Tuesday, April 12, 2011

அதிமுக கூட்டணிக்கு கோயிந்தா கோயிந்தா!!

அதிமுக கூட்டணி வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இல்லாமல் பேயறைந்த மாதிரி இருக்கு!நக்கீரன் கருத்துக்கணிப்புத்தான் காரணமா? இல்லைனா என்ன எழவுனு தெரியலை!ஒரு வேளை உண்மையான நிலவரம் தெரிந்து இருக்காங்களா??

பதிவுலகில் இந்த முறை திமுக கூட்டணி ரொம்பவே அடக்கி வாசிக்கிறது. ஆனால் ஆத்தாகூட்டணிக்கு ஓட்டுக்கேட்டு நெறையப்பேரு அலையிறாங்க. இருந்தும் இவங்களுக்கு வெற்றியில் நம்பிக்கை இல்லை, பாவம்!

பத்திரிக்கைகள்னு எடுத்துக்கொண்டால் ஹிந்து, விகடன், குமுதம், துக்குளக்கு, தினமலர், தினமணி எல்லாமே அதிமுக வுக்கு முழு ஆதரவு கொடுத்தும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்த ஊது ஊதியும், தேர்தல் கமிஷன் நல்ல முறையில் பணம் கொடுத்து ஓட்டுவாங்கிவிடாமல் அதை கண்ட்ரோல் பண்ணியும், அதிமுக் கூட்டணிக்கு வெற்றியில் நம்பிக்கை இல்லாமல் இருக்க காரணம் என்ன?!

* வைகோவுக்கு செய்த துரோகத்தால், ம தி மு க தொண்டர்கள் பழிவாங்கிவிடுவார்கள்னு பயமா?

* ஒருவேளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாங்கிய மரண அடி இன்னும் மறக்கலையா? அதுதான் இதற்கு காரணமா?

* இல்லை கிராமத்து மக்கள் / ஏழைகள் எல்லாம் கலைஞர் திட்டத்தில் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று நெனைக்கிறாங்களா? ஆமா, கிராம ஓட்டுக்கள் வாங்கித்தான் எம் ஜி ஆர் ஜெயிச்சாரு. இன்னைக்கு அது அ தி மு க வை விட்டுப் போனதால் இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா?

* இல்லைனா வடிவேலு மற்றும் குஷ்புவுக்கு வந்த கூட்டத்தால், கூட்டத்துக்கு வந்தவுங்க எல்லாம் ஓட்டுப்போட்டிருவாங்களானு பயந்து போயிருக்காங்களா?

* இல்லைனா விஜய்காந்து செய்த அரசியல் கூத்தா?

எது எப்படியோ, திமுக கூட்டணிக்கு உள்ள அந்த நம்பிக்கை அதிமுக கூட்டணிக்கு இன்றுவரை இல்லை!

அதிமுக கண்மணிகளே!

கோயிந்தாவாக போயிடுமோனு பயப்படாமல் நாங்க தான் 160 ம் செவிக்கப் போறோம்! விசயகாந்து 41 ஒண்ணும் ஜெவிச்சி, நாங்கதான் ஆளப்போறோம் னு சும்மா சொல்லுங்கப்பா!

காசா பணமா? ஏன் இந்தத் தயக்கம்?!


26 comments:

  1. இதெல்லாம் முடிவுகள் வந்தபின்னர் வைத்துக்கொள்ளலாமே! :))

    ReplyDelete
  2. ***கக்கு - மாணிக்கம் said...

    இதெல்லாம் முடிவுகள் வந்தபின்னர் வைத்துக்கொள்ளலாமே! :))

    12 April 2011 6:41 AM***

    இல்லங்க அதிமுக கூட்டணி அல்ரெடி "எழவு விழுந்த" மாதிரிக்கீது! அதான் அவங்கல கொஞ்சம் ஊக்குவிக்கலாம்னு... :)

    ReplyDelete
  3. பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

    ReplyDelete
  4. அருள்: நான் என்னனு வந்ஹ்டுய் பார்க்கிறேனுங்க. நன்றி :)

    ReplyDelete
  5. பதிவுலகில் பரிதாபகரமாக பலபேர் அதிமுக'வுக்காக பகீரத பியத்தனம் செய்கிறார்கள். அவர்களது ஆசை வீணாசையாகப் போகப்போவது நிச்சயம்.

    அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்த பின்பு அவர்களது பதிவுகளை மீண்டும் ஒருமுறை படிக்க ஆசை.

    ReplyDelete
  6. ஸ்ரீரங்கத்தைத் தேர்ந்தெடுத்தது முதல் எல்லாமே கோளாறு தான். இன்று கடைசியில் வடகலையா? தென்கலையா? ( புரியாதவர்களுக்கு Y நாமமா அல்லது W நாமமா?) என்பது தான் கேள்வி !

    ReplyDelete
  7. திமுக மக்கள் பலர் களப்பணியில் சுழன்று கொண்டிருப்பதால் இங்கு தீவிரம் காண்பிக்கவில்லை. அதிமுக வுக்கு வோட்டு கேட்கும் இவங்க யாரும் நாளைக்கு ஓட்டு போடப்போவதில்லைகிறது such an irony! அப்புறம் எங்க வெற்றி கிடைக்கும்.

    ReplyDelete
  8. வலையுலக திமுக அனுதாபிகள்தான் வெளிப்படையா இருக்காங்க. ஒரு குரூப்பு ஈழம், காங்கிரஸ் எதிர்ப்பு,ஊழல், bla bla ன்னு தலையை சுத்தி மூக்க தொட்ட கதையா அம்மாக்கு ஜால்ரா அடிக்கிறதுதான் கடுப்பாயிருக்கு. தினமலரை மாதிரியே இவங்களோட நடுநிலமை புல்லரிக்க வைக்குதுங்க.

    ReplyDelete
  9. இந்தப் பதிவுக்கு எதிர்ப்பக்கத்திலிருந்து ஒரு முனகலக்கூட கானோம்.அப்ப உங்கப்பதிவுப் படி உண்மையிலேயே நடந்திடும் போலிருக்கு.

    ReplyDelete
  10. even in srirangam, iyengars support Jaya and Iyers are against Jaya.. Iyers there are strong followers of Kanji Sankara Madam.. and they wanted to go against Jaya.. BJP is getting their (Iyers) votes fully..

    Amma cannot get a big victory there.. she may win in a small margin.... or even no wonder if Bargoor Repeats again..

    ReplyDelete
  11. poda panni aiadmk will be win more 210 seats

    ReplyDelete
  12. ஒருவர் :சார் உங்கப் பையன டாஸ்மாக் வாசல்ல பார்தேன்


    தந்தை : தறுதல,ஒரு காமராஜரகவோ,விவேகானந்தராகவோ வருவான்னு நெனச்சேன்,பயபுள்ள இப்படிவிஜயகாந்த்தா வருவான்னு கனவுலக்கூட நினைக்கல.

    ReplyDelete
  13. இதிலென்ன சந்தேகம்.

    யாராவதும் ஒருத்தர் ஜெயா செய்வார்ன்னு ஓட்டு கேக்குறாங்களா?

    ஏன்னா கேட்டா சாணி வந்தாலும் வரலாம்.

    தமிழாம்,உணர்வாம் அதுக்கு ஜெயாதான் உத்தரவாதமாம். என்னா ஒரு கேணத்தனம், ஜெயாங்ற மலக்குழியில நின்னுகிட்டு பூவாசம் வேனும்ங்றது?

    டூ பேட்.

    தமிழகத்தில் ஒழிக்கபட வேண்டிய முதல் சனி ஜெயாதான்.

    ReplyDelete
  14. //பதிவுலகில் இந்த முறை திமுக கூட்டணி ரொம்பவே அடக்கி வாசிக்கிறது. //

    Waiting for the result.

    ReplyDelete
  15. //B.MURUGAN said...
    ஒருவர் :சார் உங்கப் பையன டாஸ்மாக் வாசல்ல பார்தேன்


    தந்தை : தறுதல,ஒரு காமராஜரகவோ,விவேகானந்தராகவோ வருவான்னு நெனச்சேன்,பயபுள்ள இப்படிவிஜயகாந்த்தா வருவான்னு கனவுலக்கூட நினைக்கல.//

    hahahahhaahahahahhahaahahahahhahahahaah..Very nice..hahahahahhahahahah

    ReplyDelete
  16. ////பதிவுலகில் இந்த முறை திமுக கூட்டணி ரொம்பவே அடக்கி வாசிக்கிறது. //

    ///Waiting for the result.///
    -
    -------------Dharan said...

    ஆமாம்.புத்தியுள்ளவர்கள் அடங்கித்தான் இருப்பார்கள். நேரம் வரும்போது தெரியும் அவர்கள் யார் என்று.

    ReplyDelete
  17. ஜூவி கருத்துக்கணிப்பு, அனைத்து பத்திரிக்கைகளின் கண்மூடித்தனமான அம்மையார் ஆதரவு, தேர்தல் கமிஸனின் மகா கெடுபிடி என்று அனைத்தும் ஏதோ திமுக கூட்டணி ஒரு எதிர்கட்சி அணிபோல தோற்றத்தை உருவாக்கிவிட்டது. ஆளும் கட்சிகூட்டணி பிரச்சாரம் பொதுவாக காரசாரமின்றியே இருக்கும். எதிர் கட்சி பிரச்சாரம்தான் சூடு பறக்கும். இந்த முறை பத்திரிக்கை அதிமேதாவிகளின் யூகங்களால் மக்களுக்கு, திமுக அணி சார்பு பிரச்சாரக்கூட்டங்களின்மேல் ஒரு அனுதாப ஆர்வமே ஏற்பட்டிருக்கிறது. வைகோவுக்கு ஒரு 40 இடங்களாவது கொடுத்திருந்தால், வைகோ, நாஞ்சில் சம்பத் போன்ற பிரச்சார பீரங்கிகள் முழங்கி இருக்கும். ஓரளவாவது எழுச்சி இருந்திருக்கும். எல்லாம் அவர்களே அவர்களுக்கு செய்து கொண்டது. இப்போது வருந்தி என்ன பயன்?

    ReplyDelete
  18. file:///C:/Users/sundar/Documents/தமிழக%2520தேர்தல்%2520கடைசி%2520நேர%2520சர்வே%2520முடிவு%2520விவரம்.docx

    ReplyDelete
  19. மீண்டும் தி.மு.க-ஆட்சியை பிடிக்குமென்றே தெரிகிறது

    ReplyDelete
  20. Poda muttapayale? Innuma thathakita iruka? Avanga Kudumbam Atchiku vanthal TN ke kadan kodupanga theriyuma?

    ReplyDelete
  21. இதுக்கு இவ்ளோ கமெண்ட்ஸ்..ஆ
    - போடா போடா புண்ணாக்கு..போடாத தப்புக்கணக்கு !
    பாட்டு மே 13 அன்று ஒலிக்கும் - வடிவேலுக்கு டெடிகேட் பண்ணலாம்

    ReplyDelete
  22. பதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_13.html

    ReplyDelete
  23. Headlines Today Interview with Selvi.J.Jayalaitha: இதுல சொன்னானுங்க அ.தி.மு.க. அமோக வெற்றி பேரும்னு. அப்போ சும்மா சொன்னனுன்களா? ம்ம்ம்.... நீங்க இங்க போட்டுள்ள அத்தனையுமே valid காரனங்கலாகத்தான் தெரிகிறது.

    ReplyDelete
  24. 2009 ல ஊடகங்கள் மற்றும் பதிவுலக போராளிகளும் சொன்னது என்ன வென்று நமக்கு தெரியும் தானே

    ReplyDelete
  25. unnaipool ulla inthiya thamilanukku vijakaanthaan nalla theervu.

    ReplyDelete