Sunday, December 19, 2010

இணையதள விவாதத்தில் பயங்கரம்! மேதாவிகள் கவனிக்கவும்!

ஹலோ! யார் சார் நீங்க? என்னது? நீங்க ரொம்ப நாகரிகமாக கருத்தை சொல்ற பெரிய மனிதரா? பெரிய ஈகோயிஸ்டா? இல்லை உண்மையிலேயே பெரிய ஆள், அதனால் வந்த ஈகோதானா?

அதாவது உலகத்தில் எனக்கு எல்லாம் தெரியும் என்னால் எதை வேணா விளக்க முடியும்னு நெனைக்கிற பெரிய மேதாவியா சார் நீங்க? அதாவது எந்ததொரு விவாதத்திலுமே "எனக்கு இது தெரியலைங்க"னு நீங்க சொன்னதை பார்க்கவே முடியாதா? உங்க விவாதத்தில் தேடித் தேடிப்பார்த்தாலும் அந்த வரியைமட்டும் நீங்க சொல்லி பார்க்கவே முடியாதா? அதாவது எல்லாம தெரிந்தவன்னு நினைத்துக்கொண்டு வாழும் படித்த முட்டாளா நீங்க? என்ன என்ன? நீங்க எல்லாம் தெரிந்தாவர் அப்புறம் உங்களுக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியமா?

இது ஒரு வியாதி சார். இதுபோல உங்களுக்கு ஒரு வியாதி இருப்பதால் தயவு செய்து எந்த விவாதத்திலும் கலந்துக்காதீங்க, சார். நீங்க ஒண்ணு பண்ணுங்க! உங்க கருத்தை உங்க தளத்தில் சொல்லிவிட்டு, எதிர்கருத்தை வரவேற்காமல் உங்க சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொண்டு போயிக்கிட்டே இருங்க. உங்கள ஒருபய ஒண்ணும் பண்ண முடியாது சார்!

இணையதள விவாதம் உங்களுக்கு வேணாமே, ப்ளீஸ்? ஏன் சொல்றேன்னா, நீங்க எவ்ளோ பெரிய ஆளாயிருந்தாலும், பதிவுலகில் நீங்க ஒரு சாதாரண சகபதிவர்தான். உங்களுக்காக, உங்க தகுதி, உங்க படிப்பறிவு, உங்க அகம்பாவம் எல்லாம் புரிந்து நடந்துக்க ஒரு சில "பெரிய மனிதர்கள்" நிச்சயம் இருப்பாங்க என்பது உண்மைதான். ஆனால் எல்லாரும் அப்படியல்ல! உலகம் மிகப்பெரியது! ஒருசிலர் வேறுமாதிரியாக உங்களை மடக்கலாம், உங்க குறைகளை அறிந்து அவைகள் மூலம் உங்களை வேறுமாதிரியாக தாக்கலாம். உங்களுக்கே தெரியாமல் இருக்கும் உங்க குறைகளை உலகறியக்காட்டி உங்க உண்மையான முகத்தை காட்டிவிடலாம். அதுக்குத்தான் சொல்றேன் சார். ஆமா, ஆமா உங்க நன்மைக்குத்தான் சொல்றேன். சார், சொல்றதைக் கேளுங்க! இந்த பயங்கரமான இனையதளத்தில் விவாதத்துக்கு வந்தால் உங்களை மாதிரி பெரியவாளுக்கு பல பிரச்சினைகள் உண்டு, சார். இல்ல சார், உங்கள் நிலை மாறி வரும் பின்விளைவுகளை உங்களால் தாங்கிக்கொள்ளும் மனபக்குவம் உங்களிடம் இல்லைனு உங்களுக்கே இவ்ளோ நாள் தெரியாமல் இருந்து இருப்பீங்க.

என்ன? "அதெப்படி எனக்குத் தெரியாமல் இருக்கும்? எனக்கு எல்லாம் தெரியும்!" னு சொல்றீங்களா? இல்லை சார், "எனக்கு எல்லாமே தெரியுமே!" னு நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் முட்டாள் சார் நீங்க! பச்சையா சொன்னா நீங்க எல்லாம் தெரிந்த "கடவுளாவே" இருந்தாலும் உங்களுக்கு தெரியாதது நெறையா இருக்கும், சார். ஆமா, உங்க அறியாமையை வெளியே சொல்லாமல் நீங்க உங்களையே ஏமாத்திக்கிட்டு திரியலாம்தான். ஆனால் இணைய தளத்தில் விவாதம்னு வந்துட்டா, நீங்க உங்க பொன்வாயைத் திறக்கும்போது யாராவது உங்க முகத்திரையை கிழிச்சுடுவானுக, சார். அப்புறம் நீங்க என்னதான் அந்த அயோக்கியனை திட்டினாலும், பழிவாங்கினாலும் உங்க முகச்சாயம் வெளுத்தது வெளுத்ததுதான். புரியுதா சார்? இல்லையா?

என்ன சொல்றீங்க?

* நீங்க ஒரு அறிவியல் நிபுணரா? நோபல்பரிசு வாங்க தகுதியானவவரா?

* நீங்க ஒரு நாத்திக பகுத்தறிவு வாதியா?! கடவுளையே தூக்கி எறிந்தவரா?

* நீங்க என்ன ஒரு பெரிய நிலையில் இருக்கிறீங்கனு தெரிந்தால் எல்லாரும் மயக்கம்போட்டு விழுந்துருவாங்களா?

எல்லாம் நல்லாப் புரியுது சார்.

நீங்க ஒரு பெரிய மேதாவிதான்! ஆனால் உங்களுக்கு ஒரே ஒரு பிரச்சினைதான்.
அது என்னனா, நீங்க உங்களையே ஏமாற்றிக்கொண்டு வாழும் ஒரு பரிதாபத்திற்குரிய ஒரு ஆள், சார். நீங்க புரிந்துகொள்ள வேண்டியது , "எனக்கு எல்லாமே தெரியாது!" "என்னால் எல்லாவற்றையும் விளக்க முடியாது!" "என்னால் விளக்க முடியாதது இந்த உலகில் நெறையா இருக்கு" "கேவலம் நானும் ஒரு பலவீனமுள்ள மனுஷந்தான்!" என்பவைகள்தான்.

உங்களால் அப்படி உங்களைப்பற்றி சாதாரணமா நினைக்க முடியவே முடியாதா? நல்லது, அப்போ இணையதளத்தில் விவாதத்திற்கு வராதீங்க! வந்தாலும் வாயைத் திறக்காதீங்க! சும்மா வேடிக்கை பாருங்க! கீழே தொரைநாட்டு மொழியில் சொல்லி இருக்கது உங்களைப்போல மேதாவிகளுக்குத்தான்!

Never argue with a stranger in the internet
– They will learn about your weakness and drag you down from your high level to lowest level to which you never wanted to go, then beat you with their experience!

21 comments:

  1. அன்பின் அருண்
    அந்த மேதாவி யாருன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோமில்ல
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  2. என்ன ஆச்சு வருண் ???

    ReplyDelete
  3. ஸ்ரீராம்!

    சீரியஸாவே சொல்றேன், அந்த மேதாவி நானாக்கூட இருக்கலாம். ஒரு சிலர் பார்வையில் அப்படித்தோனலாம், பாருங்க! அப்படியிருந்தால் இதுபோல் ஒரு பதிவு போட்டு என்னையே நான் அறைந்துகொள்கிறேன். :)

    எதையும் என்னால் விளக்க முடியும். என்னை மிஞ்சியது எதுவும் இல்லை என்கிற "மனித அகந்தை" மேலே எனக்கு கோபங்க, அவ்ளோதான் :)

    ReplyDelete
  4. ***LK said...

    என்ன ஆச்சு வருண் ???

    19 December 2010 6:04 PM**

    அய்யோ பயப்படும்படி ஒண்ணும் இல்லைங்க :)))

    ReplyDelete
  5. நீங்கள் இப்பதிவில் குறிப்பிட்டிருப்பது போல நான் ஈகோத்தனமாக நடந்துக்கொள்ளவில்லை என்று கருதுகிறேன்... அப்படி எதுவும் இருப்பின் சுட்டிக்காட்டவும்...

    ReplyDelete
  6. ***philosophy prabhakaran said...

    நீங்கள் இப்பதிவில் குறிப்பிட்டிருப்பது போல நான் ஈகோத்தனமாக நடந்துக்கொள்ளவில்லை என்று கருதுகிறேன்... அப்படி எதுவும் இருப்பின் சுட்டிக்காட்டவும்...
    19 December 2010 6:12 PM ***

    சத்தியமா இது உங்களைப் பற்றிய பதிவில்லை, தல. நீங்க ஒரு ஜெண்டிமேன் :)

    ReplyDelete
  7. //"இணையதள விவாதத்தில் பயங்கரம்! மேதாவிகள் கவனிக்கவும்!"//

    இது நமக்கான பதிவில்லை என்பதனால்...........................
    சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்.....................!

    ReplyDelete
  8. இப்படியெல்லாம் நடக்குதா? ம்ம்ம்ம்......

    ReplyDelete
  9. இதில் ஒன்றும் உள்குத்து இல்லையே :-)

    ReplyDelete
  10. Onnume puriyalai... Edhuvum ulkuthaanu... Anyway got the final message...

    ReplyDelete
  11. இப்படி அறிவுரைகளைப் படித்துவிட்டால் சந்தோசமாகவும் பதியலாம் சாக்கிரதையாகவும் விவாதிக்கலாம். நல்லாருக்குதுங்கோவ்!

    ReplyDelete
  12. ***ஆகாயமனிதன்.. said...

    //"இணையதள விவாதத்தில் பயங்கரம்! மேதாவிகள் கவனிக்கவும்!"//

    இது நமக்கான பதிவில்லை என்பதனால்...........................
    சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்.....................!

    19 December 2010 10:47 PM***

    :))))))

    ReplyDelete
  13. ***Blogger பார்வையாளன் said...

    what happened ?

    19 December 2010 10:54 PM***

    -------------------

    ***Chitra said...

    இப்படியெல்லாம் நடக்குதா? ம்ம்ம்ம்......

    20 December 2010 12:07 AM***

    "தனக்கு எல்லாம் தெரியும்" ங்கிற நெனைப்பு வந்தால் அது "சுத்தமான மடமை"னு சொல்லி ஒரு சிலருக்கு தெளிவுபடத்த வேண்டிய கட்டாய நிலையில் வந்த எண்ணங்களின் பகிர்வுதான் இது :)

    ReplyDelete
  14. ***இரவு வானம் said...

    இதில் ஒன்றும் உள்குத்து இல்லையே :-)

    20 December 2010 12:11 AM***

    நேரடியாவேதானே சொல்லியிருக்கேன், யாராயிருந்தாலும் சரி, தன்னால் எதையும் விளக்க முடியும், தாந்தான் பெரிய பருப்பு ங்கிற நெனைப்பு இருந்தால் அவர் ஒரு முட்டாள் னு! :)

    ReplyDelete
  15. ***மதுரை பாண்டி said...

    Onnume puriyalai... Edhuvum ulkuthaanu... Anyway got the final message ...

    20 December 2010 3:58 AM***

    That is good enough :)))

    ReplyDelete
  16. //எதையும் என்னால் விளக்க முடியும். என்னை மிஞ்சியது எதுவும் இல்லை என்கிற "மனித அகந்தை" மேலே எனக்கு கோபங்க, அவ்ளோதான் ://
    Varun : Hope it wasn't me. I don't go out of few topics like H1B, Spoken English etc.
    regards
    Boston Sriram

    ReplyDelete
  17. ***sriram said...

    //எதையும் என்னால் விளக்க முடியும். என்னை மிஞ்சியது எதுவும் இல்லை என்கிற "மனித அகந்தை" மேலே எனக்கு கோபங்க, அவ்ளோதான் ://
    Varun : Hope it wasn't me. I don't go out of few topics like H1B, Spoken English etc.
    regards
    Boston Sriram

    20 December 2010 8:31 AM***

    அய்யோ, ஸ்ரீராம்!

    நீங்க, இல்லவே இல்லை ங்க :)))

    ReplyDelete
  18. ***Arun Ambie said...

    இப்படி அறிவுரைகளைப் படித்துவிட்டால் சந்தோசமாகவும் பதியலாம் சாக்கிரதையாகவும் விவாதிக்கலாம். நல்லாருக்குதுங்கோவ்!

    20 December 2010 4:43 AM***

    வாங்க, அருண்! நன்றிங்க :)

    ReplyDelete
  19. வாங்க டி வி ஆர் சார்! :)))

    ஒண்ணூமில்ல சார், இது மாதிரி பதிவெழுதவும் ஒரு சிலர் ஊக்குவிக்கிறாங்க :)

    ReplyDelete