Thursday, March 10, 2011

வன்னியர்களுக்கு 31! நாயக்கர்களுக்கு 70 ப்ளஸா!

சாதியை ஒழிக்கனும்! சாதி இருக்கவே கூடாது! எல்லாம் சரிதான். பா ம க வன்னியர்களுக்காக போராடும் வன்னியர் வாக்குகளை வைத்திருக்கும் ஒரு சாதிக் கட்சினு சொன்னால் அதை தப்புனுலாம் சொல்ல முடியாது! முக்குலத்தோருக்கு அடுத்து தமிழ்நாட்டில் மிகப்பெரிய சாதி வன்னியர்கள். அவர்கள் எண்ணிக்கையை வைத்துத்தான் பா ம க வால் 31 சீட் கள் வாங்க முடிந்தது.

விஜய்காந்து மற்றும் வை கோபால்சாமி இருவரும் வீட்டில் தெலுகு பேசும் நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறியாதவர்கள் உண்டா? நாயக்கர்கள் தமிழர்களாகி பல நூற்றூண்டுகள் ஆகின்றன. நம்ம ஐயா தந்தை பெரியாரே நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவர்தான்.

விஜய் காந்துக்கு நடிகன் என்கிற பலத்தைவிட தமிழ்நாட்டில் பரவலாக இருக்கும் நாயக்கர்கள் ஓட்டு விழுவதாக சொல்லப்படுகிறது. அந்த 10% ஓட்டில் பாதிக்குமேல் நாயக்கர்கள் ஓட்டு என்கிறார்கள். அதேபோல் வை கோபால்சாமிக்கும் நாயக்கர்கள் ஆதரவு இல்லை என்று சொல்ல முடியாது! அதனால்தான் நாய்க்கர்கள் அதிகமான விருதுநகர் மாவட்டத்தில் அவர் அதிகமான ஓட்டுக்களை பெறமுடிகிறது.

இனம் இனத்தோட சேரும் எனப்துபோல நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த வை கோ வும், நம்ம கேப்பிட்டனும், முக்குலத்தோர் முழு ஆதரவு உள்ள அ தி மு கவில் சேர்ந்துள்ளார்கள்.

விஜய் காந்துக்கு 41 சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது நாயக்கர்கள் விரும்பி ஓட்டுப்போடும் நாயக்கரான விஜய் காந்துக்கு 41 சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போ நாயக்கரான வை கோபால்சாமிக்கும் 30+ சீட் கொடுக்கப்பட்டால், நாயக்கர்களுக்கு மட்டும் 70 ப்ளஸ் சீட் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லலாம்.

வன்னியர்களைவிட, முக்குலத்தோரைவிட மக்கள் தொகையில் கம்மியான நாயக்கர்களுக்கு 70 + சீட்கள் கொடுப்பது அநியாயம் என்று சாதிக்கணக்கு போடும் அரசியல்வாதிகள் பலர் கோபமும் எரிச்சலுமாக இருக்கிறார்களாம்.

விஜய் காந்தும், வைகோவும் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் என நம்பும் முட்டாள்கள் இல்லை மக்கள்! விருதுநகர் பகுதியில் உள்ள தேவர்களும், நாடார்களும் விஜய்காந்துக்கோ, வை கோவுக்கோ விரும்பி வாக்களிக்கப் போவதில்லை என்று பரவலாகப் பேசப்படுகிறது!

12 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நிறைய பிழைகள் உள்ள பதிவு.
    தகவல் பிழைகள் அநேகமாய் இருக்கின்றன.

    ReplyDelete
  3. திரு நடராஜன்!

    நான் "செலெக்டிவ் மாடெரேஷன்" எல்லாம் பண்ணவில்லை! பிழைகளை தெளிவாகச் சொல்ல உங்களுக்கு 100% உரிமை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி :)

    ReplyDelete
  4. நியாயமான பதிவு தான் .... அனைத்து தமிழகக் கட்சிகளுமே சாதி ரீதியாகத் தான் வேட்பாளர்களை நிறுத்துகிறது என்பது உண்மையே ! சாதிப் பார்த்துத் தான் தமிழக மக்களில் பலர் வாக்குகளை செலுத்துகின்றனர். விருதுநகர் உட்பட சில நாயக்கர்கள் பகுதிகள் தமிழகம் எங்கும் உள்ளதும், அந்த இடங்களில் எல்லாம் விஜயகாந்தும், வைக்கோவும் அவரதுக் கட்சிகளும் போட்டியிடுவதும் உண்மைத் தான். இதன் மூலமே பாமக சாதிக் கட்சி எனப் புகழ்பாடும் அனைவரும், பிறக் கட்சிகளும் சாதிக் கட்சிகளே என்பதை உணர வேண்டும். இதே போல வாணியம்பாடி போன்ற பகுதிகளில் இஸ்லாமியக் கட்சிகள் போட்டியிடுவதையும் பார்க்க முடிகிறது. சாதி சமயம் பார்க்காமல் வாக்குப் போடும் மனநிலை மக்களக்கும், சாதியை வைத்து அரசியல் பண்ணும் மனநிலை அரசியல் கட்சிகளுக்கு என்று ஒழிகிறதோ அதுவரை இந்த நாட்டுக்கு விமோசனம் இல்லை................. சாதி ரீதியாக வாக்குப் போடுவதை இளைய சமூகம் புறக்கணிக்க வேண்டும்...........................

    ReplyDelete
  5. வைகோவிற்கு ஓட்டளிப்பவர்கள் நாயக்கர்கள் அதிகம் என்றாலும் அவரை ஜாதிக்கட்சிக்குள் அடக்க விரும்பவில்லை.

    ReplyDelete
  6. ரெண்டு பேருக்கும் நடுவுல சண்டைய மூட்டி விடுறீங்களே....

    எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

    ReplyDelete
  7. ***இக்பால் செல்வன் said...

    நியாயமான பதிவு தான் .... அனைத்து தமிழகக் கட்சிகளுமே சாதி ரீதியாகத் தான் வேட்பாளர்களை நிறுத்துகிறது என்பது உண்மையே ! சாதிப் பார்த்துத் தான் தமிழக மக்களில் பலர் வாக்குகளை செலுத்துகின்றனர். விருதுநகர் உட்பட சில நாயக்கர்கள் பகுதிகள் தமிழகம் எங்கும் உள்ளதும், அந்த இடங்களில் எல்லாம் விஜயகாந்தும், வைக்கோவும் அவரதுக் கட்சிகளும் போட்டியிடுவதும் உண்மைத் தான். இதன் மூலமே பாமக சாதிக் கட்சி எனப் புகழ்பாடும் அனைவரும், பிறக் கட்சிகளும் சாதிக் கட்சிகளே என்பதை உணர வேண்டும். இதே போல வாணியம்பாடி போன்ற பகுதிகளில் இஸ்லாமியக் கட்சிகள் போட்டியிடுவதையும் பார்க்க முடிகிறது. சாதி சமயம் பார்க்காமல் வாக்குப் போடும் மனநிலை மக்களக்கும், சாதியை வைத்து அரசியல் பண்ணும் மனநிலை அரசியல் கட்சிகளுக்கு என்று ஒழிகிறதோ அதுவரை இந்த நாட்டுக்கு விமோசனம் இல்லை................. சாதி ரீதியாக வாக்குப் போடுவதை இளைய சமூகம் புறக்கணிக்க வேண்டும்.

    10 March 2011 9:35 AM**

    தங்கள் கருத்துக்கு நன்றி, இக்பால் செல்வன்!

    ReplyDelete
  8. ***குடுகுடுப்பை said...

    வைகோவிற்கு ஓட்டளிப்பவர்கள் நாயக்கர்கள் அதிகம் என்றாலும் அவரை ஜாதிக்கட்சிக்குள் அடக்க விரும்பவில்லை.

    10 March 2011 10:22 AM***

    என்னைக்கு அவர் அம்மாவைத் தலைவியா எற்றுக்கொண்டாரோ அன்னைக்கே அவர் மேலே இருந்த எல்லா மரியாதையும் போடுச்சு.

    விஜய்காந்த் அ தி மு க கூட்டணிக்கு வந்ததால் வைகோவுக்குத்தான் பெரிய சேதாரம். விஜய்காந்த் வரவால்தான் வைக்கோ இன்னைக்கு நாளுக்கு நாள் மங்குகிறார். இதற்கு நிச்சயம் அவர்கள் சாதி ஓட்டு பிரிவதும் ஒரு காரணம்னு நம்புறேன்! :)

    ReplyDelete
  9. நாயக்கர்களின் வாக்குகளை அவர்கள் முழுமையாக பெறுவதால் அவர்களுக்கு 70 பிளஸ் சீட்டு, பா.ம.க வால் வன்னியர்களின் வாக்குகளை முழுமையாக பெற முடியாததால் அவர்களுக்கு 30 சீட்டு.

    ReplyDelete
  10. ***sambumaharishi said...

    நாயக்கர்களின் வாக்குகளை அவர்கள் முழுமையாக பெறுவதால் அவர்களுக்கு 70 பிளஸ் சீட்டு, பா.ம.க வால் வன்னியர்களின் வாக்குகளை முழுமையாக பெற முடியாததால் அவர்களுக்கு 30 சீட்டு.

    10 March 2011 5:08 PM***

    :=)

    ReplyDelete
  11. @@குடுகுடுப்பை

    அண்ணன் சொல்றது சரின்னு சொல்ல தள்பதி வரலையே?!

    ReplyDelete
  12. தளபதி,

    பையனோட கொஞ்சினது போதும் வெளில வாரும்... தமிழன் அப்படின்னு ஒருத்தன் இருக்கானா? இல்லையா??

    ReplyDelete