்ஜெட் படம் எடுக்க இருக்கிறாராம். அதற்கு ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் தேவைப்படுகிறார். என்ன சொல்கிறீர்கள். வந்து நடித்துவிட்டு போகவேண்டியது தானே...?

நீங்க யாரு சார்? பிரபு சாலமன் தூதுவரா? உங்களை அனுப்பினாரா அவ்ரு? அவரு, நாளைக்கு வந்து, "என்ன இப்படி தேவை இல்லாமல் என் பேரை இழுக்குறீங்க"னு சொன்னா உங்க முகத்தை எங்க கொண்டுபோய் வச்சுக்குவீங்க?

இதெல்லாம் ஒரு கேள்விகள்னு கேட்டு விதண்டாவாதம் செய்து என்னத்த சாதிச்சீங்க? ஒண்ணு கவனிச்சீங்களா? ரஜினியை மட்டம்தட்டனும்னு ஒரே எண்ணத்தில் கேட்கிற குப்பைக் கேள்விகளுக்குக்கூட ரஜினி ரசிகர்கள் யாரும் நெகடிவ் ஓட்டுப்போடலை பாருங்க! நீங்க ரஜினிபத்தியோ அவர் ரசிகர்கள் பத்தியோ புரிஞ்சிக்கிற அளவுக்கு இன்னும் வாழ்க்கையில் அனுபவப்படலை சார்!

30 comments:

  1. அடுத்த பிரச்சனையை ஆரம்பிச்சுட்டீங்களா?

    ReplyDelete
  2. இன்னைக்கு தேதி 13. ஆனா 12 காண்பிக்குது.ஒரு வேளை நீஇங்க ஃபாரீன் பதிவரோ

    ReplyDelete
  3. எந்த ரஜினி பட புதிர்ல ஒண்ணுமே தெரியனன்னாரு இந்த பிரபாகரு....ஒண்ணுமே புரியல....

    ReplyDelete
  4. மிகவும் யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!
    நானும் உங்களைப் போல் ஒருவனே!

    ReplyDelete
  5. ***சி.பி.செந்தில்குமார் said...

    வட
    12 December 2010 5:36 PM
    சி.பி.செந்தில்குமார் said...

    அடுத்த பிரச்சனையை ஆரம்பிச்சுட்டீங்களா?
    12 December 2010 5:37 PM***

    அய்யோ, பிரச்சினையெல்லாம் ஒண்ணும் இல்லைங்க. சும்மா ஒரு எதிர்வினை! :)
    ---------------

    சி.பி.செந்தில்குமார் said...

    இன்னைக்கு தேதி 13. ஆனா 12 காண்பிக்குது.ஒரு வேளை நீஇங்க ஃபாரீன் பதிவரோ
    12 December 2010 5:37 PM ***

    ஆமங்க நான் அயல்நாட்டுக்காரந்தான். உங்களுக்கும் எனக்கும் ஒரு 11:30 மணி நேரம் வித்தியாசம் இருக்கும்:)

    ReplyDelete
  6. ***பெயர் சொல்ல விருப்பமில்லை said...

    மிகவும் யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!
    நானும் உங்களைப் போல் ஒருவனே!

    13 December 2010 3:23 AM***

    நன்றிங்க, பெ சொ வி! :)

    ReplyDelete
  7. ***தமிழ் வாழ்க..... said...

    எந்த ரஜினி பட புதிர்ல ஒண்ணுமே தெரியனன்னாரு இந்த பிரபாகரு....ஒண்ணுமே புரியல....
    12 December 2010 6:16 PM***

    நண்பர் ரஹீம் ஒரு ரஜினி பாட்டுப் புதிர் போட்டி நடத்தினார்ங்க. இந்தா இருக்கு லின்க்,

    http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html

    அதில் நண்பர் பிரபாகர் பின்னூட்டம் பாருங்க. இவர் ரஜினி ரசிகராக இந்தக் விருந்து பற்றி கேள்வி கேட்டுள்ளார். இவர் ரஜினி ரசிகரே அல்ல!

    ReplyDelete
  8. பதில் எழுதுவதற்கு முன்பு ஒன்றை சொல்லியாக வேண்டும்... நான் ஒன்றும் ரஜினி எதிர்ப்பாளன் அல்ல... நானும் ரஜினியை ஒரு ரசிகனாக பல படங்களில் ரசித்திருக்கிறேன்... நான் இதற்கு முன்பு எழுதிய சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென் படங்கள் மற்றும் எந்திரன் படம் குறித்த இரண்டு பதிவுகளையும் படித்தால் தெரியவரும்...

    ReplyDelete
  9. // சரி, அந்த தோள்பட்டையை உலுக்கிற ஸ்டெப்னே வச்சுக்கோவோம். 60 வயசுல அவரால் ட முடியல போல இருக்கு ரொம்ப ப்ராக்டிஸ் தேவைப்பட்டு இருக்கு. //
    பலமுறை ரஜினியின் அந்த பேட்டியை சன் டி.வியில் பார்த்து சலித்துப்போய் எழுதிய வார்த்தைகள் அவை... இருப்பினும் உங்கள் வார்த்தைகளில் இருக்கும் நியாயத்தை ஒப்புக்கொள்கிறேன்...

    ReplyDelete
  10. // உங்களுக்கு இதிலென்ன பிரச்சினை? நீங்க இதைவிட நல்லா செஞ்சிருப்பீங்களா? //
    நிச்சயம் செய்திருக்க மாட்டேன் :) நான் நடிகனும் இல்லை கோடிக்கணக்கான பணம் எனக்கு கொடுக்கப்படவும் இல்லை...

    // நீங்க யார் சார்? ரஜினி ரசிகரா? உங்களுக்கும் விருந்து தர்றேன்னு சொன்னாரா? இது ரஜினி ரசிகர்களுக்கும் ரஜினிக்கும் உள்ள பிரச்சினை சார். நீங்க ஏன் சார் சம்மன் இல்லாம ஆஜர் ஆகுறீங்க? //
    ஏன் ரஜினி ரசிகர்கள் சார்பாக நான் கேள்வி கேட்கக்கூடாதா...? ரஜினி ரசிகர்கள் ஒருவர் மனதில் கூட இப்படி ஒரு கேள்வி இல்லையா...?

    // ரஜினி படப்பாடல்கள் புதிர்ல ஒண்ணுகூட தெரியலைனு சொன்னீங்க? //
    ஆம்... அது ஒரு கடினமான புதிர்போட்டி... ரஜினி என்று இல்லை அது கமல் அல்லது அஜித் பற்றிய புதிராக இருந்திருந்தாலும் எனக்கு விடைகள் தெரிந்திருக்காது...

    ReplyDelete
  11. // நீங்க யாரு சார்? பிரபு சாலமன் தூதுவரா? உங்களை அனுப்பினாரா அவ்ரு? அவரு, நாளைக்கு வந்து, "என்ன இப்படி தேவை இல்லாமல் என் பேரை இழுக்குறீங்க"னு சொன்னா உங்க முகத்தை எங்க கொண்டுபோய் வச்சுக்குவீங்க? //
    இந்த கேள்வி மற்றும் இதற்கு முந்தய கேள்வியையும் படிக்கும்போது இதை எல்லாம் கேட்க நான் யார் என்பதே அதன் சாரமாக இருக்கிறது... ரஜினியோ அல்லது பிரபு சாலமனோ பொதுவாழ்க்கை என்று வந்துவிட்டால் யார் வேண்டுமானால் விவாதிக்கலாம்... வலைப்பூ சுதந்திரம் பற்றி தெரியும் தானே... நீங்களும் கமல் பற்றி எழுதியிருக்கிறீர்களே...? என் பெயரை எதுக்கு இழுக்குறீங்கன்னு கமல் வந்து கேட்க முடியுமா...

    கமல் பற்றி சொல்லும்போது நானும் ஒரு கமல் ரசிகன் தான்... ஆனால் கமல் எதைச் செய்தாலும் அதை கண்மூடித்தனமாக ஆதரிப்பவன் நான் அல்ல... நீங்கள் கமலை விமர்சித்த சில பதிவுகளில் உங்கள் பார்வை சரியாக இருந்து நான் அதை வழிமொழிந்திருக்கிறேன்...

    ReplyDelete
  12. // ரஜினியை மட்டம்தட்டனும்னு ஒரே எண்ணத்தில் கேட்கிற குப்பைக் கேள்விகளுக்குக்கூட ரஜினி ரசிகர்கள் யாரும் நெகடிவ் ஓட்டுப்போடலை பாருங்க! //
    நிச்சயம் ரஜினி ரசிகர்களை பாராட்டியே ஆகவேண்டும்... இதற்கு முன்பு விஜய்யை விமர்சனம் செய்தும் சுறா படத்தை விமர்சனம் செய்தும் எழுதியபோது சில கெட்டவார்த்தை பின்னூட்டங்கள் வந்து விழுந்தன... ஆனால் ரஜினி ரசிகர்களிடமிருந்து ஒரு தவறான வார்த்தைகூட வரவில்லை...

    ReplyDelete
  13. மற்றபடி உங்களுக்கு என்மீது தனிப்பட்ட கோபம் இல்லைஎன்று நம்புகிறேன்... அப்படி எதுவும் இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்...

    ReplyDelete
  14. மேலும் இந்தப் பதிவில் இன்னும் சில கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறேன்... அதையும் படித்துப் பார்க்கவும்...
    http://balapakkangal.blogspot.com/2010/12/blog-post_13.html

    ReplyDelete
  15. என்னங்க, பிரபாகர்! :)))

    உங்க மேலே கோபம்லாம் இல்லைங்க. சும்மா ஒரு எதிர்வினைஎழுதலாம்னு தோனுச்சு. அம்புட்டுத்தான். நான் உங்க பின்னூட்டமெல்லாம் படிச்சுப் பார்த்துட்டு இன்னொரு பதில்தர்றேன். டேக் இட் ஈஸி :)))

    ReplyDelete
  16. //ரஜினியோ அல்லது பிரபு சாலமனோ பொதுவாழ்க்கை என்று வந்துவிட்டால் யார் வேண்டுமானால் விவாதிக்கலாம்... வலைப்பூ சுதந்திரம் பற்றி தெரியும் தானே... நீங்களும் கமல் பற்றி எழுதியிருக்கிறீர்களே...? என் பெயரை எதுக்கு இழுக்குறீங்கன்னு கமல் வந்து கேட்க முடியுமா...//நெத்தி அடி! "இது ரஜினி ரசிகர்களாகிய எங்களுக்கும் ரஜினிக்கும் இடையிலான பிரச்சினை, அதில் தலையிட நீங்கள் யார்" என்றெல்லாம் இவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். என்னமோ ரஜினி இவர்களுக்கு மட்டுமே நேர்ந்து விட்டுவிட்டது போலவும், இவர்களை நம்பியே படம் நடிப்பதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். இவர்களால் மட்டுமே அவர் படம் ஓடுவதென்றால் பாபா, குசேலன் போன்ற படங்கள் ஓடியிருக்க வேண்டுமே? ஆனால் அவை ஊத்திக் கொண்டனவே, அன்றைக்கு இவர்களால் என்ன செய்ய முடிந்தது? அட அப்படியே ஆனால் கூட ரஜினி என்ற தனி மனிதருக்கு இன்னொரு தனி மனிதன் கேள்வி கேட்பதாகவே வைத்துக் கொள்வோமே? இரண்டு தனிப்பட்ட மனிதர்களுக்குள் நடக்கும் சம்பாஷணைக்குள் மூன்றாம் ஆட்கள் எதற்கு மூக்கை நுழைக்கிறார்கள்?

    ReplyDelete
  17. ஒரு நடிகர் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்கு மட்டுமே சொந்தம் என்றால் படங்களை எடுத்து அவற்றை சி.டி.யாகப் போட்டு உங்கள் வட்டத்திற்குள் மட்டும் போட்டு பார்த்துக் கொள்ளுங்களேன், அங்கே யார் வந்து கேள்வி கேட்கப் போகிறார்கள்? ஒரு நடிகனின் ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே, ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், உங்களுக்கு உங்கள் பிடித்த நடிகனின் படங்கள் தொடர்ந்து வர வேண்டும், அவற்றை நீங்கள் ரசிக்க வேண்டும் என்றால் கூட, படம் நன்றாக இருக்கிறது அதனால் பார்க்கிறேன் என்று சொல்லும் சாதரணமானவர்களின் ஆதரவும் வேண்டும். அது இல்லை என்றால் நீங்களும் இல்லை உங்கள் ஸ்டாரும் இல்லை. கட்டவுட்டுக்கு பால் ஊற்றுபவன், காவடி தூக்குபவன், மொட்டையடிப்பவன், அலகு குத்துபவன், அதிகாலையில் எழுந்து நீராடி அங்க பிரதட்சணம் பண்ணிக் கொண்டு திரையரங்குக்கு வந்து மங்களம் பாடுபவன் இவர்கள் ஆதரவு இல்லாமலும் படங்கள் வெற்றியடையும். ரசிகன் என்று காண்பித்துக் கொள்வதற்காக உங்கள் குடும்பத்தினரை கொடுமைப் படுத்தி பணத்தை கட்டவுட்டுக்கு பாலூற்றவும், படத்தின் preview பார்க்கவே நூற்றுகணக்கில் செலவு செய்தல், முதல் நாளே படம் பார்க்க ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் விரயம் செய்யாமல் இருக்க முடியுமா என்று பாருங்கள். உங்களால் உங்கள் குடும்பத்துக்கும் தொந்தரவு, அந்த நடிகனுக்கும் தொந்தரவு, பொது மக்களுக்கும் இடைஞ்சல், பூனையின் உபகாரம் குறுக்கே வராமல் இருந்தால் போதும்.

    ReplyDelete
  18. பிரபாகரன் சார் பின்னுறீங்க சார், எந்த மாதிரி பால் போட்டாலும் சிக்சர் அடிக்கும் ஒரு சச்சின் டெண்டுல்கரைப் வலைப் பதிவுல பார்த்த திருப்தி. Keep it up.

    ReplyDelete
  19. விடுங்க பாஸ் பதிவுலகில் அவரைப்பத்தி இவரு இவரை பத்தி அவருன்னு மாறி மாறி எழுதிட்டே இருப்பாங்க

    ReplyDelete
  20. @ Jayadev Das
    விட்டுடுவோம் நண்பரே... ஒரு நடிகருக்காக பதிவர்கள் நாம் ஏன் சண்டை போட்டுக்கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  21. @ Jayadev Das
    // பிரபாகரன் சார் பின்னுறீங்க சார், எந்த மாதிரி பால் போட்டாலும் சிக்சர் அடிக்கும் ஒரு சச்சின் டெண்டுல்கரைப் வலைப் பதிவுல பார்த்த திருப்தி. Keep it up. //

    மிக்க நன்றி... நீங்களும்தான்... என்னுடைய இடுகை, இந்த இடுகை, பாலாவின் இடுகை மூன்றிலும் நீங்கள் வளைத்து வளைத்து பக்கம் பக்கமாக இடும் பின்னூட்டங்களை நானும் படித்து ரசித்துக்கொண்டிருக்கிறேன்...

    ReplyDelete
  22. ***Jayadev Das said...

    //ரஜினியோ அல்லது பிரபு சாலமனோ பொதுவாழ்க்கை என்று வந்துவிட்டால் யார் வேண்டுமானால் விவாதிக்கலாம்... வலைப்பூ சுதந்திரம் பற்றி தெரியும் தானே... நீங்களும் கமல் பற்றி எழுதியிருக்கிறீர்களே...? என் பெயரை எதுக்கு இழுக்குறீங்கன்னு கமல் வந்து கேட்க முடியுமா...//***

    நண்Bஅர்கள் பிரபாகர் மற்றும் ஜெயவேல் தாசு!

    நான் நானாத்தான் கமலை விமர்சிக்கிறேன். நீங்க நீங்களா இல்ல சார், நீங்க "பிரபு சாலமனா" ஆயிட்டீங்க!

    ரஜினி, பிரபு சாலமனுக்கு உதவி இருக்கிறார். நீங்க பிரபு சாஅலமனுக்கு உபத்திரவம் செய்றீங்க.
    சொல்லுங்க,

    பிரபு சாலமன் யார் பக்கம் சேருவார்?

    ரஜினி பக்கம் தான்! :)))

    ReplyDelete
  23. ***ஐயையோ நான் தமிழன் said...

    விடுங்க பாஸ் பதிவுலகில் அவரைப்பத்தி இவரு இவரை பத்தி அவருன்னு மாறி மாறி எழுதிட்டே இருப்பாங்க

    14 December 2010 2:16 AM***

    சந்திரமுகி ரஜினி ஸ்டில் நல்லாயிருக்கு! நான் சொல்றதை சொல்லியாச்சுங்க! அவரும் விளக்கி விட்டார். இதோட கதம் கதம் ஃபார் நவ்! :)

    ReplyDelete
  24. //நண்Bஅர்கள் பிரபாகர் மற்றும் ஜெயவேல் தாசு!// Jayadev Das என்பதை ஜெயவேல் தாசு என்று சொல்லியுள்ளீர்களே, அது எப்படி சார் உங்களுக்குத் தோணிச்சு! முடிஞ்சா பதில் போடுங்க ஆர்வமா இருக்கு [காரணமும் இருக்கு!]

    ReplyDelete
  25. ***Jayadev Das said...

    //நண்Bஅர்கள் பிரபாகர் மற்றும் ஜெயவேல் தாசு!// Jayadev Das என்பதை ஜெயவேல் தாசு என்று சொல்லியுள்ளீர்களே, அது எப்படி சார் உங்களுக்குத் தோணிச்சு! முடிஞ்சா பதில் போடுங்க ஆர்வமா இருக்கு [காரணமும் இருக்கு!]

    14 December 2010 9:55 AM***

    ஜெயதேவ் தாஸ்!

    உங்க பேரை தவறாக உச்சரித்ததுக்கு மன்னிச்சுக்கோங்க.

    நான் இன்னொரு விவாதத்தில் ரொம்ப சீரியஸாக இருந்ததால் அவசரமாக பதில் எழுதினேன். அதான்..

    உங்களுக்கு என்ன பதில் வேணும்னு தெரியலை :)

    ReplyDelete
  26. என்னோட ஒரிஜினல் பேரே அதான்! ஹ....ஹா...ஹா...

    ReplyDelete
  27. ***Jayadev Das said...

    என்னோட ஒரிஜினல் பேரே அதான்! ஹ....ஹா...ஹா...

    15 December 2010 7:25 AM***

    நெஜம்மாவா?!! எனக்கு இப்போத்தாங்க தெரியும். :)

    ReplyDelete
  28. சும்மா கிடந்தவன சொறியருக்குன்னே நிறைய பேரு இருப்பனுங்க போலிருக்கு

    ReplyDelete
  29. யாரைத் திட்டுறீங்கனு தெரியலை. ஆனா திட்டுவது உங்க உரிமை :))))

    ReplyDelete