Tuesday, May 28, 2013

நாஞ்சில் நாடன் சாதி எனக்குத் தெரியும், ஜெயமோகன்!

பாவம் அந்த வயதான பெரிய மனுஷன்! நாஞ்சில் நாடன் சாதி இல்லைனா ஜெயமோகன் சாதி தெரியனும்னா அவர்களிடம் நேரிடையாக கேட்கவேண்டிய அவசியமே இல்லை! இந்த மேதாவிகள் உலகறிய தன் சாதியை தன் அப்பா பெயரை சொல்வதுபோல சாதியையும் சேர்த்து "பிள்ளை" னு சொல்லிக்கொண்டு அலைபவர்கள்! இதெல்லாம் தெரியாமல் அறியாமையில் வாழும் ஒரு வயதான ஆளிடம் போய் தன் வீரத்தைக்காட்டிக் கிட்டு திரிகிறார் ஜெயமோகன்..

 என்னவோ தான் பெரிய யோக்கியன், தன் சாதியை எல்லாம் எங்கேயுமே சொல்வதில்லை என்பதுபோல் பிதற்றல் எல்லாம் எதுக்கு ஜெயமோகன்???


Biography

Nanjil Nadan was born in Veera Narayanamangalam in Kanyakumari District to Ganapathiya Pillai and Saraswathi Ammal

 Biography

1962–1991

Jeyamohan was born on 22 April 1962 to S.Baguleyan Pillai and B.Visalakshi Amma in Arumanai, Nagercoil, Tamil Nadu. Baguleyan Pillai was an accounts clerk in the Arumanai registrar's office.
உலகத்திலே எத்தனையோ பேரு அறியாமையில் வாழ்றாங்க. வயதாக ஆக அறிவு வளரும் என்றோ, வயதானவங்க எல்லாரும் பண்போட நடந்துகொள்வார்கள் என்றோ நினைத்தால் நீங்கள் ஒரு அடி முட்டாள்!

அதுவும் 70 வயதாகிடுச்சுனா தன்னைவிட வயதில் சிறியவர்களைவிட தனக்கு அனுபவம் ஜாஸ்தினு நினைத்துக்கொண்டு எகத்தாளமாகப் பேசுபவர்களை நம்ம சொந்த பந்தங்களிலேயே எளிதாகப் பார்க்கலாம். ஏன் நமக்குப் பாடம் எடுத்த அறிவில் சிறந்த பேராசிரியர்கள்கூட நாம் அவர்களைவிட வளர்ந்தபின்னும் அவர்களுக்குத்தான் அதிகம் தெரியும்னு சொல்லி பிதற்றுபவர்களை நாள்தோரும் பார்க்கத்தான் செய்றோம, சகிச்சுக்கிட்டுத்தான் போறோம்.  ஏன் நம்ம ஜெயமோகனின் தூரத்து சொந்தத்திலும் ஏன் பக்கத்து சொந்தத்தில்கூட இதுபோல் வயதான முட்டாள்கள் இருக்கத்தான் செய்றாங்க. இதெல்லாம் சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும்! ஆனால்தன்னைப் பெரிய மேதைனு நெனச்சுக்கிட்டு இருக்கவாக்குத்தான் தெரியமாட்டேன்கிறது!

முட்டாள்னு சுட்டிக்காட்ட இந்த மேதாவிக்கு  எப்போவும் கெடைக்கிறது எவனாவது  தி மு க காரன் தான். இதிலிருந்தே இந்த ஆள் என்ன ஒரு விசமினு தெரிந்துகொள்ளலாம்!  வயதாக ஆக பித்தம் ஏறி மத வெறி பிடித்து அலையும் இந்துத்தவாக் காரன், வயசான பர்வெர்ட்டட் மலையாளிகள், பண்டாரங்கள், பக்திமான்கள் எல்லாம் இவரிடம் வந்து பிதற்றினால் அவர்களை, அவர்கள் அநாகரிக செயல்களை எல்லாம்  கவனமாக வடிகட்டி ஒதுக்கிவிட்டு அதுபோல் எதுவும் நடக்காதமாரி  ஊரை ஏமாற்றும் அறிவுஜீவிதான் இந்த ஜெயமோகன்! 

ஒரு வயதான ஒரு ஆளு என்னத்தையோ கேள்வினு கேட்டு தனக்கு நெறையாத் தெரியும்னு காட்டியிருக்காரு. சரி, இந்தாளு ஏதோ பிதற்றுகிறான்னு பேசாமல்  ஒதுங்கிப் போறதை விட்டுப்புட்டு தான் அவனை கிழிச்ச கிழிய ஒரு பதிவாப்போட்டு தன்னைப் பெரிய மேதை, கோவக்காரன், னு பெருமையாகக் காட்டிக்கிறார் இந்த மேதாவி. இதுக்கெல்லாம் மேதைகளுக்கு எப்படிப்பா நேரம் கெடைக்கிது!

இவரு வெட்டி முறிச்சதைப் பார்த்து ரசிங்கப்பா!


நான் முடிவுசெய்தேன். இனி இந்த ஆளை இப்படி விடக்கூடாது. நான் இங்கே விருந்தினர் என்பதல்ல முக்கியம். இந்த மொண்ணைத்தனத்தை எங்கே நிறுத்துவது என்பதுதான். என் கோபம் தலைக்குள் அமிலம்போல நிரம்பியது. நாஞ்சில்நாடன் எழுந்து செல்லும்போது அவர் முகத்திலிருந்த கசப்பை நினைவுகூர்ந்தேன். சடென்று என் கட்டுப்பாடு அறுந்தது
‘வாய மூடுங்க..என்னய்யா நினைச்சிருக்கே நீ? நீ யாரு? ஒரு புத்தகம் ஒழுங்கா படிச்சிருப்பியா? உன்னோட வாழ்க்கையிலே ஒரு எழுத்தாளன நேரில பாத்திருக்கியா? உன் எதிர்ல உக்காந்திருந்தது நாஞ்சில்நாடன்… அவரு யாருன்னு தெரியுமா உனக்கு? தெரியுமாய்யா? அவருக்கு நீ கைய நீட்டி கிளாஸ் எடுக்கிறே…அவர் சொல்ற ஒரு வார்த்தைய நீ கேக்க ரெடியா இல்ல…ஆனா நீ கொண்டுவந்து அவர் மேல போடுற குப்பைய அவர் சகிச்சிட்டிருக்கணும் இல்ல?’ என்றேன்
அவர் எதிர்பார்க்கவில்லை. வாயடைந்துபோய் ‘நீ பாத்துப்பேசணும்…நான் …நான் பேசத்தான் வந்தேன்’ என்றார்
‘என்னய்யா பேசணும்? பேச நீ யாரு? நாஞ்சில்நாடன் முன்னாடி இப்டி உக்காந்து பேச நீ யாருய்யா? வாய அளக்கிறியா? ஒருத்தர் முன்னாடி வந்து உக்காருறதுக்கு முன்னாடி அவரு யாருன்னு தெரிஞ்சுக்கிடமாட்டியா? ஒரு ஸ்காலர் முன்னாடி வந்து வாயத்திறக்கிறதுக்கு முன்ன உனக்கு என்ன தெரியும்னு ஒரு நிமிஷம் யோசிக்கமாட்டியா? நம்ம நாட்டில மட்டும் ஏன் இப்டி வடிகட்டின முட்டாளுங்க கூச்சநாச்சமில்லாம திரிய முடியுது..’
‘ஆமா நான் முட்டாள்தான்…நீ பெரிய புத்திசாலி’
‘ஆமாய்யா நான் புத்திசாலிதான்… நீ வெத்துமுட்டாள். ஏன்னா நான் என்னோட எடம் என்னன்னு தெரிஞ்சவன். அந்த எல்லைய மீறி எங்கயும் போயி அவமானப்பட மாட்டேன்…ஒரு அறிஞன் முன்னாடி என்ன பேசணும் எப்டி பேசணும்னு எனக்கு தெரியும்… உன்னை மாதிரி முட்டாளுக்குத்தான் தான் ஒரு முட்டாளுன்னுகூட தெரியாது….இப்ப நாஞ்சில் எந்திரிச்சு போனாரே, அவரு உன்னை முட்டாள்னு மனசுக்குள்ள திட்டிட்டுதான் போனார். அவரை விட எனக்கு உன் மேல கொஞ்சம் இரக்கம் ஜாஸ்தி. அதனால நான் உங்கிட்ட சொல்றேன். நீ ஒரு முட்டாள். அந்த ஒண்ணை மட்டுமாவது தெரிஞ்சுக்கிட்டேன்னா மேற்கொண்டு அவமானப்படாம இருப்பே…’
‘எனக்கு எழுபது வயசாச்சு…அதை நீ நினைக்கலை’
‘எந்திரிச்சு போய்யா…. எழுபது வயசுவரை மூளைய காலிச்சட்டி மாதிரி வச்சிருந்தா நீ பெரியாளாயிடுவியா? போய்யா” என்றேன்

நமக்கும் 50 க்கு மேலே வயசாகிப்போச்சு! இன்னும் இருபது ஆண்டுகளில் அந்த எழுபது வயதுக்காரர் போல நமக்கும் மரைகழண்டு போகும் முன்னால  இலக்கியம் மண்ணாங்கட்டினு எதையாவது எழுதறதைவிட்டுப்புட்டு முட்டாள்களை தேடி அலையாதிங்கப்பா, உங்களை அறிவாளியா காட்டிக்க!

இதெல்லாம் ஒரு பதிவுனு போட்டு ஒரு வயதான ஆளை இரக்கமே  இல்லாமல் திட்டிப்புட்டேன்னு கொஞ்சம்கூட அதற்காக வருத்தமடையாமல், அதை  உலகறியச் சொல்லி கேவலப்படுத்தும் ஒரு மிருககுணமுள்ள எழுத்தாளன்தான் இந்த ஜெயமோகன் னு எல்லாரும் தெரிஞ்சுக்கோங்கப்பா!

23 comments:

  1. இப்படி இருக்கிறார்கள்தான்! என்னத்தை சொல்வது?

    ReplyDelete
  2. என்னவோ போங்க, இந்த மேதைகள் உலகறிய தன் சாதியைச் சொல்லிக்கிட்டுத் திரிகிறது "உயர் தரமான" செயலாம்.

    அதையே ஒருத்தன் "நீ என்ன சாதியா?"னு வெகுளியா, கூமுட்டைத்தனமாக் கேட்டுப்புட்டான்னா, அது அநாகரிகமாம்! இவனுகளுக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துடுமாம்!

    அட அட அட அட!

    இவனுகளும், இவனுக பேசும் வெளக்கெண்ணை வியாக்யாணமும்!

    ReplyDelete
  3. தம்பி,
    ப்ளாக் மட்டும் வாழ்க்கை இல்ல...புள்ள குட்டிகளையும் பாக்கணும் ..சொந்தமா ஏதாவது ஆர்வம், பொழுதுபோக்கு இருக்கணும்.இல்லேனா இப்டிதான்.. ஜெமோ சொல்ற மாதிரி உன் கோழிமுட்ட வாழ்க்கையில இருந்து வெளிய வா..அப்புறம் ஒன மொக்க கருத்துகள சொல்லலாம் ...:):):):):)

    ReplyDelete
  4. *** Sunantha said...

    தம்பி,
    ப்ளாக் மட்டும் வாழ்க்கை இல்ல...புள்ள குட்டிகளையும் பாக்கணும் ..சொந்தமா ஏதாவது ஆர்வம், பொழுதுபோக்கு இருக்கணும்.இல்லேனா இப்டிதான்.. ஜெமோ சொல்ற மாதிரி உன் கோழிமுட்ட வாழ்க்கையில இருந்து வெளிய வா..அப்புறம் ஒன மொக்க கருத்துகள சொல்லலாம் ...:):):):):)***

    நான் சொந்தமா டி என் எ பத்தி எழுதுறேன் ஜெயமோகன், உன்னை மாரி முட்டாப்பயலுகளுக்கெல்லாம் ம்யிரா புரியும்?!

    வந்துட்டான் வாய் கிழியப் பேச, ஜெயமாகனுக்கு மாமா வேலை பார்க்கிறவன்!!

    ReplyDelete
  5. ***செல்​லையா முத்துசாமி said...

    நல்ல பதிவு**

    வருகைக்கு நன்றி ஐயா! தங்கள் பதிவு கண்டேன். அதுவே இப்பதிவுக்கு ஊக்குவிப்பு! :)

    ReplyDelete
  6. முன்பொருமுறை, பெரியார் புரட்சி அல்ல வெறும் பேரலை தான், வசைபாடி என்று சொன்னார். இவருக்கு திராவிட தலைவர்களை இழித்துப் பேசுவதும், இந்துத்வ சொரிதலுமே வழக்கமாகி போய்விட்டது. கேரளாவில் என்னை கொண்டாடுகிறார்கள் என்கிறாரே, அங்கேயே போக வேண்டியது தானே.

    ReplyDelete
  7. சிலபேர் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள் போகட்டும் விடுங்க...

    ReplyDelete
  8. என்ன சொல்லவருகிறார்கள் என்பதைக் காதில் வாங்காமல் அப்படி ஒரு திமிர்த்தனம்! கோயிலைப்பற்றி எழுதியவர், யார் சொன்னதையும் கேட்காமல்,எந்த குறிப்புகளையும் ஆராய்ந்து பார்க்காமால் சொந்த சரக்கை கற்பனையாகவா எழுதியிருப்பார்? இலக்கியம்னு சொல்லிக்கிட்டு இவனுங்க கிறுக்கித்தள்ளுவதெல்லாம் விலைபோகுது பாருங்க,அதுதான் கொடுமை.

    ReplyDelete
  9. //வெற்றுவேட்டு அறை வாழ்க்கை வாழ்பவர்கள் புளிச்சேப்பம் விடும் இணையம் எனக்கான உலகம் அல்ல.//

    //இங்கும் அதே மொண்ணைத்தனம். தமிழக மக்களின் வாழ்க்கையைப்பற்றி , அதன் அடித்தளப்பிச்சைக்கார வாழ்க்கையில் இருந்துஅணுகி பல்லாயிரம் பக்கங்கள் எழுதிய எழுத்தாளனுக்கு உதிரி கட்டுரைகளுக்கு அப்பால் வாசிக்கும் பழக்கமில்லாத அரைவேக்காடுகள் அறிவுரை சொல்கிறார்கள், எப்படி மக்களிடம் கலந்திருக்கவேண்டும் என்று.//

    //எதிர்வினைகள் எப்படி இருக்கும் என எனக்கு நன்றாகவே தெரியும் . சரித்திர ஆசிரியனுக்கும் எழுத்தாளனுக்கும் வேறுபாடுகூட தெரியாத கும்பல். நான் எழுதியிருப்பதே அந்த ஆசாமிகளைப்பற்றித்தானே? நான் எழுதியிருக்க்கும் பிரச்சினையை இவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. ஒரு சமூகம் அதன் மிகச்சிறந்த அறிஞர்களை எப்படி நடத்துகிறது என்று நான் சொல்லும்போது ஏன் அவர்களுக்கு என்ன கொம்பா என்று கேட்பவர்களின் மொண்ணைத்தனத்தைப்பற்றித்கானே எழுதியிருக்கிறேன். அதிலுள்ள அத்தனை கோபமும், வசைகளும் அவர்களுக்கு நேராகத்தானே?//

    //இவர்கள் தங்கள் எழுத்துக்கள் மூலம் நான் எழுதியது உண்மை, இது அறிவுச்சொரணை கெட்ட சமூகம் என மீண்டும் மீண்டும் உறுதிசெய்கிறார்கள். அவர்களுக்கு நன்றிதான் சொல்லவேண்டும்.//

    எல்லாம் ஒங்களுக்குத்தான் தம்பி...கேட்டுக்கிருங்க ...

    ReplyDelete
  10. நானும் படித்தேன். மெகா சைஸ் ஈகோ உள்ளவர்கள் நடந்து கொள்ளும் வித்த்தை ஜெயமோஹன் கட்டுரை சொல்கிறது. பொதுவாக செலப்ரட்டிக்களுக்கு ஸ்டார் ஈகோ உண்டு. அதில் பலியாகி தம்மைக்கெடுத்துக்கொள்பவரும், அதைக்கட்டுக்குள் வைத்து தம்மை உயர்த்திக்கொண்டோரும் உண்டு.
    தமிழ் எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல. ஜெயமோஹனின் ஈகோ கொஞ்சம் ஓவர். அவ்வளவுதான்.

    ReplyDelete
  11. ***Stalin M said...

    முன்பொருமுறை, பெரியார் புரட்சி அல்ல வெறும் பேரலை தான், வசைபாடி என்று சொன்னார். இவருக்கு திராவிட தலைவர்களை இழித்துப் பேசுவதும், இந்துத்வ சொரிதலுமே வழக்கமாகி போய்விட்டது. கேரளாவில் என்னை கொண்டாடுகிறார்கள் என்கிறாரே, அங்கேயே போக வேண்டியது தானே.***

    அதானே? கேரளவுக்குப் போயி மலையாளத்தில் இல்லைனா சம்ஸ்கிரதத்தில் கிழி கிழினு கிழிக்க வேண்டியதுதானே?

    ReplyDelete
  12. ***MANO நாஞ்சில் மனோ said...

    சிலபேர் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள் போகட்டும் விடுங்க...**

    நடந்தது இதுதான்.. எங்கேயோ விருந்தினராப் போயி, யாரோ ஒரு பெரும்பேச்சுப் பேசும் "பெரியமனுஷன்"ட்ட மாட்டிக்கிட்டான் இந்த மேதை..

    அந்தாளு பேசுற பேச்சை தாங்க முடியாமல் எல்லையைக் கடந்து வயதானவரிடம் படு கேவலமா நடந்துக்கிட்டான்..

    இப்போ இதைப் பத்தி செய்தி வெளியே வந்து இந்தாளு இப்படி கேவல்மா நடந்துக்கிட்டான்னு எவனோ எழுதறுக்கு முன்னால, தானே இதை உலகுக்கு எடுத்துச் சொல்லி முந்திக்கிட்டான்.

    He knows that he CROSSED the LINE when he argued with that old man. Now, as he is an "idiotic religious moron" who has an EGO which much bigger than elephant's ass, he justifies what he did as correct instead of feeling sorry for his misbehavior!

    ReplyDelete
  13. ***GURU said...

    என்ன சொல்லவருகிறார்கள் என்பதைக் காதில் வாங்காமல் அப்படி ஒரு திமிர்த்தனம்! கோயிலைப்பற்றி எழுதியவர், யார் சொன்னதையும் கேட்காமல்,எந்த குறிப்புகளையும் ஆராய்ந்து பார்க்காமால் சொந்த சரக்கை கற்பனையாகவா எழுதியிருப்பார்? இலக்கியம்னு சொல்லிக்கிட்டு இவனுங்க கிறுக்கித்தள்ளுவதெல்லாம் விலைபோகுது பாருங்க,அதுதான் கொடுமை. ***

    இந்தாளூ எங்ஏயோ போயி அநாகரிகமா நடந்துக்கிட்டான். என்ன பண்ணுறது இப்பொ? அந்த பெரிய மனுஷனுக்கு இவன் செஞ்சது சரி என்பதுபோல் .. அவன் நாழ்ல் நாடன் சாதியை கேட்டான்.. அவனுக்கு தலித்களை பிடிக்காது,,னு என்ன என்னவோ கதை கட்டிவிட்டு தான் செஞ்சதை சரி என்றாக்கிறான்.

    நாஞ்சில் நாடன் மற்றும் ஜெய்வமோவன் எல்லாரும் அவனுக சாதியை உலகறியச்சொல்லிக்கிட்டு திரிகிறார்கள்..

    அறியாமையில் வாழும் எவனோ ஒருத்தன் வந்து நீ என்ன சாதி?னு நாஞில் நாடந்த்ட கேட்டதும் இவங்களுக்கு அவமானம் தாங்க முடியலையாம்.

    அப்போ என்ன மயிருக்கு ஊரெல்லாம், உலகமெல்லாம் தெரிவதுபோல் விக்கிபீடியாவில் உன் சாதியைச் சொல்லி நீ இன்னாருனு விளம்பரப்படுத்திக்கிட்டு திரிகிற முண்டம்??? மூளையிருந்தால்தானே யோசிப்பானுக?

    ReplyDelete
  14. ***Sunantha said...

    //வெற்றுவேட்டு அறை வாழ்க்கை வாழ்பவர்கள் புளிச்சேப்பம் விடும் இணையம் எனக்கான உலகம் அல்ல.//

    //இங்கும் அதே மொண்ணைத்தனம். தமிழக மக்களின் வாழ்க்கையைப்பற்றி , அதன் அடித்தளப்பிச்சைக்கார வாழ்க்கையில் இருந்துஅணுகி பல்லாயிரம் பக்கங்கள் எழுதிய எழுத்தாளனுக்கு உதிரி கட்டுரைகளுக்கு அப்பால் வாசிக்கும் பழக்கமில்லாத அரைவேக்காடுகள் அறிவுரை சொல்கிறார்கள், எப்படி மக்களிடம் கலந்திருக்கவேண்டும் என்று.//

    //எதிர்வினைகள் எப்படி இருக்கும் என எனக்கு நன்றாகவே தெரியும் . சரித்திர ஆசிரியனுக்கும் எழுத்தாளனுக்கும் வேறுபாடுகூட தெரியாத கும்பல். நான் எழுதியிருப்பதே அந்த ஆசாமிகளைப்பற்றித்தானே? நான் எழுதியிருக்க்கும் பிரச்சினையை இவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. ஒரு சமூகம் அதன் மிகச்சிறந்த அறிஞர்களை எப்படி நடத்துகிறது என்று நான் சொல்லும்போது ஏன் அவர்களுக்கு என்ன கொம்பா என்று கேட்பவர்களின் மொண்ணைத்தனத்தைப்பற்றித்கானே எழுதியிருக்கிறேன். அதிலுள்ள அத்தனை கோபமும், வசைகளும் அவர்களுக்கு நேராகத்தானே?//

    //இவர்கள் தங்கள் எழுத்துக்கள் மூலம் நான் எழுதியது உண்மை, இது அறிவுச்சொரணை கெட்ட சமூகம் என மீண்டும் மீண்டும் உறுதிசெய்கிறார்கள். அவர்களுக்கு நன்றிதான் சொல்லவேண்டும்.//

    எல்லாம் ஒங்களுக்குத்தான் தம்பி...கேட்டுக்கிருங்க ...***

    வாங்க மாமா! வெட்டி ஒட்டிக் கிழிச்சாச்சா?

    உனக்கு இதெல்லாம் ஒரு பொழைப்பு!

    ReplyDelete
  15. ***குலசேகரன் said...

    நானும் படித்தேன். மெகா சைஸ் ஈகோ உள்ளவர்கள் நடந்து கொள்ளும் வித்த்தை ஜெயமோஹன் கட்டுரை சொல்கிறது. பொதுவாக செலப்ரட்டிக்களுக்கு ஸ்டார் ஈகோ உண்டு. அதில் பலியாகி தம்மைக்கெடுத்துக்கொள்பவரும், அதைக்கட்டுக்குள் வைத்து தம்மை உயர்த்திக்கொண்டோரும் உண்டு.
    தமிழ் எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல. ஜெயமோஹனின் ஈகோ கொஞ்சம் ஓவர். அவ்வளவுதான்.***

    மேதை அவரோடைய "ஈகோ" வைப் பேணி வளர்த்து காக்கிறாராம். நீங்களும் அப்பப்போ அதை தண்ணீ கிண்ணி ஊத்தி செழிப்பா வளரவைங்க!

    ReplyDelete
  16. ராஜேஷ்!

    அது செருப்படியன்று. உன்னிப்பாக வாசித்தால் அவர் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் அவரை விமர்சனம் செயதவர்களுக்கு. அவரை மக்களைவிட்டு விலகியவன் என்ற விமர்சனத்துக்கு அவர் சொல்லும் பதிலைக்கவனியுங்கள் (பத்தி 4):

    // நான் இன்று வரை நாகர்கோயிலில் நடந்துசெல்லும் நடுத்தர வர்க்க மனிதன் தான். என்னச்சுற்றியுள்ள எல்லாருக்கும் சாதார்ண அண்டைவீட்டான் மட்டுமே. இருபதாண்டுக்காலம் ஒரு நிறுவனத்தில் அன்றாடம் நூறுபேரை சந்திக்கும் சேவை வேலையில் இருந்தவன் நான். மக்களை எப்படி சந்திக்கவேண்டுமென எவரும் எனக்குச் சொல்லித்தரவேண்டியதில்லை. நான் மக்களில் ஒருவன், அன்றும் இன்றும்.//

    இதைச்சொன்னவர் இதற்கு முன் பத்தியில் (பத்தி எண் 3), தன்னிடம் அஹந்தை உண்டு; அதைப்பேணி வளர்க்கிறேன். காரணம் அதை வைத்து த‌ன் விமர்ச்கர்களைத்தாக்க என்கிறார். இந்த உத்தியைக் கூட அவர் தானாகவே கண்டுபிடிக்கவில்லை. ஜெயகாந்தனிடமிருந்து கற்றார் எனச்சொல்கிறார்.

    பத்தி 3 ம் பத்தி 4 ம் ஒன்றுக்கொன்று முரணானவை. ஒரு சாதாரண மனிதன் பல்ரோடு நெருங்கிப்பழகி வாழ்பவன். நாகர்கோயிலில் நடந்துசெல்லும் நடுத்தர வர்க்க மனிதன் - அஹ்ந்தையைப்பேணிவளர்த்தால் அவன் மக்களோடு வாழமுடியாது.

    'அற்பர்கள்' என வருணிக்கப்படுப்வர்கள் எங்குமிருப்பர். அவர்கள் இவர்களின் விமர்சகர்கள் மட்டுமல்ல; இவரின் உறவுக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் இருப்பர். அனைவரிடம் இவர் அஹ்ந்தை கொண்டால், இவ்ர் எப்படி சாதாரண மனிதர்?

    கொத்தனார் ஒரு கலைஞர் என்று எவர் சொன்னார்? வீட்டைக்கட்டுபவர் அவர். ஆனால் எப்படிக்கட்டவேண்டுமெனச் சொன்னவர் வேறுநபர். அவர்தான் கலைஞர். ஆர்கிடெக்ட். கொத்தனாரையும் எழுத்தாளரையும் இவர் விமர்சகர்கள் ஒப்பிட்டது ஒரு உண்மையைத்தெளிவுபடுத்ததான்: அதாவது: உழைக்கும் வர்க்கம் கொத்தனார்; ஓய்வு வர்க்கத்தைச்சேர்ந்தவர் எழுத்தாளர். பின்னர் தன்னால்தான் சமூகமே நடக்கிறதென்பது வேடிக்கையான கருத்து. எழுத்தாளர் இல்லாமல் சமூகம் நடக்கும். கொத்தனார் இல்லாமல் வீடு வராது. ஆக, நமக்கு முதலில் வேண்டியவர் கொத்தனார்; அவர் கட்டிய வீட்டில் இருந்து நாம் ஓய்வு எடுக்கும்போது நமக்குப் படிக்க நூலக்ள் வேண்டும். அப்போதுதான் எழுத்தாளர் தேவை.

    ஆனால், ஜெயமோஹன் போன்றவர்கள் நினைப்பது இவரே முதலில் எனபது. ராஜேஷ் பூனாவில் வேலை பார்க்கிறீர்கள்? வேலை பார்க்கும்போது ஜெயமோஹனைப்படிக்கிறீர்களா? இல்லை ஓய்வாக இருக்கும்போதா? பார்க்கும் வேலைக்கு உங்களுக்குச் சம்பளமா? இல்லை ஜெயமோஹனைப்படிப்பதற்கா?

    நீங்களுன் சுனத்தாவும் சுட்டிக்காட்டிய அவரின் இரண்டாம் கட்டுரையில் அவரின் மனவேதனையே தெரிகிறது. அபாலஜிடிக். என் சாளரம் வழியே கடலைப்பார்த்து இயற்கையை இரசிக்கிறேன் என்றாரம்பித்தவர், அந்த இரசனை என்னைப்பற்றிய விமர்சனங்களால் நிறுத்தப்படுகிறது என்பதை வரும் பத்திகளில் நமக்குக்காட்டுகிறார்.

    அவ்வேதனைக்கு அவரே காரணம். எழுத்தாளனோ எவனோ, தனக்கும் ஒரு எல்லையுண்டு என்றறிந்த வாழ்ந்தால், மதிநலம் கெடமாட்டார்கள். அஹ்ந்தை இருக்கலாமென்கிறார்கள் உளவியலாளர். ஆனால், அது ஓரளவுக்குத்தான் இருக்கவேண்டும் என்பர். நான் ஏற்கன்வே பின்னூட்டத்தில் சொன்னமாதிரி, இவருக்கு எல்லை மீறிய அஹந்தை. .

    எழுத்தாளரின் அஹந்தையை இரசிப்பவர்களைவிட மானம் கெட்ட அடிமுட்டாளகள் எவருமில்லை. ஜெயகாந்தன் சொன்னார் என்று இரசிக்கிறார்கள். அவரின் நாவலகளையல்லவா இரசிக்கவேண்டும்? அதே போலத்தான் ராஜேசுக்கும். ஜெயமோஹனின் புதினங்களையல்லவா நீங்கள் இரசிக்கவேண்டும்? சொல்லவேண்டும்? அவரின் அஹந்தையை இரசித்து செருப்படி கொடுத்தார் என ஆனந்தப்படுதல் மூன்றாம்தர விடலைப்பையனையல்லவா மிஞ்சுகிறது.

    மானம் மனிதருக்கழகு.

    ReplyDelete
  17. காவியா: வயதானதும் ஜெயகாந்தனுக்கும் மரை கழண்டது எல்லாருக்கும் தெரியும். போயி பாரதிய ஞான பீட பரிசு பெறும்போது, இதுக்கு முன்னால அகிலன்னு சொல்ற அகிலாண்டம் வாங்கினான், அவனும் என் சாதிக்காரந்தான் னு பிதற்றி தமிழர்களின் மானத்தை வாங்கினான் அந்தப் பெரிய மனுஷன்!

    ஜெயமோஹக்கும் 51ல யே கழண்டுடுச்சு போல இருக்கு!

    ReplyDelete
  18. Sure I did enjoy his writings! pathetic part is morons like you will never ever understand the context of what he intended to say. Same way I can show you atlesst 20 posts of charu's மனக்குமுறல் but you never cared them. Fact is simple you like charu and you hate j!

    ReplyDelete
  19. Kulasekaran: He is not interested in a debate with you. So, I cleaned that up! Sorry!

    ReplyDelete
  20. Hei buddy you cleaned every comment of me! Ok that's expected! Ha ha ha

    ReplyDelete
  21. They are in spam box (SAVED)! If you want them, I can bring them back! I did not know you loved your "ugly responses" that much! LOL

    ReplyDelete
    Replies
    1. I ain't that ugly as you! I responded to ur ugly words in your way! Well if tht is ugly tht means urs is that ugly LOL

      Delete