Tuesday, July 8, 2008

காதலியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது எப்படி? :வருணிடம் இருந்து டிப்ஸ்.



வலையுலக ஆண் பதிவர்களுக்கு ஏதோ என்னாலான சிறு உதவியாக இந்த பதிவு. இதை ஏன் வருணே பதிக்கவில்லை என்ற கேள்வியெல்லாம் யாரும் கேட்கக்கூடாது. ஏனென்றால் என்னைப்போன்ற பெண்களுக்கு இருக்கும் நல்லெண்ணம் ஆண்களுக்கு இருப்பதில்லை(அடிக்க வராதீங்க). வருண் ஒரு கலியுலக கிருஷ்ணன்(லேடீஸ் மேன்) என்பதை உணர்த்த சிம்பாலிக்காக படமும் போட்டிருக்கிறேன்.

டிப் 1

கயல்: "உங்களுக்கு என்ன நடிகை பிடிக்கும் வருண்?"

வருண்: "உன்னைத்தவிர யாரையுமே பிடிக்காது"

கயல்: "நான் நடிகை இல்லையே, பரவாயில்லை சொல்லுங்க"

வருண் : "நடிகை எல்லாம் உன்னை போல இண்டெலிஜெண்டா இருப்பாங்களா?"

டிப் 2

இவன்(ஒரு பதிவர்) :"இந்த குஷ்புவ நீங்க இன்னமும் விடல்லையாய்யா?? பாவம் அவங்க தெரியாம பேசிட்டாங்க விடுங்க"

கயல்:"நீங்க சொல்லி இருப்பது ஆயிரத்தில் ஒரு வார்த்தை. நானும் இதையே தான் வருணிடம் சொல்லி வருகிறேன், இருந்தும் அவர் குஷ்புவை விடறதா இல்லை.
ஒருவேளை குஷ்புவிடம் வருணுக்கு சீக்ரெட் க்ரஷ்ஷோ என்னவோ?"

வருண்(பாய்ந்து வந்து): "குஷ்பு மேலேயா? எனக்கு க்ரஷ்ஷா? நீ வேற, நடிகைகள்னா எனக்கு உண்மையிலேயே அவ்வளவு பிடிக்காது. ஆனால் ஒரு நடிகை மேலே எனக்கு க்ரஷ் வர ஒரு பாஸிபிலிட்டி இருக்கு, கயல்! அது என்னனா, ஒருவேளை எதிர் காலத்தில் நீ நடிக்க போனால், உன் மேலே நிச்சயம் க்ரஷ் வரும்!"

கயல்(அதிர்ச்சியில்): "அதெப்படிங்க இதெல்லாம் முடியுது உங்களால? நான் நடித்தால் அந்த படத்தின் மொத்த டிக்கட்டையும் நீங்க தான் வாங்கி தனியே உட்கார்ந்து பார்க்கனும்(சாரி, என் படத்தை எனக்கே பார்க்கும் தைரியம் இல்லாததால், இதில் உங்களுக்கு நான் கம்பனி தரமுடியாது)"

வருண்: "To tell you the honest truth, I will love to watch your movie alone, kayal :)"

கயல்: "என்ன கொடுமை வருண் இது?"

டிப் 3

கயல்: "ப்ளாக் ஆரம்பித்து கொஞ்ச நாள் ஆனாலும் ரெஸ்பான்ஸ் நல்லா இருக்கு நம்ம ப்ளாகுக்கு"

வருண்: "எல்லாம் உன் முகராசி தான் கயல்"

கயல்: "ஏன் நீங்களும் தான் நல்லா எழுதறீங்க காதல் கல்வெட்டு எல்லாம்"

வருண்: "இருந்தாலும் உன்னை மாதிரி வருமா? உன்னை தான் நிறையபேருக்கு பிடிக்கும்"

கயல்(மனதுக்குள்): "தாங்கமுடியலியே சாமி!!"


நினைவுக்கு வரும்போதெல்லாம் அடிக்கடி வருணுடைய ட்ரிக்குகளை தொடர்ந்து எழுதுகிறேன். இந்த டிப்ஸுக்களுக்கு நடுநடுவே கொஞ்சம் டெக்கரேட்டிவா இருக்க "மானே,தேனே, பொன்மானே" எல்லாம் போட்டுக்கோங்க. முக்கியமா, கயல் என்ற பெயரை மாற்றி உபயோகிக்கவும், அப்படியே உபயோகித்தால் உங்கள் வீட்டில் பிரச்சினை வரப்போவது உறுதி(டேமேஜ்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல). இதை படித்து சக பதிவர்களான நீங்களும் அடி வாங்காமல் தப்பிக்க வாழ்த்துக்கள்.

65 comments:

  1. kayal: நான் உன்னுடையை இந்தப்பதிவைப்படிக்கவே இல்லை. இந்த பதிவைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது! LOL!

    தயவு செய்து நம்பு என்னை, ப்ளீஸ்!

    ReplyDelete
  2. சரி நம்பிட்டேன்.

    ReplyDelete
  3. என்ன நடக்குது இங்க...

    ReplyDelete
  4. ஹையோ... இவங்க என்பெயருல பண்ணுற இம்சையை தாங்க முடியலையே...:(

    ReplyDelete
  5. அடிப்பாவி...!
    உன்னை சமாளிக்க எவ்வளோ கஸ்டப்பட வேண்டியிருக்கு:(

    ReplyDelete
  6. நீ அதை பிளாக்ல வேற போடறியா இரு இரு உன்னை வச்சுக்கறேன்...:)

    ReplyDelete
  7. சிரிக்கிறது...

    ReplyDelete
  8. ராட்ஸஸி...

    ReplyDelete
  9. முறைத்துக்கொண்டே :)

    என்னது...???

    ReplyDelete
  10. என் அழகான ராட்ஸஸி..:)

    ReplyDelete
  11. என்ன நடக்குது இங்கே?

    ReplyDelete
  12. தமிழன் வந்திருக்காருன்னா நல்ல பதிவாத்தான் இருக்கணும்!

    ReplyDelete
  13. ஆஹா இங்க தனி ட்ராக் ஓட்டற அனானிகள் யாருங்க?
    //பெண்களுக்கு இருக்கும் நல்லெண்ணம் ஆண்களுக்கு இருப்பதில்லை//
    இதை நான் அப்படியே வழிமொழிகிறேன்:):):)
    //honest truth//
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... அப்போ பொய்யான உண்மை, உண்மையான பொய்யப் பத்தியெல்லாம் எப்பங்க அவரு எழுதுவாரு

    ReplyDelete
  14. //கயல் என்ற பெயரை மாற்றி உபயோகிக்கவும்//

    நல்ல வேலை சொன்னீங்க இல்லனா ரணகளம் ஆகி இருக்கும்... :-)

    ReplyDelete
  15. ஜெலுசில் அல்லது டைஜீன் மாத்திரை எங்கே கிடைக்கும்? உடனே தேவை.

    ReplyDelete
  16. ****rapp said...

    //honest truth//
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... அப்போ பொய்யான உண்மை, உண்மையான பொய்யப் பத்தியெல்லாம் எப்பங்க அவரு எழுதுவாரு****

    ரப்:

    LOL!!

    அப்படிப்பார்த்தால், உண்மைக்கு எந்த அட்ஜெக்டிவும் பயன்படுத்தக்கூடாது!

    ட்ரு னு சொல்றோம். ஒவ்வொரு சம்யம் வெரி ட்ரூ னு சொல்வதும் உண்டு. அதை அழுத்தி சொல்வதற்கு. அது போலதான் இதுவும். ;-)

    சில எளிதில் நம்பமுடியாத உண்மைகளை சொல்லும்போது, இந்த மாதிரி அட்ஜெக்டிவ் போட்டால், அதை ஊர்ஜிதம் பண்ணிக்கொள்ள திரும்ப ஒரு கேள்வி வராது, இல்லையா? LOL!

    ReplyDelete
  17. **** rapp said...
    ஆஹா இங்க தனி ட்ராக் ஓட்டற அனானிகள் யாருங்க?
    //பெண்களுக்கு இருக்கும் நல்லெண்ணம் ஆண்களுக்கு இருப்பதில்லை//
    இதை நான் அப்படியே வழிமொழிகிறேன்:):):) ***

    கெட்டாலும் ஆண்மக்கள் .... என்கிற ஒரு பாலகுமாரன் கதை ஞாபத்துக்கு வருகிறது! LOL

    ReplyDelete
  18. // நாமக்கல் சிபி said...

    தமிழன் வந்திருக்காருன்னா நல்ல பதிவாத்தான் இருக்கணும்!//

    பாவங்க இவரு..

    ReplyDelete
  19. //இவன்(ஒரு பதிவர்) :"இந்த குஷ்புவ நீங்க இன்னமும் விடல்லையாய்யா?? பாவம் அவங்க தெரியாம பேசிட்டாங்க விடுங்க"

    கயல்:"நீங்க சொல்லி இருப்பது ஆயிரத்தில் ஒரு வார்த்தை. நானும் இதையே தான் வருணிடம் சொல்லி வருகிறேன், இருந்தும் அவர் குஷ்புவை விடறதா இல்லை.
    ஒருவேளை குஷ்புவிடம் வருணுக்கு சீக்ரெட் க்ரஷ்ஷோ என்னவோ?"
    //


    அடப்பாவிகளா இதில என் தலை ஏன் உருளுது??? தெரியாத்தனமா அந்த கேள்விய கேட்டுட்டேன்... நான் இந்த விளையாட்டுக்கு வரல

    //
    வருண்(பாய்ந்து வந்து): "குஷ்பு மேலேயா? எனக்கு க்ரஷ்ஷா? நீ வேற, நடிகைகள்னா எனக்கு உண்மையிலேயே அவ்வளவு பிடிக்காது. ஆனால் ஒரு நடிகை மேலே எனக்கு க்ரஷ் வர ஒரு பாஸிபிலிட்டி இருக்கு, கயல்! அது என்னனா, ஒருவேளை எதிர் காலத்தில் நீ நடிக்க போனால், உன் மேலே நிச்சயம் க்ரஷ் வரும்!"

    கயல்(அதிர்ச்சியில்): "அதெப்படிங்க இதெல்லாம் முடியுது உங்களால? நான் நடித்தால் அந்த படத்தின் மொத்த டிக்கட்டையும் நீங்க தான் வாங்கி தனியே உட்கார்ந்து பார்க்கனும்(சாரி, என் படத்தை எனக்கே பார்க்கும் தைரியம் இல்லாததால், இதில் உங்களுக்கு நான் கம்பனி தரமுடியாது)"

    வருண்: "To tell you the honest truth, I will love to watch your movie alone, kayal :)"

    கயல்: "என்ன கொடுமை வருண் இது?"//


    அதுன்னா உண்மைத்தான் நீங்க நடிச்சா ஆப்பரேட்டர் கூட இருக்கமாட்டார் அந்த தியட்டரில வருண் மட்டும்தான் இருந்து பார்ப்பாரு..... பார்த்து முடிய கிளைமாக்ஸ் சேதுவாகி இருப்பாரு...
    நல்லா கிளப்புறாங்கய்யா பீதியா நடிக்க போறேன் என்னு

    ReplyDelete
  20. //கயல்: "ப்ளாக் ஆரம்பித்து கொஞ்ச நாள் ஆனாலும் ரெஸ்பான்ஸ் நல்லா இருக்கு நம்ம ப்ளாகுக்கு"

    வருண்: "எல்லாம் உன் முகராசி தான் கயல்"
    //


    வருண் நல்லா வைக்கிறீங்க ice

    ReplyDelete
  21. ****வருண் நல்லா வைக்கிறீங்க ice

    9 July, 2008 9:06 AM***


    சரி இவன்(ர்), நீங்க சொல்வதை ஒரு காம்ப்ளிமெண்ட் ஆக எடுத்துக்கிறேன்! ந்னறி :-)

    ReplyDelete
  22. அன்புள்ள அனானி அண்ணா,

    எங்களுக்காக கஷ்டப்பட்டு பேக்க்ரவுண்ட் வாய்ஸ் கொடுத்ததற்கு நன்றி. ஏன் அனானியாக பதிவிட்டிருக்கிறீர்கள் என்பது மட்டும் புரியவில்லை. நீங்கள் ப்ளாகராக பதிந்திருந்தால் நான் உங்க ப்ளாக்குக்கு வந்து கஷ்டப்பட்டு தேடி தேடி எதையாவது பாராட்ட கண்டுபிடித்திருப்பேன். மிஸ் பண்ணிட்டீங்களே!

    ReplyDelete
  23. //என்ன நடக்குது இங்க...//

    நீங்க தான் படிச்சீங்களே???

    ReplyDelete
  24. //இதை நான் அப்படியே வழிமொழிகிறேன்:):):)//

    இதை திரும்பவும் நானும் வழிமொழிகிறன்.

    ReplyDelete
  25. //நல்ல வேலை சொன்னீங்க இல்லனா ரணகளம் ஆகி இருக்கும்... :-)//

    அப்படியா? எனக்கு எத்தனை நல்லெண்ணம் என்று இனிமேலாவது மற்றவர்களுக்கு புரியட்டும்.

    ReplyDelete
  26. //ஜெலுசில் அல்லது டைஜீன் மாத்திரை எங்கே கிடைக்கும்? உடனே தேவை.//

    உடம்புக்கு என்ன ஆச்சு லதானந்த சித்தரே? கோயம்பத்தூரில் ஒரு மருந்துக்கடை கூடவா இல்லை?

    ReplyDelete
  27. //பாவங்க இவரு..//

    you too பரிசல்???

    ReplyDelete
  28. //அடப்பாவிகளா இதில என் தலை ஏன் உருளுது??? தெரியாத்தனமா அந்த கேள்விய கேட்டுட்டேன்... நான் இந்த விளையாட்டுக்கு வரல
    //

    :)

    ஆமாம் இவர் பெரிய செலிப்ரெட்டி, இவர் தலையை நாங்க உருட்டறோம். அடங்க மாட்டிங்களா?

    ReplyDelete
  29. //அதுன்னா உண்மைத்தான் நீங்க நடிச்சா ஆப்பரேட்டர் கூட இருக்கமாட்டார் அந்த தியட்டரில வருண் மட்டும்தான் இருந்து பார்ப்பாரு..... பார்த்து முடிய கிளைமாக்ஸ் சேதுவாகி இருப்பாரு...
    நல்லா கிளப்புறாங்கய்யா பீதியா நடிக்க போறேன் என்னு
    //

    இவன், நான் நடிச்சதுக்கெ அப்படினா, நீங்க நடிக்க ஆரம்பிச்சா? அந்த கொடுமையை கொஞ்சம் நினைச்சுப்பாருங்க!

    ReplyDelete
  30. பொதுவாக, கடவுளும் சரி, காதலும் சரி, ரொம்ப சர்ச்சைக்குரிய விசயம்தான்.

    இவர், "காதல்கடவுள்" ஆச்சே!!

    அப்போ கேட்கவா வேணும்? LOL

    ReplyDelete
  31. @ நாமக்கல் சிபி...
    /
    தமிழன் வந்திருக்காருன்னா நல்ல பதிவாத்தான் இருக்கணும்!
    /
    தள... உங்க நல்ல மனசுக்கு நன்றி தள...;)

    ReplyDelete
  32. @ பரிசல்காரன்...

    \\\// நாமக்கல் சிபி said...

    தமிழன் வந்திருக்காருன்னா நல்ல பதிவாத்தான் இருக்கணும்!//

    பாவங்க இவரு...///

    அதான் தெரியுதுல்ல விட்டுடவேண்டியதுதானே...;)

    பரிசல்காரரே நாங்க களத்தில இறங்கினா கஸ்டமாயிடும் ஆமா...!

    ReplyDelete
  33. @ கயல்விழி...
    ///
    அன்புள்ள அனானி அண்ணா,

    எங்களுக்காக கஷ்டப்பட்டு பேக்க்ரவுண்ட் வாய்ஸ் கொடுத்ததற்கு நன்றி. ஏன் அனானியாக பதிவிட்டிருக்கிறீர்கள் என்பது மட்டும் புரியவில்லை. நீங்கள் ப்ளாகராக பதிந்திருந்தால் நான் உங்க ப்ளாக்குக்கு வந்து கஷ்டப்பட்டு தேடி தேடி எதையாவது பாராட்ட கண்டுபிடித்திருப்பேன். மிஸ் பண்ணிட்டீங்களே!////

    நான்தாங்க அது...;))

    ReplyDelete
  34. //:)

    ஆமாம் இவர் பெரிய செலிப்ரெட்டி, இவர் தலையை நாங்க உருட்டறோம். //


    தெரியாத்தனமா இந்தப்பக்கம் வந்துட்டேனே.... மன்னிச்சிடுங்க

    //அடங்க மாட்டிங்களா?//


    அடங்குறதா அந்த வார்த்தையே இவனின் சரித்திரத்தில் இருக்க கூடாது... இவனாவது அடங்குறதாவது

    ReplyDelete
  35. //தெரியாத்தனமா இந்தப்பக்கம் வந்துட்டேனே.... மன்னிச்சிடுங்க//

    அதெல்லாம் மன்னிக்க முடியாது.

    //அடங்குறதா அந்த வார்த்தையே இவனின் சரித்திரத்தில் இருக்க கூடாது... இவனாவது அடங்குறதாவது//

    சரி அடுத்த பதிவிலும் உங்களை இழுக்கலாமா என்று யோசிக்கிறேன்!

    ReplyDelete
  36. //இவன், நான் நடிச்சதுக்கெ அப்படினா, நீங்க நடிக்க ஆரம்பிச்சா? அந்த கொடுமையை கொஞ்சம் நினைச்சுப்பாருங்க!//

    அதுக்கு பதில்தான் என் பதிவில சொல்லி இருக்கிறேனே... இருந்தாலும் திரும்ப

    நீங்க நடிச்சா வருண் அந்த படத்த பார்ப்பேன் என்னு சொல்லி இருக்காரில்ல... அதே மாதிரி நான் நடிச்சா எப்படியும் இப்ப இருக்குற கணக்குப்படி ஒரு 7 இல்லாட்டி 8 பொண்ணுங்களாவது பார்க்கும்..... இல்லாட் சிம்பு மாதிரி படத்த ஓடவைப்போமில்ல....ஹி ஹி ஹி ஹி
    அட இந்த உலகம் தல J.K.ரித்தீஷ் நடிச்சத பாக்குது நான் நடிச்சா பார்க்காதா??

    ReplyDelete
  37. //நீங்க நடிச்சா வருண் அந்த படத்த பார்ப்பேன் என்னு சொல்லி இருக்காரில்ல... அதே மாதிரி நான் நடிச்சா எப்படியும் இப்ப இருக்குற கணக்குப்படி ஒரு 7 இல்லாட்டி 8 பொண்ணுங்களாவது பார்க்கும்..... இல்லாட் சிம்பு மாதிரி படத்த ஓடவைப்போமில்ல....ஹி ஹி ஹி ஹி
    அட இந்த உலகம் தல J.K.ரித்தீஷ் நடிச்சத பாக்குது நான் நடிச்சா பார்க்காதா??
    //

    இதுக்கும் உங்க ப்ளாகில் வந்து பதில் சொல்லியாச்சு. நீங்க நடிச்சா உங்க கேர்ள் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கேர்ள் எனிமீஸ் ஆகிடுவாங்க. வேண்டாம் விஷப்பரீட்சை!

    ReplyDelete
  38. //அதெல்லாம் மன்னிக்க முடியாது.//

    அடக்கடவுளே

    //சரி அடுத்த பதிவிலும் உங்களை இழுக்கலாமா என்று யோசிக்கிறேன்!//

    டேய் இவன் எஸ் ஆகுடா.....

    ReplyDelete
  39. //இதுக்கும் உங்க ப்ளாகில் வந்து பதில் சொல்லியாச்சு. நீங்க நடிச்சா உங்க கேர்ள் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கேர்ள் எனிமீஸ் ஆகிடுவாங்க. வேண்டாம் விஷப்பரீட்சை!//

    இதுக்கு பதில் இப்பத்தான் போட்டுட்டு வாரேன்....
    இருந்தாலும் இங்கையும் ஒருதடவை

    அட அந்த எண்ணிக்கையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்கா நாளைக்கே கோடம்பாக்கத்தில ஒரு படத்துக்கு பூஜை.... படம் வந்தாபிறகு இந்த கட்அவுட், பாலபிஷேகம் எல்லாம் வேணாம் இப்பவே சொல்லீட்டேன்
    ஹி ஹி ஹி ஹி ஹி

    ReplyDelete
  40. //டேய் இவன் எஸ் ஆகுடா.....//

    மனசுல அந்த பயம் இருக்கட்டும்.

    ReplyDelete
  41. //அட அந்த எண்ணிக்கையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்கா நாளைக்கே கோடம்பாக்கத்தில ஒரு படத்துக்கு பூஜை.... படம் வந்தாபிறகு இந்த கட்அவுட், பாலபிஷேகம் எல்லாம் வேணாம் இப்பவே சொல்லீட்டேன்
    ஹி ஹி ஹி ஹி ஹி
    //

    உங்களுக்கு 'மொக்கை மன்னர்' என்ற பட்டமளிக்கலாமா என்று யோசிக்கிறேன்.

    ReplyDelete
  42. //மனசுல அந்த பயம் இருக்கட்டும்.//

    சரிங்கக்கா

    ReplyDelete
  43. //உங்களுக்கு 'மொக்கை மன்னர்' என்ற பட்டமளிக்கலாமா என்று யோசிக்கிறேன்.///

    அந்தளவுக்கா மொக்கை போடுறேன்?? அதுதான் வீட்டில உள்ள பசங்க என்னோட பேச பயப்படுறானுங்களோ??

    ReplyDelete
  44. //அந்தளவுக்கா மொக்கை போடுறேன்?? அதுதான் வீட்டில உள்ள பசங்க என்னோட பேச பயப்படுறானுங்களோ??//

    இன்னும் கொஞ்சம் கூட மொக்கையை இம்ப்ரூவ் பண்ணலாம், இண்டென்சிட்டி அதிகமாக்கலாம்.

    ReplyDelete
  45. //இன்னும் கொஞ்சம் கூட மொக்கையை இம்ப்ரூவ் பண்ணலாம், இண்டென்சிட்டி அதிகமாக்கலாம்.//

    முடிஞ்சளவு try பண்ணுறேன்

    ReplyDelete
  46. //முடிஞ்சளவு try பண்ணுறேன்//

    பண்ணுங்க. கவிதாயினி ராப் அவர்களிடம் கூட சில ஐடியாஸ் கேக்கலாம்.

    ReplyDelete
  47. //பண்ணுங்க. கவிதாயினி ராப் அவர்களிடம் கூட சில ஐடியாஸ் கேக்கலாம்.//

    அட ஆமா இல்ல கவிதாயினி ராப் நீங்க எங்க இருக்கீங்க??

    ReplyDelete
  48. //அட ஆமா இல்ல கவிதாயினி ராப் நீங்க எங்க இருக்கீங்க??//

    ப்ரெஞ்சுக்காரர்களிடம் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், உலகநாயகனைப்பற்றி எல்லாம் விவாதம் நடத்திட்டு இருப்பாங்க, சீக்கிரம் வந்துடுவாங்க.

    ReplyDelete
  49. //ப்ரெஞ்சுக்காரர்களிடம் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், உலகநாயகனைப்பற்றி எல்லாம் விவாதம் நடத்திட்டு இருப்பாங்க, சீக்கிரம் வந்துடுவாங்க.//

    ஹும் அவங்களுக்கு இதே வேலையாப்போச்சுது..... பாவங்க்க பிரெஞ்சுக்காரங்க

    ReplyDelete
  50. //ஹும் அவங்களுக்கு இதே வேலையாப்போச்சுது..... பாவங்க்க பிரெஞ்சுக்காரங்க//

    சாரி சொல்ல மறந்துட்டேன், கற்பு கருத்துக்களில் இன்று கொஞ்சம் சீரியஸ் ஆகிட்டாங்க.

    ReplyDelete
  51. //நீங்கள் ப்ளாகராக பதிந்திருந்தால் நான் உங்க ப்ளாக்குக்கு வந்து கஷ்டப்பட்டு தேடி தேடி எதையாவது பாராட்ட கண்டுபிடித்திருப்பேன். மிஸ் பண்ணிட்டீங்களே!
    //

    இப்படித்தான் நீங்க பாராட்டறீங்களா ??
    இவ்வளவு நாள் தெரியாம போச்சே ??

    இதுதான் போட்டு வாங்கறதா ??

    :-))

    ReplyDelete
  52. //அன்புள்ள அனானி அண்ணா,

    எங்களுக்காக கஷ்டப்பட்டு பேக்க்ரவுண்ட் வாய்ஸ் கொடுத்ததற்கு நன்றி. //

    நாமக்கல் சிபி மேல எனக்கு சந்தேகமா இருக்கு...:-)))

    ReplyDelete
  53. //இப்படித்தான் நீங்க பாராட்டறீங்களா ??
    இவ்வளவு நாள் தெரியாம போச்சே ??

    இதுதான் போட்டு வாங்கறதா ??//

    சே சே உங்களை எல்லாம் நிஜமா தான் பாராட்டுவேன், சொன்னா நம்புங்க

    ReplyDelete
  54. //நாமக்கல் சிபி மேல எனக்கு சந்தேகமா இருக்கு...:-)))//

    அனானி ப்ரதர் நம்ம தமிழனாம்.

    ReplyDelete
  55. //வலையுலக ஆண் பதிவர்களுக்கு ஏதோ என்னாலான சிறு உதவியாக இந்த பதிவு.//

    இது too much flirting ....:-))

    இத follow பண்ணுனா
    தமிழ் படத்துல வர்ற அரை லூசு
    பொண்ணுக வேணும்னா மயங்கும்..

    அறிவான பொண்ணுக
    "தாங்கமுடியலியே சாமி!!" அப்படினு சொல்லிருச்சுன்னா ??

    :-))

    ReplyDelete
  56. //அறிவான பொண்ணுக
    "தாங்கமுடியலியே சாமி!!" அப்படினு சொல்லிருச்சுன்னா ??//

    சொல்லாது. நம்ம லதானந்த சித்தர் சொல்லி இருக்கார், அறிவான பெண்கள் ஓரிரண்டு தான் இருக்குமாம். மற்றதெல்லாம் அரை அல்ல, முழு லூசாம். So what are the chances of you landing up with a smart girl? very very slim. ப்ராபப்ளிட்டிப்படி பார்த்தால் உங்களுக்கு சான்ஸ் ப்ரைட்டா இருக்கு. :) :)

    ReplyDelete
  57. நான் இப்படி படிச்சுகிட்டனுங்க..

    The chances of you landing up with a smart girl &slim, ப்ராபப்ளிட்டிப்படி பார்த்தால் உங்களுக்கு சான்ஸ் ப்ரைட்டா இருக்கு.

    தேங்க்ஸ்ங்க...

    ReplyDelete
  58. //The chances of you landing up with a smart girl &slim, ப்ராபப்ளிட்டிப்படி பார்த்தால் உங்களுக்கு சான்ஸ் ப்ரைட்டா இருக்கு.

    தேங்க்ஸ்ங்க...
    //

    :) :)
    மூளைக்கு என்ன விருப்பமோ அதை தான் கண்கள் படிக்குமாம்.

    ReplyDelete
  59. /
    நாமக்கல் சிபி said...

    தமிழன் வந்திருக்காருன்னா நல்ல பதிவாத்தான் இருக்கணும்!
    /

    LOL

    ROTFL

    ReplyDelete
  60. //LOL

    ROTFL//
    பார்த்து சிவா, அடிப்படப்போகுது. :):)

    ReplyDelete