Monday, December 19, 2011

சசிகலா வெளியேற்றம் ஜெயாவின் அரசியல் நாடகம்!


நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுவுற மாதிரி அழு! உனக்கும் எனக்கும் உள்ள நட்பை யாருமே உடைக்க முடியாது. அது எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும்! ஊருக்கு என்ன தெரியும் தோழி? ஆனால் ஊருக்காக, ஒரு சில நாடகம் அரங்கேற்றித்தான் ஆகனும்! இந்த சொத்து விவகாரம் கேஸெல்லாம் ஒரு வழி பார்க்கனும்னா இதுதான் ஒரே வழி!

என்னண்ணே சொல்றீக? அண்ணே! இதெல்லாம் சும்மா அரசியல் நாடகம்! சசிகலாவை இதுக்கு முன்னாலேயே ஒரு தர இதுபோல் தூக்கி எறியலையா என்ன? கட்சில இருந்து தூக்குறாங்களாம் ஆனா இதுவரை என்ன காரணம்னு சொல்லலையாம்!

Sasikala, the close confidante of AIADMK general secretary Jayalalithaa was expelled from the primary membership of the party, Ms. Jayalalithaa announced on Sunday.

Besides Sasikala, 13 others including her husband Natarajan, nephews Diwakaran, Dinakaran, Sudakaran and Dr Venkatesh were also expelled from the party. Ms. Sasikala and her family members belong to Mannargudi in Tiruvarur district.

Jaya TV, the official channel of the AIADMK telecast the news in detail. Ms Sasikala was the general council member of the party before her expulsion. The reason behind the expulsion of Ms Sasikala and others has not been announced.

This is not the first time Ms. Jayalalithaa is disowning Ms. Sasikala. After 1996 when she lost the elections, both of them were arrested by the DMK government. Before going to prison Ms Jayalalithaa disassociated herself from Ms. Saisikala. However, they patched up subsequently.

Ms. Sasikala owned a video shop in Alwarpet and her husband Natarajan was a public relations officer (PRO) of the information department of the state government. Ms Sasikala used to be in-charge of Ms Jayalalithaa's campaign and even videographed her tour.

ஏற்கனவே 1996 ல ஒருதர இதே நாடகம் நடந்து இருக்கு! அதேபோல் ரெண்டு பேரும் கொஞ்ச நாளில் ஒண்ணு சேர்ந்துக்குவாங்க! யாரும் இந்த நாடகத்தை தவறா புரிஞ்சுக்கிட்டு தீக்குளிச்சுப் புடாதீங்க கண்ணுகளா!

இந்து பத்திரிக்கையில் இருந்து!

8 comments:

sunaa said...

//இந்த சொத்து விவகாரம் கேஸெல்லாம் ஒரு வழி பார்க்கனும்னா இதுதான் ஒரே வழி!

அடா ..அடா ..அறிவாளிண்ணே நீங்க ...

வருண் said...

***sunaa said...

//இந்த சொத்து விவகாரம் கேஸெல்லாம் ஒரு வழி பார்க்கனும்னா இதுதான் ஒரே வழி!

அடா ..அடா ..அறிவாளிண்ணே நீங்க ...***

பெரிய கண்டுபிடிப்புதான் போங்கோ! :-)

துஷ்யந்தன் said...

பாஸ் அடிக்கடி காமெடி பதிவும் போடுறீங்களா??? அவ்வவ்

துஷ்யந்தன் said...

இந்த சொத்து விவகாரம் கேஸெல்லாம் ஒரு வழி பார்க்கனும்னா இதுதான் ஒரே வழி!<<<<

வருண் பாஸ்... எல்லாம் விளக்கமா சொன்ன நீங்க.... இந்த சொத்து குவிப்பு வழக்குக்கு சசி நீக்கப்படுவதால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் சொல்லி இருக்கலாமே???
சார்.... இதுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்?????? சசியை நீக்கினால்தான் தீர்ப்பை சாதகமாக சொல்வேன் என்று அந்த நீதிபதி சொன்னாரா???

சசியை நீக்குவதால் வழக்கில் ஜெயாவுக்கு ஏதும் கிடைக்க போவது இல்லை...
சசி இருந்தாலும் இல்லாட்டியும் அந்த வழக்கில் எந்த தீர்ப்பு கிடைக்குமோ அதான் கிடைக்கும்...

துஷ்யந்தன் said...

ஜெயாவும் சசியும் திரும்பவும் ஒன்று சேரலாம் சேராமல் போகலாம் அதற்க்கு உத்தரவாதம் இல்லை... ஆனால் சசியின் சதிவேலைகள் அம்பலமானததால்தான் இந்த நீக்கம் நடந்து இருக்கு இதான் உண்மை

அமர பாரதி said...

வருன்,

இந்த பதிவு சற்று காமெடியாக ஒருப்பது உண்மைதான். துஷ்யந்தனுக்கு உங்கள் பதில் என்ன? சசியை இப்போது நீக்குவதால் ஜெ க்கு என்ன லாபம்? மேலும் தற்போது முழு மெஜாரிட்டியில் ஆட்சியிலும் இருக்கிறார்.

வருண் said...

துஷ்யந்தன்/அமரபாரதி!

சசியை விலக்குவதால் ஜெயாவுக்கு என்ன லாபம்?

சசி சம்மந்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் தன்னை நியாப்படுத்த உதவும் என நம்புகிறார், ஜெயா!

சரி, இது காமெடியா இல்லைனா நான் சொன்னதுபோல் ஊருக்காக இந்த ஆக்ஷன் எடுக்கப்பட்டது உண்மையானு பொறுத்திருந்து பாருங்க!

முக்குலத்தோரை எல்லாம் முழுவதும் பகைத்துக்கொண்டு பார்ப்பணர்களை அரவணைத்துக்கொண்டு ஜெயா நீண்ட நாட்கள் காலம்தள்ள முடியாது!

Karuthu Kandasamy said...

அதெல்லாம் ஒன்னுமில்லை.... ஜெயலலிதா - சிம்ம ராசி, (ஏழரை சனி முடிகிறது), சசிகலா - மீன ராசி ( அஷ்டம சனி துவங்குகிறது ), ஜோதிட பலன் படி இருவரும் ஒரே வீட்டில் இருப்பது இருவருக்கும் நன்மையில்லை... அவ்வளவுதான். ஜெயலலிதாவின் ஜோதிட நம்பிக்கை நாம் அனைவரும் அறிந்ததே!