Tuesday, October 14, 2008

இந்த வார பூச்செண்டு: திரு. புதுகை அப்துல்லா




கயல்விழிக்கு வேறு வேலையே கிடையாதா? என்று அனைவரும் அலுத்துக்கொள்ளும் முன்பு ஒன்று தெரிவித்துக்கொள்கிறேன், நம் அனைவரிடமும் இப்படி ஏதாவது ஒரு விட்டொழிக்க வேண்டிய பழக்கம் இருக்கிறது, ஆனால் நமக்கு அந்தப் பழக்கத்தை விடுவதற்கான மன உறுதி இருக்கிறதா? உதாரணத்துக்கு, எனக்கு கூட கனவுலகத்திலேயே கார் ஓட்டும் கெட்ட பழக்கம் இருக்கிறது. சில நேரம் சேர வேண்டிய இடம் வந்த பிறகு, "இந்த இடத்துக்கு எப்படி வந்தோம்?" என்று கூட நினைத்திருக்கிறேன்.இப்படி கவனச்சிதறலோடு வாகனத்தை ஓட்டி ஒரு நாள் நான் மட்டுமில்லாது மற்றவர்களுக்கும் தொல்லை கொடுப்பது மாதிரியான விபத்தில் சிக்கப்போவது உறுதி!

அமரிக்கா வந்து நான் தெரிந்துக்கொண்ட ஒரு விஷயம், இங்கே அமரிக்கர்களுக்கு, அவர்கள் மேல் மற்றவர்கள் அதிகமான அக்கறையோ அல்லது உரிமையோ எடுத்துக்கொள்வது பிடிக்கவில்லை. அவர்களுடைய ப்ரைவசி பாதிக்கிறதாம், அப்படி செய்வது ரொம்ப அநாகரீகமாம், அஃபெண்ட் ஆகிவிடுகிறார்களாம்! - இந்த பாடத்தை சீக்கிரமே அழுத்தம் திருத்தமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு வந்தது.

எனக்கு யூனிவர்சிட்டியில் ஒரு அமரிக்க தோழி இருந்தார், அவருக்கு அனரெக்சியாவோ, எந்த எழவோ, என்ற நோய் இருந்தது(அது எனக்கு சத்தியமா தெரியாது). அந்தப்பெண் காலையில் இருந்து மாலை வரை சாப்பிட்ட மாதிரியே நினைவில்லை. நான் சாப்பிடும் போது சும்மா பக்கத்தில் உட்கார்ந்து கம்பனி கொடுப்பார். சில நாட்கள் பொறுமையாக இருந்துப்பார்த்தேன். பிறகு பொறுக்க முடியாமல், "கொஞ்சமாவது சாப்பிடு, இப்படி இருந்தால் உடம்புக்கு என்ன ஆகும்? கொஞ்சம் சாலடாவது சாப்பிடு" என்று தெரியாமல் சொல்லிவிட்டேன். உடனே அவளுக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது, "Please try to be my friend,not my Mom. You are offending me!(தயவுசெய்து என் தோழியாக இருக்க முயற்சி செய், அம்மாவாக இல்லை. நீ என்னை அஃபெண்ட் பண்ணுகிறாய்!). தெரிஞ்சவங்க சொல்லுங்க, "அஃபெண்ட் பண்ணுவது" என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன? நான் ரொம்ப நாளாகவே யோசித்த விஷயம் இது!

எனவே இப்போதெல்லாம் யாராவது என்னிடம் "நாளைக்கு நான் சாகப்போகிறேன்" என்று சொன்னாலும் என் இயல்பான பதட்டத்தை மறைத்துக்கொண்டு, "அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி, மறக்காமல் தகவல் சொல்லுங்க, இல்லைனா ஈமெயில் அனுப்புங்க. உங்க இறுதிச்சடங்கில் கண்டிப்பா கலந்துக்கறேன்" என்று சொல்லும் அளவுக்கு தேறிவிட்டேன்.

இந்தியர்களும் இப்போதெல்லாம் அதே அமரிக்க கலாச்சாரத்துக்கு மாறிவிட்டாலும், எனக்கு அவர்களிடமும் அப்படியே தொடர்ந்து நடிக்க மனம் வருவதில்லை. இந்தியக்கலாச்சாரத்தில் மாற்றங்கள் அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறேன், அது ஒரு அப்டேட் அளவுக்கு இருக்கலாமே தவிர, முழுக்க முழுக்க நம் அடையாளத்தை தொலைக்கத்தேவையில்லை என்பது என் தாழ்மையான எண்ணம்.

அக்கறைக்காக மட்டுமில்லை, அவர்களுடைய முயற்சிக்காகவும், சமுதாயப்பொறுப்புணர்வுக்காகவும் சேர்த்து என்னிடம் "புகையை விட்டுவிட்டேன்" என்று தெரிவிப்பவர்களுக்கு ஒரு சப்போர்ட்டுக்காக வாழ்த்து பதிவு போடலாம் என்று நினைக்கிறேன். They deserve that much atleast!

இந்த வாரம் பாராட்டுக்குரியவர் திரு புதுகை அப்துல்லா அவர்கள். நான் பார்த்தவரைக்கும் மற்றவர்களை புண்படுத்தாமல் நாகரீகமாகவும், மனிதாபிமானத்துடனும் எழுதும் மிகச்சில பதிவர்களில் இவரும் ஒருவர். சமீபத்தில் பின்னூட்டம் வாயிலாக கீழ்கண்ட ஒரு முக்கியமான செய்தியை தெரிவித்திருந்தார்.

"கயல்விழி நான் நிறுத்திவிட்டேன் இந்த ரம்ஜான் நோன்பு இருந்ததில் இருந்து :))"


அவருக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் :) You go guy!!!

60 comments:

  1. நிச்சயம் வாழ்த்த வேண்டிய விஷயம் தான். அடுத்த யாரு இந்த பழக்கத்தை விடறா பாக்கலாம்.

    அண்ணே, அதை அப்படியே தொடருங்க. தப்பி தவறி எந்த நேரத்துலயும் திரும்ப முயற்சி பண்ணிடாதீங்க.

    கயல், இதுக்காக தான் நான் இப்போ எல்லாம் பேசறதே இல்லை. அப்படியே பேசினாலும் ஒரு அறிவிப்பு கொடுத்திட்டு தான் பேசுறது. :(

    ReplyDelete
  2. மீ த பர்ஸ்ட் யா ...

    ராப் யா, வாட் ஆச்சு யா ??

    ReplyDelete
  3. நன்றி SK. :)

    //கயல், இதுக்காக தான் நான் இப்போ எல்லாம் பேசறதே இல்லை. அப்படியே பேசினாலும் ஒரு அறிவிப்பு கொடுத்திட்டு தான் பேசுறது. :(
    //

    உங்களுக்கும் என்னைப்போலவே அனுபவம் பேசுது போலிருக்கு :) :)

    ReplyDelete
  4. அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்.

    கயல், அப்பறம் இந்த வார குட்டு யாருக்கு? :-))))

    தப்பா எடுத்துக்காதிங்க. சும்மா தமாஷுக்கு.

    ReplyDelete
  5. அண்ணாச்சிக்கு என்னோட பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  6. அவருக்கு வரும் பூச்செண்டுகளை வைத்துக் கொள்ளவே அவருக்கு இடம் பத்தாது. அவ்வளவு நல்ல காரியங்கள் செய்து வருகிறார்.

    சுய கொள்ளியைத் தவிர்த்தது நெஜமாவே பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  7. நீங்கள் நீட்டும் செண்டை நானும் ஒரு கை பிடித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்கள் அப்துல்லா!

    சமீபத்திய விகடனில் புகை பற்றி படித்த கட்டுரையின் பாதிப்பில் பிறந்த கவிதை ஒன்றை அடுத்த வாரம் பதிவிட இருக்கிறேன். அதற்கு பூச்செண்டு வராவிட்டாலும் குட்டு விழுமோன்னு இன்னும் ஒரு ஐயம் இருக்கு:(!

    ReplyDelete
  8. நல்ல காரியம் செய்தீர்கள். வாழ்த்துக்கள்

    (வாழ்த்தியவர், வாழ்த்தப்பட்டவர் இருவருக்கும்)

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்... விட சொன்னதற்காக கயலுக்கும் விட்டொழித்ததற்காக அப்துல்லாவுக்கும்...

    ReplyDelete
  10. பூச்செண்டிற்கு மிக மிக நன்றி கயல்விழி. அப்புறம் இன்னைக்கு காலையில திரும்ப ஆரமிக்கலாமான்னு ஓரு யோசனை ஓடுச்சு... இப்ப பதிவுல போட்டு எல்லாருக்கும் தெரிய வச்சுட்டீங்க.அதுனாலயே விட்டதை தொடர்ந்து கண்டினியூ பண்ண வேண்டியதுதான் :)

    ReplyDelete
  11. அதற்கு பூச்செண்டு வராவிட்டாலும் குட்டு விழுமோன்னு இன்னும் ஒரு ஐயம் இருக்கு:(!
    //

    ஐயமா இருக்கா? நீங்க வெளியிடுங்க ஜெயமா இருக்கும் :)

    ReplyDelete
  12. திரு புதுகை அப்துல்லா அவர்கள். நான் பார்த்தவரைக்கும் மற்றவர்களை புண்படுத்தாமல் நாகரீகமாகவும், மனிதாபிமானத்துடனும் எழுதும் மிகச்சில பதிவர்களில் இவரும் ஒருவர்.//

    அவன் கல்லூரியில் காலத்தில் இருந்தே அப்படித்தான். பொதுவாக நன்றாக படிக்கும் மாணவர்கள் யாரோடும் சகஜமாக பழக மாட்டார்கள்.அவன் அதிலும் விதிவிலக்கு. அப்புறம் மாப்பிள்ளை பெஞ்ச்ல இருந்து ரேங்க்கெல்லாம் வாங்கி அந்த பெஞ்ச்சோட மானத்தையே கெடுப்பான்.வாழ்த்துகள் மாப்பிள்ளை.

    சிவசுப்ரமணியன்

    ReplyDelete
  13. நன்றி அப்துல்லா. நீங்க சொல்லிட்டீங்களல்லவா? தைரியமா வெளியிடறேன். அப்படியே உங்களது இந்த மன உறுதி என்றும் தொடர்ந்திட என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  14. //இப்போதெல்லாம் யாராவது என்னிடம் "நாளைக்கு நான் சாகப்போகிறேன்" என்று சொன்னாலும் என் இயல்பான பதட்டத்தை மறைத்துக்கொண்டு, "அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி, மறக்காமல் தகவல் சொல்லுங்க, இல்லைனா ஈமெயில் அனுப்புங்க. உங்க இறுதிச்சடங்கில் கண்டிப்பா கலந்துக்கறேன்" என்று சொல்லும் அளவுக்கு தேறிவிட்டேன். //

    :-))))))))))))

    அப்துல்லா இனி சிம்புவோட தம் படம் கூட பார்க்க கூடாது :-). கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் ஒண்ணே ஒண்ணு என்று எங்கேயாவது தொடங்கினீங்க ..மவனே டெர்ரர் ஆகிடுவேன்

    ReplyDelete
  15. அப்துல்லா அண்ணனின் மாற்றம் மகிழ்ச்சியளிக்கின்றது...:)

    ReplyDelete
  16. ///புதுகை.அப்துல்லா said...
    அதற்கு பூச்செண்டு வராவிட்டாலும் குட்டு விழுமோன்னு இன்னும் ஒரு ஐயம் இருக்கு:(!
    //
    ஐயமா இருக்கா? நீங்க வெளியிடுங்க ஜெயமா இருக்கும் :)///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே சொல்லிக்கிறேன்.

    ReplyDelete
  17. அன்புடன் நண்பரே தங்களை ஒரு தொடர் ஓட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
    வந்து கலந்து கொள்ளவும்..
    விவரங்களுக்கு என்னுடைய பதிவை படித்து தெரிந்து கொள்ளவும் (!!!!)

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் புதுகை அப்துல்லா"

    ReplyDelete
  19. நெஜமாவே பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  20. நல்லதொரு முயற்சி வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  21. ***கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் ஒண்ணே ஒண்ணு என்று எங்கேயாவது தொடங்கினீங்க ..மவனே டெர்ரர் ஆகிடுவேன்***

    நிறுத்திவிட்டு திரும்ப ஆரம்பித்தால்,
    10 cigaretteஆ இருந்தது 20 ஆகிவிடும்! கவனம்! LOL!

    ReplyDelete
  22. தொல்லை கொடு,மனதை புண்படுத்து மற்றும் தவறு செய் இப்படி எது வேணுமுனாலும் சொல்லலாம்
    offend க்கு, இன்னும் நிறைய வேண்டும் என்றால் http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp

    வாழ்த்துக்கள் புதுகை அப்துல்லா அவர்களே, வாழ்த்த வகை செய்த உங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் அப்துல்லா.

    வருண் ஒருத்தரு 10 ,20ன்னு பேசராரு அவரு திருட்டு தம்மரா இருப்பாரு போல இருக்கு கயலக்கா. சீக்கிரம் கொட்டோ,பூச்செண்டோ கொடுங்க.

    ReplyDelete
  24. //அவருக்கு வரும் பூச்செண்டுகளை வைத்துக் கொள்ளவே அவருக்கு இடம் பத்தாது. அவ்வளவு நல்ல காரியங்கள் செய்து வருகிறார்.

    சுய கொள்ளியைத் தவிர்த்தது நெஜமாவே பாராட்டுக்குரியது.//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  25. குடுகுடுப்பை:

    நான் புகைப்பிடிப்பது இல்லை! :)

    எனக்குத்தெரிய நிறையப்பேர் நிறுத்திவிட்டு திரும்ப ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க.

    ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோங்க, இது அடிக்சன்!

    ReplyDelete
  26. offend - படுத்தறது?
    அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்.
    -- McChamy

    ReplyDelete
  27. //அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்.

    கயல், அப்பறம் இந்த வார குட்டு யாருக்கு? :-))))

    தப்பா எடுத்துக்காதிங்க. சும்மா தமாஷுக்கு.

    //

    வாங்க அனானி :) இந்த வாரக்குட்டா? ஏன் நான் நல்லா இருக்கிறது பிடிக்கலயா?ஏற்கெனெவே எனக்கு "நீங்க தமிழச்சியா, இந்திக்கார்ச்சியா" என்றெல்லாம் பின்னூட்டம் எழுதுகிறார்கள். இன்னும் குட்டு வைத்தால் அவ்வளவு தான்.

    நல்லா தானே எழுதி இருக்கீங்க? அப்புறம் ஏன் அனாமிமஸா? ஒரு வேளை ப்ளீச்சிங் பவுடர் எழுதியது போல நீங்களும் ஒரு பிரபல பதிவரோ? புது பதிவர்களுக்கு கமெண்ட் எழுதினால் இமேஜ் பாதிக்கும் என்று அனானிமஸா எழுதுகிறீர்களோ? :) JK.

    ReplyDelete
  28. வாங்க விஜய ஆனந்த்

    வாங்க பரிசல்

    "அவருக்கு வரும் பூச்செண்டுகளை வைத்துக் கொள்ளவே அவருக்கு இடம் பத்தாது. அவ்வளவு நல்ல காரியங்கள் செய்து வருகிறார்"

    அப்படியா? சரி என்னுடைய பூச்செண்டும் ஒரு மூலையில் இருக்கட்டும் :)

    ReplyDelete
  29. வருக ராமலக்ஷ்மி

    //சமீபத்திய விகடனில் புகை பற்றி படித்த கட்டுரையின் பாதிப்பில் பிறந்த கவிதை ஒன்றை அடுத்த வாரம் பதிவிட இருக்கிறேன். அதற்கு பூச்செண்டு வராவிட்டாலும் குட்டு விழுமோன்னு இன்னும் ஒரு ஐயம் இருக்கு:(!//

    பயப்படாமல் எழுதுங்க, எங்களுடைய சப்போர்ட் நிச்சயம் உண்டு. :)

    ReplyDelete
  30. வாங்க மருத்துவர் புரூனோ.

    ஹாய் வெண்பூ, வீட்டில் குழந்தை எப்படி இருக்கு?

    ReplyDelete
  31. //பூச்செண்டிற்கு மிக மிக நன்றி கயல்விழி. அப்புறம் இன்னைக்கு காலையில திரும்ப ஆரமிக்கலாமான்னு ஓரு யோசனை ஓடுச்சு... இப்ப பதிவுல போட்டு எல்லாருக்கும் தெரிய வச்சுட்டீங்க.அதுனாலயே விட்டதை தொடர்ந்து கண்டினியூ பண்ண வேண்டியதுதான் :)//

    வாங்க அப்துல்லா. காலையில் ஆரம்பிக்கலாம் என்றா? அதுக்கு தான் இப்படி எழுதுவது, இனிமேல் உங்களுக்கு திரும்ப புகைக்க கூடாது ஒரு ப்ரெஷெர் இருக்கும். :)

    கூடவே நிக்கோட்டின் Gum போல எதையாவது உபயோகிப்பது உதவும் இல்லையா?

    ReplyDelete
  32. //அவன் கல்லூரியில் காலத்தில் இருந்தே அப்படித்தான். பொதுவாக நன்றாக படிக்கும் மாணவர்கள் யாரோடும் சகஜமாக பழக மாட்டார்கள்.அவன் அதிலும் விதிவிலக்கு. அப்புறம் மாப்பிள்ளை பெஞ்ச்ல இருந்து ரேங்க்கெல்லாம் வாங்கி அந்த பெஞ்ச்சோட மானத்தையே கெடுப்பான்.வாழ்த்துகள் மாப்பிள்ளை.

    சிவசுப்ரமணியன்
    //

    வாங்க சிவசுப்ரமணியன். மாப்பிளை பெஞ்ச் என்றால்? கடைசி வரிசையா?

    வாங்க தமிழ்ப்பிரியன்

    ReplyDelete
  33. வாங்க அணிமா மற்றும் கடையம் ஆனந்த் :)

    ReplyDelete
  34. வாங்க தங்கராசா ஜீவராஜ் :)

    //நிறுத்திவிட்டு திரும்ப ஆரம்பித்தால்,
    10 cigaretteஆ இருந்தது 20 ஆகிவிடும்! கவனம்! LOL!//

    வருண் நீங்க எழுதறதைப்பார்த்தால் சந்தேகமா இருக்கே? :(

    ReplyDelete
  35. //தொல்லை கொடு,மனதை புண்படுத்து மற்றும் தவறு செய் இப்படி எது வேணுமுனாலும் சொல்லலாம்
    offend க்கு, இன்னும் நிறைய வேண்டும் என்றால் //

    வாங்க நசரேயன் :)

    தொல்லைக்கொடு : Bothering me

    மனதைப்புண்படுத்து: Hurting me.

    இப்படி தனித்தனியாக வார்த்தைகளை வைத்து உபயோகிக்கிறார்கள். இருந்தாலும் அடிக்கடி இந்த "offend" வார்த்தையையும் உபயோகிக்கிறார்கள். அதற்கு தமிழில் எப்படி சொல்வது?

    வாங்க குடுகுடுப்பை :)

    //வருண் ஒருத்தரு 10 ,20ன்னு பேசராரு அவரு திருட்டு தம்மரா இருப்பாரு போல இருக்கு கயலக்கா. சீக்கிரம் கொட்டோ,பூச்செண்டோ கொடுங்க.//

    ஆமாம் :(

    ReplyDelete
  36. வாங்க மொக்கைச்சாமி :)

    ReplyDelete
  37. //அப்துல்லா இனி சிம்புவோட தம் படம் கூட பார்க்க கூடாது :-). கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் ஒண்ணே ஒண்ணு என்று எங்கேயாவது தொடங்கினீங்க ..மவனே டெர்ரர் ஆகிடுவேன்
    //

    வருக கிரி.

    டெரர் ஆகிடுவீங்களா???

    ReplyDelete
  38. குடுகுடுப்பை!

    கடைசில என்னை திருட்டு தம் ஆக்கி விட்டீங்க! LOL!

    ReplyDelete
  39. உண்மையில் புகை பிடிக்கலாம் என்று அப்துல்லாவிற்கு தோன்றினாலும் அது முடியாதவாறு வாழ்த்து சொல்லி மடக்கி விட்டீர்கள்!! வாழ்த்துக்கள்!!

    //அமரிக்கா வந்து நான் தெரிந்துக்கொண்ட ஒரு விஷயம், இங்கே அமரிக்கர்களுக்கு, அவர்கள் மேல் மற்றவர்கள் அதிகமான அக்கறையோ அல்லது உரிமையோ எடுத்துக்கொள்வது பிடிக்கவில்லை. அவர்களுடைய ப்ரைவசி பாதிக்கிறதாம், அப்படி செய்வது ரொம்ப அநாகரீகமாம், அஃபெண்ட் ஆகிவிடுகிறார்களாம்! - இந்த பாடத்தை சீக்கிரமே அழுத்தம் திருத்தமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு வந்தது.//

    ஒரே ஒரு நிகழ்வை வைத்து அனைத்து அமெரிக்கர்களும் அவ்வாறே என்று முடிவு செய்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்து பல அமெரிக்கர்கள் அக்கறையோடும் உரிமையோடும் பழகுகிறார்கள். (முக்கால்வாசி afro americans இந்த வகை). நான் முன்பு வேலை செய்த இடத்தில் இருந்தவர்கள் இன்னும் உரிமையோடு பல விஷயங்கள் கேட்கிறார்கள்; பகிர்ந்து கொள்கிறார்கள்.

    ReplyDelete
  40. // வருண் said...

    குடுகுடுப்பை!

    கடைசில என்னை திருட்டு தம் ஆக்கி விட்டீங்க! LOL!//

    நீங்க எப்பயுமே திருட்டு தம்முதானே, நான் எங்க ஆக்கினேன்

    ReplyDelete
  41. //
    நான் சாப்பிடும் போது சும்மா பக்கத்தில் உட்கார்ந்து கம்பனி கொடுப்பார். சில நாட்கள் பொறுமையாக இருந்துப்பார்த்தேன். பிறகு பொறுக்க முடியாமல், "கொஞ்சமாவது சாப்பிடு, இப்படி இருந்தால் உடம்புக்கு என்ன ஆகும்? கொஞ்சம் சாலடாவது சாப்பிடு" என்று தெரியாமல் சொல்லிவிட்டேன். உடனே அவளுக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது, "Please try to be my friend,not my Mom. You are offending me!(தயவுசெய்து என் தோழியாக இருக்க முயற்சி செய், அம்மாவாக இல்லை. நீ என்னை அஃபெண்ட் பண்ணுகிறாய்!). தெரிஞ்சவங்க சொல்லுங்க, "அஃபெண்ட் பண்ணுவது" என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன? நான் ரொம்ப நாளாகவே யோசித்த விஷயம் இது!
    //

    Offend...May be annoying?

    //
    எனவே இப்போதெல்லாம் யாராவது என்னிடம் "நாளைக்கு நான் சாகப்போகிறேன்" என்று சொன்னாலும் என் இயல்பான பதட்டத்தை மறைத்துக்கொண்டு, "அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி, மறக்காமல் தகவல் சொல்லுங்க, இல்லைனா ஈமெயில் அனுப்புங்க. உங்க இறுதிச்சடங்கில் கண்டிப்பா கலந்துக்கறேன்" என்று சொல்லும் அளவுக்கு தேறிவிட்டேன்.
    //

    நீங்க ஃபேஸை கொஞ்சம் சீரியசா வச்சிக்கிட்டு சொல்லீட்டீங்க போல. "இப்பிடியே இருந்தா நீ இன்னும் ரெண்டு நாள்ல சாகப் போற" அப்பிடின்னு சீரியசான மேட்டரை சிரிக்கிற மாதிரி சொல்லிப் பாருங்க. வொர்க் அவுட் ஆகும். இங்கெல்லாம் நல்லா வொர்க் அவுட் ஆகுது.

    //
    அக்கறைக்காக மட்டுமில்லை, அவர்களுடைய முயற்சிக்காகவும், சமுதாயப்பொறுப்புணர்வுக்காகவும் சேர்த்து என்னிடம் "புகையை விட்டுவிட்டேன்" என்று தெரிவிப்பவர்களுக்கு ஒரு சப்போர்ட்டுக்காக வாழ்த்து பதிவு போடலாம் என்று நினைக்கிறேன். They deserve that much atleast!
    //

    Sure. They do. நல்ல விஷயம், கன்டினியூ பண்ணுங்க!

    ReplyDelete
  42. கயல்,

    //வாங்க அனானி :) இந்த வாரக்குட்டா? ஏன் நான் நல்லா இருக்கிறது பிடிக்கலயா?ஏற்கெனெவே எனக்கு "நீங்க தமிழச்சியா, இந்திக்கார்ச்சியா" என்றெல்லாம் பின்னூட்டம் எழுதுகிறார்கள் . இன்னும் குட்டு வைத்தால் அவ்வளவு தான். //

    ஞாநிதான ஒ பக்கங்கள்ல பூச்செண்டு, குட்டு எல்லாம் குடுப்பாரு. அதான் உங்கள
    கலாய்க்க அப்படி கேட்டேன்.

    //நல்லா தானே எழுதி இருக்கீங்க? அப்புறம் ஏன் அனாமிமஸா? ஒரு வேளை ப்ளீச்சிங் பவுடர் எழுதியது போல நீங்களும் ஒரு பிரபல பதிவரோ? புது பதிவர்களுக்கு கமெண்ட் எழுதினால் இமேஜ் பாதிக்கும் என்று அனானிமஸா எழுதுகிறீர்களோ? :) JK.//

    நான் பிரபல பதிவரெல்லாம் இல்லீங்கோ. பதிவரே இல்லைங்க. வேணும்னா வாசகர்னு சொல்லலாம். 2 வருஷமா வலைப்பதிவுகளை வாசிக்கிறேன்.
    அப்பல்லாம் பின்னூட்ட பெட்டிகள் மூடித்தான் இருக்கும். ஏன்னு உங்களுக்கே இப்ப புரிஞ்சிருக்கும். சில பதிவுகள திறந்து படிக்கக் கூட பயம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். அப்பறம் எங்க கமெண்ட் போட? ஆனா இப்ப மாறியிருக்குன்னு தெரியுது. நிறைய பின்னூட்ட பெட்டிகள் திறந்திருக்கு.

    எனக்கும் அனானியா கமெண்ட் போடறது மனசுக்கு பிடிக்கலதான். பதிவுலகத்துல அனானி அப்படிங்கற வார்த்தைக்கு என்ன மதிப்புன்னும் தெரியும். அதனால ஒரு பிளாக்கர் அக்கௌன்ட் தொடங்கலாம்ன்னு நினைக்கிறேன். ஆனா எனக்கு எதையும் தாங்கும் இதயம்மெல்லாம் இல்லைங்க. அதனால ரொம்ப தயக்கமா இருக்கு.

    ReplyDelete
  43. வாழ்த்துக்கள் இருவருக்கும்

    ReplyDelete
  44. //வாழ்த்துக்கள் இருவருக்கும்//
    good initiative....

    ReplyDelete
  45. //"அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி, மறக்காமல் தகவல் சொல்லுங்க, இல்லைனா ஈமெயில் அனுப்புங்க. உங்க இறுதிச்சடங்கில் கண்டிப்பா கலந்துக்கறேன்" என்று சொல்லும் அளவுக்கு தேறிவிட்டேன்.//
    :-):-) nesamaavee ippadithan nadakkuthaa anga...?

    ReplyDelete
  46. அப்துல்லா அண்ணன் கொஞ்சம் ஜாஸ்தி நல்லவர். இவ்ளோ உதவி பண்றார், ஆனா, பேசறச்சே, செம ஜாலியா பேசுவார். இன்னைக்கு sk பதிவை படிச்சீங்களா?

    ReplyDelete
  47. புதுகை அண்ணா

    உங்களின் மேல் இருந்த மரியாதை இன்னும் ஒருபடி உயர்ந்திருக்கிறது.

    கயல் ஒரு பதிவு எவ்வளவு மாற்ற்ம் ஏற்படுத்துகிறது.

    இப்படி ஒரு பதிவை போட்ட உங்களுக்கு என்து பூச்செண்டு.

    ReplyDelete
  48. வாழ்த்துக்கள் அப்துல்லா...

    ReplyDelete
  49. வாங்க வந்தியத்தேவன்,

    நான் கொஞ்சம் சென்சிடிவ் என்பதும் தயக்கத்துக்கு முக்கியமான காரணம். :)

    ReplyDelete
  50. வாங்க அதுசரி

    //நீங்க ஃபேஸை கொஞ்சம் சீரியசா வச்சிக்கிட்டு சொல்லீட்டீங்க போல. "இப்பிடியே இருந்தா நீ இன்னும் ரெண்டு நாள்ல சாகப் போற" அப்பிடின்னு சீரியசான மேட்டரை சிரிக்கிற மாதிரி சொல்லிப் பாருங்க. வொர்க் அவுட் ஆகும். இங்கெல்லாம் நல்லா வொர்க் அவுட் ஆகுது.
    //

    நீங்க சொல்வதும் சரி தான், ஒருவேளை என் கம்யூனிகேஷன் மெதட் கூட தப்பா இருக்கலாம். எனக்கு சும்மா சிரிக்க வராது.

    ReplyDelete
  51. //
    எனக்கும் அனானியா கமெண்ட் போடறது மனசுக்கு பிடிக்கலதான். பதிவுலகத்துல அனானி அப்படிங்கற வார்த்தைக்கு என்ன மதிப்புன்னும் தெரியும். அதனால ஒரு பிளாக்கர் அக்கௌன்ட் தொடங்கலாம்ன்னு நினைக்கிறேன். ஆனா எனக்கு எதையும் தாங்கும் இதயம்மெல்லாம் இல்லைங்க. அதனால ரொம்ப தயக்கமா இருக்கு.
    //

    அனானி,

    இங்கே அனானிமஸா சிலர் பண்ணிய கலாட்டாவினால் அனானி என்றாலே சந்தேகத்துடன் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். :) வருகைக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  52. //வாழ்த்துக்கள்... விட சொன்னதற்காக கயலுக்கும் விட்டொழித்ததற்காக அப்துல்லாவுக்கும்.//

    நன்றி வெண்பூ :)

    நன்றி முரளிக்கண்ணன்

    நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  53. //:-):-) nesamaavee ippadithan nadakkuthaa anga...?//

    இல்லை தமிழ்ப்பறவை, அது சும்மா மிகைப்படுத்துதல் :) :)

    நன்றி ராப் :)இன்னும் படிக்கல, படிக்கறேன்.

    ReplyDelete
  54. பூச்செண்டுக்கு மிக்க நன்றி அமிர்தவர்ஷினி அம்மா. :)

    வாங்க இவன்,வந்துப்பார்க்கிறேன்

    ReplyDelete
  55. //
    கயல்விழி said...
    வாங்க அதுசரி

    //நீங்க ஃபேஸை கொஞ்சம் சீரியசா வச்சிக்கிட்டு சொல்லீட்டீங்க போல. "இப்பிடியே இருந்தா நீ இன்னும் ரெண்டு நாள்ல சாகப் போற" அப்பிடின்னு சீரியசான மேட்டரை சிரிக்கிற மாதிரி சொல்லிப் பாருங்க. வொர்க் அவுட் ஆகும். இங்கெல்லாம் நல்லா வொர்க் அவுட் ஆகுது.
    //

    நீங்க சொல்வதும் சரி தான், ஒருவேளை என் கம்யூனிகேஷன் மெதட் கூட தப்பா இருக்கலாம். எனக்கு சும்மா சிரிக்க வராது.

    //

    ஆஹா, அப்படின்னா எங்க ஊர்ல ரொம்ப கஷ்டம்.. அமெரிக்கால எப்படின்னு எனக்கு தெரியலை. ஆனா, எங்க ஊர்ல எல்லாம் சிரிக்காட்டி, இல்ல ஒன் லைனர்ஸ் இல்லாட்டி பொழைக்க முடியாது..

    நல்ல வேளையா, "நக்கலடித்து வாழ்வது எப்படி"ன்னு எனக்கு தமிழ்நாட்டுலேயே சொல்லிக் கொடுத்துட்டதுனால பிரச்சினை இல்ல :0)

    சிரிக்கிறது ரொம்ப ஈஸி.. இனிமே யார்ட்டனா இங்கிலிஷ்ல‌ பேசுறப்ப, உங்க "Gap"டன் இங்கிலிபீசு பேசுறத நெனச்சிக்கங்க...பிராப்ளம் ஓவரு!

    (அது சரி, உங்க ப்ராஜெக்டெல்லாம் சப்மிட் செஞ்சாச்சா?)

    ReplyDelete
  56. வாழ்த்துக்கள் புதுகை அப்துல்லா!

    ReplyDelete
  57. அப்துல்லாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! தடுமாறிய மனசு பதிவைப்பார்த்து நிலையாக நின்றதுக்கும் இன்னொரு பூச்செண்டு கொடுக்கலாமோ? ராமலஷ்மியின் கவிதை படித்துவிட்டு மனதை இன்னும் ஆழமாக நிலை நிறுத்த வாழ்த்துக்கள்!!!
    நல்ல முயற்சி கயல்விழி!!

    ReplyDelete
  58. அப்துலை வாழ்த்துவதில் உங்கள் அனைவரோடு நானும் இணைந்துகொள்கிறேன் கயல்.! வாழ்த்துகள்.!

    ReplyDelete
  59. விட்டொழித்த அப்துல்லாவுக்கும், விடத்தூண்டிய உங்களுக்கும் வாழ்த்துக்கள் கயல்.

    ReplyDelete
  60. அப்துல்லாண்ணே... பொய்தான சொன்னீங்க??

    ReplyDelete