Friday, June 21, 2013

பச்சைத் தமிழன் வடிவேலுவும் தமிழின துரோகிகளும்!

வடிவேலு போன்ற ஒரு திறமையான நடிகன் தமிழ் திரையுலகில் முளைப்பது வெகு வெகு அரிது. வடிவேலுவை ஒரு திரைப்படக் கலைஞனாக வெள்ளித்திரையில் பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. கடந்த இரண்டு வருடங்களாக வடிவேலுவை, அவர் திறமையை மதித்து, சகநடிகனாக  வைத்து நடிக்கவோ, அல்லது அவரை வைத்து சினிமா எடுக்கவோ ரஜினி மற்றும் கமல் முதல்க்கொண்டு எவனும் முன்வரவில்லை!



 








காரணம்?

அரசியலில் வடிவேலுவின் அநாகரிகப் பேச்சு! வடிவேலு சப்போர்ட் செய்த கட்சி படுதோல்வி!

அதற்கும் கலைஞன் வடிவேலுக்கும் என்ன சம்மந்தம்??? ஒரு கலைஞனின் அரசியல் நிலைப்பாடு எப்படி அவன் தொழிலை பாதிக்கலாம்? பாதிக்கக்கூடாது! என்றெல்லாம் நீங்கள் வியாக்யாணம் பேசினால் உங்களை சரியான முட்டாளாகப் பார்க்கும் "முன்னேறிய" உலகம் இது!

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த காமராஜ் தமிழ்நாட்டை ஆளும்போது, இப்போதுதான் ஒரு "பச்சைத் தமிழன்" தமிழ் நாட்டை ஆள்கிறான் என்று முழு ஆதரவு கொடுத்தாராம் தந்தை பெரியார். காமராஜ், காங்கிரஸ்காரர், இறைநம்பிக்கை உள்ளவர் என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காமராஜை ஒரு தமிழனாக தந்தை பெரியாரால் மட்டும்தான் பார்க்க முடிந்தது. ஒரு பச்சைத்தமிழன் தமிழ்நாட்டை ஆள்வதுதான் தமிழர்களுக்குப் பெருமை என்றாராம் தந்தை பெரியார்!

அதுபோல், வடிவேலுவை ஒரு தமிழ்க் கலைஞனாக, திறமை மிக்கத் தமிழ் நகைச்சுவை நடிகனாகப் பார்க்க, அவர் ஆளுமையைப் பாராட்ட இன்று தந்தை பெரியாரும் இல்லை! வடிவேலுவை தமிழ் கலைஞனாக நோக்கும் சுத்தமான பெரியார் தொண்டர்களும் இன்று இல்லை!

ஒரு திறமைமிக்க நடிகனைக் கண்டுபிடித்து, அவன் திறமையைக்கண்டு வியந்து, அவனை வெள்ளித்திரைக்குக்  கொண்டு வருவது மிகவும் கடினம். ஆயிரக்கணக்காக திறமைமிக்க நடிகர்கள் திரைப்படத்தில் தோணாமலே வாழ்ந்து செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலரை, அப்படி கண்டெடுத்து அவர்கள் மக்களை மகிழ்விக்க திரைக்கு கொண்டுவரப்படுகிறார்கள். அப்படி கண்டெடுக்கப்பட்ட ஒரு திறமைமிக்க  கலைஞனான நம்ம வடிவேலுவை, சரிவர பயன்படுத்தாது, கேவலம் அரசியல் காரணங்களால், அந்த அபூர்வக் கலைஞனைத்  தூக்கி எறிவது, தமிழனுக்கும், தமிழ் கலைஞனுக்கும், தமிழ் கலைக்கும், தமிழர்கள் செய்யும் மிகப்பெரிய துரோகம்!

22 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ரசிகன் இப்போ விடுதலை கரடியா வந்து நிக்கிறான்.

    அதென்ன கரடினு??? ஓஒ! உன் அப்பன் பேரை லாஸ்ட் நேமா வச்சுக்கிட்டியாக்கும்!

    உன் ஆத்தா உன்னை கரடிக்கு பெத்தாளாக்கும்! :)))

    ReplyDelete
  3. என்ன உன் பின்னூட்டத்தை வெளியிட்டுட்டேன்னு பார்க்கிறயா?

    ரசிகன்னு சொல்லிக்கிட்டு இருந்த தேவடியா மகன் இப்போ, கரடிக்குப் பொறந்த்வன்னு சொல்லிட்டு இருக்கான்னு உன்னைப் பத்தி ஒரு அப்டேட்டு!

    போயி எங்கேயாவது முட்டு!

    ReplyDelete
  4. Antha comment padika ododi vantha ennai ematri vittayea manogara...

    ReplyDelete
  5. அது யாரு அந்த "மனோகரன்"? எந்தப் படத்துல இந்த வசனம், விக்னேஸ்வரன்?

    ReplyDelete
  6. தற்போது காமெடியில் வறட்சி காணப்படுவது உண்மை. சந்தானம் பிரபலாமாக இருந்தாலும் இளைஞர்களை மட்டுமே அவர் ஈர்க்கிறார்.வடிவேலுவைப் போல அனைத்து வயது ஆடியன்ஸ் தற்போதைய காமெடியன்களுக்கு இல்லை.
    அவரை புறக்கணிப்பது ரசிகர்களுக்குதான் இழப்பு.

    ReplyDelete
  7. என்னவோ போங்கள் இதைப் பற்றி எல்லாம் யோசித்தால் மண்டை கிர்ர்ர் என்கிறது, இவை எல்லாம் சர்வாதிகார நாட்டில் நடப்பவைகள் ( ஞனநாயக முகமூடி இட்ட இந்தியா, இலங்கைப் போன்ற நாடுகளிலும் சாத்தியமே ).. கலைக் கூத்தாடிகள் காசுக்கு மாரடிப்போர் என வடிவேலுவை கைவிட்டு உறுதியாக்கிக் கொண்டனர்.

    ReplyDelete
  8. ///இரண்டு வருடங்களாக வடிவேலுவை, அவர் திறமையை மதித்து, சகநடிகனாக வைத்து நடிக்கவோ, அல்லது அவரை வைத்து சினிமா எடுக்கவோ ரஜினி மற்றும் கமல் முதல்க்கொண்டு எவனும் முன்வரவில்லை!///

    எய்தவர் இருக்க அம்புகளை நோவதேன்...!

    ReplyDelete
  9. ///இரண்டு வருடங்களாக வடிவேலுவை, அவர் திறமையை மதித்து, சகநடிகனாக வைத்து நடிக்கவோ, அல்லது அவரை வைத்து சினிமா எடுக்கவோ ரஜினி மற்றும் கமல் முதல்க்கொண்டு எவனும் முன்வரவில்லை!//

    எய்தவர் இருக்க [கமல், ரஜினி] அம்புகளை நோவதேன்...! வடிவேலுவை வைத்து படம் எடுத்தால்...இந்த [கோழை]அம்புகள் சினிமா வாழ்வும் சுத்தமாக அப்பீட்டாகி விடும்.

    நிரப்ந்தம் அப்படி! பிழைக்கத் தெரிந்த அம்புகள்.

    ReplyDelete
  10. நம்ம தமிழ் சினிமாவில் ஜால்ரா போடுபவன் மட்டுமே நிலைக்க முடியும்

    ReplyDelete
  11. உண்மையிலேயே வடிவேல் அளவுக்கு எவரும் எனக்கு பிடித்தவர் தற்போது யாருமே இல்லை.

    ReplyDelete
  12. comedy ippothellaam kaama nediyaakap poykkondu irukkirathu. penkalai kevalappadutthum comedikalaitthaan vivekkum santhaanamum seythu kondu irukkiraarkal. kannaa laddu thinna aasaiyaavil oru vasanam " azukippona thakkaaliyai ellaam vacchi viyaapaaram panre!" penkal patriya kevalappaarvaiyil santhaanam pesiyathu.

    ReplyDelete
  13. நான் நினைக்கிறேன் வடிவேலுக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு இது மட்டும் காரணம் இல்லை என்பது என் கருத்து..

    வடிவேலுக்கு முன்னர் கவுண்டமனி செந்தில் உச்சத்தில் இருந்தனர். இப்போது சந்தானம் உச்சத்தில் இருக்கிறார்...

    மாற்றம் ஒன்றுதான் மாறாதது..

    ReplyDelete
  14. arumayana pathivu, ethanai peruku ethu puriyum, engeyo veli naatil agathiyai poi utkarnthu kondu, ingu erukum tamilargali kevalamagavum, asingamakavum enayathil eluthum nabargalum thalai kuniyathaan vendi erukurathu. entha tamilargalukka naam ivvalvu porattangal nadathinom enbathu vetkapada vendiya vishayam. nandri.

    ReplyDelete
  15. varun ingu ellamey arasiyal than ithu puriyamal katturai eluthi ullirgal.

    vadivelum neengalum naanum itharku vithi vilaku illai

    ReplyDelete
  16. \\கடந்த இரண்டு வருடங்களாக வடிவேலுவை, அவர் திறமையை மதித்து, சகநடிகனாக வைத்து நடிக்கவோ, அல்லது அவரை வைத்து சினிமா எடுக்கவோ ரஜினி மற்றும் கமல் முதல்க்கொண்டு எவனும் முன்வரவில்லை!\\யாரை போடணும்னு அவங்க தான் முடிவெடுக்கணும், இன்னாரைத்தான் போடணும்னு எந்த கட்டாயமும் இல்லை. அப்படி ஒரு அக்ரீமெண்டு இவர் கிட்ட யாரும் போட்டுகிட்டா மாதிரி தெரியலை. இதெல்லாம் பணம் போட்டு எடுப்பவரின் சுதந்திரம். உங்களுக்கு வடிவேலுவை பிடிக்கும்கிறதுக்காக இவர்களைத் திட்டுவது not acceptable. வேணும்னா நீங்க பணம் போட்டு படம் எடுங்க.


    \\காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த காமராஜ் தமிழ்நாட்டை ஆளும்போது, இப்போதுதான் ஒரு "பச்சைத் தமிழன்" தமிழ் நாட்டை ஆள்கிறான் என்று முழு ஆதரவு கொடுத்தாராம் தந்தை பெரியார்.\\காமராஜ்நல்ல தலைவர், ஆளட்டும் என்றால் பரவாயில்லை, அதென்னது பச்சை தமிழன் அவித்த தமிழன் அப்படின்னு? டார்வினின் கொள்கைப் படியே பார்த்தாலும் எங்கேயாவது தமிழ் குரங்குன்னு தனி இனம் இருந்து அதிலிருந்து தமிழன் வந்தானா? ஜெயலலிதா, எம்ஜியார் இவங்கயெல்லாம் ஈ வெ ரா கூட கட்சிக் கூட்டத்தில் இருக்கும் படங்கள் பார்த்ததேயில்லையா? புரவென்ன?

    ReplyDelete
  17. வருண், வடிவேல் மேல் ரெம்ப அக்கறை இருந்தா நீரே வடிவேலுவை வைத்து ஒரு படம் எடுக்கலாமே.

    ReplyDelete
  18. Hi Varun,

    Many times it happened, when I am in your page, suddenly it redirects to the following site,

    http://www.imeetzu.com/

    Why?

    ReplyDelete
  19. ***டார்வினின் கொள்கைப் படியே பார்த்தாலும் எங்கேயாவது தமிழ் குரங்குன்னு தனி இனம் இருந்து அதிலிருந்து தமிழன் வந்தானா?***

    டார்வின் தான் பரிணாமம்னு ஏதோ ஏமாத்துவேலை செய்து இருக்காருனு நீங்க சொல்லிக்கிட்டு திரிஞ்ச ஞாபகம்.

    இப்போ பெரியாரி கவிழ்த்த டார்வினை வக்காலத்துக்கு அழைக்கிறீங்களா??!!!!

    ReplyDelete
  20. **** அருண் said...

    வருண், வடிவேல் மேல் ரெம்ப அக்கறை இருந்தா நீரே வடிவேலுவை வைத்து ஒரு படம் எடுக்கலாமே. ***

    அபப்டிங்களா? செய்துட்டாப் போச்சு! :)))

    ReplyDelete
  21. ***Jayadev Das said...

    Hi Varun,

    Many times it happened, when I am in your page, suddenly it redirects to the following site,

    http://www.imeetzu.com/

    Why?**

    I have this spyware in my site. I really dont know how to get rid of it. I HATE IT when it happens to me! (the direct to that bastard's site!)

    ReplyDelete