Tuesday, July 22, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 4

போன பதிவில் ஒருவர் கேட்டிருந்தார், "இதை எல்லாம் மறக்க முடியாதா" என்று. என்னிடம் மட்டும் ஒரு மேஜிக் இரேசர் கிடைத்தால் சர சரவென்று இந்த மோசமான நினைவுகளை அழித்துவிட ஆசை. இந்த நினைவுகளை அகற்ற 15 வயதில் இருந்து பல முறை முயன்று தோற்றிருக்கிறேன். என் தோழிக்கு புதிதாக பிறந்த பெண் குழந்தையின் மயக்கும் சிரிப்பு, வீட்டில் வளர்க்கும் மல்லிப்பூ செடியில் புதிதாக மலர்ந்த மலர்கள், சமீபத்தில் விடுமுறைக்காக சென்று வந்த கரீபியன் கடற்கரைகள் என்று எனக்கு மிகவும் பிடித்த நல்ல நினைவுகளை வலுக்கட்டாயமாக முன்னிறுத்தி இதை மறக்க முயன்றாலும் மூளையின் ஒரு ஒரத்தில் நெருஞ்சி முள்ளாய் உறுத்திக்கொண்டே இருக்கிறது. அன்று அம்மா கட்டி இருந்த சேலை நிறத்தில் இருந்து அவர் அழுத அழுகை, புலம்பிய வார்த்தைகள், அவருடைய கண்ணீர் துளிகள் என் சுடிதார் டாப்ஸில் உருவாக்கிய நீர் பேட்டர்ன் அனைத்துமே நினைவில் இருக்கிறது. வேலையில் வருடா வருடம் நடைபெறும் 'Work performance Review'வில் "very Smart and pays attention to small details" என்று என்னுடைய மேனேஜர் எழுதித்தந்த பாசிடிவ் கமெண்டுகளைப்படிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. அதுவே என் வரமும், சாபமும்.

நடந்த இந்த நிகழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்டவர் சந்தேகமில்லாமல் அம்மா தான். பிறகு தொடர்ந்து அழுவதும், சத்தம் போட்டு சண்டை போடுவதும், தற்கொலை மிரட்டல்களும் வீட்டில் வழக்கமாயின. சண்டை வரும்போதெல்லாம் யாருக்கும் கேட்காமல் இருக்க, ஜன்னல்-கதவுகளை எல்லாம் அடைப்பது என்னுடைய வேலையானது. அப்பா சலவைக்கு போடும் துணிகளையும், அவர் பர்ஸ் மற்றும் பர்சனல் ஐட்டங்களையும் பைத்தியம் பிடித்தது மாதிரி அம்மா செக் பண்ண ஆரம்பித்தார். அப்பா போனில் பேசினால் சந்தேகத்துடன் கவனிப்பது மட்டுமில்லாமல் அடிக்கடி வேலையில் இருந்து சீக்கிரமே வீட்டுக்கு வரும் வழக்கம்('சர்ப்ரைஸ் விசிட்') அதிகரித்தது.அப்படி வரும்போதெல்லாம் நேராக பாத்ரூம் சென்று எதையோ தேடினார். ஒரு முறை பாத்ரூமில் அகப்பட்டால் தொடர்ந்து பாத்ரூமிலா அகப்படுவார்கள்?

அப்பாவை தண்டிக்கவோ, கண்டிக்கவோ அல்லது பிரிந்துவிடவோ அம்மாவுக்கு தைரியமும் இல்லை, மனமும் இல்லை. அவர் எந்த கட்டுப்பாடுகளுக்கும் சுலபமாக அடங்கும் மனிதரும் இல்லை.எனவே தன்னைத்தானே தண்டித்துக்கொண்டார். மனச்சோர்வினால்(அவருக்கு மனசோர்வு வந்திருந்தது எனக்கு இப்போது தான் தெரியும், அந்த வயதில் புரியவில்லை)அம்மாவுக்கு நேரமற்ற நேரத்தில் நிறைய சாப்பிடும் பழக்கம் வந்தது, எடையும் ஒரே வருடத்தில் 10 கிலோ அதிகரித்தது. "இனிமேல் என்னை யார்டி பார்க்கப்போறா, எப்படியோ போறேன் போ" - நான் கேட்கும் கேள்விகளுக்கு அம்மாவின் வெறுப்பான பதில். படுக்கையும் வழக்கம் போல என்னுடைய ரூமிலேயே தொடர்ந்தது. பொதுவாக இந்தியப்பெண்கள் மட்டும் ஏன் 'கல்லானாலும் கணவன்' கான்செப்டை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறார்கள்? உண்மையாவே அத்தனை நல்ல மனமா அல்லது தனியே வாழ தைரியம் இல்லாததா? வெகுநாட்களாக என் மனதில் இருந்து வரும் கேள்வி.

நிம்மி(அப்பாவின் காதலி?) பற்றிய விவரங்களை அப்சசிவாக சேகரிக்கத்துவங்கினார். நிம்மியின் மற்ற தொடர்புகளைப்பற்றி மற்றவர்களிடம் சலிக்காமல் வம்பு பேசினார். அந்த பெண்ணுக்கு அம்மா வைத்திருந்த பெயர் "மேனா மினுக்கி". எனக்கு தெரிந்து நிம்மி பழைய சாயம் போன புடவையுடனும், ப்ளாஸ்டிக் அணிகலன்களுடனும் பரிதாபமாக வலம் வருவார், மேனா மினுக்கி என்ற பட்டத்துக்கு கொஞ்சமும் தகுதி இல்லாத பெண். இருந்தாலும், அம்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிம்மியை திட்டுவது ரொம்ப பிடித்திருந்தது. 2 வாரத்துக்கு முன் நான் அவரிடம் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது கூட, "கயல், அந்த நிம்மி இருக்காளே, அவளை கடை வீதில பார்த்தேண்டி. அவளை மாதிரியே கருப்பா ரெண்டு கொழந்தைகளை கையில் புடிச்சிட்டு இருந்தா. பக்கத்தில உயரமா ஒரு ஆள், கல்யாணமாகிருச்சி போல. பாவம் யார் வீட்டுப்பிள்ளை ஏமாந்தானோ?" என்றார். "போம்மா, உனக்கு வேற வேலையே இல்லை" என்று சலிப்பாக சொல்லி சப்ஜெக்ட் மாற்றினேன், இன்றுவரை அப்பாவின் காதலியைப்பற்றி என்னால் சகஜமாக உரையாட முடிவதில்லை. இதில் காமெடி என்னவென்றால் அப்பாவை விட பல மடங்கு அதிகமாக அம்மா நிம்மியைப்பற்றி நினைத்திருப்பார், பேசி இருப்பார். நிம்மி கஷ்டப்பட்டு "உழைத்து" சேமித்த பணம் அவருடைய வரதட்சணைக்கும், திருமண செலவுகளுக்கும் உதவியிருக்கும் என நம்புகிறேன்!

- நினைவுகள் தொடரும்

65 comments:

  1. //Review'வில் "very Smart and pays attention to small details" என்று என்னுடைய மேனேஜர் எழுதித்தந்த பாசிடிவ் கமெண்டுகளைப்படிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. அதுவே என் வரமும், சாபமும்.//

    ஐயோ............ இதேதான்ப்பா. என் நினைவுகள்....... ஞாபகசக்தி....
    இதுவேதான் என் ப்ளஸும் மைனஸும்,, நான் யானைப்பா.
    இதைபத்தி முந்தி ஒரு பதிவில் புலம்பி இருக்கேன்.



    //உண்மையாவே அத்தனை நல்ல மனமா அல்லது தனியே வாழ தைரியம் இல்லாததா? வெகுநாட்களாக என் மனதில் இருந்து வரும் கேள்வி. //

    தைரியம் எல்லாம் இருக்கு. ஆனா நம்ம சமூகம்? வாழ்விடாதுப்பா. வாழாவெட்டின்னு ஒரு பட்டம் கட்டி விட்டுரும். குடி இருக்க வாடகை வீடு தராது. இன்னொன்னு, இந்த நிலைக்கு ஆளாக்குன புருசன் என்னும் ஒருத்தன் இவளைப்பற்றிப் புரளி கிளப்பி எங்கேயும் இருக்கவிடாமல் செய்வான். தனியே இருக்காளுன்னு தெரிஞ்சதும் கூடவேலை செய்யும் சில நாதாரிகள் பார்வையும் போக்கும் இன்னொரு கஷ்டம்.

    என் அம்மாவுக்கு நல்லபடிப்பு & உத்தியோகம் இருந்துச்சு. அரசாங்க வேலை. டாக்டரம்மாவாச்சே. சமூக மதிப்பு. அரசாங்கமே எந்த ஊருக்கு மாற்றலாகிப்போனாலும் குவாட்டர்ஸ் கொடுத்துருது. பிரச்சனை அவ்வளவா இல்லை. ஆனாலும் நாங்கெல்லாம் யாராவது கேட்டா 'அப்பா வேற ஊரில் வேலையா இருக்காரு'ன்னு சொல்வோம். எங்ககிட்டேயே அப்பாவின் 'ஆளை' பெரியம்மான்னுதான் சொல்லச் சொன்னாங்க அம்மா.

    எனக்கு இந்தப் பெரியம்மாவின் கதையெல்லாம் அம்மா இறந்தபிறகு பாட்டி சொல்லித்தான் தெரியும்.



    /இதில் காமெடி என்னவென்றால் அப்பாவை விட பல மடங்கு அதிகமாக அம்மா நிம்மியைப்பற்றி நினைத்திருப்பார்//

    துரோகத்தையும் துரோகியையும் மன்னிக்கலாமே தவிர மறக்க முடியாது.
    பெண்களுக்கு இருக்கும் ஒரு குணம் இது.

    நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கணும்.

    ReplyDelete
  2. மனிதர்கள் வாழ்வில் நடக்கும் இனிப்பான நினைவுகளை விட கசப்பான நினைவுகளே சாகா வரம் பெற்று சித்திரவதை படுத்தும் இயற்கையின் கொடுர விளயாட்டை அருமையாக விவரித்துள்ளீர்கள்

    தி.விஜய்

    ReplyDelete
  3. உயர்ந்த மனிதன் படத்தில் ஒரு பாடல் வரி!

    "அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
    அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்"

    சிக்மண்ட் ஃபிராய்ட் தத்துவங்களை நுணுகிப் படித்தால் நடந்தவை தவறில்லையோவெனத் தோன்றும்.

    உன்று உறுதி. உங்கள் அவதானிப்பு மிக நுட்பமானது.

    ReplyDelete
  4. நம்ம நாட்ல இன்றைய தேதி வரைக்கும் துளசி மேடம் சொன்ன சிலப் பிரச்சினைகள் தொடர்ந்துகிட்டே இருக்குங்க. நான் 2006ல காலேஜ் முடிச்சப்போ ஒரு பெர்சனல் சபதத்துக்காக கல்யாணத்துக்கு முன்ன இருந்த ரெண்டு மாச கேப்ல ஒரு பங்குச் சந்தை நிறுவனத்தில் வேலை பார்த்தேன்.அப்போ அங்க ஒரு பொண்ணு வேலை பார்த்தாங்க. கிட்டத்தட்ட இதே பிரச்சினைதான். அவங்களை அந்த நிறுவனத்தில் பயங்கரமா பல வகைல இம்சை செய்தார்கள். நான் இந்த வருஷம் இந்தியா போனப்போ திரும்ப அங்க வேலைப் பார்த்த வேற ஒரு பெண்ணை பார்த்தேன். விசாரிச்சப்போ, முதலில் குறிப்பிட்ட பெண் இப்பொழுது மிக நல்ல நிலையில் இருப்பதாகவும், யாரும் இப்போ அவங்களை முன்பு போல் இம்சை செய்வதில்லை என்றும், இப்போ அவங்க எல்லாருக்கும் மிக நெருங்கிய ஒரு தோழியாகிட்டாங்கன்னும் சொன்னாங்க. அதனால் கொஞ்சம் தன்னம்பிக்கையும், அவன்/அவள் கெடக்கறான்/ள் குடாக்கு என்ற தன்மையும், எல்லாரிடமும் ஸ்பேஸ் விட்டுப் பழகற தன்மையும் இருக்கணும், இந்தக்காலத்திலும். இதுல சில விஷயங்கள் ப்ரபோஷன் குறையும்போது பெண்களுக்கு குறிப்பா கணவனை பிரிந்து வாழும் பெண்களுக்கு பலப் பிரச்சினைகள் ஏற்படுது. எல்லாத்துக்கும் மேல யாரோட மெண்டல் சப்போர்டாவது இருக்கணும். இது ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி. இப்போல்லாம் நெறைய பெற்றோர்கள், பிரண்ட்ஸ் பெண்களின் பிரச்சினைகளைப் புரிஞ்சிகிட்டு நல்லா பழகுகிறார்கள். அதால நிலைமை முன்பை விட இப்ப பரவாயில்லை. இந்த வகை சுதந்திரம், சப்போர்ட் எல்லாம் வெறும் கை நிறைய சம்பாதிக்கும் பெண்களுக்கு மட்டும்னு இல்லாம பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பெண்களுக்கும் இப்போல்லாம் கிடைக்குது என்பது ஒரு நல்ல விஷயம். ஆனா பல சமயங்களில் அதுக்கு தேவையே இல்லாமல் பெண்கள் கொஞ்சமாவது கஷ்டப்படனுங்கறது ஒரு எரிச்சல்.

    ReplyDelete
  5. படிச்சுட்டேன், வழக்கம் போல என்ன சொல்லி கமென்ட் போடுறதுன்னு தெரியல...

    ReplyDelete
  6. என் குரல்வளைக்குள் கனமா ஏதோ ஒன்று.

    ReplyDelete
  7. துளசி மேடம்,

    என்னை மாதிரியே ஞாபக சக்தி அதிகமிருந்து அதுவே விரோதியான மற்றொரு பெண்ணை சந்தித்ததில் மகிழ்ச்சி Misery loves company :) :)

    நீங்கள் சொல்லும் பாயிண்டுகளை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் எத்தனை வேதனைகளை அனுபத்து இருப்பீர்கள் என்பதை ஓரளவு என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஒரு மருத்துவருக்கே இப்படி என்றால் மற்ற பெண்களின் நிலை?

    நீங்கள் சொன்ன காரணங்கள் மட்டுமில்லாமல் பெண்களிடமும் சில குறைகள் உண்டு, அதில் ஒன்று ரொம்ப சீக்கிரமாக நம்பிக்கை இழப்பது, போராட தைரியமில்லாதது மேலும் திருமணமானவுடன் முழுக்க முழுக்க கணவரை சார்ந்து அவர் கட்டுப்பாட்டுக்குள் கடைசி வரை இருந்து விடுவது.


    துரோகி என்று நிம்மி போன்ற பெண்களை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நமக்கு இருக்கும் வீக்னெஸ் இது. தவறு செய்தது நம்மின் அன்பிற்குரிய ஆணாக இருந்தால்(அப்பா,சகோதரர்கள், கணவர், காதலர்)அவர் மீது அதிக கோபத்தையோ வெறுப்பையோ ரொம்ப நேரம் காட்ட நமக்கு மனம் இருப்பதில்லை. எனவே, மற்றொரு பெண் மேல் கோபப்படுகிறோம். இதில் அந்த பெண்ணின் தவறு ரொம்ப குறைவு, அந்த பெண்ணுக்கு நம்மைப்பற்றி கவலைப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாவற்றுக்கும் காரணமானவர் சம்மந்தப்பட்ட ஆண்.

    ReplyDelete
  8. வருக விஜய், கருத்துக்களுக்கு நன்றி.
    எனக்கு சந்தோஷமான நிகழ்வுகளும் நன்றாகவே நினைவு இருக்கும்.

    ReplyDelete
  9. வாங்க லதானந்த் சித்தர்.

    ஃப்ராயிட் கருத்துக்களை தயவு செய்து விளக்க முடியுமா?

    ReplyDelete
  10. மீண்டும் கலக்கலான பின்னூட்டத்துக்கு நன்றி கவிதாயினி ராப். :)

    பொருளாதாரத்தில் முன்னேறிய பெண்களில் பலரும் தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள்.

    தன்னம்பிக்கை வர பெண்கள் முதலில் ஆண்கள் செய்யும் எந்த காரியத்தையும் தன்னாலும் செய்ய முடியும் என்று நம்ப வேண்டும்.

    ReplyDelete
  11. வருக ஷ்யாம் மற்றும் ராஜ நடராஜன் :)

    ReplyDelete
  12. இங்கே நான் எழூதி வரும் பெண்களைப்பற்றிய விமர்சனங்களை அன்புக்குரிய வலைப்பூ சகோதரிகள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

    உண்மையில் இப்படி எழுதுவதில் எனக்கும் விருப்பமில்லை என்றாலும் குறைகளை திரும்பி பார்க்காமல் நம்மை நாமே பார்த்து பரிதாபப்படுதலோ அல்லது ஆண்களைப்பார்த்து கோபப்படுதலோ இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்காது என்பது என்னுடைய கருத்து.

    ReplyDelete
  13. //குறைகளை திரும்பி பார்க்காமல் நம்மை நாமே பார்த்து பரிதாபப்படுதலோ அல்லது ஆண்களைப்பார்த்து கோபப்படுதலோ இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்காது என்பது என்னுடைய கருத்து.//

    அருமை கயல்!

    எழுத்து உங்களுக்கு வரமாகக் கைகூடியிருக்கிறது!!!

    ReplyDelete
  14. மிக்க நன்றி பரிசல் :)
    (நீங்கள் என்னை விட பலமடங்கு நன்றாக எழுதுகிறீர்கள்)

    ReplyDelete
  15. தைரியமான எழுத்துக்கள் கயல்விழி.பெரும்பாலோர் ஒரு முகமுடியை மாட்டிக்கொண்டு,போலியான வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு மத்தியில் 'டீன்ஏஜில்' நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை வெளிப்படையாக எழுதமுடிவது மிகவும் வரவேற்க்கப்படவேண்டியது.
    வேறொரு தலைப்பில்,உங்களுக்கு விவாதம் புரிய ஆவல் என்றும்,ஆனால் வேறு எந்த பெண் பதிவரும் 'காரசாரமான தலைப்புகளுள்ள' பதிவுகளில் அவர்களின் எண்ணத்தை பதிக்காத காரணத்தால் நீங்களும் பதிக்க தயங்குவதாகவும் எழுதியுள்ளீர்கள்.ஏனிந்த தயக்கம்?
    சிறுவயதில் உங்கள் வாழ்வில் நிகழ்ந்த சர்ச்சைக்குறிய விஷயத்தை தைரியமாக எழுதும் உங்களால் இதுவும் முடியும்.உங்களைப் பார்த்து மற்ற பெண்பதிவர்களும் களத்தில் இறங்கலாம். நீங்கள் கட்டுங்கள் மணியை பூனைக்கு...

    ReplyDelete
  16. கருத்துக்களுக்கு மிக்க நன்றி மோகன். என் ப்ளாக் என்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதால் இங்கே எழுதுவது சுலபம், தேவை இல்லாத அநாகரீகமான காமெண்டுகளை டிலிட் பண்ணி விடுவேன். மற்றவர்கள் ப்ளாகில் சர்ச்சையான காமெண்டுகள் எழுதுவது ரிஸ்க் என்பதால் தயக்கம். ஆனால் முடிந்தவரை அந்த தயக்கத்தை போக்க முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  17. //துரோகி என்று நிம்மி போன்ற பெண்களை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.//

    நெவர்.......

    மத்தவங்களைக் குற்றம் சொல்ல முடியுமா?

    நம்மாளுங்களைத்தான் சொல்றேன்ப்பா.

    ReplyDelete
  18. ///தேவை இல்லாத அநாகரீகமான காமெண்டுகளை டிலிட் பண்ணி விடுவேன். மற்றவர்கள் ப்ளாகில் சர்ச்சையான காமெண்டுகள் எழுதுவது ரிஸ்க் என்பதால் தயக்கம். ///
    மற்றவர்கள் ப்ளாக்கில் நீங்கள் எழுதும் கமெண்ட்களுக்கு வேறு யாராவது அநாகரீகமான கமெண்ட் எழுதினால்,அந்த ப்ளாகரே அதை போஸ்ட் பண்ணாமல் தடை செய்துவிடலாம்.அதையும் மீறி அப்ப்ளாகர் அதை வெளியிட்டால்...அதற்கு பிறகு அந்தமாதிரியான பதிவரைவிட்டு விலகிவிடவேண்டியதுதான்....

    ReplyDelete
  19. Kayalvizhi,

    I can understand its tough to come of the bad memories. My suggestion is please consult psychiatric specialist for your mom. They have some special treatment for all these kind of thing.

    I read many of the information from the blog of Dr. Shalini, Psychaitric specialist and writer. Sorry to advice, my view it bring certain relief (atleast 50%) to your mom.

    ReplyDelete
  20. அப்பாவின் தவறான செயல் தான் அம்மாவை பாதித்திருக்கிறது... இல்லை என்றால் அவர் வாழ்க்கை வேறி விதமாக இருந்திருக்கும் இல்லையா...

    இன்னும் எத்தனை குடும்பங்களில் இப்படி எல்லாம் நடந்திருக்கும்.

    இங்கே பகிர்ந்துக் கொள்ளும் நீங்க தைரியசாளி...

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. அம்மாவுடைய தப்பு:

    அப்பாவின் மீது அவர் வைத்த நம்பிக்கை. ஊர் உலகம் ஆயிரம் செய்யும் ஆனால் என் "ஆம்படையார்" அப்படி ஒரு போதும் இருக்க மாட்டார் என்ற நம்பிக்கை.

    எவ்வளவு நம்பினாரோ, அதைவிட பலமடங்கு அவரை இன்று சந்தேகப்படுகிறார்.

    அப்போ கணவரை நம்புவது தப்பா?

    அளவுக்கு மீறி நம்புவது தப்புத்தான்!


    * கற்பு என்பது மனதாலும் இருக்கனும். அது இல்லைனா கற்பு என்பது பேசுவது அர்த்தமற்றது என்று பலர் விவாதம் செய்கிறார்கள்.

    இந்த சூழ்நிலையில் மனதளவில்,ஃபேண்டஸியோடு இது முடிந்து இருந்தால்,உடலளவு போகாமல்,

    * இது குழந்தைகளின் மனநிலையை பாதித்து இருக்காது.

    * அம்மாவை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்காது.

    * அந்த அசிங்கமான நினைவுகள், அவரோடயே வாழ்ந்து நாளடைவில் ஒன்றுமில்லாமல் போயிருக்கும்.

    தத்துவரீதியாகப்பார்த்தால் மனதளவில் கற்போட இருப்பதுதான் உண்மையான கற்பு.

    ஆனால் "இன் ப்ராக்டிஸ்" உடலளவில் கற்போடு இருந்தால் 90% மேல் உள்ள பிர்ச்சினை வராது என்பது என் தாழ்மையான எண்ணம்!

    * Finally, in genreal, men are perverts.The older they get the more perverted they become.Women should always remember that.

    The only person who can cure his perversion and sickness is his better half, his life partner. When you hide that from her, you are asking for big trouble. You are ignoring the best cure!

    ReplyDelete
  23. //நெவர்.......

    மத்தவங்களைக் குற்றம் சொல்ல முடியுமா?

    நம்மாளுங்களைத்தான் சொல்றேன்ப்பா.//

    துளசி மேடம், நீங்கள் சொல்வது உண்மை தான்.

    ஒருவேளை வேண்டுமென்றே அவர்கள் துரோகம் செய்ய நினைத்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் செய்யும் தவறு நம்மை இந்த அளவு பாதிக்கிறது. வேறென்ன சொல்ல?

    துரோகமாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் கடைசியில் பின்விளைவுகள் ஒன்று. அளவிட முடியாத வருத்தம்!

    ReplyDelete
  24. //கமெண்ட்களுக்கு வேறு யாராவது அநாகரீகமான கமெண்ட் எழுதினால்,அந்த ப்ளாகரே அதை போஸ்ட் பண்ணாமல் தடை செய்துவிடலாம்.அதையும் மீறி அப்ப்ளாகர் அதை வெளியிட்டால்...அதற்கு பிறகு அந்தமாதிரியான பதிவரைவிட்டு விலகிவிடவேண்டியதுதான்....//

    அப்படி சில மோசமான அனுபவங்கள் இங்கே வந்த குறுகிய காலத்திலேயே ஏற்பட்டது.

    ReplyDelete
  25. //I can understand its tough to come of the bad memories. My suggestion is please consult psychiatric specialist for your mom. They have some special treatment for all these kind of thing.
    //

    கருத்துக்கு நன்றி குமார் அவர்களே. நான் காலேஜில் இருக்கும் போது சைக்காலஜிஸ்டிடம் அம்மாவை அழைத்துப்போய் சிகிச்சை எல்லாம் அளித்தோம். அதிலிருந்து எத்தனையோ பரவாயில்லை, பழைய அம்மாவாக மாறவே இல்லை என்றாலும் பெருமளவு மீண்டு வந்தார். இப்போது நாங்கள் படிக்கவும், வேலைக்கும் வீட்டை விட்டு போய்விட்டதால், அம்மாவும்- அப்பாவும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறார்கள்.

    ReplyDelete
  26. //இன்னும் எத்தனை குடும்பங்களில் இப்படி எல்லாம் நடந்திருக்கும்.

    இங்கே பகிர்ந்துக் கொள்ளும் நீங்க தைரியசாளி...
    //

    இங்கே பின்னூட்டங்களை படித்தீர்கள் என்றால் துளசி மேடம் போன்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என் வாழ்க்கையை விட மிகவும் கொடுமையானது. இப்படி நான் எழுதுவதை விடவும் கொடிய சம்பவங்கள் பலர் வாழ்க்கையில் நடந்திருக்கிறது என்றாலும் யாரும் வெளியே சொல்ல முன்வருவதில்லை.

    ReplyDelete
  27. //Finally, in genreal, men are perverts.The older they get the more perverted they become.Women should always remember that.

    The only person who can cure his perversion and sickness is his better half, his life partner. When you hide that from her, you are asking for big trouble. You are ignoring the best cure!//

    The older the more perverted?

    Some times even the better half may not provide the cure. I beleive it's pointless to seek cure from other people. One should find his/her own cure.

    ReplyDelete
  28. வாங்க ஜி. என்ன அடிக்கடி வந்து ஒரே அழுகாச்சியா காமெண்ட் போட்டு ஓடிவிடுகிறீர்கள்?? :) :)

    ReplyDelete
  29. இந்த பதிவு சூடான இடுகைகளில் இருக்கிறது. இது பாசிடிவ் அட்டென்ஷனாக இருக்கும், இந்த அனாலிஸிஸ் யாருக்காவது உதவும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  30. *****இந்த பதிவு சூடான இடுகைகளில் இருக்கிறது****

    சூடான இடுகைனா ?

    ReplyDelete
  31. //சூடான இடுகைனா ?//

    தமிழ் மணம் முகப்பு பகுதியில் சென்று பார்க்கவும். :)

    ReplyDelete
  32. "ஏன் இப்படி போட்டு உடைக்கறீங்க.. இந்த தொடரின் கடைசி எபிசோடில்.. இது ஒரு கதை அவ்வளவேன்னு முடிச்சிடுங்க.. "

    இப்படீல்லாம் எழுதணும்னு நெனச்சேன். ஆனா, தொடர்ந்து படிச்சா, ரொம்ப சீரியஸா இருக்கே..

    அப்பா கேரக்டரும் பாவம்தாங்க. ஒரு சில நிமிஷ சபலத்துக்காக வாழ்நாள் முழுக்க ஒரு துணை இல்லாமல் போச்சே.. :(

    ReplyDelete
  33. //இப்படீல்லாம் எழுதணும்னு நெனச்சேன். ஆனா, தொடர்ந்து படிச்சா, ரொம்ப சீரியஸா இருக்கே..

    அப்பா கேரக்டரும் பாவம்தாங்க. ஒரு சில நிமிஷ சபலத்துக்காக வாழ்நாள் முழுக்க ஒரு துணை இல்லாமல் போச்சே.. :(
    //

    இது கதையாக மட்டும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்? நிஜ வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள் கதையைவிட கொடுமையானவை, குழப்பம் மிக்கவை.

    ReplyDelete
  34. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புபட்டியன்.

    ReplyDelete
  35. உங்களின் இந்த தொடரை இன்றுதான் முழுமையாகப்படித்தேன்.
    சொல்ல வார்த்தைகள் ஏதுமில்லை என்னிடம்.

    வார்த்தை எதுவும் வரமாட்டேங்குது.

    ReplyDelete
  36. //உங்களின் இந்த தொடரை இன்றுதான் முழுமையாகப்படித்தேன்.
    சொல்ல வார்த்தைகள் ஏதுமில்லை என்னிடம்.

    வார்த்தை எதுவும் வரமாட்டேங்குது.

    //

    நன்றி திரு. ஜோசப் பால்ராஜ். உங்கள் கருத்துக்களையும் நேரம் இருக்கும் போது தயவு செய்து சொல்லுங்கள்.

    ReplyDelete
  37. தன்னம்பிக்கை வர பெண்கள் முதலில் ஆண்கள் செய்யும் எந்த காரியத்தையும் தன்னாலும் செய்ய முடியும் என்று நம்ப வேண்டும்.
    //

    நிச்சயம் ஆண்கள் செய்யும் எந்த காரியத்தையும் பெண்கள் செய்ய முடியும்.ஆனால் செட்டில் ஆகுறதுங்கிற விஷயத்தில் பெண்களீன் நிலை மிகவும் பரிதாபம். காரணம் ஒரு வீட்டில் ஒரு ஆண் பிள்ளை தனக்கு விருப்பமான துறையை போராடியாவது தேர்ந்தெடுக்க முடியும். பின்னர் அத்துறையில் ஒரு நிலையை அடையும் வரை வீடு பல விஷயங்களீல் பொறுமை காக்கும். செட்டிலாகி முப்பது வயதுக்கு மேல் கூட ஆண் திருமனம் செய்ய முடியும். துணை அமைவதில் ஒரு பிரச்சனையும் பெரும்பாலும் இருக்காது. ஆனால் பெண்ணுக்கு பெரும்பாலும் அவள் விரும்பும் துறையை விட வீடு விரும்பும் துறைதான் திணிக்கப்படுகின்றது. பெண்கள் செட்டில் ஆவதில் அவர்கள் வயதும் இனைந்து விடுகின்றது.ஆணுக்கு கிடைக்கும் கால அவகாசம் ஒரு பெண்ணுக்கு கிடைப்பது இல்லை.மிகக் குறைந்த கால அவகாசத்தில் தன் தேவைகளை எட்ட வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு. இதனாலே பல பெண்கள் சோர்ந்து விடுகின்றனர் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  38. ///***
    * Some times even the better half may not provide the cure.

    * I beleive it's pointless to seek cure from other people.

    * One should find his/her own cure. ***///

    * It is ture, it depends on the betterhalf and her/his openmind. Some cant digest, where it gets complicated!

    * I really dont know what you mean by getting cure from "other people"

    Who are these "other people" Kayal?

    * I am not sure everybody can find a cure by themselves. Sometimes they do some things thinking that as a "cure" but that is really not!

    ReplyDelete
  39. வாசிக்கவே ரொம்ப கனமாக உள்ளது. நடைமுறையை, நடைமுறை உரையிலே நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
    வாழ்க்கை என்றால் சகிக்க வேண்டியவை ஆயிரம்!! அதுவும் பெண்கள்!

    ReplyDelete
  40. //அவள் விரும்பும் துறையை விட வீடு விரும்பும் துறைதான் திணிக்கப்படுகின்றது. பெண்கள் செட்டில் ஆவதில் அவர்கள் வயதும் இனைந்து விடுகின்றது.//

    ரொம்ப நன்றி அப்துல்லா, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. கூடவே, பெண் வேறு வீட்டுக்கு செல்பவள் என்பதால் அவளுடைய படிப்பில் நிறைய பெற்றோர்கள் அதிக அக்கறை எடுப்பதில்லை.

    ReplyDelete
  41. //* It is ture, it depends on the betterhalf and her/his openmind. Some cant digest, where it gets complicated!

    * I really dont know what you mean by getting cure from "other people"

    Who are these "other people" Kayal?

    * I am not sure everybody can find a cure by themselves. Sometimes they do some things thinking that as a "cure" but that is really not!//

    With my friends, I saw things change a lot after they got married. Their significant other became different. I guess marriage changes everything. I don't see much open mindedness among Indian couples, esp when it comes to sexual relationship. Ofcourse there are exceptions like always.

    'other people' here refers to lover, husband/wife. People get in to relationships thinking that the relationship is going to make them happy. But in reality, we have to find happiness within ourselves. That's what I mean by that.

    ReplyDelete
  42. ரொம்ப சீரியஸான விவாதம்.

    கயல் நீங்க ஒரு விவாதப்புரட்சியே நடத்துறீங்க. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  43. நான் 2-3 தரம் படிச்சு பாத்தேன் மேலும் அனைத்து பின்னூட்டங்களையும் படிச்சு பாத்தேன். ஆனா எனக்கு எதும் கருத்து சொல்ல முடியல.

    நான் இந்த அளவிற்கு ஆளமாய் சிந்தித்ததில்லை என்பது கூட காரணமாய் இருக்கலாம். நான் சோகத்தை சீக்கிரம் மறந்து விடுவேன்.
    (இது குறையா நிறையா என்று எனக்கு தெரியாது)


    எனிவே, இந்த மாதிரி ஆழ்மனத்தில் புதைந்து இருக்கும் நினைவுகளை வெளியே எடுக்கும் போது மீண்டும் உங்களை அது காயப்படுத்தாமல் பார்த்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  44. //"very Smart and pays attention to small details" //

    That's why you are a HIGH PROFILE BLOGGER. :))

    ReplyDelete
  45. //எனிவே, இந்த மாதிரி ஆழ்மனத்தில் புதைந்து இருக்கும் நினைவுகளை வெளியே எடுக்கும் போது மீண்டும் உங்களை அது காயப்படுத்தாமல் பார்த்து கொள்ளுங்கள்.//

    நன்றி வழிப்போக்கன். இதில் தான் பிரச்சினை இருக்கிறது, என்னால் எந்த நினைவையும் ஆழ்மனதில் புதைத்து வைக்க முடியாது. தொடர்ந்து நினைத்துக்கொண்டே தான் இருப்பேன் :)

    ReplyDelete
  46. //நான் சோகத்தை சீக்கிரம் மறந்து விடுவேன்.
    (இது குறையா நிறையா என்று எனக்கு தெரியாது)//

    நிச்சயமாக நிறை. தேவையானதை நினைத்து தேவை இல்லாதவற்றை மறந்துவிடுதல் ரொம்ப சரி.

    ReplyDelete
  47. நாம நம்மளை ரொம்ப நல்லவங்கனு நெனைச்சிகிட்டு இருக்கற வரைக்கும் அடுத்தவங்க பண்ண தப்பு பெருசாதான் தெரியும். :0)
    சொந்த அனுபவத்தில் உணர்ந்தது...
    இப்போ எல்லாம் யார் மேலேயும் ரொம்ப நம்பிக்கை வைக்கிறது இல்ல...யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம்..:0)
    --வளவன் மு

    ReplyDelete
  48. ***esp when it comes to sexual relationship. ***

    காமனை, காதலன்/காதலி துணையுடந்தானே வெல்ல முடியும்?

    இல்லையா?:)

    ReplyDelete
  49. ஒருவேளை அம்மா அப்பாவுடன் மனம் விட்டுப் பேசி இருந்தால், அது ஒரே ஒரு முறை நிகழ்ந்த விபத்தாக கூட தெரிந்திருக்கலாம்.
    முப்பது வருஷம் முன்னால் வீட்டுக்குள் நடந்த யுத்தத்தால் கூறுபோடப்பட்ட என் மனம் இன்னும் குணப்படவில்லை.

    jsr_jsrlover@redifmail.com

    ReplyDelete
  50. நன்றி வளவன் மாற்றும் வலி தாங்கி :)

    ReplyDelete
  51. காதலன்/காதலியா? இருங்க மருத்துவர் ஐயாவிடம் உங்களை போட்டு குடுக்கறேன்.

    ReplyDelete
  52. ***கயல்விழி said...
    காதலன்/காதலியா? இருங்க மருத்துவர் ஐயாவிடம் உங்களை போட்டு குடுக்கறேன். ***

    ஆமா, போட்டுக்கொடுக்கிற அளவு என்ன நான் தப்பா சொல்லிவிட்டேன்.

    எனக்கு யாருக்கும் பயம் இல்லை- உன்னைத்தவிர! ;-)

    ReplyDelete
  53. if people do love marriage, then this kind of problem won't arise.

    while you people are in love,they get to know their partner better. if they think they don't get along well, they can break up.don't have to marry. look for true love. but our society doesn't agree this(esp. for girls). but boys can "keep trying & keep on trying" no problem)

    i don't think a lot many people know about "true love" in india. if people are in real love, they won't do things that hurt their loved ones. unfortunately Not all of us are gifted.

    problem lies in
    1.society
    2.girl herself (bcoz not willing to try find 'the one')

    men are pigs (including myself). one can't change them. but can keep in control.

    Cheers
    A CONTROLLABLE PIG

    ReplyDelete
  54. அற்புதமாக எழுதுகிறீர்கள் கயல். மீண்டும் மீண்டும் ஆறுதல் சொல்வதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. ஒரு நண்பனாக ஒரே ஒரு suggestion.. எல்லாவற்றையும் எழுதுவதற்காக ரொம்ப மெனக்கெட்டு அந்த சம்பவத்தை திரும்ப திரும்ப நினைத்துப்பார்க்காதீர்கள். மேலோட்டமாக பகிர்ந்து கொண்டாலே போதுமானது.

    காரணம் கீழ்கண்ட வரிகள் என்னை மிகவும் துயரப்படுத்தியது..
    // அன்று அம்மா கட்டி இருந்த சேலை நிறத்தில் இருந்து அவர் அழுத அழுகை, புலம்பிய வார்த்தைகள், அவருடைய கண்ணீர் துளிகள் என் சுடிதார் டாப்ஸில் உருவாக்கிய நீர் பேட்டர்ன் அனைத்துமே நினைவில் இருக்கிறது//

    ReplyDelete
  55. அனானி,

    உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. அதுக்காக உங்களை இப்படி எல்லாம் சொல்லிக்கனுமா?

    லவ் மேரேஜ் பண்ணினாலும் இதே பிரச்சினைகள் வர வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    என் பெற்றோர் திருமணம் ஒரு தலைக்காதல் திருமணம். அதாவது அப்பா மட்டுமே விருப்பப்பட்டு காதலித்து செய்த திருமணம். குறிக்கோள் நிறைவேறியவுடன், அதாவது விரும்பிய பெண் கிடைத்தவுடன் காதல் வலு இழக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  56. நன்றி வெண்பூ.

    இல்லை இதை எல்லாம் நான் வலுக்கட்டாயமாக நினைக்கவே தேவை இல்லை.அதுவாகவே நினைவில் இருப்பதை மட்டுமே எழுதுகிறேன்.

    ReplyDelete
  57. //பொதுவாக இந்தியப்பெண்கள் மட்டும் ஏன் 'கல்லானாலும் கணவன்' கான்செப்டை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறார்கள்? உண்மையாவே அத்தனை நல்ல மனமா அல்லது தனியே வாழ தைரியம் இல்லாததா? வெகுநாட்களாக என் மனதில் இருந்து வரும் கேள்வி.//

    இதே போல் எனக்கும் ஒரு கேள்வி உள்ளது

    பல இந்திய ஆண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். ஏன்

    ReplyDelete
  58. //என் ப்ளாக் என்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதால் இங்கே எழுதுவது சுலபம், தேவை இல்லாத அநாகரீகமான காமெண்டுகளை டிலிட் பண்ணி விடுவேன். மற்றவர்கள் ப்ளாகில் சர்ச்சையான காமெண்டுகள் எழுதுவது ரிஸ்க் என்பதால் தயக்கம்//

    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  59. //* Finally, in genreal, men are perverts.The older they get the more perverted they become.Women should always remember that.

    The only person who can cure his perversion and sickness is his better half, his life partner. When you hide that from her, you are asking for big trouble. You are ignoring the best cure!//

    உண்மைதான்

    ReplyDelete
  60. //இதே போல் எனக்கும் ஒரு கேள்வி உள்ளது

    பல இந்திய ஆண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். ஏன்
    //

    வாங்க புரூனோ. கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

    இந்திய ஆண்கள் அப்படியா இருக்கிறார்கள்?

    ReplyDelete
  61. இப்போதுதான் இந்தப் பதிவை படிக்க நேரம் கிடைத்தது. இந்தத் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

    அந்த நிகழ்விற்கப்புறம் உங்கள் அப்பா மனது எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது.
    இந்த பதிவும், பின்னூட்டமிட்டவர்களும் உங்கள் அப்பாவை முழுக் குற்றவாளியாக்குவது என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

    உங்களுடைய அப்பாவின் பார்வையிலிருந்து இந்தப் பிரச்சினையைப் பார்த்தால்.. நமது சமுதாயத்தில் பொதுவாக நடக்கும் ஒரு தவறு புரியும்.

    ஆணோ, பெண்ணோ தவறு செய்தவுடன் அவரைத் தண்டனைக்குள்ளாக்குவதோடு மட்டுமில்லாமல், அவர் ஏன் அந்த தவறு செய்வதற்கு உட்பட்டார் என்பதயும் பார்க்கவேண்டும்.

    இந்தப் பதிவை எழுதுவதற்கு நல்ல துணிச்சல் வேண்டும் என்று சொல்லும் அதே வேளையில், இது நீங்கள் இந்த நிகழ்ச்சியை மறப்பதற்கு எந்த வகையிலும் உதவாது என்பதையும் மறுக்க முடியாது.

    உங்கள் தாயினால் மறக்க முடியாமல் போனாலும் கூட, நீங்கள் மறந்து அப்பாவை மன்னிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

    ReplyDelete
  62. சூர்யா, வருகைக்கு நன்றி.

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆரம்பத்தில் இது ஆண்களை மட்டும் குறை சொல்லும் தொடர் போல தெரிந்தாலும், போகப்போக அனைவர் பார்வையில் இருந்தும் எழுதப்போகிறேன். அதற்காகவே இதற்கு 360டிகிரி என்ற தலைப்பு கொடுத்திருக்கிறேன், அதாவது அப்பாவின் கோணத்தில் இருந்தும் இனி வரும் பதிவுகளில் எழுதுவேன்.

    ReplyDelete
  63. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    நீங்கள் இருவரும் மிகச்சிறந்த எழுத்தாளர்களாகும் திறமை நிறையவே உள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  64. மீண்டும் நன்றி சூர்யா :)

    ReplyDelete