Thursday, January 24, 2013

விஸ்வரூபக் கமலுக்காக அழுது ஒப்பாரி வைப்போமா?!

விஸ்வரூபத்திற்கு இஸ்லாமியர்கள் தேவையில்லாமல் கொதித்தெழுகிறார்கள் என்று நம்புகிறார்கள் கலை, கலை, கலை என்று சினிமாவை கட்டி அழும் கமல்ஹாசனின் விசிறிகள். இவர்களைப் பொறுத்தவரையில் சினிமாவை ஒரு கலையாகவும், கமலை ஒரு கலைஞனாகவும் எல்லாரும் பார்க்க கத்துக்கணும் என்கிற எதிர்பார்ப்பு!

இஸ்லாமியர்கள் பார்வையில் விஸ்வரூபம்..

இந்தப்படம் முழுக்க முழுக்க  தீவீரவாதம் பற்றியது. இதில் தீவிரவாதிகளாக வருபவர்கள் எல்லாரும் இஸ்லாமியர்கள். 

"எங்களை ஏன் இப்படியே தீவிரவாதிகளாகவே காட்டுறீங்க?" என்கிறார்கள் இஸ்லாமியர்கள். அதனால் இப்படத்தை தடை செய்யச் சொல்லி வேண்டுதல் விடுத்து, முதல்வர் ஜெயாவின் கருணையில் இடைக்கால தடை வாங்கியுள்ளார்கள் இந்தப் பட வெளியீட்டுக்கு!

சரி நம்ம கமல் கதாபாத்திரம் இந்தப்படத்தில் ஒரு  இஸ்லாமியர் இல்லையா?னு கேட்டால்..நம்ம ஹீரோ கமல் இந்தப்படத்தில் ஒரு பார்ப்பனராக நடித்து உள்ளாராம்! ஒருவேளை "இஸ்லாமியப் பார்ப்பனரா" என்னனு எனக்குத் தெரியலை.

கமலையும், கமல் விசிறிகளையும், நடுநிலைவாதிகளையும் பொறுத்தவரையில் இது ஒரு கற்பனைக் கதை என்பதை எல்லோரும் தெளிவாக விளங்கிக்கொள்ளணும்! அப்புறம் இதில் வரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளை கலையுணர்வுடன், கலைத்துவமாக, ஒரு காதாபாத்திரங்களாக மட்டும் அனைவரும் பார்க்க வேண்டும்! ஆமா, பார்ப்பானாக வரும் கமலையும்தான்! மதச்சாயம் பூசி இந்தப்படத்தில் வரும்  யாரையும் நீங்க பார்க்கப்படாது! அதுபோல் ஒரு திறந்த மனது இஸ்லாமிய சகோதரர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது!

மிகவும் அப்பாவியான, உலகமே அறியாத, உலக நாயகன் கமல், அவருடைய  இஸ்லாமிய சகோதரர்கள் எல்லாம் இவருடைய கலை ஆர்வத்தையும், இவர் நல்ல எண்ணத்தையும்  "சரி யாக" புரிந்து கொள்வார்கள் என்றும் விஸ்வரூபம் படத்தைப் பாராட்டுவார்கள்  என்றும் நம்பி மோசம் போய்விட்டார் போல் தெரிகிறது.   கமலின் இஸ்லாமிய சகோதரர்கள்  அனைவரும் இந்தப் படத்தை கலைக் கண்ணோடும், இதில் வரும் கதாபாத்திரங்களுக்கு மதச்சாயம் பூசாமலும், பார்ப்பாரகள், மேலும் இந்தப் படத்த்தை முழுமனதாகப் பாராட்டுவார்கள் என்று ஏமாந்து நிற்கிறார் உலகம் அறியாத உலக நாயகன் கமல்!

* கமல்ஹாசன் என்கிற இந்த அப்பாவிக் கலைஞன்  தற்போது படும் இன்னல்களுக்காக நாம் எல்லாம் கூடி ஒப்பாரி வைத்து அழுவோமா?

* இல்லைனா "உன்னைப்போல் ஒருவன்" வெளியிட்ட போதே அந்தப் படத்தை இஸ்லாமியர்கள் எடுத்துக் கொண்ட, விமர்சித்த விதத்திலிருந்து  இவர் பாடம் கற்று, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டுவதை அதோட இவர் நிறுத்தி இருக்கணுமா?

இது விவாதிக்க வேண்டிய விடயம்!

21 comments:


  1. காஃபிர் வருண்,

    திரைப்படம் என்பது சமூக நிகழ்வைப் பிரதிபலிக்கும்!!

    உங்களுக்கு ஒரே கேள்வி நேர்மையாக பதில் சொல்லவும்!!

    9/11ஐ நிகழ்த்தியவர்கள் சவுதியை சேர்ந்த தீவிரவாதிகள் என்பது அமெரிக்க அரசின்,உலகின் கருத்து.

    ஆனால் சில மூமின்கள்,தமிழ்மண பதிவர்கள் உள்ளிட்டு அது யூத சதி,அமெரிக்க சி.ஐ.ஏ வின் சதி என கூறுகிறார்கள்.

    இப்போது 9/11 சவுதி அரபிகளின் வேலை என ஒத்துக் கொண்டால் விஸ்வரூபத்துக்கு நிகழ்ந்த கதி உமது பதிவுக்கும் நிகழும்!!நீர் இஸ்லாமிய விரோதி ஆவீர்!!

    9/11 யூத சதி என்றால் அமெரிகாவில் இருந்து மூமின்களுக்கு ஆதரவாக ஒரு வழக்கு போட்டு நிரூபிக்கவும்[ ஹி ஹி அமெரிக்க மூமின் செய்ய மாட்டார்கள் !!]


    9/11 ஐ படமாக எடுத்தால் அரபுகளை தீவிரவாதிகளாக காட்டாமல் இருக்க முடியுமா??
    http://en.wikipedia.org/wiki/September_11_attacks
    The September 11 attacks (also referred to as September 11, September 11th, or 9/11)[nb 1] were a series of four coordinated terrorist attacks launched by the Islamist terrorist group al-Qaeda upon the United States in New York City and the Washington, D.C. areas on September 11, 2001. On that Tuesday morning, 19 al-Qaeda terrorists hijacked four passenger jets, intending to fly them in suicide attacks into targeted buildings

    நன்றி!!

    ReplyDelete
  2. ****நீர் இஸ்லாமிய விரோதி ஆவீர்!!***

    மச்சான் சார்வாகன்!

    நான் என்ன 100 கோடி செலவழிச்சு இஸ்ளாமியத் தீவீரவாதிகள் பற்றி படம் எடுத்து, அதை 150 கோடிக்கு வித்து, உலக்ப் புகழ் பெற முயற்சி செய்யும் வியாபாரியா என்ன?

    என் கருத்தை நான் எப்போவும் தைரியமாகச் சொல்லுவேன். அதுக்காக எதையாவது தோண்டிக் கொண்டுவந்து நீ இதுக்கு பதி சொல்லுனு நிக்கப்படாது!

    ப்தைவு சம்மந்தமாகப் பேசுங்க. நான் இரு தரப்பு "நியாயத்தையும்" எடுத்து வைத்துள்ளேன். அம்புட்டுத்தான்! :)

    ReplyDelete
  3. சார்வாகன் எப்போதும் சிண்டு முடிந்து , கோர்த்து விடுற வேலையவே செய்கிறீர்களே..!! உங்களுக்கு அலுப்பு தட்டவில்லையா..:??

    ReplyDelete
  4. வாங்க நாகூர் மீரான்:

    நம்ம மச்சான் சார்வாகனுக்கு எல்லாப் பதிவுமே, எல்லா மேட்டருமே "ஒண்ணே ஒண்ணுதான்". அதனால் அதைத்தூக்கி இதுல போட்டு இதைத்துக்கி அதுல போட்டு "அழகு" பார்ப்பார்! :)))

    ReplyDelete
  5. நம்ம ஹீரோ கமல் இந்தப்படத்தில் ஒரு பார்ப்பனராக நடித்து உள்ளாராம்!//

    அவருடைய எல்லா முற்போக்கு படங்களிலுமே அப்படித் தான்

    ReplyDelete
  6. //விஸ்வரூபத்திற்கு இஸ்லாமியர்கள் தேவையில்லாமல் கொதித்தெழுகிறார்கள் என்று நம்புகிறார்கள் கலை, கலை, கலை என்று சினிமாவை கட்டி அழும் கமல்ஹாசனின் விசிறிகள்.//

    டிடிஹெச்சில் ரிலீஸ் பண்ணுவதால்,
    தியேட்டர் ஓனர்கள் வினியோகஸ்தர்கள் எல்லாம் விஸ்வரூபத்தை திரையிட முடியாது என்று சொன்னபோது...

    விஸ்வரூபத்துக்கு முதல் தடவையாக தடை போட்ட போது...

    கமல்
    எதுக்கு
    அவர்களுக்கு
    எதிராக
    அன்றே
    கோர்ட்டுக்கு
    போகவில்லை..?

    கமலின் ரசிகர்கள்
    நடுநிலையாளர்கள்
    இலக்கிய கலா ரசிகா பாணிகள்
    'கருத்து சுதந்திர காவலர்கள்'
    எல்லாம் எதற்கு அதனை எதிர்த்து அவர்களை எதிர்த்து எதற்கு
    போராட வில்லை..? நியாய புத்திரன் கள் டிவியில் எதுக்கு விவாதம் செய்யவில்லை..?

    பொங்கலுக்கு படம் வரலைன்னா பொங்கி இருந்திருக்க வேண்டாமா..?
    'விஸ்வரூப ரிலீஸ் தடையை' எதிர்த்து பொங்கல் பண்டிகையை புறக்கணித்து போராடி இருக்க வேண்டாமா... இப்போது மட்டும் விஸ்வரூபத்துக்காக பொங்குபவர்கள்..!

    'மத்திய சென்சார் போர்டே - ஓகே' சொல்லிவிட்ட ஒரு படத்தை... அரசு தடை விதிப்பது சட்ட மீறல் என்கிறாரே கமல் இப்போது.....

    அப்புறம்.... கமல் என்னத்துக்கு அந்த "கலாச்சார பயங்கரவாதிகளுக்கு" படத்தை போட்டுக்காட்டினார்..? அவர்களின் ஓகேயை வாங்கத்தானே...? இது அவரின் சட்ட மீறல் இல்லையா அப்போது..? அப்புறம் என்ன கேள்வி வேண்டி கிடக்கு இப்போது...?

    இதெல்லாம் விட...
    முதல் நாள் முதல் ஷோ தியேட்டரில் பார்பருக்கு முன்னரே தன் வீட்டு டிடிஹெச் இல் பார்க்கத்தானே - அப்டி நமப வைத்து வாக்குறுதி அளிக்கப்பட்டுத்தானே.... ஆயிரம் ரூபாய் காட்டினார்கள்..?

    அந்த ஆயிரம் ரூபாய் காட்டிய ஏமாந்த சோணகிரிகள்... எதற்கு இன்னும் போலீஸ் ஸ்டேஷனுக்கோ கோர்ட்டுக்கோ...

    அவ்ளோ ஏன்... ஒரு னியா நானாவில் கூட சென்று புலம்பி ஆழ வில்லை..?

    பனம்கட்டிய வந்தியதேவர்கள் இதனை கண்டித்து ஒரு பதிவாவது போட்டார்களா...?

    அடப்போங்கப்பா..........

    பயங்கரவாத அநீதியின் விஸ்வரூபத்துக்கு...
    ஒப்பாரி ஒரு கேடா...?

    ஒப்பாரிக்கே அவமானம்..!

    ReplyDelete
  7. Here is a decent review, of that movie, folks!

    ----------------

    This is my take on #Vishwaroopam. -(without giving away anything)

    I thought the movie had a good plot, not a particularly unique plot, but a pretty solid plot. Personally, I think the problem lies with the execution of the plot itself. Till this very second, I have questions about various scenes of the movie. I am also hoping that you guys would watch the movie real quick so that I could raise those questions and hopefully, find answers to them. The execution wasn't bad, but I think that many things could have been neater. It was messy at points, but nothing as bad as Dasavathaaram.

    Saying the movie had nothing to do with religion would be a big lie. However, technically speaking, it didn't represent Islam as a whole. It showed light to a certain group in the religion, that is all. There is really nothing to be sensitive about, I promise.

    To end this, I'd say Vishwaroopam is a pretty okay movie. It could have been executed a bit better. The viewer's interest in the subject matter of the movie really matters. For eg, I was pretty interested (because it was on something that I've spent a lot of time reading about), so I kept my focus on and watched the movie till the end with interest. A few people in the theater though, found it really boring and left the cinema hall halfway. The movie wasn't the most mind blowing movie that I've ever seen, but you can just tell that Kamal Hassan has put in so much of his sweat into it, and to his credit, a lot of it showed through. I'd recommend people to watch the movie, but I can also safely say that NOT everyone will enjoy it.

    ( p.s : Once you guys have watched the movie, can someone please take the time and tell me the purpose of Andrea's role in the movie? I'm still trying to figure it out and it is disturbing me to no end.) ***

    ------------

    Thanks to Ms. Rhubinii Rajendran (@RhubyDooby)

    http://www.twitlonger.com/show/kqegeg

    ReplyDelete
  8. தமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை!

    சிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்
    பரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம்
    please go to visit http://tamilnaththam.blogspot.com/

    ReplyDelete
  9. கமல் செய்தது எவ்வளவு பெரிய பிழை. ஆஃப்கான்ல இருந்து வாற தீவிரவாதி ஹிந்து என்று அவருக்கு தெரியாது. 9/11, 7/9 எல்லாம் ஹிந்து செய்ததுதான். தீவிரவாதி ஹிந்து மட்டுமே. முஸ்லிம் அல்ல. கமல் ஒரு மிக பெரிய தீவிரவாதி. please dont laugh to this comment. im really really really serious..lol

    ReplyDelete
  10. ஹாலீவுட் படத்தில் முஸ்லிம் தீவிரவாதியை காட்டினால் அந்த படத்தையும் தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும்

    ReplyDelete
  11. முன்பு அவர்கள் சல்மான் ருஷ்டியை நாடுகடத்தி தலைக்கு விலை வைத்தார்கள்;
    நான் எழுத்தாளன் அல்ல; நான் அவருக்காகப் பேசவில்லை.
    அடுத்து எம்.எஃப். உசேனை நாடுகடத்தினார்கள்;
    நான் ஓவியன் அல்ல; நான் அவருக்காகப் பேசவில்லை.
    இப்பொழுது அவர்கள் கமலஹாசனின் திரைப்படத்தைத் தடை செய்யக் கோருகிறார்கள்;
    நான் திரையுலகினன் அல்ல; நான் அவருக்காகப் பேசவில்லை.
    வருங்காலத்தில் வலைத்தளத்தில் எழுதும் என்னைத் தேடியும் அவர்கள் வரலாம்;
    அப்போது எனக்காகப் பேச எவரும் எஞ்சப் போவதில்லை.
    (அவர்கள் - அடிப்படைவாதிகள்)

    ReplyDelete
  12. ~முஹம்மத் ஆஷிக் citizen of world~
    this post is about film not about the DTH business. yes he failed in DTH. So what?? still need to ban this film?? seems funny

    ReplyDelete
  13. முன்பு அவர்கள் சல்மான் ருஷ்டியை நாடுகடத்தி தலைக்கு விலை வைத்தார்கள்;
    நான் எழுத்தாளன் அல்ல; நான் அவருக்காகப் பேசவில்லை.
    அடுத்து எம்.எஃப். உசேனை நாடுகடத்தினார்கள்;
    நான் ஓவியன் அல்ல; நான் அவருக்காகப் பேசவில்லை.
    இப்பொழுது அவர்கள் கமலஹாசனின் திரைப்படத்தைத் தடை செய்யக் கோருகிறார்கள்;
    நான் திரையுலகினன் அல்ல; நான் அவருக்காகப் பேசவில்லை.
    வருங்காலத்தில் வலைத்தளத்தில் எழுதும் என்னைத் தேடியும் அவர்கள் வரலாம்;
    அப்போது எனக்காகப் பேச எவரும் எஞ்சப் போவதில்லை..//////

    உண்மை கருப்பு. ஆனால் எம்.எப்.உசேன் என்கிற இடத்தில் தஸ்லிமா நஸ்ரின் என்று இருக்க வேண்டும்.

    ReplyDelete
  14. //அப்புறம்.... கமல் என்னத்துக்கு அந்த "கலாச்சார பயங்கரவாதிகளுக்கு" படத்தை போட்டுக்காட்டினார்..? அவர்களின் ஓகேயை வாங்கத்தானே...? இது அவரின் சட்ட மீறல் இல்லையா அப்போது..? //

    சட்ட மீறல்?

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. not just in this movie muslims are show that way..

    how abt Thuppakki, roja, most of the vijayakanth's movie?

    ReplyDelete
  17. வருங்கால முஸ்லிம் சார்வாகான்....

    நல்லா இருக்கீங்களா சகோ?? உங்கள் நலம் அறிய ஆவல்...

    ReplyDelete
  18. வருண்...

    நிஜமாவே இது நேர்மையான போஸ்ட்.. என் மனசாட்சி அப்படி தான் சொல்லுது.. ஆனா நான் சொன்னா வருங்கால முஸ்லிம் சார்வாகன் ஏத்துக்க மாட்டார்...

    அவர் எந்த உண்மைய தான் ஏற்று இருக்கிறார்??

    சோ , நான் சொல்லிட்றேன்.. குட் போஸ்ட்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  19. வருண்!நீங்க என்னமோ எனக்காகவே தேடிப்பிடித்து ரிவியூ போட்டிங்கன்னு பார்த்தால் இங்கிருந்து காபி ஆத்துனதுதானா?

    உங்களுக்கு இஸ்லாமிய பின்னூட்டங்களின் அனுகூலம் கூடி வருகிற் மாதிரி இருக்குதே!

    வாழ்த்துக்கள்:)

    ReplyDelete
  20. ***ராஜ நடராஜன் said...

    வருண்!நீங்க என்னமோ எனக்காகவே தேடிப்பிடித்து ரிவியூ போட்டிங்கன்னு பார்த்தால் இங்கிருந்து காபி ஆத்துனதுதானா?***

    நீங்க என்னதான் எதிர்பார்க்குறீங்கனு தெரியலை எனக்கு??

    ReplyDelete
  21. பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், தமிழார்வம், தமிழிலக்கிய தொண்டு, தனித்தன்மையான வட்டார மொழி வழக்குகள், என்றெல்லாம் தமிழக முஸ்லிம்களுக்கென்று வரலாறுகள் இருந்தாலும், தமிழ் சினிமா இன்னும் " நம்பள்கி, நிம்பள்கி" என்று தமிழை தப்புத்தவறாய் பேசும் அந்நியர்களாகத்தான் முஸ்லிம்களை பதிந்து வருகிறது. ஏன் இந்த சித்தரிப்பு?

    முஸ்லிம்களை நல்லவர்களாகவும் அல்லது வில்லன்களாகவும், நண்பர்களாகவும் காட்டிய காலம் போய், தீவிரவாதிகளாகவும் காட்டினார்கள். முஸ்லிம்களில் தீவிரவாதிக்கா பஞ்சம்? பொறுத்துக்கொண்டோம். ஒரு தனிப்பட்ட மனிதனை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். அதெல்லாம் கருத்துச்சுதந்திரம்.

    இந்நிலையில், தொடர்ந்து ஒரே மாதிரியாக விஜயகாந்தும், அர்ஜுனும் இன்ன பிற...ரது படங்களிலும், தீவிரவாதி என்றால் முஸ்லிம்கள் என்று பொதுப்புத்தியில் ஆணி அடிப்பது போல திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தது. சங்கடமாக இருந்தாலும் எதிர்க்கும் அளவு சூழ்நிலை இல்லை. குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டதெல்லாம் முஸ்லிம்களே. ( நன்றாக அவதானிக்கவும் "கைது செய்யப்பட்டது" என்று தான் குறிப்பிட்டிருக்கேன்)

    சமீப காலமாக, குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லாம் அப்பாவிகள் என்று நீதி மன்றத்தால் பல ஆண்டுகளை சிறையில் இழந்து விட்டு நிரபராதியாக வெளியே வருகிறார்கள். இவர்கள் நிரபராதி என்றால் யார் குற்றவாளி?? என்று ஆராயும் போது, அதே குண்டு வெடிப்புகளுக்கு "இந்துத்துவ தீவிரவாதிகள்" கைது செய்யப்பட்டு வருவதும், முன்னாள் உள்துறை அமைச்சர் "காவி தீவிரவாதம்" என்று ஒன்று இருப்பதாக நாடாளுமன்றத்திலே ஒத்துக்கொண்டதும், அதனை தொடர்ந்து தற்போதைய அமைச்சர் ஷிண்டே வும் பிஜேபியும், ஆர்.எஸ்.எஸும் பயங்கரவாத பயிற்சி முகாமே நடத்துகின்றன என்கிறார்.

    இந்த சூழ்நிலையில் தான் "துப்பாக்கி" திரைப்படம் தனது வழமையான "முஸ்லிம் தீவிரவாதி" என்ற லேபிளுடன் வருகிறது. அதில் உச்சக்கட்ட அதிர்ச்சி. அதில் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தையே சந்தேகப்படுத்தும் வகையில் "ஸ்லீப்பர் செல்" என்ற புதுவகையான உத்தி கையாளப்படுகிறது. தீவிரவாதி ஒரு சாதுவாக மக்களோடு மக்களாக கலந்தே இருப்பான், ராணுவத்திலும் உயர்பதவிகளிலும் கூட கலந்திருக்கலாம் என்ற விஷ விதையை தூவி விடுகிறார்கள். இது ஒரு அப்பட்டமான முஸ்லிம் எதிர்ப்புப்படம் என்று முஸ்லிம்கள் உணருகிறார்கள். ஏற்கனவே இந்துத்துவாவின் குண்டு வெடிப்புகளுக்கு தாங்கள் தீவிரவாத பட்டமும் பழியை சுமக்க நேரிட்டு வருகிறதே என்ற இயலாமையும், ஒவ்வொரு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் காவி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும், மேலும் மேலும் எங்களையே இந்த சினிமாவினர் குற்றம் சுமத்தி வருவது யாரை திருப்தி படுத்த என்று ஒரு இயல்பான கொந்தளிப்பு முஸ்லிம்களிடையே உருவாகிறது. அதனால் துப்பாக்கியை எதிர்க்க துவங்குகிறார்கள்.

    பொதுவாக ஒரு சமூகத்திற்கு எதிராக இது மாதிரி ஆபத்து வரும் போது எல்லோரும் ஒன்றிணைவது இயல்பே. சண்டையிட்டு பிரிந்து கிடந்தவர்களெல்லாம் ஒரு கருத்திற்காக (துப்பாக்கியை எதிர்ப்பது) ஒன்றிணைகிறார்கள்.எதிர்ப்பு தமிழ் முஸ்லிம் சமூகம் காணாதது. அந்தக் கொதிப்பு அடங்கும் முன்னே (இதில் நீர்பறவையில் சமுத்ரகனியின் பேச்சு முஸ்லிம்களுக்கு பெரிய ஆறுதல்) விஸ்வரரூபமும் தீவிரவாதத்தை கதைக்கருவாகக் கொண்டு வரவே, சொல்ல வேண்டுமா எதிர்ப்புக்கு!!

    இந்துத்துவாவினர்களின் குண்டு வெடிப்புகளுக்கும் சேர்த்தே தீவிரவாதி பட்டம் சுமந்தாகி விட்டது. இந்த சமூகத்தின் வலியையும் வேதனையும் புரிந்து கொள்ள முயலுங்கள். கமல் எங்களுக்கு எதிரியல்ல; துரதிஷ்டவசமாக விஸ்வரூபத்தின் கதைக்களம் ஆப்கனில் நடப்பதால் கமலுக்கும் வேறு வழியில்லை. இது தொடராமல் இருக்க வேண்டுமானால், எங்களுக்கும் இதற்கு வேறு வழியில்லை.

    ReplyDelete