Tuesday, January 22, 2013

விஸ்வரூபத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் இயக்கம்!

ஒரு வழியாக டி ட்டி எச் பிரச்சினை ஓய்ந்தது! படம் நல்லபடியா 25 தேதி வெளி வரப்போகுதுனு கமல் ரசிகர்கள் எல்லாம் சந்தோசப்பட்டுக் கொண்டு இருக்கும்போது மறுபடியும் பழைய  பிரச்சினை ஆரம்பிச்சுருச்சு! இது எதிர்பார்த்த ஒண்ணுதான்! இஸ்லாமியர்கள் எல்லாம் கமல் திரு குர்ரான் அது இதுனு சொல்லும்போதே "என்ன குர்ரானா?" "தீவிரவாதமா?" னு ஒரே குழப்பத்துடன் இருந்தார்கள்.

தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறிவிப்பு!

நான் ஏற்கனவே சொன்னேன் கமல் எந்தமாரி (தீவீரவாதிகள் பக்கம் நியாயம் இருப்பதாகவோ அல்லது  அதை தப்பு என்று சொன்னாலும்) எடுத்து இருந்தாலுமே, இஸ்லாம் அல்லது இஸ்லாமியர்கள் பற்றி இவர் ஒரு வரி பேசினாலே இஸ்லாமியர்களுக்கு எரிச்சல்தான் வரும் என்று. இதில் இவரு தப்பிக்க வழியே இல்லைனு தெரியும்.

கமல், டி ட்டி எச் வெளியீட்டுக்கும் முயன்ற காரணமே இதுதான். இந்தப் படத்திற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு வரும் என்று நன்கு அறிந்துதான் அதை முயன்றார்.  அந்த முயற்சி பல காரணங்களால் தோல்வியடைந்து விட்டது. இப்போ பழைய, இவர் ஓரளவுக்கு எதிர்பார்த்த இஸ்லாமியர்கள் எதிர்ப்புப் பிரச்சினை மறுபடியும் கிளம்பியுள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாத கமலை கடவுள் காப்பாத்த மாட்டாரு! அவரை யாராவது மனிதநேயம் பாராட்டுறவங்க காப்பாத்தினால் சரி!

காப்பாத்துவாங்களா??

என்ன பிரியாணி வேணுமா?

48 comments:

  1. பாவம் கமல். என்ன செய்தாலும் பிரச்சனை ஆகிவிடுகிறது.

    ReplyDelete
  2. //ஒரு வழியாக டி ட்டி எச் பிரச்சினை ஓய்ந்தது! படம் நல்லபடியா 25 தேதி வெளி வரப்போகுதுனு கமல் ரசிகர்கள் எல்லாம் சந்தோசப்பட்டுக் கொண்டு இருக்கும்போது மறுபடியும் பழைய பிரச்சினை ஆரம்பிச்சுருச்சு! //

    இது பழைய நிலை அல்ல..திரைப்படத்தை பார்த்த பிறகே இந்த கொந்தளிப்பு..!!!

    “விஸ்வரூபம் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம்” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு :

    நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.

    அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

    எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்

    அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது

    இப்படிக்கு

    ஆர்.ரஹ்மத்துல்லாஹ்

    (பொதுச் செயலாளர்)****

    ReplyDelete
  3. ***T.N.MURALIDHARAN said...

    பாவம் கமல். என்ன செய்தாலும் பிரச்சனை ஆகிவிடுகிறது.***

    இப்போ பிரச்ச்சினை என்னவென்றால், அரசியல்வாதிகள் ஜெயா, மற்றும் மு க போன்றவர்களே கமலுக்கு இந்த விசயத்தில் உதவமாட்டார்கள்.

    பிஜெ பி, ஆர் எஸ் எஸ், இந்து முன்னனி போன்றவகள் கை கொடுத்தாலும் அதுவும் உபத்திரவம்தான், உதவி அல்ல!

    He is in BIG TROUBLE!

    ReplyDelete
  4. கமலை தமிழக மக்கள்ஸ் தான் காப்பாத்தணும் ... ! விளம்பர பிரியர்களுக்கு ஊறுகாய் எப்போதுமே கமல் தான் என நினைக்கின்றேன் ... ! அவ்வ்வ்வ்வ் !!!

    ReplyDelete
  5. ***அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.***

    அப்படி என்னத்தத்தான் எடுத்து இருக்காருனு வெளங்கலை!

    ReplyDelete
  6. ***இக்பால் செல்வன் said...

    கமலை தமிழக மக்கள்ஸ் தான் காப்பாத்தணும் ... ! விளம்பர பிரியர்களுக்கு ஊறுகாய் எப்போதுமே கமல் தான் என நினைக்கின்றேன் ... ! அவ்வ்வ்வ்வ் !!!***

    என்ன இப்படி சொல்லீட்டீங்க, "விளம்பரப் பிரியர்களுக்கு" ஊறுகாய் "இஸ்லாம்" னு இல்ல சொல்றாக! அவ்வ்வ்!

    ReplyDelete
  7. //என்ன இப்படி சொல்லீட்டீங்க, "விளம்பரப் பிரியர்களுக்கு" ஊறுகாய் "இஸ்லாம்" னு இல்ல சொல்றாக! அவ்வ்வ்!//

    சரியா சொன்னீங்க வருண்! இக்பால் செல்வனும் ஹிட்ஸ் கிடைக்க வேண்டி அவ்வப்போது இதைத்தான் செய்வது வழக்கம.

    ReplyDelete
  8. //சரியா சொன்னீங்க வருண்! இக்பால் செல்வனும் ஹிட்ஸ் கிடைக்க வேண்டி அவ்வப்போது இதைத்தான் செய்வது வழக்கம.//

    நீங்களும் சரியா சொன்னீங்க சுவனப்பிரியன்..ஊறுகாயை ஓவரா தொட்டு தமிழ்மணம் தரத்தில் இரண்டாம் இடம்(!)..அடுத்தவாட்டி முதல் இடம்தான் போல.. அவ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  9. வருண்,

    சலாம்.

    //அப்படி என்னத்தத்தான் எடுத்து இருக்காருனு வெளங்கலை!//

    இதில் உங்க கேள்விகளுக்கு பதில் உள்ளது (படத்தை பார்த்தவர்கள் கூறுவது).

    ***படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன், தீவிரவாதிகளின் கையேடு என்பதைப் போல் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன.
    தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிக்கின்றன என்பது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
    இந்தியத் திரைப்பட வரலாற்றில் இவ்வளவு மோசமாக ஒரு திரைப்படத்தை எடுத்திருக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை போன்ற நகரங்களெல்லாம் சர்வதேச தீவிரவாதிகளின் புகலிடங்கள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளன.***

    http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=2973:2013-01-22-15-21-34&catid=58:2009-10-11-12-42-41

    நன்றி,

    ReplyDelete
  10. // என்ன இப்படி சொல்லீட்டீங்க, "விளம்பரப் பிரியர்களுக்கு" ஊறுகாய் "இஸ்லாம்" னு இல்ல சொல்றாக! அவ்வ்வ்! //

    :-) :-)) :-))

    ReplyDelete
  11. வருண்..

    எதார்த்தம் என்னன்னா.. டிஎன்டிஜே, தமுமுக இரண்டு இயக்கங்களும் வர்றதுக்கு முன்னாடி முஸ்லிம்களின் போராட்ட குணம் மழுங்கி இருந்துச்சு...

    இந்த இரண்டு அமைப்புகளும் போராட்டத்தின் சக்திய மக்களுக்கு உணர வச்சிருக்கு...

    கடந்த 10 வருடங்களிக் காலூன்றிய இயக்கங்கள் தான் இவை.. இவை முன்னமே வந்து இருந்தா விஜயகாந்தும், அர்ஜுனும் ரொம்ப பாதிக்கபட்டு இருப்பாங்க...

    :) :-)) :-)))

    ReplyDelete
  12. //ஊறுகாயை ஓவரா தொட்டு தமிழ்மணம் தரத்தில் இரண்டாம் இடம்(!)..அடுத்தவாட்டி முதல் இடம்தான் போல.. அவ்வ்வ்வ்வ்... ///
    நீங்களும் சரியா சொன்னீங்க நாகூர் மீரான் ஊறுகாயை ஓவரா தொட்டு தொட்டு மற்ற சுவைகளை அறியதளவுக்கு நாக்கெல்லாம் மறத்துபோச்சு....:) ஹுக்கு ஹுக்கு

    ReplyDelete
  13. எல்லோரும் ஊறுகாயைப் பற்றி ரசித்து ரசித்து பேசுவதைப் பார்த்தால் நல்ல அனுபவம் இருக்குது என நினைக்கின்றேன் .. அவ்வ்வ் .. :))

    ReplyDelete
  14. /இரண்டு இயக்கங்களும் வர்றதுக்கு முன்னாடி முஸ்லிம்களின் போராட்ட குணம் மழுங்கி இருந்துச்சு/ ஆமாம் ! முன்னலாம் தமிழக முஸ்லிம் அமைதியை விரும்பினாங்க, இப்போலாம் .. !!?!!

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. / /இரண்டு இயக்கங்களும் வர்றதுக்கு முன்னாடி முஸ்லிம்களின் போராட்ட குணம் மழுங்கி இருந்துச்சு/ ஆமாம் ! முன்னலாம் தமிழக முஸ்லிம் அமைதியை விரும்பினாங்க, இப்போலாம் .. !!?!! //

    ஹா..ஹா.. இப்பைலாம்?? கைல குண்டோட சுத்துறாங்களா??? எங்க வைக்கலாம்னு?? எத்தனை குண்டு வெடிச்சு இருக்கு தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில்???

    தென்காசில வெடிச்சுச்சு லாஸ்டா?? வச்சது உங்க பங்காளிக...

    இப்படி உண்மைக்கு மாறா கமென்ட் பண்ணைல உங்க மனசாட்சி உறுத்தாதா???

    இஸ்லாமியர்கள் எது சொன்னாலும் எதிர்ப்பீர்களா?? இது தான் உங்கள் நிலையா?? அப்ப ஆள வச்சி தான் பார்ப்பீங்க, சம்பவத்த வச்சி பார்க்க மாட்டீங்க??

    இதுல நடுநிலை கண்ணாடி வேற...

    ReplyDelete
  17. Advani yathiraiyin pothu Madurai pakkathule Palathil Kundu aduthu Madurai city Oru Hindu Kovil pakkathula Kundu Vachavanka yaru Boss..! Ellam muslim Pankalinka than.. Ithellam unka vasathikku mathiri maraikkureenka..!

    ReplyDelete
  18. //கடவுள் நம்பிக்கை இல்லாத கமலை கடவுள் காப்பாத்த மாட்டாரு! அவரை யாராவது மனிதநேயம் பாராட்டுறவங்க காப்பாத்தினால் சரி!//

    ஹா...ஹா....ஹா.....

    கடவுளே காப்பாத்த மாட்டாருன்னா வேற யாராலே காப்பாத்த முடியும்..?

    ReplyDelete
  19. dear brother Varun,
    we oppose only such 'anti-social elements' like 'unnai pol oruvan', 'thuppaakki', 'visvaroopam'... and not even Kamalhasan or vijay. hope you got our point.

    ReplyDelete
  20. //முன்னலாம் தமிழக முஸ்லிம் அமைதியை விரும்பினாங்க, இப்போலாம் .. !!?!!//

    முன்னலாம் தமிழக முஸ்லிம் அமைதியா இருக்கட்டும்னு விரும்பினாங்க, இப்போலாம் .. !!?!!

    ReplyDelete
  21. oru padathila inthuvai thiviravaathiya kaatina ungaluku santhosam.. but ungalai kaatina pirachanai. BTW im not against Muslims.

    ReplyDelete
  22. ****சுவனப் பிரியன் said...

    //என்ன இப்படி சொல்லீட்டீங்க, "விளம்பரப் பிரியர்களுக்கு" ஊறுகாய் "இஸ்லாம்" னு இல்ல சொல்றாக! அவ்வ்வ்!//

    சரியா சொன்னீங்க வருண்! இக்பால் செல்வனும் ஹிட்ஸ் கிடைக்க வேண்டி அவ்வப்போது இதைத்தான் செய்வது வழக்கம.***

    வாங்க, சுவனப் பிரியன்! :)

    ReplyDelete
  23. ***Aashiq Ahamed said...

    வருண்,

    சலாம்.

    //அப்படி என்னத்தத்தான் எடுத்து இருக்காருனு வெளங்கலை!//

    இதில் உங்க கேள்விகளுக்கு பதில் உள்ளது (படத்தை பார்த்தவர்கள் கூறுவது).

    ***படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன், தீவிரவாதிகளின் கையேடு என்பதைப் போல் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன.
    தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிக்கின்றன என்பது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
    இந்தியத் திரைப்பட வரலாற்றில் இவ்வளவு மோசமாக ஒரு திரைப்படத்தை எடுத்திருக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை போன்ற நகரங்களெல்லாம் சர்வதேச தீவிரவாதிகளின் புகலிடங்கள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளன.***

    http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=2973:2013-01-22-15-21-34&catid=58:2009-10-11-12-42-41

    நன்றி,**

    விளக்கத்திற்கும், தொடுப்பிற்கும் நன்றி சகோ, ஆஷிக் அஹமது! :)

    ReplyDelete
  24. கடவுள் நம்பிக்கை இல்லாத கமலை கடவுள் காப்பாத்த மாட்டாரு! அவரை யாராவது மனிதநேயம் பாராட்டுறவங்க காப்பாத்தினால் சரி!///

    பிரச்சினையே மத நம்பிக்கயாளர்கலாள் தானே,,,
    அப்போ எப்படி இங்க கடவுள் உதவுவார்!
    மதம் இல்லாம கடவுள் மட்டும் இருந்திருந்தால் இந்த உலகம் பூங்காவனம் அன்றோ....?
    கமலுக்கு எந்த பிரச்சினையும் வந்திருக்காது.
    ஓசி விளம்பரமும் கிடசுருக்காது!

    ReplyDelete
  25. அன்பு..

    // Oru Hindu Kovil pakkathula Kundu Vachavanka yaru Boss.. //

    ஹா..ஹா.. முஸ்லிம்கள் மீது பழி வர வேண்டும் என்ற ஒரே கயமத்தனமான எண்ணத்தில், தன் அலுவலகத்தில் தானே குண்டு வைக்கும் ஒரு இயக்கத்திற்கு, கோயிலுக்கு அருகில் குண்டு வைப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை...

    ஒரு முஸ்லிம் ஒரு போதும் அடுத்தவரின் வழி பாட்டிற்க்கு குறுக்கே நிற்க மாட்டான், வழி பாட்டு தலத்தையும் சேத படுத்த மாட்டான்... அதற்கு இஸ்லாத்தில் கடுகளவும் அனுமதி இல்லை....

    ReplyDelete
  26. சிராஜ் : ஆப்கானில் மிகபெரிய புத்த சிலையை தகர்த்தது யார் ?

    ReplyDelete
  27. Varun! I recommend you to read - Black Friday - The True Story of the Bombay Bomb Blasts, a book by S. Hussain Zaidi about the 1993 Bombay bombings or watch the movie Black Friday Hindi film written and directed by Anurag Kashyap.

    The entire movie depicts the true story of raising Islamic fundamentalism in Indian soil.Does any Islamist raise a finger on the theme of the story? Why visvaroopam?

    ReplyDelete
  28. ashwin ajay : ஆப்கானில் தற்போது மிகபெரிய புத்த சிலையை தகர்த்துக்கொண்டு இருப்பவர்கள் யார் ?

    http://www.nytimes.com/2012/12/23/opinion/sunday/chinese-led-copper-mining-threatens-afghan-buddhist-monasteries.html?_r=2&

    உங்களால் தடுக்க முடிந்தால்... தடுக்கிற தகிரியம் இருந்தால்... தடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்...

    புத்தர் சிலை உடைபடுவதை உடனே தடுக்கலாம்..!

    எப்படி வசதி..?

    ReplyDelete
  29. துணிஞ்சு படம் எடுத்தவர் அதையும் துணிஞ்சு சந்திப்பார்...

    ReplyDelete
  30. மு.செ.மு. நெய்னா முஹம்மது
    January 23, 2013 at 6:39 PM
    (Source Adiraixpress)
    நடிகர் கமலுக்கு தேவையில்லாத வேலை இது. நம் ஊரில், நம் மாவட்டத்தில், நம் மாநிலத்தில், நம் நாட்டில் தினம், தினம் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்து சங்கடப்பட்டு வருகிறோம்.

    உதாரணத்திற்கு பருவ மழை பொய்த்துப்போனதால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் தற்கொலைகள்.

    4 வயது சிறுமி முதல் 65 வயது கிழவி வரை ஆளாகும் பாலியல் பலாத்காரங்கள்.

    அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் ஆதாரமாய் விளங்கும் காவிரி, கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டுப்பிரச்சினை.

    டீசல், பெட்ரோல், வீட்டு சமையல் எரிவாயுவின் மாதாந்திர விலை ஏற்றம்.

    சில்ல‌ரை வ‌ர்த்த‌க‌த்தில் அந்நிய‌ முத‌லீட்டு நுழைவால் நம்நாட்டு சிறு,குறு வ‌ணிக‌ர்க‌ளின் வேத‌னையும், வ‌ருத்த‌ங்க‌ளும்.

    நாட்டில் அண்மையில் ஆங்காங்கே ந‌ட‌ந்த‌ குண்டு வெடிப்பில் ம‌த‌வாத‌ ச‌க்திக‌ளின் அம்ப‌ல‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ச‌திச்செய‌ல்க‌ள்.

    பெட்டிக்க‌டைக‌ளை விட‌ பெருகி வ‌ரும் அர‌சு (டாஸ்மாக்)ம‌துக்க‌டைக‌ளால் ந‌ட‌க்கும் அன்றாட‌ குற்ற‌ங்க‌ள்.

    அன்றாட‌ வாழ்வாதார‌த்திற்காக‌ க‌ட‌லுக்கு மீன் பிடிக்க‌ச்சென்றால் வீடு வ‌ந்து சேர்வோமோ? இல்லையோ? என இலங்கை கடற்படையின் அன்றாடம் அரங்கேறும் அட்டூழியங்களால் நிச்ச‌ய‌ம‌ற்றுப்போன‌ ந‌ம் த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ளின் ப‌ரிதாப‌ நிலை.

    பொறுப்ப‌ற்ற‌ அர‌சு எந்திர‌ங்க‌ளால்/அதிகாரிக‌ளால் அன்றாட‌ம் அர‌ங்கேறும் ஊழ‌ல், ல‌ஞ்ச‌ லாவ‌ண்ய‌ம், அல‌ட்சிய‌ அதிகார‌ம் என‌ வ‌றுத்தெடுக்க‌ப்ப‌டும் நாட்டு ம‌க்க‌ள்.

    சாதித்தீயால் தென்மாவ‌ட்ட‌ங்க‌ளில் க‌ருகி வ‌ரும் ம‌னித‌ நேய‌ம். என இப்ப‌டி எவ்வ‌ள‌வோ அத்தியாவ‌சிய‌ பிர‌ச்சினைக‌ள் ந‌ம் த‌லைக்கு மேல் வெள்ள‌மென‌ அன்றாட‌ம் ஓடிக்கொண்டிருக்க‌ உன‌க்கு ஏன்ன‌ய்யா இந்த‌ வேண்டாத‌ வேலை?

    உன் ம‌ரும‌க‌ன் ம‌ணி ர‌த்ன‌ம் போல் இப்ப‌டி ஒரு சிறுபாண்மை ச‌மூக‌த்தை வேத‌னைப்ப‌டுத்தி அதில் எப்ப‌டித்தான் உன‌க்கு நாலு, காசு ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌ ம‌ன‌ம் வ‌ருகிற‌தோ?

    படத்தில் ஃபேக்ட்டைத்தானே சொல்கிறேன் என‌ நீ வித‌ண்டாவாத‌ம் செய்தால் மேலே குறிப்பிட்ட‌ பிர‌ச்சினைக‌ளெல்லாம் என்ன‌ ப‌க்க‌த்து பாக்கிஸ்தானின் பிர‌ச்சினைக‌ளா?

    இப்ப‌டி ஓரிறையை ம‌ட்டும் வ‌ண‌ங்கி தான் உண்டு, த‌ன் வேலையுண்டு என்றிருக்கும் ச‌முதாய‌த்தின் மார்க்க‌ அறிஞ‌ர்க‌ளைக்கூட‌ தெருவுக்கு வ‌ந்து போராட‌ வைத்து சங்கடப்படுத்துவதில் என்ன‌ தான் உன‌க்கு ச‌ந்தோச‌மோ?

    ப‌ர‌ப‌ர‌ப்பாய் பேச‌ப்ப‌டும் ம‌க்க‌ளாலும், உற்சாக‌ப்ப‌டுத்தும் ஊட‌க‌ங்க‌ளாலும் கோடிக‌ள் ப‌ல‌ உன் கால‌டியில் வ‌ந்து விழும் என்ற‌ ம‌னித‌நேய‌ம‌ற்ற‌ உன் கொள்கையில் நீ பிடிவாத‌மாக‌ இருந்தால் உன‌க்கு ஒன்று சொல்லிக்கொள்ள‌ விருப்ப‌ம் "இர‌ண்டாவ‌து முறையாக‌ அமெரிக்க‌ அதிப‌ராக‌ ப‌த‌வி ஏற்றுள்ள‌ ப‌ராக் ஒபாமாவை ப‌ற்றியோ அல்ல‌து இஸ்ரேலின் உண்மை வ‌ர‌லாறு ப‌ற்றியோ உலகமே விமர்சித்து வியக்கும் வண்ணம் ப‌ட‌ம் எடுத்து பில்லிய‌ன் டால‌ர்க‌ள் பார்க்க‌ உம‌க்கு துணிவேதும் உண்டோ?

    இத‌ற்கு ப‌ரிகார‌மாக‌ அடுத்த‌ ப‌டத்தில் முஸ்லிம் பெய‌ரிட்டு நீ ந‌டித்து விடுவ‌தால் அநியாயமாய் வாங்கிய‌ அடிக‌ளும், அத‌னால் வ‌ரும் த‌ளும்புக‌ளும் வ‌லியின்றி எளிதில் ம‌றைந்து போகாது. சாப‌மிட்டே அது ம‌ர‌ணிக்கும்.

    ReplyDelete
  31. **** சிராஜ் said...

    வருண்..

    எதார்த்தம் என்னன்னா.. டிஎன்டிஜே, தமுமுக இரண்டு இயக்கங்களும் வர்றதுக்கு முன்னாடி முஸ்லிம்களின் போராட்ட குணம் மழுங்கி இருந்துச்சு...

    இந்த இரண்டு அமைப்புகளும் போராட்டத்தின் சக்திய மக்களுக்கு உணர வச்சிருக்கு...

    கடந்த 10 வருடங்களிக் காலூன்றிய இயக்கங்கள் தான் இவை.. இவை முன்னமே வந்து இருந்தா விஜயகாந்தும், அர்ஜுனும் ரொம்ப பாதிக்கபட்டு இருப்பாங்க...

    :) :-)) :-)))****

    வாங்க சிராஜ்!

    பிரச்சினை வரும்னு நல்லாத் தெரிஞ்சுதான் கமல் அமெரிக்கா போயிட்டார் போல! :)

    ReplyDelete
  32. ***~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

    //கடவுள் நம்பிக்கை இல்லாத கமலை கடவுள் காப்பாத்த மாட்டாரு! அவரை யாராவது மனிதநேயம் பாராட்டுறவங்க காப்பாத்தினால் சரி!//

    ஹா...ஹா....ஹா.....

    கடவுளே காப்பாத்த மாட்டாருன்னா வேற யாராலே காப்பாத்த முடியும்..?****

    கடவுளை விடுங்க, மு க வும் ஜெ ஜெ யும் கைவிடாமல் இருந்தாலே பெரிய விடயம்!

    ReplyDelete
  33. ***~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

    dear brother Varun,
    we oppose only such 'anti-social elements' like 'unnai pol oruvan', 'thuppaakki', 'visvaroopam'... and not even Kamalhasan or vijay. hope you got our point.***

    I hear that it has not passed the censor board of UAE! How can he sell this product in middle-east?

    ReplyDelete
  34. ***drogba said...

    oru padathila inthuvai thiviravaathiya kaatina ungaluku santhosam.. but ungalai kaatina pirachanai. BTW im not against Muslims. ***

    KH also says he is not against muslims. Muslims are also saying they have nothing against Kamal. They just dont like the plot and story etc. :)

    ReplyDelete
  35. **** Rasu Krishanthan said...

    கடவுள் நம்பிக்கை இல்லாத கமலை கடவுள் காப்பாத்த மாட்டாரு! அவரை யாராவது மனிதநேயம் பாராட்டுறவங்க காப்பாத்தினால் சரி!///

    பிரச்சினையே மத நம்பிக்கயாளர்கலாள் தானே,,,
    அப்போ எப்படி இங்க கடவுள் உதவுவார்!
    மதம் இல்லாம கடவுள் மட்டும் இருந்திருந்தால் இந்த உலகம் பூங்காவனம் அன்றோ....?
    கமலுக்கு எந்த பிரச்சினையும் வந்திருக்காது.
    ஓசி விளம்பரமும் கிடசுருக்காது!***

    விஸ்வரூபம் படமும் வந்திருக்காது அப்போ! :)

    ReplyDelete
  36. ***ராஜ நடராஜன் said...

    Varun! I recommend you to read - Black Friday - The True Story of the Bombay Bomb Blasts, a book by S. Hussain Zaidi about the 1993 Bombay bombings or watch the movie Black Friday Hindi film written and directed by Anurag Kashyap.

    The entire movie depicts the true story of raising Islamic fundamentalism in Indian soil.Does any Islamist raise a finger on the theme of the story? Why visvaroopam?***

    அவர்கள் படத்தில் ஒரு வசனம் இருக்கு..

    காஃபியையும் சரி, அரசியலும் சரி தமிழ்நாட்டை எவனும் மிஞ்சிக்க முடியாது!

    ReplyDelete
  37. ***ரெவெரி said...

    துணிஞ்சு படம் எடுத்தவர் அதையும் துணிஞ்சு சந்திப்பார்...***

    அவரு, பிரச்சினைகளையெல்லாம் அமெரிக்கால இருந்து "ஆன் லைன்"லயே சந்திக்கிறாராம். :)))

    ReplyDelete
  38. ///Abdul Rahman said...

    மு.செ.மு. நெய்னா முஹம்மது
    January 23, 2013 at 6:39 PM
    (Source Adiraixpress)
    நடிகர் கமலுக்கு தேவையில்லாத வேலை இது. நம் ஊரில், நம் மாவட்டத்தில், நம் மாநிலத்தில், நம் நாட்டில் தினம், தினம் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்து சங்கடப்பட்டு வருகிறோம்.

    உதாரணத்திற்கு பருவ மழை பொய்த்துப்போனதால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் தற்கொலைகள்.

    4 வயது சிறுமி முதல் 65 வயது கிழவி வரை ஆளாகும் பாலியல் பலாத்காரங்கள்.

    அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் ஆதாரமாய் விளங்கும் காவிரி, கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டுப்பிரச்சினை.

    டீசல், பெட்ரோல், வீட்டு சமையல் எரிவாயுவின் மாதாந்திர விலை ஏற்றம்.

    சில்ல‌ரை வ‌ர்த்த‌க‌த்தில் அந்நிய‌ முத‌லீட்டு நுழைவால் நம்நாட்டு சிறு,குறு வ‌ணிக‌ர்க‌ளின் வேத‌னையும், வ‌ருத்த‌ங்க‌ளும்.

    நாட்டில் அண்மையில் ஆங்காங்கே ந‌ட‌ந்த‌ குண்டு வெடிப்பில் ம‌த‌வாத‌ ச‌க்திக‌ளின் அம்ப‌ல‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ச‌திச்செய‌ல்க‌ள்.

    பெட்டிக்க‌டைக‌ளை விட‌ பெருகி வ‌ரும் அர‌சு (டாஸ்மாக்)ம‌துக்க‌டைக‌ளால் ந‌ட‌க்கும் அன்றாட‌ குற்ற‌ங்க‌ள்.

    அன்றாட‌ வாழ்வாதார‌த்திற்காக‌ க‌ட‌லுக்கு மீன் பிடிக்க‌ச்சென்றால் வீடு வ‌ந்து சேர்வோமோ? இல்லையோ? என இலங்கை கடற்படையின் அன்றாடம் அரங்கேறும் அட்டூழியங்களால் நிச்ச‌ய‌ம‌ற்றுப்போன‌ ந‌ம் த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ளின் ப‌ரிதாப‌ நிலை.

    பொறுப்ப‌ற்ற‌ அர‌சு எந்திர‌ங்க‌ளால்/அதிகாரிக‌ளால் அன்றாட‌ம் அர‌ங்கேறும் ஊழ‌ல், ல‌ஞ்ச‌ லாவ‌ண்ய‌ம், அல‌ட்சிய‌ அதிகார‌ம் என‌ வ‌றுத்தெடுக்க‌ப்ப‌டும் நாட்டு ம‌க்க‌ள்.

    சாதித்தீயால் தென்மாவ‌ட்ட‌ங்க‌ளில் க‌ருகி வ‌ரும் ம‌னித‌ நேய‌ம். என இப்ப‌டி எவ்வ‌ள‌வோ அத்தியாவ‌சிய‌ பிர‌ச்சினைக‌ள் ந‌ம் த‌லைக்கு மேல் வெள்ள‌மென‌ அன்றாட‌ம் ஓடிக்கொண்டிருக்க‌ உன‌க்கு ஏன்ன‌ய்யா இந்த‌ வேண்டாத‌ வேலை?

    உன் ம‌ரும‌க‌ன் ம‌ணி ர‌த்ன‌ம் போல் இப்ப‌டி ஒரு சிறுபாண்மை ச‌மூக‌த்தை வேத‌னைப்ப‌டுத்தி அதில் எப்ப‌டித்தான் உன‌க்கு நாலு, காசு ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌ ம‌ன‌ம் வ‌ருகிற‌தோ?

    படத்தில் ஃபேக்ட்டைத்தானே சொல்கிறேன் என‌ நீ வித‌ண்டாவாத‌ம் செய்தால் மேலே குறிப்பிட்ட‌ பிர‌ச்சினைக‌ளெல்லாம் என்ன‌ ப‌க்க‌த்து பாக்கிஸ்தானின் பிர‌ச்சினைக‌ளா?

    இப்ப‌டி ஓரிறையை ம‌ட்டும் வ‌ண‌ங்கி தான் உண்டு, த‌ன் வேலையுண்டு என்றிருக்கும் ச‌முதாய‌த்தின் மார்க்க‌ அறிஞ‌ர்க‌ளைக்கூட‌ தெருவுக்கு வ‌ந்து போராட‌ வைத்து சங்கடப்படுத்துவதில் என்ன‌ தான் உன‌க்கு ச‌ந்தோச‌மோ?

    ப‌ர‌ப‌ர‌ப்பாய் பேச‌ப்ப‌டும் ம‌க்க‌ளாலும், உற்சாக‌ப்ப‌டுத்தும் ஊட‌க‌ங்க‌ளாலும் கோடிக‌ள் ப‌ல‌ உன் கால‌டியில் வ‌ந்து விழும் என்ற‌ ம‌னித‌நேய‌ம‌ற்ற‌ உன் கொள்கையில் நீ பிடிவாத‌மாக‌ இருந்தால் உன‌க்கு ஒன்று சொல்லிக்கொள்ள‌ விருப்ப‌ம் "இர‌ண்டாவ‌து முறையாக‌ அமெரிக்க‌ அதிப‌ராக‌ ப‌த‌வி ஏற்றுள்ள‌ ப‌ராக் ஒபாமாவை ப‌ற்றியோ அல்ல‌து இஸ்ரேலின் உண்மை வ‌ர‌லாறு ப‌ற்றியோ உலகமே விமர்சித்து வியக்கும் வண்ணம் ப‌ட‌ம் எடுத்து பில்லிய‌ன் டால‌ர்க‌ள் பார்க்க‌ உம‌க்கு துணிவேதும் உண்டோ?

    இத‌ற்கு ப‌ரிகார‌மாக‌ அடுத்த‌ ப‌டத்தில் முஸ்லிம் பெய‌ரிட்டு நீ ந‌டித்து விடுவ‌தால் அநியாயமாய் வாங்கிய‌ அடிக‌ளும், அத‌னால் வ‌ரும் த‌ளும்புக‌ளும் வ‌லியின்றி எளிதில் ம‌றைந்து போகாது. சாப‌மிட்டே அது ம‌ர‌ணிக்கும்.///

    சகோ அப்துல் ரகுமான் & நய்னா முகமது!!!

    கமலுக்கு எல்லாமே தெரியும். அவர் யாரு அறிவுரைகளையும் கேட்பதில்லை!

    ReplyDelete
  39. http://dinamani.com/latest_news/article1432742.ece

    /////
    விஸ்வரூபம் திரைப்படம் வெளியிட தடை

    By dn, சென்னை

    First Published : 23 January 2013 08:39 PM IST

    கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம் வருகிற 25-ம் தேதி வெளிவருவதாக இருந்தது. அதில் இஸ்லாமியர்களை தவறாக விமர்சித்திருப்பதாக முஸ்ஸீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று உள்துறை அமைச்சகத்திடம் விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என முஸ்ஸீம் அமைப்புகள் மனு கொடுத்தனர். இதனையடுத்து விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    ////

    ReplyDelete
  40. Sreedhar Pillai ‏@sri50

    #Vishwaroopam banned 4 15 days by TN govt, all district collectors have been informed , no theater can screen it!!!!

    ReplyDelete
  41. ராஜ நடராஜன்...

    // The entire movie depicts the true story of raising Islamic fundamentalism in Indian soil.Does any Islamist raise a finger on the theme of the story? Why visvaroopam? //

    இந்தியாவிலே அதிக போராட்டங்கள் நடத்தும் இஸ்லாமிய இயக்கங்கள் தமிழகத்தில் இருக்கும் ததஜா மற்றும் தமுமுக தான்...

    டிசம்பர் 6 போராட்டங்கள் வீரியத்துடன் நடப்பது தமிழகத்தில் தான்.. மற்ற ஸ்டேட்ஸ்ல பெரிசா ஒன்னும் இருக்காது.. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா மற்ற ஸ்டேடஸ்லயும் பரவுது...

    நீங்கள் கூறிய படம் தமிழில் வந்து இருந்தால் மிகப்பெரிய சிக்கலில் மாட்டியே இருக்கும்... மேலும் சினிமா துறைய கண்டுக்காம தான் இருந்தாங்க.. இப்ப தான் இத்துறையிலையும் கவனம் செலுத்த ஆரம்பித்து உள்ளார்கள்...

    ஆட்சியாளர்களுக்கு கமலஹாசன விட, சினிமா துறையை விட முஸ்லிம்களின் வாக்கு முக்கியம்..

    ஒன்னும் செய்ய முடியாது பாஸ்... கருத்துக்கு நன்றி... :)

    ReplyDelete
  42. சகோ.சிராஜ்!உங்கள் பின்னூட்டம் கவனித்தேன்.ஆட்சியாளர்களுக்கு கமலஹாசனை விட சினிமா துறையை விட முஸ்லிம்களின் வாக்கு முக்கியம் என்ற யதார்த்தம் பிடித்திருந்தது.

    சினிமா மட்டுமே நமது மூளையை மாற்றிவிடும் சக்தியுடையது என்றால் கமல் நடித்த இண்டியன் படம் இந்தியாவில் ஊழலையே ஒழித்திருக்கும்.

    இப்போதைய விஸ்வரூபத்தின் பரபரப்பு இன்னும் வரும் காலங்களில் காணாமல் போய் விடும்.இன்றைக்கு துப்பாக்கி பற்றி யாராவது பேசுகிறார்களா?

    இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு பக்கத்தை மட்டுமே படித்து விட்டு தீர்ப்பு சொல்கிறார்கள்.அவ்வளவுதான் இப்போதைக்கு சொல்லத் தோன்றுகிறது.

    ReplyDelete
  43. //சினிமா மட்டுமே நமது மூளையை மாற்றிவிடும் சக்தியுடையது என்றால் கமல் நடித்த இண்டியன் படம் இந்தியாவில் ஊழலையே ஒழித்திருக்கும்.//

    உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் திரு ராஜ நடராஜன். சிறு வயதில் விஜயகாந்த் அர்ஜுன் படங்களை விரும்பிப் பார்த்தவன் நான். ஆனால் துளி கூட இஸ்லாம் மீதோ இஸ்லாமியர்கள் மீதோ சந்தேகமோ வெறுப்போ வந்ததில்லை. ஜிகாத், புனிதப்போர், ஒசாமா பின்லேடன், தாலிபான், ஷரியா ... இதெல்லாம் ஊடகங்கள் மூலம் கேள்விப்படும்போது தான் இஸ்லாம் என்றாலே ஒரு பயம் மனதுக்குள் வந்து செல்கிறது.

    ReplyDelete
  44. Why to argue with Terrorists?? They never can understand anything other than their book and biriyani.

    ReplyDelete
  45. ***N said...

    Why to argue with Terrorists?? They never can understand anything other than their book and biriyani.***

    N: Are you a RETARD or something?

    Why do you call everyone as terrorist no matter where you go?.

    Seems like your brain got SO FUCKED UP! Dont show your "retard skills" here, bone-head! Get lost!

    ReplyDelete
  46. பென்டகன் கட்டிடம் யாரால் தகர்க்க பட்டது........இந்துக்களா?????

    ஹோட்டல் யாரால் தகர்க்க பட்டது...
    இந்துக்களா?????????

    ஓப்ராய் ஹோட்டல் யாரால் தகர்க்க பட்டது...
    இந்துக்களா?????????

    தப்ப சொன்னா கோவம் மட்டும் வந்துடுது..........
    சுதந்திர தினமா போலிஸ் எதுக்கு எல்லா இடங்களிலும்.....

    ஒசமாபில்லேடன் எங்க இருந்தாரு இந்தியாவிளா.....????????

    தவறு செய்வதை நிறுத்துஉன்னை பற்றி தவறாக பேசகூடமாட்டார்கள்....

    ReplyDelete
  47. அண்ணே!

    எல்லாம் சரி..

    தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருப்பது யார்?

    விஸ்வரூபத்திற்கு சட்டப்படி தடை விதித்தது யார்?

    அதையும் சொல்லீட்டுப் போங்க!

    ReplyDelete