Friday, August 23, 2013

தமிழ்மணத்தில் ஆபாச நாற்றம் அடிக்க வைக்கும் நிரூபன்!

பொதுவாக ஈழத் தமிழர்கள் பொறுப்புணர்வுடன் கவனமாக பதிவெழுதுவார்கள். வயதில் சிறியவர்களாக இருந்தாலும் நடத்தையில் உயர்தரமாக இருக்கிறார்களே? என்று என்னை வியக்க வைப்பவர்கள் இவர்கள்.  இவர்கள் மட்டும் எப்படி? ஒருவேளை வாழ்க்கையில் பல விதமான இன்னல்களுக்கு ஆளானதால் இப்படி நடந்துகொள்கிறார்களா? எப்படி இவர்கள் மட்டும் தமிழ் நாட்டுத் தமிழர்களைக் காட்டிலும் பொது நோக்குடனும், தமிழ்ப் பற்றுடனும், தரமான பதிவுகளை இடுகிறார்கள் என்றெல்லாம் நான் பொறாமைப் படுவதும் உண்டு. ஆனால் என் எண்ணத்தில் மண் அள்ளிப்போட்டு விட்டார் நிரூபன் என்னும் சகோதரர்.

"சகோதரா!  நாங்களும் உங்களைவிட மோசமானவர்கள், அசிங்கமானவர்கள் தான்" என்பதை நிரூபிக்கும் வகையில் "ஆபாசம்" என்கிற வார்த்தையை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு என்ன எழவை எழுதினாலும் "ஆபாசத்தை" கவனமாக அவர் பதிவின் தலைப்பில் இணைத்து தமிழ்மணத்தையே தொடர்ந்து நாறடிக்கிறார் இந்த நிரூபன்.

இவர் "ஆபாசப் பதிவுகள்" தொடர்ந்து தமிழ்மணத்தின் முகப்பில் அம்மனமாக நின்று நடனம் ஆடிகொண்டு  தமிழ்மணத்தை ஆபாசத்தளமாக பறை சாட்டிக்கொண்டு இருக்கிறது.

வாழ்க இவர் தமிழ்த் தொண்டு!

13 comments:

  1. பதியுலகம் வந்த புதிதில் இந்த அல்பம் செய்ததை சொல்ல பல பதிவுகள் போடலாம்... வேண்டாம்... எனது Profile என்னை கேள்வி கேட்கும்...

    ReplyDelete
  2. http://dindiguldhanabalan.blogspot.com/2012/09/Improve-Relations-ISO-Part-2.html

    ReplyDelete
  3. இதையேதான் நானும் சொல்ல நினைத்தேன்.

    குழு சேர்த்துக்கொண்டு நரகல் நடையில் அர்ச்சனை செய்வார் எனப் பயந்து மவுனம் சுமந்தேன்.

    உங்கள் துணிவைப் பாராட்டுகிறேன்.

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. என்னவோ சொல்றீங்கள். எனக்கு என்னவோ இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை தான் என தோன்றுது. ஈழத் தமிழர்கள் ஆபாசம் பேச மாட்டார்கள் என நினைத்தது உங்கள் தப்பு..! எல்லோரும் ஒரே ஜோதி தான். தமிழ் மணம் பற்றி சொல்ல என்ன இருக்கு, அது சாத்சாத் எங்கள் பறங்கி மலை ஜோதியே தான், ஐக்கியமாகிக் கொள்வோம்.

    ReplyDelete
  5. ஆபாசத்தை தவிருங்கள் பதிவர்களே!

    போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: மக்களை எந்த வழியில் நல்வழிப்படுத்துவது: : கை கால் இழந்து வாழ்வை தொலைத்திருக்கும் பல இளைஞர்களின் எதிர்காலம் என்ன? வசதியாக வாழ்ந்து வரும் நாம் அதற்காக என்ன செய்திருக்கிறோம் என்று சிந்திக்காமல் நாளொன்றுக்கு ஆபாச பதிவுகளாக 6, 7 என்று எழுதிக் குவிததுக் கொண்டிருக்கும் பதிவர்களே! கொஞ்சமாவது சமூக அக்கறையோடு செயல்படக் கூடாதா?

    http://suvanappiriyan.blogspot.com/2012/02/blog-post_08.html

    இதே தலைப்பில் முன்பு நான் எழுதிய பதிவு!

    ReplyDelete

  6. திண்டுக்கல் தனபாலன் said...

    பதியுலகம் வந்த புதிதில் இந்த அல்பம் செய்ததை சொல்ல பல பதிவுகள் போடலாம்... வேண்டாம்... எனது Profile என்னை கேள்வி கேட்கும்...

    திண்டுக்கல் தனபாலன் said...

    http://dindiguldhanabalan.blogspot.com/2012/09/Improve-Relations-ISO-Part-2.html
    -----------
    வருகைக்கும் கருத்துக்கும் தொடுப்புக்கும் நன்றி தனபாலன் :)

    ReplyDelete
  7. ****காமக்கிழத்தன் said...

    இதையேதான் நானும் சொல்ல நினைத்தேன்.

    குழு சேர்த்துக்கொண்டு நரகல் நடையில் அர்ச்சனை செய்வார் எனப் பயந்து மவுனம் சுமந்தேன்.

    உங்கள் துணிவைப் பாராட்டுகிறேன்.

    நன்றி நண்பரே.***

    அவரை (நிரூபன்)க் கொஞ்ச நாளாக் காணோம்! வந்தவுடனே ஒரே "ஆபாச வெறி"யா இருக்கு எல்லாப் பதிவுகளிலும். நம்ம சொன்னால்த்தானே அவருக்குப் புரியும்?

    எல்லாரையும் போல மனதுக்குள்ளே புளுங்கிக்கிட்டு, திட்டிக்கிட்டு இருந்தா எல்லாரும் அவர் "ஆபாச வெறி"யை ரசிக்கிறாங்கனு தப்புக் கணக்குப் போட்டுடுவாரு, பாவம். ஏதோ நம்மால் ஆன உதவி :)

    ReplyDelete
  8. *** இக்பால் செல்வன் said...

    என்னவோ சொல்றீங்கள். எனக்கு என்னவோ இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை தான் என தோன்றுது. ஈழத் தமிழர்கள் ஆபாசம் பேச மாட்டார்கள் என நினைத்தது உங்கள் தப்பு..!***

    இல்லைனு நான் விவாதம் செய்யப் போறதில்லை. ஆமா என் தப்புத்தான்.

    ***எல்லோரும் ஒரே ஜோதி தான். தமிழ் மணம் பற்றி சொல்ல என்ன இருக்கு, அது சாத்சாத் எங்கள் பறங்கி மலை ஜோதியே தான், ஐக்கியமாகிக் கொள்வோம்.***

    எல்லாரும் ஒரே ஜோதியெல்லாம் கெடையாது. ஜோதிகள் பலவகை! :)

    ReplyDelete
  9. ***சுவனப் பிரியன் said...

    ஆபாசத்தை தவிருங்கள் பதிவர்களே!

    போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: மக்களை எந்த வழியில் நல்வழிப்படுத்துவது: : கை கால் இழந்து வாழ்வை தொலைத்திருக்கும் பல இளைஞர்களின் எதிர்காலம் என்ன? வசதியாக வாழ்ந்து வரும் நாம் அதற்காக என்ன செய்திருக்கிறோம் என்று சிந்திக்காமல் நாளொன்றுக்கு ஆபாச பதிவுகளாக 6, 7 என்று எழுதிக் குவிததுக் கொண்டிருக்கும் பதிவர்களே! கொஞ்சமாவது சமூக அக்கறையோடு செயல்படக் கூடாதா?

    http://suvanappiriyan.blogspot.com/2012/02/blog-post_08.html

    இதே தலைப்பில் முன்பு நான் எழுதிய பதிவு!****

    நீங்க சொல்லி ஒரு வரடத்துக்கு மேலே ஆயிடுச்சு போல. It is about time to remind ourselves, not to cross the line! :-)

    ReplyDelete
  10. மச்சான் வருண்,&சகோ சுவனப் பிரியன்,

    பாலியல் தொடர்பு விடயம் என்றால் 18+ போட வேண்டும் அவ்வளவுதான். ஒழுக்க சீலர்கள் ஒதுக்கி விடலாம். இதுக்கு மேல் இதில் விவாதிக்க ஒன்றும் இல்லை என்பதே நம் கருத்து!!!
    **
    சரி விவாதத்தை ஆரம்பித்து விட்டீர்கள்

    உங்களுக்கு ஒரு கேள்வி[தியரி).

    ஆபாசம் என்றால் என்ன? தெளிவாக ,சுருக்கமாக ஒரே வரியில் வரையறுக்கவும்.

    ***
    இப்ப பரிசோத்னை(ப்ராக்டிகல்)
    இப்படிப்பட்ட ஆபாச வரையறுப்பில்,எனது பதிவுகள் பின்னூட்டங்கள் வரவே வராது என மச்சான் வருண் உறுதி அளிக்க முடியுமா?

    [குஞ்சு செத்த பய பதிவு என்பது ஆபாசமா இல்லையா ]
    **
    இப்படிப்பட்ட ஆபாச வரையறுப்பில்,, சகோ சு.பி,ன் எழுத்துகள்குரான்,ஹதீதுகள் வரவே வராது என சகோ சு.பி உறுதி அளிக்க முடியுமா?

    ஒரு முஸ்லீம் ஒரு பெண்ணை மண்க்கிறார்,ஆனால் இன்னும் உடல் உறவு கொள்ளவில்லை. அந்த மனைவிக்கு ஒரு மகளும் இருக்கிறார்]. இச்ச்சுழலில் நம்ம மூமின் சகோவுக்கு மனைவியின் மகள் மீது ஆசை வந்தால்,மனைவியை விவாகரத்து செய்து விட்டு அவளின் மகளை மணக்கலாம் என குரானில் அரபி ஏக இறைவன் கூறுகிறார்.
    4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்;
    ***
    “”அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை””.
    ****
    உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.

    இன்னும் இல்லை என்றால் தேடிப் பார்ப்ப்போம் ஹி ஹி!!!

    ***
    நன்றி!!

    ReplyDelete
  11. Dear Varun,

    I really like you because of your openness (in Statement) and really appreciate you.

    Keep it up!!!

    ReplyDelete
  12. Dear Varun,

    I am really like your openness (in statement) and really appreciate you.

    Keep it up!!!

    ReplyDelete
  13. பதிவர்கள் யாராயினும் ஆபாசம் தவிர்த்து எழுதப் பழகிக் கொள்ள வேண்டும்...


    நீரூபனை நான் அதிகம் படிக்கவில்லை....

    ReplyDelete