Sunday, September 9, 2012

நண்பர்களை அழைக்க முடியவில்லை!

அவர்கள் மேல் கோபமில்லை
எள்ளளவு வருத்தமும் இல்லை
அவர்களை பழிவாங்கவும் இல்லை
கடவுளை சந்திக்கப் போகும் அவசரத்தில்
ஆருயிர் நண்பர்களை அழைக்க முடியவில்லை
எனது இறுதி சடங்கிற்கு!

25 comments:

  1. ஏங்க இப்படி?

    ReplyDelete
  2. அதனால் பரவாயில்லை
    நாங்களும் அங்குதானே வரப்போகிறோம்
    சந்தித்துக் கொள்ளலாம்
    சுவாரஸ்யமான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எள்ளளவு என்று வந்திருக்க வேண்டும் ! ஒரு 'ள' வை விட்டுவிட்டீர்கள் சரி செய்துக் கொள்ளுங்கள் .. !

    கடைசியில் நீங்களும் கடவுளை சந்திக்க முடிவு செய்துவிட்டீர்கள் போல ! அவரை சந்தித்ததும் எனக்கு ஒரு மின்னஞ்சல் மட்டும் அனுப்பி வையுங்கள் !!!

    :)

    ReplyDelete
  4. வித்தியாசமான சிந்தனை....நீங்க கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் நாங்கள் உங்களை தொடர்வோம்..

    ReplyDelete
  5. நண்பர்களாகிய நாங்களும் எங்களின் இறுதி சடங்கிற்கு எவரையும் அழைக்க முடியாதே!

    அருமையான கவிதை!

    ReplyDelete
  6. என்ன வருண் மிரட்டுரிங்க, இது கவிதைதானே,இல்ல கொஞ்ச நாளா ரொம்ப டென்ஷனா வேற இருந்தின்களா அதுதான் சந்தேகம்.
    கவிதை அற்புதம்.

    ReplyDelete
  7. *** தணல் said...

    Bye Bye! :-)**

    For now only!

    See you soon thaNal! LOL

    ReplyDelete
  8. ***yadhumure yavarumkelir said...

    ஏங்க இப்படி?

    9 September 2012 6:17 PM***

    நம்ம மணியண்ணா/பழமை பேசி.. நாயி, டீச்சர், அது இதுனு மூச்சுவிட்டா கவிதையா எழுதி என்னை தூண்டிவிட்டுட்டாரு..

    நான் எழுதினால் ஒரே "இழவா"த்தான் வந்து நிக்கிது! :)))

    எதையாவது எழுதி "கவிதை"னு சொல்லிட்டா கவிதையாயிடுமாம்! என்ன இது ஒரு எழவுக்கவிதை!! :)))

    ReplyDelete
  9. *** பழனி.கந்தசாமி said...

    இது தப்புங்க.

    9 September 2012 6:34 PM***

    ஆமாங்க,

    மனிதர்கள் தப்பு செய்றதும் சகஜம்தாங்க. நன்றி, ஐயா- தப்பை தப்புனு தப்பாமல் சுட்டிக் காட்டியதற்கு! :)))

    ReplyDelete
  10. *** Ramani said...

    அதனால் பரவாயில்லை
    நாங்களும் அங்குதானே வரப்போகிறோம்
    சந்தித்துக் கொள்ளலாம்
    சுவாரஸ்யமான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    9 September 2012 6:38 PM***

    உங்க பெருந்தன்மையைப் பார்த்துப் பார்த்து வியந்துகொண்டே இருக்கிறேன், ரமணி ஐயா! :-)

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. ***இக்பால் செல்வன் said...

    எள்ளளவு என்று வந்திருக்க வேண்டும் ! ஒரு 'ள' வை விட்டுவிட்டீர்கள் சரி செய்துக் கொள்ளுங்கள் .. !***

    நன்றி நக்கீரரே!! நின் தமிழோடு விளையாடவே யாம் கவிதை இயற்றினோம். உளறியிருப்பது வருண் என்றறிந்தும், "குற்றம் குற்றமே" என சுட்டிக்காட்டியதற்கு நன்றி. வாழ்க நின் தமிழ்த் தொண்டு!

    *** கடைசியில் நீங்களும் கடவுளை சந்திக்க முடிவு செய்துவிட்டீர்கள் போல ! அவரை சந்தித்ததும் எனக்கு ஒரு மின்னஞ்சல் மட்டும் அனுப்பி வையுங்கள் !!!

    :)

    9 September 2012 7:03 PM***

    செத்ததுக்கப்புறம் சொல்லியனுப்புங்க, கட்டாயம் மின் அஞ்சலென்ன, பொன் அஞ்சலே அனுப்புறேன். இங்கே சொர்க்கத்தில் எல்லாமே ஃப்ரீதான்:)

    ReplyDelete
  13. ***Avargal Unmaigal said...

    வித்தியாசமான சிந்தனை....நீங்க கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் நாங்கள் உங்களை தொடர்வோம்..***

    வாங்க மதுரைக்கார அண்ணாச்சி!! :-)

    ReplyDelete
  14. ***கவிதை வீதி... // சௌந்தர் // said...

    ம்...

    ஏங்க இப்படி..***

    அழைக்காமல் போக வேண்டிய விசேடமும் இருக்குனு யாரோ பெரியவா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அதையே கவிதை வடிவாக்க முயலும்போது, இப்படி வந்து நிக்கிதுங்க!

    முன்னப்பின்ன கவிதை எழுதியிருக்கனும், இல்லைனா செத்தாவது இருக்கனும், ரெண்டு அனுபவமும் இல்லாததால வந்த "விளைவு" இதுங்க! :)

    ReplyDelete
  15. ***சுவனப் பிரியன் said...

    நண்பர்களாகிய நாங்களும் எங்களின் இறுதி சடங்கிற்கு எவரையும் அழைக்க முடியாதே!

    அருமையான கவிதை!888

    வாங்க சகோதரரர் சுவனப் பிரியன்! இதையும் பாராட்டுவது உங்க பெருந்தன்மை! :)

    ReplyDelete
  16. *** azeem basha said...

    என்ன வருண் மிரட்டுரிங்க, இது கவிதைதானே,இல்ல கொஞ்ச நாளா ரொம்ப டென்ஷனா வேற இருந்தின்களா அதுதான் சந்தேகம்.
    கவிதை அற்புதம்.***

    நீங்க வேற டென்ஷன்லாம் ஒண்ணும் இல்லைங்க. ஒரு சில நேரம் வலையுலகில் அப்படி இப்படி நடந்துக்கலைனா கஷ்டம்ங்க.

    எல்லாரும் கவிதை எழுதுறாளேனு நான் எழுத ஆரம்பிச்சா இப்படி "எழவா"தான் வந்து நிக்கிது!:)))

    நீங்க என் கவிதை படித்து ரசிக்கக் கொடுத்து வச்சது அம்புட்டுத்தான். :)))

    ReplyDelete
  17. கவிதை எல்லாம் எழுதியே ஆவனும்னு அடம்பிடிக்கிற அளவுக்கு என்ன நடந்துருச்சு?

    ReplyDelete
  18. ***சே. குமார் said...

    அது சரி.***

    :-)))

    ReplyDelete
  19. *** ILA(@)இளா said...

    கவிதை எல்லாம் எழுதியே ஆவனும்னு அடம்பிடிக்கிற அளவுக்கு என்ன நடந்துருச்சு?***

    அதானே? :)))

    ReplyDelete
  20. இதயப் படிக்கும் போதே எனக்குத் தூக்கி வாரிபோட்டது. ஐயா...........ராசா........ சும்மா நெஞ்சுல கிலி பிடிக்க வைக்காதேப்பா........... உனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல........... நீயாவே வலியப் போயி என்னை மட்டன் குருமா வைங்கன்னு ஒரு எடத்துல சொன்னீங்க........ அப்புறம் இன்னொருத்தன் பின்னூட்டம் சண்டை பத்தி வேற சொன்னீங்க....... எல்லாத்தையும் விட்டுட்டு புதுசா தமாஷா எழுது ராசா............

    ReplyDelete
  21. ஜெயவேல்: நம்ம உடல் நலனுடன் இருக்கும்போதான் இறப்பைப் பத்தி தைரியமாகப் பேசமுடியும், எழுதமுடியும், கவிக்கமுடியும்.

    உடல் நலம் குன்றும்போது சாவைப் பத்தி பேசப் பிடிக்காது.

    நல்லாயிருக்கும்போதே இதையெல்லாம் எழுதிக்க வேண்டியதுதான்.

    ReplyDelete