Monday, January 3, 2011

இதுதான் என்னோட புத்தாண்டு ரெசொலூஷன்கள்!

* கற்பனைக் கதையில்கூட "ஃபாட்ஸ்" (facts) (உண்மைகள்)க்கு புறம்பானதை எதுவும் எழுதுவதில்லை!

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கடவுளையே மிரட்டிய தமிழன் நக்கீரன் வழிநடந்து உண்மைக்கும், நல்லவர்களுக்கும் குரல் கொடுத்து தளத்தின் ட்ராஃபிக்கைவிட பதிவின் தரத்தை உயர்த்த முயலனும்!

* பின்னூட்டங்கள் தற்போதையதைவிட அதிகமாக இட்டு நல்ல பதிவர்களை ஊக்குவிக்கனும்! என் பதிவுகளைவிட என் பின்னூட்டங்கள் பலரையும் ஊக்குவிப்பதாக "பக்ஷி" சொல்லுச்சு. அதான்..

* தப்பில்லாமல் தமிழ்ல ஓரளவுக்கு எழுத முயற்சிக்கனும். எழுத எழுதத்தான் தமிழ் பரவாயில்லாமல் எழுத்துப்பிழை இல்லாமல் வருது. என்ன இருந்தாலும் நம்ம மணியண்ணா தரத்துக்கு உயர முடியாதுதான்.

* கவிதை எழுத முயற்சிக்கவே போவதில்லை! எல்லாராலையும் எல்லாம் செய்ய முடியும் என்று நம்புகிறவன் இல்லை நான்.

* "யாரோடையும் வம்பு பண்ணப்போவதில்லை! விவாதம் செய்யப்போவதில்லை!" னு நான் பொய்சொல்லப்போவதில்லை. விவாதம், சர்ச்சையில் நிச்சயம் இடம் பெறுவேன். அதுதான் உண்மையான தமிழனின் (அண்ணன் உண்மைத்தமிழனை சொல்லல :) ) அடையாளம் என நம்புகிறேன்.

* மற்றபடி, எதையும் தாங்கும் இதயத்துடன், மறப்போம் மன்னிப்போம் என்கிற பாலிஸிதான் இந்த வருடமும்!

வாழ்க தமிழ்!

வாழ்க தமிழ்மணம்!

வாழ்க இண்ட்லி!

வாழ்க திரட்டி!

வளர்க தமிழ் வலைதளங்கள்! நன்றி வணக்கம்! :)

13 comments:

  1. // "யாரோடையும் வம்பு பண்ணப்போவதில்லை! விவாதம் செய்யப்போவதில்லை!" னு நான் பொய்சொல்லப்போவதில்லை. //

    விவாதம் பண்ணுங்க.... ஆனா வம்பு பண்ணாதீங்க...

    ReplyDelete
  2. // அதுதான் உண்மையான தமிழனின் (அண்ணன் உண்மைத்தமிழனை சொல்லல :) ) //

    அவரு ஏற்கனவே ரொம்ப வருத்ததுல இருக்காரு... நீங்க வேறையா...

    ReplyDelete
  3. சர்ச்சைகள் இருக்கலாம் .அது சண்டையாக மாறிவிட கூடாது

    ReplyDelete
  4. Eating dhahi vada!!sorry for English as I'm using iPhone!!

    ReplyDelete
  5. பக்ஷி சரியாகதான் சொல்லியிருக்கு:)!

    வாழ்க திரட்டிகள்!

    ReplyDelete
  6. நல்ல ரெசல்யூசன்ஸ் :-)

    ReplyDelete
  7. ***Philosophy Prabhakaran said...

    // "யாரோடையும் வம்பு பண்ணப்போவதில்லை! விவாதம் செய்யப்போவதில்லை!" னு நான் பொய்சொல்லப்போவதில்லை. //

    விவாதம் பண்ணுங்க.... ஆனா வம்பு பண்ணாதீங்க...
    3 January 2011 4:33 PM
    Philosophy Prabhakaran said...

    // அதுதான் உண்மையான தமிழனின் (அண்ணன் உண்மைத்தமிழனை சொல்லல :) ) //

    அவரு ஏற்கனவே ரொம்ப வருத்ததுல இருக்காரு... நீங்க வேறையா...
    3 January 2011 4:33 PM **

    நன்றி, பிரபாகர் :)

    நான் உ த னுடைய நலம் விரும்பிங்க! :)

    ReplyDelete
  8. ***பார்வையாளன் said...

    சர்ச்சைகள் இருக்கலாம் .அது சண்டையாக மாறிவிட கூடாது

    3 January 2011 5:18 PM***

    உண்மைதான்.ஆனால் பொதுவாக சர்ச்சையின் கடைசிக்கட்டம் சண்டைதான். :(

    ReplyDelete
  9. ***பழமைபேசி said...

    Eating dhahi vada!!sorry for English as I'm using iPhone!!

    3 January 2011 5:22 PM***

    வாங்க வாங்க, மணியண்ணா! ஐ-ஃபோன் மேட்டர் சொன்னதுக்கு நன்றி. இல்லைனா நீங்க ஆங்கிலம் பேசுவதை மன்னிக்கவே முடியாது :)))

    ReplyDelete
  10. ***ராமலக்ஷ்மி said...

    பக்ஷி சரியாகதான் சொல்லியிருக்கு:)!

    வாழ்க திரட்டிகள்!

    3 January 2011 6:45 PM***

    நன்றிங்க ராமலக்ஷ்மி

    ஆமாங்க திரட்டிகள் இல்லைனா நம் எழுத்து பலரையும் அடைவது ரொம்ப கஷ்டம்தான்.

    ReplyDelete
  11. ***Samudra said...

    வாழ்த்துக்கள்

    3 January 2011 9:04 PM**

    நன்ரிங்க சமுத்ரா! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    -------------

    ***Blogger இரவு வானம் said...

    நல்ல ரெசல்யூசன்ஸ் :-)**

    நன்ரிங்க இரவுவானம்! :) புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  12. ***பார்வையாளன் said...

    சர்ச்சைகள் இருக்கலாம் .அது சண்டையாக மாறிவிட கூடாது

    3 January 2011 5:18 PM***

    புத்தாண்டு வாழ்த்துக்கள், பார்வையாளன் :)

    ReplyDelete