Wednesday, September 12, 2012

சில்லரையும் நாந்தான்! பெரியமனுஷனும் நாந்தான்!

பின்னூட்டப் பிரச்சினைகள் பத்தி நெறையப் பேருக்குசரியாகப் புரிவதில்லை. நான் திரும்பத் திரும்ப சொல்வது இதுதான். அனானிகள் நிறைந்த உலகம் இந்த பதிவுலகம். அனானியாக உங்க எதிரியும் வரலாம், நண்பனும் வரலாம். இவர்களுடன் போராடி வெல்வதென்பது அர்த்தமற்றது.

ஆனால் அனானியாக வருவதால் நீங்க நண்பரை எதிரியாக நினைத்து ஏமாறுவதையும், எதிரியை நண்பனாக நம்பி ஏமாறுவதையும் தவிர்க்க முடியாது.

"இல்லை இல்லை!  நான் அதி புத்திசாலி, யாரை வேணா கண்டு பிடிச்சிருவேன்"  என்கிற வீண் ஜம்பம் எல்லாம் அர்த்தமற்றது. இதற்காக உங்க பொன்னான நேரத்தை செலவழிச்சு ஆராய்ந்து கண்டுபிடிச்சி.. அட போங்கப்பா!

ஒரு சிலர் பதிவுலகில் அனானிகளை அனுமதிக்கிறது இல்லை. இருந்தாலும் "பெயருடன்" ஒரு அனானி ஐ டி தயார்ப் பண்ணி வருவதும் நடக்கத்தான் செய்யுது. ஒரு ஒரிஜினல் ஐ டி யும் கைவசம் இருக்கும்.

சமீபத்தில் ஒரு தளத்தில் நடந்த கூத்து இது!

ஒரு பதிவரை, அவர் பெயரில் நல்லாத்தெரியும் அந்த தள நிர்வாகிக்கு. இவர்கள் இருவரும் நண்பர்கள்னு கூட சொல்லலாம். கருத்து ஒற்றுமைதான், கருத்து வேற்றுமையைவிட இவர்களுக்குள் அதிகம்.

ஆனா, என்ன காரணம்னு தெரியாது, நண்பர் தளத்திலேயே இவர் அனானியாக ஒரு பின்னூட்டமிடுறாரு. இதற்கு ஆயிரம் காரணம் சொல்லி தான் செய்ததை சரி என்று இவர் விவாதிக்கலாம். ஆனால் அதைப்பத்தி இப்போ பார்க்க வேணாம்.

 அனானியாக வந்து இவர் இட்ட இவரோட ப்ரவோக்கிங் காமெண்ட் டை தள நிர்வாகி, அனானி இவருதான்( நண்பன்னு)னு தெரியாமல் அழிச்சு விடுகிறார்.

சரி, அதோட போய்த் தொலையுதுனு விட்டு இருக்கலாம். இவரு, அதையும் விடாமல், மறுபடியும் இவரோட ஒரிஜினல் ஐ டியில் வந்து, நல்லாத் தெரிந்த பதிவராக, நண்பனாக வந்து, "பெயரிலி" நாந்தான் என்கிறார்.


Anonymous said...
This comment has been removed by a blog administrator.
naren said...
வவ்வால்,

அந்த பெயரிலி மறுமொழி அடியேனதுதான்.

இந்த பின்குறிப்பை சேர்த்து அதனுடன் படிக்கவும்.

நன்றி.

இதுபோல் அனானியாக வருவதால் பல பிரச்சினைகள் உண்டாகும் என்பதை பலரும் உணருவது இல்லை. நான் இங்கே இதைவைத்து ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதெல்லாம் சொல்லப் போவதில்லை.

 பதிவுலகில் ரெண்டு ஐ டி வச்சுண்டு, ஒரே பதிவில், ஒரு கருத்தை நீங்க அனானியாக அல்லது இன்னொரு அனானி பெயருடனும், இன்னொரு கருத்தை உங்க ஒரிஜினல் ஐ டியுடன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன???

அப்படி சொல்வதால் நீங்க என்ன எழவை சாதிக்கிறீங்க?? இதெல்லாம் உங்களுக்கு தப்பாத் தெரியலையா? இருந்துட்டுப் போகட்டும், நீங்க எல்லாரையும் குழப்புறீங்கனு தெரிஞ்சுக்கோங்கப்பா!


இதைப் பத்தி நல்லாப் புரிஞ்சுக்கணும்னா இந்தத் தளத்தில் போய் வாசிக்கவும்!

இதில் நான் யாருடைய பெயரையும் சொல்லாமல் நாகரிகமாக சொல்லியிருக்கலாம்தான். அப்படி நான் சொன்னால் நான் சொல்வதை யாரு நம்புவா??. ஒரு சிலரை பலி கொடுத்துத்தான் ஒரு சில திருத்தங்கள் செய்ய இயலும்!

சம்மந்தப்பட்டவர்கள் என்னை மன்னிக்கவும்!

16 comments:

  1. உங்க பிளாக் வந்தாத் தான் தெரியுது...என்ன என்ன பிரச்சினைகள் என்று..

    ReplyDelete
  2. என்ன சொல்கிறோமென்றே தெரியாமல் சண்டைப் போட்டாலும் மேஞ்சா சரிதான்:)

    ReplyDelete
  3. @கோவை நேரம்! மயில் ஏறவே வேண்டாம்ங்கிறீங்க:)

    ReplyDelete
  4. *** கோவை நேரம் said...

    உங்க பிளாக் வந்தாத் தான் தெரியுது...என்ன என்ன பிரச்சினைகள் என்று..

    12 September 2012 6:58 AM***

    என் பிர்ச்சைனை எனக்கு மட்டும் இல்லை! ஊர் உலகுக்கெல்லாம்தாங்க! :)))

    ReplyDelete
  5. ****ராஜ நடராஜன் said...

    என்ன சொல்கிறோமென்றே தெரியாமல் சண்டைப் போட்டாலும் மேஞ்சா சரிதான்:)

    12 September 2012 7:16 AM***

    ?????

    தங்கள் பின்னூட்டக் கருத்து, என் சிறிய அறிவுக்கு எட்டவில்லை!

    ReplyDelete
  6. ***ராஜ நடராஜன் said...

    @கோவை நேரம்! மயில் ஏறவே வேண்டாம்ங்கிறீங்க:)

    12 September 2012 7:19 AM***

    ராசநடராசா: எனக்கு மட்டும் புரியாமல் நீங்க பின்னூட்டமிட கத்துக்கிட்டீங்க! பெரிய முன்னேற்றம்தான் போங்கோ! :))

    ReplyDelete
  7. ////ராஜ நடராஜன் said...

    @நரேன் என பின்னூட்டம் போடனும்.இல்லாட்டி அனானியா வந்து ஆவியா அலையனும்.இரண்டுமில்லாம அனானியும் போட்டு,நரேனும் நாந்தான் போட்டதின் ஒரே பலன் அமெரிக்க பங்காளி வவ்வால் பறக்குதான்னு பார்ப்பதுதான்:)

    எப்படியோ பொம்பளைக சாடை பேசுவது மாதிரியா இரண்டு முகமூடிகளும் பேசிக்கொண்டா சரிதான்.நமக்கும் பொழுது போகனுமில்ல!
    10:24 PM, September 12, 2012 ///

    நம்ம நடராசரு, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நடையா நடந்து பெரிய பஞ்சாயத்து வச்சு விடுறாரு, பாவம்!

    ஒரு வழியா தீர்ப்பு சரியாச் சொன்னா நல்லதுதான்.

    என்ன நாஞ்சொல்றது? :)))

    ReplyDelete

  8. ***எப்படியோ பொம்பளைக சாடை பேசுவது மாதிரியா ***

    ஏன் ஆம்படையான் எல்லாம் சாடை பேசமாட்டாளாக்கும்??!!

    எந்தக் காலத்துல இருக்காரு, நம்ம நடராசரு?

    "இப்படி பெண்களை அவமானப் படுத்திட்டாரே இந்த மனுஷன்!" னு அதை இதைச் சொல்லி பெண்ணியவாதிகளிடம் இவரை நன்னா மாட்டி விட வேண்டியதுதான். அவங்க இவரை கவனிச்சுக்குவாங்க! :)))

    ReplyDelete
  9. தமிழ்மணம் சார்!இவர் ஏற்கனவே டிக்கட் வாங்கிட்டார்.மறுபடியும் க்யூவுல நின்னு டிக்கெட் வாங்குறார்:)

    மயிலுக்கெல்லாம் நம்மோட இன்னொரு இந்திய பங்காளிக்கு பொழிப்புரை சொல்ற மாதிரி சொல்வேன்.நமக்கேன் வம்பு இந்துத்வாவாதி,இஸ்லாமிய தீவிர வாதின்னு:)

    மேய்வதை கன்பார்ம்....சீ...சீ...உறுதிப்படுத்தியதற்கு நன்றி.(இதாவுது புரியுதா,இல்லை இதுவும் புரியலையா:)

    ReplyDelete
  10. நடராசன்ங்கிற ஆளு ஒருத்தன் இருப்பதே பலருக்கும் தெரியாது.இதுல போய் நோண்டி விடறேன்...சீண்டி விடறேன்னுட்டு:)

    ஏதோ நமக்குள்ள சண்டை போட்டமா,பதிவு போட்டமான்னு இருக்கறத விட்டுப்புட்டு.

    ReplyDelete
  11. ***மேய்வதை கன்பார்ம்....சீ...சீ...உறுதிப்படுத்தியதற்கு நன்றி.(இதாவுது புரியுதா,இல்லை இதுவும் புரியலையா:)***

    என்னவோ யாருடைய சொந்த நெலத்துல போயி நான் மேஞ்ச மாதிரி சொல்றேள்??

    நான் யாரையும் என் பதிவை வாசிக்கக் கூடாதுனு சொல்லவே இல்லையே! அதே போல் நானும் யாரு பதிவானாலும் வாசிப்பேன்.

    அதுவும் "அமெரிக்க பங்காளி" மற்றும் சயிண்டிஸ்டு தலை உருளும் இடமாச்சே அது??

    தேவையானதை அள்ளிட்டு வந்து வியாக்யாணமும், விமர்சனமும், வம்பும் பேசுவேன் (பொறுப்பா தொடுப்புக் கொடுத்துப்புட்டு).

    எல்லாம் பொதுநலத் தொண்டுதான். :)))

    ReplyDelete
  12. ***ராஜ நடராஜன் said...

    நடராசன்ங்கிற ஆளு ஒருத்தன் இருப்பதே பலருக்கும் தெரியாது.இதுல போய் நோண்டி விடறேன்...சீண்டி விடறேன்னுட்டு:)

    ஏதோ நமக்குள்ள சண்டை போட்டமா,பதிவு போட்டமான்னு இருக்கறத விட்டுப்புட்டு.

    12 September 2012 11:54 AM***

    எப்படியோ, உங்களை அங்கே இங்கே, மேற்கோள் காட்டி, திட்டி, சண்டை போட்டு, ஒரு வழியா பிரபலப் படுத்திப் புடுறதுனு ஒரு முடிவோடதான் இருக்கேன்! :)))

    ReplyDelete
  13. உங்கள் பகிர்வுக்கு நன்றி........

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  14. இந்தப் பின்னூட்டங்கள் எதைச் சாதிக்கின்றன?

    ReplyDelete
  15. ***Easy (EZ) Editorial Calendar said...

    உங்கள் பகிர்வுக்கு நன்றி........

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    12 September 2012 10:54 PM***

    வாங்க!

    சரிங்க, என்னவோ போங்க!

    ReplyDelete
  16. ***பழனி.கந்தசாமி said...

    இந்தப் பின்னூட்டங்கள் எதைச் சாதிக்கின்றன?

    12 September 2012 11:19 PM***

    வாங்க சார்!

    என்ன இப்படி சொல்லீட்டேள்?

    60 மதிப்பெண்கள் பெறுகிற மகுடப் பதிவுகள் சாதிப்பதைவிட இது சாதிச்சது அதிகம் சார்! :-)

    ReplyDelete