Monday, December 16, 2013

பதிவர் anand R க்கு தமிழ்மணம் தனி பகுதி ஒதுக்க வேண்டுகோள்!

யாருனு தெரியலை இந்த கமர்ஷியல் பதிவர் anand R  என்று சொல்லிக்கொண்டு திரிவது?? ஒரு அப்பாவி குழந்தைப் படத்தை ஒண்ணை மாட்டிக்கிட்டு ஒரு நாளைக்கு 10-20 பதிவுகளை தமிழ்மணத்தில் தட்டிவிட்டு, அந்தத் தளத்தில் எல்லா இடங்களிலும் கமர்ஷியல் தொடுப்புகளை கொடுத்து எழவைக் கூட்டுறான் இந்தாளு.

இந்தப் பதிவர், ஆனந் ஆர் எந்தக் கொம்பனாக இருந்தாலும் சரி, இ மெயிலில் வரும் "spam" போலதான் இந்தாளுடைய கமர்ஷியல் பதிவுகள் இருக்கின்றன.

தமிழ்மணம் நிர்வாகிகள் இவருடையத் தமிழ்த்தொண்டைப் பாராட்டி இவருக்கென்று தமிழ்மணத்தில் ஒரு தனிப் பகுதி ஒதுக்கி இவரை ஒதுக்கி வைக்க வேண்டுமென்று  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

எங்கே இருந்துப்பா வர்ராணுக இவனுக?  இதுமாரி கமர்ஷியல் நிறைந்த தளம் ஆரம்பிச்சு, தமிழ்த் தொண்டு ஆற்றி தமிழ்மணத்தின் தரத்தை குறைக்க?

இந்தப் பதிவரை ஏதாவது செய்யுங்கப்பா! நன்றி!

10 comments:

  1. நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  2. நானும் வழிமொழிகின்றேன்

    ReplyDelete
  3. ஒதுக்கணும்னு சொன்னா நியாயம் ,தனிப் பகுதி ஒதுக்கச்சொல்வது எந்த வித நியாயம் ?

    ReplyDelete
  4. நன்றி, கந்தசாமி ஐயா,& Ethicalist E :)

    ReplyDelete
  5. ***Bagawanjee KA said...

    ஒதுக்கணும்னு சொன்னா நியாயம் ,தனிப் பகுதி ஒதுக்கச்சொல்வது எந்த வித நியாயம் ?***

    அவருக்குணு ஒரு பகுதி ஒதுக்கிட்டா அவரே அந்த குப்பைத் தொட்டிலே பதிவு பதிவா போட்டுட்டு அவரே போயி மேஞ்சிக்குவாரு. வேற யாரும் அங்கே போகமாட்டாங்க. :)

    ReplyDelete
  6. கொஞ்சம் நெருடலாக இருக்கிறது தமிழ்மணம் கவனித்தால் நலம்

    ReplyDelete
  7. வழிமொழிகின்றேன், தமிழ்மணத்துக்கு வருவதே சாமான்யர்கள் எழுதும் நல்ல பதிவுகளை வாசிக்கவே. இவர்கள் போல் சிலர் குப்பையாக கொட்டித் தீர்ப்பது கடுப்படையச் செய்கின்றது. அதுவும் அவர் இடும் அனைத்துப் பதிவும் பிற பதிவர்கள், தளங்களில் இருந்து திருடப்பட்டவைகள். கூடவே இன்னும் சிலர் உண்டு, வாசன் என்பவர் கூட இதையே செய்கின்றார். இன்னும் சிலர் மதங்கள், சாதிகள், மற்றும் ஜோதிடம் என்பவைகளுக்கு விளம்பரம் சேர்ப்பது போல் பதிவிடுவதும் வெறுப்புண்டாக்குபவையே. தமிழ்மணம் கவனிக்க வேண்டும்.

    --- விவரணம். ---

    ReplyDelete
  8. உங்கள் கருத்தை ஏற்கிறேன்..எப்படி இவரால் மாதத்திற்கு 500 பதிவுகள் எழுத முடிகிறதோ?
    www.revmuthal.com

    ReplyDelete
  9. ஆதரவான கருத்திற்கு நன்றி, கவிதை வீதி செளந்தர், விவரணன் நீலவண்ணன்,மற்றும் ராமா, கே.

    கண்ணில் படுகிற இதுபோல் பதிவர்களின் தமிழ்மண abuse சை சொல்லிக்காட்ட வேண்டியது நம்ம கடமை.

    இவன் என்ன சொல்றது நாங்க என்ன கேக்கிறது? னு அவங்க நெனச்சா, இது அவர்கள் தமிழ்மணம், எப்படிவேணா நடத்தட்டும்னு நம்ம வேலையை நம்ம பார்த்துட்டுப் போக வேண்டியதுதான்.

    I just noticed some abnormality about this blogger, anand R and so I just informed them. It is up to them to "take care of" him or "let him go"! :)

    ReplyDelete
  10. அவ்வப்போது இப்படிப் பலர் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    ReplyDelete