Thursday, July 4, 2013

வன்னியர் அருள்! இப்போ சந்தோஷம்தானே?

வன்னியர் சாதியச் சேர்ந்த  இளம் பெண், திவ்யா, தனிப்பட்ட தன் காதல், தன் கல்யாணப் பிரச்சினை, நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து பெரிதாக ஆக, பயந்து, நடுங்கி, எதுக்கு வம்பு னு  , மணம் முடித்த தலித் கணவனை விட்டு வந்துவிட்டாள்!

மனைவியைப் பிரிந்த காரணத்தினாலோ என்னவோ "என்னடா இது உலகம்!" னு இளவரசன் ஒரேயடியா இந்த உலகத்தை விட்டுப் போயித் தொலைஞ்சுட்டான்!

இங்கே நம்ம அருள், பதிவுமேலே பதிவுபோட்டு, ஆனந்தக் கண்ணீருடன் கலந்த நீலிக்கண்ணீர் வடித்து, திவ்யாவை நினைத்து பெருமிதமும், இளவரனை நினைத்து எல்லையில்லா வருத்தமும் அடைகிறார்! பாவம், அவருக்கு யாராவது ஆறுதல் சொல்லி தேத்துங்கப்பா!

ஒரு சாதாரண காதல் பிரச்சினையை, இந்த 21ம் நூற்றாண்டில், சாதிப் பிரச்சினையாய் ஆக்கி, உலகப் பிரச்சினையாய் ஆக்கி.... இளம் காதலர்களை, கலங்க வைத்து, குழப்பி..விவாகரத்து செய்ய வைத்து..காதலனை உயிரை இழக்க வைத்து..காதலியின் இதயத்தில் வாழ்நாள் முழுவதும் ஆறாத ஒரு வடுவை உண்டாக்கி என்னப்பா சாதிச்சீங்க? கொஞ்சம்கூட மூளையே வேலை செய்யாதா, சாதி வெறிபிடித்தலையும் இந்த மூடர்களுக்கு?


23 comments:

  1. முதலில் சாதிக்கட்சிகளை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும். திவ்வியாவை விதவையாக்கியது அவளது உற்றாரும், உறவினர்களும் தான்.

    ReplyDelete
  2. மனு இன்னும் மடியவில்லை. அவன் வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக, தேவனாக, ரெட்டியாக, செட்டியாக, ஐயராக, ஐயங்காராக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அதனால்தான் இளவரசன்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள்.
    http://www.hooraan.blogspot.com/2013/07/blog-post.html

    ReplyDelete
  3. ஆணும் பெண்ணும் சட்டப்படியான திருமண வயதை அடைந்து,
    அவர்கள் தங்களது கல்வி, படிப்பை முடித்து,
    சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு வருமானமும் இருந்து,
    இருவருக்கும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக பிடித்திருந்தால் -

    அங்கே
    சாதி ஒரு தடையாக இருக்கக் கூடாது,
    சாதி ஒரு தகுதியாகவும் இருக்கக் கூடாது.

    (அதாவது, சாதி மறுப்புத் திருமணம் என்பதே ஒரு தனிப்பெருமையோ தகுதியோ அல்ல. அதனைப் போற்றிப் புகழும் முற்போக்கு வியாதிகளை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு, புறக்கணிக்க வேண்டும்)

    ReplyDelete
  4. ***viyasan said...

    முதலில் சாதிக்கட்சிகளை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும். திவ்வியாவை விதவையாக்கியது அவளது உற்றாரும், உறவினர்களும் தான்.***

    பாவம்ங்க சின்னப் பொண்ணு. இந்த வயதில் இதுமாரி ஒரு பப்ளிசிட்டி, பேரிழப்பு, குற்ற உணர்வு.. :(

    ReplyDelete
  5. ***ஊரான் said...

    மனு இன்னும் மடியவில்லை. அவன் வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக, தேவனாக, ரெட்டியாக, செட்டியாக, ஐயராக, ஐயங்காராக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அதனால்தான் இளவரசன்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள்.***

    போராடணும்! வாழணும்! வாழ்ந்து காடணும்! தற்கொலையால் எதையும் சாதிக்க முடியாது!

    ReplyDelete
  6. ****அருள் said...

    ஆணும் பெண்ணும் சட்டப்படியான திருமண வயதை அடைந்து,
    அவர்கள் தங்களது கல்வி, படிப்பை முடித்து,
    சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு வருமானமும் இருந்து,
    இருவருக்கும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக பிடித்திருந்தால் -

    அங்கே
    சாதி ஒரு தடையாக இருக்கக் கூடாது,
    சாதி ஒரு தகுதியாகவும் இருக்கக் கூடாது.

    (அதாவது, சாதி மறுப்புத் திருமணம் என்பதே ஒரு தனிப்பெருமையோ தகுதியோ அல்ல. அதனைப் போற்றிப் புகழும் முற்போக்கு வியாதிகளை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு, புறக்கணிக்க வேண்டும்)****

    அருள்: 21 வயதான உடனே அறிவு வளர்ந்து, எல்லாரும் சொந்தக்காலில் நின்னுடுவாளாக்கும்?? ஏங்க சும்மா போட்டுக்கிட்டு..

    ReplyDelete
  7. சாதியம் தன் கோர முகத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இங்கு சிக்கலே, சாதி மறுப்பாளர்களின் மவுனங்களும், கையாலாகாத்தனமுமே. தருமபுரி சம்பவம் நடந்த பின் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பை உறுதி செய்ய நாம் என்ன செய்தோம்? சாதி வெறியர்கள் மீது மட்டும் பழியைப் போடுவதன் மூலம் நமது குற்றவுணர்வை மறைக்க முனைவது முறையல்ல. இங்கு சாதி மறுப்பு பேசும் நாம், நமது வாழ்வில் சாதிகளை முற்றாக துறந்து தான் விட்டோமா? அல்லது குறைந்தது சாதி மறுத்து மணந்தோரின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் எத்தகைய உத்தரவாதங்களை எம்மால் அளிக்க முடிந்தது. இங்கு குற்றவாளிகள் தமது வெறித்தனத்தை பரப்பிக் கொண்டே உள்ளனர், அவர்களை நம்மால் ஒழிக்கத் தான் முடிந்ததா? அடுத்து இன்னொரு இளவரசன் இறக்கும் வரை, திவ்யா அபலையாக்கப் படும் வரை, வாய் மூடி மவுனிகளாக கிடப்போம், அல்லது எங்காவது புலம்பித் தீர்த்து விட்டு நாலாம் நாள் அவரவர் சோழியைப் பார்க்கப் போவோம். முடிவு???

    ReplyDelete
  8. //மனு இன்னும் மடியவில்லை. அவன் வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக, தேவனாக, ரெட்டியாக, செட்டியாக, ஐயராக, ஐயங்காராக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அதனால்தான் இளவரசன்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள்//

    இளவரசன் காதலை ஏன் தலித் கட்சிகள் ஆதரித்தன. அதுவும் ஒருவகை ஜாதி பாசம் தானே. இதனால் திவ்யா போன்றவர்கள் வாழ்க்கை இழந்து கொண்டு இருக்கிறார்கள்

    ReplyDelete
  9. அருள் வீட்டில் கெடா வெட்டி விருந்து கொடுக்கிறாங்களாம்

    ReplyDelete
  10. "இளவரசன் காதலை ஏன் தலித் கட்சிகள் ஆதரித்தன. "
    எதிர்ப்பு ஜாதி ரீதியாக வந்ததால் தான் ஆதரவும் வந்தது.

    ReplyDelete
  11. ஐயா அருள் அவர்களே!

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமம். வன்னியரான G.சுரேஷ் (வயது:30)தாழ்த்தப்பட்டவரான தனது மனைவி s.சுதா (வயது:23)இருவருக்கும் உங்கள் சொந்தங்கள் செய்த கொடுமை பற்றிய எனது பதிவைப் படித்துவிட்டு கருத்து சொல்லுங்களேன். இது குறித்து நான் தங்கள் தளத்திற்கு அனுப்பிய பின்னூட்டத்தை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து விட்டீர்களே! ஏன்?

    ReplyDelete
  12. ***நிரஞ்சன் தம்பி said...

    சாதியம் தன் கோர முகத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இங்கு சிக்கலே, சாதி மறுப்பாளர்களின் மவுனங்களும், கையாலாகாத்தனமுமே. தருமபுரி சம்பவம் நடந்த பின் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பை உறுதி செய்ய நாம் என்ன செய்தோம்? சாதி வெறியர்கள் மீது மட்டும் பழியைப் போடுவதன் மூலம் நமது குற்றவுணர்வை மறைக்க முனைவது முறையல்ல. இங்கு சாதி மறுப்பு பேசும் நாம், நமது வாழ்வில் சாதிகளை முற்றாக துறந்து தான் விட்டோமா? அல்லது குறைந்தது சாதி மறுத்து மணந்தோரின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் எத்தகைய உத்தரவாதங்களை எம்மால் அளிக்க முடிந்தது. இங்கு குற்றவாளிகள் தமது வெறித்தனத்தை பரப்பிக் கொண்டே உள்ளனர், அவர்களை நம்மால் ஒழிக்கத் தான் முடிந்ததா? அடுத்து இன்னொரு இளவரசன் இறக்கும் வரை, திவ்யா அபலையாக்கப் படும் வரை, வாய் மூடி மவுனிகளாக கிடப்போம், அல்லது எங்காவது புலம்பித் தீர்த்து விட்டு நாலாம் நாள் அவரவர் சோழியைப் பார்க்கப் போவோம். முடிவு???***

    வாங்க நிரஞ்சன் தம்பி. பெருசா நம்ம எதுவும் செய்ய முடியாதுங்க. அருள் மாதிரி இப்படி படித்தும், பகுத்தறியத்தெரியாமல், சாதி சாதினு அலைந்துகொண்டு இருக்கும் ஒரு சிலரை திருத்தினால் அட் லீஸ்ட் பதிவுலகமாவது திருந்தும்! கொஞ்ச்ம சுத்தமாக இருக்கும்!

    ReplyDelete
  13. *** ramkumar said...

    //மனு இன்னும் மடியவில்லை. அவன் வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக, தேவனாக, ரெட்டியாக, செட்டியாக, ஐயராக, ஐயங்காராக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அதனால்தான் இளவரசன்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள்//

    இளவரசன் காதலை ஏன் தலித் கட்சிகள் ஆதரித்தன. அதுவும் ஒருவகை ஜாதி பாசம் தானே. இதனால் திவ்யா போன்றவர்கள் வாழ்க்கை இழந்து கொண்டு இருக்கிறார்கள் ***

    ஏன் சார், உங்க கருத்தைச் சொல்றதுக்காக, ராம்குமார் னு ஒரு ஐ டி தயாரிச்சு இப்படி எதுக்கு ஒரு கோழைத்தனம்?

    தலித்கள் எல்லாம் யோக்கியர்கள்னு எவன் சொன்னான்?

    ஒரு சாதாரண காதல் பிரச்சினையை கண்டுக்காமல் விட்டுட்டுப் போறதை விட்டுப்புட்டு.. எத்த்னை உயிரிழப்பு? மூளையே கெடையாதா உங்களுக்கு? கொஞ்ச்மயோசிச்ச்சால் என்ன?

    ReplyDelete
  14. ***Ethicalist E said...

    அருள் வீட்டில் கெடா வெட்டி விருந்து கொடுக்கிறாங்களாம் ***

    அறியாமையில் வாழும் அருளை நெனச்சு சிரிக்கிறதா இல்லை அழுகிறதானு தெரியலை! :(

    ReplyDelete
  15. ***Ethicalist E said...

    "இளவரசன் காதலை ஏன் தலித் கட்சிகள் ஆதரித்தன. "
    எதிர்ப்பு ஜாதி ரீதியாக வந்ததால் தான் ஆதரவும் வந்தது.***

    தலிதகளுக்கு புத்தியில்லைனு வச்சுக்குவோம். உங்களுக்கும் ஏன் புத்தி பேதலிக்கிது "ராம்குமார்"? உங்களுக்கும் புத்தி கட்டையா?

    ReplyDelete
  16. ***ஊரான் said...

    ஐயா அருள் அவர்களே!

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமம். வன்னியரான G.சுரேஷ் (வயது:30)தாழ்த்தப்பட்டவரான தனது மனைவி s.சுதா (வயது:23)இருவருக்கும் உங்கள் சொந்தங்கள் செய்த கொடுமை பற்றிய எனது பதிவைப் படித்துவிட்டு கருத்து சொல்லுங்களேன். இது குறித்து நான் தங்கள் தளத்திற்கு அனுப்பிய பின்னூட்டத்தை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து விட்டீர்களே! ஏன்? ***

    அவர் தன் சாதிப் பெருமையை வளர்க்கவே பச்சைத்தளம் ஒண்ணு நடத்துறாரு. எல்லாசாதியிலும் அயோக்கியன் இருப்பான், நல்லவனும் இருப்பான், அப்பவியும் இருப்பாங்க..

    ஆனா, நம்ம அருள் ஐயா சாதியிலே 100% எல்லாரும் யோக்கிய்னுகதான். தப்பே செய்ய மாட்டார்கள்!

    ReplyDelete
  17. அந்தப் பெண்ணைவிட அந்தப் பையன் வயதில் இளையவன். அந்த பெண் தான் அவனை விரும்பி காதலிக்க ஆரம்பித்தது. பையன் மைனர்....பொண்ணு மேஜர். மைனர் பையனை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட அந்தப் பெண் குற்றவாளி.

    இந்த உண்மை அன்புமணியின் கைத்தடி அருளுக்கும் தெரியும்.

    இப்போது இது கொலையா? தற்கொலையா? என்று அனைவருக்கும் சந்தேகம்.

    கொலை என்றால் அன்புமணி புழல் சிறையில் நிரந்தரமாக களி தின்பது உறுதி.

    ஏற்கனவே ராமதாசு அண்ணாச்சியைக் காணவில்லை. என்னாச்சு என்றும் தெரியவில்லை.

    ReplyDelete
  18. வாங்க ராவணன்!

    இது தற்கொலையாக இருப்பது எல்லாருக்கும் நல்லது (திவ்யாவைத் தவிர.. அவள் குற்ற உணர்ச்சி அவளை வாழ்நாள் முழுவதும் சித்ரவதை செய்யும்! :( )

    ஒரு வேளை கொலையாக இருந்தால்.. வன்னியர்கள் எல்லாம் தன் சாதிக்காரர்களின் சாதி வெறியை, அறியாமையை நினைத்து வெட்கப்படணும், தலை குனியணும்!

    தமிழன் பெருமை பேசும் நம்மை எல்லாம் மற்ற மாநிலத்தவர் இழிவாக, கேவலமாகப் பேசும்போதும் மறுப்பேச்சேதும் சொல்லாமல் ஏற்றுக்கணும்!

    ReplyDelete
  19. சாதி குறித்து யார் பெருமைபடுகிறார்கள் என்பது அருள் உள்ளவர்களுக்கு தெரியும் ..
    சாதி குறித்து பெருமைப்படும் அருள் உள்ளவர்கள் கற்ற கல்வி எதற்கு? வேதனை?

    சாதி இருக்கிறது என்பானும் உள்ளானேடா -என்றார் பாரதி தாசன்.

    ReplyDelete
  20. இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
    கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
    நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
    நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
    - பாடல்: கண்ணதாசன் (படம்: கருப்புப் பணம்)

    ReplyDelete
  21. எனக்கும் அருள் போன்ற தீவிர மன சிதைவு நோய் கொண்டவர்களை கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை...திவ்யா தாயுடன் செல்வதாய் சொன்ன உடன் செல்வி திவ்யா என்று அழைக்க ஆரம்பித்ததும், காதலித்து மணந்த பெண் தன்னை பிரிந்து போகிறாள் என்று இளவரசன் கோர்ட்டில் பதட்ட பட்டதை தெய்வ திருமகள் விக்ரம் போல் கோர்ட்டில் நடித்தார் என்று சொல்லி அருவெறுக்க தக்க கிண்டல் செய்ததும் அவ்வளவு ஏன் கடைசியாக திவ்யா பேட்டி அளித்த போதும் கூட அருள் கோர்ட்டில் இருந்து வழிநடத்தி வந்ததும்...தூ ....ஒரு பாவமும் அறியாத இளவரசன் சிந்திய ரத்தத்தில் எந்த சந்தேகமும் இல்லாமல் அருளின் பங்கும் உள்ளது...

    ReplyDelete
  22. சாதி வெறியர்களின் முன் காதல் இதயங்கள் தோற்றுவிட்டன...

    ReplyDelete
  23. neethithuraiyum
    kavalthuraiyum
    pamakayum
    enainthu natathiya kolai elavarasan
    maranam
    manamulla tamilar
    yenga tamilar dhu sunami vanthu
    entha elithamilnadai alikatha

    ReplyDelete