Wednesday, August 21, 2013

மறைந்த அப்துல்லா என்னும் பெரியார்தாசன் நாத்திகத்தை இழிவுபடுத்திவிட்டாரா?!

 சேஷாச்சலமாகப் பிறந்த இவர், பெரியார்தாசனாக மாறி, பிறகு அப்துல்லாவாக மாறி, இப்போ நம்மை எல்லாம் விட்டு பிரிந்துபோய்விட்டார். அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஓசைனு ஒரு தளம் நடத்திவரும் ஆத்திகர் ஒருவர், பெரியார் தாசன், நாத்திகத்தை துறந்து, அப்துல்லா ஆனதை சில அரசியல்வாதிகள் மறைத்துவிட்டார்கள் என்பதுபோல் பதிவைப்போட்டு ஆத்திகர்களிடன் பெரு மதிப்பெண்ணை பெற்றுள்ளார்..

அவர் பதிவில் இட்ட என் பின்னூட்டம் வெளிவருமா? என்று தெரியவில்லை. ஏன் என்றால் நான் என் மனதுக்கு உகந்த பின்னூட்டங்கள்தான் எழுதுவதுண்டு.. ஓசையை திருப்திபடுத்தணும்னு என் கருத்தை பவ்வியமாக எழுதினால் என்னால் நான் சொல்ல வந்ததை சொல்ல இயலாது.

Anyway, here is a COPY of  my response in his blog post

 பெரியார்தாசன் "பகுத்தறிவு உண்மையை மறைக்கலாமோ..."

about late Abdulla aka periyaar dasan!..


எனக்கென்னவோ அவர் நிதானமாக யோசித்து "பெரியார் தாசன்"னு தன் பெயரை மாற்றி இருக்கணும்ணு தோனுது. எதுக்கு இப்படி அவசரப்பட்டாரு?? பெரியார் மற்றும் நாத்திகம், நாத்திகவாதிகள் யோக்கியதனை என்ன? என்று கொஞ்சம்கூட பகுத்தறியாமல் "பெரியார் தாசன்" மண்ணாங்கட்டினு பேரை மாத்திக்கிட்டாரு போல.

நல்லவேளை அப்துல்லாவாகவே கடைசிவரையில் இருந்து மறைந்தார். ஒரு ஆல்பர்ட்டாக அப்புறமாக மாறாமல்.

மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை எல்லாம் ஒருவர் மனம் சம்மந்தப்பட்ட விசயம். கட்சி மாறுவதுபோல ஆத்திகம் நாத்திகம் ஆத்திகம்னு தாவினால் அப்துல்லா அவர்கள் எதையும் தெளிவாகப் பகுத்தறியத் தெரியாதவர் என்றுதான் அர்த்தம்..

ஆமா வருண், அவர் எழவு வீட்டில் ஏன் இப்படி ஒரு "ஒப்பாரி"னு கேட்கலாம்தான்? இந்தப் பதிவே ஒரு ஒப்பாரிதானே? இல்லையா? ஆத்திகம்தான் உயர்வானதுனு வைக்கிற ஒப்பாரிதான் இது. 


ஆனால் உண்மை என்ன? அப்துல்லா ஒரு திடமான முடிவு எடுக்கத் தெரியாதவர், தன் மனத்தையே சரியாக அறியாமல் குழப்பத்தில் வாழ்ந்தவர்  என்பதே. இவர் இன்னும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், "ஐ லவ் ஜீசஸ் "னுகூட சொன்னாலும் சொல்லியிருப்பார்!

உடனே இஸ்லாமியர்கள் எல்லாம் வந்து "அதெல்லாம் அப்துல்லா அப்படி சொல்லி இருக்க மாட்டார்"னு அடித்துச் சொல்வார்கள். அவர்களால், தன் மனதையே தெளிவாக அறிந்துகொள்ளாத அண்ணன் அப்துல்லா மனதை எப்படிப் பகுத்தறிய முடியும், பாவம்??

20 comments:

  1. ///ஆனால் உண்மை என்ன? அப்துல்லா ஒரு திடமான முடிவு எடுக்கத் தெரியாதவர், தன் மனத்தையே சரியாக அறியாமல் குழப்பத்தில் வாழ்ந்தவர் //

    அவர் கடவுளைத் தேடியிருக்கிறார் என்றும் கொள்ளலாம். ஆனால் அவர் அந்தப் பயணத்தை முடிக்க முன்பே போய்ச்சேர்ந்து விட்டார் அல்லது அரேபியா வரை போனவர் அங்கிருந்து ஆபிரிக்காவுக்குப் போய் ஆபிரிக்க ஆதிவாசிகளின் கடவுள் சுக்வுவை வழிபடும் ஒரு ஓடினானி ஆகக் கூட மாறியிருக்கலாம்.

    ReplyDelete
  2. வருண்,

    உங்க கணக்குப் படி, ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் அது நாய் வாலா இருந்தாலும் சரி.......... அவன் தெளிவா சிந்திப்பவனாக்கும்......... ஐயோ............ஐயோ.............

    ReplyDelete
  3. ***viyasan said...

    ///ஆனால் உண்மை என்ன? அப்துல்லா ஒரு திடமான முடிவு எடுக்கத் தெரியாதவர், தன் மனத்தையே சரியாக அறியாமல் குழப்பத்தில் வாழ்ந்தவர் //

    அவர் கடவுளைத் தேடியிருக்கிறார் என்றும் கொள்ளலாம். ஆனால் அவர் அந்தப் பயணத்தை முடிக்க முன்பே போய்ச்சேர்ந்து விட்டார் அல்லது அரேபியா வரை போனவர் அங்கிருந்து ஆபிரிக்காவுக்குப் போய் ஆபிரிக்க ஆதிவாசிகளின் கடவுள் சுக்வுவை வழிபடும் ஒரு ஓடினானி ஆகக் கூட மாறியிருக்கலாம்.***

    வாங்க வாங்க வியாசர் அண்ணாச்சி! அவருக்கு என்ன பிரச்சினையோ? :(

    ReplyDelete
  4. ***Jayadev Das said...

    வருண்,

    உங்க கணக்குப் படி, ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் அது நாய் வாலா இருந்தாலும் சரி.......... அவன் தெளிவா சிந்திப்பவனாக்கும்......... ஐயோ............ஐயோ............***

    நீங்க சொல்றதை பார்த்தால் திருமணம் செய்தவளை விட்டுப்புட்டு டெய்லி ஒருத்தி பின்னால போய் "இவள்தான் என் சோல்மேட்"னு வருடத்துக்கு ஒருத்திய மாத்துறவாளுக்கு (சட்டப்படிதான்) அலையிறவனுக்கு எல்லாம் வக்காலத்து வாங்குற மாரி இருக்கு!!

    நீங்க ஏன் இப்படி "ஐயோ ஐயோ"னு அடிச்சிக்கிறீங்க இப்போ? :)

    ReplyDelete
  5. \\செய்தவளை விட்டுப்புட்டு டெய்லி ஒருத்தி பின்னால போய் "இவள்தான் என் சோல்மேட்"னு வருடத்துக்கு ஒருத்திய மாத்துறவாளுக்கு (சட்டப்படிதான்) அலையிறவனுக்கு எல்லாம் வக்காலத்து வாங்குற மாரி இருக்கு!!\\

    குடுக்கறதுக்கு இந்த உதாரணம்தான் கிடைச்சுதா? அப்போ ஒன்னு பண்ணுங்க, மாற்றமே வேனாம்கிறவர் ஒரே சட்டையையே மாத்தாம போட்டுக் கொள்வீரா? அப்படிக் கேட்டால் அது பிக்கலித் தனமா இருக்காதா? உதாரணம் குடுக்கும் பொது அது எந்த அளவுக்கு பொருந்தும் என்பதையும் பார்க்கணும்.

    ReplyDelete
  6. பகுத்தறிவு என்ன சொல்லுது? ஒன்னு தவறு, என்று தெரிய வரும்போது சரியான ஒன்னுக்கு மாறுவதை தப்புன்னு சொல்லுதா? அது மாதிரி அவருக்கு சரின்னு பட்ட எல்லாத்துக்கும் மாறினார், இன்னும் நூறு தடைவை மாறினாலும் தப்பு இல்லை. அது தான் பகுத்தறிவு. [வடிவேலு ஸ்டைலில்] ஐயோ.........ஐயோ........

    ReplyDelete



  7. \\அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!\\ இதில் கடைசியா தினகரன் பேப்பர் காரன் மாதிரி ஓரு "!" போட்டிருக்கீங்களே, அங்க நீங்க நிக்கிறீங்க வருண்!! அதுசரி, அதென்னது யாராச்சும் செத்தா அனுதாபத்தை தெரிவிக்கிறது? அது ஒரு இயற்க்கை நிகழ்வு எல்லோருக்கும் நடப்பது தானே. அதற்க்கு எதுக்கு அனுதாபம்,அதன் அர்த்தம் தான் என்ன?

    "இப்போ நம்மை எல்லாம் விட்டு பிரிந்துபோய்விட்டார்"ன்னு எல்லோரையும் போல சொல்றீங்க, யார் போனாரு, எங்கே போனாருன்னு தான் தெரியல. அப்படி பகுத்தறிவுப் படி எதாச்சும் இருக்கா?]

    ReplyDelete
  8. ***Jayadev Das said...

    \\செய்தவளை விட்டுப்புட்டு டெய்லி ஒருத்தி பின்னால போய் "இவள்தான் என் சோல்மேட்"னு வருடத்துக்கு ஒருத்திய மாத்துறவாளுக்கு (சட்டப்படிதான்) அலையிறவனுக்கு எல்லாம் வக்காலத்து வாங்குற மாரி இருக்கு!!\\

    குடுக்கறதுக்கு இந்த உதாரணம்தான் கிடைச்சுதா? அப்போ ஒன்னு பண்ணுங்க, மாற்றமே வேனாம்கிறவர் ஒரே சட்டையையே மாத்தாம போட்டுக் கொள்வீரா? அப்படிக் கேட்டால் அது பிக்கலித் தனமா இருக்காதா? உதாரணம் குடுக்கும் பொது அது எந்த அளவுக்கு பொருந்தும் என்பதையும் பார்க்கணும். ***

    என்ன சொல்றீங்க?மனமுதிர்ச்சி அடைந்தபிறகு நேத்து சேசாச்சலமாக இருந்த இவர், இன்னைக்கு பெரியார் தாசன், நாளைக்கு அப்துல்லா, நாளன்னைக்கு"ஆபிரகாம்" னு தாவிக்கிட்டே இருந்தா.. என்ன அர்த்தம். அவரால் எதையும் தெளிவாக உணர முடியாத நிலைப்பாடுதான்.

    ஆத்திகத்தை தழுவிப்புட்டாருனு நீங்க அவரை உங்க சுயநலத்துக்காக கொஞ்சுறீங்க.. இஸ்லாமை தழுவிப்புட்டாருனு அவங்க எல்லாம் கொஞ்சுறாங்க.. கொஞ்சாமவது அவருக்கு என்ன பிரச்சினை (மன வியாதி இருந்ததுனு) னு யோசிங்கப்பா!!

    ReplyDelete
  9. ***Jayadev Das said...

    பகுத்தறிவு என்ன சொல்லுது? ***

    நீங்க ஒரு பிலீவர். நீங்க எதுக்கு பகுத்தறிவை எல்லாம் பகுத்தறிஞ்சுக்கிட்டு..

    ***ஒன்னு தவறு, என்று தெரிய வரும்போது சரியான ஒன்னுக்கு மாறுவதை தப்புன்னு சொல்லுதா? ***

    ஒருத்தனை தவறு செய்தான்னு நீங்க உங்அ றிவுப்பூர்வமான நிதனைகளால், ஒரு முடிவுக்கு வந்துப்புட்டு, அவனை தூக்குல போட்டு கொன்னுபுட்டு,

    அப்புறம் அடுத்த நாள்..அய்யோ நான் சரியா கவனிக்கலை, இந்தக்கோணத்தில் யோசிக்கலைனு அடிச்சுக்கிட்ட்டா அது உங்க பிரச்சினை>>

    ***அது மாதிரி அவருக்கு சரின்னு பட்ட எல்லாத்துக்கும் மாறினார், இன்னும் நூறு தடைவை மாறினாலும் தப்பு இல்லை. அது தான் பகுத்தறிவு. [வடிவேலு ஸ்டைலில்] ஐயோ.........ஐயோ........ ***

    அதைத்தானே நானும் சொல்றேன். அவரு நல்லவேளை போய் சேர்ந்துட்டாரு.. இல்லைனா இஸ்லாமில் இருந்தும் இன்னொண்ணுக்கு தாவியிருப்பாருனு??

    ReplyDelete

  10. \\அதைத்தானே நானும் சொல்றேன். அவரு நல்லவேளை போய் சேர்ந்துட்டாரு.. இல்லைனா இஸ்லாமில் இருந்தும் இன்னொண்ணுக்கு தாவியிருப்பாருனு?? \\ஒருத்தன் 99 தடவை வேறு வேறு நம்பிக்கைகளைக் கொண்டிருந்தான், 100வது தடவை பகுத்தறிவு வாதியா மாற முடிவு செய்யறான். அது சரியா தப்பா?

    மாற்றம் ஒன்றே மாறாதது............. அறிவியலே ப்படித்தான் போகுது. நியூட்டன், ஐன்ஸ்ட்டீன், ஹாகின்ஸ் அப்படின்னு. நியூடனியே நின்னு போகவில்லை.

    ReplyDelete
  11. ***Jayadev Das said...




    \\அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!\\ இதில் கடைசியா தினகரன் பேப்பர் காரன் மாதிரி ஓரு "!" போட்டிருக்கீங்களே, அங்க நீங்க நிக்கிறீங்க வருண்!! அதுசரி, அதென்னது யாராச்சும் செத்தா அனுதாபத்தை தெரிவிக்கிறது? அது ஒரு இயற்க்கை நிகழ்வு எல்லோருக்கும் நடப்பது தானே. அதற்க்கு எதுக்கு அனுதாபம்,அதன் அர்த்தம் தான் என்ன? ***

    உங்களுக்கு புரியிறாப்பிலே சொல்றேன் ஜெயதேவ்..

    இந்தப்பதிவில் அவரை விமர்சிக்கிறேன். அவரு உயிரோட இருந்தால், தன்னிலை உணர்த்த வந்து இருப்பார்..உங்க வக்காலத்தெல்லாம் அவருக்கு இப்போ தேவைப்படுது பாருங்க.. இதுக்குத்தான் அனுதாபம். புரியுதா???

    ReplyDelete
  12. ***Jayadev Das said...


    \\அதைத்தானே நானும் சொல்றேன். அவரு நல்லவேளை போய் சேர்ந்துட்டாரு.. இல்லைனா இஸ்லாமில் இருந்தும் இன்னொண்ணுக்கு தாவியிருப்பாருனு?? \\ஒருத்தன் 99 தடவை வேறு வேறு நம்பிக்கைகளைக் கொண்டிருந்தான், 100வது தடவை பகுத்தறிவு வாதியா மாற முடிவு செய்யறான். அது சரியா தப்பா?***

    தப்புனு எவன் சொன்னான். நாளைக்கு இவன் மறுபடியும் பண்டாரமாகி சுண்டல் வாங்கி திண்ணுக்கிட்டு பஜனை பாடவும் (101 வதாக) வாய்ப்பிருக்கு னு சொல்றேன்.


    ***மாற்றம் ஒன்றே மாறாதது............. **

    2 + 2 = 4 தான்.. அதுவும் மாறப்போவதில்லை!! அப்படி அது மாறும்போது வந்து சொல்லுங்க. என்ன நம்பர் னு. சரியா?? :)))

    ReplyDelete
  13. From your blog, I went to his; and posted the following:

    விடுதலை எழுதிய இரங்கல் செய்தி சரியானதுதான்.

    நீங்கள் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்தீர்கள். உங்களைப்போலவே பின்னூட்டமிட்ட பலரும்.
    இசுலாமியப் பின்னூட்டக்காரகள் பார்வை இசுலாமுக்கு சேவை என்றளவில் முடிவும்.
    அதைப்போலவே உங்கள் பின்னூட்டம், ஆத்திகத்துச்சேவை' என்றளவில் முடிகிறது.
    விடுதலைக்கும் ஏன் அவர்களுக்கு வேண்டிய சேவையோடு முடியக்கூடாது?

    இப்படிப்பாருங்கள் புரியும்.

    சேஷாசலம் தன் கல்லூரிப்பருவத்திலிருந்து பெரியார் நாத்திகக்கொள்ளைகள்; பார்ப்பனீய வெறுப்பு, பார்ப்பனர்கள் மீது தாக்குதல்கள், இவற்றால் கவரப்பட்டு. பெரியார்தாசன் என்று தன்னை ஊருக்கும் வெளிப்படுத்தியதோடு விடாமல், தமிழ் மக்களிடையே அக்கொள்கைகள மூச்சுவிடாமல் நேரங்கிடைத்தபோதெல்லாம். வாய்ப்புக்களை பயன்படுத்தி, பொதுமேடைகளில் பரவசப்படுத்தியவர். அவர் பேச்சால் ஈர்க்கப்பட்டு பெரியாரின் கொள்கைகளை அறிய விழைந்தோர் ஏராளம். இப்படிப்பட்ட 'சேவை' ஓராண்டு, ஈராண்டுகளாக நடக்கவில்லை. பல பத்தாண்டுகளாக, தமிழகம் முழுவதும் பெரியார் கொள்கை தெரியவேண்டுமென்றால் பெரியார்தாசனின் பேச்சைக்கேள் என்பதாக ஆயிற்று.

    ஒருவர் இறந்தவுடன் அவரைப்பற்றி இரங்கல்கள் இருவகைகளாகப்பிரிக்கலாம்.

    1. வெறும் செய்தியாக‌
    2. எப்படி அவர் நினைவுகூறப்படுவார்; படுகிறார் (எழுதுபவரின் கணிப்பில்)

    விடுதலை செய்ததது இரண்டாம் வகை இரங்கல். அவர்கள் அப்ப்துல்லாஹ ஆக பெரியார்தாசன் மாறவில்லை என்று சொன்னால்தான் பொய். சொல்லாவிட்டால் பொய்யன்று. அவர்கள் நினைப்பில் அது பெரியார்தாசன் நினைவுக்கு முக்கியமன்று.

    கிட்டத்தட்ட நிங்களும், இங்கு எழுதிய இசுலாமியர்களும் விடுதலை பத்திரிக்கையாளர்களும் ஒன்றுதான்.

    அதாவது -

    பெரியார்தாசனை நீங்கள் எப்படி பார்க்க விரும்புகிறீர்களோ அதைச்சிறப்பித்து அவரைப்பற்றி எழுதுகிறீக்ள்.

    அதன்படி.-

    ஓசைப்பதிவாளருக்கு - பெரியார்தாசன் ஒரு ஆத்திகர். நாத்திகத்தை பொய் என்றுணர்ந்து ஆத்திகம் உண்மையென்று உலக்குக்கு காட்டியவர்.

    இசுலாமியப் பின்னூட்டத்தவருக்கு - பெரியார்தாசன் அப்துல்லாஹாக மாறி இசுலாமே உயர்ந்தது நாத்திகமும் பிறமதத்தழுவலக்ளும் உண்மையன்று என்று காட்டியவர்.

    விடுதலைக்கு - பெரியார்தாசனின் நாத்திகக்காலத்தில்தான் அவர் உண்மையாக வாழ்ந்தார்.

    ஆனால் வருண் சொல்வதிலும் ஓருண்மைப்பக்கம் தெரியும்--- பெரியார்தாசன் ஒரு நிலையில்லா குரங்கு மனவாழ்க்கை வாழ்ந்தார். இளம்பிராயத்திலே அந்தத் தவறு நடந்திருக்கலாம். எனவே அவர் எதையுமே உண்மையாக நம்பவில்லை. தாவிக்கொண்டேயிருந்தார். கடைசியில் இசுலாமுக்கு வந்தது அந்த தாவலில் ஒரு பாலம். அங்கிருந்து இன்னொரு பாலத்தாவலுக்கு ரெடியாகி இருப்பார். ஆனால் காலம் க்டந்துவிட்டது.

    Some Muslims here too holds up high - but that is a marketing strategy. Religion today is a market product that should be sold to all. Evangelists first did it. Even today, you can see flex boards showing an Iyengaar and his wife in madisaar with the ad: //Seshagiri ayyangaar and his wife giving theeva seythi. Come en masse.//

    The objective is to tell the gullible masses that the religion of the aforesaid couple is false, so they have now come to Jesus, the real God. U should follow their e g.

    Why Ayyangaar? Because they are considered to be steadfastly rooted in their ancient Hindu religion.

    முஹமது ஆஷிக, சுவனப்பிரியன், நாகூர் Rafiq போன்ற இசுலாமியர்கள் அதைத்தான் இங்கு செய்கிறார்கள். இவர்களுக்கு ஒரு நல்ல மறைந்த இசுலாமியர் கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தம். தேடிப்பாருங்கள் இசுலாமியர்களே கண்டிப்பாக கிடைப்பார்கள்.

    Let me add a personal thing here. I heard Periyaardasan before his conversion to Islam and his talk was not atheism; but an attack on Hindu religion. I understood this person is a narcissist. He can never become a true follower of any religion. The reason is that narcissism and religious life are strange bedfellows: one will kill the other. When the lecture was over, I came out pitying this narcissist. Narcissism has created tyrants in history. Some big; some small. Periyaardaasan is a tiny fry in the whole game of narcissism of humans and TN enjoyed watching him for many decades.

    ReplyDelete
  14. ஒரு நிகழ்ச்சியில் அகடவிகடம் என்று நினைக்கிறேன் அவர் முயற்சி என்கிற தலைப்பில் பேசினார் ,தனக்கு சிறு வயதில் திக்குவாய் பிரட்ச்சனை இருந்ததென்றும் ஆனால் அதையும் தாண்டி பேச்சி பயிர்ச்சியை முயன்று வைராக்கியமாய் ஒரு சிறந்த பேச்சாளர் ஆனார் என்று சொன்னார் , ஆனால் அவர் அப்துல்லா ஆனதற்கு சொன்னார் பாருங்கள் ஒரு காரணம் ,இப்போதும் கூட அவர் சொன்னது என் நினைவிலேயே இருக்கிறது , எத்தனையோ பேரை பகுத்தாராய்ந்து சிந்தியுங்கள் என்று நாத்திகர் ஆக்கியவர் இந்த மனிதர் , எனக்கு திடிர்ன்னு ஒரு பயம் வந்துடுச்சி , "கடவுள் இல்லாவிட்டால் பரவாயில்லை ,ஒருவேளை இருந்துட்டா ?"நீங்கள் உலகத்துல எந்த மதத்தை வேண்டுமானலும் எடுத்துக் கொள்ளுங்கள் , கடவுள் எழுதியதாக ஒரு புத்தகம் உள்ளதா ? என்று அறிவுப்பூர்வமாக (முட்டாள்தனமாக ) ஒரு போடு போட்டார் பாருங்கள் அப்போதே இவர் மூஞ்சி மேலேயே ஒன்னு போட்டா என்னன்னு என்ககு தோன்றியது (நல்லாவேளை பக்கத்தில் தருமியோ செங்கொடியோ இல்லை), மனிதர் மண்டையை போட்டுவிட்டார் , இறந்து விட்டவர்கள் இறைவனுக்கு சமம் என்பார்கள் ! மறப்போம் !என்ன ஒன்று பகுத்தறிவு வாதிகளின் மரியாதையோடு அடக்கம் செய்யப்பட வேண்டியவர் , ஒரு நான்கு ஐந்து முஸிலிம்களின் கண்ணீரோடு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார் அவ்வள்வே !

    ReplyDelete
  15. @Good Citizen

    /ஒரு நான்கு ஐந்து முஸிலிம்களின் கண்ணீரோடு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார் அவ்வள்வே !

    பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்பது போல் உள்ளது உங்கள் கமண்ட்!

    இதைக்கொஞ்சம் பாருங்கள்..

    http://mathimaran.wordpress.com/2013/08/21/islam-670/

    இதையும் பாருங்கள் அவரின் ஜனாஸா தொழுகையில் பங்கேற்ற கூட்டம்.. புகைப்படம்..

    http://2.bp.blogspot.com/-O75bnh5EBGc/UhN3ccn_n_I/AAAAAAAAGjY/KlRvlSfZ9nY/s1600/a+periyar+dhasan.jpg

    ReplyDelete
  16. இந்துவில் இருந்து கொஞ்சநாள் புத்தமதத்தின் மீது பற்றுக்கொண்டார்... பின்னர் இஸ்லாம்.... இறந்தவரைப்பற்றி விமர்சிக்க வேண்டாம் வருண்... விடுங்கள் அவர் ஆத்மா சாந்தியடையட்டும்...

    ReplyDelete
  17. @ Riyas Said

    //பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்பது போல் உள்ளது உங்கள் கமண்ட்!//

    Riyas,

    அப்துல்லா அவர்கள் ஒருவேளை இந்துவாக அல்லது வேறு மதத்திற்கு மாறியிருந்தாலும் இதேபோல் பேசியிருப்பீர்களா?

    ReplyDelete
  18. பகுத்தறிவை பற்றியவரை அது விடாது. காரணம் அது இயற்கை தன்மையை அடிப்படையாக கொண்டு உள்ளது மற்றவை எல்லாம் எந்த எந்த காலத்திலோ யார் யாராலோ என்ன என்ன விருப்பங்களாலோ, காரணங்களாலோ எழுதி வரப்பட்டவை. ஆக எதையாவது பற்றி இருப்பது தனி மனித பலாபலன் பார்த்து.எதிலும் இருக்கலாம். உலகம் இன்றும் தட்டை என்று சொல்லி கொண்டு நம் ஊரை விட்டு தாண்டாதவர் சொல்வதை நம்பி வாழ்வது அவரவர் விருப்பம். ஆத்திகர் , நாத்திகர் இருவருக்குமே தெரியாத ஒன்றை 'தெரியாது' என்று இருவருமே ஒத்து கொள்தல் சமூகத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் அறிவியல் மூலமாக,ஆதாரம் மூலமாக விளக்கிய பின்னும் சில கருத்தை பிடித்து தொங்குவது சரியாக படவில்லை.முக்கியமாக சாதி என்ற அவலம் யாரோ ஏற்படுத்தி இன்று வரை சமுகத்தை நாசம் பண்ணி வருகிறது.

    பெரியார் தாசன் கற்று கொண்டிருந்தார் என்பது சரியாக இருக்கலாம். ஏனெனில் அவர் மீண்டும் நாத்திகதிற்கே கூட திரும்பி இருக்கலாம்.

    ReplyDelete
  19. "கொஞ்சாமவது அவருக்கு என்ன பிரச்சினை (மன வியாதி இருந்ததுனு) னு யோசிங்கப்பா!!"

    அவருக்கு இருந்த ஒரே பிரச்சினை அதுதான்.

    அவர் பால்தினகரனுடன் சுவிசேஷ நிகழ்சியில் கலந்துகொண்டு பல மக்களை குணப்படுத்தும் அரிய காட்சியை காணும் வாய்ப்பை நாங்கள் அனைவரும் இழந்துவிட்டோம்.

    முக்கிய குறிப்பு- பெரியார் தாசன் அப்துல்லாவாக மாற முன் கொஞ்ச நாளாக சித்தார்த்தனாக இருந்துள்ளார்

    ReplyDelete
  20. மனித மனம் நிலையற்றது. மனிதன் குரங்கில் இருந்து பரிணமித்தவன் அல்லவா? அதனால் அக் குணம் நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் ஆத்திக தாவல், பெரியார்தாசனின் தாவல் உட்பட உணர்வுக்கு முக்கியம் கொடுக்கும் தாவல். போதிக மரியாதை, அதிகாரம், செல்வம் எல்லாம் கிட்டினால் யாரும் மதம் மாற மாட்டார்கள். கிட்டாத நிலையில் கிட்டும் இடம் தேடி மனம் ஓடும். இங்கு கடவுள், அறிவியல் எல்லாம் இரண்டாங் கட்டமே. தாம் சார்ந்த மதம் சிறந்தது என ஏன் சொல்லுகின்றனர், ஈகோ, தாம் சார்ந்த மதம் சிறப்பு எனில் அதில் இருக்கும் தானும் சிறந்தவன் என்ற கர்வமே. பெரியார்தாசன் இந்து மத வெறுப்பில் நாத்திகம் போயுள்ளார், ஆதாரங்கள், அறிவியல், பகுத்தறிவை தேடவில்லை என்பது நிதர்சனம், மற்றபடி மதம் மாறவோ, அதே கொள்கையில் இரு என்றோ நாத்திகம் தடுப்பதில்லை. அது உண்மையை தேடும் பெருவெளி,.. அவ்வளவே. அவரவர் அறிவின் ஆழத்துக்கு ஏற்ப அவ் வெளியில் பொக்கிசங்களை பொறுக்கி எடுக்கலாம்.

    ReplyDelete