Monday, April 2, 2012

நட்புக்கு ஒரு சசிகலா! அன்புக்கு ஒரு ஜெயா!

சசிகலா ஒரு அப்பாவி, அன்பைத்தவிரை எதையும் அவர் தன் தோழி ஜெயாவுக்கு கொடுத்ததில்லை. பாவம் அவருக்குத் தெரியாமல் யாரு யாரோ சதி செய்து, அந்த சதியில் சசிகலா பலியாடாகிவிட்டார். அப்பாவி சசிகலாவை தோழி ஜெயா, தவறுதலாகப் புரிந்து கொண்டு  மனதைக் கல்லாக்கிக் கொண்டு தன் அன்புத்தோழியையே கட்சியிலிருந்தும், வீட்டிலிருந்தும் தூக்கி எறிந்தார். அது ஒரு மூனு மாதம் முன்னால்தான்.

இதைப் பத்தி நானும் தவறாப்புரிஞ்சுக்கிட்டு இல்லை சரியா புரிஞ்சுக்கிட்டு, இல்லை தவறா சரியாப் புரிஞ்சுக்கிட்டு இதெல்லாம் சும்மா நாடகம்னு ஒரு பதிவைப் போட்டுட்டு பின்னூட்டத்தில் வாங்கிக்கட்டிக்கிடேன்! :( அந்தக் கொடுமையை கீழே க்ளிக் செய்து தெரிஞ்சுக்கோங்க!

சசிகலா வெளியேற்றம் ஜெயாவின் அரசியல் நாடகம்!

ஆனால் உண்மையான அன்பை, நட்பை யாரும் உடைக்க முடியாது! பாவம் தோழிகளுக்கு இடையில் ஏற்பட்ட இந்தப் பிரிவால், ரெண்டு பேருமே தனிமையில் இனிமை காணமுடியாமல் ஒருவர் நட்புக்காக அன்புக்காக இன்னொருவர் ஏங்கி,  துடித்து, அழுது ...அப்புறம் இருவரும் 3 மாதம் பிரிந்து தனித்தனியாக இருப்பதால்  தனிமையில் மூளையைக் கசக்கி  யோசிச்சு கவனமாக இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து பார்க்கும்போது தவறு எங்கே நிகழ்ந்தது? யாரு யாரு உண்மையான துரோகி(கள்)? என்பது இருவருக்கும் தெளிவாக விளங்கிவிட்டது. அந்த துரோகி(களின்)யின் சதியைக் கண்டுபிடிச்சு, இப்போ ஜெயாவும் சசியும் ஒருவரை ஒருவர் மறுபடியும் சரியாகப் புரிந்து கொண்டார்கள். அதனால் அன்புத்தோழி சசிகலாவை மறுபடியும் அவர் தோழி போயஸ் கார்டன் வீட்டிற்குள் ஆரத்தி எடுத்து, வலதுகாலை எடுத்து வச்சு உள்ளே வர்ச்சொல்லி அனுமதித்துள்ளார்.

இதுதான் நடந்த உண்மை. இதில் உண்மையைத்தவிர எதுவுமே இல்லை!

ஆனால்...

* எல்லாம் சரி, ரெண்டு பேருக்கும் தங்கள் நட்பில், ஒருவர் மேலே இன்னொருவருக்கு  இருக்கும் அன்பில் நம்பிக்கை இருந்தால், இப்படி உலகறிய கட்சியைவிட்டு  வீட்டைவிட்டு தூக்கி எறிந்து,  உலகறிய ஒருவரை ஒருவர் அவமானப் படுத்த வேண்டிய அவசியமேயில்லையே?!

* அப்புறம் 3 மாசத்துக்கு அப்புறம் இன்னைக்கு, யாரோ செய்த சதிக்கு அன்புத் தோழியான உன்னை தண்டிச்சுட்டேன்னு மன்னிச்சு ஏற்றுக்கவும் வேண்டியதில்லையே?! 


ஆக, இங்கே இருவருக்கும் இடையில் உண்மையான நட்பும் கெடையாது, அன்பும் கெடையாது!  

என்னதான் நடக்குது??

ரெண்டு பித்துப் பிடிச்ச பெண் அரசியல்வாதிகள் எதுக்காகவோ, யாருக்காகவோ, அசிங்கமாக, உலகறிய,  ஊர்சிரிக்க சண்டை போட்டுக்கிட்டு, அப்புறம் ஒரு மூனு மாசத்துல ஒண்ணு சேர்ந்துக்கிட்டு.. 

இதெல்லாம் நெஜம்மாவே கேவலமாயில்லையா?!


8 comments:

  1. அருமை ! கலக்கல்!
    யன்று நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. அருமை நண்பரே
    கேவலம் பார்த்தால் அரசியலில் இருக்க முடியுமா?
    நன்றி

    ReplyDelete
  3. \\இப்போ ஜெயாவும் சசியும் ஒருவரை ஒருவர் மறுபடியும் சரியாகப் புரிந்து கொண்டார்கள்.\\ இன்னும் எத்தனை தடவை தராகப் புரிந்து கொண்டு மீண்டும் சரியாகப் புரிந்துகொள்ளப் போகிறார்களோ தெரியலையே...????

    ReplyDelete
  4. \\ரெண்டு பித்துப் பிடிச்ச பெண் அரசியல்வாதிகள்\\ ஆறு கோடி சனத்தோடு தலையெழுத்து யார் கையில மாட்டிகிட்டு இருக்குங்குறத நினைச்சா பயமா இருக்கு...... :((((

    ReplyDelete
  5. ***புலவர் சா இராமாநுசம் said...

    அருமை ! கலக்கல்!
    யன்று நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    2 April 2012 3:29 PM***

    வாங்க சார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, சார்!

    ReplyDelete
  6. ***சார்வாகன் said...

    அருமை நண்பரே
    கேவலம் பார்த்தால் அரசியலில் இருக்க முடியுமா?
    நன்றி

    2 April 2012 3:46 PM***

    ஆத்தா ஆட்சில, பவர் கட் ல வரலாறு படச்சு இருக்காங்க. சாராயம் வித்ததில் நெறையா வருமானமாம். பை எலெக்சன்ல வரலாறு காணாத வெற்றி. தலித்துகளுக்கு அடி உதை! சட்டம் ஒழுங்கு நல்லாயிருக்கும்னு நெனச்சா நேருவுடைய தம்பி படுகொலை செய்யப்பட்டு இருக்கார். அவன் யோக்கியனா இல்லையாங்கிறது வேற் விசயம். சட்டம் ஒழுங்கு இந்த நெலையில்தான் இருக்கு. நக்கீரன் பத்திரிக்கையை சூறையாடி இருக்கானுக. இப்படி பல சாதனைகள் நடந்துக்கிட்டு இருக்கு. அதைவிட பெரிய சாதனை சசிகலாவுடன் இவங்க போடுற சண்டையும், ச்மாதானமும்!

    சோ ராமசாமி மற்றும் ஆத்தா ஜால்ரக்களெல்லாம் ஏதோ ஒண்ணுமே நடக்காத மாரி மூடிக்கிட்டு இருக்கானுக பாருங்க! அதுதான் பெரிய வேடிக்கை!

    ReplyDelete
  7. ***Jayadev Das said...

    \\இப்போ ஜெயாவும் சசியும் ஒருவரை ஒருவர் மறுபடியும் சரியாகப் புரிந்து கொண்டார்கள்.\\ இன்னும் எத்தனை தடவை தராகப் புரிந்து கொண்டு மீண்டும் சரியாகப் புரிந்துகொள்ளப் போகிறார்களோ தெரியலையே...????
    2 April 2012 11:18 PM
    Jayadev Das said...

    \\ரெண்டு பித்துப் பிடிச்ச பெண் அரசியல்வாதிகள்\\ ஆறு கோடி சனத்தோடு தலையெழுத்து யார் கையில மாட்டிகிட்டு இருக்குங்குறத நினைச்சா பயமா இருக்கு...... :((((
    2 April 2012 11:20 PM ***

    கொஞ்சம் கவனமாகப் பார்த்தால் ஜெயாவுக்கு நெறைய மனரீதியான பிரச்சினைகள் இருக்கிற மாதிரி இருக்கு..With all these power and everything, I am sure JJ is very unhappy and may be not able to sleep well with so many "unsolved" problems of that sort..

    ReplyDelete
  8. //ரெண்டு பித்துப் பிடிச்ச பெண் அரசியல்வாதிகள்//
    தங்கள் துணிவைப் பாராட்டுகிறேன்.
    நன்றி.

    ReplyDelete