Friday, June 8, 2012

இம்முறையாவது வெல்வாரா உலகநாயகர்?


முன்னால(ள) எல்லாம் கமல் என்கிற "ஜீனியஸ்" பேசினா ஒண்ணுமே புரியமாட்டேன்கிதுனுதான் இவரை கேலி பண்ணுவாங்க. ஆனால் சமீபத்தில் அந்தக் குற்றச்சாட்டு எல்லாம் காணாமல் போய்விட்டது. அப்போ நெஜம்மாவே  கமல் பேசுறதை மக்கள் புரிஞ்சிக்க கடுமுயற்சி எடுத்துப் பழகிக்கிட்டாங்களா? இல்லைனா கமல் இதுபோல் "புரியிறமாரிப் பேசப்பழகிக்கோங்காணும்"னு விமர்சனங்களைப் பார்த்துத் தெளிவாக பேசுறாரானு எனக்குத் தெரியலை.

சில ஆண்டுகளுக்கு முன்னால ஒரு விஜய் டி வி அவார்ட் கொடுக்கும்போது, நடிகர் சூர்யா, கமலஹாசன் காலில் விழுந்து வணங்கினார். தான், கமலுடைய மிகப்பெரிய விசிறினும் பெருமையாக சொல்லிக்கொள்பவர் இந்த இளம் நடிகர், சூர்யா.

 இது போதாதுனு இவருடைய தந்தை சிவக்குமார் கமல் பத்திப் பேசும்போது, அன்று சிவாஜி இருந்ததுபோல இன்று கமல் உச்சநிலைய்ல் இருக்காரு. அன்று, சிறந்த நடிகர்னு விருது கொடுக்கனும்னா  எப்படி ஒவ்வொரு வருடமும் சிவாஜிக்கு கொடுக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியதோ,  அதுபோல இன்று ஒவ்வொருவருடமும் என் தம்பி கமலுக்குத்தான் கொடுக்கனும். ஆனால் ஒவ்வொரு வருடமும் ஒரே நடிகருக்கு கொடுத்தா நல்லாயிருக்காதுனு மற்றவர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று முடிவுசெய்ததால்தான் சூர்யாவுக்கும் (வாரணம் ஆயிரம் ?) இந்த வருடம் கிடைத்துள்ளதுனு சொன்னாரு. என்னைப்பொருத்தமட்டில் இதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தான்த் தெரிஞ்சது.

 இது பத்தாதுனு கலைத்தாயின் "செல்லப்பிள்ளை" இவர்தான்னு இவருடைய "ரைவல்" ரஜினியே உலகறிய "பெருந்தன்மை"யாக ஏற்றுக்கொண்டுவிட்டார். இதெல்லாம் தேவையா? னு பலர் இதற்கும் எரிச்சலடைந்தாங்க என்பதும் உண்மைதான்.

ஆக, இன்னைக்கு கமலஹாசன் தமிழ் திரையுலகில் மிக உயர்ந்த ஸ்தானத்தில், மிகவும் மரியாதைக்குரிய இடத்தில் உள்ளவர், மற்றும் ரசிகர்களால் மட்டும்ல்ல, சக நடிகர்களாலும் மிகவும் மதிக்கப்படுபவர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை! 3 முறை தேசிய விருது பெற்றுள்ள ஒரே தமிழ் நடிகரும் இவருதான்.

பார்ப்பனராக பிறந்தாலும், நாத்திகன் என்றும், நான் மாமிசம் சாப்பிடுவேன் தன்னை எந்தக்கூச்சமும் இல்லாமல் சொல்வதாலும், தன் கடவுள் நம்பிக்கையில்லா கொள்கைகளை தெளிவாக உள்மனதிலிருந்து சொல்வதால், இவருடைய நேர்மைக்காக,  மறத்தமிழர்களுக்கும் இவர்மேல் பற்று அதிகம்.

தன் சொந்த வாழ்வில் இரண்டுமுறை விவாகரத்து செய்துவிட்டு, லிவ்-இன் பார்ட்னருடன் இன்று வாழ்கிற அவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை இன்றைய நிலையில் அவருடைய மரியாதையை எந்த வகையிலும் குறைக்கவில்லை! மாறாக இன்று இவருடைய முற்போக்கு சிந்தனையையும், நேர்மையையும் பாராட்டுகிறார்கள் தமிழக மக்கள்.

நான் கமல்ஹாசன் விசிறியல்ல!  நான் ஏற்கனவே சொன்னதுபோல கமல் அபிமானிகள் கமலை இஷ்டத்துக்குப் புகழ்ந்து தள்ளுவதால் கமலைப் புகழவும் பிடிக்காது. ஆனால் அவருடைய அபிமானிகள் பேச விரும்பாத, கமலுடைய குறைகளைத்தான் எனக்குப் பேசப்பிடிக்கும்.

கமலஹாசன் திறமைக்கு க்ரிடிட் கொடுப்பதில் கமல் மட்டுமன்றி அவர் அபிமானிகளும்  மிகப்பெரிய குழப்பவாதிகள்.

என்னத்தை குழப்பிப்புட்டாங்க???  கமல், இயக்காத படங்களையும் அவர் இயக்கிய படமாகத்தான் அவருக்கே முழு க்ரிடிட்டையும் கொடுத்து இன்னைக்கும் எதையாவது எழுதிக்கொண்டு வர்றாங்க.

உதாரணமாக, இன்றுவரை கமல் இயக்கிய படங்கள் எத்தனை னு பார்த்தால்,

1) சாச்சி 420

2) ஹே ராம்

3) விருமாண்டி

4) விஸ்வரூபம்


* 1) சாச்சி 420 ! கமல் இயக்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதன் தமிழாக்கம் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய ஒளவை சண்முகி. அதெப்படி remake பண்ணும்போது கமல் இயக்கினார்னு புரியவே இல்லை. கே எஸ் ரவிக்குமார்னா ஹிந்தியில் தெரியாதுனு கமல் தனக்கு க்ரிடிட் கொடுத்துக்கிட்டாரானு என்னனு தெரியலை. இந்தியில் இது ஒரு கமர்ஷியல் ஹிட் என்பதை யாரும் மறுக்கவில்லை! இது ராபின் வில்லியம்ஸ் நடித்த மிஸர்ஸ் டஃப்ட்ஃபயர் வுடைய காப்பி என்பதால் கமலஹாசனை பாராட்டியவர்களைவிட திட்டியவர்கள்தான் அதிகம்.

* 2) என்னைக் கேட்டால் கமல் முழுமுயற்சியுடன் இயக்கிய முதல்ப் படம் ஹே ராம்தான். ஹே ராம்  மாதிரி ஒரு படம் யாராலையும் எடுக்க முடியாது, அது இதுனு னு பல பாஸிடிவ் விமர்சங்கள், விமர்சகர்கள் (கமல் அபிமானிகள்) சொன்னாலும், இந்தப் படம் வியாபார ரீதியில் படு தோல்வி மற்றும் விமர்சகர்கள் மனதையும் கவரவில்லை என்பதே உண்மை!
அதற்குக் காரணம், அது ஒரு விவகாரமான சப்ஜெக்ட் என்பதால்னு ஒரு சிலர் சொல்றாங்க. ஆனால் அதெல்லாம் உண்மையினு நான் நம்பவில்லை. இயக்குனராக ஜனங்களை கவரமுடியாமல் ஹே ராமில் கமல் தோற்றார் என்பதே என் பக்க வாதம்.

*3) விருமாண்டி, கமல் இயக்கத்தில் வந்த ரெண்டாவது படம். ஹே ராம் இந்திய அளவில் பிரச்சினையானதுனா, விருமாண்டி தமிழ்நாட்டு அளவில் "சண்டியர்" டைட்டில் பிரச்சினை ல ஆரம்பிச்சு கடைசியில் எப்படியோ வெளியே வந்தது. இந்தப் படமும் பருத்திவீரன் அளவுக்குக்கூட பாராட்டப்படவில்லை. கமர்ஷியலாகவும் சுமாராகத்தான் போனது.

* 4) விஸ்வரூபம்: கமல் இயக்கத்தில் வரப்போகும் அடுத்த படம்.
 

 க்ளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்குனரானது, 1971 லயே, ஆனால் அவரை திறமையான இயக்குனர் என்று உலகம் ஏற்றுக்கொண்டது 1992 ல வந்த அண்ஃபர்கிவின் படத்திற்கு ஆஸ்கர் கிடைத்தவுடன்தான். நிச்சயமாக க்ளிண்ட்க்கு அதுதான் "ப்ரேக் த்ரு". அதேபோல் கமலுக்கு விஸ்வரூபம் "ப்ரேக் த்ரு"வாக அமைந்தால், கமல் அபிமானிகள் மட்டுமன்றி உலகமே கமலை சிறந்த இயக்குனர் என்று ஏற்றுக்கொள்ளும்! போற்றிப் புகழும்!

இந்தமுறையேனும் வெல்வாரா இயக்குனர் கமல்?

16 comments:

  1. //நான் கமல்ஹாசன் விசிறியல்ல!//

    நினைச்சேன்!

    ReplyDelete
  2. பொறுத்திருந்து பார்ப்போம் ..!

    ReplyDelete
  3. கமலஹாசன்..................... ம்ம்மம்மம்ம்ம்ம்................... என்ன சொல்றதுன்னே தெரியலே. இந்தாளை நினைச்சு சிரிப்பதா அழுவதான்னும் புரியலே. :(

    எதுக்கும் இந்த ரெண்டு பதிவையும் படிச்சிட்டு [ஒரு வேலை இன்னமும் படிக்காம இருந்திருந்தா!!] ஒரு முடிவுக்கு வாங்க!!
    http://www.karundhel.com/2010/09/blog-post.html
    http://www.karundhel.com/2010/10/blog-post_28.html

    ReplyDelete
  4. என்னது படத்துல முக்காடு போட்டுக்கிட்டு இருக்காரு. ஆமா, இப்போ வந்த விஜய் படம் ஏதோ ஒண்ணுல இதே கெட்டப்புல இருப்பாரே...... அந்தப் படமே திருட்டுக் கதை, அதுக்கு மேல இது வேறயா....... குஷ்டமப்பா.......... சே......கஷ்டமப்பா..

    ReplyDelete
  5. \\இல்லைனா கமல் இதுபோல் "புரியிறமாரிப் பேசப்பழகிக்கோங்காணும்"னு விமர்சனங்களைப் பார்த்துத் தெளிவாக பேசுறாரானு எனக்குத் தெரியலை.\\ இவரு பேசுறதெல்லாம் புரிய ஆரம்பிச்சுடுச்சா........??!! சொல்லவேயில்லை.....!! நான் இவரு பேசுறாருன்னா போதும்...... பின்னங்கால் பிடரியில அடிக்க ஒரே ஓட்டம் ......... ஒரு மைல் போய்தான் நிற்ப்பேன்......... ஹி........ஹி............

    ReplyDelete
  6. \\என்னைப்பொருத்தமட்டில் இதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தான்த் தெரிஞ்சது.

    இது பத்தாதுனு கலைத்தாயின் "செல்லப்பிள்ளை" இவர்தான்னு இவருடைய "ரைவல்" ரஜினியே உலகறிய "பெருந்தன்மை"யாக ஏற்றுக்கொண்டுவிட்டார். இதெல்லாம் தேவையா? னு பலர் இதற்கும் எரிச்சலடைந்தாங்க என்பதும் உண்மைதான்.\\ இவரு சிறந்த நடிகர் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமேயில்லை. ஆனாலும் ராஜ பார்வை படத்திலிருந்தே இவரு ஆங்கில/அந்நிய மொழிப் படங்களின் கதைகளை சுட்டு தமிழில் படமெடுத்து வந்திருக்கிறார். இது இவரது எல்லா +களையும் மதிபிழக்கச் செய்து விடுகிறது. மனதளவில் இவருக்கு எந்த மரியாதையையும் தர இயலவில்லை.

    ReplyDelete
  7. \\3 முறை தேசிய விருது பெற்றுள்ள ஒரே தமிழ் நடிகரும் இவருதான்.\\ தேசிய விருது குடுக்குறவனுங்க சுத்த மாநாகா மடையனுங்கலாத்தான் இருப்பானுங்க போல. இன்னைக்கு எவன் எந்த படத்தை எங்கேயிருந்து சுட்டான் என்பதை அக்கு வேறு ஆணி வேறாக பிருத்து மேய நம் பதிவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த போது அறிவு அனுபவம் கூடவா இந்த முட்டாள்களுக்கு இருக்காது? இந்த வேகாய ஹாசனுக்கும், வெள்ளைபூண்டு ரத்தினத்துக்கும் தேசிய அளவில் அங்கீகாரம். இவர்கள் ஒரே வேலை கதைகளை உலக அளவில் திருடி இந்திய அளவில் படமெடுப்பது மட்டுமே. மக்கள் பலவிதமாக ஏமாற்றப் படுகிறார்கள், அதில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  8. \\பார்ப்பனராக பிறந்தாலும், நாத்திகன் என்றும், நான் மாமிசம் சாப்பிடுவேன் தன்னை எந்தக்கூச்சமும் இல்லாமல் சொல்வதாலும், தன் கடவுள் நம்பிக்கையில்லா கொள்கைகளை தெளிவாக உள்மனதிலிருந்து சொல்வதால், இவருடைய நேர்மைக்காக, மறத்தமிழர்களுக்கும் இவர்மேல் பற்று அதிகம்.\\ நீங்க ஒன்னு, சமயம் கிடைக்கும் போது பார்ப்பனர்களுடன் சேர்ந்து இவன் கும்மியடிப்பான். இந்த தகுதிகளோடு தெருவுக்கு ஐம்பது பேரு இருப்பான்.

    ReplyDelete
  9. \\தன் சொந்த வாழ்வில் இரண்டுமுறை விவாகரத்து செய்துவிட்டு, லிவ்-இன் பார்ட்னருடன் இன்று வாழ்கிற அவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை இன்றைய நிலையில் அவருடைய மரியாதையை எந்த வகையிலும் குறைக்கவில்லை! மாறாக இன்று இவருடைய முற்போக்கு சிந்தனையையும், நேர்மையையும் பாராட்டுகிறார்கள் தமிழக மக்கள்.\\ எது முற்ப்போக்கு? வேட்டி கட்டியிருந்தவன் அவிழ்த்துப் போட்டு விட்டு நிற்பதா? நடிக நடிகையர்கள் செய்யும் ஒவ்வொன்னும் சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். இவன் எக்கேடு கேட்டால் யாருகென்ன, ஆனால் திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்லி இரண்டு பேரை விரட்டியடித்து விட்டு ஒருத்தியோடு கல்யாணமே பண்ணாமல் வாழ்ந்து கொண்டு ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்ப்படுத்தி இருக்கான். சமூகம் சீர்கேடுவது இவர் போன்ற ஆட்களால்தான். இவர்கள் செய்வதை கொஞ்சம் மறைத்துச் செய்தால் பரவாயில்லை. ஆனால் கேட்டதை ஊரறியச் செய்து அதை கொள்கையாகவும் பரப்பி வருகிறான். இவன் கேட்டதோடு சமுதாயத்தையும் கெடுத்து வருகிறான்.

    ReplyDelete
  10. \\இந்தமுறையேனும் வெல்வாரா இயக்குனர் கமல்? \\ எட்டி பழுத்தால் என்ன, ஈனன் வாழ்ந்தால் என்ன?

    ReplyDelete
  11. ****Jayadev Das said...
    கமலஹாசன்..................... ம்ம்மம்மம்ம்ம்ம்................... என்ன சொல்றதுன்னே தெரியலே. இந்தாளை நினைச்சு சிரிப்பதா அழுவதான்னும் புரியலே. :(

    எதுக்கும் இந்த ரெண்டு பதிவையும் படிச்சிட்டு [ஒரு வேலை இன்னமும் படிக்காம இருந்திருந்தா!!] ஒரு முடிவுக்கு வாங்க!!
    http://www.karundhel.com/2010/09/blog-post.html
    http://www.karundhel.com/2010/10/blog-post_28.html

    9 June 2012 5:48 AM**

    ஓரளவுக்கு தெர்ஞ்ச விசய்ம்தாங்க இந்தப் பதிவுகள்

    கமலஹாசனுக்கு ஒரு வியாதிங்க. எதையாவது ஹாலிவுட் படத்திலிருந்து ஒரு சீனாவது காப்பியடிக்காமல் அவரால இருக்க முடியாது. அவரு செய்கிற இந்தத்தப்பை இவரு என்றுமே ஒத்துக்கொள்வது கெடையாது. That's what irritates me most.

    இவரைக் கெடுத்தது யாருனு பார்த்தா இவருடைய எல்லாம் தெரிஞ்ச மேதாவி ரசிகர்கள்தான்.

    Actually I wanted write something positive about him. என்னால முடிஞ்சது இம்புட்டுத்தான். :-)

    மற்றபடி இந்த விசயத்தில் நான் உங்க கட்சிதான்! இவரு நாத்திகர்னு தன்னை சொல்லிக்கொள்வதால இவரை மேலே தூக்கி வச்சுக் கொண்டாட எல்லாம் என்னால முடியலை.

    வர வர தரமான, மனிதாபிமானம் உள்ள, உண்மையைப் பேசும், அகந்தை இல்லாத நாத்திகர்களுக்கு பஞ்சமாப் போச்சு. :(

    என் பிரச்சினை எனக்கு. என்னவோ போங்க! :)

    ReplyDelete
  12. இந்த கட்டுரைய படிக்கும் போது என்ன தோனுதின்னா கமல் பார்பனன் அவரை இகழ வேண்டுமென்ற நோக்கத்தோடு எழுதியிருக்கிறாய்.நான் ஒரு உதவி இயக்குனாய் அவர் இயக்கும் படம் மட்டுமல்ல அவர் நடிக்கும் படங்களில் அவர் மெனக்கெடும் விசயங்களை கண்டு பிரம்மித்து போவேன்.கலையின் அர்த்தம் புரிபவனுக்கு மட்டுமே அவர் படம் பிடிக்கும்.அது தெரியாம வசனம் புரியல டயலாக்கு கேக்கலன்ன ஒன்னேட காத சுத்தபடுத்திட்டு போயி பாரு ஹேராம் படம் நல்ல இருக்கா அதமட்டும் சொல்லு அத விட்டுவிட்டு படம் ஒடல பருப்பு ஒடலன்னு எதுக்கு மலுப்பல் பேச்சு .. தம்பி jay dev நீயல்லம் கமலபத்தி பேச தகுதி பத்தாது மூடு .

    ReplyDelete
  13. \\தம்பி jay dev நீயல்லம் கமலபத்தி பேச தகுதி பத்தாது மூடு .\\ என்ன நாகரீகமா பேசுறீங்க சார், கமலஹாசன் மாதிரியே!! ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கணும் சார். உலகில் மற்ற நாடுகளில் இல்லாத ஒரு சிறப்பு இந்தியாவுக்கு உண்டு. அது திருமணத்துக்கப்புறம் கணவனும் மனைவியும் பிரிகிறார்கள் என்றால் அது மரணமாகத்தான் இருக்கும் என்பதே. இன்றைக்கும் இரண்டு நிறுவனங்களுக்கு இடையே பிரிக்க முடியாத புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும்போது, This is like Indian marriage என்று சொல்லுவது உண்டு. கணவனுக்காக மனைவி, மனைவிக்காக கணவன், இடையில் எத்தனை சண்டைகள் வரட்டும், பிணக்குகள் வரட்டும், கணவனுக்கு நேர்மையாகவே மனைவி இருப்பாள். [அங்கொன்றும் இங்கொன்றுமாக இதற்க்கு சில விதிவிலக்குகள் இருக்கக் கூடும்.] இப்படி இருக்கும் நாட்டில், பார்க்க மகாலட்சுமி மாதிரி இருந்த ஒரு குடும்பப் பாங்கான பெண்ணை வைத்து வாழாமல் விரட்டிவிட்ட இந்த மயிருபுடிங்கியைப் பற்றி பேச என்ன தகுதியை ஐயா நான் பெற வேண்டும்? நீங்களே சொல்லுங்கள்.

    இவரைப் பற்றி நான் பேசத் தகுதி இல்லை என்றால், திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று போது நிகழ்ச்சிகளில் பேசி அது மாநிலம் முழுவதும் ஒளி பரப்பும் உரிமையை இந்த வெட்டியானுக்கு யாரு சார் கொடுத்தது? ரோட்டிலே பிச்சை எடுத்துப் பிழைப்பவன் கூட தன் மனைவியை வாழ்நாள் முழுவதும் வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்றே நினைப்பான்- என்று இருக்கும் நாட்டில் இன்று விவாகரத்துகள் சர்வ சாதரணமாகிப் போனதற்கு இந்த மாதிரி ஊதாரி பயல்களின் முன்னுதாரங்களைத் தவிர வேறு என்ன சார் காரணம் இருக்க முடியும்?

    ReplyDelete
  14. கமலஹாசன் என்பவர் திறமை வாய்ந்த நடிகர், அதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை, நானும் ஒப்புக் கொள்கிறேன். இவர் நடிப்பைப் பற்றி பேசட்டும், கல்லோருகளுக்குப் போய் பாடம் கூட எடுக்கட்டும். அதே சமயம், திருமணம் இறை நம்பிக்கை என்பது ஒரு தனி நபர் சம்பத்தப் பட்ட விடயம், இவருக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை, கல்யாணம் பண்ணாமலேயே எல்லாம் செய்யலாம், வேண்டாத போது கலட்டி விட்டு விடலாம் என்றால், அதை இவர் சொந்த வாழ்வில் வைத்துக் கொள்ளட்டும், அதை மேடை போட்டு பேசி மக்கள் மனதில் விஷத்தை விதைக்க இவர் யார்? மக்களில் 90% ர்க்கும் மேல் இன்னமும் இறை நம்பிக்கை உள்ளவர்களே, அப்படி இருக்க கடவுள் இல்லை என்பது போன்ற விஷத்தை ஊர் முச்சூடும் தெளிக்க இந்த நாய் யார்? இப்படி இவரு இஷ்டத்துக்கும் உளறலாம், இவரைப் பற்றி பேச நாங்கள் Oxford பலகலைக் கழகத்தில் படித்து தகுதி பெற்று வர வேண்டுமா? நீரே ஒரு உதவி இயக்குனர் என்கிறீர், நடிகர்கள் என்றால் ஒழுக்கம் முக்கியமாக பெண்கள் விஷயத்தில் எப்படி இருக்கும் என்பது உமக்கே தெரியும். சாக்கடையைப் பற்றி பேச என்னை ஈர வெங்காயத் தகுதி ஐயா வேண்டும்?

    ReplyDelete
  15. ***சோழன் said...
    இந்த கட்டுரைய படிக்கும் போது என்ன தோனுதின்னா கமல் பார்பனன் அவரை இகழ வேண்டுமென்ற நோக்கத்தோடு எழுதியிருக்கிறாய்.****

    :)

    ***நான் ஒரு உதவி இயக்குனாய் அவர் இயக்கும் படம் மட்டுமல்ல அவர் நடிக்கும் படங்களில் அவர் மெனக்கெடும் விசயங்களை கண்டு பிரம்மித்து போவேன்.கலையின் அர்த்தம் புரிபவனுக்கு மட்டுமே அவர் படம் பிடிக்கும்.***

    ஹாலிவுட்ல போயி அள்ளிக்கிட்டு வர்றதுதான் கலைங்களா? நல்லதுங்கோ!


    ஆனால் ஒண்ணு, உங்க இடத்தில் நான் இருந்து இருந்தால், "நீங்க ஹாலிவுட் படத்தை காப்பியடிக்கிறது தப்புண்ணா! ஊர் உலகம் எல்லாம் உங்கள மட்டமாப் பேசுறா. தயவு செய்து அதைமட்டும் நிறுத்திடுங்கண்ணானு கெஞ்சிக் கூத்தாடி இருப்பேன்! அதுதான் அவருக்கு செய்யும்உதவி. உம்முடைய ஜால்ரா அல்ல!

    ReplyDelete
  16. very good view, already I had written on this...

    see

    http://mastanoli.blogspot.com/2011/01/blog-post.html

    ReplyDelete