Sunday, December 15, 2013

வித்யா,சோமு,காமினி! (மெச்சூர் வாசகர்களுக்கு மட்டும்)

"மனைவியென்றால் ரொம்ப இண்ட்டிமேட், ஒருவன் தன் எல்லா ஆசைகளையும், வீக்னஸையும் மறைக்காமல்ச் சொல்லி தன் காமதாபத்தை தீர்த்துக்க ஒரு வடிகால் அவள்" னு சோமுவிடம் எந்த மடையன் சொன்னான்னு தெரியவில்லை! கண்டவன் சொன்னதையெல்லாம்  நம்பி தன்னுடைய "பாண்டஷி உலகை" மனைவி வித்யாவிடம் இருட்டில்  உளறி இன்னைக்கு நாசமாப் போயி நடுத்தெருவில் நின்னான் சோமு!

வக்கீல், கோர்ட், அது இதுனு போயி கடைசியில் எல்லாம் ஒரு வழியா நல்லபடியா  முடிஞ்சது. அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு இருப்பதால தேவையில்லாத சொந்தக்காரர்கள் ஒப்பாரி, செண்டிமெண்ட்ஸ், நண்பர்கள் அறிவுரைகள் எதுவும் இல்லாம ஒருவழியா "நல்லவிதமாக" விவாகரத்தானது.

இவர்களுக்கு இல்லரவாழ்வினால் ஒரே ஒரு ஆண் குழந்தை. பையன் ப்ரவீனும், "அம்மா, அம்மா" னு சோமுவுக்கு "பை" சொல்லிவிட்டு வித்யா பின்னாலேயே ஓடிட்டான்.  எல்லாம் முடிஞ்சு இப்போ ஒரு வருடத்திற்கு மேலாகுது. விவாகரத்து "அஃபிஸியல்" ஆகிவிட்டது.

****

அன்று வேலை முடிஞ்சு வந்து ஈவனிங் "ஜாகிங்" போயிக்கொண்டிருந்த சோமு, வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தான். "ஜாகிங்" போகக்கூட எட்டு வருடமாக இழந்திருந்த அவனுடைய தனிமனிதச் சுதந்திரம்  கடந்த ஒரு வருடமாக திரும்ப கிடைத்து இருந்தது. சினிமா, பார், டென்னிஸ் க்ளப், வொர்க் அவ்ட், அரை மாரத்தான் ஓடுறது னு தன் நேரத்தை இப்போதெல்லாம் "அர்த்தமாக" செலவழித்துக் கொண்டு இருந்தான், சோமு.

போன வாரம் ஈவனிங் இண்டோர் ஸ்விமிங் பூல் ல காமினியைப் பார்த்தான்.   எக்ஸ் வைஃப் வித்யாவுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் அவள். எதிரும் புதிருமாக அவளைப் பார்த்ததும், "இவ எங்கே இங்க வந்தாள்?"னு யோசனையுடன் ஒரு  "ஹாய்" சொல்லிட்டு ஒதுங்கி லாக்கர் ரூமுக்குள்  நுழைந்து விட்டான்.

அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி அங்கே பார்த்தான். அவளும் அதே சிட்டி செண்டருக்குத்தான் வொர்க் அவ்ட் பண்ண வருகிறாள்னு  புரிந்தது அவனுக்கு.


*****

சோமு-வித்யா தம்பதிகளுக்குள் கவர்ச்சி, காதல், காம லீலைகள் எல்லாம் ஆடி அடங்கியவுடன், ஏற்கனவே இருந்த கருத்து வேறுபாடு தலைதூக்கியது. அடுத்து  ஒருவரை ஒருவர் வெறுத்து, ஒருவர் குறையை இன்னொருவர் சொல்லிக்காட்டி அசிங்கச் சண்டை போட ஆரம்பித்தபோது,  சோமுவுடைய வரம்புமீறல் மற்றும்  அவனோட எல்லா வீக்னெஸுகளும் தெரிந்த வித்யா அவனை  எளிதில், குற்றவாளியாக ஆக்கி வாய்ச்சண்டையில் வென்றாள். மனைவி என்று  நம்பி  அவளிடம் படுக்கை அறையில் சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் அவனுக்கு எதிராக அவள் திருப்பும்போது சோமுவால் எதுவும் செய்ய முடியவில்லை.

"இதெல்லாம் துரோகம்டி வித்யா! ஆம்படையான் படுக்கையறையில், படுக்கும்போது  சொன்னதையெல்லாம் எனக்கு எதிரா ஆக்குறியே! உன்னை பகவான் மன்னிப்பானா?" என்றெல்லாம் வசனம் பேசிப்பார்த்தான் சோமு.

அவளோ  "நானும் எத்தனை காலமா பொறுமையா பார்த்துண்டே இருந்தேன். ஒரு நாளாவது, ஒரு நேரமாவது, ஏதாவது நல்லவிதமா சொல்லுவேளானு ஏங்கினேன்! ஒவ்வொரு நாளும் அந்த இருட்டில் என் ஆசை கனவை எல்லாத்தையும் நொறுக்கிப் பாழாக்கிட்டேள்! இன்னும் இருண்டுகொண்டேதான் போகுது" என்றாள் அழுகையுடன்.

"உனக்காகத்தானடி எல்லாம் செஞ்சேன்! உன்னை சந்தோஷப்படுத்தனும்னு" என்றான் கோபத்துடன்.

"இந்தா பாருங்கோ! அந்தக் கண்றாவியை எல்லாம் எனக்காக செஞ்சேன்னு சொன்னேள்னா,  அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்!"

"ஆமடி, ஆம்படையான், அவனோட ஆசையை எல்லாம் ஆத்துக்காரிட்ட சொல்லி தீர்த்துக்காமல்,  யாருட்டடி சொல்றது?"

"ஆசையில்லை அதெல்லாம்! உங்களுக்கு காமப் பித்து பிடிச்சு இருக்கு! நேக்கென்ன மனமருத்துவமா தெரியும்? உங்க கண்றாவி காமப் பித்தையெல்லாம் கேட்டு, அதற்கு தீர்வு சொல்ல?"

"ஊரு ஒலகத்துல எல்லா ஆம்படையானும் இப்படித்தாண்டி இருப்பா!"

" உங்களை மாதிரியா? நானும் ருக்மிணி. பத்மா, காமினி எல்லார்ட்டையும் இந்தக் கொடுமையை எல்லாம் சொல்லி அவா ஆத்துக்காரர பத்திக் கேட்டுப் பார்த்தேன். அவா எல்லாம் "என்னடி சொல்ற வித்யா?" "இதெல்லாம் கேள்விப் பட்டதே இல்லைடி!" னு அதிசயமா கேக்குறா! அவா ஆத்துக்காரர் எல்லாம் உங்களை மாரி காமப்பித்துப் பிடிச்சு அலையலை. அவா எல்லாம் பக்கா  ஜெண்டில் மேனாக்கும்"

"அப்போ யாராவது வப்பாட்டியிடம் இல்லைனா தேவடியாளிடம் போயித்தான் என் ஆசையை எல்லாம் தீர்த்து இருக்கனும்ங்கிறயாடி? அப்போ எதுக்குடி நீ? சும்மா சமச்சுப் போடவா?"

"இனிமேல் எவட்ட வேணா போங்கோ! நேக்கென்ன? உங்களைத்தான் நான் ஒரேயடியா தலை முழுகியாச்சே?"னு சண்டை போட்டுட்டு அவ  எல் எ க்கு போனவதான். அதோட அவ திரும்பி வரவே இல்லை! ப்ரவீன்கூட அவனை கால் பண்ணுவது இல்லை!

 தனிமரமானான் சோமு!

****

அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி ஜிம்ல பார்த்தான். வேற நண்பர்களிடம் கால்ப் பண்ணி அவளைப்பத்தி விசாரித்தபோது  காமினிக்கும் அவள் கணவன் ராஜ்க்கும் டைவோர்ஸ் ஆகிவிட்டதாக சொன்னார்கள். அவனுக்குத் தெரிய ரெண்டு பேருக்கும் குழந்தையும் கெடையாது!

ஈவனிங்  பக்கத்தில் இருந்த "கால்டிஸ் காஃபி" ஷாப்ல  மறுபடியும் காமினியைப் பார்த்தான் . அவள் தனியாக வந்திருந்தாள். காஃபி வாங்கிக்கொண்டு சோமுவைப் பார்த்து ஸ்மைல் பண்ணிக்கொண்டு அவன் அருகில் வந்தாள். அவனுக்கு அவள்  இவனை  "ஸ்டாக்" பண்ணுவது போலக்கூட  ஒரு பிரமை.

"ஹாய் சோமு! ஹவ் ஆர் யு?" என்றாள் காசுவலாக.

"ஐ அம் ஃபைன், காமினி. ஹவ் ஆர் யு?"

"டு யு மைண்ட்?"னு அவன் உக்காந்து இருந்த டேபிலில் எதிரில் அமர்ந்தாள்.

 அவள் ஒரு மாதிரியா ஸ்கேர்ட் போட்டு செக்ஸியாக இருந்தாள். அவளுக்கு ரொம்ப கவர்ச்சியான மார்பகங்கள். மேலும் அவள் உடலில் இருந்து வந்த அவள் போட்டிருந்த பர்ஃப்யூம் தனிமையில் வாடும் இவனை ஏதோ செய்தது. கொஞ்ச நேரம் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.

"ஆமா, உங்க எக்ஸ் வித்யா எங்கே இருக்கா இப்போ?" என்று அமைதியை உடைத்தாள் அவள்.

"டைவோர்ஸ்க்கு அப்புறம் "எல் எ" க்கு மூவ் பண்ணிட்டாள். அவளோட ப்ரதர் அங்கே டாக்டரா இருக்கார். ஹி இஸ் சப்போர்டிங் ஹெர்"

"ரியல்லி?"

"ஏங்க, வித்யா  உங்க ஃப்ரெண்ட்தானே? அதிசயமா என்னிடம் இதையெல்லாம் கேக்குறீங்க?" என்றான் சோமு ஒரு மாதிரியான வாய்ஸில்.

"இல்லை எனக்கும் ராஜ்க்கும் நெறையா பிரச்சினை வந்ததும், நான் யாரையும் கால் பண்ணலை.  ஐ லாஸ்ட் டச் வித் ஹெர்" என்றாள்.

"குழந்தை எதுவும் உண்டா உங்களுக்கும் ராஜ்க்கும்?!"

"இல்லை, சோமு! அதான் எல்லாம் ஈஸியா முடிந்தது. நான் இங்கே ரெண்டு ப்ளாக் தள்ளி ஒரு அப்பார்ட்மெண்ட்லதான் இருக்கேன். ஐ அம் லிவிங் அலோன்" என்றாள் அழுத்தமாக.

"ராஜ், ஜெண்டில்மேன் ஆச்சே? என்ன ஆச்சு?"

"ஜெண்டில்மேன் எல்லாம் ஃப்ரெண்டா இருந்தாத்தான் நல்லாயிருக்கும். புருசனா இருந்து டெய்லி அரச்ச மாவையே அரச்சா  ரொம்ப போர் அடிக்கும்!"னு ஒரு மாதிரியாகச் சிரிச்சாள் காமினி.

ஏற்கனவே அவள் உதடுகள் அவனை என்னவோ செய்தது. அவள் இதுபோல் பேசுவது அவனை மேலும் உன்மத்தம் கொள்ளச் செய்தது.

"சரி, நான் போயிட்டு வர்ரேன்ங்க. ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு"னு புறப்பட எத்தனித்தான்.

"உங்க ஃபோன்  # கொடுங்களேன், சோமு?" என்றாள் காமினி.

"இது என் ஹோம் #"னு அதை மட்டும் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

*************
அன்று இரவு  டின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்கப் போகும்போது, அவன் ஹோம் ஃபோன் அலறியது.

"ஹல்லோ! நாந்தான் காமினி"

"சொல்லுங்க "

"உங்ககிட்டு ஒண்ணு கேக்கனும்?"

"என்னங்க?"

"இல்லை, உங்க எக்ஸ் வித்யா உங்களைப் பத்தி நெறையா கம்ப்ளைய்ன் பண்ணுவா..'

"என்னனு?"

"நீங்க ரொம்ப மோசம் அது இதுனு."

"ஆமா நான் மோசம்தான்"

" இல்லை இல்ல, படுக்கையறையில்  ரொம்ப "டேர்ட்டி"யா பேசுவீங்களாமே?"

" "

"உண்மையா, சோமு?"

" "

"இல்ல, அதுமாதிரிப் பேசினால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்"

"சாரி, காமினி, ஐ ஹாவ் டு ஸ்லீப் நவ்" னு அவசரமாக ஃபோனை ஹேங் அப் பண்ணிட்டான் சோமு.

சோமுவைப் பொறுத்தவரையில் ஏற்கனவே இந்த விசயத்தில் ஒருத்திட்டப்பட்ட அவமானம் வாழ்நாளுக்கும் போதும். திடீர்னு இப்போ வந்த இந்தக் காமினியை நம்பி எதையாவது ஒளறிட்டு எதுக்கு வம்பு? னு அவனுக்கு அந்த வினாடி  புத்தி வந்துவிட்டது. ஆனால் ஒரு கணம்தான் அப்படி தோன்றியது அவனுக்கு. ஃபோனை கட் பண்ணிய மறுகணமே, ஏதோ தவறு செய்துவிட்டது போல உணர்வு வந்து அவனைக் கொன்றது.

ஒரு வேளை வித்யா போலில்லாமல் காமினி வேற டைப்பாக இருந்து தன்னுடைய உளறல்களையெல்லாம் ரசித்தால்?  படுக்கை அறையில் நான் இழுக்கும் இழுவைக்கெல்லாம் சரியாக வருவாளோ? என்னுடைய  தேவைக்கெல்லாம் காமினிதான் சரியான மருந்தோ? அவளுக்கும் என்னைப்போலவே இதேபோல் காமப்பித்து பிடிச்சு இருக்குமோ? அதனால்த்தான் ராஜுடன் அவளால் திருப்தியாக நிம்மதியாக வாழ முடியவில்லையோ? இவளோடு இணைந்தால், ஒருவர் இன்னொருவருவருக்கு மருந்தாக ஆகி இருவரும் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறதோ?  என்று குழம்பி குழம்பி தூங்காமல் புரண்டு புரண்டு படுத்து கடைசியில் எப்படியோ அன்று இரவு தூங்கினான் சோமு.

அடுத்த நாள், ஈவ்னிங்,  அதே நேரத்தில் வழக்கம்போல் காமினியை "ஜிம்" ல பார்த்தான். ஆனால் அவளோ, இன்று அவனுக்கு ஒரு "ஹாய்"கூட சொல்லாமல் வேண்டும் என்றே சோமுவைத் தவிர்த்துவிட்டு கண்டுக்காமல் திருப்பிக்கொண்டு போய்விட்டாள். அடுத்து ஒரு முறை அவன் லாக்கர்க்கு சொல்லும் வழியில் அவளை மறுபடியும் பார்த்தான். அப்போவும், அவனை  தவிர்த்து வேகமாக அவன் முன்னால் நடந்துபோனாள். அப்படி நடந்துபோகும்போது  காமினியின் பின்னழகு அவனை கேலி செய்து கொண்டே நகர்ந்தது. சோமுவால் அவள் ஆடைகளை கலைந்து அவளை நிர்வாணமாக நடக்கவிட்டு அவள் பின்னழகை மனக்கண்ணால் வேடிக்கை பார்க்காமல் இருக்கமுடியவில்லை .

பாவம் சோமு,  "சரி இதோட போய் தொலையிறா சனியன்,  நமக்குக் கிடைத்த  சுதந்திரம் பறிபோகாமல் இருக்கிறதே"னு காமினியை உதறித்தள்ளிவிட்டு  சந்தோஷப்படமுடியாமல் அடி முட்டாளாகிக்கொண்டு போனான். அதென்ன வென்று புரியவில்லை, அவனை அவள் தவிர்ப்பதால் அவள் இன்னும் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிந்தாள். தனிமையில் துணையில்லாமல் வாடும் அவனுக்கு தானாகவே அவனை நோக்கி வந்த  அவள் ரொம்பவே தேவைப்பட்டாள்.  அன்று இரவு படுக்கையில் படுத்த அவன் அவளை  தன் மனதில் கொண்டு வந்து ஒவ்வொரு ஆடையாகக் கலைந்து  நிர்வாணமாக்கி காமினி அழகை மறுபடியும் ரசிக்க ஆரம்பித்தான்.

அமுதம்போல் அவன் ஃபோன் இனிமையாக இசைத்தது

"ஹல்லோ?"

 காமினிதான்!

"what did you think? I am a whore or something, you bastard!" என்று கத்தினாள்.

"இல்லங்க.."

" Dont you ever hang up on me! Do you UNDERSTAND?"

"சாரிங்க, காமினி! நான் ரொம்பக் குழப்பத்தில் இருந்தேன்"

"என்ன குழப்பம்?"

"இல்லை திடீர்னு என்னைப் பத்தி எல்லாம் தெரிந்தது போல.. பேசினீங்க..அதான்"

"நான் சைக்காலஜி டீச் பண்ணுறேன். அதான் என்னுடைய வேலை! மேலும் உங்க ஆத்துக்காரி உங்களப் பத்தி எல்லாத்தையும் என்னிடம் புட்டுப் புட்டு வச்சுட்டா"

" "

"Are you there?"

"Yes"

"நான் சொல்றதைக் கேளுங்க, சோமு!"

"சரிங்க"

"I know we are made for each other!"

"எப்படிச் சொல்றீங்க?"

"நான் ஈவனிங் "ஜிம்" ல உங்களைக் கடந்து முன்னால போனேன் இல்லை? நீங்க லாக்கர் ரூம் போகும்போது?"

"ஆமா?"

"பின்னால இருந்து என்ன பண்ணினீங்க அப்போ?"

" "

"Be honest and tell me. Did you look at my butt?"

" "

"Did you undress me and watched my naked butt in your fucking mind or not?"

" "

"உண்மையை சொல்லுடா, பொறுக்கி!"

"காமினி"

"வாட்?"

"உன்னை நான் மனசுக்குள்ளேயே வேறென்னவெல்லாம் செஞ்சேன்னு தெரியனுமா, உனக்கு?"

"யெஸ்"

"நாளை நைட் நீ உன் வீட்டிலேதான் இருப்பியா?"

"ஆமா"

"உன் வீட்டிற்கு வந்து நானே செஞ்சு காட்டுறேன். சரியாடி? தேவடியா!'

"இப்போத்தான் வித்யா சொன்ன சோமு மாதிரி பேசுறீங்க..என்னால அவ்ளோ நேரம் பொறுமையா இருக்க முடியாது"

"நீ சைக்காலஜி டீச்சர்னு சொன்ன? எப்படியோ ஒரு நாள் சமாளி."
----------------------------

அடுத்த நாள் காலையில் வேலைக்குப் போகுமுன்  சோமு சீரியல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.. யாரோ வீட்டு பெல்லை அடிச்சாங்க. யாருடா இப்போ?னு யோசனையுடன் கதவைத் திறந்தான்.

"டாடீ!" னு  ப்ரவீன் கத்தினான். அருகில் வித்யா நின்னுகொண்டிருந்தாள்.

ப்ரவீனை தூக்கி வைத்துக்கொண்டு, "என்ன திடீர்னு?" என்றான் வித்யாவிடம்.

"அண்ணாவுக்கும், மன்னிக்கும் ரொம்ப பிரச்சினை அதிகமாகி டெய்லி சண்டை போடுறா. டைவோர்ஸ் பண்ணிக்கப்போறாளாம்! அங்கே இருந்தால் ப்ரவீன் படிப்பும், மனசும் ரொம்ப  பாதிக்கப்படுது.."

"ஈவ்னிங் பேசலாமா? நான் இப்போ வேலைக்குப் போகனும்!" என்றான் சோமு.

"ஈவ்னிங் சீக்கிரம் வாங்கோ! நான் நெறையா பேசனும்"னு மிகவும் அன்பாகச் சொன்னாள், வித்யா!

வேலைக்குப் போக தன் சூட்கேஸை எடுத்துக்கொண்டு யோசனையுடன் காரில் அமர்ந்து புறப்பட்டான், சோமு!

-முற்றும்

இது இந்தத்தளத்தில் ஏற்கனவே வந்தஒரு மீள் பதிவுதான். Older version has been edited and modified a bit.

12 comments:

  1. பாவம் சோமு......................

    ReplyDelete
  2. எதார்த்தமான நிகழ்வுகள்.

    கதை முடிவில் ‘திருப்பம்’. அதுவும் நடப்பியல் சாத்தியமானதே.

    ReplyDelete
  3. பல பேர் இந்த கதையை படித்து இருக்கிறார்கள் என்பது நிச்சயம். பல மொக்கை பதிவுகளுக்கு கருத்து சொல்லுபவர்கள் நடை முறையில் நடக்கும் நிஜங்களை அழகாக சொல்லிச் சென்ற உங்கள் கதையை பாராட்ட கூட தைரியம் இல்லாதவர்களாக போலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    பாராட்டுக்கள் வருண் tha.ma 1

    ReplyDelete
  4. ***Avargal Unmaigal said...

    பாவம் சோமு.....***

    இன்னொரு கோணத்தில் பார்த்தால் வித்யாவும் பாவம்தான். புருஷன் சரியில்லைனு அண்ணன் ட்டப் போனால் அவனும் இன்னொரு ஆம்பளைதான் போலனு உணர்ந்து குழந்தையின் நலம் கருதி திரும்பி வந்ததாக்கூட சொல்லலாம். அவங்க அவங்க பார்வையில் அவங்க அவங்க செய்றது சரி. :)

    ReplyDelete
  5. ***mahesh said...

    story nice sir.***

    நன்ரி மஹேஷ். இந்தமாரி கருத்திட ரொம்ப தைரியம் வேணும்! உங்க தைரியத்துக்கு என் பாராட்டுக்கள்! :)

    ReplyDelete
  6. ***காமக்கிழத்தன் said...

    எதார்த்தமான நிகழ்வுகள்.

    கதை முடிவில் ‘திருப்பம்’. அதுவும் நடப்பியல் சாத்தியமானதே.**

    வாங்க, காமக்கிழத்தன்! ஆமா, வித்யா, சனியன் ஒழிஞ்சதுனு தானும் நிம்மதியா வாழமாட்டா, சோமுவையும் வாழ விடமாட்டாள். இதுதான் நாம் காலங்காலமாகக் காப்பாற்றி வந்து போற்றிப் புகழும் தமிழ் கலாச்சாரம். :)

    ReplyDelete
  7. ***Avargal Unmaigal said...

    பல பேர் இந்த கதையை படித்து இருக்கிறார்கள் என்பது நிச்சயம். பல மொக்கை பதிவுகளுக்கு கருத்து சொல்லுபவர்கள் நடை முறையில் நடக்கும் நிஜங்களை அழகாக சொல்லிச் சென்ற உங்கள் கதையை பாராட்ட கூட தைரியம் இல்லாதவர்களாக போலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    பாராட்டுக்கள் வருண் tha.ma 1***

    பதிவர்களின் மனோபாவத்தை அழகா சொல்லியிருக்கீங்க. இதுபோல் உண்மைகளை நான் சொல்றதைவிட நீங்க சொல்றதுதான் சரி. உங்க பின்னூட்டத்துகு தமிழ்மணத்தில் 10 மதிப்பெண்கள் போடலாம். என்ன செய்வது? அதுபோல் வசதிகள் இல்லையே? :) Take it easy and move on madurai thamizahan! :)

    ReplyDelete
  8. excellent piece of work. ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல எழுதியுள்ளீர்கள்.தொய்வில்லாமலும், சரியான வார்த்தை பயன்பாடுடனும் கதை அருமையாக உள்ளது. அது சரி ஏன் பிராமண தமிழை தேர்ந்தேடுதீர் :)

    ReplyDelete
  9. *** Raja said...
    அது சரி ஏன் பிராமண தமிழை தேர்ந்தேடுதீர் :)***

    ஏன் என்று தெரிலைங்க! ஜானிகிராமன் கதை படிச்ச "influence" ஆக இருக்கலாம்னு நான் நம்புறேன். :)

    ReplyDelete
  10. [[வருண் said...

    *** Raja said...
    அது சரி ஏன் பிராமண தமிழை தேர்ந்தேடுதீர் :)***

    ஏன் என்று தெரிலைங்க! ஜானிகிராமன் கதை படிச்ச "influence" ஆக இருக்கலாம்னு நான் நம்புறேன். :)]]

    எனக்கு புரியவில்லை? ஏன் பிராமணர்களும் மனிதர்கள் தானே! ஏன் இந்த கேள்வியை சுஜாதா கிட்டே யாரும் கேட்கவில்லை?

    சுஜாதா கதைகளை நான் படித்தது இல்லை; அவர் கற்றதும் பெற்றதும் படித்து உள்ளேன்; மிகவும் பாராட்டி உள்ளேன்; அவர் ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளர் என்று!

    சென்னிமலை சி.பி. வெளியிட்ட ஒரு சுஜாதா கதையில் ஒரு வேசி சென்னைத் தமிழில் பேசுகிறார்? ஏன் பிராமணத் தமிழ் பேசி இருக்கலாமே?

    Both dialects are not desirable; If I were Sujatha, I would have opted for a caste-neutral dialect! Neither Brahmin Tamil nor சென்னை ஏழைகள் தமிழ்!

    Tamil manam +1

    ReplyDelete
  11. [[வேலைக்குப் போக தன் சூட்கேஸை எடுத்துக்கொண்டு யோசனையுடன் காரில் அமர்ந்து புறப்பட்டான், சோமு!]]

    வேலைக்கு போகு தன் சூட்கேஸா?
    ஒரு வேலைக்கு போகும் போது தான் சூட்கேஸ் எடுத்துக் கொண்டு போவார்கள்!
    இவர் செல்வது எந்த வேலைக்கு?

    ReplyDelete