Wednesday, June 20, 2012

லீனா மணிமேகலை, வினவு, கண்ணன் மற்றும்..

லீனா மணிமேகலை பிடிபட்டார்னு  வினவு சகாக்கள் ஒரு பதிவு எழுதினார்கள். இவங்க ரெண்டுபேருக்கும் இடையில் காலங்காலமாக சண்டை பழிவாங்குதல் எல்லாம் நடந்துக்கிட்டு இருக்குனு சொல்லலாம். ஒருவர் அசைவை இன்னொருவருவர் கவனமாக கவனிப்பதால அப்பப்போ இதுபோல் பரபரப்பா ஏதாவது வந்துக்கிட்டே இருக்கும். என்னடா இப்போ புதுசானு உள்நுழைந்து பார்த்தால் காலச்சுவடு கண்ணன் (இவரு சுந்தர் ராமசாமி மகரா?) என்பவர் "புரட்சித்தலைவி" னு எழுதிய ஒரு பதிவையும் இணைத்து லீனா மணிமேகலையை, வினவு "பிடிச்சி இருக்காங்க".

இவங்க எல்லாமே ஒரே மாதிரி கொள்கைகள் உள்ளவங்கதான். ஆனால் மாத்தி மாத்தி செல்லமாக அடிச்சுக்குவாங்க, மிதிச்சுக்குவாங்க. காலச்சுவடுக் கண்ணன் அவர் பதிவில் என்ன சொல்றாருனா பணக்கார டாடா ஒரு கேப்பிட்டலிஸ்ட். ஏழைகள் ஆதிவாசிகள் உழைக்கும் வர்க்கங்கள். ரெண்டு பேருக்கும் எப்படி ஆகும்? ஆகாது. ஆதிவாசிகளை சமாளிக்க பணக்கார டாடா ஒரு கமர்ஷியல் வெளியிடுறாங்க. அதாவது ஆதிவாசிப் பெண்களின் வாழ்வை  டாடா கார்ப்பரேசன் மேல்ப்படுத்துவதுபோல! அந்த கமர்ஷியலை இயக்கியவர் யாருனு பார்த்தால் "இடதுசாரி" லீனா மணிமேகலை! இதைப் பார்த்து இவரு எப்படி இப்படி ஒரு காரியத்தைச் செய்யப்போச்சுனு உழைக்கும் வர்க்கங்கள் கண்ணன், வினவு எல்லாம் பொங்கி எழுந்துட்டாங்க!

ஆனா ஒண்ணு நம்மளமாரி பெருசா எந்தக்கொள்கையுமே இல்லாத வீணாப் போனவங்களுக்கு இதுமாதிரி பிரச்சினையெல்லாம் வர்றதில்லை! நமக்கு என்ன வசதினா டாடா ஆரம்பிச்ச "உயர்கல்வி பள்ளி" யிலே வெக்கமே இல்லாமல் படிக்கலாம்! ஆசைப்பட்டா அமெரிக்காவில் போயி பிச்சையும் எடுக்கலாம்! கொள்கைகள் இல்லாத நம்மளமாரி கபோதிகளை,  இப்படி என்ன செஞ்சாலும்  ஒரு பய/சிறுக்கி  ஒண்ணும் சொல்லமுடியாது.

லீனா மணிமேகலை, இதுபோல் கண்ணன், வினவு பதிவுகளைப் பார்த்து, இவங்களுக்கு இல்லாத தகுதிகளை விமர்சிச்சு, ஒரு எதிர்வினைப் பதிவு எழுதி இருக்காரு.  தான் எதுவும் தப்பு செய்யலை, உழைக்கும் வர்க்கங்களுக்காக தான் செய்யும் பொதுநலத்தொண்டை, நல்முயற்சியை, வேணும்னே தவறாப் புரிந்துகொண்டு, தவறா அர்த்தம் கொள்கிறார்கள் இவர்கள்னு  இதற்கு ஏதோ பதில் சொல்லியிருக்காரு. இதில் கண்ணனை தகுதியில்லாத வாரிசுனும், வினவு சகாக்களை விலாசம் இல்லாத வாய்சவடால் வீரர்கள்ங்கிற மாதிரி தனிநபர் தாக்குதலுடன் எழுதியிருக்காரு.

 இதையெல்லாம் ஆராய்ச்சி செய்து, bicurious லீனா மணிமேகலை கொள்கைகள்தான் என்ன? இதுபோல் டாடா, ஆதிவாசிகளுக்கு உதவுவதாக "நடிப்பதுக்கு"  இவரு "இயக்குனராக இருக்கிறது" தப்பா?  சரியா? னு அலசி ஆராய எல்லாம் நேரம் இல்லை. அப்படி ஆராய்ந்து "உண்மையை"க் கண்டுபிடிச்சாலும், உலகத்தில்  இந்தமாதிரி கொள்கைவாதிகள் செய்றதுல  எது சரி, எது தப்புனு சொல்றதெல்லாம் கொள்கைப்பிடிப்பே இல்லாத நமக்கெல்லாம் ரொம்ப கஷ்டம்.

யாரையும் ஒரு அளவுக்குமேலே ஆராய்ச்சி செய்து பார்த்தால் உலகில் யோக்கியன்னு எவனுமே கெடையாதுனு நாம் கற்றது! நான் பார்த்தவரைக்கும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நண்பர்கள் பலரிடம் இருக்கும் கொள்கைகள் எல்லாம் பொதுவா பணம், புகழ், opportunity னு வரும்போது ஒரு மாதிரி வலுவிழந்துவிடும். அதனால லீனா மணிமேகலை கொள்கைகள் என்ன?, எப்படிப் பிடிபட்டாரு? சரி, நெஜம்மாவே பிடிபட்டாரா? இல்லைனா பிடிச்சதா சும்மா சொல்றாளா?னு சரியாப் புரியாதனால இதையெல்லாம் விட்டாச்சு.

இது சம்மந்தமாக ஜெயமோஹனும் ஒரு பதிவைப்போட்டு பஞ்சாயத்து வச்சுயிருக்காரு என்பதுதான் பெரிய வேடிக்கை. பதிவுலகில் நடக்கிற இதுபோல சண்டை, பஞ்சாயத்துக்கெல்லாம் இவரு இறங்கி நுழைந்து பார்த்து நியாயம் பேசுறதுக்கெல்லாம் நேரம் இருக்கானு நீங்க யோசிக்கலாம். இவரு எழுதிய இந்தப் பதிவில் இவர்களுக்குள்ளே உள்ள அரசியல் எல்லாமே தெரியுது.(தல சுத்துது எனக்கு!)  இவரு கண்ணன் கண்ணன்னு ஒரு 20 தடவை எழுதிவிட்டு, கண்ணனைப் பத்தி எனக்கு மரியாதையோ,  கவலையோ இல்லைனு சொல்லி காமடி பண்ணியிருக்கதுல இருந்து உண்மையிலேயே ஜெயமோஹன் எவ்ளோ ஒரு காம்ப்லெக்ஸ் பர்சனாலிட்டினு புரிந்துகொள்ளலாம். He claims that he does not have any high opinion on Kannan or Leena or vinavu group, neither he cares about them! Then why the heck he writes this article at all?!

முக்கியமாக இதை எல்லாம் எடுத்து, இவருடைய பதிவில் ஜெயமோஹன் விமர்சிச்சதுக்கு காரணம் வினவுதளம் மேலே இவருக்கு இருக்கிற காண்டு. குறைந்த நாளில் மேலே உயர்ந்த வினவு தளத்தை கவிழ்த்தவே இவருடைய இந்தப் பதிவுனுகூடச் சொல்லலாம். அதுவும் வினவுதளத்தை தாக்க அந்தத் தளத்தில்  வரும் பதிவுகளை விட்டுப்புட்டு, பின்னூட்டங்களில் உள்ள வன்மம் அது இதுனு விமர்சிச்சு ஏதோ நம் சமூகத்தைப் பத்தி கவலைப்படுவதுபோல் இவரு தனிப்பட்ட முறையில் வினவுமேலே வச்சிருந்த வயித்தெரிச்சலைத் தீர்த்துக்கிட்டாரு. வினவு தளத்தில் நான் பார்த்தவரைக்கும் இவரு சொல்றபடி அப்படி ஒண்ணும் கேவலமான பின்னூட்டங்கள் இல்லை! "கேவலமான" என்பது ஒரு relative term! :)

ஆனால் ஒண்ணு.. இவர் தளத்தில் வருகிற..

 "அன்புள்ள ஜெயமோஹன் அவர்களுக்கு, நான் உங்களுடைய நெடுநாளைய வாசகன், நீங்க ஒரு மேதை, உங்க பதிவு எல்லாத்தையும் நான் படிச்சு கிழிச்சுடுவேன்.." அப்படினு பொய் பொய்யாச் சொல்லி ஆரம்பிக்கிற நாகரிக பின்னூட்டங்கள் (கடிதங்கள்) மாதிரி இல்லாமல் கொஞ்சம் காரசாரமான பின்னூட்டங்கள்னு சொல்லலாம். 

இவரு மாதிரி பெரிய மனுசனுக எல்லாம்  பதிவை வாசிக்கிறதை விட்டுப்புட்டு எதுக்கு வேலை வெட்டி இல்லாமல் அனானிகள் எல்லாம் வரும் பின்னூட்டமெல்லாம் வாசிக்கிறாங்கனு தெரியலை. மேலும் இவரு சொல்கிற இந்த முகமூடி எல்லாம் பெரிய மனுசனுகளும், பிரபலங்களும், இவரோட பரமரசிகர்கள் பலரும், இந்துத்தவாக்களும், எல்லாரும்தான் மாட்டிக்கிட்டு பலதளங்களுக்கு வந்து பின்னூட்டத்தில்  வன்மத்தைக் காட்டுறாங்க!.

இவரைப்போல பின்னூட்டங்கள் இடும் வாய்ப்பை முற்றிலுமாக கொடுக்காமல் இருக்கது என்பது எளிதான விசயம். அதை, எதிர்கருத்தை ஏற்கமுடியாத கோழைத்தனம்னு கூட சொல்லலாம். நம்மாளுக்கு சுதந்திரம், பேச்சுரிமைனு கொடுத்தால் இப்படித்தான் குழாயடிச் சண்டையா வந்து நிக்கும். பேச்சுரிமை கொடுக்கிறது தப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது. அதனால பெரிய மனுசனுக எல்லாம் பதிவோட நிறுத்திக்கனும் என்பதே என் பக்க வாதம்! :)

இப்போ "மனசாட்சிச் சந்தை" இன்னொரு பதிவு வேற!  என்ன, எல்லாரும் அயோக்கியன் என்னைத் தவிரனு மனசாட்சிக்குப் பயந்து எழுதியிருக்காரு, ஜெயமோஹன்! :)

அட போங்கப்பா, எதுக்கு இந்தப் பதிவை எழுத ஆரம்பிச்சேன்னு ஆயிப்போச்சு எனக்கு. :(

19 comments:

  1. என்ன சொல்ல வர்றீங்கன்னு கிரகிக்கவே எனக்கும் தலை சுத்துது.

    கொடுத்த சுட்டிகளாவது தேறுதான்னு பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. இதெல்லம் 'செய்வதை தெளிந்து செய்யாததால் வரும்' சிக்கல். அல்லது தீவிர கம்யூனிசம் பேசுவோர் தமக்கென தெளிவான 'நன்னடத்தைக் கோட்பாடுகளை' (code of conduct) உருவாக்காததாலும் இருக்கலாம்.

    ஆதாய முரண் (conflict of interest) என்பது எல்லா வேலைகளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டும்.

    எடுத்துக்காட்டாக, 'ட்வுன் டு எர்த்' எனும் சுற்றுச்சூழல் பத்திரிகை எல்லாவிதமான 'சுற்றுச்சூழல் எதிரிகளின்' விளம்பரங்களையும் வெளியிடும். அவர்களுக்கு எதிரான கட்டுரைகளையும் கூடவே வெளியிடும். விளம்பரங்களின் கருத்துக்கும் பத்திரிகைக்கும் தொடர்பில்லை என்கிற விளக்கமும் அதில் இருக்கும்.

    இது ஒருவிதமான நன்னடத்தைக் கோட்பாடு (code of conduct) . இங்கே ஆதாய முரண் (conflict of interest) இருக்கலாம்.

    அதுவே, புகையிலை எதிர்ப்பு குழுக்கள் அனைத்தும் உலக அளவில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். இந்தக் கூட்டமைப்பில் சேர வேண்டுமானால் - நான் எந்த புகையிலை நிறுவனத்திடமிருந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிதி எதுவும் பெற்றது இல்லை. இனி பெறவும் மாட்டேன் - என்று உறுதிமொழியை எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும்.

    இது இன்னொரு விதமான நன்னடத்தைக் கோட்பாடு (code of conduct). இங்கே ஆதாய முரண் (conflict of interest) இருக்கக்கூடாது.

    லீனா மணிமேகலை, அ.மார்க்ஸ், வினவு - இதுபோன்றோரின் நன்னடத்தைக் கோட்பாடு என்ன? ஆதாய முரண் என்று வரும்போது அதற்கு விடைதேடும் வழி என்ன? - என்பது குறித்தெல்லாம் தெரியவில்லை.

    ReplyDelete
  3. இணைய தளங்களில் பொதுவாகவே எனக்கு வினவுதளத்தைப் பிடிக்கும். அவர்களின் வித்தியாசமான அணுகுமுறைகளும் குறிப்பாக அவர்களின் வாதமிடும் முறைகளும் பிடிக்கும்.ஆனால் எழுதுவதற்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்க அவர்கள் எதற்காக இந்த லீனாமணிமேகலையை இவ்வளவு நெருக்கமாக follow பண்ணிக்கொண்டு ஏதோ மிகப்பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆள்கிறவர் தவறுசெய்துவிட்டார் என்பதுபோல் கச்சை கட்டிக்கொண்டும் கூப்பாடுபோட்டுக்கொண்டும் இருக்கின்றனர் என்பதுதான் புரியவில்லை.
    இதில் ஜெயமோகனின் 'தலைமைப்பீட' அறிக்கை வேறு.
    ராஜநடராஜன் சொல்லியிருப்பதுபோல் எதையோ சொல்லவந்து நீங்களும் சொல்லாமல் விட்டிருக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. ***ராஜ நடராஜன் said...
    என்ன சொல்ல வர்றீங்கன்னு கிரகிக்கவே எனக்கும் தலை சுத்துது.***


    நடராஜன்,

    இதுல ஏகப்பட்ட மேட்டர் இருக்கு. என்னுடைய பார்வையில் லீனா மணிமேகலை கில்ட்டி!

    She justifies her act and make her look "innocent". But she is NOT! She is GUILTY! She is an average human being unlike what she pretends to be. She violates her principle for this "opportunity"! That is my humble opinon! :)

    ReplyDelete
  5. லீனா மணிமேகலை யாரென்றே எனக்குத் தெரியாது.

    வினவு கும்பல் எப்படி? அதுவும் எனக்குத் தெரியாது.

    ஆனால்.......

    வினவு கும்பலின் தலைவன் மருதய்யனைப் பற்றித் தெரியும்.

    வினவு கும்பலில் யாரும் என்னுடன் விவாதம் செய்ய வரமாட்டார்கள்.

    அய்யன்... மருதய்யன்... ஒரு பிராமணன்...அவன் யாருக்கு எடுப்பு...யாருடைய தொடுப்பு என்று என்னால் பல விசயங்களைக் கூறமுடியும்.

    ReplyDelete
  6. ராவணன்:

    வினவு யாரு, வினவு நல்லவங்களா என்பதல்ல இங்கே முக்கியம்.

    TATA is a right wing. If Leena belongs to left wing as she claims, she should not go, work on this project, period.

    Rich always knows how to buy anybody and everyone has a price. Leena has been "bought out" for a "cheap price" by TATA! :(

    Yeah, there is a "crime" behind every fortune! LOL

    ReplyDelete
  7. கம்யூனிஸ்டுகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பும்: சாதி மறுப்பு மனிதர்களின் நேர்மைக்கு ஒரு சவால்!

    http://arulgreen.blogspot.com/2012/06/blog-post_21.html

    ReplyDelete
  8. தளபதி... சென்னையில ஒக்காந்திட்டு இதெல்லாம் பாக்கமாட்டீராவே??

    ReplyDelete
  9. ***ராஜ நடராஜன் said...

    என்ன சொல்ல வர்றீங்கன்னு கிரகிக்கவே எனக்கும் தலை சுத்துது.

    கொடுத்த சுட்டிகளாவது தேறுதான்னு பார்க்கிறேன்.

    20 June 2012 10:38 PM***

    நடராஜன்: உங்க பின்னூட்டத்தை வினவில் பார்த்தேன்.

    ///வினவு தோழர்களுக்கு,

    பரபரப்புக்காக பத்திரிகை தலைப்பு மாதிரி நீங்கள் பெயர் சூட்டும் போதே லீனா மணிமேகலை மீதான உங்கள் வன்மம் தெரிகிறது.பெண் நுகர்வுப்பொருளாகவும்,ஆண் ஒரே நேரத்தில் 20 பேரை எம்பிக் குதித்து உதைத்து விடுவதாகவும் உள்ள இந்திய சினிமாவுக்கு மாற்றாகவும் வினவு சிந்தனைகளுடன் இணைந்து பயணம் செய்கிற மாதிரியான மாற்று இந்திய சினிமாவின் தமிழ் பிரதிநிதிகளில் ஒருவர் லீனா மணிமேகலை.உங்கள் எழுத்தின் முரண் வியப்பையே தருகிறது.///

    காலச்சுவடு கண்ணன்ந்தான் இதை முதலில் அம்பலப்படுத்தியது. அவர் தளத்தில் பின்னூட்டங்கள் எல்லாம் வர்றது மாதிரி தெரியலை. வினவு இதுபோல் ஒரு தலைப்புடன் இதை எழுதவில்லை என்றால், நானும் நீங்களும் இந்த விசயத்தைப் பற்றி அறிந்தே இருக்கமாட்டோம்.

    எனிவே, வழக்கம்போல இந்த லீ ம விசயத்திலும், நம் இருவர் பார்வையும் வேறு வேறாத்தான் இருக்கு. :)

    ReplyDelete
  10. ***அருள் said...


    லீனா மணிமேகலை, அ.மார்க்ஸ், வினவு - இதுபோன்றோரின் நன்னடத்தைக் கோட்பாடு என்ன? ஆதாய முரண் என்று வரும்போது அதற்கு விடைதேடும் வழி என்ன? - என்பது குறித்தெல்லாம் தெரியவில்லை.***

    இவங்க எல்லாருமே இடது சாரியை சேர்ந்தவர்கள். ஒருவரிடம் உள்ள குறைகளை இன்னொருவர் விமர்சிப்பது வழக்கம்போல. ஆனால் நம்ம டாடா வலது சாரி. அதான் இங்கே பிரச்சினை.

    படம்பிடிப்பது என் தொழில், யாரு கேட்டாலும் செய்து கொடுப்பேன் என்பதெல்லாம் வியாபாரிக்குச் சரி. லீனாவும் ஒரு சாதாரண வியாபாரியா? என்பதுதான் இங்கே கேள்வி :)

    ReplyDelete
  11. ***Amudhavan said...

    இணைய தளங்களில் பொதுவாகவே எனக்கு வினவுதளத்தைப் பிடிக்கும். அவர்களின் வித்தியாசமான அணுகுமுறைகளும் குறிப்பாக அவர்களின் வாதமிடும் முறைகளும் பிடிக்கும்.ஆனால் எழுதுவதற்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்க அவர்கள் எதற்காக இந்த லீனாமணிமேகலையை இவ்வளவு நெருக்கமாக follow பண்ணிக்கொண்டு ஏதோ மிகப்பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆள்கிறவர் தவறுசெய்துவிட்டார் என்பதுபோல் கச்சை கட்டிக்கொண்டும் கூப்பாடுபோட்டுக்கொண்டும் இருக்கின்றனர் என்பதுதான் புரியவில்லை.
    இதில் ஜெயமோகனின் 'தலைமைப்பீட' அறிக்கை வேறு.
    ராஜநடராஜன் சொல்லியிருப்பதுபோல் எதையோ சொல்லவந்து நீங்களும் சொல்லாமல் விட்டிருக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

    21 June 2012 3:16 AM***

    நீங்க சொல்வது சரிதாங்க, அமுதவன். என்னுடைய கருத்தை பின்னூட்டத்தில் சொல்லி இருக்கேன், பாருங்க! :)

    ReplyDelete
  12. ***அருள் said...

    கம்யூனிஸ்டுகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பும்: சாதி மறுப்பு மனிதர்களின் நேர்மைக்கு ஒரு சவால்!

    http://arulgreen.blogspot.com/2012/06/blog-post_21.html***

    இந்த சாதி எல்லா எடத்துலயும் நுழஞ்சி நம்மை எல்லாம் ஒரு வழி பண்ணிப்புடுச்சு!

    ReplyDelete
  13. ***பழமைபேசி said...

    தளபதி... சென்னையில ஒக்காந்திட்டு இதெல்லாம் பாக்கமாட்டீராவே??***

    சென்னையிலேயா இருக்காரு? என்னவோ நல்லாயிருந்தா சரிதான் :)

    ReplyDelete
  14. வருண்

    பதிவு நியாயமாத் தான் இருக்கு. ஆனா வினவுக்கும் லீனா வுக்கும் காலம் காலமா பகை இருக்குன்னு சொல்றதும், வினவு லீனா எல்லாம் ஒரே கூட்டம்னு சொல்றது தப்புன்னி நினைக்கிறேன்.

    லீனா ஒரு தனிநபர் NGO வினவு தோழர்களோ பலமான அமைப்புகளின் பின்னணி கொண்டவர்கள். அதே போல இருவரின் கொள்கையும் கூட ஒன்றல்ல. வினவின் கொள்கை கம்யூனிசம் லீனாவின் கொள்கை முதலாளித்துவம். முதலாளித்துவவாதிகள் மார்க்சையும் கம்யூனிசத்தையும் பற்றி பேசுவது போல தான் லீனா பேசுவதும்.

    ஜெமோ குறித்து கூறியது உண்மை

    ReplyDelete
  15. ராமதாஸ் ஐய்யாவின் தயவில் NGO வாழ்க்கை நடத்தும் அருள் அவர்களுக்கு நன்னடத்தஒ கோட்பாடு என்று ஒன்றும் இருக்க முடியாது தான்.

    மேலும் இது நன்னடத்தை பற்றிய அல்லது ஒழுக்கவாதம் பற்றிய பிரச்சினை அல்ல அருள் அவர்களே. நேர்மை நாணயம் பற்றிய பிரச்சினை. ஒருவர் பேசுகின்ற பேச்சுக்கு நேர்மையாக இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய பிரச்சினை. கம்யூனிசம் பேசுகிறவர்கள் அத்தகைய நேர்மையுடையவர்கள் என்பது உங்களுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன ?

    ReplyDelete
  16. ***வினவு லீனா எல்லாம் ஒரே கூட்டம்னு சொல்றது தப்புன்னி நினைக்கிறேன். ***

    வினவு இடது சாரிதானே? லீனா தன்னை, தான் இடதுசாரி அல்ல, வலதுசாரினு சொல்லிக்கொண்டு இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லையே?

    லீனாவின் "இடதுசாரித்தனத்தை"த் தானே காலச்சுவடும், வினவும் கேள்வி கேட்கின்றன?? இல்லையா?

    ReplyDelete
  17. @வருண்

    அதே தான் ஏன் லீனா இப்படி வேஷம் போடுறீங்கன்னு தான் கேட்கிறாங்க.

    அவர் தன்னை அவ்வாறு அழைத்துக்கொள்வதனாலேயே நாமும் அவரை அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அவர் போலி என்பதை தான் அந்த கட்டுரை அம்பலப்படுத்துகிறது.

    நன்றி.

    ReplyDelete
  18. ////அம்பேத் said...

    ராமதாஸ் ஐய்யாவின் தயவில் NGO வாழ்க்கை நடத்தும் அருள் அவர்களுக்கு நன்னடத்தஒ கோட்பாடு என்று ஒன்றும் இருக்க முடியாது தான்.

    மேலும் இது நன்னடத்தை பற்றிய அல்லது ஒழுக்கவாதம் பற்றிய பிரச்சினை அல்ல அருள் அவர்களே. நேர்மை நாணயம் பற்றிய பிரச்சினை. ஒருவர் பேசுகின்ற பேச்சுக்கு நேர்மையாக இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய பிரச்சினை. கம்யூனிசம் பேசுகிறவர்கள் அத்தகைய நேர்மையுடையவர்கள் என்பது உங்களுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன ?///

    அய்யா அம்பேத்து, நன்னடத்தை, ஒழுக்கவாதம் என்றால் என்ன? நேர்மை, நாணயம் என்றால் என்ன?

    இதைப் பற்றி எதுவும் தெரியாமல் அந்த மருதய்யனைப் போல் உளரவேண்டாம். போய் அந்த மருதய்யனை வரச்சொல்....

    ReplyDelete
  19. ///வருண் said...

    ராவணன்:

    வினவு யாரு, வினவு நல்லவங்களா என்பதல்ல இங்கே முக்கியம்.

    TATA is a right wing. If Leena belongs to left wing as she claims, she should not go, work on this project, period.

    Rich always knows how to buy anybody and everyone has a price. Leena has been "bought out" for a "cheap price" by TATA! :(

    Yeah, there is a "crime" behind every fortune! LOL///

    லீனா மணிமேகலை நல்லவர்களா கெட்டவர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களை கெட்டவர் என்று கூற வினவு கும்பலுக்கு தகுதி இல்லை என்று என்னால் கூறமுடியும். ஏனென்றால் வினவு கும்பலின் தலைவன் மருதய்யனைப் பற்றி அக்குவேறு ஆணிவேராக என்னால் கூறமுடியும்.

    வருண், எனக்கு இங்கிலிபீசு சுத்தமாகத்தெரியாது.

    ReplyDelete