Tuesday, April 30, 2013

மரக்காணத்தில் தலித்களால் அப்பாவி வன்னியர்கள் தாக்கப்பட்டனர்?!

அருள் அவர்களே! மரக்காணத்தில் 3 வன்னியர்கள் தலித்களால் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்து இருக்காங்க! பலர் தாக்கப்பட்டு இருக்காங்க! இது மட்டும் சரியா? தலித்கள்தான் கொழுப்பெடுத்து ஆடுறாங்க! அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு அரசாங்கமே துணை போகிறது!

இதெல்லாம்தானே  உங்கள் குற்றச்சாட்டு?

A Dalit woman shows her damaged belongings at Kattayantheru area in Marakkanam, where six houses belonging to Dalits were set ablaze after a violent clash on April 25, 2013. Photo: T. Singaravelou
A Dalit woman shows her damaged belongings at Kattayantheru area in Marakkanam, where six houses belonging to Dalits were set ablaze after a violent clash on April 25, 2013. Photo: T. Singaravelou

 அரசியல்வாதிகளை விடுங்க! மேலே போடப்பட்ட மீடியாவின் புகைப்படத்தையும் தள்ளிவிட்டு, பாதிக்கப்பட்ட உயிர்சேதம் அடைந்த அப்பாவி வன்னியத் தமிழர்களுக்காக நிச்சயம் நாம் வருத்தங்களை தெரிவிப்போம்! அதேபோல் தலித்கள் செய்த அடாவடித்தனத்துக்கு சட்டம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்வரையில் போராடுவோம்!

ஆனால் உங்களுக்கு என்ன புரியமாட்டேன்கிதுனா, தப்பு யாரு செஞ்சாலும் தப்புத்தான். அது தலித்தாக இருந்தால் என்ன? வன்னியர்களாக இல்லைனா முக்குலத்தோர்களாக இருந்தால் என்ன?

வன்னியர்கள் தவறு செய்யும்போது மட்டும்  உங்க நிலைப்பாடு வேடிக்கையா இருக்கிறது. அது ஏன்? ரெண்டு சாதிக்காரன் சண்டை போடுறான்! அதில் ரெண்டு சாதியிலுமே நல்லவனும் இருப்பான், அயோக்கியனும் இருப்பான் என்பது உங்களுக்குத் தெரியாதா? வம்புச் சண்டை இழுக்கிறவனுக ரெண்டு சாதியிலுமே இருப்பான் என்ற கருத்தை நீங்க என்றுமே புரிந்துகொண்டு, அதை முன் வைத்து விவாதித்ததாக ஒரு போதும் தோணவில்லையே? அது ஏன்? எல்லா நேரமும் வன்னியர்கள் எல்லாம் அப்பாவிகள் தவறே செய்யமாட்டாங்க என்பதுபோல் வக்காலத்து வாங்குறீங்க!

தருமபுரி சண்டையிலேயும், வன்னியர்கள் அப்பாவிகள் என்பது போலவும், வயதில் முதிர்ச்சியடையாத வன்னியச் சிறுமியை, இன்னொரு தலித் சிறுவன் ஏமாற்றிக் கல்யாணம் செய்யப் போனதுதான் அங்கே பிரச்சினை என்று நியாயப் படுத்தினீர்கள்! தருமபுரி சண்டையில் சாதி ஒரு மேட்டரே இல்லை என்பதுபோல் பிதற்றினீர்கள்!  அது ஏன்? விபரம் சொல்லவும்!

புகைப்படம்: நன்றி ஹிந்து

15 comments:

  1. நீங்க அருளுக்கு அருள்வாக்கு சொல்றது தமிழகத்தில் ராமதாஸ்க்கும்,அன்புமணிக்கும் சொல்ற மாதிரி.

    ReplyDelete
  2. அருள் என்பவர் ராமதாசின் அணுக்கத் தொண்டர் பசுமைப் பக்கங்கள் என்ற போர்வைக்குள் இருப்பவர். ராமதாசும் அன்புமணியும் எதனை எதிர்பார்த்து திட்டமிட்டு, மாற்றி மாற்றி பேசி வந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறி விட்டது. நாடு எப்படிபோனால் அவர்களுக்கென்ன?. இந்தூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்ததில் ஊழல் என்ற, வழக்கு விஷயமாக, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் ஆஜர் ஆன விவகாரத்தை எல்லோரும் மறந்து விட்டோம்.



    ReplyDelete
  3. இவர் நடத்துவது ஜா"தீ" கட்சி இல்லையா. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஜாதி தேவைபடுகிறது. ஜாதி பார்த்து தானே சீட் குடுக்கிறார்கள். ஆனால் வெளியில் மகா யோகியன்கள். ஆனால் வன்னியன் பேசினால் மட்டும் தப்பா?. தலித்துகள் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்து சொல்லி மாளாதது. எதுவும் பேசினால் வன்கொடுமை சட்டம்! இந்த ஒன்றே இவர்கள் அடிக்கும் கூத்துக்கு அடிப்படை. மற்ற சமூகத்தினர் எவரும் வாய் திறக்க மறுத்து மௌனிக்கும் நேரத்தில் தான் ராமதாஸ் அவர்கள் வெளிப்படையாக போராடுகிறார். ஜாதி இல்லை என்று சொல்பவர்கள், எந்த கோட்டாவில் படித்தார்கள், எந்த ஜாதியில் திருமணம் செய்தார்கள், தன மகனை (ளை) எப்படி சொல்லி பள்ளியில் சேர்த்தார்கள் என்று அவர்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ளவும். தவறு அனைத்து பக்கமும் உள்ளது. இதில் ஒரு சாரரை மட்டும் குறை சொல்லி நடுநிலை / முற்போக்கு சாயம் பூசிக் கொள்ள நினைப்பது சரியல்ல. எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.

    ReplyDelete
  4. //இவர் நடத்துவது// திருமா நடத்துவது

    ReplyDelete
  5. // //உயிர்சேதம் அடைந்த அப்பாவி வன்னியத் தமிழர்களுக்காக நிச்சயம் நாம் வருத்தங்களை தெரிவிப்போம்// //

    வன்னியர்களுக்கு எதிராக நிலவும் 'நவீன தீண்டாமையில்' ஒரு அங்கம்தான் உங்களது பதிவும்.

    பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே ஒரு தலைவராவது தமிழ்நாட்டில் உண்டா?கொலைசெய்யப்பட்ட வன்னியர்களுக்காக வருத்தம் தெரிவித்த ஒரே ஒரு தலைவராவது தமிழ்நாட்டில் உண்டா?

    தலித் மக்களில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களுக்கு இழப்பீடு அளித்துள்ள தமிழ்நாடு அரசு - பாதிக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட வன்னியர்களுக்கு இழப்பீடு அளிக்காதது ஏன்? வன்னியர்கள் இந்த அரசாங்கத்தின் குடிமக்கள் இல்லையா?

    "தப்பு யாரு செஞ்சாலும் தப்புத்தான்" என்று சொல்கிறீர்களே, வன்னியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தவறு என்று ஒரே ஒருவர் கூட சொல்லாதது ஏன்?

    'சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள்' என்பது போல தலித் மக்களில் வன்முறையாளர்களே இல்லை என்பதுதான் தமிழ் நாட்டின் நீதி.

    ReplyDelete
  6. //சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் ஆஜர் ஆன விவகாரத்தை//

    சிபிஐ எதற்கு பயன்படுத்தப் படுகிறது என்பது நாடறிந்த ரகசியம். சிரிப்பு மூட்டதிங்க சார்

    ReplyDelete
  7. // சிபிஐ எதற்கு பயன்படுத்தப் படுகிறது என்பது நாடறிந்த ரகசியம். சிரிப்பு மூட்டதிங்க சார் //
    அன்புமணியின் மாமானார் கிருஷ்ணசாமி காங்கிரசில்தானே இருக்கிறார்.

    ReplyDelete
  8. @ அருள்

    உங்கள் பதிவில் மறுமொழியிட, நான் ரோபோ இல்லை என்று நிருபிக்க முடியவில்லை. மன்னிக்கவும்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. **ராஜ நடராஜன் said...

    நீங்க அருளுக்கு அருள்வாக்கு சொல்றது தமிழகத்தில் ராமதாஸ்க்கும்,அன்புமணிக்கும் சொல்ற மாதிரி.

    1 May 2013 2:39 am***

    அருள் இப்படியே வன்னியர்கள் எந்தத் தவறுமே செய்வதில்லை, எல்லாமே மற்றவர்கள்தான்னு சொல்லிக்கிட்டு அலைந்தால், வன்னியர்கள் மரியாதை இழக்க இவர்போல் ஒருதலைப்பச்சமாகப் பேசும் ஆட்கள்தான் காரணம் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்! அவர் தலையிலேயே அவரே மண் அள்ளிப்போட்டுக்கொள்கிறார். அவ்ளோதான் சொல்ல முடியும்!

    ReplyDelete
  11. ***T.E said...

    அருள் என்பவர் ராமதாசின் அணுக்கத் தொண்டர் பசுமைப் பக்கங்கள் என்ற போர்வைக்குள் இருப்பவர். ராமதாசும் அன்புமணியும் எதனை எதிர்பார்த்து திட்டமிட்டு, மாற்றி மாற்றி பேசி வந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறி விட்டது. நாடு எப்படிபோனால் அவர்களுக்கென்ன?. இந்தூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்ததில் ஊழல் என்ற, வழக்கு விஷயமாக, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் ஆஜர் ஆன விவகாரத்தை எல்லோரும் மறந்து விட்டோம்.**

    அருளுக்கு சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு! எனக்கு என் சாதிக்காரந்தான் முக்கியம், நியாயம் செய்தாலும் அநியாயம் செய்தாலும் நான் அவர்களுக்குத்தான் ஆதரவா எழுதுவேன்னு அடம் பிடித்தால்.. அவரை யாருமே காப்பாத்த முடியாது!

    ReplyDelete
  12. ***kavi thamani said...

    இவர் நடத்துவது ஜா"தீ" கட்சி இல்லையா. ***
    அப்படி எதுவும் நான் இங்கே சொல்லியிருக்கேனா???

    ReplyDelete
  13. ****அருள் said...

    // //உயிர்சேதம் அடைந்த அப்பாவி வன்னியத் தமிழர்களுக்காக நிச்சயம் நாம் வருத்தங்களை தெரிவிப்போம்// //

    வன்னியர்களுக்கு எதிராக நிலவும் 'நவீன தீண்டாமையில்' ஒரு அங்கம்தான் உங்களது பதிவும்.

    பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே ஒரு தலைவராவது தமிழ்நாட்டில் உண்டா?கொலைசெய்யப்பட்ட வன்னியர்களுக்காக வருத்தம் தெரிவித்த ஒரே ஒரு தலைவராவது தமிழ்நாட்டில் உண்டா?

    தலித் மக்களில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களுக்கு இழப்பீடு அளித்துள்ள தமிழ்நாடு அரசு - பாதிக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட வன்னியர்களுக்கு இழப்பீடு அளிக்காதது ஏன்? வன்னியர்கள் இந்த அரசாங்கத்தின் குடிமக்கள் இல்லையா?

    "தப்பு யாரு செஞ்சாலும் தப்புத்தான்" என்று சொல்கிறீர்களே, வன்னியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தவறு என்று ஒரே ஒருவர் கூட சொல்லாதது ஏன்?

    'சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள்' என்பது போல தலித் மக்களில் வன்முறையாளர்களே இல்லை என்பதுதான் தமிழ் நாட்டின் நீதி.***

    தருமபுரி சம்பவம் நடந்தபோது, அதில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்காக நீங்க குடம் குடமாக கண்ணீர் விட்டு பதிவுமேலே பதிவு போட்டதை எல்லாம் நாங்க மறக்கவில்லை!

    ReplyDelete
  14. பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே ஒரு தலைவராவது தமிழ்நாட்டில் உண்டா?கொலைசெய்யப்பட்ட வன்னியர்களுக்காக வருத்தம் தெரிவித்த ஒரே ஒரு தலைவராவது தமிழ்நாட்டில் உண்டா?
    //

    Arul!

    First you may shed tears for others. Then they will shed for you.

    ReplyDelete
  15. குலசேகரன்: Arul will consume his tears only for his own "caste people". But we all have to cry for him, and his community as he ran out of tears now! LOL

    ReplyDelete