Monday, September 24, 2012

பதிவுலக அடி முட்டாள்!

அறிவியலா? பொருளாதாரமா?
தொழில்நுட்பமா? சினி நுட்பமா?
மாற்று எரிபொருளா? அணு மின்சாரமா?
வரலாறா? பூலோகமா?
சாதியா? மதமா?
பெரியாரா? பகுத்தறிவா?
பிள்ளையாரா? கொழுக்கட்டையா?
எல்லாமே எனக்குத்தான் தெரியும்
எனக்கு மட்டும்தான் தெரியும்
நான் யார் தெரியுமா?

நான் கடவுள் இல்லை
நான் மேதைகளுக்கெல்லாம் மேதை
பின்னூட்டங்களில் வாய்கிழிய பேசுவேன்
இந்தப் பதிவருக்கு எதுவுமே தெரியவில்லை என்பேன்
ஆம் அது என் பேச்சுரிமை
நான் யாரு தெரியுமா?
பதிவுலக அடி முட்டாள் என்பர் என்னை!

40 comments:

  1. அண்ணே, இவ்ளோ விஷயம் தெரிஞ்சவரையா முட்டாள்ங்கறிங்க? :))

    ReplyDelete
  2. **அண்ணே, இவ்ளோ விஷயம் தெரிஞ்சவரையா முட்டாள்ங்கறிங்க? :))**

    எனக்குத்தான் அறிவியல் தெரியும்! எனக்குத்தான் பொருளாதாரமும் தெரியும்!
    எனக்குத்தான் பெரியாரிசமும் தெரியும்!
    எனக்குத்தான் சினிநுட்பமும் தெரியும்!

    எனக்குத்தான் உன்னைனைவிட எல்லாமே தெரியும் தெளிவாகத் தெரியும் என்று நான் பதிவுலகில் பலதளங்களில் சென்று பிதற்றினால், நான் அடிமுட்டாள்தாங்க! :(

    ReplyDelete
  3. உண்மை தான் சகோ. எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்துவிடாது ... !!! தெரிந்தவைகள் கூட முழுமையாக இராது .. !!!

    எனக்கு அறிவியலில் உயிரியல் சார்ந்தவை மட்டுமே தெரியும், வரலாறு, மானுடவியல், நாத்திகம், மதங்கள் இவைகளில் மட்டும் தான் கொஞ்சம் தெரியும் ...

    சினிமா, பொருளாதாரம் இன்ன பிற போன்றவைகளில் நான் பூஜ்ஜியமே ..என்னைப் போல் தான் மற்றவரும் என நினைக்கின்றேன் .. ஒரு சில விடயங்கள் அதிகம் தெரிந்திருக்கலாம், மற்றவை குறைந்து தெரிந்திருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம், .

    ReplyDelete
  4. Blogger இக்பால் செல்வன் said.../////

    காமெடி பீசு இவரூருருருருரு.
    அட போங்க செல்வன்.

    ReplyDelete
  5. //எனக்குத்தான் அறிவியல் தெரியும்! எனக்குத்தான் பொருளாதாரமும் தெரியும்!
    எனக்குத்தான் பெரியாரிசமும் தெரியும்!
    எனக்குத்தான் சினிநுட்பமும் தெரியும்!

    எனக்குத்தான் உன்னைனைவிட எல்லாமே தெரியும் தெளிவாகத் தெரியும் என்று நான் பதிவுலகில் பலதளங்களில் சென்று பிதற்றினால், நான் அடிமுட்டாள்தாங்க! :(//

    வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  6. Blogger சுவனப் பிரியன் said...

    வழி மொழிகிறேன்.//////////

    அட என்ன சாமிகளே?வருண் அவரை பத்தி போட்டிருக்கார்.நீங்க என்னமோ ஏதோன்னு நினைச்சிக்கிட்டீங்க.
    ஏமாந்துடீன்களே சாமிகள்ள்ள்ள்ள்ள்

    ReplyDelete
  7. முட்டாள் பையன்:

    நான் அப்படி நடந்து கொண்டிருந்தால் என்னைத்தான் நான் முட்டாள்னு சொல்றேன்.

    இதில் உனக்கு என்ன பிரச்சினை??

    என்னை நான் முட்டாள்னு சொல்ல உன்னிடம் அனுமதி பெறனுமா??

    ReplyDelete
  8. Blogger வருண் said...

    முட்டாள் பையன்:

    நான் அப்படி நடந்து கொண்டிருந்தால் என்னைத்தான் நான் முட்டாள்னு சொல்றேன்.

    இதில் உனக்கு என்ன பிரச்சினை??

    என்னை நான் முட்டாள்னு சொல்ல உன்னிடம் அனுமதி பெறனுமா??///////////

    வேண்டாம் நெத்தியில பச்சை குத்திக்கொயேன்.அது போதும் எங்களுக்கு.

    ReplyDelete
  9. பிரம்மஹத்தி..!தீர்த்தம் சாப்டியோ என்ன..? நீ முட்டாளேதான் அம்பி!உண்மைய ஷொன்னதுக்கு நன்னி!

    ReplyDelete
  10. @சுவனப் பிரியன் said...
    ஒரு உறைக்குள் இரண்டு முட்டாள்கள்!

    ReplyDelete
  11. ***தமிழ்சேட்டுபையன் said...

    பிரம்மஹத்தி..!தீர்த்தம் சாப்டியோ என்ன..? நீ முட்டாளேதான் அம்பி!உண்மைய ஷொன்னதுக்கு நன்னி!

    தமிழ்சேட்டுபையன் said...

    @சுவனப் பிரியன் said...
    ஒரு உறைக்குள் இரண்டு முட்டாள்கள்!***

    வாங்கோ தமிழ் சேத்துப் பையன்!

    என்ன இவ்வளவு தூரம்?

    தங்கள் கருத்துக்கு நன்றிண்ணா!

    ReplyDelete
  12. நீங்கள் சொல்லும் அந்த நபர் பல ப்ளாக் வைத்திருக்கிறார் மேலும் பல பெயர்களில் பின்னூட்டம் இடுவார் என நினைக்கிறேன் அவரின் எழுத்துநடை யை வைத்து இதை யூகிக்கிறேன் தொழில் நுட்ப ரீதியில் நிறுவ சான்று இல்லை ரொம்ப காலமா இணையத்தில் இருப்பார் அதனால் அவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது எனது கணிப்பு
    ஆனால் அவர் முட்டாள் இல்லை கொஞ்சம் திமிர் அவ்வளவுதான்.

    ReplyDelete
  13. Blogger Rabbani said...

    நீங்கள் சொல்லும் அந்த நபர் பல ப்ளாக் வைத்திருக்கிறார் மேலும் பல பெயர்களில் பின்னூட்டம் இடுவார் என நினைக்கிறேன் அவரின் எழுத்துநடை யை வைத்து இதை யூகிக்கிறேன் தொழில் நுட்ப ரீதியில் நிறுவ சான்று இல்லை ரொம்ப காலமா இணையத்தில் இருப்பார் அதனால் அவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது எனது கணிப்பு
    ஆனால் அவர் முட்டாள் இல்லை கொஞ்சம் திமிர் அவ்வளவுதான்.///////


    அறிய கண்டுபிடிப்புக்கு இந்தாங்க ஆஸ்கார் அவார்ட்.
    அப்புறம் ரப்பை, வருண் மாமாவை பத்தி ஒண்ணுமே சொல்லலை.

    ReplyDelete
  14. ***இக்பால் செல்வன் said...

    உண்மை தான் சகோ. எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்துவிடாது ... !!! தெரிந்தவைகள் கூட முழுமையாக இராது .. !!!

    எனக்கு அறிவியலில் உயிரியல் சார்ந்தவை மட்டுமே தெரியும், வரலாறு, மானுடவியல், நாத்திகம், மதங்கள் இவைகளில் மட்டும் தான் கொஞ்சம் தெரியும் ...

    சினிமா, பொருளாதாரம் இன்ன பிற போன்றவைகளில் நான் பூஜ்ஜியமே ..என்னைப் போல் தான் மற்றவரும் என நினைக்கின்றேன் .. ஒரு சில விடயங்கள் அதிகம் தெரிந்திருக்கலாம், மற்றவை குறைந்து தெரிந்திருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம், . **

    இதுபோல் ஒரு அகந்தை, நெனைப்பு என்னிடம் இருந்தாலும் (ஒரு சிலர் சொல்றாங்க.. நெனைக்கிறாங்க) நான் அடி முட்டாள் தான், இ செ!

    ReplyDelete
  15. @வருண்
    அம்பி ஷிரமப்பட்டு டைப் அடிச்சு உன் ஃப்ளாக்ல கொமணட்ஸ் போட்டா டெலிட் பண்ணிடுவேள்! தேவையா நேக்கு!

    ReplyDelete
  16. ***சுவனப் பிரியன் said...

    //எனக்குத்தான் அறிவியல் தெரியும்! எனக்குத்தான் பொருளாதாரமும் தெரியும்!
    எனக்குத்தான் பெரியாரிசமும் தெரியும்!
    எனக்குத்தான் சினிநுட்பமும் தெரியும்!

    எனக்குத்தான் உன்னைனைவிட எல்லாமே தெரியும் தெளிவாகத் தெரியும் என்று நான் பதிவுலகில் பலதளங்களில் சென்று பிதற்றினால், நான் அடிமுட்டாள்தாங்க! :(//

    வழி மொழிகிறேன்.***

    திரும்பத் திரும்ப சொல்றேன், நான் அப்ப்டி நடந்துகொண்டாலும் நான் அடி முட்டாள்தான் என்பதில் மாற்ருக்கருத்து இல்லை! ஊருக்கொரு நியாயம், எனக்கு இண்ணொண்ணுனு நான் ஒரு போதும் நம்பியதில்லை!

    ReplyDelete
  17. ***Rabbani said...

    நீங்கள் சொல்லும் அந்த நபர் பல ப்ளாக் வைத்திருக்கிறார் மேலும் பல பெயர்களில் பின்னூட்டம் இடுவார் என நினைக்கிறேன் அவரின் எழுத்துநடை யை வைத்து இதை யூகிக்கிறேன் தொழில் நுட்ப ரீதியில் நிறுவ சான்று இல்லை ரொம்ப காலமா இணையத்தில் இருப்பார் அதனால் அவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது எனது கணிப்பு
    ஆனால் அவர் முட்டாள் இல்லை கொஞ்சம் திமிர் அவ்வளவுதான்.**

    நீங்க யாரையோ அந்த நபரா நெனச்சுப் பார்க்குறீங்க போல! இதுபோல் நபர் வாச்ந்து செத்தும் இருக்கலாம், இனிமேல் பொறந்து வர்ரவனாகவும் இருக்கலாம். உலகத்தில் இது போல் ஒரே ஒருவர்தான் இருக்காருனு நீங்க நெனைத்தால் அது தவறு!

    ReplyDelete
  18. @Rabbani said...

    நீங்கள் சொல்லும் அந்த நபர் பல ப்ளாக் வைத்திருக்கிறார் மேலும் பல பெயர்களில் பின்னூட்டம் இடுவார் என நினைக்கிறேன் அவரின் எழுத்துநடை யை வைத்து இதை யூகிக்கிறேன் தொழில் நுட்ப ரீதியில் நிறுவ சான்று இல்லை ரொம்ப காலமா இணையத்தில் இருப்பார் அதனால் அவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது எனது கணிப்பு
    ஆனால் அவர் முட்டாள் இல்லை கொஞ்சம் திமிர் அவ்வளவுதான்.
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    சரிதான் ரப்பானி அவர் முட்டாள் அல்ல கொஞ்சம் அல்ல நிறைய திமிர்.அது அறிவால் கூட இருக்கலாம்! சில இடங்களில் சறுக்கலாம்! வருண் மாதிரி சறுக்கி்க் கொண்டே இருக்கவும் முடியாதுதான்!

    ReplyDelete
  19. @ சேட்டு நான் வேலைக்கு போறேன்.
    நம்ம வருன் மாமாவ பத்திரமா பாத்துக்க.நமக்கும் அப்பஅப்ப ஆள் வேணும்ல.

    ReplyDelete
  20. முட்டாள் பையன் மற்றும் தமிழ் சேட்டுப்பையன்:

    கருத்து சொல்லியாச்சு இல்லை? மறுபடியும் மறுபடியும் ஒளறிக்கிட்டே இருக்கப்படாது?

    அப்புறம் எல்லாமே காணோமாப் போயிடும்! போயிட்டு வாங்க! பை!

    ReplyDelete
  21. @ வருண்
    அம்புட்டுதானா உன் டக்கு.
    SO SAD.
    :-(((((((((

    ReplyDelete
  22. @தமிழ்சேட்டுபையன் பதிவர் வருண் பதிவுலகை நேசிப்பவர். பல பதிவர்களின் பதிவை கூர்ந்து படிப்தாக அவதானிக்கிறேன். குறிப்பாக அவர் படிக்கும் பதிவின் கருவை உணர்ந்து கொள்ளக்கூடியவர் என எனக்கு படுகிறது.

    ReplyDelete
  23. Blogger Rabbani said...

    @தமிழ்சேட்டுபையன் பதிவர் வருண் பதிவுலகை நேசிப்பவர். பல பதிவர்களின் பதிவை கூர்ந்து படிப்தாக அவதானிக்கிறேன். குறிப்பாக அவர் படிக்கும் பதிவின் கருவை உணர்ந்து கொள்ளக்கூடியவர் என எனக்கு படுகிறது. /////////////////////////////////////////////////////////////

    எங்க இருந்துதான் இப்படி கூட்டம்கூட்டமா வரீன்களோ?
    எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போல.

    உங்களுக்கு விருது தர இனிமேல்தான் பேர் கண்டுபிடிக்கனும்.

    ReplyDelete
  24. முட்டா பையனாக கருத்திடும் நண்பரே எங்களின் வருகை உங்களுக்கு ஏன் இவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்துகிறது ???? நான் மனம் திறந்து கேட்க்கிறேன் இஸ்லாமிய பதிவர்கள் எழுதிய பதிவுகளின் மூலம் பதிவுலகில் யாராவது மதம் மாறி இருக்கிறார்காளா??? அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் எழுதுகிறார்கள் என நீங்க உங்க வேலையை தொடரலாமே

    ReplyDelete
  25. அச்சச்சோ அம்பி என்ன ஆச்சு நோக்கு அசடாட்டம் உளர்றே,போய் உச்சி பிள்ளையார்க்கு தேங்கா உடைச்சிட்டு, ரங்க பவன்லே ஒரு காப்பி சாப்டுட்டு வா. எல்லாம் சரியாயிடும். சமத்து போ பாஷா மாமா சொன்னா கேட்கணும்.

    ReplyDelete
  26. பதிவை படிச்சுட்டு பின்னூட்டம் தயார் பண்ணிட்டு வந்து பார்த்தா வேற பாதையில இருக்கும் போல இருக்கு.

    ReplyDelete
  27. இளா:

    நான் பார்த்து, அனுபவிச்சு, உண்மையைத்தான் கவிதையா எழுதி "ஒளறி" இருக்கேன். என்னுடைய உண்மையான் உணர்வுகளின் வெளிப்பாடு இது.

    என்னையே நான் இதில் சொல்லியிருக்க "அடி முட்டாள் தான்"னு பதிவுலகில் விவாதத்தில் பலர் சொல்லியிருக்காங்க! நான் எப்படி நடக்கிறேன்? எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று என் மனசாட்சி எனக்கு சொல்வதாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.

    இல்லை நீ என்னைத்தான் சொல்ற? நான் இதேபோல்தான் நடந்துக்கிறேன் என்று ஒருவர் என்னை குற்றம் சாட்டினால் அவர் அவரை சரி செய்து கொள்ளலாம். இல்லைனா என்னவோ ஒளறுகிறான் இந்த வருண் மூதேவினு போயிக்கிட்டே இருக்கலாம்!

    ReplyDelete
  28. @azeem basha ,
    என்ன பாஷா மாமா சம்மந்த்தமில்லாத இடத்தில் நிற்கிறீங்க, தொழுகைக்கு நேரமாச்சு துளு செய்யணும் வேகமாக போங்கோ.

    ReplyDelete
  29. @ XYZ,
    வருண் ஒரு எண்ணத்தில் இந்த பதிவை போட இதை தவறாக புரிந்து கொண்ட சிலர் தம் பதிவுலக எதிரியை தாக்கித்தான் வருண் இந்த பதிவை போட்டிருப்பதாக நினைத்து வக்காலத்து வாங்க ஒரே களீபரம் தான்.
    (பிரபல மத பிரச்சாரகர் சுவன பிரியன் ஐயா, ரபானி தாத்தா, பாஷா மாமா கவனிக்க நீங்கள் நினைப்பது போல் உங்களுக்கு தினமும் பேதி மாத்திரை கொடுக்கும் அந்த பதிவரை தாக்கி எழுதவில்லை. வடை போச்சே

    ReplyDelete
  30. ஆம்....சொல்வது சரிதான்....எல்லாம் தெரிந்ததாக பிதற்றினால் அதேதான்....

    ReplyDelete
  31. உங்களுக்கு ஏதோ பிரச்சனை என்று நல்லாகவே தெரிகிறது....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  32. ஆரம்பத்தில சில பல கட்டுரைகள படிச்சப்பவே எனக்கு புரிஞ்சுது ..இப்ப நீங்களே ஒத்துக்கிட்டீங்க..

    ReplyDelete

  33. ***Blogger -/பெயரிலி. said...

    suvaiyAna pathivum pinnUttangkaLum***

    வாங்க பெயரிலி! நன்றிங்க!:)

    ReplyDelete
  34. ***Ethicalist E said...

    @azeem basha ,
    என்ன பாஷா மாமா சம்மந்த்தமில்லாத இடத்தில் நிற்கிறீங்க, தொழுகைக்கு நேரமாச்சு துளு செய்யணும் வேகமாக போங்கோ.

    24 September 2012 6:46 PM
    Delete
    Blogger Ethicalist E said...

    @ XYZ,
    வருண் ஒரு எண்ணத்தில் இந்த பதிவை போட இதை தவறாக புரிந்து கொண்ட சிலர் தம் பதிவுலக எதிரியை தாக்கித்தான் வருண் இந்த பதிவை போட்டிருப்பதாக நினைத்து வக்காலத்து வாங்க ஒரே களீபரம் தான்.
    (பிரபல மத பிரச்சாரகர் சுவன பிரியன் ஐயா, ரபானி தாத்தா, பாஷா மாமா கவனிக்க நீங்கள் நினைப்பது போல் உங்களுக்கு தினமும் பேதி மாத்திரை கொடுக்கும் அந்த பதிவரை தாக்கி எழுதவில்லை. வடை போச்சே

    24 September 2012 6:52 PM***

    வாங்க எத்திகாலிஸ்ட்!

    கவிதைனா அப்படித்தாங்க, 1000 விதமாகப் புரிந்துகொள்ளலாம். :)

    உங்க வருகைக்கு நன்றிங்க :)

    ReplyDelete
  35. ***NKS.ஹாஜா மைதீன் said...

    ஆம்....சொல்வது சரிதான்....எல்லாம் தெரிந்ததாக பிதற்றினால் அதேதான்....***

    ஆமங்க, ஹாஜா மைதீன், எல்லாவற்றிலுமே ஒருத்தன் தன்னை "அத்தாரிட்டி"னு நெனச்சா மரை கழண்ட கேஸுதான்!

    ReplyDelete
  36. ***தமிழ் காமெடி உலகம் said...

    உங்களுக்கு ஏதோ பிரச்சனை என்று நல்லாகவே தெரிகிறது....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)***

    வாங்க காமெடி உலகம்! ஆமா, யாருக்கு பிரச்சினையே இல்லை? :)))

    ReplyDelete
  37. **** Sunantha said...

    ஆரம்பத்தில சில பல கட்டுரைகள படிச்சப்பவே எனக்கு புரிஞ்சுது ..இப்ப நீங்களே ஒத்துக்கிட்டீங்க..***

    உங்களுக்கே புரிஞ்சிருச்சா???

    என்னோட சேர்ந்து நீங்களும் ஒத்துக்கிட்டா சரிதான்!

    நீங்க நல்லாயிருக்கனும்ங்க, சுனந்தா! :)

    ReplyDelete
  38. கொலுவுல வக்கிற கட்டை அல்ல அது. கொழுகொழுன்னு, அதாவது குண்டு குண்டா இருக்குற கட்டை.

    ReplyDelete
  39. ***பழமைபேசி said...

    கொலுவுல வக்கிற கட்டை அல்ல அது. கொழுகொழுன்னு, அதாவது குண்டு குண்டா இருக்குற கட்டை.

    25 September 2012 6:52 AM***

    நன்றி தமிழறிஞரே! நான் மேலே உள்ள பதிவிலும் சரி செய்துவிட்டேன். சத்தியமா உங்களுக்குத்தான் "க்ரிடிட்"! :)

    ReplyDelete