Wednesday, March 25, 2015

வருணின் உளறல்கள்! உளறி ரொம்ப நாளாச்சு இல்ல? (7)

பதிவெழுதி பல நாட்களாகிவிட்டது. மாதங்களாகிவிட்டதோ? என்ன காரணம்? வேலைப்பளு அதிகமாகிவிட்டது! ஆமா, பதிவுலகில் எல்லாருக்கும் நல்ல காலம் பொறந்திருச்சு! ஒழிஞ்சான் அடாவடி வருண்! கடைசியா பகவான் அருளிட்டான்னு நிம்மதியா இருந்தீங்களா? :-)

என்ன பண்ணுறது? ஆமாங்க உள்ள வேலைகளைப் பார்க்கவே நேரம் இல்லை என்கிறபோது "பொழுது போகாமல்" வந்து பதிவெழுதுவது எப்படி சாத்தியம்? "அடேங்கப்பா! ஆமா, அப்படி என்ன வெட்டி முறிக்கிறீர்? " னு கேட்டால் என் சொந்தக் கதை சோகக் கதை எல்லாம் சொல்லி ஒப்பாரி வைக்கப் போவதில்லை. என் வேலை/என் பிரச்சினை அது என்னோட போகட்டுமே? :)

 சமீபத்தில் என் பி ஆர் ல ஒரு இண்டெர்வியூ கேட்டேன். நான் கேட்கும் பொழுது அந்த செலிப்ரிட்டி இந்தப் பாடலைப் பாடினார்.

This world is not my home I'm just a passing through
இது ஒரு தேவாலயத்தில் பாடும் க்ரிஷ்டியன் பாடல்னு நினைக்கிறேன். இதுக்கு முன்னால இந்தப் பாடலைக் கேட்டு இருக்கேனா என்னனு தெரியலை. இந்த முதல் வரி நல்லாயிருந்தது

 பதிவுலகமும் அப்படித்தானே? இது நமக்கு நிலையான ஒரு "வீடு" கெடையாது. சும்மா நாம் கடந்து போகிறோம். ஏகப்பட்டபேர் கடந்து போயிட்டாங்க. நாம் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம். சரியா?

*  என்ன வருண்? இது ஒரு கிருஷ்டியன் பாட்டா?  ஏன் இந்து மதத்திலும் இதே கருத்தை சொல்லியிருக்காங்களே? தெரியாதா உங்களுக்கு? கீதைலகூட கிருஷ்ண பரமாத்மா சொல்லியிருக்காரே?

*  வருண்! தமிழ் இலக்கியத்திலே இதே கருத்தைச் சொல்லியிருக்காங்களே? நீங்க இது படிச்சது இல்லையா?

ஒரு நல்ல விசயத்தைக் கேட்டதாக சொல்ல வந்தால், இதுமாதிரி பிரச்சினையைக் கிளப்பும் அற்பர்கள் நிறைந்ததுதான் இவ்வுலகம்?  இல்லையா?

ஒரு முறை ஒரு கிருஷ்டியன் நண்பன் ஆக்ஸிடெண்ட்ல இறந்துவிட்டான். அவன் உடலை சென்னைக்கு எடுத்துச் செல்லும்போது நாங்களும் போனோம். அப்போ அவங்க அடக்கம் செய்யுமுன்னே ப்ரேயர் எல்லாம் பண்ணினாங்க. அதாவது கொஞ்ச வயதிலேயே அவனை ஜீசஸ் அழைத்துக்கொண்டார். காரணம்? அவன் வாழ்க்கை முழுமையடைந்துவிட்டது. ஜீசஸ் அவனைப் பார்த்துக்குவார். இப்படி ஒரு கோணத்தில் இருந்தது அவன் கலந்துகொண்ட அவனுடைய அந்த கடைசி ப்ரேயர்..எனக்கு இந்தவிதமான "மன ஆறுதல்" அடைந்துகொள்ளல் பிடிச்சிருந்ததுனுதான் சொல்லணும்..

இதைப்பற்றி ரெண்டு ஆத்துப் பசங்க (நண்பர்களிடம்) நல்லவிதமாக ரெண்டு வார்த்தை  சொல்லிப் பகிரும்போது (அதாவது, எப்படியோ அவ்வளவு பெரிய இழப்பை இதுபோல் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லி ஆறுதல் அடைகிறார்களே.. பரவாயில்லை..).. உடனே  அவனுகளுக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிச்சதே பார்க்கலாம். அதாவது இஸ்லாம், கிருத்தவம், புத்தமதம் போன்றவற்றில் உள்ள நல்ல விடயங்களை இதுபோல் சிலரால், முக்கியமாக பார்ப்பனர்களால் பாராட்ட முடியாதுபோல என்பது தெளிவானது. ஏன் இவனுக இப்படி இருக்கானுக? Why are they rejecting it immediately? Something wrong with these guys? Hindu fanatics?  How do their parents bring these guys up? As closed-minded as they are?

 எதையோ சொல்ல வந்தேன்... இந்த சனியன் பிடிச்ச மதவெறிபிடிச்ச பார்ப்பானுக ஞாபகத்துக்கு வந்துட்டானுக!
-------------------------------------

ஒரு முறை ஒரு மிடில் ஈஸ்ட்ல இருந்து வந்து  அமெரிக்காவில் செட்டில் ஆன ஒரு இஸ்லாமிய கோவொர்க்கரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அந்தாளைப் பற்றி பலவிதமான புரளிகள் அவரிடம் வேலை பார்த்த அமெரிக்க கலீக் (பெண்கள்) சொல்லியிருக்காங்க. அது ஒரு பக்கம் இருக்கட்டும். அவரிடம் சாவைப்பற்றி பேசும்போது அவர் சொன்னார்..அவர் செத்ததும் அவர் உடலை அவர் நாட்டில்தான் புதைக்கணுமாம். அதுவும்  எந்த இடத்தில் தன்னைப் புதைக்கணும், எப்படிப் புதைக்கணும்னு என்று அதற்கான  ஏற்பாடெல்லாம் பண்ணி இருக்கிறாராம். பிறந்த மண் ஒரு சிலருக்கு செத்தபிறகுகூட  அத்தனை முக்கியமாக இருக்கிறது என்று ஆச்சர்யமாக இருந்தது. இதுபோல் உங்களில் பலரும்கூட விரும்பலாம்.  எனக்கெல்லாம் அப்படி எல்லாம் தோன்றியதே இல்லை. மதப்பற்று, நாட்டுப்பற்று, பிறந்த மண் பற்று இதெல்லாம் இல்லாத "நவீன புத்தர்" தான் நான்னு சொல்ல வரலை. அப்படி ஏதாவது தவறாப் புரிஞ்சுக்காதீங்கப்பா. எங்கே என் சடலம் புதைக்கப்படணும்னுகூட ஆசைப்படத் தெரியாமல் நான் இருப்பதை என்னுடைய ஒரு குறைபாடாகத்தான் நான் பார்க்கிறேன்.

-----------------------------------------

 அமெரிக்காவில் வாழும் வெள்ளையர்கள் ஓய்வு பெற்றபிறகு எப்படி வாழணும்? என்பதை இப்போவே யோசித்து, வயதான காலத்தில் ஓரளவுக்கு பணக்கஷ்டப்படாமல் வாழணும்னா அதற்கு ஒரு மில்லியன் அல்லது அரை மில்லியன் டாலராவது சேர்த்து வைக்க வேண்டும் என்று கணக்கிட்டு,  சம்பாரிப்பதில் ஒரு பகுதியை ஓய்வு காலத்திற்காக இப்போவே சேமித்து வருகிறார்கள். ஆனால் இவர்களே அடிக்கடி  "ஐ காண்ட் அஃப்போட்" என்பார்கள். உடனே அவர்கள் சொல்லும் அப்பொருளை வாங்க இவர்கள் வசதியற்றவர்கள் போல என்று நாம் நினைத்துவிடக்கூடாது! It's about prioritizing . அவர்கள், பின்னாளில் சிரமம் இல்லாமல் வாழணும் என்று இதுபோல் அனாவிசய செலவைக் குறைத்துக் கொள்ளுகிறார்கள் என்பதே அதற்கு அர்த்தம்.  நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப்பொறுத்து நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுகிறோம்.  இன்னொரு கோணத்தில் பார்ப்போமானால்  நாமே விரும்பி அதிகமாக்கிக் கொண்ட நம் வேலைப் பளுதான் நம்முடைய பதிவுலக உலாவைக் குறைக்கக் காரணமாகவும் இருக்கிறது என்பதும் உண்மைதான்,

------------------------------

ஒரு சிலர் உலகம் முழுவதும் சுத்தி வரணும்னு ஆசைப்படுறாங்க. அந்த நாட்டுக்குப் போகணும். ஹவாயி போகணும், ஐரோப்பா போகணும்! அன்றாட வாழ்க்கையில் கஞ்சமாக இருந்துவிட்டு, இப்படி ஊர் சுற்றும்போது ஏரோப்ளேன் டிக்கட், ஹோட்டல் ரூம்னு பத்துமடங்கு செலவழிப்பாங்க.
எனக்கெல்லாம்  routine தான் வாழ்க்கையில் பிடிச்ச ஒண்ணு. வேலைக்குப்  போகணும், வரணும்,. முடிந்தால் சாகிறவரைக்கும் வேலை பார்த்துக் கொண்டே இருக்கணும்! உலகம் சுத்திப் பார்க்கணும், அந்த நாட்டுக்குப் போகணும், இந்தக் காட்டுக்குப் போகணும், கப்பலில் ஏறி உலகம் சுத்தி வரணும், செவ்வாய் ல போயி ஹைட்ரஜன் ஒரு பலூன்ல நிறைத்துக் கொண்டு வரணும்  என்கிற ஆசை எல்லாம் கெடையாது.

உண்மையச் சொன்னால் அமெரிக்காவையே நான் சுத்திப் பார்த்தது இல்லை? உண்மைதான். அமெரிக்கா, நான் வாழும் நாடுனு ஆகிவிட்டது. அதை என்னத்த சுத்திப் பார்க்க? இன்னொன்னு தெரியுமா? நான்  நம்ம நாட்டிலேயே தாஜ்மஹால்கூட பார்த்தது இல்லை.  இங்கே நயாகராவும் பார்த்ததில்லை.. இந்தியா விசிட் பண்ணும்போதுகூட தாஜ்மஹால் பார்க்கணும், ஆக்ரா போகணும்' டெல்லில எப்படி பஸ்ல பெண்ணை கற்பழிப்பாங்கனு போய்ப் பார்க்கணும்னு தோனாது. வந்தோமா அம்மா அப்பாவிடம் பேசி, திட்டி சண்டை போட்டு நேரம் செலவழிச்சோமா.. நாலு நண்பர்களைப் பார்த்தோமா னுதான் பொழுது போகும். அப்புறம் கொஞ்ச நாள்ல எப்போடா திரும்ப "நாம் ஊர்" வந்து சேருவோம்னுதான் இருக்கும். ஒரு சிலர் இந்தியா போனா அழுது கொண்டேதான் திரும்பி வருவார்கள். பொறந்த நாட்டு மேலே அம்பூட்டுப் பற்று! எதுக்கு இங்கே வந்து கஷ்டப்பட்டுக்கிட்டு இங்கேயே இருக்காங்கனு தெரியலை, பாவம்.
------------------------------

 எனக்கு ஞாபக சக்தி கொஞ்சம் அதிகம். அதாவது "எண்" எல்லாம் ஞாபகம் வச்சுக்க முடியாது. நடந்த நிகழ்வு போன்றவைகள் எளிதாக மறக்காது. இதனால் பெரிய வம்பும் இருக்கிறது. நான்  புதிதாக எதிர்கொள்ளும் ஒவ்வொரு சின்னச் சின்னப் பிரச்சினைகள் எல்லாமே நான் ஏற்கனவே எதிர்கொண்டதாகவே தோன்றுகிறது. நான் சிந்திக்கும் சிந்தனைத் தொடர்களே  ஏற்கனவே சிந்தித்ததாக எனக்குத் தோன்றுது. அதைவிடக் கொடுமை என்னனா கண்ட கனவுகூட திரும்ப வருவதுபோல் இருக்கு. :)
ஒரு சிலர் வாசிப்பதில், பெருசா ஏதாவது சாதிப்பதில் கவனம் செலுத்துவார்கள்.என்னைப் போல் "அற்பர்கள்" எதை எடுத்தாலும் சிந்தித்து சிந்தித்து, "சிந்ந்தித்து வீண் போனவர்கள்"  என்று சொல்லலாம். இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால், நாம் சிந்தித்த அதே பிரச்சினையை சிந்தித்து இன்னொருவர் பகிரும்போது, நான் இதைப்பத்தி ஏற்கனவே யோசித்துப் பார்த்து இருக்கிறேன் என்கிற உண்மையைச் சொல்ல வேண்டி வருகிறது. அப்படிச்  சொன்னால் அதைக் கேட்பவர்களுக்கும் பிடிக்காது. நாகரீகம் கருதி அவர்கள் சொல்லுவதைப் புதிதாகக் கேட்பதுபோல் ஆவலுடன் கேட்பதுபோல் நடிப்பதுவும் எனக்குப் பிடிக்காது. :)

-------------------------------

எங்கே பார்த்தாலும் கேன்சரா இருக்கு.

கலாநிதிணு ஒரு டாக்டர்  ஸ்டான் ஃபோர்ட்ல லங் கேன்சரில் இறந்ததாக முகுந்த் அம்மா எழுதி இருந்தாங்க..அதில் பின்னூட்டத்தில் சொன்ன விசயங்கள் போக சில விசயங்களைச் சொல்கிறேன்.

நான் ரொம்ப க்ளோசாப் பழகுறவங்கனு பார்த்தால் ரொம்ப கம்மியான ஆட்கள்தான். பார்ப்பவர்களையெல்லாம் நண்பர்களாக்கிக் கொள்ளும் ஆள் இல்லை நான். சில ஆண்டுகளுக்கு முன்னால ஒரு நல்ல நண்பர், (அமெரிக்கர்தான்) தனக்கு ஸ்கின் கேன்சர் இருப்பதாக உறுதியாகச் சொல்லீட்டாங்கனு சொன்னார். நல்லவேளை, ரொம்ப சீக்கிரமே கண்டு பிடித்துவிட்டதால், கண்ட்ரோல் பண்ணிடலாம் . இருந்தாலும் அதற்குத் தேவையான மெடிக்கல் ப்ரசுஜரை செய்யணும் என்றார். இப்போ அதைப்பற்றி அவரிடம் நான் எதுவும் கேட்பதில்லை. இதுவரைக்கும் நல்லா ஹெல்த்தியாகத்தான் இருக்கிறார். ஒவ்வொரு சமயம் அவர் அப்படி தனக்கு ஒரு நோய் இருப்பதாகச் சொன்னாரா? இல்லை நானே கற்பனை பண்ணிக்கொண்டேனா? என்று சந்தேகம் வருமளவுக்கு அவர் ஹெல்த்தியா இருக்கார்னா  பார்த்துக்கோங்க.

இன்னொரு அம்மா. குடும்ப நண்பிதான். (இவரும் அமெரிக்கர்) இவருடைய மகனுக்கு ஏதோ கேன்சர் இருப்பதாகவும் ட்ரீட்மெண்ட்  எடுத்துக்கொண்டு இருப்பதாகவும்  சில வருடங்கள் முன்னால சொன்னார்..  இன்றுவரை அவருடைய மகனும் தொடர் சிகிச்சை பலனளித்து நல்லாத்தான் இருக்கிறார்.

இது போதாதுனு கடந்த வாரம் எனக்கு நல்லாத் தெரிந்த இன்னொரு அம்மா, (இவரும் அமெரிக்கர்தான்) அவுங்களுக்கு ப்ரெஸ்ட் கேன்சர் இருக்கதாக  annual mammogram check up செய்யும்போது கண்டுபிடிச்சு இருக்காங்கனு சொல்றாங்க. இதுவும் "ஏர்லி ஸ்டேஜ்"லேயே கண்டு பிடித்துவிட்டதாகவும், இருந்தாலும் அதற்கான, ரேடியேஷன், சர்ஜரி எல்லாம் செய்யணும்னு சொல்றாங்க.

உண்மையிலேயே குழப்பமாக இருக்கிறது. நான் க்ளோஸா பழகுறவங்களே ரொம்ப ரொம்ப கம்மியானவர்கள். அவர்களுக்குள் இத்தனை  பேருக்கு கேன்சரா?!!! யு எஸ்ல தான் இப்படியா? இல்லைனா உலகம் முழுவதும் இப்படித்தானா??

36 comments:

  1. கேண்சர் பற்றிய தகவல்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  2. பாஸ் நான் பதிவுலகத்திற்கு bye சொல்லி ரெஸ்ட் எடுக்கிற நேரத்தில் மீண்டும் உள்ளே நுழையிறீங்க?


    ஒருவர் செத்தற்காக யாரும் அழுவதில்லை அவர்களால் நாம் இழக்கும் விஷயங்கள் ( அதாவது வருமானம் அல்லது அன்பு , அரவனைப்பு. இது போன்ற பல காரணங்களை நாம் பெறமுடியாமல் போய்விடுமே என்று நினைத்து அந்த இழப்புக்காகவே நாம் வருந்துகிறோம் என்பதுதான் உண்மை

    மரணம் என்று பேசும் போது நான் என் மனைவி மகளிடம் சொன்னது இதுதான் நான் மரணித்தால் புதைப்பதா எரிப்பாதா என்று குழப்பம் கொள்ளாதீர்கள் உங்களுக்கு அதில் எது செளரியமோ எளிதோ அதை செய்துவிடுங்கள் அழுது ஆர்பாட்டாம் பண்ணாமல் காரியத்தை சிக்கிரம் முடித்து அடுத்த வேலையை பார்க்க செல்லுங்கள் என்று சொன்னேன் இப்படி சொல்லக்காரணம் நாங்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால்தான்

    உங்கள் வாழக்கையில் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கேன்சர் வந்தாலும் அவர்கள் சிகிச்சை எடுத்து அதன் பாதிப்பு வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் எனது வாழ்க்கையிலோ அதற்கு நேர்மார்தான் எனது அத்தைக்கு தொண்டையில் கேன்சர் வந்து சிகிச்சை அளித்தும் சாப்பிட முடியாமல் இருந்து போனார் அடுத்து மதுரையில் எங்கள் வீட்டிற்கு பக்கத்துவீட்டு பெண்மணி இரத்த புற்றுநோய் வந்து இறந்து போனார் அமெரிக்காவில் என் கூட வேலை பார்க்கும் பெண்ணின் தந்தையும் கேன்சரில்தான் இறந்து போனார். முகுந்தம்மா பதிவில் நான் சொன்னது போல என் கூட வேலை பார்க்கும் ஒருவர் கடந்த மாதம் வரை நன்றாகதான் இருந்தார் இப்போதுதான் அவருக்கு நுரையிரலில் கேன்சர் அதுவும் 4வது ஸ்டேஜ். அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று கூட யாருக்கும் தெரியவில்லை

    வாழ்க்கையில் எதையும் எந்த நேரத்திலும் எதிர் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் அது தெரியாமல்தான் பல பேர் ஆட்டம் போடுகிறார்கள்

    //எனக்கெல்லாம் routine தான் வாழ்க்கையில் பிடிச்ச ஒண்ணு. வேலைக்கு போகணும், வரணும்,. முடிந்தால் சாகிறவரைக்கும் வேலை பார்த்துக் கொண்டே இருக்கணும்! உலகம் சுத்திப் பார்க்கணும், அந்த நாட்டுக்குப் போகணும், இந்தக் காட்டுக்குப் போகணும், கப்பலில் ஏறி உலகம் சுத்தி வரணும், செவ்வாய் ல போயி ஹைட்ரஜன் ஒரு பலூன்ல நிறைத்துக் கொண்டு வரணும் என்கிற ஆசை எல்லாம் கெடையாது.//

    //எனக்கு ஞாபக சக்தி கொஞ்சம் அதிகம். அதாவது "எண்" எல்லாம் ஞாபகம் வச்சுக்க முடியாது. நடந்த நிகழ்வு போன்றவைகள் எளிதாக மறக்காது.///
    இந்த விஷயத்தில் நாம் இருவரும் ஒத்து போகிறோம்

    ReplyDelete
  3. வணக்கம் சார்.
    // வருண்! தமிழ் இலக்கியத்திலே இதே கருத்தைச் சொல்லியிருக்காங்களே? நீங்க இது படிச்சது இல்லையா?

    ஒரு நல்ல விசயத்தைக் கேட்டதாக சொல்ல வந்தால், இதுமாதிரி பிரச்சினையைக் கிளப்பும் அற்பர்கள் நிறைந்ததுதான் இவ்வுலகம்? இல்லையா?//
    நல்லவேளையாகச் சொன்னீர்கள். அற்பனென்று அடையாளம் காணும் முன் தப்பித்துவிட்டேன்.:))
    பலகோணங்களில் பல செய்திகள் இப்பதிவி்ல். எதைச் சொல்வது எனத் தெரியாமல்....
    கடைசியில் நீங்கள் சொன்ன கேன்சர்....

    உங்களைப் போலத்தான் இந்தியாவில் இவ்விடுகையைப் படிக்கும் ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு பேராவது இந்நோய்த்தாக்குதலுக்கு உள்ளானவர்களைக் கண்டிருப்பார்கள்.
    உங்கள் பகுதிக்கும் இந்தியாவிற்கும் உள்ள வேறுபாடு... அங்கு முறையான இடைவெளிகளில் தொடரும் பரிசோதனை மூலம் நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து வாழ்நாளை நீட்டிப்பார்கள்.
    இங்கோ முற்றியபின் தெரிந்து மிகக்குறுகிய காலத்தில் இறந்து போவார்கள்.
    மற்ற நோய்களைவிடச் சித்திரவதை நிறைந்த நோய் இது.

    நன்றி

    ReplyDelete
  4. கேம்சர் வார்த்தையைக் கேட்டாலே நடுங்க வைக்கும் வியாதியாகத் தான் இருக்கிறது.இந்தியாவில் மட்டும் தான் அதிகமோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவைப் பார்த்ததும் உலகம் முழுமையும் அது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
    இந்த வருடமாவது கேன்சருக்கு மருந்து கண்டு பிடிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. Long time no See... well, then again came with a big bang with whole lot of materials..Nice to see you around...

    ReplyDelete
  6. 10 மாதம் முன்பு என் சகோதரி... இப்போது இல்லை... ம்... உலகம் முழுவதும் இப்படித்தான் போல... நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது... நண்பர் ஹெல்த்தியாகவே இருக்கட்டும்... வாழட்டும்...

    ReplyDelete
  7. வாங்க வாங்க...ரொம்ப நாளாச்சு உங்களப் பார்த்து....
    நல்ல பாடல் ...ம்ம் இன்ரு நமது என்பது நாளை யாருடையதோ....இப்பல்லாம் கணவன் மனைவி கூட அப்படி ஆகி வருகின்றது....ஆமாங்க கோர்ட்ல போய் பாருங்க நிறைய விவாகரத்து கேஸாம்பா....நமக்குத்தெரிஞ்ச வக்கீல் சொல்லிக் கேட்டதுதான்...

    அந்த மனுஷர் அவர் நாட்டுலதான் பொதைக்கணும்னு சொன்னாரு பரவால்லா....சிலர் இருக்காங்க அவங்க வீட்டுக் கொல்லைலதான் பொதைக்கணும் அப்படினு சொல்லறவங்க...

    கேன்சர் இப்போது அடிக்கடிக் கேட்கும் ஒரு வியாதி ஆகிவிட்டது. அமெரிக்கா மட்டுமில்ல பெரும்பான்மையான நாடுகளில் என்றாகிவிட்டது..ஐரோப்பிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன....அப்புறம் அமெரிக்கா...அப்புறம் ஆசிய நாடுகள்....அதுவும் ஃப்ரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரேலியா எல்லாம் டாப்புல போட்டி போடறாங்க...கல்ஃப், சில ஆப்பிரிக்க நாடுகளிலும், நேபால், பூட்டான் இங்கல்லாம் குறைவுன்னு சொல்லுறாங்க....நேபால்,பூட்டான் பக்கத்துல இந்தியா இருந்தாலும் இங்கயும் குறைச்சல் இல்ல...

    ReplyDelete
  8. வாங்க வருண், நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் எழுத்துக்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. அதே சமயம் எழுத்துக்களில் தெரியும் சோர்வும், கொஞ்சம் பிலாக்கணமும் விரைவில் நீங்கவேண்டும் என்ற எண்ணமும் கூடவே வந்துபோகிறது.வழக்கமான உற்சாகத்துடன் அடுத்த உளறல்களை ஆரம்பித்துவிடுங்கள்.

    ReplyDelete
  9. தங்கள் அத்துனை தகவல்களும் அருமை. அப்புறம் அந்த கேன்சர் செய்தி, எனக்கு தெரிந்தவர் தன் மகளை அமெரிக்கா சென்று பார்த்துவிட்டு ஒரு மாதம் இருந்து விட்டு வந்து, இங்கு வந்த சில நாட்கள் உடல் நலம் இல்லை என்று டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து பார்த்ததில் கேன்சர் என்று தெரிந்து சரியாக ஒரு வாரம் பின் இறந்து போனார்.
    தங்கள் கருத்து யோசிக்க வைக்கிறது.

    ReplyDelete
  10. எனக்கும் நீங்கள் பதிவுலகை மறந்து விட்டிரோ என்றே தோன்றியதுநிறைய விஷயங்களைத் தொட்டுச் செல்கிறீர்கள் ஒரே விஷயம் பற்றி இரு வேறு அணுகல்களைப் பற்றிப் புரிகிறது. உங்கள் அனுபவமும் அவர்கள் உண்மைகள் அனுபவமும். சில நிகழ்வுகள் நடக்கும் போது இது ஏற்கனவே அனுபவப் பட்டது போல் இருக்கும் எனக்கும்தான்.அமுதவன் கூறுவது போல் ஒரு விரக்தி வெளிப்படுகிறதோ. சீயர் அப் என் சில பதிவுகள் உங்கள் கருத்துவேண்டி நிற்கிறது.

    ReplyDelete
  11. THIS WORLD IS NOT MY HOME ///ஜிம் ரீவ்ஸ் பாட்டு நானும் அடிக்கடி கேட்கிறேன் ...இது மாதிரி funereal songs நிறையவே ! சர்ச்சில் வாலண்டியர் வேலை என்பதால் இபொ இதெல்லாம் எனக்கு அனுபவங்கள்
    //எப்படிப் புதைக்கணும்னு என்று அதற்கான ஏற்பாடெல்லாம் பண்ணி இருக்கிறாராம். // எங்க சர்ச் லேடி ஒருத்தர் செத்த பிறகு பெட்டியில் போட்டு கடலில் இறக்க முன்னேற்பாடு செய்திருக்கார் (burial at sea )
    அவங்களுக்கு 79 வயசு என்னமோ சூப்பர் மார்க்கெட் போற மாதிரி என்னை உக்கார வச்சி முழு டீடெயில்ஸ் சொல்றாங்க !..இன்னொரு நாள் ஒரு COPPER கெட்டில் கொண்டு வந்தாங்க ஒரு குடும்பம் ..அழகான பாத்திரம்னு தொட்டு பார்த்து திருப்பினா ஒரு லேபில் // ஆஷ் ரிமெயின்ஸ் OF MISS WALLACE ..பத்து நாள் தூக்கம் போச்சு எனக்கு ....
    கான்சர் இப்போ எல்லா நாட்டிலும் இருக்கு :( சிறிய பெரிய என்று பாகுபாடில்லை ..அப்பா throat கான்சர் அம்மா esophageal cancer..
    ரெண்டு பேரும் எந்த கெட்ட பழக்கம் இல்லாதவங்க ..
    ....................................

    //அதைவிடக் கொடுமை என்னனா கண்ட கனவுகூட திரும்ப வருவதுபோல் இருக்கு. :)// ஹையோ எனக்கி அப்படி வந்தா செத்தேன் ....
    ..



    ReplyDelete
  12. என்ன வருண் ? என்ன ஆச்சு ?....

    முதலில் " நான் ", இப்போது " just a passing through "...

    வருணானந்தா அப்படின்னு பேரை மாத்திக்கற யோசனையெல்லாம் இல்லை தானே ?!!! வருணானந்தாவை விட, I will like varun buddha !!!

    சரி, கொஞ்சம் சீரியஸ்.... பதிவின் இறுதியில் நீங்கள் கேட்ட கேள்வி இன்று உலகமே கேட்டு பயப்பட வேண்டிய கேள்வி நண்பரே ! ஆமாம் ! உலகம் முழுவதுமே கேன்சர் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது.... இதற்கான காரணங்களாய் பல பதிவுகள் இடலாம் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  13. ***Yarlpavanan Kasirajalingam said...

    கேண்சர் பற்றிய தகவல்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்**

    வாங்க யாழ்பாவணன்! தங்கள் கருத்துரைக்கு நன்றி :)

    ReplyDelete
  14. *** Avargal Unmaigal said...

    பாஸ் நான் பதிவுலகத்திற்கு bye சொல்லி ரெஸ்ட் எடுக்கிற நேரத்தில் மீண்டும் உள்ளே நுழையிறீங்க?


    ஒருவர் செத்தற்காக யாரும் அழுவதில்லை அவர்களால் நாம் இழக்கும் விஷயங்கள் ( அதாவது வருமானம் அல்லது அன்பு , அரவனைப்பு. இது போன்ற பல காரணங்களை நாம் பெறமுடியாமல் போய்விடுமே என்று நினைத்து அந்த இழப்புக்காகவே நாம் வருந்துகிறோம் என்பதுதான் உண்மை

    மரணம் என்று பேசும் போது நான் என் மனைவி மகளிடம் சொன்னது இதுதான் நான் மரணித்தால் புதைப்பதா எரிப்பாதா என்று குழப்பம் கொள்ளாதீர்கள் உங்களுக்கு அதில் எது செளரியமோ எளிதோ அதை செய்துவிடுங்கள் அழுது ஆர்பாட்டாம் பண்ணாமல் காரியத்தை சிக்கிரம் முடித்து அடுத்த வேலையை பார்க்க செல்லுங்கள் என்று சொன்னேன் இப்படி சொல்லக்காரணம் நாங்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால்தான்

    உங்கள் வாழக்கையில் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கேன்சர் வந்தாலும் அவர்கள் சிகிச்சை எடுத்து அதன் பாதிப்பு வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் எனது வாழ்க்கையிலோ அதற்கு நேர்மார்தான் எனது அத்தைக்கு தொண்டையில் கேன்சர் வந்து சிகிச்சை அளித்தும் சாப்பிட முடியாமல் இருந்து போனார் அடுத்து மதுரையில் எங்கள் வீட்டிற்கு பக்கத்துவீட்டு பெண்மணி இரத்த புற்றுநோய் வந்து இறந்து போனார் அமெரிக்காவில் என் கூட வேலை பார்க்கும் பெண்ணின் தந்தையும் கேன்சரில்தான் இறந்து போனார். முகுந்தம்மா பதிவில் நான் சொன்னது போல என் கூட வேலை பார்க்கும் ஒருவர் கடந்த மாதம் வரை நன்றாகதான் இருந்தார் இப்போதுதான் அவருக்கு நுரையிரலில் கேன்சர் அதுவும் 4வது ஸ்டேஜ். அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று கூட யாருக்கும் தெரியவில்லை

    வாழ்க்கையில் எதையும் எந்த நேரத்திலும் எதிர் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் அது தெரியாமல்தான் பல பேர் ஆட்டம் போடுகிறார்கள்

    //எனக்கெல்லாம் routine தான் வாழ்க்கையில் பிடிச்ச ஒண்ணு. வேலைக்கு போகணும், வரணும்,. முடிந்தால் சாகிறவரைக்கும் வேலை பார்த்துக் கொண்டே இருக்கணும்! உலகம் சுத்திப் பார்க்கணும், அந்த நாட்டுக்குப் போகணும், இந்தக் காட்டுக்குப் போகணும், கப்பலில் ஏறி உலகம் சுத்தி வரணும், செவ்வாய் ல போயி ஹைட்ரஜன் ஒரு பலூன்ல நிறைத்துக் கொண்டு வரணும் என்கிற ஆசை எல்லாம் கெடையாது.//

    //எனக்கு ஞாபக சக்தி கொஞ்சம் அதிகம். அதாவது "எண்" எல்லாம் ஞாபகம் வச்சுக்க முடியாது. நடந்த நிகழ்வு போன்றவைகள் எளிதாக மறக்காது.///
    இந்த விஷயத்தில் நாம் இருவரும் ஒத்து போகிறோம்**

    வாங்க மதுரைத் தமிழன். கேன்சர் வந்தால அதை சமாளிக்கிற மனப்பக்குவம் நம்மிடம் இருந்தால் பிரசினை இல்லைங்க. ஆனால் நம்மிடம் அது போதுமான அளவு இல்லை என்பதால்தான் பிரச்சினைனு நினைக்கிறேன்.

    ReplyDelete
  15. ***ஊமைக்கனவுகள். said...

    வணக்கம் சார்.
    // வருண்! தமிழ் இலக்கியத்திலே இதே கருத்தைச் சொல்லியிருக்காங்களே? நீங்க இது படிச்சது இல்லையா?

    ஒரு நல்ல விசயத்தைக் கேட்டதாக சொல்ல வந்தால், இதுமாதிரி பிரச்சினையைக் கிளப்பும் அற்பர்கள் நிறைந்ததுதான் இவ்வுலகம்? இல்லையா?//
    நல்லவேளையாகச் சொன்னீர்கள். அற்பனென்று அடையாளம் காணும் முன் தப்பித்துவிட்டேன்.:))
    பலகோணங்களில் பல செய்திகள் இப்பதிவி்ல். எதைச் சொல்வது எனத் தெரியாமல்....
    கடைசியில் நீங்கள் சொன்ன கேன்சர்....

    உங்களைப் போலத்தான் இந்தியாவில் இவ்விடுகையைப் படிக்கும் ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு பேராவது இந்நோய்த்தாக்குதலுக்கு உள்ளானவர்களைக் கண்டிருப்பார்கள்.
    உங்கள் பகுதிக்கும் இந்தியாவிற்கும் உள்ள வேறுபாடு... அங்கு முறையான இடைவெளிகளில் தொடரும் பரிசோதனை மூலம் நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து வாழ்நாளை நீட்டிப்பார்கள்.
    இங்கோ முற்றியபின் தெரிந்து மிகக்குறுகிய காலத்தில் இறந்து போவார்கள்.
    மற்ற நோய்களைவிடச் சித்திரவதை நிறைந்த நோய் இது.

    நன்றி***

    வாங்க விஜு.

    இங்கேயும் ஒரு சிலர் நாட்கடந்துதான் இந்நோய் இருப்பதை கண்டுபிடிக்கிறாங்கங்க. நீங்க கலாநிதி என்கிற ஒரு டாக்டர் பற்றி முகுந்த் அம்மா எழுதிய பஹ்டிவ்வை வாசிச்சீங்களானு தெரியலை. இங்கேயும்கூட காலம் கடந்துதான் ஒரு சிலருக்கு தெரிய வருது. தன்க்கு லங் கேன்சர் இருப்பதை ஸ்டேஜ் 4 லதான் கண்டு பிடித்தார் கலாநிதி. அதனால் அவரைக் காப்பாத்த முடியவில்லை.

    ReplyDelete
  16. ***rajalakshmi paramasivam said...

    கேன்சர் வார்த்தையைக் கேட்டாலே நடுங்க வைக்கும் வியாதியாகத் தான் இருக்கிறது.இந்தியாவில் மட்டும் தான் அதிகமோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவைப் பார்த்ததும் உலகம் முழுமையும் அது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
    இந்த வருடமாவது கேன்சருக்கு மருந்து கண்டு பிடிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.***

    வாங்க ராஜி!

    கொஞ்சம் ஏர்லி ஸ்டேஜ் னா இப்போது ட்ரீட்மெண்ட் இருக்குங்க.
    ஆனால் அதனால் சைட் எஃபக்ட்ஸ் இருக்கும். மனநிலை பாதிக்கப்படும். மேலும் நம்ம ஊரில் நம்மைச் சுத்தி உள்ளவங்க நம்மளப் பரிதாபமாப் பார்த்தே கொன்னுடுவாங்க.

    ReplyDelete
  17. Hi varaun ! I am glad that you were here after a long time ,,எனக்கு தெரிந்து உங்கள் நடையில்,,அது என்ன பலகீனமா ,,சோர்வா அது தெரிகிறது , Dude ,,ம்ம்ம் என்ன செய்வது மனிதன் என்றேனும் ஒருநாள் மாறித்தான ஆகவேண்டியிருக்கிறது ,,மனம் திறந்து உங்கள் routine (குண்டுசட்டி)வாழ்க்கையை ஒத்து கொண்டமைக்கு வாழ்த்துகள் ! ஆனால் எனக்கு நீங்கள் சொன்ன அந்த இரண்டம் வாழ்க்கை தான் பிடிதிருக்கிறது ,, இது என் உழைப்பு ,நான் எந்த வித ஏமாற்றுதனமும் இல்லாமல் சம்பாதித்தது,, எந்த கடவுளுக்கும் ,எவனுக்கும் நான் கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ,,மனித நேயத்தோடு சில உதவிகள் செய்வதை தவிர்த்து அனைத்தும் என் சந்தோசத்திற்கே ,,நான் பிறந்த நாட்டில்தான் நான் புதைக்கப்பட வேண்டும் என்கிற பிடிவாதம் கூட எனக்கில்லை பட் பத்தாயிரத்து சொச்சம் சுற்றளவு கொண்ட இந்த் பூமியில் வெறும் பத்தடிக்குள் அடைத்துக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை ,,கண்டிப்பாய் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுற்றிப் பார்த்துவிடுவேன் !பணவிரயம் ,,My foot ,,This is my fu___ life !இயற்கையின் ஏகோபித்த அழகை என்னால் இருந்து அனுபவிக்க முடியவில்லை எனினும் பார்த்தாவது மகிழ்வேன் ,,அதற்கு நான் சேர்த்த பணம் எனக்கு உதவட்டும் ,, அவ்வப்போது முடிந்தால் எழுதுங்கள் ,, வாழ்த்துகள் !

    ReplyDelete
  18. ***விசுAWESOME said...

    Long time no See... well, then again came with a big bang with whole lot of materials..Nice to see you around...**

    Nice to c u too, Visu!!!I must say, I enjoyed working more than enjoying blogging. My time was well spent and was useful to others who needed help. :-)

    ReplyDelete
  19. ***திண்டுக்கல் தனபாலன் said...

    10 மாதம் முன்பு என் சகோதரி... இப்போது இல்லை... ம்... உலகம் முழுவதும் இப்படித்தான் போல... நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது... நண்பர் ஹெல்த்தியாகவே இருக்கட்டும்... வாழட்டும்...***

    தனபாலன்: சகோதரியின் மறைவு பற்றி ரூபன் எழுதியிருந்தார். மிகவும் வருத்தமளிக்கிறது நண்பரே! :(

    ReplyDelete
  20. ***Thulasidharan V Thillaiakathu said...

    வாங்க வாங்க...ரொம்ப நாளாச்சு உங்களப் பார்த்து....
    நல்ல பாடல் ...ம்ம் இன்ரு நமது என்பது நாளை யாருடையதோ....இப்பல்லாம் கணவன் மனைவி கூட அப்படி ஆகி வருகின்றது....ஆமாங்க கோர்ட்ல போய் பாருங்க நிறைய விவாகரத்து கேஸாம்பா....நமக்குத்தெரிஞ்ச வக்கீல் சொல்லிக் கேட்டதுதான்...***

    வாங்க துளசி!

    விவாகரத்து, எக்ஸ்ட்ரா மாரிட்டல் அஃபையர்ஸ் எல்லாம் அதிகமாயிடுச்சு. பெண் சுதந்திரம் கிடைத்துவிட்டதுனு சந்தோசப்பட வேண்டியதுதான்? :)

    ***அந்த மனுஷர் அவர் நாட்டுலதான் பொதைக்கணும்னு சொன்னாரு பரவால்லா....சிலர் இருக்காங்க அவங்க வீட்டுக் கொல்லைலதான் பொதைக்கணும் அப்படினு சொல்லறவங்க...***

    வாழ்க்கையின் அர்த்தங்கள் மனிதருக்கு மனிதர் வேறுபடுதுங்க. ஒரு சிலருக்கு அர்த்தமுள்ளதாகத் தோன்றுவது இன்னொருவருக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறதுனு நினைக்கிறேன். எது சரியான "எண்ணம்"/ "வழி"/"சிந்தனை"னு சொல்வது கடினம். நம் மனதுக்கு சரி என்பதை நாம் செய்துகொண்டு போக வேண்டியதுதான்னு நினைக்கிறேன். :)

    ***கேன்சர் இப்போது அடிக்கடிக் கேட்கும் ஒரு வியாதி ஆகிவிட்டது. அமெரிக்கா மட்டுமில்ல பெரும்பான்மையான நாடுகளில் என்றாகிவிட்டது..ஐரோப்பிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன....அப்புறம் அமெரிக்கா...அப்புறம் ஆசிய நாடுகள்....அதுவும் ஃப்ரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரேலியா எல்லாம் டாப்புல போட்டி போடறாங்க...கல்ஃப், சில ஆப்பிரிக்க நாடுகளிலும், நேபால், பூட்டான் இங்கல்லாம் குறைவுன்னு சொல்லுறாங்க....நேபால்,பூட்டான் பக்கத்துல இந்தியா இருந்தாலும் இங்கயும் குறைச்சல் இல்ல...***

    ஒரு சில ஜீன்கள் நம்மிடம் இருந்தால் கேன்சர் வர வாய்ப்பு அதிகம்னு ஜெனட்டிக்ஸ்படி சொல்றாங்க. ஆஞ்சலீனா ஜோலி பற்றி படிச்சு இருப்பீங்க.அவருக்கு மார்புப்புற்று நோய் வரும் ஜீன்ஸ் இருப்பதால் முன்னேற்பாடாக அவர் அதற்காக சர்ஜரி செய்து கொண்டார். அந்தளவுக்கு தைரியம் உள்ள பெண்கள் இந்தியால இருக்காங்களா?? என்பது என் மனதில் எழும் கேள்வி! இல்லை என்றே நம்புகிறேன்.

    ReplyDelete
  21. ***Amudhavan said...

    வாங்க வருண், நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் எழுத்துக்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. அதே சமயம் எழுத்துக்களில் தெரியும் சோர்வும், கொஞ்சம் பிலாக்கணமும் விரைவில் நீங்கவேண்டும் என்ற எண்ணமும் கூடவே வந்துபோகிறது.வழக்கமான உற்சாகத்துடன் அடுத்த உளறல்களை ஆரம்பித்துவிடுங்கள்.***

    வாங்க சார். உண்மைதான் சார்,பதிவெழுதும் மனநிலையில் இல்லை. உளறல்தானே?னு எதையாவது எழுதுவோம் என்று எழுதினேன். தங்கள் கருத்துக்கு நன்றி சார். :)

    ReplyDelete
  22. ***mageswari balachandran said...

    தங்கள் அத்துனை தகவல்களும் அருமை. அப்புறம் அந்த கேன்சர் செய்தி, எனக்கு தெரிந்தவர் தன் மகளை அமெரிக்கா சென்று பார்த்துவிட்டு ஒரு மாதம் இருந்து விட்டு வந்து, இங்கு வந்த சில நாட்கள் உடல் நலம் இல்லை என்று டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து பார்த்ததில் கேன்சர் என்று தெரிந்து சரியாக ஒரு வாரம் பின் இறந்து போனார்.
    தங்கள் கருத்து யோசிக்க வைக்கிறது.***

    வாங்க மகேஷ்வரி. உங்களுடன் முதல்முறை கருத்துப் பரிமாறுகிறேன்னு நினைக்கிறேன். இப்பதிவால் கேன்சர் வந்தவர்களைப் பார்த்தவர்கள் பலருடைய அனுபவங்களையும் அறிய முடிகிறது. வருகைக்கு நன்றிங்க!

    ReplyDelete
  23. **லதானந்த் said...

    How are "YOU"?***

    வாங்க லதானந்த்! I am good! Thanks for stopping by!

    ReplyDelete
  24. ***G.M Balasubramaniam said...

    எனக்கும் நீங்கள் பதிவுலகை மறந்து விட்டிரோ என்றே தோன்றியதுநிறைய விஷயங்களைத் தொட்டுச் செல்கிறீர்கள் ஒரே விஷயம் பற்றி இரு வேறு அணுகல்களைப் பற்றிப் புரிகிறது. உங்கள் அனுபவமும் அவர்கள் உண்மைகள் அனுபவமும். சில நிகழ்வுகள் நடக்கும் போது இது ஏற்கனவே அனுபவப் பட்டது போல் இருக்கும் எனக்கும்தான்.அமுதவன் கூறுவது போல் ஒரு விரக்தி வெளிப்படுகிறதோ. சீயர் அப் என் சில பதிவுகள் உங்கள் கருத்துவேண்டி நிற்கிறது.***

    வாங்க ஜி எம் பி சார். உங்க தளத்துக்கு விரைவில் வந்து பார்க்கிறேன். தங்கள் அழைப்புக்கு நன்றி சார். :)

    ReplyDelete
  25. ***Good citizen said...

    Hi varaun ! I am glad that you were here after a long time ,,எனக்கு தெரிந்து உங்கள் நடையில்,,அது என்ன பலகீனமா ,,சோர்வா அது தெரிகிறது , Dude ,,ம்ம்ம் என்ன செய்வது மனிதன் என்றேனும் ஒருநாள் மாறித்தான ஆகவேண்டியிருக்கிறது ,,மனம் திறந்து உங்கள் routine (குண்டுசட்டி)வாழ்க்கையை ஒத்து கொண்டமைக்கு வாழ்த்துகள் ! ஆனால் எனக்கு நீங்கள் சொன்ன அந்த இரண்டம் வாழ்க்கை தான் பிடிதிருக்கிறது ,, இது என் உழைப்பு ,நான் எந்த வித ஏமாற்றுதனமும் இல்லாமல் சம்பாதித்தது,, எந்த கடவுளுக்கும் ,எவனுக்கும் நான் கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ,,மனித நேயத்தோடு சில உதவிகள் செய்வதை தவிர்த்து அனைத்தும் என் சந்தோசத்திற்கே ,,நான் பிறந்த நாட்டில்தான் நான் புதைக்கப்பட வேண்டும் என்கிற பிடிவாதம் கூட எனக்கில்லை பட் பத்தாயிரத்து சொச்சம் சுற்றளவு கொண்ட இந்த் பூமியில் வெறும் பத்தடிக்குள் அடைத்துக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை ,,கண்டிப்பாய் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுற்றிப் பார்த்துவிடுவேன் !பணவிரயம் ,,My foot ,,This is my fu___ life !இயற்கையின் ஏகோபித்த அழகை என்னால் இருந்து அனுபவிக்க முடியவில்லை எனினும் பார்த்தாவது மகிழ்வேன் ,,அதற்கு நான் சேர்த்த பணம் எனக்கு உதவட்டும் ,, அவ்வப்போது முடிந்தால் எழுதுங்கள் ,, வாழ்த்துகள் !***

    I usually share how I feel and what I do. That does not mean that "my way is high way" sort of attitude. It only means this is what I am or this is what I do.
    When I express my thoughts it is easy to criticize me- like you do here.

    ///மனம் திறந்து உங்கள் routine (குண்டுசட்டி)வாழ்க்கையை ஒத்து கொண்டமைக்கு வாழ்த்துகள் !//

    I have noticed your attitude especially when you are kissing "oosai paappaan behind" metnioning about me and how much you like me and all.

    You should continue kissing his behind in his site and going around the world learning more and become brainier than being a chump like you are now. You should not be wasting your time here. Good luck!

    ReplyDelete
  26. Angelin said...
    ****
    THIS WORLD IS NOT MY HOME ///ஜிம் ரீவ்ஸ் பாட்டு நானும் அடிக்கடி கேட்கிறேன் ...இது மாதிரி funereal songs நிறையவே ! சர்ச்சில் வாலண்டியர் வேலை என்பதால் இபொ இதெல்லாம் எனக்கு அனுபவங்கள்
    //எப்படிப் புதைக்கணும்னு என்று அதற்கான ஏற்பாடெல்லாம் பண்ணி இருக்கிறாராம். // எங்க சர்ச் லேடி ஒருத்தர் செத்த பிறகு பெட்டியில் போட்டு கடலில் இறக்க முன்னேற்பாடு செய்திருக்கார் (burial at sea )
    அவங்களுக்கு 79 வயசு என்னமோ சூப்பர் மார்க்கெட் போற மாதிரி என்னை உக்கார வச்சி முழு டீடெயில்ஸ் சொல்றாங்க !..இன்னொரு நாள் ஒரு COPPER கெட்டில் கொண்டு வந்தாங்க ஒரு குடும்பம் ..அழகான பாத்திரம்னு தொட்டு பார்த்து திருப்பினா ஒரு லேபில் // ஆஷ் ரிமெயின்ஸ் OF MISS WALLACE ..பத்து நாள் தூக்கம் போச்சு எனக்கு ....
    கான்சர் இப்போ எல்லா நாட்டிலும் இருக்கு :( சிறிய பெரிய என்று பாகுபாடில்லை ..அப்பா throat கான்சர் அம்மா esophageal cancer..
    ரெண்டு பேரும் எந்த கெட்ட பழக்கம் இல்லாதவங்க ..
    ....................................

    //அதைவிடக் கொடுமை என்னனா கண்ட கனவுகூட திரும்ப வருவதுபோல் இருக்கு. :)// ஹையோ எனக்கி அப்படி வந்தா செத்தேன் ....****

    வாங்க ஏஞ்சலின். நெறைய விசயம் சொல்லியிருக்கீங்க. உங்களைப் பேச வச்சுட்டேன் போல- பயமில்லாமல்! :)))

    ஏன் உங்களுக்கு கெட்ட கனவு மட்டும்தான் வருமா? இனிமையான கனவுகள் வருவதில்லையா?னு கேட்காமல் இருக்க முடியவில்லை. :))

    ReplyDelete
  27. ***saamaaniyan saam said...

    என்ன வருண் ? என்ன ஆச்சு ?....

    முதலில் " நான் ", இப்போது " just a passing through "...

    வருணானந்தா அப்படின்னு பேரை மாத்திக்கற யோசனையெல்லாம் இல்லை தானே ?!!! வருணானந்தாவை விட, I will like varun buddha !!!

    சரி, கொஞ்சம் சீரியஸ்.... பதிவின் இறுதியில் நீங்கள் கேட்ட கேள்வி இன்று உலகமே கேட்டு பயப்பட வேண்டிய கேள்வி நண்பரே ! ஆமாம் ! உலகம் முழுவதுமே கேன்சர் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது.... இதற்கான காரணங்களாய் பல பதிவுகள் இடலாம் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr***

    சாம்: Not many people would have noticed that I am a compassionate person. அதை வெளிக்காட்டுவதில்லை. அதை வெளிக்காட்டும்போது என்னுடைய இன்னொரு பக்கம் தெரியவருவதுண்டு. ஒரு சிலர் அதைப்பார்த்து அதிசயப்படுவதுண்டு.
    :)))

    உங்க முபாரக் பதிவு வித்தியாசமாக இருந்தது. நானும் ஏதாவதுகருத்துச் சொல்லிடலாம்னு முயன்றேன். படு தோல்வி அடைந்தேன். மன்னிச்சுக்கோங்க, சாம் :(((

    ReplyDelete
  28. அன்புள்ள அய்யா,

    புற்று நோய் பற்றி பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டதைக் கண்டு வியந்து போனேன்.

    எனது உறவினர்...மாமா அவர் சில மாதங்களுக்கு முன்தான் அவருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு (தெரபி) இருக்கிறார். தலையில் முடியெல்லாம் இழந்தநிலையில் பயந்துவாறே மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார். எழுவது வயதை நெருங்கிவிட்டார்.

    புற்றுநோய் அரக்கனை ஒழிக்க வழிதெரியவில்லை!

    நன்றி.

    ReplyDelete
  29. வாங்க வருண் ரொம்ப நாளைக்கப்புறம் நலம் தானே. அது சரி சந்தோஷமாக வருவீர்கள் என்று பார்த்தால் இப்படி சங்கடத்துடன் வந்து மரணம் அது இது என்று பயப் படுத்துகிறீர்களே ம் .ம் இப்போ நான் வலும் தீவிரமாக யோசிக்க வேண்டியுள்ளது. எதைப் பற்றியா புதைப்பதா எரிப்பதா என்று
    தான் அட... வருண் உங்களை இல்லை என்னை ஹா ஹா ... இங்கும் அநேகர் கன்சரில் இறக்கிறார்கள் தான். பச்சைப் பாலகன்களும் இதற்கு விதி விலக்கில்லை என்று எண்ணும் போது வேதனையாகவே உள்ளது ம்..ம். பல தகவல்களை உளறியிருக்கிறீர்கள். நன்றி! !மீண்டும் தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சியே. தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  30. தங்கள் பதிவை முதன் முறையாக வாசிக்கிறேன். ஏராளமான தகவல்கள். சிந்திக்க வைக்கின்றன.

    நானும் கான்சர் மூலம் எனது மைத்துனர், மாமா, சித்தி போன்ற உறவுகளை இழந்திருக்கிறேன். அறிவியல் ரீதியாக பல காரணங்கள் கேன்சருக்கு சொல்லப்பட்டாலும், ஓசோன் மண்டலம் பாதிக்கப்படும் போது மனிதர்களுக்கு கேன்சரும் அதிகரிக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.

    அதனால், மனிதன் இயற்கையை மதித்தால்தான் இது போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்.

    ReplyDelete
  31. ஒரு சில பதிவுகளில் கலாய்த்த உங்களின் பதிவுக்கு பதில் சொல்லும்முன் கொஞ்சம் பயமாய்தானிருக்கிறது வரும்போது வரட்டும் இறப்பு என்றதாலேயோ என்னவோ புதைப்பதைப் பற்றி யோசிக்கவேயில்லை இருந்தாலும என் அப்பா எழுதி வெச்சிருக்கார் மரண சாசனம் யாரும் அழக் கூடாது எந்த சாங்கியமும் கூடாது உடல் தானம் கொடுக்கணும்னு நீதான் இதெல்லாம் நடக்குதான்னு பார்த்துக்கணும்னு சொன்னது அவரின் நம்பிக்கை ஆனால் எந்தச் சார்புமில்லா என் அம்மா என் சாவுக்கு வந்துட்டு யாரும பசியோட போகக்கூடாதுன்னு சொன்னது சூழ்நிலைகள் அவர்களுக்கு சொல்லித் தந்ததாய் உணர்ந்தேன கேன்சர் குறித்த உங்கள் எண்ணம் மிகச் சரி மனதளவில் தைரியமானவர்கள் இந்தியாவில் குறைவு அதனால்தான் அதிக கேன்சர் மரணங்கள் கூடவே நோயின் சிம்டம்ப்ஸ் பெரும்பாலும் வெளிப்படையாய்த் தெரிவதில்லை

    ReplyDelete
  32. ***அன்புள்ள அய்யா,

    புற்று நோய் பற்றி பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டதைக் கண்டு வியந்து போனேன்.

    எனது உறவினர்...மாமா அவர் சில மாதங்களுக்கு முன்தான் அவருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு (தெரபி) இருக்கிறார். தலையில் முடியெல்லாம் இழந்தநிலையில் பயந்துவாறே மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார். எழுவது வயதை நெருங்கிவிட்டார்.

    புற்றுநோய் அரக்கனை ஒழிக்க வழிதெரியவில்லை!

    நன்றி. ***

    வாங்க ஜேம்ஸ். உங்கள் மாமாவின் உடல்நிலை கேன்சரால் பாதிக்கப்பட்டது பற்றி பகிர்ந்துகொண்டதற்கு நன்றிங்க. புற்று நோயை ஒழிப்பது கஷ்டம்ங்க. அதை மருத்துவ உதவியுடன் எதிர் நோக்க நாம் தயாராகிக் கொள்வதுதான் நல்லதுனு எனக்குத் தோனுது.

    ReplyDelete
  33. *** Iniya said...

    வாங்க வருண் ரொம்ப நாளைக்கப்புறம் நலம் தானே. அது சரி சந்தோஷமாக வருவீர்கள் என்று பார்த்தால் இப்படி சங்கடத்துடன் வந்து மரணம் அது இது என்று பயப் படுத்துகிறீர்களே ம் .ம் இப்போ நான் வலும் தீவிரமாக யோசிக்க வேண்டியுள்ளது. எதைப் பற்றியா புதைப்பதா எரிப்பதா என்று
    தான் அட... வருண் உங்களை இல்லை என்னை ஹா ஹா ... இங்கும் அநேகர் கன்சரில் இறக்கிறார்கள் தான். பச்சைப் பாலகன்களும் இதற்கு விதி விலக்கில்லை என்று எண்ணும் போது வேதனையாகவே உள்ளது ம்..ம். பல தகவல்களை உளறியிருக்கிறீர்கள். நன்றி! !மீண்டும் தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சியே. தொடர வாழ்த்துக்கள் ...!***

    வாங்க இனியா! ஒரு ப்ரேக் கு அப்புறம் புத்துணர்வோட இருக்கு உங்க பின்னூட்டம்! :)

    ReplyDelete
  34. *** S.P. Senthil Kumar said...

    தங்கள் பதிவை முதன் முறையாக வாசிக்கிறேன். ஏராளமான தகவல்கள். சிந்திக்க வைக்கின்றன.

    நானும் கான்சர் மூலம் எனது மைத்துனர், மாமா, சித்தி போன்ற உறவுகளை இழந்திருக்கிறேன். அறிவியல் ரீதியாக பல காரணங்கள் கேன்சருக்கு சொல்லப்பட்டாலும், ஓசோன் மண்டலம் பாதிக்கப்படும் போது மனிதர்களுக்கு கேன்சரும் அதிகரிக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.

    அதனால், மனிதன் இயற்கையை மதித்தால்தான் இது போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்.***

    வாங்க செந்தில்குமார். எனக்கென்னவோ அவர் நலமாக இருக்கிறார், பதிவுலகில் இருந்து வேண்டுமென்றே தன்னை அகற்றிக் கொண்டார்னுதான் தோனுதுங்க. முடிந்தால் அவரைப் பற்றி ஒரு நாள் எழுதுறேங்க!

    ReplyDelete
  35. ***ezhil said...

    ஒரு சில பதிவுகளில் கலாய்த்த உங்களின் பதிவுக்கு பதில் சொல்லும்முன் கொஞ்சம் பயமாய்தானிருக்கிறது***

    வாங்க எழில்!

    என்னங்க நீங்க.. பெரியார் கொள்கையை ஏற்றவர் நீங்க. மேலும் கடவுளைவிட மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பவர் நீங்கள்.. அப்படி இப்படினு னு நான் கேள்விப்பட்டதால் கொஞ்சம் நேரிடியாக என் எதிர் கருத்தை உங்களிடம் சொன்னேன். மற்றபடி வேற ஒண்ணும் இல்லைங்க.


    *** வரும்போது வரட்டும் இறப்பு என்றதாலேயோ என்னவோ புதைப்பதைப் பற்றி யோசிக்கவேயில்லை இருந்தாலும என் அப்பா எழுதி வெச்சிருக்கார் மரண சாசனம் யாரும் அழக் கூடாது எந்த சாங்கியமும் கூடாது உடல் தானம் கொடுக்கணும்னு நீதான் இதெல்லாம் நடக்குதான்னு பார்த்துக்கணும்னு சொன்னது அவரின் நம்பிக்கை ஆனால் எந்தச் சார்புமில்லா என் அம்மா என் சாவுக்கு வந்துட்டு யாரும பசியோட போகக்கூடாதுன்னு சொன்னது சூழ்நிலைகள் அவர்களுக்கு சொல்லித் தந்ததாய் உணர்ந்தேன **

    உங்க அம்மா, அப்பா அவர்களின் சிந்ந்தனைகள பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

    ***கேன்சர் குறித்த உங்கள் எண்ணம் மிகச் சரி மனதளவில் தைரியமானவர்கள் இந்தியாவில் குறைவு அதனால்தான் அதிக கேன்சர் மரணங்கள் கூடவே நோயின் சிம்டம்ப்ஸ் பெரும்பாலும் வெளிப்படையாய்த் தெரிவதில்லை***

    வாழ்க்கையே நம்மை நாமே ஏமாற்றி, ம்னச்சலவை செய்து சந்தோஷமாக வாழ்வதாக நடிப்பது தாங்க.. அதேபோல் கேன்சரை எதிர் கொள்ளவும் ஏதாவது ஒரு மாதிரி நம் மனதை நாம் மனச்சலவை செய்து நம்மை தயார்ப் படுத்திக்கொள்ளணும். இன்னும் நாம் அதை கற்கவில்லைனு நினைக்கிறேன். :)

    ReplyDelete