Monday, January 31, 2011

தலை தப்பியது ரஜினியாலே! சில உண்மைகள்!





* சிவாஜியும், தசாவதாரமும் 70 கோடி பட்ஜெட் படங்கள். நிச்சயம் வெற்றியடைந்தன. தயாரிப்பாளர்கள் எவ்ளோ வருமானம் அடஞ்சாங்கனு யாருக்கும் தெரியாது. 135 கோடி செலவில் தயாரான எந்திரன் தலை தப்புமா? என்ற கேள்விக்கு சன் நெட்வொர்க் பதில் தந்துள்ளார்கள். சுமார் 45 கோடி இவர்களுக்கு வருமானம் வந்ததாக! இதில் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்கள் அடைந்த இலாப-நஷ்டங்கள் அடங்காது.

* ரஜினியின் அடுத்தபடம் ராணா வாம். கே எஸ் ஆர் இயக்கம். ஏ ஆர் ரகுமான் இசை. அனுக்ஷாமற்றும் தீபிகா படகோன் நாயகிகளாம். இது ஒரு சரித்திர படமாம்! இந்தப் படத்திற்கும் சுல்தான் த வாரியர்/ ஹாரா என்கிற அனிமேஷன் படத்துக்கும் சம்மந்தமே இல்லையாம்!

* கமலஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் மகள்அனுஹாசன் ஒரு இங்கிலாந்து நாட்டுக்காரரை (க்ரஹாம் ஜே) ரெண்டாம் முறையாக திருமணம் செய்துகொண்டாராம். முதல் கணவர் பெயர் விகாஷ் ஆம். 10 ஆண்டுகளுக்கு முன் மணந்த இவருக்கும் அனுவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாம்.

* பொங்கல் படங்களில் வசூலில் வெற்றி பெற்ற படங்களின் வரிசை! படம் வெளியாகி ரெண்டு வாரங்களுக்குப்பிறகு தெரிந்த உண்மை நிலவரம் இதுதான்!

#1 சிறுத்தை

#2 ஆடுகளம்

#3 காவலன்

முக்கியமாக பி அண்ட் சி செண்டர்களில் சிறுத்தை அளவுக்கு காவலன் எடுபடவில்லை என்பது நிதர்சனம்! கார்த்தியின் வெற்றி தொடருது! காவலனுக்கு ஜெயா டி வி ல விளம்பரம், விஜய்- அசின் பேட்டினு போட்டு ப்ரமோட் செய்ததால் தப்பிச்சது.

* மன்மதன் அம்பு ஒண்ணும் எந்திரன் அல்ல என்று மாதவன் சொன்ன ப்ரஸ் ஸ்டேட்மெண்ட் கமலுக்குப் பிடிக்கலையாம்! நான் கமல் நிலைமையில் இருந்தால் எனக்கும் பிடிக்காதுதான்!



6 comments:

  1. அனுஹாசன் மேட்டர் மட்டும் புதுசு... ஆனா அவங்க வீட்டு பாத்ரூமை எட்டிப் பார்க்கமாட்டேன்...

    ReplyDelete
  2. கல்கண்டு புத்தகம் படித்தததைப் போல
    ரசிக்கும்படியான செய்திகளாக இருந்தது
    உங்கள் பதிவு.தொடர விருப்பம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நீங்க பதிவு எழுதுற வுதம் நல்லா இல்ல கொஞ்சம் ஒழுங்கா எழுதுனா நல்லது!!!!

    ReplyDelete
  4. வாங்க ஃபிளாசபி, சித்ரா & மதுரைப் பாண்டி! :)

    ---------------------

    @ரமணி

    நன்றிங்க

    ---------------

    ***Blogger rush89 said...

    நீங்க பதிவு எழுதுற வுதம் நல்லா இல்ல கொஞ்சம் ஒழுங்கா எழுதுனா நல்லது!!!!***

    @ரஷ் 89!

    ச(சா)ரிங்க இனிமேல் ஒழுங்கா எழுதிடுவோம்! :))

    ReplyDelete