Friday, April 15, 2011

ஆத்தா அமோக வெற்றி பெறுவார்! பெற்றதும்..

நம்ம பதிவப் படிச்சுத்தானோ என்னவோ ரோசமா அதிமுக அமோக வெற்றி பெறும் என்று செயலலிதா சொல்லிவிட்டார்கள். மக்கள் மனதைப் புரிந்துகொண்ட ஒரே தலைவி இவருதான்! அம்மா சொன்ன "landslide" வெற்றினா என்னனு எல்லாத்தமிழர்களுக்கு புரியாது. ஆத்தாக்கு தமிழ் வராது இல்லையா? காண்வெண்ட்ல படிச்சு கிழிச்சவரு! சரி, லாண்டுஸ்லைடு அப்படினா என்னனு பார்த்தால்,

a. An overwhelming majority of votes for a political party or candidate.

b.
An election that sweeps a party or candidate into office.

சரி, வெற்றி பெறட்டும்! பெற்றதும் நடக்கப்போறது என்ன?

* ஊழல்னா தமிழ் நாட்டிலே என்னனு தெரியாத அளவுக்கு ஆயிப்போயிடும்! அன்னா ஹாசரே எல்லாம் எல்லாரும் மறந்து ஆத்தா ஹாசரே தான் பாப்புளர் ஆவாங்க! யாரு சொன்னா? பதிவுழக திராவிட கண்மணிகள்தான்!

* அதிமுக தேமுதிக எம் எல் ஏ க்களெல்லாம் கடவுளாகிவிடுவாங்க. லஞ்சமாவது ஊழலாவது? சாண்ஸே இல்லை!

* சங்கராமன் ஆவி சாந்தியடையும்! அதாவது சங்கராமனை கொலை செய்த, கொலை செய்யத் தூண்டிய ஆட்களுக்கு சிறை தண்டனை உறுதி! குற்றவாளி காஞ்சி சங்கராச்சாரயாரா இருந்தா என்ன? கடவுளா இருந்தா என்ன? ஆத்தா தண்டனை வாங்கி கொடுத்துப் புடுவாங்க!

* விஜய் படம் எல்லாம் பிச்சுக்கிட்டு 1000 நாட்கள் ஓடும்! ஆமா 1000 நாட்கள்!

* விலைவாசி? தமிழ்நாட்டின் பொற்காலம்ங்க! அரிசியோட சேர்த்து பருப்பு, எண்ணை எல்லாமே கிலோ 10 ரூபாய்க்கு கம்மியாத்தான் இருக்கும்!

என்னவோ ஒருவழியா தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் பொறந்துருச்சு! அமெரிக்காவில் அகதியா இருக்க நம்மல மாதிரி அல்லக்கைகள் எல்லாம் தமிழ்நாட்டில் செட்டில் ஆகிப்புடலாம் போங்கோ!


2 comments:

  1. கரண்ட் கட் விட்டுட்டீங்க?

    ReplyDelete
  2. அந்த மஞ்சத்துண்டு கும்பல் ஜெயித்தால் என்ன நடக்கும் என்றும் ஒரு பதிவு எழுதலாமே?

    ReplyDelete