Wednesday, September 19, 2012

கூடங்குளம் அணு உலை பிரச்சினைக்கு தீர்வு!

என்னைப் பொறுத்தவரையில் கூடங்குளம் அணு உலை தேவை என்றும், அது இல்லையென்றால்  நாம் வாழவே முடியாது என்கிற "தியரி"யை எல்லாம் நான் வாங்கத்தயாரா இல்லை!

அணு உலைகளால் நாம் பெரும் மின்சாரம் 3% மட்டுமே என்கிறார்கள். 97% மின்சாரம் அணுவுலைகளால் நாம் அடைவதில்லை!

As of 2011, India had 4.8 GW of installed electricity generation capacity using nuclear fuels. India's Nuclear plants generated 32455 million units or 3.75% of total electricity produced in India.[55]
அந்த 3% மின்சாரத்தை நாம் பலவகையில் ஈட்டலாம்!

எப்படி ஈட்டுவடா? னு கேக்குறீங்களா?

சரி படிப்பறிவில்லாதவனாக இதை அனலைஸ் பண்ணி சொல்லுறேன்.

* எரிபொருள், பெட்ரோல் எல்லாம் இறக்குமதி செய்கிற நாம் மின்சாரத்தையும் இன்னொரு நாட்டிலிருந்து வாங்க முடியுமா? அவன் அதை எப்படி வேணா தயாரிக்கட்டும், நாம் அதற்கு ஒரு விலை கொடுத்து வாங்கினால் என்ன?

* நாம் தயாரிக்கும் மின்சாரம் பலவ்கையில் விரயமாகிறது என்கிறார்கள். அதை விரயமாகாமல், புது வயர்கள் மற்றும் சாதங்களை மாற்றி அமைத்தால் பல விழுக்காடுகள் மின்சாரத்தை "பெற"முடியும்

* கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பாருங்கள்!

India and U.S. Share Energy Woes: Stealing Electricity

 One of the problems that helped cause the blackout in India is relatively unknown: About a third of the people there get their electricity for free and many by stealing it.

kaushik 1 month ago
I think Mr. Silverstein’s statement – ‘About a third of the people there get their electricity by stealing it’ – is utterly wrong, misleading and derogatory. This statement amounts ot saying that every third Indian is an electricity thief.
The electricity revenue loss is often stated to be 30% – that does not mean that every third Indian steals electricity. I hope I dont have to explain the simple mathematics that 2% offenders can contribute to 30% loss.

Ken Silverstein , Contributor 1 month ago
Hi, I think your comment is reasoned but here’s another story that backs up the claim in the story: http://www.compasscayman.com/caycompass/2012/08/06/India-left-in-dark-by-utilities-losing-$10B-a-year/
In that story, it says that 40 percent is not paid for and that the ‘bulk’ is stolen.
I can appreciate the sentiment expressed here. But if the power is not paid for, then I’m not sure how else to state those facts.

* அதாவது என்ன சொல்றாங்கன்னா நம்ம தயாரிக்கும் மின்சாரத்தில் 33% நம் மக்களால் திருடப்படுகிறதாம்!! அதாவது நாம் திருட்டை குறைத்தால் பல விழுக்காடுகள் மின்சாரம் சேமிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அதாவது 3% மின்சாரம் அணு உலையில் இருந்து தயாரிக்கிறோம்.  33% மின்சாரம் களவு போகிறதாம்.

உடனே களவு போச்சுனா, அதுவும் "ஏழை மக்களுக்குத்தான்" போகிறது என்ற வியாக்யாணம் வேண்டாம் ! திருடுறவன் ஏழையாக இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. பெரிய பெரிய பணக்கார முதலைகளும் இதை செய்யலாம்! பொதுவாக அவனுகதான் இதெல்லாம் செய்வானுக!

* கூடங்குளம் அணு வுலை இல்லாமல் வாழவே முடியாது என்பதுபோல் பேசுவது அறியாமை!

* அணு உலைகளை முழுவதுமாக மூடினாலே நமக்கு இழப்பு, 3% மின்சாரம்தான்!

* 33% மின்சாரம் நம்மில் நம்மால் திருடப்படுகிறது. அந்தத் திருட்டை மட்டுறுத்தினால், அந்தப் பணத்தை வைத்து மின்சாரம் வாங்கலாம், இல்லையென்றால் வேறு வழிகளில் (97% தயாரிப்பதுபோல) அதை தயாரிக்கலாம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!

சரி, சண்டைக்கு வர்ரீங்களா?

பேசலாம் வாங்க! என் அறியாமையை போக்கும்  மேதைகள் வரலாம்!

---------------------

பின்னால் சேர்த்தது  பதிவில் இந்தப் பகுதி!  

2008 ல veteran பதிவர் கயல்விழி இதே தளத்தில் எழுதியது!

யாராவது போயி தோண்டி எடுக்கும் முன்னே.. நானே இங்கே பதிவைக் கொடுத்துடுறேன்.இந்தத் தொடுப்பைப் பாருங்கள்!

அணு சக்தி, ஒரு மாறுபட்ட பார்வை

ஆனால்..இந்தப் பதிவில், அணு உலைகள் சரி என்பதுபோல பின்னூட்டங்களில் வாதிட்டுள்ளேன்!

ஜப்பானில் நடந்த சமீபத்திய விபத்து எல்லாருடைய வியூவையும் மாற்றியமைத்துள்ளதா??? அதனால்தான் இன்று எல்லோருமே கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கருத்து தெரிவிக்கிறோம் போல!

33 comments:

  1. இந்த திட்டத்திற்குத் தேவையான நில கையகப் படுத்தல் ஆரம்பித்தபோதே இந்த எதிர்ப்பைக் காட்டியிருந்தால் நிச்சயம் கைவிட்டிருப்பார்கள். கொள்ளையடிப்பதிலேயே குறியாய் இருந்த தமிழக அரசியல் வாதிகள் யாரும் இதை அப்போது எதிர்க்கவில்லை, மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வையும் ஏற்ப்படுத்தவில்லை. இதை அமைப்பதற்கான கையூட்டு எல்லாம் வங்கித் தின்று விட்ட அரசியல்வாதி இப்போ இதைக் கைவிட்டால் வாங்கிய கையூட்டுக்கு யார் பதில் சொல்வது? காலை சுத்தின பாம்பு கடிக்காம விடாது, தற்போது எதைச் செய்தும் இதை நிறுத்த முடியாது. கேரளாக் காரனுங்க இதுல கெட்டி. அங்க வராம பாத்துகிட்டு, இப்போ உற்பத்தியாவதில் முக்கால் வாசி எங்களுக்குக் கொடுங்கிறான்! நீ சாவு, நான் என்ஜாய் பண்றேன்! இது அரசியல்வாதி கேரளாக் காரனுங்க ரெண்டு பேரும் சொல்றானுங்க......தமிழனைக் காப்பாத்த யாருமே இல்ல that's all..........

    ReplyDelete
  2. நல்ல பதிவு! நான் இதை அமோதிக்கிறேன். நான் மத்திய பிரதேசத்தில் வேலை செய்தேன். அங்கே 50% திருட்டு நடக்கிறது

    ReplyDelete
  3. நல்ல பதிவு! நான் இதை அமோதிக்கிறேன். நான் மத்திய பிரதேசத்தில் வேலை செய்தேன். அங்கே 50% திருட்டு நடக்கிறது

    ReplyDelete
  4. ***Jayadev Das said...

    இந்த திட்டத்திற்குத் தேவையான நில கையகப் படுத்தல் ஆரம்பித்தபோதே இந்த எதிர்ப்பைக் காட்டியிருந்தால் நிச்சயம் கைவிட்டிருப்பார்கள். கொள்ளையடிப்பதிலேயே குறியாய் இருந்த தமிழக அரசியல் வாதிகள் யாரும் இதை அப்போது எதிர்க்கவில்லை, மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வையும் ஏற்ப்படுத்தவில்லை. இதை அமைப்பதற்கான கையூட்டு எல்லாம் வங்கித் தின்று விட்ட அரசியல்வாதி இப்போ இதைக் கைவிட்டால் வாங்கிய கையூட்டுக்கு யார் பதில் சொல்வது? காலை சுத்தின பாம்பு கடிக்காம விடாது, தற்போது எதைச் செய்தும் இதை நிறுத்த முடியாது. கேரளாக் காரனுங்க இதுல கெட்டி. அங்க வராம பாத்துகிட்டு, இப்போ உற்பத்தியாவதில் முக்கால் வாசி எங்களுக்குக் கொடுங்கிறான்! நீ சாவு, நான் என்ஜாய் பண்றேன்! இது அரசியல்வாதி கேரளாக் காரனுங்க ரெண்டு பேரும் சொல்றானுங்க......தமிழனைக் காப்பாத்த யாருமே இல்ல that's all..........***

    எனக்கு ஒரு வசதியிருக்கு, நான் அதிமுக காரனையோ, அல்லது திமுக காரனையோ அல்லது ரஷ்யாவையோ, அமெரிக்காவையோ கையைக்காட்டி அரசியல் செய்யவேண்டிய அவசியம் இல்லை!

    அதானல் இந்தப் பிரச்சினைக்கு தெளிவாக என் நிலைப்பாட்டை சொல்ல இயன்றது.

    நம்மாளுக ஆத்தா என்ன நெனச்சுக்கும்னு பயந்துகொண்டு பூசி மொழுகுவானுக சில வீரர்கள்!

    ஆத்தா ஆட்சிதானே னு கவுத்தவே ஒரு கருத்தை சொல்லுவானுக இன்னொரு கூட்டம்.

    கம்யூனிஸ்டுகளுக்கு எப்போவுமே இன்னொரு வியூ இருக்கும்!

    என்னை பொறுத்தவரையில், சாதரணம் கெமிக்கல் வேஸ்ட்டையே நம்மாளு ஒழுங்கா டிஸ்போஸ் பண்ண மாட்டான். இதுபோல் ரேடியோ கழிவுகளை என்ன செய்வானோ??

    அணு உலையெல்லாம் தேவையே இல்லை! நம்ம மக்கள் தொகையை குறைக்கலாம், வேற ஏதாவது விசயத்தில் திறமையக் காட்டலாம்!

    அணு விளையாட்டு நமக்கு தேவை இல்லை! அம்புட்டுத்தான்!

    ReplyDelete
  5. *** குப்பத்து ராசா said...

    நல்ல பதிவு! நான் இதை அமோதிக்கிறேன். நான் மத்திய பிரதேசத்தில் வேலை செய்தேன். அங்கே 50% திருட்டு நடக்கிறது ***

    "கரப்சன்" தான் என்னைக்குமே நம்மை கொன்றுகொண்டு இருக்கு!

    3.75% தயாரிக்கிறானாம். ஆனால் 33% வீணாவதை கட்டுப்படுத்த முடியலையாம். எப்படியிருக்கு நம்ம நாட்டாமை?

    இதுல குறை சொன்னால் கோவம் மட்டும் பொத்துக்கிட்டு வரும்!

    நம்ம அண்ணாச்சி கெளசிக்கு கோவம் பொத்துக்கிட்டு வருது பாருங்க!!!

    /// kaushik 1 month ago

    I think Mr. Silverstein’s statement – ‘About a third of the people there get their electricity by stealing it’ – is utterly wrong, misleading and derogatory. This statement amounts ot saying that every third Indian is an electricity thief.
    The electricity revenue loss is often stated to be 30% – that does not mean that every third Indian steals electricity. I hope I dont have to explain the simple mathematics that 2% offenders can contribute to 30% loss.///

    ReplyDelete
  6. ஜேயதவ், அணுஉலைக்கு அடிக்கல் நாட்ட்ப்பட்ட போதே எதிர்ப்பு இயக்கம் துவங்கி விட்டது என்பதை அறியாமல் எழுதியிருக்கிறீர்கள். வைகை உள்பட எல்லாரும் எதிர்த்திருக்கிறார்கள். திமுக இதை எதிர்த்து தீர்மானமே போட்டிருக்கிறது.
    ஷாஜஹான்
    http://pudhiavan.blogspot.in

    ReplyDelete
  7. எதிர்ப்பு இருந்திருக்கலாம், ஆனால் இந்த அளவுக்கு இருந்ததா? இது போல மக்கள் ஒன்று கூடிப் போராடியதாகத் தெரியவில்லை. தி.மு.க காரன் எதிர்ப்பு எல்லாம் எப்படி என்றால் காலை சாப்பிட்டு விட்டுப் போய் மெரினாவில் படுத்திருந்துவிட்டு மதிய சாப்பாட்டுக்கு உண்ணா விரதம் இருந்தது போலத்தான். இந்த மாதிரி எதிர்ப்பைக் காட்டி எதற்குப் பிரயோஜனம்? ஆ... உ....என்பானுங்க, தலையில் நங்.. என்று கொட்டினால் கப் சிப் ஆயிடுவானுங்க, டெசோ கதை தெரியாதா? மத்திய அரசில் இருப்பானுங்க, பெட்ரோல் விலை உயர்வுக்கும் போராடுவானுன்கலாம். கருணாநிதி ஆட்சியிலேயே கனிமொழி கைதாம். இவர்கள் ஆடுவது அத்தனையும் நாடகம், கணக்கிலேயே எடுக்கத் தேவையில்லை சார்.

    ReplyDelete
  8. \\திமுக இதை எதிர்த்து தீர்மானமே போட்டிருக்கிறது.\\ Kindly don't make jokes, what is being discussed a serious matter.

    ReplyDelete
  9. வணக்கம் வருண் சார்,

    நல்ல பதிவு!. எனக்கும் இதே கருத்துதான். அணு உலை என்பது நம் நாட்டுக்கு தேவையான அளவுக்கு ஆற்றல் உற்பத்தி செய்ய முடியாத போது,ஆபத்து அதிகம்,அயல்நாடுகளை சார்ந்து யுரேனியம் வாங்க வேண்டும் என்னும் போது வேறு வழிகளை சிந்திக்கலாம் என்பதே நம் கருத்து.

    இப்போது இந்தியாவில் இயங்கி வரும் அணு உலைகளின் செயல் திறன் ,அணு உலை கழிவு மேலாண்மை பற்றி கிடைக்கும் தகவல்கள் மிக மிக குறைவே.

    நன்றி

    ReplyDelete
  10. ***Shahjahan Rahman said...

    ஜேயதவ், அணுஉலைக்கு அடிக்கல் நாட்ட்ப்பட்ட போதே எதிர்ப்பு இயக்கம் துவங்கி விட்டது என்பதை அறியாமல் எழுதியிருக்கிறீர்கள். வைகை உள்பட எல்லாரும் எதிர்த்திருக்கிறார்கள். திமுக இதை எதிர்த்து தீர்மானமே போட்டிருக்கிறது.
    ஷாஜஹான்
    http://pudhiavan.blogspot.in***

    சகோதரர் ஷாஜஹான் ரகுமான்!

    கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு தனி ஒரு மனிதனாக நம் கருத்தை முன் வைப்பதே நல்லது. எல்லாக் கட்சியுமே செய்வது பொதுவா "அரசியல்"தான். "மக்கள் நலம்" என்பதே அரசியல்தான் அவர்களுக்கு!

    ReplyDelete
  11. கூடன் குளம் பிரச்சனையை எப்படி கையாள்வது என்று எனக்குத் தெரியவில்லை சகோ.. மக்கள் விரும்பாவிட்டால் அதனை செய்யக் கூடாது என்றுமில்லை, அரசு விரும்பிவிட்டால் அதனை செய்தே தீரவேண்டும் என்பதில்லை ..

    கூடன் குளம் திட்டம் ஆரம்பிக்கும் போது உலகில் இருந்த சூழல், புரிதல் வேறு விதமாக இருந்தது .. புகுசிமா விபத்தின் பின் அணு மீது ஒரு அச்சம் எழுந்துவிட்டது மக்களுக்கு ... !

    ஜெர்மன், ஜப்பான் போன்ற நாடுகள் அணுத் திட்டங்களை குறைத்து மாற்று மின்சாரத்தை ஊக்குவிக்கின்றன .. !

    ஆனால் கூடன் குளத்திற்கு நிறைய பணத்தை இந்தியா - இரசியா முதலீடு செய்துவிட்டன என்பதால் மண்டையை சொறிகின்றார்கள் .. !!!

    எனக்கு குழப்பம் எல்லாம் கூடன் குளத்தை எதிர்ப்போர் ஏன் கல்பாக்கத்தை மூடச் சொல்லி போராடவில்லை என்பது தான் ..

    நிச்சயம் அரசியல் இருக்கின்றது .. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் அணு பாதுகாப்பற்றது என்பது தான் !!! ஆனால் அவற்றை முற்றிலும் தடை செய்ய முடியாத நிலையிலேயே வளரும் நாடுகள் உள்ளன .. !!!

    ம்ம்ம்ம் .. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

    ReplyDelete
  12. ***சார்வாகன் said...

    வணக்கம் வருண் சார்,

    நல்ல பதிவு!. எனக்கும் இதே கருத்துதான். அணு உலை என்பது நம் நாட்டுக்கு தேவையான அளவுக்கு ஆற்றல் உற்பத்தி செய்ய முடியாத போது,ஆபத்து அதிகம்,அயல்நாடுகளை சார்ந்து யுரேனியம் வாங்க வேண்டும் என்னும் போது வேறு வழிகளை சிந்திக்கலாம் என்பதே நம் கருத்து.

    இப்போது இந்தியாவில் இயங்கி வரும் அணு உலைகளின் செயல் திறன் ,அணு உலை கழிவு மேலாண்மை பற்றி கிடைக்கும் தகவல்கள் மிக மிக குறைவே.

    நன்றி***

    வாங்க சர்வாகன்!

    இவ்விடயத்தில் நாம் ஒத்த சிந்தனையுடன் இருப்பது ஒண்ணும் அதிசயமில்லை! :-)))

    ReplyDelete
  13. ***ஆனால் கூடன் குளத்திற்கு நிறைய பணத்தை இந்தியா - இரசியா முதலீடு செய்துவிட்டன என்பதால் மண்டையை சொறிகின்றார்கள் .. !!!***

    இ செல்வன்!

    "பணத்தை முதலீடு செய்துவிட்டோம்! இப்போ என்ன செய்றது?"னு கூப்பாடு போடுவதும் "அரசியல்" தான்!

    சரி திடீர்னு ஒரு புயல் வெள்ளம் வந்து ஆயிரக்கணக்கான கோடி நஷ்டம் (natural disaster) வந்துவிட்டால் என்ன செய்வார்கள்?

    அதேபோல் இதையும் நஷ்டக்கணக்கு எழுதலாம்தான்! என்னவோ அதுபோல் ஒண்ணும் சாத்தியமே இல்லை என்பதெல்லாம் "அரசியல்"தான்

    ReplyDelete
  14. நாட்டில் நடக்கும் மாநாடுகளுக்குத் தடைபோட்டாலே போதும். அணுமின்சக்திக்கு அவசியமே வராது.

    ReplyDelete
  15. நல்ல கட்டுரை வருண்..

    ஆனால் யாரை குற்றம் சொல்ல
    இந்த விடயத்தில்
    குணா நிதி : ஜெயா
    இருவருமே சமந்தப்படவர்களே... நமக்கு வாய்த்த அரசியல் வாதிகள் இப்படித்தான் என்று பேரு மூச்சு விடுவதை தவிர வேறு வழி இல்லை :(

    ReplyDelete
  16. ***ஜாபர் அலி said...

    நாட்டில் நடக்கும் மாநாடுகளுக்குத் தடைபோட்டாலே போதும். அணுமின்சக்திக்கு அவசியமே வராது.***

    அதானே? நல்ல ஆலோசனை சகோதரர் ஜாபர் அலி! :)

    ReplyDelete
  17. ***துஷ்யந்தன் said...

    நல்ல கட்டுரை வருண்..

    ஆனால் யாரை குற்றம் சொல்ல
    இந்த விடயத்தில்
    குணா நிதி : ஜெயா
    இருவருமே சமந்தப்படவர்களே... நமக்கு வாய்த்த அரசியல் வாதிகள் இப்படித்தான் என்று பேரு மூச்சு விடுவதை தவிர வேறு வழி இல்லை :( ***

    துஷி!

    நம்மதானே இவங்கள பெரிய தலைவர்களாக்கி வச்சிருக்கோம்?

    எல்லாமே நம்ம தப்புத்தான்!

    ReplyDelete
  18. வருணா இது!சண்டைக்கு ரெடியாங்கிறதால இது வருணேதான்:)

    Good one!

    ReplyDelete
  19. அணு உலை தேவையா இல்லையா என்று வரும் வாதத்திற்குள் செல்லாமல் நான் இரண்டு விஷயங்களை கேட்கிறேன்.

    1. அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் பள்ளி, அரசுப்பள்ளி, கல்லூரிகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்தால் அந்த அலுவலகங்கள், பள்ளி வளாகங்களில் உள்ள வராண்டா விளக்குகள், கொஞ்சம் தெருவிளக்குகளையாவது எரிய விடலாம். இதன் மூலம் எத்தனையோ யூனிட் மின்சாரம் சேகரமாகும்.

    விடை: இதை நம் அரசியல் வியாதிகள் செய்யாததற்கு காரணம்:

    13500 கோடி அணு உலை என்று சொல்கிறார்கள். உண்மையில் அதன் விலை 3500 கோடியாக இருக்கலாம். அரசியல் வியாதிகளின் பாக்கெட்டுக்கு போனது 10 ஆயிரம் கோடியாக கூட இருக்கலாம். உண்டு என்பதற்கும் நம்மிடம் ஆதாரம் இல்லை. இல்லை என்று சொல்வதற்கும் ஆதாரம் இல்லை.

    2. குஜராத்தில் வாங்கிய மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டு வர பாதை இல்லை என்று சொன்னார்கள்.

    விடை: நெய்வேலியில் இருந்து கர்னாடகா, ஆந்திராவுக்கு கரண்ட் போவதாக சொல்கிறார்கள். அதே சமயம் ஆந்திராவின் ராமகுண்டத்தில் இருந்து இங்கே கரண்ட் வருவதாக சொல்கிறார்கள்.

    குஜராத்தில் இருந்து வாங்கிய கரண்ட் தமிழகம் வர பாதை இல்லை என்றால், தமிழகம் காசு கொடுத்து குஜராத்தில் இருந்து வாங்கிய மின்சாரத்தை கர்னாடகாவுக்கு கொடுக்க சொல்லிவிட்டு நெய்வேலியில் இருந்து செல்ல வேண்டிய கர்னாடகத்திற்கான கரண்ட்டை தமிழகத்தில் வினியோகிக்க முடியாதா?

    முடியும். ஆனால் வடக்கேயும் தெற்கேயும் 600 கிலோமீட்டர் கரண்டை அலைய விட்டால்தான் வழித்தட இழப்பு என்று 33 சதவீதம் என்ன 100 சதவீதத்தையும் அரசியல் வியாதிகளும் பெரிய நிறுவனங்களும் திருடிக்கொள்ள முடியும்.

    ReplyDelete
  20. Why no mention about space planning ? There are simple solutions but yet again the government needs to implement some strict measures.

    - Twenty years back , there were only about 25 houses in our street mostly fully detached . Each house had a compound wall or fence and lots of trees. All rooms in my house had windows and because of the sunlight we used lights only in the evenings. Even during powercuts we used to sleep peacefully cos of the constant breezy winds.

    - Today there are 12 apartments which has atleast 15-20 flats in it. If you open the window , you can only see the neighbour’s wall or AC. All trees have been felled down . Vehicles parked in the street . All houses got Aircondition.

    - The government should build suburbs with proper network & transport links.

    - Houses should be spaciously built and like some European countries certain number of trees should be mandatory for the house.

    ReplyDelete
  21. ***ராஜ நடராஜன் said...

    வருணா இது!சண்டைக்கு ரெடியாங்கிறதால இது வருணேதான்:)

    Good one!***

    வாங்கோ வாங்கோ நடராசன்வால்!

    வசிஸ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம்னு என்னவோ சொல்லுவாளே?! :)))

    ReplyDelete
  22. ***சரண் said...

    அணு உலை தேவையா இல்லையா என்று வரும் வாதத்திற்குள் செல்லாமல் நான் இரண்டு விஷயங்களை கேட்கிறேன்.

    1. அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் பள்ளி, அரசுப்பள்ளி, கல்லூரிகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்தால் அந்த அலுவலகங்கள், பள்ளி வளாகங்களில் உள்ள வராண்டா விளக்குகள், கொஞ்சம் தெருவிளக்குகளையாவது எரிய விடலாம். இதன் மூலம் எத்தனையோ யூனிட் மின்சாரம் சேகரமாகும்.

    விடை: இதை நம் அரசியல் வியாதிகள் செய்யாததற்கு காரணம்:

    13500 கோடி அணு உலை என்று சொல்கிறார்கள். உண்மையில் அதன் விலை 3500 கோடியாக இருக்கலாம். அரசியல் வியாதிகளின் பாக்கெட்டுக்கு போனது 10 ஆயிரம் கோடியாக கூட இருக்கலாம். உண்டு என்பதற்கும் நம்மிடம் ஆதாரம் இல்லை. இல்லை என்று சொல்வதற்கும் ஆதாரம் இல்லை.

    2. குஜராத்தில் வாங்கிய மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டு வர பாதை இல்லை என்று சொன்னார்கள்.

    விடை: நெய்வேலியில் இருந்து கர்னாடகா, ஆந்திராவுக்கு கரண்ட் போவதாக சொல்கிறார்கள். அதே சமயம் ஆந்திராவின் ராமகுண்டத்தில் இருந்து இங்கே கரண்ட் வருவதாக சொல்கிறார்கள்.

    குஜராத்தில் இருந்து வாங்கிய கரண்ட் தமிழகம் வர பாதை இல்லை என்றால், தமிழகம் காசு கொடுத்து குஜராத்தில் இருந்து வாங்கிய மின்சாரத்தை கர்னாடகாவுக்கு கொடுக்க சொல்லிவிட்டு நெய்வேலியில் இருந்து செல்ல வேண்டிய கர்னாடகத்திற்கான கரண்ட்டை தமிழகத்தில் வினியோகிக்க முடியாதா?

    முடியும். ஆனால் வடக்கேயும் தெற்கேயும் 600 கிலோமீட்டர் கரண்டை அலைய விட்டால்தான் வழித்தட இழப்பு என்று 33 சதவீதம் என்ன 100 சதவீதத்தையும் அரசியல் வியாதிகளும் பெரிய நிறுவனங்களும் திருடிக்கொள்ள முடியும்.***

    வாங்க சரண்!

    நல்லவேளை பதில்களையும் கொடுத்துட்டேள்! ரொம்ப சந்தோஷம்ண்ணா! :)))

    ReplyDelete
  23. *** mahi said...

    Why no mention about space planning ? There are simple solutions but yet again the government needs to implement some strict measures.

    - Twenty years back , there were only about 25 houses in our street mostly fully detached . Each house had a compound wall or fence and lots of trees. All rooms in my house had windows and because of the sunlight we used lights only in the evenings. Even during powercuts we used to sleep peacefully cos of the constant breezy winds.

    - Today there are 12 apartments which has atleast 15-20 flats in it. If you open the window , you can only see the neighbour’s wall or AC. All trees have been felled down . Vehicles parked in the street . All houses got Aircondition.

    - The government should build suburbs with proper network & transport links.

    - Houses should be spaciously built and like some European countries certain number of trees should be mandatory for the house.***

    Space planning????

    Thanks for educating me, mahi! :-)

    ReplyDelete
  24. சகோ வருண்...

    எனக்கும் எது சரி, எது தவறு என்று தெரியவில்லை... வெறும் 3 % தான் அணுவின் மூலம் கிடைக்கும் என்றால்.. இவ்வளவு ரிஸ்க் எடுத்து அதை செய்ய வேண்டியது இல்லை..

    ReplyDelete
  25. ***சிராஜ் said...

    சகோ வருண்...

    எனக்கும் எது சரி, எது தவறு என்று தெரியவில்லை... வெறும் 3 % தான் அணுவின் மூலம் கிடைக்கும் என்றால்.. இவ்வளவு ரிஸ்க் எடுத்து அதை செய்ய வேண்டியது இல்லை..***

    வாங்க சகோதரர் சிராஜ்!

    நீங்க இப்படி சொன்னால், "இந்தியா முன்னேறிவிடக்கூடாதுனு நீங்க கெட்ட எண்ணத்தில்தான் இப்படி சொல்றீங்கனு" திரிச்சிருவானுக பதிவுலக இந்துத்தவா வேடதாரிகள்!

    ReplyDelete
  26. ஹா..ஹா..ஹா..

    நம்மல இந்தியாவின் எதிரி, மாற்று மதத்தினரின் எதிரின்னு சொல்றது புதுசா என்ன???

    பழகிடுச்சு....

    ReplyDelete
  27. எத்தனை நியாயத்தை கற்பித்தாலும் கூடங்குளம் அணு உலை என்பது நமக்கோ நமது பிள்ளைகளுக்கோ நாமே தோண்டிக்கொள்ற சவக்கிடங்கு.

    ReplyDelete
  28. ***சிராஜ் said...

    ஹா..ஹா..ஹா..

    நம்மல இந்தியாவின் எதிரி, மாற்று மதத்தினரின் எதிரின்னு சொல்றது புதுசா என்ன???

    பழகிடுச்சு....***

    உங்க வலியை யாருமே புரிஞ்சுக்கவில்லைனு மட்டும் தவறா நெனச்சுடாதீங்க, சகோதரர் சிராஜ்!

    ReplyDelete
  29. *** E.சாமி said...

    எத்தனை நியாயத்தை கற்பித்தாலும் கூடங்குளம் அணு உலை என்பது நமக்கோ நமது பிள்ளைகளுக்கோ நாமே தோண்டிக்கொள்ற சவக்கிடங்கு.***

    உண்மைதாங்க, சாமி! இதை மறுக்க மனசாட்சியுள்ள எவனால் முடியும்?

    ReplyDelete
  30. குஜராத்தில்இருந்து தமிழ் நாட்டுக்கு மின்சாரம் கொண்டு வர முடியவில்லை என்கிறார்கள் ஆனால் மத்திய பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு மின்சாரம் எப்படி வருகிறது.
    மத்தியில் ஒரு மலையாளி ஜூனியர் மின் துறை அமைச்சருக்கு கொண்டு வர முடியுது ஆனால் பல காபினெட் அமைச்சர்கள் உள்ள தமிழ் நாட்டுக்கு முடியவில்லை.
    கேக்குறவன் கே--------------னா இருந்தா.
    மத்திய அரசு பழைய கால இந்திரா காந்தி அரசு ஸ்டைலில் செயல்படுகிறது.
    அணுமின்சாரம் தமிழகத்துக்கு வேண்டாத ஓன்று கோடிகணக்கான பணம் நஷ்டம் என்று சொல்பவர்கள் நம் வருங்கால சந்ததிகள் அனுக்கசிவால் சந்திக்கப்போகும் அபாயங்களை எண்ணிபாருங்கள்.
    இந்த பிரச்னையை பதிவாக இட்டதற்கு மிக்க நன்றி வருண்.

    ReplyDelete
  31. "வாங்க சகோதரர் சிராஜ்!

    நீங்க இப்படி சொன்னால், "இந்தியா முன்னேறிவிடக்கூடாதுனு நீங்க கெட்ட எண்ணத்தில்தான் இப்படி சொல்றீங்கனு" திரிச்சிருவானுக பதிவுலக இந்துத்தவா வேடதாரிகள்!"

    ஏன் வருண். நீங்க சொல்ற ஆளுங்களுக்கு இந்தியாவை பட்டா போட்டு குடுத்திருக்காங்களா.
    போய் வேலையை பார்க்கச் சொல்லுங்க.
    சகோ.சிராஜ் மேலும் அதிகமான சமூக பிரச்சினைகள் பற்றிய பதிவு எழுத வேண்டிக்கொள்கிறேன்.
    எங்கள் போர்வாள் (சகோ.சிராஜ்) எப்போதும் தளர்ந்ததில்லை

    ReplyDelete
  32. உங்களின் இந்த படைப்பை இப்ப தான் பார்க்கிறேன்...மன்னிக்கவும்...ஏதோ
    எழுதினோம் என்று இருக்காமல் அதே வீரியத்தோடு காத்திருந்து பதில் அளித்து இருக்கிறீர்கள்...

    எனக்கு இந்த பொறுமை கொஞ்சம் குறைவு...முரணாக சொல்பவர்களில் பலர் பொழுது போகாமல் ஈகோவுடன் உலவுவதாகவே எனக்கு தோணும்...

    BTW...நல்லா எழுதியிருக்கீங்க...

    அம்மாமக்களின் போராட்டத்திற்கு இன்னும் ஒரு ராயல் சல்யுட்....

    இப்போதைக்கு நேரமின்மையால் நவம்பர் மாதம் எழுதலாம் என்று இருக்கிறேன்...போராட்டத்திற்காக அடிக்கடி வலையில் எட்டிப்பார்த்து செல்கிறேன்...அன்புக்கு நன்றி வருண்...

    ReplyDelete
  33. ***இப்போதைக்கு நேரமின்மையால் நவம்பர் மாதம் எழுதலாம் என்று இருக்கிறேன்...போராட்டத்திற்காக அடிக்கடி வலையில் எட்டிப்பார்த்து செல்கிறேன்...அன்புக்கு நன்றி வருண்...***

    விளக்கத்திற்கு நன்றி, ரெவெரி! :)

    ReplyDelete