Monday, October 1, 2012

பதிவுலக மதச்சண்டையால் நன்மைகள்!!

சமீபத்தியப் பதிவுலக நிலவரம் பத்தி எல்லாருக்கும் தெரியும். ஒரு மதத்தவர் செய்யும் தவறுகளை இன்னொரு மதத்தவர், அல்லது தன்னை நாத்திகர் என்று சொல்லிக்கொள்பவர்கள் தோண்டி எடுத்து வந்து, விமர்சிக்கிறாங்க. உடனே பாதிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட அந்த மதத்தவர், தன்னை விமர்சித்த மதத்தவர்கள் செய்யும் அயோக்கித்தனங்களை எல்லாம் தோண்டி எடுத்து வந்து அவர்களை பழிக்குப் பழி வாங்குவதுபோல் விமர்சிக்கிறாங்க.

ஏன் இப்படி பதிவுலகம் மதநெடியடிக்கிறது? உலகில் பல நல்ல விடயங்களைப் பத்தி பேசலாமே? தம்மதத்தவர் எல்லாரும் யோக்கியர்கள் என்பதுபோல் எதற்கு வாதம் செய்யனும்? என்றெல்லாம்  பலர் வருந்தினாலும், இதில் பல நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது.

* யாருக்கோ அநீதி இழைக்கப்படுகிறது. அந்த அநீதி இழைக்கப்பட்டவர் ஒரு மதத்தை சார்ந்தவர். அநீதி இழைத்தவர்கள் வேறொரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால், உடனே  பாதிக்கப்பட்டப் பட்டவருக்காக, பாதிக்கப் மதத்தினர், அந்த விடயத்தை பெரிது படுத்தி உலகறிய செய்து, நியாயம் கேக்கிறாங்க. ஆக பாதிக்கப் பட்டவனுக்கு நியாயம் வேண்டுமென்று அதே மதத்தினரால் கேட்கக்படுகிறது. பாதிக்கப்பட்ட ஒருவனுக்கு நியாயம் கேட்பது  ஒரு நல்ல விடயம்தானே? யார் கேட்டால் என்னங்க?

* இன்னொரு சூழ்நிலையில்,  யாரோ ஒரு மதத்தவருக்கு  அநீதி இழைக்கப்படுகிறது. இப்போ அநீதி இழைத்தவர்களும் அம்மதத்தையே சார்ந்தவர்களாகிவிடுகிறார்கள். இந்த சூழலில் அம்மதத்தை சேர்ந்த சிறுபுத்தியுள்ள இவர்கள், அதை மூடி மறைக்கவோ, இல்லைனா கண்டுக்காமலோ போகத்தான் பார்க்கிறார்கள். பாதிக்கப்பட்டவனுக்காக பரிந்துகொண்டுக்கொண்டு போயி தன் மதத்தவர் செய்கிற அயோக்கியத்தனத்தை, மிருகத்தனத்தை வெளியே சொன்னால் நமக்குத்தானே, நம் மதத்துக்குத்தானே அசிங்கம்? என்கிற சிறுமையான மனப்பாங்கு இவர்களுக்கு!  ஆனால், மனசாட்சியுள்ள இவர்கள் உலகுக்குத் தெரியாமல் பாதிக்கப் பட்டவனுக்காக தன் மனதிலேயே வருத்தத்துடன் இருக்கலாம். தன் மதத்தவர் இப்படி தவறு செய்கிறார்களே என வெட்கி தலை குனியலாம். அதனால் என்ன பிரையோஜனம்? தம்மதத்தவரை அயோக்கியனாக நாமே உலகுக்கு காட்டுவது தவறு என்று எண்ணுவது  இவர்களோட அறியாமை. ஆனால், இவர்கள் மதத்தைப் பிடிக்காதவர்கள், இவர்களை பிடிக்காதவர்கள்,  பிறமதத்தவர், பாதிக்கப்பட்ட இவர் மதத்தை சேர்ந்த அந்த பலியானவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக, வீம்புக்கென்றே  வக்காலத்து வாங்குகிறார்கள்! நியாயம் கிடைக்க உதவுறாங்க. இதனால் பாதிக்கப் பட்டவனுக்கு அதே மதத்தை சார்ந்தவரால் அல்லாமல் பிறமதத்தவரால் நீதி கேட்கப்படுகிறது. அந்த அநீதியை உலகறியச் செய்யப்படுகிறது! நீதியும் கெடைக்கலாம்!

ஆக, மதத்தை தள்ளி வைத்துவிட்டு பாதிக்கப் பட்ட இருவரையும் (ரெண்டு சூழல்களிலும் பார்த்தால்) இரண்டு மனிதர்களாக பார்த்தோமென்றால், அவர்களுக்கு ஏதோ ஒரு மதத்தினரால் நியாயம் கேட்கப்படுகிறது. நியாயம் கிடைக்கிறது.

எல்லா மதத்தவரிலும் மற்றும் நாத்திகர்களிலும் அயோக்கியர் இருக்கத்தான் செய்றாங்க என்பது மனசாட்சியுள்ள எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான்!

அதனால் இந்தப் பதிவுலக  மதச்சண்டையால் பாதிக்கப் பட்ட நம் மக்களுக்கு ஏதோ ஒரு மதத்தினரால் கிடைக்கும் நன்மையை நினைத்து சந்தோசப் படுவோமா? :)


31 comments:

  1. எல்லா மதத்தவரிலும் மற்றும் நாத்திகர்களிலும் அயோக்கியர் இருக்கத்தான் செய்றாங்க என்பது மனசாட்சியுள்ள எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான்!

    Agree....

    ReplyDelete
  2. *** இனியா said...

    எல்லா மதத்தவரிலும் மற்றும் நாத்திகர்களிலும் அயோக்கியர் இருக்கத்தான் செய்றாங்க என்பது மனசாட்சியுள்ள எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான்!

    Agree....

    1 October 2012 11:13 AM***

    வாங்க இனியா! :)

    "நல்லவேளை, மனசாட்சி இல்லாததுகளை வச்சுக்கிட்டு நம்ம என்ன பண்ணுறது?"னு நீங்க கேக்கலை! :)))

    ReplyDelete
  3. ///எல்லா மதத்தவரிலும் மற்றும் நாத்திகர்களிலும் அயோக்கியர் இருக்கத்தான் செய்றாங்க /// அதுபோல் அவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்

    ReplyDelete
  4. தன்னை நாத்திகர் என்று சொல்லிக்கொள்பவர்கள் //

    இவர்களில் பலர் அரைவேக்காடுகள் என்பது அவர்கள் வாதங்களை பார்த்தாலே தெரியும்

    ReplyDelete
  5. வித்தியாசமான கோணம்..! நியாயமாக உள்ளது..! நன்றி சகோ.வருண்.

    ஆனால், இதைவிட சிறப்பான கோணத்தினை நோக்கி நாம் பயணப்படுதல் வேண்டும்.

    அதாவது,
    தனது ஆட்கள் தவறு செய்தாலும்... குற்றம் குற்றமே... என்று சொல்ல வேண்டும். அப்போது, பிறர் தவறு செய்தாலும் அதே போல குற்றம் குற்றமே என்று சொல்ல அனுமதிக்கும் சமச்சீர் அறிவு முதிர்ச்சி நிலை சகலருக்கும் வர வேண்டும்..!

    பரபஸ்பர அறிவார்ந்த விமர்சனம் வரவேற்கப்படல் வேண்டும். அசிங்கமான அவதூறுகள் அறவே ஆதரிக்கப்படல் கூடாது..!

    அடுத்தவர் செய்த நல்ல விஷயங்களை பதிவில் ஒரே ஒரு வரியாவது சொல்லி பாராட்ட கற்றுக்கொள்ள வேண்டும்..!

    ReplyDelete
  6. மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் சாடுவது அறியாமையின் காரணமாகவே இருக்கும்..

    ReplyDelete
  7. சோஷலிச பொருளாதார முறை போய் அதற்கு பதிலாக வந்த உலகளாவிய பொருளாதார முறை , மனிதனை ஜாதி, மதங்களின் பின்னே ஓட வைத்து விட்டது எனலாம். சோஷலிச பொருளாதார முறையில் பணப்புழக்கம் குறைவாக இருந்தாலும் மனிதாபிமானம் நிறைய இருந்தது சகிப்புத்தன்மையும் இருந்தது. இன்று அது தலைகிழாக இருக்கிறது.
    விஞ்ஞான வளர்ச்சி ஆக்க பூர்வமாக பயன்படுத்துவதற்கு பதிலாக மதத்தின் அவரவர் வலைபதிவு,வலைத்தளம் உண்டாக்கி மதக்கலவரம் உண்டாக்கி மகிழ்கிறார்கள்.
    பதிவுக்கு வருகிறேன், நாத்திகரை விடுங்கள் ஆத்திகரில் செக்கு மாடு போல் சொல்வதையே சொல்லிகொண்டிருபவர்களை நீங்கள் ஆதரிக்கிர்களா. சூனா பானா போன்றவர்கள் முதலில் தங்கள் சொந்த மதத்தில் ஒற்றுமைக்கு முயற்சிக்கட்டும் பிறகு மாற்று மதக்காரர்களுக்கு உபதேசிக்கலாம்.
    சூனா பானா குருப்காரர் த.மு.மு.க வை சேர்ந்தவர்களுக்கு சலாம் கூட சொல்ல மாட்டார்கள், இதில் இவர் பிறர்க்கு உபதேசிக்கிறார்.

    ReplyDelete
  8. ***Rabbani said...

    ///எல்லா மதத்தவரிலும் மற்றும் நாத்திகர்களிலும் அயோக்கியர் இருக்கத்தான் செய்றாங்க /// அதுபோல் அவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் **

    அதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லைங்க! :-)

    ReplyDelete
  9. ***அன்பு said...

    தன்னை நாத்திகர் என்று சொல்லிக்கொள்பவர்கள் //

    இவர்களில் பலர் அரைவேக்காடுகள் என்பது அவர்கள் வாதங்களை பார்த்தாலே தெரியும்***

    அன்பு: உங்களுக்கு தெரிஞ்சு என்ன ஆகப்போது? நீங்க வேணும்னே சொல்றீங்கனு தான் சொல்லுவாங்க. அவங்களுக்கு தெரிந்தால்தான் நல்லது! :)

    ReplyDelete



  10. ஷாகிர் என்ற முஸ்லிம் தந்தையின் மகன் என்று பிறப்பிலேயே கேவலத்தை சுமந்திருக்கும் இஸ்லாமல்லாதவருககு இந்த பதில் அல்ல. நடுநிலையாளர்களுக்கே இந்த எனது விளக்கம். .

    'மார்க்க விஷயங்களில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றுவோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே இறைவன் உங்களுக்கு தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்'
    குர்ஆன் 60:9

    இந்துவாக பிறந்து காழ்ப்புணர்ச்சியால் இப்னு ஷாகிர் என்ற முஸ்லிம் பெயருடன் பதிவுலகில் வலம் வரும் நயவஞசகர்களை நண்பர்களாக்கவே இறைவன் தடை செய்கிறான். குஜராத்தில் முஸ்லிம்களை அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றி கொலை செய்து பலரை அகதி முகாம்களில் தங்கவைத்திருக்கும் நரேந்திர மோடி போன்றவர்களையே நண்பர்களாக்க தடை செய்கிறான் இறைவன்.

    இந்துவாக இருந்தாலும் இஸ்லாமியர்களோடு அன்போடு பழகும் வருண் போன்றவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று இறைவன் முஸ்லிம்களுக்கு மேலும் கட்டளையிடுகிறான்

    எனவே இந்த குடுமி சிண்டு முடியும் வேலையை வேறு எங்காவது வைத்துக் கொள்ளவும் இப்னு ஷாகிர்.(இந்த பெயரில் இன்னும் எழுதிக் கொண்டிருக்க வெட்கமாக இல்லை.)

    ReplyDelete
  11. சகோ சுவனப்பிரியன்: நான் அந்த (இப்னு ஷாகிர்) பின்னூட்டத்தை அகற்றிவிட்டேனே? :)

    ReplyDelete
  12. சகோ வருண்!

    சிறந்த பதிவு! ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் நன்மை அடைந்தால் சரியே!

    மற்றபடி எனது முந்தய பின்னூட்டம் தேவையில்லை என்றால் நீக்கி விடுங்கள். நன்றி!

    ReplyDelete
  13. சுவனப் பிரியன் said...

    *** சகோ வருண்!

    சிறந்த பதிவு! ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் நன்மை அடைந்தால் சரியே!

    மற்றபடி எனது முந்தய பின்னூட்டம் தேவையில்லை என்றால் நீக்கி விடுங்கள். நன்றி!***

    எனக்கு உங்க பின்னூட்டம் இருப்பதால் ஒண்ணுமில்லை. நீங்க, என்னை அதை அகற்றச்சொன்னால் அகற்றுவேன். இல்லைனா அது பாட்டுக்கு இருக்கட்டும். :)

    ReplyDelete
  14. அடப்பாவிகளா? இப்னு அண்ணா அப்படி என்ன தப்பாக எழுதிவிட்டார்? அவரின் கமெண்டை நீக்கியது கொஞ்சம் கூட நியாயமே இல்லை! ச்சே வருண் அண்ணா, உங்கள் துணிச்சல் இவ்வளவுதானா?

    கேவலம் இன்ப்னு அண்ணாவின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாத கோழையின் கொக்கரிப்பை பார்க்க சிரிப்பு சிரிப்பா வருது!/

    வருண் அண்ணா, நீங்கள் அந்தக் கமெண்டை நீக்கியது நியாயமே இல்லை!!!!

    அவரது கேள்விகளுக்குப் பதில் சொல்லும் தைரியம் யாருக்குமே இல்லை! பார்த்துக்கொண்டிருக்கும் எமக்கு சிரிப்பு சிரிப்பா வருது :))))))

    ReplyDelete
  15. நமக்கு இப்னு என்று ஒருவர் இருப்பதே அண்மையில்தான் தெரியும்! இப்போது அவரின் பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறோம்!

    நான் நிச்சயமாகச் சொல்வேன் அவரின் கேள்விகளுக்கும், கருத்துக்களுக்கும் பதில் சொல்லும் துணிச்சல் எந்த “மார்க்க அறிஞருக்கும் இல்லை”!

    வழக்கமாக நல்லவர், பொறுமை சாலி போல காட்சி தரும் ஒருவர் இன்று கொதித்த கொதிப்பைப் பார்க்கணுமே?

    ஹா ஹா ஹா வருண் அண்ணா, அந்தக் கமெண்டை மீள பிரசுரி்யுங்கள்!!!

    ReplyDelete
  16. மணி: வாசிச்ச்சுப் பாருங்க. என் பதிவில் நான் எந்த ஒரு மதத்தையும் வெளிப்படையா சொல்லவே இல்லை. நான் எப்படி "உங்க அண்ணா" பின்னூட்டத்தை அனுமதிக்க முடியும்?

    அவர் இ செலவன் தளத்தில், இன்னும் பல தளத்தில் இதே பின்னூட்டத்தை போட்டுக்கிட்டே இருக்கார். அதை எல்லாம் யாரும் அகற்றமாட்டா. கவலியை விடுங்க! :)

    ReplyDelete
  17. ***மாத்தியோசி - மணி said...

    நமக்கு இப்னு என்று ஒருவர் இருப்பதே அண்மையில்தான் தெரியும்! இப்போது அவரின் பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறோம்!

    நான் நிச்சயமாகச் சொல்வேன் அவரின் கேள்விகளுக்கும், கருத்துக்களுக்கும் பதில் சொல்லும் துணிச்சல் எந்த “மார்க்க அறிஞருக்கும் இல்லை”!

    வழக்கமாக நல்லவர், பொறுமை சாலி போல காட்சி தரும் ஒருவர் இன்று கொதித்த கொதிப்பைப் பார்க்கணுமே?

    ஹா ஹா ஹா வருண் அண்ணா, அந்தக் கமெண்டை மீள பிரசுரி்யுங்கள்!!!***

    இது ஒரு நடுநிலப் பதிவு மணி. இதுல எதுக்கு இதுமாரி ப்ரவோக்கிங் பின்னூட்டம்? அப்புறம் இதே மாரி எதிர் பின்னூட்டங்களையும் அனுமதிக்கனும்? அப்புறம் சண்டையிலேதான் முடியும்!

    ReplyDelete
  18. //இது ஒரு நடுநிலப் பதிவு மணி. //

    இஃகி இஃகி

    ReplyDelete
  19. ***கோவி.கண்ணன் said...

    //இது ஒரு நடுநிலப் பதிவு மணி. //

    இஃகி இஃகி

    1 October 2012 6:44 PM***

    இச்சுபெல்லிங் மிஸ்டேக்கு அது "நடுநிலைப் பதிவு" னு வரனும்னு உங்க நக்கலை புரியாதமாரி பதில் சொல்லிப்புடுறேன். :-)))

    ReplyDelete
  20. "தனது ஆட்கள் தவறு செய்தாலும்... குற்றம் குற்றமே... என்று சொல்ல வேண்டும். அப்போது, பிறர் தவறு செய்தாலும் அதே போல குற்றம் குற்றமே என்று சொல்ல அனுமதிக்கும் சமச்சீர் அறிவு முதிர்ச்சி நிலை சகலருக்கும் வர வேண்டும்..!

    பரபஸ்பர அறிவார்ந்த விமர்சனம் வரவேற்கப்படல் வேண்டும். அசிங்கமான அவதூறுகள் அறவே ஆதரிக்கப்படல் கூடாது..! "

    I AGREE 200%

    ReplyDelete
  21. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  22. எச்சரிக்கை..............
    எச்சரிக்கை..............
    எச்சரிக்கை..............

    சகோதரர்களே....

    மேலே உள்ள " மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள் " லிங்க்- ஐ எவரும் க்ளிக் செய்ய வேண்டாம்....

    அது....

    வைரஸ்...

    'தம்பி' யில் ஏற்கனவே.. 'வருன்' என்ற பெயரில் வந்த அதே வைரஸ்... 'UNMAIKAL' எச்சரித்து இருந்தார்...! 'tiny.cc.ibJUB' என்ற அதே வைரஸ்..!

    இது சகோ.சதீஷ் செல்லத்துரை பதிவின் லிங்க்-ம் இல்லை.

    அப்புறம்...

    இந்த 'உம்மத்' என்ற profile ஒரு போலி..!

    ///On Blogger since October 2012

    Profile views - 8///


    ReplyDelete
  23. /////////////////////////////////////

    UNMAIKAL1 அக்டோபர், 2012 10:52 am

    வருன்1 அக்டோபர், 2012 10:05 am

    //2006ல் கமாண்டோ பயிற்சியின் போது இதை(CASO) பற்றிய வகுப்பில் இது போல செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று எனது அதிகாரி ஒருவர் சொன்ன போதுதான் எனக்கும் உண்மை தெரிந்தது///
    ஆத்தா சொன்னார், ............

    அடுத்து இதே மாதிரி ஒரு பதிவு போடு, அப்புறம் உன்னோட குடும்பத்தை கிழிக்கிறேன்.
    ========================

    எச்சரிக்கை. எச்சரிக்கை. எச்சரிக்கை.
    வருன்1 என்ற விஷமியின் விஷ பிரயோகம்.


    மேலே உள்ள கருத்தை இட்டிருக்கும் வருன்1
    என்ற இடத்தை க்ளிக் செய்ய வேண்டாம்.

    அதை க்ளிக் செய்தால் உங்கள் கணினி தாறுமாறாக செயல்பட ஆரம்பித்துவிடும்.

    உட‌ன‌டியாக கணினியின் ON / OFF ஸ்விட்ச்சை உங்கள் க‌ணினி ஸ்விட்ச் ஆஃப் ஆகும் வ‌ரையில் அழுத்திக் கொண்டிருந்து க‌ணினியை ஆஃப் செய்துவிட்டு மீண்டும் ஆன் செய்யுங்க‌ள்.

    பின் உங்க‌ள் க‌ணினியை ஒருமுறை வைர‌ஸ் ஸ்கேன் செய்துவிடுக்க‌ள்.


    திரு. சதீஷ் செல்லதுரை அவர்களே,

    தாங்களின் கருத்து பின்னூட்ட பெட்டியில் NAME / URL ANONYMOUS ஆப்சன்களை உடனடியாக நீக்கிவிடவும்.

    கூகிள் அக்கவுண்ட் உள்ளவர்கள் மட்டுமே பின்னூட்டம் இடட்டும்.
    பதிலளி
    பதில்கள்

    சதீஷ் செல்லதுரை1 அக்டோபர், 2012 12:13 pm

    என்ன சார் இது அநியாயமா இருக்கு?நீங்க சொல்வதை செய்ய முயல்கிறேன்..
    பதிலளி
    ///////////////////////////////////


    Abdul Basith1 அக்டோபர், 2012 12:33 pm

    மேலேவுள்ள வருன் கம்மெண்டை நீக்குங்கள் அதை கிளிக் செய்ய வேண்டாம் வைரஸ் உள்ளது

    ///////////////////////////////////


    வருன்1 அக்டோபர், 2012 10:05 am

    இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
    பதிலளி
    பதில்கள்

    ///////////////////////////////////

    ReplyDelete
  24. ஆசிக்: நீங்க சொல்வதை நம்பி டெலீட் பண்ணிட்டேன். வைரஸ்லாம் இங்கே வேணாம்.

    ReplyDelete
  25. இந்தமாரி பினூட்டத்தில் வைரஸ் வைத்து லின்க் கொடுத்தால், அதுபோல் செய்யும் ஐ டி களை கூகிளிடம் ரிப்போர்ட் செய்தால் நிச்சயம் அதுபோல் ஐ டி க்களை ban பண்ணி விடுவார்கள்னு நெனைக்கிறேன்.

    ReplyDelete
  26. DEAR BROTHER VARUN,

    HERE IS A GOOD NEWS..!

    As per Bro.Abdul Basith's (Blogger Nanban) request,
    tiny website authorities have removed that virus link..!
    THANKGOD.

    ////The user that created the link /ibJUN has added some public access restrictions to it...
    So sorry, but we aren't allowed to let you visit that page.////

    http://tiny.cc/traffic/ibJUN

    NOW NO HARM WITH THE LINK..!

    'UMMATH' BLOG, BELONGS TO MANY MUSLIM BLOGGERS. TO CREATE BAD NAME ON THOSE... HE/SHE HAD POSTED SUCH VIRUS LINK.

    THIS IS REALLY A CRIMINAL ACTIVITY BY THESE 'ISLAMOPHOBIYA PSYCHOS'.

    BEWARE OF THEM BROTHERS.

    ReplyDelete
  27. Please read this post... for more info.

    "வைரஸ் பரப்பும் பதிவுலக போலிகள்"
    Tuesday, October 02, 2012 Abdul Basith


    http://www.bloggernanban.com/2012/10/beware-of-virus-by-fake-tamil-bloggers.html

    ReplyDelete
  28. ***Ethicalist E said...

    "தனது ஆட்கள் தவறு செய்தாலும்... குற்றம் குற்றமே... என்று சொல்ல வேண்டும். அப்போது, பிறர் தவறு செய்தாலும் அதே போல குற்றம் குற்றமே என்று சொல்ல அனுமதிக்கும் சமச்சீர் அறிவு முதிர்ச்சி நிலை சகலருக்கும் வர வேண்டும்..!

    பரபஸ்பர அறிவார்ந்த விமர்சனம் வரவேற்கப்படல் வேண்டும். அசிங்கமான அவதூறுகள் அறவே ஆதரிக்கப்படல் கூடாது..! "

    I AGREE 200%***

    E: It is nice to see, basically we are all having the same goal but we get distracted and carried away because of personal clash and group clash and whatnot! :(

    ReplyDelete
  29. ***~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

    எச்சரிக்கை..............
    எச்சரிக்கை..............
    எச்சரிக்கை..............

    சகோதரர்களே....

    மேலே உள்ள " மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள் " லிங்க்- ஐ எவரும் க்ளிக் செய்ய வேண்டாம்....

    அது....

    வைரஸ்...

    'தம்பி' யில் ஏற்கனவே.. 'வருன்' என்ற பெயரில் வந்த அதே வைரஸ்... 'UNMAIKAL' எச்சரித்து இருந்தார்...! 'tiny.cc.ibJUB' என்ற அதே வைரஸ்..!

    இது சகோ.சதீஷ் செல்லத்துரை பதிவின் லிங்க்-ம் இல்லை.

    அப்புறம்...

    இந்த 'உம்மத்' என்ற profile ஒரு போலி..!

    ///On Blogger since October 2012

    Profile views - 8///***

    வருனா???!!!!

    எல்லாரும் என் கருத்து (வருண்)னு நெனச்சுக்காவாங்கனா??!!

    என்னவோ போங்க!

    ReplyDelete
  30. ***~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

    DEAR BROTHER VARUN,

    HERE IS A GOOD NEWS..!

    As per Bro.Abdul Basith's (Blogger Nanban) request,
    tiny website authorities have removed that virus link..!
    THANKGOD.

    ////The user that created the link /ibJUN has added some public access restrictions to it...
    So sorry, but we aren't allowed to let you visit that page.////

    http://tiny.cc/traffic/ibJUN

    NOW NO HARM WITH THE LINK..!

    'UMMATH' BLOG, BELONGS TO MANY MUSLIM BLOGGERS. TO CREATE BAD NAME ON THOSE... HE/SHE HAD POSTED SUCH VIRUS LINK.

    THIS IS REALLY A CRIMINAL ACTIVITY BY THESE 'ISLAMOPHOBIYA PSYCHOS'.

    BEWARE OF THEM BROTHERS.***

    ஏன் இதுமாரியெல்லாம் செய்றாங்க? சாதாரண கருத்துமோதல்தானே? யாரையும் யாரும் விவாதம் செஞ்சு திருத்தப்போவதில்லை. சும்மா நம்ம கருத்தை சொல்லிட்டுப் போகவேண்டியதுதான். ஆனால் இதுபோல் பின்னூட்டங்களில் விபரீதமான தொடுப்புகளை கொடுப்பது நிச்சய்ம கிரிமினல் குற்றம்தான். :(

    ReplyDelete
  31. *** ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

    Please read this post... for more info.

    "வைரஸ் பரப்பும் பதிவுலக போலிகள்"
    Tuesday, October 02, 2012 Abdul Basith


    http://www.bloggernanban.com/2012/10/beware-of-virus-by-fake-tamil-bloggers.html***

    நான் என்னனு வந்து பார்க்கிறேன்ங்க, சகோதர் ஆஸிக். முனெச்சரிக்கைகளுக்கு நன்றி உங்களுக்கு! :)

    ReplyDelete