Friday, October 19, 2012

பாடகி சின்மயிக்கு ஒரு சபாஷ்!

 நமக்கு இந்த ப்ளாக்ரை கட்டி அழவே நேரத்தைக்காணோம். அதனால இந்த முகநூல், ட்விட்டரு பக்கமெல்லாம் போறதே இல்லை. அந்த உலகம் என்னனே தெரியாது. பாடகி சின்மயி தன் பிரச்சினைகளோட காவல்துறைக்கு போனதும்தான் என்னனு தெரியுது.

கீழே உள்ள தகவல் ஒரு இணைய தளத்திலிருந்து அள்ளிட்டு வந்தது.

குழலி பக்கங்கள் பதிவிலிருந்துதான் என்ன நடந்ததுனு பார்க்க "அங்கே" சென்றேன்! குழலி பக்கங்களில் கொடுத்த ஒரிஜினல் இணைப்பு இங்கே!
 
சவுண்ட் கேமரா ஆகஷன்?

இது சம்மந்தமாக என்னுடைய கருத்தை தெளிவாகச் சொல்லத்தான் இந்தப் பதிவு! :)

மற்றொரு புகார் மனுவில்,"ட்விட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. 6 பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி,"சமீப காலமாக ட்விட்டர் இணையதளத்தில் அரசியல் பிரபலங்களையும், என்னைப்போல் சினிமா உலகில் இருப்பவர்களையும் மிகவும் கேவலமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுளளது. பிரதமர் உள்பட அனைவரையும் தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்து வருகிறார்கள்.

இதனால் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்களையும் படங்களையும் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.
குறிப்பாக பெண்களை குறிவைத்து அவர்களின் மனம் நோகும்படி 6 பேர் கொண்ட கும்பல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. அதிலும் என்னை பற்றி நான் ஒவ்வொருமுறையும் புகழின் உச்சியில் இருக்கும் போதெல்லாம் மிகவும் கேவலமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அவர்கள் யார் என்ற விவரங்களையும், 6 பேர் பெயர்களையும் குறிப்பிட்டு கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்.

எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் நான் வெளியிட்டுள்ளேன். எனவே இதுபோன்று வக்கிரமான செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்”என்றார்.
என்னைப் பொறுத்தவரையில் இணையதள கருத்துச் சுதந்திரம் என்பது என்ன? அது தனிமனிதருக்கு எந்த அளவுக்கு உண்டு என்பது யாருக்குமே சரியாத் தெரியாது.

சட்டப் பாதுகாவலர்கள் மற்றும் "சைபர் க்ரைம்" போன்ற சட்டங்கள் என்னவென்று யாருக்குமே தெளிவாகத் தெரியாது.

ஆனால் இந்த மாதிரி கோஷ்டி சேர்ந்துகொண்டு ஒருவரை தொடர்ந்து போய் "சித்ரவதை" செய்வதை, அட் லீஸ்ட் தாழ்மையுடன் சின்மயி வேண்டி கேட்டுக் கொள்ளும்போது நிறுத்தி இருக்கனும்.

ஒருவர் தன்னால "தாங்கமுடியலை இந்த டார்ச்சர்" னு சொல்லும்போதும் தொடர்ந்து போயி சித்ரவதை பண்ணுவது மிருகத்தனம்!

இந்த கேஸ் எப்படிபோகுதோ? எப்படி முடியப்போதோ? என்னனு  தெரியலை.

ஆனால், இதுபோல் "கம்ப்ளைன்ட்" பண்ணுவதால்  அந்த வில்லன்கள் ஆறு பேரும் இனிமேலாவது மூடிக்கிட்டு இருப்பானுகனு நம்புறேன். 
இதுபோல் கேஸ்கள் பதிவு செய்தால்தான் கொஞ்சமாவது நம்மாளுக ஒழுங்கா நடப்பானுக.

ஒருவர் அனானிமஸாக இருந்தாலும், ஐ பி அட்ரெஸை வைத்து அவர்களை பிடிப்பது மிகவும் எளிது என்பது நெறையப்பேருக்கு தெரியுமா என்னனு தெரியலை.

 இணைய தளத்தில் இன்னொரு பிரச்சினை என்ன என்றால், இதுபோல் ஹராஸ் பண்ணுபவர்கள் வயதில் இளையவர்களாவும், மைனராகவும் கூட இருக்கலாம்.

எனிவே, அம்மா ஆட்சி நடக்குது. அம்மா, அந்த ஆறு பேரையும் பிடிச்சு உள்ளே போட்டு கொஞ்சம் "பேர்" சம்பாரிக்கலாம்!

இதுபோல் அந்த ஆறு மூதேவிகளையும், அதுக செய்த அநியாயத்தையும்  போலிஸிடம் போயி,  சட்டப்படி இதை அணுகும் சின்மயி க்கு ஒரு "ஓ" போடுங்கப்பா! 

53 comments:

நம்பள்கி said...

மேலை நாடுகளில் இருந்து அம்மணிக்கு தொந்தரவு கொடுத்தால் என்ன பண்ணுவார்கள்? நம்ம சிரிப்பு போலீஸ் என்னா பண்ணும்??

இங்கே summon அனுப்பினால் அந்த பேப்பரை குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார்கள் (டின்குவை கூட துடைக்க முடியாது; ஏனென்றால் அதுக்கு உபயோகப் படுத்தும் பேப்பர் 'costly soft' பேப்பர்)

இங்க ஜானதிபதியியே குட்டையிலே முக்கி முக்கி கழுவானுங்க!

இரண்டு வருடம் தேவையா? ஒரு கும்பல் அவரை நோண்டுது என்பதை தெரிந்து கொள்ள?

மார்க்கெட் போகும் வயதான நடிகைகள் செய்யும் வேலை...சரி இந்த கேஸ் அமெரிக்கவில் வந்தால் எடுக்கவே மாட்டார்கள்.

ஒரே ஒரு கேள்வி தான். Madam, What prevented you from blocking them or at least stop engaging with them for two years?

Jayadev Das said...

அவனுங்க டீடெயில்ஸ் எல்லாம் இந்தம்மாவுக்கு எப்படி தெரிஞ்சது?

வருண் said...

*** ஒரே ஒரு கேள்வி தான். Madam, What prevented you from blocking them or at least stop engaging with them for two years?***

What if they insult her in some others twitter or face book? She cant control that? She would not like that either. Right?

வருண் said...

***Jayadev Das said...

அவனுங்க டீடெயில்ஸ் எல்லாம் இந்தம்மாவுக்கு எப்படி தெரிஞ்சது?***

Everything may be fake. ஆனால், அவங்க செய்த ட்விட்ஸை எல்லாம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கொடுத்து இருக்கலாம்! என்னனு தெரியலை. எல்லாம் ஒரு யூகம்தான் :))

நம்பள்கி said...

மேலை நாடுகளில் இருந்து அம்மணிக்கு தொந்தரவு கொடுத்தால் என்ன பண்ணுவார்கள்? நம்ம சிரிப்பு போலீஸ் என்னா பண்ணும்??

நம்பள்கி said...

[[வருண் said...*** ஒரே ஒரு கேள்வி தான். Madam, What prevented you from blocking them or at least stop engaging with them for two years?***

What if they insult her in some others twitter or face book? She cant control that? She would not like that either. Right?]]

இது அமெரிக்காவில் செல்லாது? கிளிண்டன் மேல விசாரணை நடந்து கொண்டிறுக்கும் போதே, அவரை [ஆபாசமாக] கிழிக்காத late night show கிடயாது! முக்கியமாக O' Brien

நம்பள்கி said...

கடைசியாக இந்தியாவில் ஜெயிலில் போடா சட்டம் தேவைடில்லை. எவன வேணா தூக்கி உள்ளபோடலாம்--மந்திரிகள் நினைத்தால்! இந்தியா ஹி! ஹி!!

வருண் said...

***நம்பள்கி said...

மேலை நாடுகளில் இருந்து அம்மணிக்கு தொந்தரவு கொடுத்தால் என்ன பண்ணுவார்கள்? நம்ம சிரிப்பு போலீஸ் என்னா பண்ணும்??***

அது கொஞ்சம் கஷ்டம்தான்னு நெனைக்கிறேன். ஆனால் லோக்கலா இருந்தா நிச்சயம் ஏதாவது செய்வார்கள். பொறுத்திருந்துதான் பார்க்கனும் என்ன ஆகுதுனு! கூப்பிட்டு வார்ன் பண்ணினாலே, அவனுக ஆத்துக்காரி, அம்மா எல்லாம் வெளக்கமாத்தை வச்சு இவனுகள அடிப்பாங்க. அது போதாதா? :)))

வருண் said...

nambalKi: But there is a line/limit for "freedom of speech". Check out this post!

http://timeforsomelove.blogspot.com/2012/04/blog-post_03.html

அஜீம்பாஷா said...

சைபர் கிரைம் விஷயத்லே தமிழ் நாடு போலிஸ் எப்படின்னு தெரியலே, ஆனா கேரளா போலீஸ் நல்ல அச்டிவா இருக்காங்க, ஏன்னா, 3 வருடங்களுக்கு முன்பு CPM செயலாளர் பினராய் விஜயனுக்கு சொந்தமான வீடு என்று ஒரு சொகுசு பங்களாவின் போட்டோவை கத்தார் நாட்டில் வேலை செய்யும் மலையாளி (அது வேறு யார்தோ பங்களா) வெளியிட்டிருந்தார்.
CPM செயலாளர் போலீசில் புகார் செய்த உடன் , படத்தை வெளியிட்டவரின் IP ADDRESS வைத்து அவரை கண்டுபிடித்து அவரை கேரளாவுக்கே வரவழைத்து கைது செய்தார்கள்.

வருண் said...

***அஜீம்பாஷா said...

சைபர் கிரைம் விஷயத்லே தமிழ் நாடு போலிஸ் எப்படின்னு தெரியலே, ஆனா கேரளா போலீஸ் நல்ல அச்டிவா இருக்காங்க, ஏன்னா, 3 வருடங்களுக்கு முன்பு CPM செயலாளர் பினராய் விஜயனுக்கு சொந்தமான வீடு என்று ஒரு சொகுசு பங்களாவின் போட்டோவை கத்தார் நாட்டில் வேலை செய்யும் மலையாளி (அது வேறு யார்தோ பங்களா) வெளியிட்டிருந்தார்.
CPM செயலாளர் போலீசில் புகார் செய்த உடன் , படத்தை வெளியிட்டவரின் IP ADDRESS வைத்து அவரை கண்டுபிடித்து அவரை கேரளாவுக்கே வரவழைத்து கைது செய்தார்கள்.***

இந்த செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி, பாஷா! ஐ பி ட்ரெஸ் வச்சு ஒருத்தன் ஜாதகத்தையே எடுத்துடலாம். நெறையப் பேருக்கு இது தெரியாது!

Unknown said...

நான் இந்தப் பிரச்சனையை முதலில் இருந்தே அவதானித்து வந்தவன். எனக்கு தெரிந்து நடந்ததெல்லாம் கருத்து மோதல்கள்தாம். தனிப்பட்ட தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை ஒரு முறை தவிர. அதுவும் பிரச்சனையில் சம்பந்தப்படாத வேறொருவரால். தயவு செய்து பிரச்சனையை ஆராய்ந்தபின் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பற்றி கருத்து தெரிவிக்கவும்......

வருண் said...

***Gayathri Jeyanathan said...

நான் இந்தப் பிரச்சனையை முதலில் இருந்தே அவதானித்து வந்தவன். எனக்கு தெரிந்து நடந்ததெல்லாம் கருத்து மோதல்கள்தாம். தனிப்பட்ட தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை ஒரு முறை தவிர. அதுவும் பிரச்சனையில் சம்பந்தப்படாத வேறொருவரால். தயவு செய்து பிரச்சனையை ஆராய்ந்தபின் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பற்றி கருத்து தெரிவிக்கவும்......***

அதான் காவல்துறைக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்க இல்ல? அவங்கதான் கொடுக்கும் "டேட்டா"வை வைத்து யார் மேலே தப்புனு பார்க்கப்போறாங்க.

சின்மயி மேலே தப்பென்றால், சட்டம் அவரை தண்டிக்கும்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

இதை சட்டத்திற்கு எடுத்துப் போனதுக்குத்தான் பாராட்டு! மற்றபடி இங்கே யாரும் யாரையும் குற்றவாளி என்று முடிவாகச் சொல்லவில்லை!

தங்கள் கருத்துக்கு நன்றி. :)

Unknown said...

"இதை சட்டத்திற்கு எடுத்துப் போனதுக்குத்தான் பாராட்டு! மற்றபடி இங்கே யாரும் யாரையும் குற்றவாளி என்று முடிவாகச் சொல்லவில்ல

அந்த "வில்லன்கள்" "மூதேவி" எல்லாம் என்ன சார்??????

வருண் said...

இதுபோல் ஒருவரை தொடர்ந்து "சித்ரவதை" செய்பவர்களை "அன்பாக" அழைக்கிறேன். உங்களுக்கென்ன பிரச்சினைனு தெரியலை. நீங்க யாருனு செக் பண்ணினால் ஒரு எழவும் வரமாட்டேன்கிது? யார் சார் நீங்க? :)

வருண் said...

***Gayathri Jeyanathan said...

நான் இந்தப் பிரச்சனையை முதலில் இருந்தே அவதானித்து வந்தவன். ***

But your profile says, you are woman???

Gender: Female

ஏன் வந்தவன்னு சொல்றீங்க? வந்தவள்னு சொல்லாமல்??

Unknown said...

நீங்க பொதுவா சொல்லியிருந்தா பரவால்ல சார். ஆனால் நான் படிக்கும்போது பாடகி குற்றம் சாட்டியவர்களை சொன்னது போல இருந்தது அதுதான் கேட்டேன். ஒருமுறை சரிபார்க்கவும். பொறுமையாக பதிலளித்ததுக்கு நன்றி.

நான் ஒரு சாதாரண வாசகன்.........

வருண் said...

நீங்க யாருனு பார்த்தால், நீங்களே எழுதிய ப்ராஃபைல்ல ஒரு "பெண்" னு வருது. ஆனால் "ஆண்" போல எழுதுறீங்க. நீங்க சொல்ற எதையும் நான் எப்படி நம்புறது, சார்/மேடம்???

Unknown said...

என்னை ஏன் சார் தேடுறீங்க??? என்னோட கருத்தை மட்டும் பாருங்கள்.....

Unknown said...

நான் உங்களிடம் எதை நம்பச் சொன்னேன்.சிலரை குற்றம் சாட்டி வசைபாடமுதல் நடந்ததை ஆராயச் சொன்னேன் அவ்வளவுதான்..

வருண் said...

நீங்க ட்விட்டர் ஃபாலோ பண்ணுவதாகவும், சின்மயி மேலேதான் தப்பு என்பதுபோல ஒரு கருத்தை வைக்கிறீங்க. அதை ஏற்றுக்கொள்ளனும்னா உங்க "தரம்" எனக்கு முக்கியம்.

நீங்க உங்க ஜெண்டரை "disclose" பண்ணலினா பரவாயில்லை.

"வந்தவன்"னு எந்தப் பெண்ணும் சொல்ல மாட்டாள். அப்போ நீங்க, "ஆண்". ஏன் "பெண்" போல வேடம் போடுறீங்க?

அப்படி வேடம்போடும் உங்க "கூற்றை" நான் குப்பை தொட்டியில்தான் போடனும். மன்னிச்சுக்கோங்க! :)

Unknown said...

நீங்க எதையும் ஏற்றுக்கொள்ளச் சொல்லி நான் சொல்லலியே....
என்னோட கருத்தைச் சொன்னேன். இல்ல நான் என்ன நடந்த்ததுன்னு தெரியாமத்தான் திட்டுவேன் என்றால் அது உங்க இஸ்டம். நன்றி வணக்கம்......

வருண் said...

Dear All

For the past couple of years I have been facing a group of men on Twitter who first argued with me when I said the society should be an equal place and that talent should be recognized equally for everyone. These men tweet/blog in Tamil, a couple of them write the most obscene/vulgar posts about our temples or other religions, one of them would pose in an obscene manner in front of a fem

ale idol in a temple..... the list is endless. The thing is I am not the only woman in the media who is tweeted to in obscene and vulgar manner. Others in the media and politics, mostly women are treated the same way.

Just because I disagreed, one of the men had the audacity to say that I need to be raped and cut to pieces on the road to be taught a lesson.

If others ask him why he is so vulgar he either makes it a caste issue and adds I have no right to speak because I belong to a forward caste (!!!).

I blocked them and now the campaign is that I am against Tamil/ Tamil Tweeters and Tamil Bloggers. This is the weirdest thing I have heard. I just want to clarify here, that I have blocked a few people on Twitter who insult other women and men too in the media in an obscene manner. I do not support anyone who indulges in any name calling. My mother has blocked them at other times. I want to keep my TL clear of any obscenity.

This group started a hashtag to "support" a cause. A hashtag support is of really no use in the real world. It might get covered in the media, which is what these guys want. The only way they can become "prabalam". The hashtag had mostly tweets to badmouth politicians, to keep it trending, again in very obscene terms. I would never contribute to a hashtag like that.

வருண் said...

Now the reason I am sharing it here, is that yes I do have an ethical issue with
1. rajanleaks -
2 @thala_8787 (who also says a woman who stands up must be raped)
3 senthilchn
4. VG_S
5. sharankay
and a few others who support/tweet to these people. If I didn't block those who tweet to these men, I am tagged through these handles, so that a tweet reaches me anyway. Whether these people do it of their own free will or are being paid/asked by others to do so, remains to be seen as we are working on bringing them to book. Harassment in the virtual world is also a crime.

வருண் said...

***Gayathri Jeyanathan said...

நீங்க எதையும் ஏற்றுக்கொள்ளச் சொல்லி நான் சொல்லலியே....
என்னோட கருத்தைச் சொன்னேன். இல்ல நான் என்ன நடந்த்ததுன்னு தெரியாமத்தான் திட்டுவேன் என்றால் அது உங்க இஸ்டம். நன்றி வணக்கம்..***

So, you are a woman and you support a guy who says, this?

@thala_8787 (who also says a woman who stands up must be raped)

Unknown said...

http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html
இதுதான் நடந்தது.....

Unknown said...

நீங்கள் பகிர்ந்தது எல்லாம் பாடகி சொன்னது.....
twitterla ஒருவர் பகிர்ந்தது போல, "கொத்தாளதேவன் சொன்ன கதையை கேட்ட நீங்க, இப்ப விருமாண்டி சொல்றதையும் கேட்கவேண்டும்"
http://www.rajanleaks.com/2012/03/blog-post.html இது சம்பந்தப்பட்ட ஒருவர் சொன்னது...

Unknown said...

உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.....

வருண் said...

GJ: The cops will listen to them. When the defendants were found "innocent" , I will change my opinion. Until then, let me believe someone who is not a "bisexual" like you! Thanks!

வருண் said...

GJ: நீங்க ஏன் என் கருத்தைப் பத்தி ரொம்ப கவலைப் படுறீங்க. சட்டம் என் கையில் இல்லை! ஆனால் I have my own opinion! I dont think I am going to change bcos of an "anonymous girl/guy" like you does not like it. You can have yours. Take care!

Unknown said...

Again you are not getting the point. I didn't ask you to believe me. I have just requested you to check the facts. Since you are very much curious about my identity, Me and my partner share the same laptop. when I was reading your blog, Her email account was logged in, So I commented from her email account. her last name is my name. Thanks for calling me a bisexual and thanks for your time. But a small request, remind the description in your blogger profile, it suits not only for you, but for some others also.....

வருண் said...

GJ: I am not concluding anything now. I am always "facts guy"! I dont like innocent people getting punished. If they are innocent as you claim, I would be the happiest person when they defend and win their case! Take it easy!

Unknown said...

Thanks for your reply boss.....
Take care....

வருண் said...

***But a small request, remind the description in your blogger profile, it suits not only for you, but for some others also***

People do call me "bisexual" and "split personality" and "mental" as well. I care less what other people think. So do you! :)

Anonymous said...

சின்மயின் கொஞ்சம் நாள் முன்னரே டிவிட்டரில் பிரபலமாக கீச்சி வரும் ஒருவரைப் பற்றி பேஸ்புக் தளத்தில் வினவி இருந்தார், அப்போது தெரிந்துக் கொண்டேன் என்னவோ நடக்குது என, டிவிட்டில் அடிக்கடி பிரவேசிப்பதால் டிவிட்டின் நிலைமையை நான் உணர்வேன் .. அங்கு தாறு மாறாக விமர்சனங்கள் நடப்பது இயல்பே !!!

ஆனால் வாழும் ஒரு தனி மனிதரை விமர்சிக்கலாம், ஆனால் கேவலமாக சித்தரிக்கக் கூடாது என்பதில் எனக்கும் உடன்பாடே, அந்த வகையில் சின்மயி செய்தமை சரியே ஆகும், ஆனால் பொது வாழ்வில் இருப்போரை பற்றி எதுவுமே பேசக் கூடாது என அவர் நினைப்பாரானால் அது முறையான ஒன்றல்ல, !!!

ஆகவே லட்சுமண ரேகையை அறிந்து கொள்வது இருசாராருக்கும் நலம் !!!

ஆனால் சின்மயின் அந்த ஆறுபேருடன் டிவிட்டரில் உரையாடியும் பழகியும் வந்துள்ளார் என்பது தான் உண்மை. ஆரம்பித்திலேயே கொஞ்சம் அவதானமாக இருந்திருக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம் நம் இந்திய சட்டம் எப்படியெல்லாம் வளையப் போகின்றது என !

வருண் said...

இ செ: ஒரு சில ட்விட்ஸ் எல்லாம் அவர் அம்மாவையும் இழுத்து படு கேவலமா இருக்கு. அதல்லாம் "டூ மச்". இதுபோல் ஹராஸ் பண்ணுவதெல்லாம் ஒரு மாதிரி அடிக்ஷன். இவனுகள பிடிச்சு உள்ள போட்டாத்தான் தெரியும். They dont realize that they are giving in WRITING! It is easy to get them.

Unknown said...

//ஆனால், இதுபோல் "கம்ப்ளைன்ட்" பண்ணுவதால் அந்த வில்லன்கள் ஆறு பேரும் இனிமேலாவது மூடிக்கிட்டு இருப்பானுகனு நம்புறேன்.
இதுபோல் கேஸ்கள் பதிவு செய்தால்தான் கொஞ்சமாவது நம்மாளுக ஒழுங்கா நடப்பானுக.//மிகச்சரியாக சொன்னீர்கள், சின்மயி போன்றவர்களை பாராட்டவேண்டும் துணிச்சலுக்காக.

தனிமரம் said...

மிகச்சரியாக சொன்னீர்கள், சின்மயி போன்றவர்களை பாராட்டவேண்டும் துணிச்சலுக்காக.

Unknown said...

தமிழர்கள் முகத்தில் காறித்துப்பும் சின்மயியை கண்டிக்கிறேன் !
--------------------------------------------------------------------------------------------------

``மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது?"

என்ற பொருள் தொனிக்கும் அரிய கருத்துகளை சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல..

``என்னை டுவிட்டரில் அவதூறு செய்கிறார்கள்’’ என்று கமிஷனர் ஆபிசில் புகார் செய்த பாடகி சின்மயி தான் அந்த அறிவாளி.

சின்மயி போலீசில் புகார் கொடுக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததும், எவனோ ஆபாசப்பட டார்ச்சர் கொடுத்துட்டான் போலனு தான் நினைச்சேன். ஆனால் விசாரணைல இறங்க ஆரம்பிச்சப்பிறகு தான் தெரிஞ்சது மேட்டரே வேற..

பஞ்சாயத்துக்கு காரணம் அம்மணியோடு சாதித் திமிர்.

சமூகத்தில் அடித்தளத்திலிருக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மேலே முன்னேறி வர பயன் படும் இடஒதுக்கீட்டை இழிவுப்படுத்தி அம்மணி டுவிட்டரில் எழுதுகிறார்.

அதோடு தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடந்து கொண்டிருக்கையில் மீனவர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி எழுதுகிறார். இதற்கு டுவிட்டரில் இயங்கும் ராஜன் உள்ளிட்ட தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இது தான் முக்கியமான பஞ்சாயத்துக்கு காரணம்.

உங்களுக்கு பிழைப்பு நடத்த தமிழகமும் தமிழர்களும் தேவை. வளர்ந்தவுடன் தமிழர்கள் முகத்தில் காறி துப்புவீர்கள். ஈழத்தமிழர்களும், தமிழக மீனவர்களும் கொல்லப்படுவதை கண்டிக்க தமிழனாக இருக்க வேண்டியதில்லை. மனிதனாக இருந்தாலே போதுமானது.

ஆனால் சைவப்பட்சினி என்றும் ஆச்சாரமானவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் உங்களைப்போன்றவர்கள் தமிழர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி நக்கல் அடிக்கிறீர்கள்.

இப்படி உங்கள் புத்தி இருப்பதற்கு காரணம் ``உலகத்துல இருக்கிற அத்தனை ஸ்ரீலங்கன்ஸ் எங்களுக்கு ஆதரவு ” என்று உங்கள் அம்மா பேசியதற்கும் இதற்கும் நிச்சயம் தொடர்பு இருக்கத்தானே செய்கிறது.


நியாயப்படி,
இடஒதுக்கீட்டையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் இழிவுப்படுத்தி எழுதியதற்கு சின்மயி மேல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தோழர்கள் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். வழக்கு தொடருங்கள்..

அம்மணி நீங்கள் பிரபலமாக இருப்பதை பயன்படுத்தி புகார் கொடுத்து விட்டால் நீங்கள் செய்தது எல்லாம் நியாயம் என்றாகிவிடாது. நீங்கள் உங்கள் மொழிவெறியுடனும் சாதி வெறியுடனும் எழுதுவீர்கள்.. தமிழர்கள் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா..

Unknown said...

நன்றி: கார்டுனிஸ்ட் பாலா

சதீஷ் செல்லதுரை said...

வீடு அண்ணா,மிக சிறந்த கார்டூனிஸ்ட் பாலாவின் கருத்தை இங்கு பகிர்ந்ததுக்கு நன்றி...அவரை தொந்திரவு செய்வது தவறே..அதே வேளையில் சின்மயியின் சாதி கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வருண் said...

சுரேஸ்: உங்க மாற்றுக் கருத்துக்கு நன்றி.

* தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கு தேவியில்லை

* ஈழத் தமிழர்கள் துயரத்தைப் புரியாமல், அவ்ர்களுக்கு எதிரா கருத்துச் சொன்னது.

இது ரெண்டும் அவரோட கருத்து. இதில் நீங்க வேறுபடலாம். ஆனால் இதையெல்லாம் சட்டப்படி ஒண்ணும் செய்யமுடியாது.

அதுக்காக, அவங்க அம்மாவை அவமானப்படுத்துவது சரினு சொல்றீங்களா?

பாரம்பரிய மீனவன் said...

//சட்டப்படி ஒண்ணும் செய்யமுடியாதே// பொறுத்திருந்து பாருங்கள்..

பாரம்பரிய மீனவன் said...

//சட்டப்படி ஒண்ணும் செய்யமுடியாதே// பொறுத்திருந்து பாருங்கள்..

வருண் said...

சரிங்க, பொறுத்திருந்து பார்க்கிறேன். நீங்களும் இது சம்மந்தமான "கேஸ்"களை இங்கே "அப்டேட்" செய்யுங்க. நன்றி.

வருண் said...

This response is intended to appear in the following thread. As he is "sluggish" and his moderation is not well-understood for me, I give a copy of that response in my blog as well. s I think it is important!


////செலிபிரட்டி அட்ராசிட்டி! - சின்மயிக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் 6 ...
குழலி / Kuzhali///

எல்லாருமா சேர்ந்து "இந்தம்மாவை" ஏன் பெரியாளாக்கி விடுறீங்கனு எனக்கு விளங்கல..

செலிபிரிட்டியாவது மண்ணாங்கட்டியாவது. எங்கேயோ பிறந்து வளர்து தமிழ்நாட்டில் குடியேறிய, "அறியாப் பெண்". Just பாடத்தெரியும் என்பதால் எல்லோருக்கும் தெரியும். That's all.

These guys ( or six) go to her twitter just for flirting with her or whatever. It is not that they care about her half-baked political views. She is not such an important person to worry about either, after all.

ரிசெர்வேஷன், ஈழத்தமிழர் பிரச்சினையையெல்லாம் "இது" சரியாப் புரிந்து கொண்டிருந்தால்தான் அதிசயம்.

"ஐ ஹேட் ஹெர்"னு சொல்லி நீங்களும் அதை பெரியாளாக்கி விடுறீங்க. :))))

எனக்கு பிரச்சினை என்ன வென்றால், ஒரு சில ட்வீட்களில் அதனுடைய அம்மாவை கேவலமாக விளித்து/கலாய்த்து அவமானப் படுத்தி இருக்காங்க. அதை நிச்சயமாக வன்மையாக கண்டிக்கனும், தண்டிக்கனும் (சட்டப்படி)

You should have said, I HATE those Tamils who misbehaved rather! You are only trying to "pay off" her for her political views NOW. This is not the "correct time" to do so!

ps: I am not sure why you are not properly publishing even relevant responses in the name of "moderation"! I hate you too, kuzali, when you do that! Thanks


தணல் said...

"பாடகி சின்மயிக்கு ஒரு சபாஷ்!"

I am too!

வருண் said...

http://www.ndtv.com/article/cities/chennai-professor-arrested-for-tweets-about-singer-chinmayi-283070


Chennai: A male professor in Chennai has been arrested for vulgar tweets about popular singer Chinmayi Sripada.

Saravana Kumar Perumal, who teaches at the National Institute of Fashion Technology or NIFT, allegedly posted obscene and threatening messages about the singer as well as her mother on both Twitter and Facebook.

In her police complaint filed on October 18, Ms Sripada alleged that since January last year, "a few individuals have threatened to kill, rape and assault me on Twitter". She added that "there are aspersions cast on my character as well as a chronic steam of vulgar references and innuendoes even about my mother". She listed six twitter handlers - @senthilchn, @RajanLeaks, @asharavkay, @losongelesram, @vivajial and @thyirvadai - and alleged that the same people "have also been saying I'm against Tamil...and that I have also taken up cudgels against Sri Lankan Tamils". She said she feared that the "patently false information that could pit groups against me, thereby endangering my life has also been put out by trouble makers".

Police say they have identified the group responsible for the tweets under question. According to them, the NIFT professor's mobile phone and broadband connection records match with the said tweets. They have arrested him under the Information Technology Act 2005 and Prevention of Women Harassment Act.

Unknown said...

Please refer the interview "nerpada pesu" in Pudhiya Thalaimurai. I do endorse the views of Nirmala Kotravai.

Unknown said...

I do endorse the views of Nirmala Kotravai in this matter which was telecasted in Puthiya Thalaimurai.

Unknown said...

Please refer the interview "nerpada pesu" in Pudhiya Thalaimurai. I do endorse the views of Nirmala Kotravai.

Kite said...

ராஜன் தரப்பு நியாயம் பேசும் முன்பு சின்மயின் புகார் என்ன என்று பார்ப்பது நலம். இட ஒதுக்கீட்டை எதிர்க்கவும், மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல் இருப்பதற்கும் சின்மயிக்குக் கருத்துரிமை உண்டு. சின்மயி தன் புகாரில் கீழ் கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளார்:

'கருத்து சொல்றாளாமோ. மொதல்ல இந்த பார்ப்பாரப் பெண்களை ரோட்ல இழுத்துப் போட்டு ரேப் பண்ணனும்' 'அதோட இல்ல தல இந்த பாப்பார நாய்களை சங்கு சங்கா அறுத்து எறியணும் தல' .

இதையே ஒரு கோனார் பெண்ணையோ, தேவர் பெண்ணையோ இப்படி செய்ய வேண்டுமென்று சொல்லியிருந்தால் பகுத்தறிவாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் அனைவரும் ராஜனைக் கண்டித்திருப்பார்கள். ஏன் அது ஒரு சட்டசபை விவாதமாகக் கூட ஆகிருக்கும்.

சமாதானத்திற்கு முயற்சித்த பின்பு சின்மயி சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்துள்ளார். பின்பு இப்படி எழுதினால் இந்த கும்பலைக் கூப்பிட்டு வைத்துக் கொஞ்சுவார்களா?

என்ன செய்தாலும் சொன்னாலும் பார்ப்பனர்கள் வாயை மூடிக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பார்கள் என்ற எண்ணத்தை இது உடைப்பதால் இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன்.

வருண் said...

ஜெகனாத்:

இங்கே திராவிடர்கள் எல்லாரும் பார்ப்பனர்கள் போல தங்கள் பிரச்சினையை மட்டும் பேசும் கீழ்த்தரமானவர்கள் கெடையாது.

சின்மயி மிரட்டப்படுவது தப்புனு எத்தனையோ திராவிடர்கள் கொடி பிடிச்சுக்கொண்டு இருக்காங்க என்பதை உமது மண்டையில் ஏற்றும்.

மீனா கந்தசாமியை திட்டியதற்கும், ஹரியானாவில் நடக்கும் கற்பழிப்புகளுக்கும் ஒரு பார்ப்பான்கூட வாயைத் திறகவில்லையே அது ஏன்???

பார்ப்பானுகளுக்கு அவனுகளைப் பத்தி மட்டும்தான் கவலை. சின்னப்புத்தி உள்ளவனுகனு தெரிந்து கொள்ளும்!