Wednesday, October 3, 2012

மத உணர்வு தப்பு! இன உணர்வு சரியா? ஏன்?

ஒருவர் அவருடைய  ஊர், நாடு, கண்டம் எதாயிருந்தாலும் பரவாயில்லைனு விட்டுவிட்டு அவர் தன் மதத்தை சேர்ந்தவர் என்பதால், தன் ஊருக்கு எதிராக, தன் நாட்டுக்கு எதிராக அவர் செய்த "தவறு"களை  நியாயப் படுத்த முயற்சித்தல், அவருக்கிழைத்த "அநீதி"யை எடுத்து விமர்சித்தல், அவருக்காக வரிந்துகொண்டு வருதல், என்கிற மத அடிப்படையான செயலை தவறு என்பதுபோல்தான் நாம் வாதிடுகிறோம். ஆமாம், யாரு இந்த நாம்? பொதுநோக்குப் புத்தியுள்ள, நம்மைப்போல நல்லவர்கள்! :-)

* மத உணர்வு என்பது நல்லதல்ல என்கிறோம்!

* மதத்தால் ஒன்றுபடுவது தவறென்கிறோம்!

* ஒருவனே தேவன் என்றால் எல்லாமதத்தவரும் இறைவன் குழந்தைகள்தானே? என்கிறோம்

* "ஐயா வருண்! நான் அப்படியெல்லாம் சொல்வதில்லை" என்றால் நீங்கள் இங்கே விமர்சிக்கப்படவில்லை! தயவு செய்து இதை கண்டுக்காதீங்க!

இறைவன் ஒருவனே என்றால், எல்லோரும் அந்த இறைவனை வணங்கவே, திருப்திப்படுத்தவே பல மதங்களும் உருவாக்கப்பட்டது என்கிற போதும் தன் மதம்தான் உயர்ந்தது என்று சொல்வதுகூட இறைவனுக்குக்கூட  நகைப்பை உண்டாக்கலாம்.

நாம் இப்படி சொல்வதை

* "மத உணர்வு கொண்டர்வர்கள்",

* "தன் மதம்தான், வழிதான் சரியானது என்று மதத்தால் ஒன்று சேர்பவர்கள்",

"இந்த மதவுணர்வு தவறானது என்கிற  நம்முடைய  நிலைப்பாட்டை" ஏற்றுக்கொள்ளத் தயங்குறாங்க.  மத உணர்வில் தவறென்ன? என்கிறார்கள். இருந்தாலும் இவர்கள், தம்முடைய இந்த நிலைப்பாடை "சரி" என்று வெளிப்படையாக வாதிடுவதில்லை!

ஏன் மத உணர்வு நல்லதல்ல என்பதற்கு சில காரணங்கள் நாம் சொல்லலாம்.

* சூழ்நிலை 1) நீங்க வக்காலத்து வாங்கும் அவர் அயல் நாட்டவராக இருக்கும்போது, அந்த நாடு நம் நாட்டுக்கு எதிரியாக இருக்கும்போது, உங்க மத உணர்வு,  உங்களை "தேச துரோகி" யாக்குதுபோல் ஒரு சூழ்நிலை உருவாகும் ஒரு அபாயம் இருக்கு!

* சூழ்நிலை 2) மதச்சார்பற்ற நாட்டில் வாழும் நீங்க நாட்டுப்பற்று உள்ளவராக இருக்கனும்னு எதிர்பார்க்கப்படுது. மத அடிப்படையில் நீங்கள் போகும்போது உங்கள் நாட்டுப்பற்று கேள்விக்குறியாகிற ஒரு அபாயமும் இருக்கு.

இப்படியெல்லாம் பிரச்சினைகள் இருக்குனு சொல்லி நாம் விவாதிக்கலாம். ஆனால்.. என்ன ஆனால்.. இதை எப்படி "நியாயப் படுத்தலாம்" னு பிறகு பார்ப்போம்.

அதாவது மதப்பற்று உள்ளவங்க,

* சூழ்நிலை 3) சூழ்நிலை 4) என்று பலவகைகளை காட்டி இதுபோல் சூழ்நிலைகளில் என்னுடைய மதவுணர்வு தப்பில்லை என்று வாதிடுவார்கள்

************************************

இன உணர்வு பத்தி பேசுவோம்..  

இங்கே நாம் அனைவரும் தமிழர்கள்! ஒரே இனம்!

சரி, நாம், " தமிழா! இன உணர்வு கொள்!" னு சொல்றோம். நாம் திராவிடர்கள் எல்லாம் ஒண்ணு சேரனும் என்கிறோம்!

 சில நேரங்களில் பார்ப்பனர்களை ஆரியர்கள் என்று சொல்லிப் நம்மைவிட்டுப் பிரிக்கிறோம்!

காரணம்?

* வீடு வாடகைக்கு விடப்படும்! பார்ப்பனர்களுக்கு மட்டும்! (இதுபோல் விளம்பரம்)

* மாமிசம் சாப்பிடுறவா ஆத்துக்கெல்லாம் எப்படி போகுறது? அவா ஆத்துல கவிச்சு வாடை இல்ல அடிக்கும்ண்ணா! (இதுபோல் எண்ணங்களுடன் திரியிறவங்க)

இவர்கள்தான் இதற்கு காரணம்!

சரி இனவுணர்வு பத்தி தொடருவோம்..

இனவுணர்வு  மட்டும் சரியா? ஏன் சரி??

* அ) ஒரு பிரச்சினை....அதில்  நம் மொழிபேசுபவர் தவறாக நடக்கிறார். மாற்று மொழி பேசுபவர் ஒரு அப்பாவி. நியாயம் நம் இனத்தவர்,  தமிழரிடம் இல்லை. பிறமொழி பேசுறவர் சொல்வதில், செய்வதில்தான் நியாயம் இருக்கு.  இந்த சூழலில் இன உணர்வு கொள்ளனுமா? இல்லைனா நியாயமாக நல்லவரான பிறமொழி பேசுறவர்  பக்கம் சேரனுமா?

* ஆ) ஒரு பார்ப்பனர் வீட்டு அப்பாவி பெண்ணிடம் ஒரு திராவிடர் தவறா நடந்துகொள்கிறார். அந்தப்பொண்ணு பாவம், எந்தத் தப்பும் செய்யவில்லை!
இந்த சூழலில் தமிழா நீ "இன உணர்வு" கொள்வியா? பாவம் தவறு செய்யாத ஒருவருக்கு கை கொடுப்பியா?

நம்ம  பொதுக்கட்டுரை எழுதுறோம். பலரையும் பலவாறு விமர்சிக்கிறோம். தமிழர் என்கிறோம். திராவிடர் என்கிறோம். இந்தியர் என்கிறோம். இன உணர்வு கொள் என்கிறோம். நாட்டுப்பற்று வேண்டும் என்கிறோம். ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதனாக ஒரு சூழ்நிலையில் எப்படி நடக்கிறோம்? என்பது வேறு விசயம்.

அதாவது தனிப்பட்ட ஒரு மனுஷனாக

* மேலே உள்ள சூழ்நிலை அ) ல நான் அந்த மாற்று மொழி பேசுபவனுக்குத்த்தான் ஆதரவு கொடுப்பேன்! நீங்க எப்படி வேணா இருந்துட்டுப் போங்க!

* மேலே உள்ள சூழ்நிலை ஆ) ல நான் அந்த அப்பாவிப் பெண்ணுக்குத்தான் ஆதரவு கொடுப்பேன்.

அப்படி நான் செய்வதால் இப்போ நான் தமிழ் இன உணர்வு மொழியுணர்வு இல்லாதவனாகவும். திராவிட உணர்வு இல்லாதவனாகவும் ஆகிறேன். ஆமாம் நான் இனி துரோகிதான்.

முடிவுரை:

இங்கேதான் நீங்க இன உணர்வுனு நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை  புரிந்து கொள்ளனும். 

* நாம் நியாயமான பிரச்சினைக்குத்தான் நம் இன உணர்வை, மொழி உணர்வை காட்டனும். 

* தமிழனுக்கு அநியாயம் நடக்கும்போதுதான் நாம் தமிழா இன உணர்வு கொள் என்கிறோம்! 

* தீண்டாமை, உயர்சாதி என்று வரும்போதுதான் திராவிடன் என்று நம்மை ஒன்று சேர்க்கிறோம். 

* தமிழ் மொழியை இகழும்போதுதான் நாம் இனவுணர்வு கொள்ளனும்!


அதேபோல், மதவுணர்வு கொள்பவர்களும் இதேபோல் நாங்க எம்மதத்தில் அப்பாவிகள் பாதிக்கப் படும்போதுதான் எம்மதத்தவருக்கு குரல் கொடுக்கிறோம். இதில் தவெறன்ன? என்று கேட்டால், அவர்களுக்கு நம் பதிலென்ன?

நீங்களே சொல்லுங்கள்! :)

நன்றி,  வணக்கம்!

34 comments:

  1. சகோ வருண்!

    மற்றுமொரு சிறந்த பதிவு உங்களிடமிருந்து.

    'எனது இனத்தை நேசிப்பது இன வெறியாகுமா?' என்று முகமது நபியிடம் ஒரு தோழர் கேட்க 'அது இன வெறி ஆகாது. உன் இனத்தவன் ஒரு தவறு செய்யும் போது அதை ஆதரிக்கிறாயே அதுதான் இனவெறி' என்று பதிலுரைத்தார். இந்த அறிவுரையை நாம் செயல்படுத்தினால் பல பூசல்கள் குறையும்.

    ReplyDelete
  2. வெட்டியா இருக்கிற ஆளுகளுகெல்லாம் ஒரு குழு தேவைப்படுது அதில் எந்த குழு நல்ல குழு என்று ஒருவருக்கொருவர் சண்டை அது தான் இங்கே நடக்கிறது

    ReplyDelete
  3. நல்லதொரு
    நேர்மையான
    ஆழமான அலசல்
    சகோ.வருண்.
    மிக்க நன்றி சகோ.

    சகோ.சுவனப்பிரியன்,
    அதைத்தான் சொல்லனும்னு நினைச்சேன். நன்றி. :-)

    ReplyDelete
  4. *** சுவனப் பிரியன் said...

    சகோ வருண்!

    மற்றுமொரு சிறந்த பதிவு உங்களிடமிருந்து.

    'எனது இனத்தை நேசிப்பது இன வெறியாகுமா?' என்று முகமது நபியிடம் ஒரு தோழர் கேட்க 'அது இன வெறி ஆகாது. உன் இனத்தவன் ஒரு தவறு செய்யும் போது அதை ஆதரிக்கிறாயே அதுதான் இனவெறி' என்று பதிலுரைத்தார். இந்த அறிவுரையை நாம் செயல்படுத்தினால் பல பூசல்கள் குறையும்.

    3 October 2012 12:26 PM***

    பதிவில் உள்ள கருத்தை ஒத்த சரியான மேற்கோள், சகோதரர் சுவனப்பிரியன்! நன்றி. :-)

    ReplyDelete
  5. ***அன்பு said...

    வெட்டியா இருக்கிற ஆளுகளுகெல்லாம் ஒரு குழு தேவைப்படுது அதில் எந்த குழு நல்ல குழு என்று ஒருவருக்கொருவர் சண்டை அது தான் இங்கே நடக்கிறது***

    உலகமெங்கும் ஒரு மதம், ஒரு இனம்னு ஆனாலும்கூட ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்குள் இந்த குழு அமைப்பு எல்லாம் இருக்கத்தான் செய்யும், அன்பு! :)

    ReplyDelete
  6. //* ஒருவனே தேவன் என்றால் எல்லாமதத்தவரும் இறைவன் குழந்தைகள்தானே? என்கிறோம் //

    இதெல்லாம் பம்மாத்து என்பது உங்களுக்கு தெரியாதா ?

    ஒரே இறைவன் என்றால் யார் ?

    அல்லாவா ? சிவனா ? புத்தனா ? ஏசுவா ?

    முதலில் இதையெல்லாம் ஒன்று என்று சொல்லச் சொல்லுங்கள், ஒரு பயலும் சொல்லமாட்டான்,

    நம்ம சுவன அண்ணன் இணை வச்சுப்புட்டான் என்று சொல்லி பிடறி தெறிக்க ஓடுவார்.

    இங்கே ஒன்றே இறைவன் என்கிற பம்மாத்தெல்லாம் நான் சொல்லும் அந்த ஒன்று தான் இறைவன் என்ற திணிப்பே.

    ReplyDelete
  7. இன, மொழி எந்த உணர்வாக இருந்தாலும் அவை அதன் மீதான ஆளுமைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் எதிராக ஏற்படுவதே. அப்படி ஏற்படவில்லை என்றால் அந்த இனம், மொழி அழிந்து போகும்.

    மத உணர்வுகள் தேவையற்றது, ஒரே இனம், மொழி பேசுபவர்களைக் கூட களைத்துவிடும், ரத்தம் சிந்த வைக்கும்.

    தமிழ்நாட்டில் சங்கர்பரிவார கும்பலும், அல்லும்மா மற்றும் தவ்ஹிது ஆளுங்க ஒரே மொழி பேசுபவர்கள் தான் ஆனா அவங்க கையில் வச்சிருக்கும் மத அருவாளுக்கு இவை தெரியுமா ?

    ReplyDelete
  8. வருண் உங்களிடம் இருந்து மிக சிறந்த பதிவு. உங்களுடைய கருத்தை 100% ஏற்கிறேன். உங்களுடைய பதிவுகளில் உள்ள கருத்துகள் எனது உண்மையான உள்ளக் கிடைக்கை.

    ReplyDelete
  9. நான் சிங்கப்பூரை பிறப்பிடமாக, வசிப்பிடமாக கொண்ட தமிழன் (ஆனால் சிங்கப்பூரில் எம்மை நாம் சிங்கபூரர் என்றே அடையாள படுத்துவோம் ).
    ஆனால் எந்த சூழ்நிலையிலும் சிங்கபூரர் ஒருவரால் வேறு நாட்டவருக்கோ ஒரு அநியாயம் நடக்கும் போது அதை நியாயப் படுத்த முயல்வதில்லை. சிங்கபூர் சட்டமும், காவல் துறையும் அவ்வாறுதான் இருக்கிறது. இங்கு தமிழர்களும், மலாய் இனத்தவர்களே பெரும்பாலும் காவல்துறையில் இருக்கின்றார்கள். இங்கு எந்த இன காவல் துறை அதிகாரியும் தன் இனம் சார்ந்து செயல்படுவதில்லை. இந்தியாவில் இனம் சார்ந்து செயல் படுவதை விட ஜாதி சார்ந்த செயல்பாடுதான் அதிகம். நான் சில தடவைகள் இந்தியாவுக்கு உல்லாச பயணத்துக்காக, மருத்துவத்துக்காக வந்துள்ளேன்.
    ஆனால் நீங்கள் எமது பக்கத்து நாட்டுக்கு போனால் நிலைமை வேறாக இருக்கும். அங்கு இந்தியர்கள் மிக மோசமான நிலையில் இருக்கின்றார்கள். சீனர்களுக்கு பிரச்சினை இல்லை. ஏனென்றால் மலேசிய வர்த்தகத்தில் பெரும்பகுதி அவர்கள் வசம்.
    "மதவுணர்வு கொள்பவர்களும் இதேபோல் நாங்க எம்மதத்தில் அப்பாவிகள் பாதிக்கப் படும்போதுதான் எம்மதத்தவருக்கு குரல் கொடுக்கிறோம். இதில் தவெறன்ன? "

    இதில் தவறேயில்லை. ஆனால் இதே ஒரு மதத்தவர்களின் நாட்டில் என் இன பெண்கள் பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்படும் போது அதை ஒருவர் குறிப்பிட்டு கேட்டும் போது அப்படி ஒன்றும் நடப்பதேயில்லை என்று கூறுவதும் அல்லது அந்நாட்டில் உள்ள சிலர் பெண்களை பாலியல் தொல்லை செய்வார்கள் என்று கூறுவதும் எந்தவகையில் நியாயம். இவ்வாறான செயல்பாடுகள் ஒரு மதம்/இனத்தின் மீது இன்னொரு இனம் காழ்புணர்ச்சியை அல்லது வெறுப்பை கக்க காரணமாக அமைகின்றது.

    ReplyDelete
  10. நியாயமான கேள்விகள்,நியாயமான பதில்களுடன் முடிவுரையில் தெளிவாக பதிவின் சாரம்சத்தை காண்பித்து விட்டிர்கள்.
    பெண்கள் தாம் பெண்கள் உரிமைக்கு போராடுவதில் முன் நிற்பார்கள்.அவர்களுக்குதான் அதன் வலி புரியும்.அது போல மதம்,இனம்,மொழி...நியாயம் இருக்கட்டும் போதும் போராடலாம் ஒன்று சேரட்டும்.

    ReplyDelete
  11. இந்த மதம்/இனம் சார்ந்த அரசியல் எனக்கு புதிது. தமிழையும் எனது வேர்களையும் (Roots) அறிந்து கொள்ளவே நான் தமிழ் வலையகம் வந்தேன். ஆனால் நடந்தோ வேறோ ஏதோ. நான் அகப்பட்டது இந்த மத/இன அரசியல் சகதியில்.
    என்னை முற்றாக இந்த சகதியில் இருந்து மீட்டு எடுக்க முடியவில்லை. தினமும் தமிழ் மனம் வரவைக்கும் போதையில் மாட்டுபட்டுள்ளேன். இதில் யாரையும் முழு உத்தமர்கள் என்றோ அல்லது முழுமையான கேடு கேட்டவர்கள் என்றோ கூறமுடியாது. இரு தரப்பிலும் இருவையானவர்கள் உண்டு.

    மத உணர்வு தேவைதான். ஆனால் இன உணர்வை விட்டு கொடுக்க முடியாது. இதை மலையாளிகளிடம் கற்று கொள்ளவேண்டும். அவர்களை பொறுத்தவரை இனம் தான் முதலிடம். ஒரு மலையாள இந்துவுக்கும் ஒரு தமிழ் முஸ்லிமுக்கும் பிரச்சினை வந்தால் ஏனைய மலையாள முஸ்லிம்கள் மலையாள இந்து பக்கம் தான் நிற்பார்கள். இதேமாதிரிதான் மலையாள இந்துக்களும். (இது நான் எனது பணியிடத்தில், வேறு இடங்களில் அவதனித்த விடயம் )

    ஆனால் தமிழர்கள் வேறு வகை. மலையாளிகளுக்கு நேர் மாறு. மலையாளிகளின் நோக்கு சரியானதன்று. அவர்கள் யார் பக்கம் நியாயம் என்று பார்க்க மாட்டார்கள். இனம் என்று மட்டும் தான் பார்ப்பார்கள்.

    ReplyDelete
  12. உன் இனத்தவன் ஒரு தவறு செய்யும் போது அதை ஆதரிக்கிறாயே அதுதான் இனவெறி' இது மட்டும் இனவெறி அல்ல.
    நாம் சார்ந்த இனம்/மதம் செய்யும் தவறுகளை வெளிப்படையாக ஆதரிக்காவிட்டாலும் அதை அவ்வாறு ஒன்று நடக்கவில்லை/ நடப்பதில்லை என்று சாதிப்பதும் இன/மத வெறி தான்.

    ReplyDelete
  13. என் இனத்தவன்/மதத்தவன் தவறு செய்யும் போது தட்டி கேட்கின்ற துனிச்ச்சல் இருக்க வேண்டும். தட்டி கேட்கா விட்டாலும் வேறு ஒருவன் தட்டி கேட்கும் போது என் இனத்தவன்/மதத்தவன் தவறு செய்யவில்லை என்று போலியாக நியாப்படுத்தாத நேர்மை இருக்க வேண்டும்

    ReplyDelete
  14. Ethikalist,
    Many of your writings surprised me.

    My friends used to tell on many occasions, indian singapore citizens, treat indian workers/professionals like untouchables there.

    Your claim is quite opposite, surprising.

    ReplyDelete
  15. I S: மொதல்ல உங்க தளத்தில் "மாமா" "டபுள் மீனிங்" ல பேசுற பொறுக்கிகள் பின்னூட்டங்களை மட்டுறுத்த கத்துக்கிட்டு அதை ஒழுங்கா செய்ங்க. அதயெல்லாம் விட்டுப்புட்டு இங்கேலாம் எதுக்கு வந்துக்கிட்டு?

    ReplyDelete
  16. இ செ: உங்கள மாரி "தரம் தெரியாத" "மட்டுறுத்தல் பண்ணத்தெரியாத ஆட்கள்" எல்லாம் இங்கே வந்தால் மரியாதை கெடைக்காது! இது மிகப்பெரிய உலகம்! எங்கேயாவது போயி நல்லாயிருங்க!

    ReplyDelete
  17. ***~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

    நல்லதொரு
    நேர்மையான
    ஆழமான அலசல்
    சகோ.வருண்.
    மிக்க நன்றி சகோ.

    சகோ.சுவனப்பிரியன்,
    அதைத்தான் சொல்லனும்னு நினைச்சேன். நன்றி. :-)***

    நன்றி, சகோதரர், முகமது ஆஸிக்! :-)

    ReplyDelete
  18. ***கோவி.கண்ணன் said...

    //* ஒருவனே தேவன் என்றால் எல்லாமதத்தவரும் இறைவன் குழந்தைகள்தானே? என்கிறோம் //

    இதெல்லாம் பம்மாத்து என்பது உங்களுக்கு தெரியாதா ?

    ஒரே இறைவன் என்றால் யார் ?

    அல்லாவா ? சிவனா ? புத்தனா ? ஏசுவா ?

    முதலில் இதையெல்லாம் ஒன்று என்று சொல்லச் சொல்லுங்கள், ஒரு பயலும் சொல்லமாட்டான்,

    நம்ம சுவன அண்ணன் இணை வச்சுப்புட்டான் என்று சொல்லி பிடறி தெறிக்க ஓடுவார்.

    இங்கே ஒன்றே இறைவன் என்கிற பம்மாத்தெல்லாம் நான் சொல்லும் அந்த ஒன்று தான் இறைவன் என்ற திணிப்பே.***

    வாங்க கோவி!

    என் கருத்தைத் தான் நான் சொல்ல முடியும்ங்க. :-)

    ReplyDelete
  19. ***கோவி.கண்ணன் said...

    இன, மொழி எந்த உணர்வாக இருந்தாலும் அவை அதன் மீதான ஆளுமைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் எதிராக ஏற்படுவதே.***

    ஆளுமை செய்றவர்கள், அடக்குமுறை செய்றவங்க செய்வது நியாயம் இல்லைனுதான் நான் சொல்றேங்க! :)

    ReplyDelete
  20. ***Ethicalist E said...

    வருண் உங்களிடம் இருந்து மிக சிறந்த பதிவு. உங்களுடைய கருத்தை 100% ஏற்கிறேன். உங்களுடைய பதிவுகளில் உள்ள கருத்துகள் எனது உண்மையான உள்ளக் கிடைக்கை.***

    ரொம்ப நன்றிங்க, Ethicalist E ! :)

    ReplyDelete
  21. எனக்கென்னவோ வர்க்க உணர்வுதான் சரியாகப்ப்டுகிறது.

    ReplyDelete
  22. கோவி கண்ணன்!

    //முதலில் இதையெல்லாம் ஒன்று என்று சொல்லச் சொல்லுங்கள், ஒரு பயலும் சொல்லமாட்டான்,

    நம்ம சுவன அண்ணன் இணை வச்சுப்புட்டான் என்று சொல்லி பிடறி தெறிக்க ஓடுவார்.

    இங்கே ஒன்றே இறைவன் என்கிற பம்மாத்தெல்லாம் நான் சொல்லும் அந்த ஒன்று தான் இறைவன் என்ற திணிப்பே.//

    நம்மிடம் தவறை வைத்துக் கொண்டு சுவனப்பிரியனை குறை சொன்னால் எப்படி?

    'அல்லாஹ் என்று அழையுங்கள். ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் (இறைவன், கடவுள், கர்த்தர், சிவன், பிதா என்று பல பெயர்களில்) அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன' என்று முஹம்மதே கூறுவீராக!

    -குர்ஆன் 17:110

    'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றுதான் நமது முன்னோர்களும் சொல்லுகின்றனர். ஆனால் சிவனுக்கு பார்வதி என்ற ஒரு மனைவியும் அவனுக்கு மக்களையும் நாமே கற்பனையில் உண்டாக்கிக் கொண்டோம். அதே இறைவனுக்கு யானையின் தும்பிக்கையை நாமே பொருத்திக் கொண்டோம். பத்து தலைகளையும் நாமே உருவாக்கிக் கொண்டோம். ஏசு சொல்லாத முக்கடவுள் கொள்கைகளையும் நாமே உண்டாக்கிக் கொண்டோம்.


    உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன் மயர்வற மதிநலம் அருளியவன் எவனவன் அமரருள் அதி;பதி எவனவன் துயரறு சுடரடி தொழுதெழு என் மனமே!” – திருவாய்மொழி
    திருவாய் மொழியின் இந்த பாசுரத்தை குர்ஆன் கூறும் இறைவனுக்கும் பொருத்திக் கொள்ளலாம். நமது முன்னோர்கள் இறைவனை சரியாகவே விளங்கியிருந்தனர். எனவே தவறாக தற்போது நாம் விளங்கிக் கொண்டது இறைவனின் தவறல்லவே!...


    ReplyDelete
  23. @சுவனப் பிரியன்

    மாற்று மதத்தவரின் தத்துவங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவர்களைப் பற்றி தவறான விமர்சனம் செய்யலாகாது சுவனப் பிரியன்.

    ReplyDelete
  24. ஜெயதேவ்:

    கோவிச்சுக்காதீங்க, மற்றமதங்களைவிட இந்துமதம் அதிகமாக விமர்சிக்கப் படுவதற்கு காரணம்,

    * "கடவுள் ஒருவனே" என்று இந்துமதம் அடிச்சு சொல்லவில்லை என்பதே. மற்றமதங்கள் இதுபோல் பிரச்சினையிலிருந்து எளிதாகத் தப்பித்து விடுகிறது.

    * ரெண்டாவது பிரச்சினை "வர்ணாசிரம்" இந்து மதம் மற்றும் இந்துக் கலாச்சாரங்களில் கலந்து உள்ளது.

    நான் மதத்தைப்பத்திதான் சொன்னேன், இந்து மக்களை அல்ல! :)

    ReplyDelete
  25. சனாதன தர்மம் சரியாக விளக்கப் படவில்லை. நிச்சயம் அது ஓரிறைக் கொள்கையைத்தான் சொல்கிறது. கைகளில் ஐந்து விரல்களும் சமாக இருப்பதில்லை. மக்களிடையே ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும், அதற்குத் தகுந்த வேலையை அவர்கள் செய்ய வேண்டும். ஆனால் இதை வைத்து ஒருவன் உயர்ந்தவன், இன்னொருத்தன் தாழ்ந்தவன் என்ற பேதைமை கூடாது. அதை சனாதன தர்மம் சொல்லவும் இல்லை. இன்றைக்கும் எந்த நாடானாலும் சரி இந்த பேதம் இருக்கும், பெயர் மட்டும் கண்ணியமானதாக வைத்து அதே வேலையைத்தான் செய்வார்கள். வீரமணி அமரிக்கா போயி வைத்தியம் பார்ப்பார், கருணாநிதி அப்பலோவுக்கு போய் படுத்துக்குவார், இவர்கள் ஏற்றத் தாழ்வை நீக்க பாடுபடுவது உண்மையாயின் இவர்களது கட்சி தொண்டர்களுக்கு இவர்கள் அனுபவிக்கும் அதே சுகத்தை வழங்க முன் வருவார்களா?

    ReplyDelete
  26. நான் வீரமணிக்கோ, கருணாநிதிக்கோ கொடி பிடிக்கவில்லைங்க. அவர்கள் யோக்கியம்னும் சொல்ல வரவில்லை! நீங்க, அயோக்கியர்கள்னு சொன்னாலும் நான் வாதிட வரவில்லை. பெரியாரையும் சேர்த்துத்தான். அயோக்கியன்னு சொல்வது உங்க உரிமை!

    நான் சொன்னது ஹிந்து மதத்தில் பல கடவுள்கள் மற்றும் ஜாதிகள் என்ற ஏற்ற தாழ்வுகள் இருப்பதை பற்றி.

    ReplyDelete
  27. பல கடவுள்கள் சனாதன தர்மத்தில் இல்லை. மக்களின் ஈடுபாடு [Inclination] ஒவ்வொருவருக்கும் மாறும் என்றுதான் சனாதன தர்மம் சொல்கிறது, அதை ஏற்றத் தாழ்வாக திரித்து விட்டார்கள். எல்லோரும் வங்கி மேனஜராகி விட்டால் பியூன் வேலையை யார் செய்வது? அல்லது ஏற்றத் தாழ்வை நீக்குகிறேன் என்று மேனேஜர், பியூன் இருவருக்கும் ஒரே சம்பளம் தர முடியுமா? ஏன்னா பியூன் தனக்குள்ள அறிவை நூறு சதவிகிதம் பயன்படுத்தானே செய்கிறார், அவ்வாறு குறைந்த திறமையுடன் பிறந்தது அவர் தவறில்லையே?

    ReplyDelete
  28. அநீதியான விஷயத்தில் எவன் தன் சமுதாயத்திற்கு உதவுகிறானோ, அவன் கிணற்றில் விழுந்து கொண்டு இருக்கும் ஒட்டகத்தின் வாலை பிடித்துக்கொண்டிருப்பவன் போல் ஆவான்.(அதனுடன் சேர்ந்து அவனும் விழுவான்)..

    நபி மொழி

    ReplyDelete
  29. ***Jayadev Das said...

    * பல கடவுள்கள் சனாதன தர்மத்தில் இல்லை.

    * மக்களின் ஈடுபாடு [Inclination] ஒவ்வொருவருக்கும் மாறும் என்றுதான் சனாதன தர்மம் சொல்கிறது, அதை ஏற்றத் தாழ்வாக திரித்து விட்டார்கள். ***

    இதை அம்மதத்தவர் எல்லாரும் சரியாப் புரிஞ்சுக்கிட்டா சந்தோஷம்தாங்க! :-)

    ReplyDelete
  30. // எல்லோரும் வங்கி மேனஜராகி விட்டால் பியூன் வேலையை யார் செய்வது?//
    உங்கள் சனாதன தர்மத்தின் பிரச்சினையென்னவென்றால், அந்த வங்கி மேனேஜரின் பிள்ளை வங்கி மேனேஜராவான். அஃது அவன் பிறப்பிலேயே இருக்கிறது. பியூனின் பிள்ளை பியுனாவதற்குத்தான் தகுதி. அவன் பிறப்பிலேயே இருக்கிறது. என்பதுதான். இதை நீங்கள் மறுக்க முயல்வீர்கல். ஆனால் அப்படித்தான் இந்தியாவில் இந்துமதம் செய்துவந்தது. இன்றும் தாங்கள் பிறப்பினாலேயே பூஜாரிகளாகத் தகுதியுடையவர்கள். மற்றவர்களுக்கில்லையென்றுதான் சண்டைக்கு வருகிறார்கள் தமிழ்ப்பார்ப்ப்னர்கள்! அரசாங்கம் எவரும் அர்ச்சகர்களாகலாமென்பதை எதிர்க்கிறார்கள் நீதிமன்றங்களில். மறுக்க முடியுமா உங்களால். இதுதான் உங்கள் தர்மம்.

    ReplyDelete
  31. @ passerby

    வர்ணம் என்பது பிறப்பால் அல்ல, தகுதியால். க்ஷத்ரியாராக இருந்த விச்மாமித்திரர் தவம் செய்து பிராமணராக மாறியதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும், ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்த குழந்தைகளில் சில பிராமணராகவும், சில க்ஷத்ரியா, வைஸ்யா சில சூத்திரர்களாக ஆனாதாகவும் பாகவதத்தில் சொல்லப் பட்டுள்ளது. மேலும், பிராமணர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அதற்க்கான தகுதியை அவர்கள் பெறத் தவறினால் அவர்களை பிராமணர்கள் என்று சொல்ல முடியாது, அவர்களது உறவினர்கள் எனப்படும் "பிரம்ம பந்து" என்றே அறியப் படுவார்கள். மேலும், பிராமணன், க்ஷத்ரியன் , வைஸ்யன், சூத்திரன் என்ற பாகுபாடு இயல்பிலேயே எல்லா நாட்டிலும், எல்லா மதத்திலும், இனத்திலும், மொழியிலும் இருக்கவே செய்கிறது. தகுதி என்பதை, பிறப்பால் என்று இன்றைக்கு சாதி பிராமணர்கள்/மற்றவர்கள் மாற்றி விட்டார்கள், அதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. கோவிலில் மணியாட்டினால் தான் ஒருத்தன் பிராமணன் என்று அர்த்தம் அல்ல. தேவநாதன் மாதிரி ஒரு மணியாட்டி பிராமனனாக இருந்து தான் என்ன இல்லாவிட்டால் தான் என்ன? நீங்கள் எங்கே இருந்தாலும் அந்தத் தகுதி இருந்தால் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்கள் பிராமணன்தான்.

    ReplyDelete

  32. ***Jayadev Das said...

    @ passerby

    வர்ணம் என்பது பிறப்பால் அல்ல, தகுதியால். க்ஷத்ரியாராக இருந்த விச்மாமித்திரர் தவம் செய்து பிராமணராக மாறியதாக புராணங்கள் கூறுகின்றன.***

    ஜெயவேல்:

    நாம் வாழும் இன்றைய இந்த காலகட்டத்தில் எத்தனை விழுக்காடு மக்கள் அப்படி பிறப்பால் அல்லாமல் "நன்நடத்தையால்" "கொள்கையால்" பிராமணர் ஆகி இருக்காங்க?

    ஒரு "எண்" (நம்பர்) சொல்லுங்க. எத்தனை விழுக்காடுகள் என்று! நன்றி!

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. நான் சொன்னது வர்ணம் என்பது தகுதியை வைத்து என்று காட்டத்தான். கலி யுகத்தில் பிராமணன் என்பவனிடத்தில் பத்து பைசா பூணூலைப் போட்டிருப்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் காணப் படாது என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. மேலும் கந்த புராணத்தில், கலவ் சூத்திர சம்பாவாஹ் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள், கலி யுகத்தில் எல்லா பயல்களும் சூத்திரர்களே என்பதாகும். உண்மை நிலையைப் பார்த்தால் பெரும்பாலும் சூத்திரர்கள், கொஞ்சம் வைஸ்யர்களே எஞ்சியுள்ளனர். ஆங்காங்கே சிலரிடம் க்ஷத்ரிய குணமும், பிராமண குணமும் ஒளிந்து கொண்டிருக்கின்றன. தூய பிராமணன், க்ஷத்திரியன் கோடியில் ஒருத்தரைக் காட்டுவதே அரிது.

    ReplyDelete