Friday, October 5, 2012

பரதத்தையும் தமிழர்களையும் இழிவுபடுத்தும் இக்பால்!!

தமிழர்கள் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் தன் பெண் குழந்தைகளுக்கு சாதி மதம் என்கிற வேறுபாடெல்லாம்  பார்க்காமல் எல்லா சாதியினரும், பல மதத்தவரும்  (இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் கூட எனக்குத்தெரிய) இந்திய  நடனம் சொல்லிக்கொடுப்பது வழக்கம். பரதநாட்டியம் என்கிற நடனம் நாடுவிட்டு நாடு வந்து வாழும் தமிழர்கள் கலாச்சாரமாகிவிட்டது. தமிழ் குழந்தைகளில் இருந்து இளம்பெண்கள் வரை   பரத நாட்டியம் ஆடுவதை சாதாரணமாக வட அமெரிக்கத் தமிழர்கள் விழாக்களில் பார்க்கலாம்.

பரத நாட்டியம் எப்படி ஆரம்பிக்கப் பட்டது என்பதை எல்லாம் யாரும் தோண்டி எடுப்பதில்லை. அது தேவையுமில்லை! இன்றைய தினத்தில் அது ஒரு நல்ல நடனக்கலை, அவ்வளவுதான். அதனால்  இங்கு வாழும் தமிழர்கள், தன் மகள்களுக்கு இந்தியக் கலாச்சாரத்தில் இருந்து வந்த ஒரு நாட்டியத்தை கற்றுக்கொடுக்க, சிரத்தையுடன் 5 வயதிலிருந்து 18 வயதுவரை பரதநாட்டியம் கற்றுக்கொடுக்கிறார்கள். 10 வருடம் பழகிய பின்னர் கடைசியில் கல்லூரிக்குப் போகும்போது அரங்கேற்றம் நடத்துகிறார்கள்.

 மகளுக்கு திருமணம் செய்வது போல், விருந்து கொடுத்து நடத்துகிறார்கள் இந்த அரங்கேற்றத்தை! ஏன் என்றால் தன் மகள் திருமணத்தை இவர்களால் நடத்த இயலுமா என்ன வென்று தெரியாது. ஆமாம், மகள் ஒரு கருப்பனை மணக்கலாம், வெள்ளையனையும் மணக்கலாம், திருமணத்திற்கு இவர்களை இவர்கள் பொண்ணூ அழைக்கவேண்டும் என்றும் இல்லை.

அதில், கிருஷ்ணர் கோபியருடன் பாடிய பாட்டு அது இதுனு பாடல்கள் வரும்தான். அதில் வரும் பாடல்வரிகள் அர்த்தம் எல்லாம் நம் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் அதைப்பத்தி அமெரிக்காவில் கனடாவில் வளரும் தமிழர்களின் குழந்தைகளுக்குக் கவலையும் இல்லை!

இக்குபால் செல்வன் என்னும் ஒரு அரைவேக்காட்டுப் பதிவருக்கு எந்த ஒரு விடயத்தை  எடுத்தாலும் அதை படுகேவலமாக விமர்சிப்பது என்பதே வேலையாப் போச்சு.

பொய்யும் புரட்டுமா எதையாவது உண்மைபோல எழுதுறது, ஆனால் அவர் விமர்சனம் என்னவோ "பர்ஃபக்ட்" என்பதுபோல வாக்கியங்களை அமைப்பார்.

இப்போ இவருக்கு கிடைத்துள்ளது இந்த பரதநாட்டியம்! 

இந்துக்கள் நாட்டியத்தை விமர்சிச்சு பிறமதத்தவரிடம் நல்ல பேரு எடுக்கிறாராம் இந்த பதிவுலக வியாபாரி! 

யாரைவேணா விற்பார் இவரு பொழைப்பை ஓட்ட!

* '' அரங்கேற்றம் '' செய்வதில் ஒவ்வொரு பெற்றோரும் தமது செருக்கை, பெருமிதங்களை வெளிப்படுத்தவே விரும்புகின்றனர்.  பிள்ளைகள் மீதான பரிவோ, கலையார்வமோ, பண்பாட்டின் மீதான விருப்போ கிடையாது. 

ஆமா, இவருக்குத்தான் எல்லாம் தெரியும்! கலைபத்தி பேசுற எல்லாம் தெரிந்த மேதையைப் பாருங்கப்பா!

* சுருக்கமாகச் சொல்லப் போனால் பந்தா செய்யவே அரங்கேற்றங்கள் நடத்தப்படுகின்றனர். 

அவன் அவன் கஷ்டப்பட்டு சேமித்து தன் மகளுக்கு அரங்கேற்றம் நடத்துறான். இந்தாளு வாய் கூசாமல் பேசுறாரு!!

* ஒரு அரங்கேற்றம் செய்ய இவர்கள் செய்யும் செலவுகளை நினைத்தால் மலைக்கச் செய்யும். 

ஆமா, அது என்ன உன் அப்பன் வீட்டு காசா? இது அவன் பிரச்சினை!


* அண்மையில் ஒரு பெண்ணின் நாட்டிய அரங்கேற்றம் செய்திருந்தனர். அவர்கள் சாலையில் போவோர் வருவோர் எல்லோரையும் அழைத்திருந்தனர். ஒரு பெரிய மண்டபம் பிடித்து நடத்தினார்கள். அங்கே போனால் மொக்கை தான் மிச்சம் எனலாம். 

 என்னத்துக்கு ஆர் எஸ் வி பி பன்ணிட்டு நாட்டியம் பார்க்கப் போனீர்? சாப்பாடு இனாமாக் கெடைக்கிதுனா?


* கலை ரசனை இல்லாதோர் தான் அரங்கத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர். 

கலை ரசனை இருந்த ஒரே ஆளு நம்ம "இக்குபால் செல்வன்" தான்!
 

* ஆடும் சிறுமியோ பாவமாக ஒவ்வொரு பாடலுக்கும் ஆடிக் கொண்டிருந்தாள். ஐயகோ ! இந்த அரங்கேற்றாம் செய்ய எவ்வளவு செலவாகி இருக்கும் என விசாரித்த போது தலையே சுற்றி விட்டது. சுமார் ஐம்பதாயிரம் கனடிய டாலர்கள் ( 25 லட்சம் இந்திய ரூபாய்கள் ) செலவாகியுள்ளனவாம். 

இந்தப் பதிவை இவருக்கு அழைப்பிதழ் அனுப்பியவங்களுக்கு அனுப்புங்கப்பா! 25 லட்சம் என்பது பச்சைப் பொய்! 5-6 லட்சம் (10-12 k us $ ஆகலாம்).


* இவ்வளவு செலவு செய்து அரங்கேற்றம் செய்யும் பிள்ளைகள் கலைத் துறையில் சாதிக்கப் போகின்றனவா என்றால் இல்லை, உயர் பள்ளிக்குச் சென்ற பின் நாட்டியங்களை விட்டுவிடுவோரே மிகுதியாக உள்ளனர். 


 அதனால என்ன? இது ஒரு உடற்பயிற்சி போல இருந்துட்டுப் போகட்டுமே! உமக்கென்ன பிரச்சினை?


* அதன் பின் அது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதும் இல்லை. பெரும்பாலும் தமது பணப் பலத்தைப் பிறர் மத்தியில் நிலைநாட்டவே அரங்கேற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன, அவற்றைப் படம் பிடித்து உள்ளூர் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் பணம் கட்டி விளம்பரப் படுத்துகின்றனர். ஏன் இவ்வளவு செலவு என்று கேட்டால் ஒரு பதிலும் நமக்குக் கிடைக்காது. 


உமக்கென்ன பதில் வேண்டிக்கெடக்கு? அவன் காசு, அவன் செஞ்சிட்டுப்போறான்?? உம்மிடம்  அவன் எதுக்கு செலவு கணக்குக் காட்டனும்? எனக்குப் புரியவில்லை!


* இதில் என்ன கொடுமை என்றால் எதோ ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு அரங்கேற்றம் நிகழ்கின்றன என நினைக்க வேண்டாம். ஆயிரக் கணக்கான அரங்கேற்றங்கள் நடத்தப்படுகின்றன. சொல்லப் போனால் சொந்தக் காரர்களில் ஒருவர் அரங்கேற்றம் செய்துவிட்டால், போட்டி போட்டுக் கொண்டு பிறரும் அதனைச் செய்கின்றனர். இவர்கள் இதற்காக விரயம் செய்யும் பணமானது பல சமயம் லட்சம் கனடிய டாலர்களைக் கூடத் தொட்டுவிடுவதுண்டு. எங்கிருந்து இவர்களுக்கு இவ்வளவு பணம் என்று வேறு சிந்திக்கத் தூண்டுகின்றது. செலவு செய்யும் பல பெற்றோர்கள் வியாபாரிகளோ, ஐந்திலக்க சம்பளம் பெறுவோரோ இல்லை. பலரும் இயல்பான நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்களே ஆவார்கள். 


இதுக்கு என்ன மில்லியன் டாலரா செலவு?? நடுத்தர குடும்பத்தினர் ஒரு 10 வருடம் (நடனம் கற்கும் போது) சிறு சேமிப்பு செய்தால் இதை எளிதாக நடத்தலாம்!


* இலங்கையில் தமிழர்கள் பலர் போதிய வாழ்வாதாரம் இன்றித் துன்பப் படுகின்ற சூழலில், இங்குள்ள தமிழர்களின் இவ்வளவு பெரிய ஆடம்பரங்கள் தேவை தானா ? அல்லது அரங்கேற்றங்களைக் கோவில்களில் உள்ள சிறிய மண்டபத்தில் நடத்தினால் போதாதா ?


எல்லாரும் டெய்லி ரெண்டு மணி நேரம் ஒப்பாரி வச்சா நல்லதா?? அதை செய்யட்டுமா??


* கலைகள் வளர்வது நல்லது தான், ஆனால் வெறும் பகட்டுக்காக பிள்ளைகள் மீது திணிப்புக்கள் செய்வதும், எத்தனைப் பிள்ளைகள் அரங்கேற்றம் தாண்டியும் கலைப் பயணத்தைத் தொடர்கின்றன சொல்லுங்கள். 

கலையை எப்படி வளர்க்கனும் இவரிடம் கேளுங்கப்பா! கலைத் திருமகன் இவருதான், "இக்குபாலு செல்வனு"!


* அத்தோடு கடன் பட்டும், முறையற்ற வழிகளில் பணம் சேர்த்தும் ஆடம்பர அரங்கேற்றங்கள் எல்லாம் தேவை தானா என்பது தான் எனதுக் கேள்வி.

 தேவைதான். 

* இவ்வாறாக பணத்தை விரயமாக்குவதைக் காட்டிலும், அப் பணத்தை சேமித்து வைத்தால் எதிர்க்காலத்தில் குழந்தைகளின் மேற்கல்வியை கடன் இல்லாமல் பெற முடியுமல்லவா. சற்றே சிந்தியுங்கள் தமிழர்களே!


பரதநாட்டியம் முடித்த பெண்கள் அனைவருமே கல்லூரி சென்றுதான் படிக்கிறாங்க!  கல்லூரிச் செலவுக்காக அவங்க அப்பா அம்மா உம்மிடம் வந்து பிச்சை கேட்டாரா என்ன, இக்குபாலு?


முடிவுரை!
 
அமெரிக்க, கனடாவில் தன் இளம் குழந்தைகளுக்கு பரதநாட்டியம் சொல்லிக்கொடுக்கிற பெற்றோர்கள் எல்லாம் இதை கவனிக்க!

இக்பால் செல்வன் சொல்கிறார்..


"இங்குள்ள தமிழர்கள் அப்படிச் செய்வது இல்லை, பெண் பிள்ளையாக இருந்தால் ஒரு ஐந்து வயதிலயே கொண்டு போய் ஒரு பரத்தையர் நாட்டிய வகுப்பில் சேர்த்துவிடுகின்றார்கள்."

எல்லாரும் உங்க பொண்ணுகளை கொண்டுபோயி  பரத்தையர் நாட்டிய வகுப்பில் சேர்த்து விடுறீங்களாம்!

46 comments:

  1. அந்த பெற்றோர்கள் பண்ணுற வெளம்பரத்தை விட இந்த இக்பால் செல்வன் பண்ணுற வெளம்பரம் ஓவரா இருக்கே

    ReplyDelete
  2. அனேகமா 90% பெற்றோர்கள் தன் குழந்தைக்கு பரதநாட்டியம் கத்துக்கொடுக்கிறாங்க! இவன் தரித்திரமாப் பேசி எழுதியிருக்க பதிவை வாசிச்சி, அவங்க வாயில எல்லாம் விழுறான். விளம்பரம் பண்ணி பெற்றோர்கள் வயித்தெரிச்சலில் விழுந்து சாதிச்சவன் இந்தாளுதான்! நெறையாப் ஏரு அர்ச்சனை பண்ணிட்டு இருப்பா, இவன் நாசமாப் போகட்டும்னு! :)

    ReplyDelete
  3. நண்பரே உங்களைப்போலவே அவர்( இ.செ)கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறதும், நீங்கள் ஏன் உணர்ச்சிவசப்படுகிறீர்கள்.

    ReplyDelete
  4. *** அஜீம்பாஷா said...

    நண்பரே உங்களைப்போலவே அவர்( இ.செ)கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறதும், நீங்கள் ஏன் உணர்ச்சிவசப்படுகிறீர்கள்.***

    அஜீம்பாஷா??!!!!!

    நானும் என் கருத்தைத்தான் சொல்றேன்.

    அவரு கருத்தை நான் என்ன பறிச்சுட்டு வந்துட்டேனா என்ன?

    நீங்க ஏன் இதுக்கு இப்போ டென்ஷனாகுறீங்க? :))))

    ReplyDelete
  5. மாசிலா: உமது பின்னூட்டம் நான் சொன்னதை இக்பால் சொன்னதாகக் காட்டுகிறது. அது பெரிய தவறு! பதிவைப் புரிந்துகொண்டு பின்னூட்டமிடுவது நல்லது! என்னைத் தாக்கினாலும் அல்லது அவரை தாக்கினாலோ பரவாயில்லை. நான் சொன்னதை அவர் சொன்னதாக காட்டுவது கூறுகெட்டதனம்! மறுபடியும் ரெண்டு பதிவையும் படித்து விட்டு விமர்சியும்! நன்றி! :-)

    ReplyDelete
  6. This much of personal vendetta is not good. What iqbal Sevan said is right. Do you think that it is OK to shell out 10 years worth of savings in one function? Just step back amd think please...

    ReplyDelete
  7. amara bharathi: What he says is a LIE. Who said an arangkeRRam cost what he claims as it costs (25 lakhs?) Please go talk to people who did arangeeRRam, how much it really cost them. You need to know the facts right. I know he is a manipulator!

    ReplyDelete
  8. If you invite 500 people and hire a venue it will be more than 50000 dollars. Not everyone of them spend that much. But there are peole doing this too.

    ReplyDelete
  9. **If you invite 500 people and hire a venue it will be more than 50000 dollars. Not everyone of them spend that much. But there are peole doing this too. ***

    Amarabarathi:

    You must be kidding! It will never cost $50000 ever!
    An arangeeRRam does not cost $ 50,000. It would cost may be $10,000 at the most!

    If someone is inviting 500 people then he is RICH and he can afford. Even in that case, the food cost $15 per plate (dinner). Do your math, $7500. That's all! The other expenses would be $5000 even if you invite 500 people!

    What he claims is A LIE. I know he lies around.

    ReplyDelete
  10. ''This much of personal vendetta is not good. What iqbal Sevan said is right. Do you think that it is OK to shell out 10 years worth of savings in one function? Just step back amd think please...''

    True.. I have seen similar things happening for birthday, puberty function etc mostly among Sri-lankan Tamils, more than a real talent show, it will be more of show-off. I can not blame the kids...

    ReplyDelete
  11. ***சும்மா.. டைம் பாஸ் said...

    ''This much of personal vendetta is not good. What iqbal Sevan said is right. Do you think that it is OK to shell out 10 years worth of savings in one function? Just step back amd think please...''

    True.. I have seen similar things happening for birthday, puberty function etc mostly among Sri-lankan Tamils, more than a real talent show, it will be more of show-off. I can not blame the kids...***

    There are few show-offs in every culture. You can not label as if the whole community is like that!

    ReplyDelete
  12. Varun, i dont know what to say. But I am sure that something triggered you for this post. I want to talk to you. Pls. give me ur number in my email.

    ReplyDelete
  13. amara bharathi: He is twisting the facts for his convenience. I dont like that.

    In US more non-brahmins learn BN than brahmins.

    BN is the best thing to teach if you want to teach any Indian culture. What else they can do besides going to tamil school?

    The same kids were there in India, they would not be learning BN. Here there are few options they have. This is the best thing to teach. :-)

    ReplyDelete
  14. பரத நாட்டியம் இந்திய கலை அன்று, தமிழ்நாட்டின் கலை, தமிழர் கலை, சிலப்பதிகாரத்தில் போதிய குறிப்புகள் உண்டு, பரத்தையர் நாட்டியம் திரிந்து பரத்த நாட்டியம் > பரதநாட்டியம் ஆகியுள்ளது. மாதவி (பரத்தை) நாட்டிய கலைஞர் தான். பொதுவாகவே கலைகள் அனைத்துமே குலம் சார்ந்த தொழில் என்ற அளவில் இருந்து குலத்தொழில்களில் வருமானம் உள்ளவை இன்று நிலைக்கிறது.

    பரத நாட்டியம் மீட்டெடுக்கப்பட்டதிலும் பல்வேறு தரப்பினர் கற்றுவருவதிலும் மகிழ்ச்சி என்றாலும் அது என்னவோ பார்பனர்கள் கொடுக்கும் கொடை போன்றும் அவர்களே கலை உலகை காக்கவந்தவர்கள் என்றும் சித்தரிப்பது மறுக்கத் தக்கது.

    பொண்ணு பாட்டுகத்துகிறா, பரதநாட்டியம் க்ளாஸ் போறா என்று சொல்லும் பார்பனர்களைப் பார்த்து பல்வேறு தரப்பினரும் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள், ஆனால் நடனம், பாட்டு கற்றுக் கொண்ட குழந்தைகளை எந்த ஒரு கட்டுபாடுகளும் விதிக்காமல் அவர்களின் திருமணத்திற்கும் பிறகும் மேடை ஏற அனுமதிப்பார்களா என்பது ஐயமே. இந்த வகையில் பார்க்கும் பொழுது வெறும் கவுரவத்திற்காக குழந்தைகளை கற்றுக் கொள்ள பணிக்கிறார்கள் என்பது தவிர்த்து வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

    ReplyDelete
  15. பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். வரலாற்று நோக்கில், பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.

    ReplyDelete
  16. பரத்தையும் தேவதாசியும் ஒருவரா??

    ReplyDelete
  17. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
    தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

    பரத்தையர் என்பவர் ஆடலிலும் பாடலிலும் வல்லவராகி அழகும் இளமையும் காட்டி இன்பத்தையும் பொருளையும் விரும்பி ஒருவரிடம் செல்லும் பெண்கள் ஆவார். இவர்கள் ஒருவரிடத்தும் தங்காத் தன்மை உடையவர்கள். கணிகையர் என்பதும் இவர் பெயர் ஆகும். இவர்களிடம் செல்லும் ஆடவர்கள் "பரத்தமை ஒழுக்கம்" மெற்கொண்டவர்கள் எனத் தொல்காப்பியம், அகப்பொருள் விளக்கம் போன்ற இலக்கண, இலக்கிய நூல்கள் குறிப்பிடுகின்றன.

    பரத்தையரின் வகைகள்
    பரத்தையர்கள்

    சேரிப்பரத்தையர்
    காதல் பரத்தையர்

    எனப் பல வகைப்படுவர்

    சேரிப்பரத்தையர் தனிப்பட்ட யாரொருவரையும் விரும்பாமல் இயல்பினராய் பலருக்கும் உரியவர்கள் ஆவர்.
    காதல் பரத்தையர் என்பவர் சேரிப்பரத்தையின் மகளாய்த் தலைவன் ஒருவனுக்கே உரிமைபூண்டு காதல் காரணமாகப் புணர்வோர் ஆவர். இவளே குலப்பரத்தை எனவும் காமக்கிழத்தி -யின் தாய் எனவும் கூறப்படுகிறாள் தலைவன், தலைவியை இகழ்ந்து, தம்மைப் புகழ்தலும் நிகழ் பொருள் காத்தலும் இவர்களது இயல்புகளாகக் கூறப்படுகிறது.

    ReplyDelete
  18. தேவதாசி
    http://ta.wikipedia.org/s/3mx
    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
    தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

    தேவதாசி எனபவர்கள் பெரும் கோயில்களில் நடனமாடுவதற்காக சிறுவயதில் நேர்ந்து விடப்படும் பெண்களைக் குறிக்கும் சொல். இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள்படும். இவ்வழக்கம் 1930களுக்கு முன்பு வழமையாக இருந்தது. இந்த முறை கோயில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும், பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வாகித்த மேல் வர்க்கத்தினருக்கு அல்லது அரசர், செல்வந்தர் போன்றவர்கள் முன்பு நடனமாட வைக்கப்பட்டதுடன் அவர்களுடைய பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இவ்வழக்கத்துக்கு 1920 முதல் இந்தியாவில் பாரிய எதிர்ப்பு இருந்தது, அதன் காரணமாக 1947 ஆண்டில் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    இவர்கள் தேவரடியாள் என்ற சொல்லாலும் குறிப்பிடப்பட்டார்கள். தேவர்(கடவுள்) + அடியாள் என்று வழங்கப்பட்ட சொல் பின்நாட்களில் தேவுடியா என்ற கொச்சைச் சொல்லாக மாற்றம் பெற்றது என்பதும் இங்கு கவனத்துக்குரியது.

    ReplyDelete
  19. BETTER LUCK NEXT TIME

    ReplyDelete
  20. //இக்குபால் செல்வன் என்னும் ஒரு அரைவேக்காட்டுப் பதிவருக்கு எந்த ஒரு விடயத்தை எடுத்தாலும் அதை படுகேவலமாக விமர்சிப்பது என்பதே வேலையாப் போச்சு.//

    வருண் ஏன் இப்படி தனி மனித தாக்குதல்
    உங்க கருத்து இக்பால் செல்வன் கருத்துக்கு எதிராக இருந்தால் தாராள மாக எதிர் கருத்து போடலாம் ஆனால் இது போல தனி மனித தாக்குதல் இன்றி

    அநாகரீகமான இப்பதிவுக்கு எனது கண்டனங்கள்

    ReplyDelete
  21. ***நபி வழி said...

    BETTER LUCK NEXT TIME ***

    "நபி வழி" என்ன அரபிக்ல பேசாமல் ஆங்கிலத்துல பேசுறாரு! :-)

    ReplyDelete
  22. *** kari kalan said...

    //இக்குபால் செல்வன் என்னும் ஒரு அரைவேக்காட்டுப் பதிவருக்கு எந்த ஒரு விடயத்தை எடுத்தாலும் அதை படுகேவலமாக விமர்சிப்பது என்பதே வேலையாப் போச்சு.//

    வருண் ஏன் இப்படி தனி மனித தாக்குதல்***

    எதிர்வினைனா அப்படித்தான் இருக்கும். மேதாவி இக்பால் "பொய்யன்"னு ப்லரை விமர்சிச்சாரு. அப்போ ஏன் பொத்திக்கிட்டு இருந்தீர்னு தெரியலை.

    **உங்க கருத்து இக்பால் செல்வன் கருத்துக்கு எதிராக இருந்தால் தாராள மாக எதிர் கருத்து போடலாம் ஆனால் இது போல தனி மனித தாக்குதல் இன்றி***

    உங்ககிட்ட யாரு இப்போ அறிவுரை கேட்டது??

    *** அநாகரீகமான இப்பதிவுக்கு எனது கண்டனங்கள்***

    உங்க உணர்வுகளை நிச்சயம் மதிக்கிறேன். கண்டனங்கள் வாங்கிக்கொள்ளப் பட்டன! நன்றி. :)

    ReplyDelete
  23. ***பரத்தையர் நாட்டியம் திரிந்து பரத்த நாட்டியம் > பரதநாட்டியம் ஆகியுள்ளது. ****

    எனக்கு என்னவோ இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

    கண்ணகி, கோவலன், மாதவி எல்லாம் வாழ்ந்தவர்களா? இல்லைனா ஒரு கதையில் வரும் கேரக்டர்களா?

    ***மாதவி (பரத்தை) நாட்டிய கலைஞர் தான். பொதுவாகவே கலைகள் அனைத்துமே குலம் சார்ந்த தொழில் என்ற அளவில் இருந்து குலத்தொழில்களில் வருமானம் உள்ளவை இன்று நிலைக்கிறது.***

    பரத்தை என்கிற வார்த்தையில் இருந்து "பரதம்" வந்தது என்று எங்கும் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தாலும், எவனாவது சொல்லிட்டான்னு அது சரி என்றாகிவிடாது.

    பரதநாட்டியத்தை பரத்தை நாட்டியம் என்பது குதற்கமான பேச்சுத்தான்.

    ReplyDelete

  24. ***பரத நாட்டியம் மீட்டெடுக்கப்பட்டதிலும் பல்வேறு தரப்பினர் கற்றுவருவதிலும் மகிழ்ச்சி என்றாலும் அது என்னவோ பார்பனர்கள் கொடுக்கும் கொடை போன்றும் அவர்களே கலை உலகை காக்கவந்தவர்கள் என்றும் சித்தரிப்பது மறுக்கத் தக்கது.***

    அமெரிக்கப் பள்ளிகளை எடுத்துக்கொண்டால், அந்தப் பள்ளியில் உங்க சாதி கேட்கமாட்டாங்க. உங்க மதமும் வங்களுக்குத் தேவையில்லை. ஒழுங்கா கட்டணத்தொகை கட்டி உங்க பொண்ணு ஆர்வத்தைக்காட்டினால் போதும். திறமையுள்ள பெண்கள் நன்றாக ஆடலாம்!

    ReplyDelete
  25. ***பொண்ணு பாட்டுகத்துகிறா, பரதநாட்டியம் க்ளாஸ் போறா என்று சொல்லும் பார்பனர்களைப் பார்த்து பல்வேறு தரப்பினரும் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள்***

    அதில் என்ன தப்பு. பொண்ணை வீட்டுக்குள்ளேயே அடைத்து வச்சு டி வி பார்க்க விடுவது இவைகள் கற்றுக்கொண்டால் நல்லதே!

    ** ஆனால் நடனம், பாட்டு கற்றுக் கொண்ட குழந்தைகளை எந்த ஒரு கட்டுபாடுகளும் விதிக்காமல் அவர்களின் திருமணத்திற்கும் பிறகும் மேடை ஏற அனுமதிப்பார்களா என்பது ஐயமே. ***

    கல்லூரி சேர்ந்த பிறகு ஹார்வேர்ட் யுனிவேர்சிட்டியிலும் நடனம் ஆடும் இந்தியப் பெண்கள் இருக்காங்க. அது ஒருவருடைய ஆர்வத்தி பொறுத்து


    ***இந்த வகையில் பார்க்கும் பொழுது வெறும் கவுரவத்திற்காக குழந்தைகளை கற்றுக் கொள்ள பணிக்கிறார்கள் என்பது தவிர்த்து வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.***

    கவுரவத்திற்காக என்பது குதற்கப் பேச்சு.

    கெள்ரவத்துக்காக க்ரிக்கட் ஆடுறான், கால்பந்து ஆடுறான், நீச்சல் பழகுறான்னுகூட சொல்லலாம். எதையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை.

    அதை கவுரவத்துக்காக செய்றான்னு நாலு பேர் சொல்லுவதை தவிர்க்க முடியாது. ஊரு ஆயிரம் சொல்லும்.

    நாளைக்கு இக்பால் செல்வனே த மகளுக்கு பரத்தை நாட்டியம் சொல்லிக் கொடுக்கலாம்! ஊருக்கு உபதேசம்! He does not have any right to control his daughter wish! Neither do you!

    ReplyDelete
  26. //வருண் said...
    பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். வரலாற்று நோக்கில், பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.
    5 October 2012 8:37 PM//

    இதெல்லாம் அவாள் சொல்லும் கதைகள், ராகம் தாளம் பல்லவி இவை எல்லாம் இசையில் வருபவை, நாட்டியத்தை பரத நாட்டியம் என்று சொல்ல இவ்வளவு வெளக்கம் தேவைப்பட்டால் பாட்டை மட்டும் ஏன் வாய்பாட்டு அல்லது கருநாடக சங்கீதம் என்று சொல்ல வேண்டும் ? அதை ஏன் பரத இசை என்றோ பரதப்பாட்டு என்று சொல்லக் கூடாது ?

    பாதத்தால் ஆடுவதால் பாத நாட்டியம் பின்பு ஓலைச் சுவடிகளில் கால் 'ர' வாகப் படிக்கப்பட்டு திரிந்து பரத நாட்டியம் என்று ஆகியது என்று ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பொய்யாக ஒன்றைச் சொல்லித் திரித்தாலும் உங்களைப் போன்றோர் 'ஆமாம்ல' என்பர்
    ;)


    ஆரியர்கள் ஆடியது கூத்து வகை, அதனால் தான் ஆரியக் கூத்து என்ற சொல் வழக்கு வந்தது,

    பரத்தை நாட்டியத்தை பரத நாட்டியம், பரத முனிவர் கற்றுக் கொடுத்தது என்று கதை எழுதிவிட்டு அவாள் கலையாக்கிவிட்டனர்.

    ஒருகாலத்தில் நாடக நடிகர்களை கூத்தாடிகள் என்பார்கள், திரைத் துறை என்று ஒன்று வளர்ந்த பிறகு நடிகர்களுக்கு நாடாளவும் உரிமை கொடுக்கின்றனர் மக்கள். எனவே நடிப்புத் தொழில் இழிவு என்பதில் இருந்து உயர்ந்த இடத்தை அடைந்தது, பரத்தையர்கள் ஆடும் போது பரத்தையர் நடனம் ஆக இருந்தது பார்பனர்கள் ஆடும் பொழுது பரத நாட்டியம் ஆகியுள்ளது.

    பரத நாட்டியம் பார்பனர்களின் தொடர்புள்ளக் கலை என்றிருந்தால் ரம்பா, ஊர்வசி மேனகா கதைப் பாத்திரம் தவிர்த்து வாழ்ந்த பெண்களின் வரலாறு என்று சொல்லும்படி எந்த ஒரு பார்பனப் பெண் கலைஞரின் பெயரும் பத்மா சுப்ரமணியத்திற்கு முன்பு இருநததே இல்லை.

    50 ஆண்டுகளுக்கும் முன்பு வரை தேவரடியார்களின் கலையாகத் தான் இருந்தது.

    "பழந்தமிழிலக்கியம் ஆட்டக்காரியைப் பரத்தை என்று கூறும். [’விறலி’ சற்று வேறுபட்டது.] இந்தச் சொல்லிற்கு இரண்டு பொருட்பாடுகள் உண்டு. முதற் பொருள், பரத்தில் (மேடை) ஆடும் பெண் பரத்தை (= மேடைக்காரி) என்பதாகும். நாட்டம், நாட்டியம், நாடகம், நட்டம், நட்டணம், நடனம், நடம், நடை, கூத்து, தூக்கு, தாண்டவம், படிதம் எனப் பல்வேறு சொற்களும் தமிழில் வேர் கொண்டவை. மற்றை நாட்டியங்களைப் பார்க்கப் பரத்தையின் நாட்டியம் விதப்பான கூறுகளையும், ஒழுங்குகளையும் கொண்டதால் (இவற்றை சிலம்பின் அரங்கேற்றக் காதை விவரிக்கும்.), பரத்தை நாட்டியம்> பரத்த நாட்டியம் (=மேடை நாட்டியம்)>பரத நாட்டியம் ஆயிற்று என்பார் சொல்லாய்வர் பேரா. ப.அருளி. நாட்டியக் கலை, தெற்கிருந்து, வேத நெறிக்கு மாறானவர்களால், வளர்த்தெடுக்கப் பட்டது என்றே பல வல்லுநரும் கருதுகிறார்கள். [சங்க காலத்தை ஒட்டி எழுந்த ஸ்ம்ருதிகளும், சங்கத வியாகரண நூல்களும் நாட்டியத்தையும், அதைக் கற்றவர்களையும், இழிவு படுத்தியே கூறின. குடிலனின் அர்த்த சாற்றமும் அப்படித்தான் கொள்ளுகிறது. (பரதக் கலைக்களஞ்சியம் - கலைமாமணி எஸ்.என். ஸ்ரீராமதேசிகன், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 2001).] " - நன்றி திரு இராமகி

    http://valavu.blogspot.sg/2009/03/5_29.html

    ReplyDelete
  27. //அதை கவுரவத்துக்காக செய்றான்னு நாலு பேர் சொல்லுவதை தவிர்க்க முடியாது. ஊரு ஆயிரம் சொல்லும்.//

    வருண், நீங்க புடிச்ச ஏற்கனவே ஒரு கால் உடைந்த முயலுக்கு மூன்று கால்கள் இருந்திருக்கக் கூடும்

    :)

    ReplyDelete
  28. கோவி: நீங்க,என்னதான்

    தேவதாசி = பரத்தை
    பரத நாட்டியம் = பரத்தை நாட்டியம் னு நிரூபிச்சாலுமே..

    இன்றைய தேதியில் எல்லாத் தமிழ்ப் பெண்களும் பரத நாட்டியம் கத்துக்கிறாங்க. இது வளர்ந்துகொண்டேதான் போகுது.

    தேவதாசி கெட்டவங்களா? இல்லை அவங்கள உருவாக்கி அவர்களை தன் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்ட ராஜாக்களும், மிராசுதார்களும் கெட்டவர்களா?

    கவனிச்சுப் பார்த்தால் தேவதாசிகள், அபலைகள், ஆண்களால் வஞ்சிக்கப் பட்டவர்கள் என்றுதான் தோணுது.

    ReplyDelete
  29. ***கோவி.கண்ணன் said...

    //அதை கவுரவத்துக்காக செய்றான்னு நாலு பேர் சொல்லுவதை தவிர்க்க முடியாது. ஊரு ஆயிரம் சொல்லும்.//

    வருண், நீங்க புடிச்ச ஏற்கனவே ஒரு கால் உடைந்த முயலுக்கு மூன்று கால்கள் இருந்திருக்கக் கூடும்>***

    முயலை விடுங்க, இ செ பொன்றோர் தன் மகளை பரதநாட்டியம், (சாரி பரத்தை நாட்டியம்) கற்றுக்கொள்ள அனுப்பினால ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை. நான் அதுபோல் hypocrites களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கேன்.

    ReplyDelete
  30. பலர் பேசியாச்சு. என்னுடய கருத்து.
    பெயரில் ஒன்னும் இல்லை; ஒரு பெயரை, ஊடங்கங்கள் அவர்கள் கையில் இருப்பதால், மணக்கவும் செய்யலாம்; நார வைக்கவும் செய்யலாம்.
    (
    உ.ம்) மயிர் - முடி
    மாட்டின் பீ அல்லது கழிவு - சாணி
    மாட்டு மூத்திரம் - கோமயம்.

    இதில் நம்ம பெரியாருக்கும் பங்கு உண்டு...

    பாரதியில் இருந்து எல்லா பார்ப்பனரும் உபயோகப்படுத்தின பார்ப்பனர் என்ற சாதா வார்த்தையை அவர்களையே வெறுக்க வைத்து பிராமணாள் என்று மாற்றவைத்தார்.

    ReplyDelete
  31. உண்மையற்ற பதிவு, தனி மனித தாக்குதல் மற்றும் குரோதம் விரவி நிற்கின்றது உங்கள் பதிவில், வெளிநாட்டு தமிழர் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவருமே வீண் பகட்டை விரும்புவோரே அதிகம் என்பது தான் உண்மை. நேரில் கண்டு வாழ்கின்ற என்னால் அடித்து சொல்ல முடியும்.

    ReplyDelete
  32. //வருண் said...
    கோவி: நீங்க,என்னதான்

    தேவதாசி = பரத்தை
    பரத நாட்டியம் = பரத்தை நாட்டியம் னு நிரூபிச்சாலுமே..

    இன்றைய தேதியில் எல்லாத் தமிழ்ப் பெண்களும் பரத நாட்டியம் கத்துக்கிறாங்க. இது வளர்ந்துகொண்டேதான் போகுது.

    தேவதாசி கெட்டவங்களா? இல்லை அவங்கள உருவாக்கி அவர்களை தன் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்ட ராஜாக்களும், மிராசுதார்களும் கெட்டவர்களா?

    கவனிச்சுப் பார்த்தால் தேவதாசிகள், அபலைகள், ஆண்களால் வஞ்சிக்கப் பட்டவர்கள் என்றுதான் தோணுது.//

    பிரச்சனைகள் தேவதாசிகளைப் பற்றியோ பர(த்)த நாட்டியம் பற்றியதோ இல்லை, வெறும் பகட்டுகாக செய்யப்படுகிறது என்பது மட்டுமே விமர்சனம், தேவதாசிகளைப் பற்றி உங்களுக்கு தாழ்வான அல்லது உயர்ந்த எண்ணம் இருப்பது உங்கள் கருத்து.

    பர(த்)த நாட்டியம் என்று சொல்வதால் அது இழுக்கு என்பது போல் நீங்கள் தான் நினைக்கிறீர்கள்.

    பிஎச்டி படித்த(பெண்) ஒருவர் வேலைக்குப் போகமல் வீட்டில் இருந்தால் அவருக்கு நட்டம் என்பதைவிட அவர் கற்றுக் கொண்டதை அவரும் பயன்படுத்தவில்லை யாருக்கும் பயன்படுத்த முயற்சிக்கவில்லை என்றும் சொல்லலாம்.

    புரியாதது போல் தொடர்ந்து நடித்தால் உங்களிடம் விவாதம் செய்வது வீண் என்று நானே முற்றுப் புள்ளி வைத்துவிடுகிறேன்

    ReplyDelete
  33. ****ANKITHA VARMA said...

    உண்மையற்ற பதிவு, தனி மனித தாக்குதல் மற்றும் குரோதம் விரவி நிற்கின்றது உங்கள் பதிவில், வெளிநாட்டு தமிழர் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவருமே வீண் பகட்டை விரும்புவோரே அதிகம் என்பது தான் உண்மை. நேரில் கண்டு வாழ்கின்ற என்னால் அடித்து சொல்ல முடியும்.

    6 October 2012 5:51 PM***

    நானும் பகட்டை விரும்பும் வெளிநாட்டில் வாழும் தமிழர்தாங்க.

    தங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  34. தங்கள் கருத்துக்கு நன்றி, கோவி.:-)

    ReplyDelete
  35. why this Kolaveri?

    ReplyDelete
  36. 200 சீட்டர் கொண்ட ஒரு கன்வன்சன் ஹாலோட வாடகையே 10,000 - 15,000 வரை ஆகும்.. அதுவும் சிட்டியின் நடுவில் என்றால் 30,000 வரைக் கூட ஆகும் . 5,000 - 10,000 க்கு பாங்கட் ஹால் தான் கிடைக்கும், அதுவும் 150 பேருக்கு மட்டுமே போதும், பாங்கட் ஹாலில் அரங்கேற்றம் செய்ய முடியாது .

    நான் ஆட்டவாவில் வசிக்கின்றேன். டொரோண்டோவில் வாடகை நிலவரம் மேலும் அதிகமாகும் . அத்தோடு பார்க்கிங்க் ஃபீ, காட்டரிங்க் ஃபீ இத்யாதிகள் பற்பல.

    நடன ஆசிரியர், பக்க வாத்தியங்கள், சிறப்பு விருந்தினர் ( இந்தியாவில் இருந்து அழைத்து வருவதுண்டு ), உடைகள், நகைகள் ( அதுவும் இந்தியாவில் இருந்து தான் ) எனப் பார்த்தால் மிக எளிமையாக நடத்தினால் கூட 25, 000 வரை செலவு ஆகும்.

    ஆட்டாவாவில் பல நிகழ்ச்சிகளுக்கு 100, 000 டாலர் கூட செலவு செய்கின்றார்கள். இலங்கைத் தமிழர்கள் சிலர் மாப்பிள்ளை அழைப்பை ஹெலிகாப்படரில் செய்வதுண்டு.

    நன்றி . ~ நவஜோதி டானியல்

    ReplyDelete
  37. ***நம்பள்கி said...

    பலர் பேசியாச்சு. என்னுடய கருத்து.
    பெயரில் ஒன்னும் இல்லை; ஒரு பெயரை, ஊடங்கங்கள் அவர்கள் கையில் இருப்பதால், மணக்கவும் செய்யலாம்; நார வைக்கவும் செய்யலாம்.
    (
    உ.ம்) மயிர் - முடி
    மாட்டின் பீ அல்லது கழிவு - சாணி
    மாட்டு மூத்திரம் - கோமயம்.

    இதில் நம்ம பெரியாருக்கும் பங்கு உண்டு...

    பாரதியில் இருந்து எல்லா பார்ப்பனரும் உபயோகப்படுத்தின பார்ப்பனர் என்ற சாதா வார்த்தையை அவர்களையே வெறுக்க வைத்து பிராமணாள் என்று மாற்றவைத்தார்.***

    தங்கள் கருத்துக்கு நன்றிங்க, நம்பள்கி.

    ReplyDelete
  38. ***ஆட்டாவாவில் பல நிகழ்ச்சிகளுக்கு 100, 000 டாலர் கூட செலவு செய்கின்றார்கள். இலங்கைத் தமிழர்கள் சிலர் மாப்பிள்ளை அழைப்பை ஹெலிகாப்படரில் செய்வதுண்டு.

    நன்றி . ~ நவஜோதி டானியல்***

    ஒரு முட்டையை விட்டுட்டீங்கனு நெனைக்கிறேன், ஒரு அரங்கேற்றத்துக்கு மில்லியன் டாலர் செல்வழிப்பாங்கனு கேள்விப்பட்டு இருப்பீங்க! :-)))))

    எனக்கெல்லாம் சிறுவயதிலேயே காது குத்தியாச்சி! :))))

    ReplyDelete
  39. ****Alien Alien said...

    why this Kolaveri?

    7 October 2012 3:16 AM***

    நீங்கல்லாம் "பரத்தையர் நாட்டியம்" பார்க்கிறது இல்லையா? நான் கொறைஞ்சது ஒரு 30 அரங்கேற்றங்களில் இங்கே யு எஸ்ல கலந்து இருக்கேன்.

    ReplyDelete
  40. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  41. வருண்.
    உமக்கு ரொம்ப துணிச்சல் இப்பதான் கோடங்கி அடிக்கும் இக்பால் மகனின் ப்ளாக் பார்த்தேன் அப்படியே ஒரு பின்னூட்டமும் போட்டேன். அங்க உள்ள வங்கியே இதை பார்க்களியோ பார்த்து இருந்தாங்கின்னா இன்னெறெம், கூடி நின்னு ஒப்பாரி வச்சிருப்பான்கியே எப்படியோ பிழைச்சிட்டே.

    ReplyDelete
  42. வருண் உங்கள் பதிலைப் பார்க்க முன்னரே தட்டச்சு செய்து விட்டேன். நாட்டியத்தை 20 வருடங்களாக ஆடுபவள் என்ற முறையில் நாட்டியம் பற்றி சொல்ல விரும்புகிறேன்.

    //பரத நாட்டியம் இந்திய கலை அன்று, தமிழ்நாட்டின் கலை, தமிழர் கலை, சிலப்பதிகாரத்தில் போதிய குறிப்புகள் உண்டு, பரத்தையர் நாட்டியம் திரிந்து பரத்த நாட்டியம் > பரதநாட்டியம் ஆகியுள்ளது. மாதவி (பரத்தை) நாட்டிய கலைஞர் தான். பொதுவாகவே கலைகள் அனைத்துமே குலம் சார்ந்த தொழில் என்ற அளவில் இருந்து குலத்தொழில்களில் வருமானம் உள்ளவை இன்று நிலைக்கிறது.//

    இது தவறான கருத்து. பாரத நாட்டு நடனம் என்பதால் பரதம் என்று பெயர் வந்தது என்று சிலர் சொல்வார்கள். பாவம், ராகம், தாளம் மூன்றும் இணைந்த நடனம் என்பதாலேயே பரதம் தோன்றியது என்றும் கூறுவார்கள்.

    "பரத்த" நாட்டியம் என்று ஒன்றும் இல்லை. சதிர் நடனம் என்று பரதம் அழைக்கப்பட்டது. பரத நாட்டியம் தென்னிந்தியாவில் அதிகம் ஆடப்பட்டாலும் பாரத நாட்டின் கலையே. தமிழர்களின் கலை என்று உரிமை கோரமுடியாது.

    பாரதத்தின் கலை. முக்கிய ஆறு பாரத நடனங்களில் ஒன்று. பரதம், கதக், கதகளி, மணிப்புரி, குச்சிப்புடி, ஒடிசி ஆகிய ஆறும் பாரத நாட்டின் முக்கிய நடனங்கள்.

    (பரத முனிவரால் கற்பிக்கப்பட்டதால் பரத நாட்டியம் என்று பெயர். சிவனின் சில வகை தாண்டவங்களின் போது அவரது சிலம்பம் எழுப்பிய ஒலியில் இருந்தே ப ர த என்ற எழுத்துக்கள் தோன்றியது என்றும் விகுதியான ம் உம் சேர்ந்தே பரதம் என்றும் கூறுவார்கள்.

    ReplyDelete
  43. மேலும் தமிழ் கீர்த்தனைகள் மிகவும் குறைவாகவே பரத நாட்டியத்தில் உண்டு. பெரும்பாலானவை தெலுகு கீர்த்தனைகளும் பதங்களும் வர்ணங்களுமே பரதத்தில் இருக்கிறது. இதில் தமிழனின் கலை என்று கூறுவது வேடிக்கையாகவே இருக்கிறது.

    அதிகம் இல்லாத தமிழில் கீர்த்தனைகளை தேடித் தேடி கற்றவள் யான்.

    ReplyDelete

  44. //பரத நாட்டியம் மீட்டெடுக்கப்பட்டதிலும் பல்வேறு தரப்பினர் கற்றுவருவதிலும் மகிழ்ச்சி என்றாலும் அது என்னவோ பார்பனர்கள் கொடுக்கும் கொடை போன்றும் அவர்களே கலை உலகை காக்கவந்தவர்கள் என்றும் சித்தரிப்பது மறுக்கத் தக்கது.//

    எல்லாவற்றையும் குறை சொல்லவே ஒரு குழு புறப்பட்டுவிட்டதுவோ? பரதத்தை மீட்டதில் பெரும் பங்கு ருக்மணி அருண்டேலுக்கே. வேறு யாரும் அதற்கு பங்கு கேட்க முடியாது. கேட்கவும் அருகதை இல்லை.

    //பொண்ணு பாட்டுகத்துகிறா, பரதநாட்டியம் க்ளாஸ் போறா என்று சொல்லும் பார்பனர்களைப் பார்த்து பல்வேறு தரப்பினரும் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள், ஆனால் நடனம், பாட்டு கற்றுக் கொண்ட குழந்தைகளை எந்த ஒரு கட்டுபாடுகளும் விதிக்காமல் அவர்களின் திருமணத்திற்கும் பிறகும் மேடை ஏற அனுமதிப்பார்களா என்பது ஐயமே. இந்த வகையில் பார்க்கும் பொழுது வெறும் கவுரவத்திற்காக குழந்தைகளை கற்றுக் கொள்ள பணிக்கிறார்கள் என்பது தவிர்த்து வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை//

    ஆடாமல் வீட்டில் இருக்க வேண்டாம், போய் நிகழ்ச்சி செய் என்று உரிமையுடன் மனைவியை அனுப்பும் கணவன்மார்களையும் எனக்குத் தெரியும். எனது மாமி ஒருவர் 80களிலும் (திருமணத்தின் பின்னர்) ஆடினார்கள். இப்போதும் எங்கள் நடன வகுப்பிற்கு சிலவேளைகளில் வந்து ஆடுவார்கள்.

    பரதத்தில் பலதும் காதல் ரசம் (பசளை படிந்திருக்கிறேன், மன்னவனிடம் கூறு போன்ற பாடல்கள் இருக்கிறது) சொட்டும் பாடல்களே அதிகம். பலவும் தெலுகில் இருப்பதால், தப்பித்தோம் ஆண்டவா என்று மனதினுள் நினைப்போம். அவற்றை உணர்ந்து பாவம் காட்ட சிறுமியால் முடியாது. அதனால் கல்லூரி செல்லும் வயது வரை தேவைப்படுகிறது.

    அதைவிட பரத நாட்டியும் ஒன்று ஏதோ ப்ரோக்ராமுக்காக பழகி ஆடுவதில்லை. அது ஒரு தவம். பெரிய பெரிய நடன வித்துவான்களின் பிள்ளைகள் 10 - 15 வருடங்கள் கடின பயிற்சி (காலை மாலை என்று கடும் பயிற்சி) பண்ணிய பின்னரே அரங்கேறுவார்கள். சிறு பிள்ளைகளை அரங்கேற்றுவது தவறு.

    அரங்கேற்றம் செய்ய இஷ்டமில்லாமல் புதிய புதிய உருப்படிகளைப் பழகும் பலரை எனக்குத் தெரியும்.

    இந்தியாவில் புது மாடல் செல் வைத்திருந்தால், கஷ்டப்பட்டு உழைத்து வாங்கி இருக்கிறான், அதுவே அமெரிக்கா என்றால் ஷோ காட்டுறான்.

    பகட்டு காட்டுவதை ஓர் சிலர் செய்வதை எல்லோரும் செய்வது போல பேசுவது கடுப்பை கிளப்புகிறது.

    ReplyDelete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete