Saturday, February 26, 2011

சபாஷ்! ஜாக்கி சேகருக்குப் பாடம் புகட்டிய பதிவுலகம்!

நண்பர் ஜாக்கி சேகர், நடுநிஷிநாய்கள் படத்தைப் பிடிக்காதவர்கள், அதை ரசிக்க முடியாதவர்கள், மற்றும் கவுதம் மேனனை பளார்ப் பளார்னு அறைந்தவர்களுக்கெல்லாம் என்னவோ அறிவுரை சொல்ல கிளம்பிட்டாரு. நான் அவருக்கு சொல்ல வர்றது இதுதான்! இது அறிவுரை இல்லை! எதிர் வினை!

நண்பரே! உங்களுக்கு நடுநிஷி நாய்கள் ரொம்ப ரசிச்சுப் பார்க்க முடிஞ்சதா? தப்பே இல்லை! நீங்கள் செய்ததுபோல் படத்துக்கு நல்ல விமர்சனம் கொடுங்கள்! திரும்பத் திரும்ப சைல்ட் மொலெஸ்டேஷன், இண்செஸ்ட்டைப் பார்த்து ரசிங்க! உங்களுக்கு உள்ள கலைக்கண்னோட பார்த்துப் பார்த்து ரசிங்க! கவுதம் மேனனுக்கு "பிருந்தாவனமும் நொந்தகுமாரன்" விருது கொடுங்க! அது உங்க உரிமை!

ஆமா, நீங்க ஏன் கவுதம்-மேதாவி-மேனனுக்கு இப்படியெல்லாம் வக்காலத்து வாங்கிக்கிட்டு? அப்புறம் சும்மா கலாச்சாரக் காவலர்களுக்கு இந்தப்படத்தை எப்படிப்பார்க்கனும்னு அறிவுரை எல்லாம் சொல்லிக்கிட்டு?..ஒரு நிமிஷமோ ரெண்டு நிமிஷமோ, இதெல்லாம் எதுக்கு?

தமிழ்மண நிர்வாகத்தில்கூட ஓரளவுக்கு கலாச்சாரக் காவலர்கள் இல்லைனா, தமிழ்மணமும் இன்னைக்கு காமலோகம் ஆகி நாறிப்போயிருக்கும் என்பது என் நம்பிக்கை!

உங்க பதிவுக்கு பொதுவாக நல்ல பரிந்துரைகள் கிடைக்கும் என்பது என் கணிப்பு! உங்களுக்குத்தான் உலகம் சரியாப்புரியுது என்பதுபோல நீங்க செய்த அறிவுரைக்கு கிடைத்த மதிப்பெண்களுக்கு 7/24..இதுக்கு என்ன அர்த்தம்னா.. நான் எதுக்கு சொல்ல? புரிஞ்சுக்கிட்டா நல்லது! மேலும் பதிவுலகில் எதிர் மதிப்பெண் கொடுத்தவர்கள் கலாச்சாரக்காவல்ர்கள்னு சொல்ல முடியாது! உங்க அறிவுரையை பார்த்து எரிச்சல் அடைந்தவர்கள்! அதனால் என்ன? இதெல்லாம் பதிவுலகில் சகஜம்தான்னு சொல்றீங்களா?! உண்மைதான்..நீங்கள் நீங்களாத்தான் மேன்மேலும் மனம்தளறாது தொடருங்கள்!

நான் ஒண்ணும் கலாச்சாரக்காவலன் இல்லை, சார்! ஆனால் அவர்கள் தேவை மற்றும் சேவை நமக்கு நிச்சயம் அவசியம் என்று நம்புறேன். எதுக்கு? நாம் வரம்பு மீறும்போது கவுதமை அறைந்ததுபோல. என்னையும், வரம்புமீறுபவர்களையும் அறைவதற்கு!

13 comments:

  1. அந்த -31 இல் எனது - um அடங்கும்

    ReplyDelete
  2. இவர் கேமராமேன். ஏதாவது வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கிறாரோ என்னவோ. தனது சுயநலத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் பதிவுலகைப் பயன்படுத்துபவர்கள் எளிதில் இனம் காணப்படுவர். அவர்கள் மதிப்புக் குறையும். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. யோசித்துப் பார்ப்பவர்களுக்கு இது புரியும்.ஏனென்றால் படிப்பவர்கள் மடையர்களல்ல.

    ReplyDelete
  3. ///உங்களுக்குத்தான் உலகம் சரியாப்புரியுது எனப்துபோல நீங்க செய்த அறிவுரைக்கு கிடைத்த மதிப்பெண்களுக்கு 7/24 என்ன அர்த்தம்னா..நான் எதுக்கு சொல்ல? புரிஞ்சுக்கிட்டா நல்லது!/// ---thats fine..!

    just coming back from there...

    அடடா...!

    +9....???

    கட்டவிழ்ந்த மனித மனங்கள் இத்தனையா? எனில், மேனன்களுக்கு வெற்றியா...?

    இல்லை... இல்லை....!

    -36....!!!

    கட்டவிழாத மனித மனங்கள் மும்மடங்கு அதிகம்...!!! இதுகண்டு, என் மனம் ஆறுதல் அடைகிறது..!

    அப்பாடா...! நன்றி தமிழ்மணம்.

    &

    ரிப்பன் வெட்டி துவங்கிவைத்த சகோ.உ.த.

    @ ramalingam said...
    u r correct..!

    ReplyDelete
  4. தனது சுயநலத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் பதிவுலகைப் பயன்படுத்துபவர்கள் எளிதில் இனம் காணப்படுவர்//

    அதே.

    இங்கேயும் :))))))

    http://aveenga.blogspot.com/2011/02/blog-post_26.html?showComment=1298796967114

    அவியிங்க ராசாவும், அண்டார்டிகாவில் பென்குயின் ஆய் போகும் இடமும்

    ----------
    http://sathish777.blogspot.com/2011/02/blog-post_27.html

    ஜாக்கி சேகரை நாறடித்த தொப்பி தொப்பிக்கு பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. the people are not fools. nadu nisi naaikal is utter flop. in erode just 7 days run. so that fil is neglected.

    i support thoppi thoppi in this matter and opp to jackies post

    ReplyDelete
  6. ம்...இவர்கள் வக்கிரத்தை நாம் எந்த கண் கொண்டு பார்க்கவேண்டும் என பாடம் எடுக்கிறார்கள் அதான் மக்கள் பொட்டியை ஊருக்கு அனுப்பிச்சிட்டாய்ங்க

    ReplyDelete
  7. தனது சுயநலத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் பதிவுலகைப் பயன்படுத்துபவர்கள் எளிதில் இனம் காணப்படுவர்//

    ReplyDelete
  8. அண்ணே ஒன்னும் சொல்றதுக்கில்ல

    ReplyDelete
  9. jackie is a waste blogger..writting only for cheap publicity. he writes always sensational issues in a indecent, unparliamentary words. all readers and other bloggers should ignore him

    ReplyDelete
  10. தங்கள் கருத்துக்கும், கண்டனத்திற்கும் நன்றி,

    * ராம்ஜி - யாஹூ

    * ராமலிங்கம்

    * முகம்மத் ஆஷிக்

    * திருமதி. ஷாந்தி

    * சி பி செந்தில்குமார்

    * ஆர் கே சதீஷ்குமார்

    * ஜெயராம் ப்ரகாஷ்

    மற்றும்

    *விக்கி உலகம்!

    ------------------

    அந்தப்பட்த்துக்கு நல்ல விமர்சனம் கொடுத்ததுடன் அவர் நிறுத்தியிருக்கலாம். சும்மா இவருக்குத்தான் உலகம் தெரியும், வாழ்க்கைனா என்னனு தெரியும்ங்கிற மாதிரி அறிவுரை வழங்கியதால் இந்த விளைவு!

    இதையும் ஏதோ 5000 பேர் வந்து என்னை அறைந்துவித்து போயிருக்காங்க, என் அலக்சா ரேட்டிங்க் இப்போ முன்னேறி இருக்குனு சொல்லிக்கொண்டி திரிந்தால் இவரை நினைத்துப் பரிதாபப்படவேண்டியதுதான்.

    ஜெயமோஹன் இவர் தளத்தை மட்டமா விமர்சனம் செய்ததுக்கே, அவருக்கு நன்றி சொன்னவர் இந்த பதிவுலக வியாபாரி! :)))

    நம்ம சொலறதை சொல்லியாச்சு! அம்புட்டுத்தான்! :)

    ReplyDelete
  11. ***Gemini said...

    jackie is a waste blogger..writting only for cheap publicity. he writes always sensational issues in a indecent, unparliamentary words. all readers and other bloggers should ignore him

    28 February 2011 7:24 AM***

    He started thinking about himself too much these days as he gets lots of visitors!

    Even porn sites getting millions of visitors as they get lots of "sandwiches and no-veg"! He will learn his lesson if not today, may be tomorrow!

    ReplyDelete
  12. எவ்வளவு கீழ்த் தரமான விடயங்களைப் படமாக எடுத்தாலும் மூச்... விடாமல் இருக்க வேண்டும், இல்லையென்றால் கலாசாரக் காவலர்கள் அது இது என்று பட்டம் கட்டி விடுகிறார்கள். எல்லா கருமாந்திரத்தையும் கொண்டு வந்து கொட்ட நாம் என்ன குப்பைத் தொட்டிகளா? அதை எதிர்க்க உரிமையில்லையா?

    ReplyDelete
  13. ***Jayadev Das said...

    எவ்வளவு கீழ்த் தரமான விடயங்களைப் படமாக எடுத்தாலும் மூச்... விடாமல் இருக்க வேண்டும், இல்லையென்றால் கலாசாரக் காவலர்கள் அது இது என்று பட்டம் கட்டி விடுகிறார்கள். எல்லா கருமாந்திரத்தையும் கொண்டு வந்து கொட்ட நாம் என்ன குப்பைத் தொட்டிகளா? அதை எதிர்க்க உரிமையில்லையா?***

    இவரு படத்தை ரசிச்சேன்னு விமர்சனம் எழுதினாலும் பரவாயில்லை. அதோட நிறுத்திருக்கனும்! என்னவோ தேவையில்லாமல் எல்லோரும் எரிச்சல் அடைவதுபோல பெரிய வக்காலத்துடன், அறிவுரை சொல்ல வந்துட்டாரு. அங்கேதான் முழு எரிச்சலை கிளப்பினாரு!

    நமக்கெல்லாம் எதுவுமே தெரியாது பாருங்க! "இவருக்கு" மட்டும்தான் உலகம் எப்படி, எப்படி வாழனும், எதை எப்படி எடுத்துக்கனும்னு எல்லாம் தெரியும்!

    கவுதம் மேனன் கேவலமா ஒரு ப்ளாட்டோட வந்திருக்கான்னு சொன்னா, உடனே நீங்க கலாச்சாரக் காவலர்கள்.

    இவரு என்ன பெரிய வாழ்க்கைமுறை அறிந்த மேதையா? இவருக்கே இவரு சான்றிதழ் கொடுத்துக்க வேண்டியத்தான்!

    ReplyDelete