Monday, January 27, 2014

விஸ்வரூபத்துக்கு ஆஸ்கர் இல்லை! கமலுக்கு பத்துமபூசனு!

கமலின் விஸ்வரூபம் படம், உலகத் தரத்தில் எடுக்கப்பட்டு, உலக அளவில் பேசட்டு, விமர்சகர்களாலும் மற்றும் ஹாலிவுட் ஜாம்பவான்கள், பேர்ரி ஆஸ்பான் போன்றவர்களாலும் ஆஹா ஓஹோனு புகழப்பட்டாலும், சிறந்த வெளிநாட்டுப் படம் ஆஸ்கருக்கு இந்தப்படத்தை யாரும் பரிந்துரை செய்யவில்லை!

ஆனால் விஸ்வரூபம் படத்தைப் பார்த்துட்டு கமலுடைய நாட்டுப் பற்றையும் கலை ஆர்வத்தையும் வியந்து அவருடைய தாய்நாட்டில் அவருக்கு பத்மபூசன் விருது கொடுத்துள்ளார்கள். அவருக்கு வாழ்த்துக்கள்!

விரைவில வரவிருக்கும் விஸ்வரூபம் ரெண்டுக்கு ஆஸ்கரும், கமலுக்கு பாரத ரத்னா விருதும் கிடைக்க வாய்ப்பிருக்குனு நம்பப்படுகிறது!

2 comments: