Wednesday, October 8, 2008

புகைப்பழக்கம் : ஒரு புகைப்பிடிக்காதவளின் கண்ணோட்டம்!

டிஸ்கி: எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை என்பதால், என்னுடைய கருத்துக்கள் ஒரு பக்க சார்புடையதாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன், மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்கிறேன்.



புகைக்கும் எனக்கும் சிறுவயதில் இருந்தே ஒத்துவரவில்லை, எல்லாம் புகைப்பவர்கள் மேல் இருந்து வரும் அந்த பயங்கரமான வாடையே காரணம். என்னுடைய சிறு வயதில் அப்பாவுக்கு இந்த புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது, ஆனால் வீட்டுக்குள் இல்லை. அவர் வேலையில் இருந்து வரும் போதே நான் ஓடிப்போய் வரவேற்பது வழக்கம், அப்போதெல்லாம் 'குப்'பென்ற நெடி எனக்கு வயிற்றை புரட்டும். அப்பா என் எதிரில் புகைப்பதில்லை என்பதால் அது என்னவென்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால் போகப்போக அவர் புகைகிறார், அவர் மேலிருந்து வருவது சிகரெட் நாற்றம் என்பது புரிந்துவிட்டது. அவரிடம் ஒரு நாள் "நீங்கள் இனிமேல் சிகரெட் பிடித்தீர்கள் என்றால் இனிமேல் உங்க மடியில் அல்லது பக்கத்தில் கூட உட்கார மாட்டேன்" என்று திட்டவட்டமாக அறிவித்துவிட, அதோடு புகைப்பழக்கத்தை அடியோடு அவர் நிறுத்தி 20 வருடம் ஆகிறது.

அதற்கு பிறகு புகைப்பிடித்தலைப்பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை, 'நாற்றம் பிடிக்கவில்லை' என்பதைத்தவிர புகைப்பழக்கத்தைப்பற்றி கம்ப்ளெயிண்ட் பண்ண எனக்கு வேறெதுவும் இல்லை. பின்னர் வளர்ந்த பிறகு ஒரு நாள் ஒரு அமரிக்க மருத்துவ வார இதழில், செக்கண்ட் ஹாண்ட் ஸ்மோக்கிங் பற்றிய ஒரு கட்டுரையைப்படித்து விழிப்புணர்வு ஏற்பட்டது. "நாம் புகைப்பிடிக்கவில்லை என்றால் கூட நமக்கு ஆபத்தா?" வியப்பாக இருந்தது. மேலும் சில புத்தகங்களை படித்ததில் அதிர்ச்சி ரக தகவல்கள்!

ஆதி கால மனிதர்களுக்கு தற்செயலாக புகையிலைச்செடிகளைப்பற்றிய விவரம் தெரியவந்தது. செடியில் பச்சையாக இருப்பதை விட, காய வைத்து எரிக்கும் போது நிக்கோட்டின் தரும் போதை பல மடங்கு அதிகரிப்பதை கண்டுபிடித்தார்கள். நாகரீகம் அடைந்தவுடன் பைப் வழியாக புகைக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக உலகமெங்கும் பரவத்தொடங்கியது.அப்படி பரவியது புகையிலை மட்டுமல்ல, கஞ்சா போன்ற போதை செடிகளும் தான். மற்ற போதை பொருட்களுக்கும் புகையிலைக்கும் ஒரு அடிப்படை வித்யாசம் என்னவென்றால், மற்ற போதைப்பொருட்கள் போல செயல் திறனை புகையிலை வெளிப்படையாக பாதிக்கவில்லை.

இது போதாதா? புகைக்கும் வழக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதிலும் தற்போது கிடைக்கும் மார்டன் சிகரெட்டுகள் கிடைக்கத்தொடங்கியதும், காட்டுத்தீ போல இந்த புகைப்பழக்கம் பரவத்தொடங்கியது. ஐரோப்பியர்களிடம், சீனர்களிடமும் இன்றளவும் புகைக்கும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. "பெண்கள் புகைத்தால் உடல் இளைக்கலாம்" என்ற புரளியை சிகரெட் கம்பனிகள் கிளப்பிவிட்டு விட, பெண்களையும் இந்த தீயப்பழக்கம் தொற்றிக்கொண்டது."வெர்ஜினியா ஸ்லிம்ஸ்" போன்ற பெண்களுக்கான சிகரெட்டுகள் 1960துகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போதும் கூட சில சிகரெட் விளம்பரங்களில் ஒரு அழகான பெண் மாடல் ஸ்டைலாக புகைபிடிப்பது போல இருக்கும் படத்தை சிலர் பார்த்திருக்கலாம். புகைக்கும் பெண்கள் செக்ஸியாக கருத்தப்பட்டார்கள். புகைப்பழக்கத்துக்கு செக்ஸ் மற்றும் ஸ்டைல் வர்ணம் பூசப்பட்டது. சிகரெட் கம்பனிகள் பணத்தில் பல்விளக்கி, பணத்திலேயே குளித்தார்கள். இந்தியாவில் திரைப்பட நடிகர் நடிகைகள், மக்களிடையே புகைப்பழக்கத்தை ஸ்டைலாக பரப்பி புண்ணியம் தேடிக்கொண்டார்கள். முக்கியமாக ஒரு குறிப்பிட்ட நடிகர் சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பது 80களில் ரொம்ப பாப்புலராக இருந்த ஸ்டைல்.

சிகரெட் கம்பனிகள் அடிவாங்கத்துவங்கியது, கடந்த 30 வருடங்களில் தான். நுரையீரல் புற்று நோய் மற்றும் இதயநோய்களுக்கும் புகைப்பழக்கத்துக்கும் நேரடியான தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளிலும் சிகரெட் விளம்பரம் மற்றும் சிகரெட் பெட்டிகள் ஏதாவது ஒரு ஹெல்த் வார்னிங்கோடு மட்டுமே வெளியிடப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சிகரெட் பெட்டிகளின் மேல் இந்த எச்சரிக்கை செய்திகளை பார்த்தும் தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களை என்ன சொல்லி நொந்துக்கொள்வது? நுரையீரல் புற்றுநோயாளிகளில் பத்தில் ஒன்பது பேர் புகைப்பிடிப்பவர்கள் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சி அளித்தது. அது மட்டுமல்ல, புகைப்பிடிப்பவர்களில் ஐந்தில் நான்கு பேர் புகைப்பிடித்தல் சம்மந்தமான நோய்களில் இறக்கிறார்களாம்.

இறந்துவிடுவது எத்தனையோ மேல், ஆனால் புகைப்பிடிப்பவர்கள் உயிரோடு இருக்கும் போதே சித்திரவதை அனுபவிக்கிறார்கள். சிகரெட் புகைப்பதால் உடலுக்குள் போகும் நச்சுப்பொருட்கள், தொண்டை மற்றும் நுரையீரல் போன்ற முக்கியமான உடலுறுப்புகளை பாதித்து, "புகைப்பிடிப்பவர்களின் இருமல்(Smoker's cough)" வந்து அவதிப்படுகிறார்கள். மேலும் பசியின்மை, உணவின் சுவை தெரியாமல் போகுதல், கைகால் மரத்துப்போதல் மற்றும் சில்லிடுதல், தோல் மற்றும் பற்களின் நிறம் மாறுதல், ஆண்மைக்குறைவு போன்றவை ஏற்படுகின்றன. ஆண்களை விட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மலட்டுத்தன்மை, பிரசவத்தில் பல சிக்கல்கள், எடை குறைவான குழந்தைகள் போன்ற பல பிரச்சினைகள் பெண்களை தாக்குகின்றன.

இத்தனை பிரச்சினைகள் வந்தும் இவர்கள் மட்டும் புகைப்பிடித்து அழிந்துப்போவதோடு மட்டுமில்லாமல் சுற்றி இருப்பவர்களையும் அழிப்பதே இங்கே முக்கியமான பிரச்சினை. புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் நச்சுப்புகையினால் புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதயநோய்கள் 30% சதம் வரையிலும் அதிகரிக்கிறதாம். முக்கியமாக இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதை அறிந்துதான் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பலர் வீட்டில் புகைப்பதில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதும் ஆகக்கூடாது ஆனால் ஊர் மக்கள் எப்படி வேண்டுமானாலும் தொலையட்டும் என்று நினைப்பது என்ன லாஜிக்?

அமரிக்காவில் சில மாநிலங்களில் பொது இடங்களில் புகைப்பது தடை செய்யப்படவில்லை என்றாலும், நிறைய பேர் புகைக்க மாட்டார்கள். அப்படி புகைத்தே தீர வேண்டும் என்ற அடிக்ஷன் இருப்பவர்களுக்கு தனியாக புகைக்கும் ஏரியாக்கள் உண்டு. மேலும் நிலப்பரப்பு அதிகமாக இருக்கும் ஒரு இடத்தில் ஒருவர் புகைக்கும் போது நமக்கு ஆகவில்லை என்றால் எங்கேயாவது தூர ஓடி தப்பித்துவிடலாம். இந்தியா போன்ற மக்கள் தொகை நிறைந்த நாட்டில் மக்களுக்கு நகர இடமில்லை, ஏற்கெனெவே வாகனப்புகையால் மூச்சு விடுவதே சிரமமாக இருக்கிறது. இதில் புகைப்பிடிப்பவர்களின் நியூசன்ஸ் வேறு!

பொது இடங்களில் புகைப்பிடித்தலை தடை செய்வது தனிநபர் சுதந்திர அத்துமீறலாக சிலரால் சித்தரிக்கப்படுகிறது. உங்களுடைய தனி மனித சுதந்திரம் மற்றவர்களை எப்போது பாதிக்க ஆரம்பிக்கிறதோ, அப்போதே அத்துமீறலாகிவிடுகிறது. "Your freedom ends where my nose starts" என்ற சொற்றொடரை கேள்விப்பட்டிருப்பீர்கள். வாகனப்புகையையும், சிகரெட் புகையையும் ஒப்பிடுவது சரி இல்லை, ஏனென்றால் சிகரெட் புகை வாகனப்புகையை விட கேடு விளைவிக்க கூடியது. வாகனங்களாவது போக்குவரத்துக்கு பயன்படுகிறது, சிகரெட் புகைப்பதால் யாருக்கு என்ன பயன்? இது எப்படி இருக்கிறதென்றால் ஒருவரைப்பார்த்து, "ஏன் திருடுகிறாய், அது சட்டப்படி குற்றம்" என்றால் உடனே அவர் "பக்கத்தில் இருப்பவர்கள் கொலையே செய்யும் போது நான் திருடுவதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேட்பது எவ்வளவு அபத்தமானதோ அத்தனை அபத்தமானது.

இந்த கட்டுரையின் நோக்கம், புகைப்பிடிப்பவர்களை திட்டவோ அல்லது அவமானப்படுத்தவோ அல்ல. பொது இடங்களில் புகைப்பது தடை செய்யப்பட்டிருக்கும் சட்டத்தை எதிர்த்து புலம்புவதை விட, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி இந்த தீய பழக்கத்தை அடியோடு விட்டுவிடலாமே? மேலும் சிகரெட் புகைக்காததால் பணமும் மிச்சமாகும். சிகரெட் கம்பனிகள் மேல் விதிக்கப்படும் அதிகபட்ச வரிகளை எங்கே இருந்து திரும்ப எடுக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? புகைப்பிடிக்கும் உங்களிடமிருந்து தான்!

பணத்தை விடுங்கள், உடல் நலம் ரொம்ப முக்கியம். புகைப்பதை விட்ட ஒரு வாரத்தில் உடல் நிலை வியப்படைய வைக்கும் அளவுக்கு முன்னேறுகிறதாம். மூச்சு விடுவது சுலபமாவதில் ஆரம்பித்து, தோலின் நிறம் சீரடைவது, சுவை மீண்டும் உணர ஆரம்பிப்பது போன்ற நல்ல மாற்றங்களை உடனடியாக உணர முடியும். புகைப்பிடித்தால் வரும் பின்விளைவுகளும்(withdrawal effects) 10 நாட்களுக்குள் மறைந்துவிடுவதாக தெரிவிக்கிறார்கள். நீண்டகால முன்னேற்றமாக, புகைப்பதை விட்ட அடுத்த ஐந்து வருடத்தில் நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதர புற்றுநோய்கள், இதய நோய்கள் போன்ற பெரிய நோய்கள் வரும் வாய்ப்பு பெருமளவு குறைகிறதாம். புகைப்பிடிப்பவர்கள் தங்களுக்காக இல்லை என்றாலும் மற்றவர்களுக்காகவாவது இந்த பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள்.

123 comments:

  1. நான் புகைப்பதை விட்டு 6 வருடம் ஆச்சு. ஆனால் சட்டம் போட்டு கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை

    ReplyDelete
  2. வாங்க குடுகுடுப்பை.

    கட்டுப்படுத்தமுடியாமல் போகலாம், ஆனால் புகைப்பிடிப்பவர்களுக்கு நிச்சயம் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் ஒரு சிலர் திருந்தினாலும் நன்மையே.

    இப்படி எல்லாம் சட்டத்திலும் ஏதாவது ஒரு குறை இருக்கும், we have to look at the big picture.

    ReplyDelete
  3. புகைப்பிடிக்கும் பழக்கத்தை உண்மையிலேயே மக்கள் விட வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்தால் ஐ.டி.சி.,போன்ற கம்பெனிகளுக்கு தடை போடலாமே!!

    ReplyDelete
  4. இது சீரியசான பதிவு..ஆனா எனக்கு கும்மி கமெண்ட் மட்டுமே தோணுதே..ச்சே, நமக்கு ஏன் நல்லதா எதுவுமே தெரிய மாட்டேங்குது?

    ReplyDelete
  5. டிஸ்கி: எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதால், என்னுடைய கருத்துக்கள் ஒரு பக்க சார்புடையதாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன், மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்கிறேன், ஆனால் ஒப்புக்கொள்ள‌ மாட்டேன் ;0)

    புகைக்கும் எனக்கும் சிறு வயதிலிருந்தே ஒத்து வந்தது, எல்லாம் புகைப்பிடிப்பவர்கள ஒளிந்து நின்று பார்த்த பழக்கம் தான். என்னுடைய சிறு வயதில் (ஏன், என்னுடைய இந்த வயதிலும்) என் அப்பாவுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை. அப்பொழுதெல்லாம் இவரு தம்மடிச்சா நம்ம ஒண்ணை சுட்ரலாமேன்னு தோணும். கொடுமை, என் அண்ணன்களுக்கும், ஏன் என் அக்காவுக்கும் கூட இந்த பழக்கம் இல்லை. ஒரு நாள் இனிமே நீங்க அடிக்காட்டி நானே அடிக்க போறேன் என்று அறிவித்தேன்.(மனசுக்குள்ள தான்). அதிலிருந்து புகைப்பழக்கத்தை நான் அடியிலிருந்து ஆரம்பித்து விட, இன்றோடு பதினெட்டு வருடம் ஆகிறது. கூட்டி கழிச்சி கஷ்டப்படாதீங்க, நான் ஆரம்பிச்சப்ப பதினொரு வயசு.

    அன்றிலிருந்து புகைப்பிடித்தலை பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. நாற்றம் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை தவிர. ஆனால், அவர்கள் கவலைப்படுகிறார்கள் என்று நான் கவலைப்பட, நான் கவலைப்படுவது தெரிந்து என் அம்மா கவலைப்பட, அம்மாவின் கவலை அப்பாவுக்கு தெரிந்தால் என் தோல் உரிந்து விடும் என்று கவலைப்படாவிட்டாலும், என் அப்பாவுக்கு எதற்கு கவலை தரவேண்டும் என்பதால், நான் அவர்களுக்கு சொல்லவில்லை.
    ஆதி கால மனிதர்களுக்கு தற்செயலாக புகையிலைச்செடிகளைப்பற்றிய விவரம் தெரியவந்தது. செடியில் பச்சையாக இருப்பதை விட, காய வைத்து எரிக்கும் போது நிக்கோட்டின் தரும் போதை பல மடங்கு அதிகரிப்பதை கண்டுபிடித்தார்கள். அதை சுய‌ ந‌ல‌மின்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் தெரிவித்தார்க‌ள். இத்த‌கைய‌ ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ளால் தான் உல‌க‌ம் வாழ்கிற‌து. வ‌ள‌ர்கிற‌து. இன்றும் புகைக்கிற‌து.. கேன்ச‌ர் வ‌ந்து செத்து போய்விட்டாலும் அவ‌ர்க‌ள் நான் அடிக்கும் ஒவ்வொரு த‌ம்மிலும் இருக்கிறார்க‌ள்.

    மற்ற போதை பொருட்களுக்கும் புகையிலைக்கும் ஒரு அடிப்படை வித்யாசம் என்னவென்றால், மற்ற போதைப்பொருட்கள் போல செயல் திறனை புகையிலை வெளிப்படையாக பாதிக்கவில்லை. அத‌னால் த‌ம்ம‌டிப்ப‌தை தொட‌ர்ந்தேன்..


    இது போதாதா? புகைக்கும் வழக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதிலும் பணம் கிடைக்க ஆரம்பித்ததும் காட்டுத்தீ போல இந்த புகைப்பழக்கம் என் நண்பர்களுக்கும் பரவியது. கல்லுடைப்பவர்களிடமும், லாரி டிரைவர்களிடமும், ஐ.டி. ஆண்கள், பெண்களிடமும் இன்றும் இந்த வழக்கம் இருப்பதாக தெரிகிறது."காலையில் புகைத்தால் கொடுமையான ஹாஸ்டல் சாப்பாட்டுக்கு மட்டம் போடலாம்" என்று சீனியர் ஒருவன் விளம்பர படுத்தியதால் பலர் இதற்காகவே தம்மடிக்க ஆரம்பித்தார்கள். இன்றும் கூட அந்த குறிப்பிட்ட பொறியியல் கல்லூரியில் பல மாணவர்கள் காலையில் தம்மடிப்பதை பார்க்கலாம். புகைக்கும் மாணவர்கள் புத்திசாலியாக கருதப்பட்டார்கள். எங்க‌ள் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் இதை தென் மாவ‌ட்ட‌ங்க‌ளில் ம‌ற்ற‌ ப‌ல‌ க‌ல்லூரி விடுதிக‌ளுக்கு ப‌ர‌ப்பி புண்ணிய‌ம் தேடிக்கொண்டார்க‌ள். முக்கிய‌மாக‌ ஒரு குறிப்பிட்ட‌ பிராண்ட் காஸ்ட்லி சிக‌ரெட்டை ம‌ற்ற‌ மாண‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்வ‌து 80 வ‌ருட‌ங்க‌ளாக‌ பாப்புல‌ராக‌ இருக்கும் ஸ்டைல்.

    ====
    மீதி எழுத டைம் இல்லைங்கிறதுனால இப்போதைக்கி அப்பீட்டு ஆயிக்கிறேன்..அப்புறமா ரிப்பீட்டு ஆயிக்கிறேன்..

    பின் குறிப்பு:

    மொக்கை பதிவுகள் போல, ஒரு நல்ல பதிவுக்கு இது மொக்கை பின்னூட்டமே..மன்னிப்பீர்களாக.. தவிர தம்மடித்தாலும், நல்லதை நாலு பேரு சொன்னா கேக்கணும் என்பதால் உங்கள் கருத்துடன் எனக்கு ஒப்புதலே.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. வாங்க ராதா கிருஷ்ணன்.

    இந்திய அரசு பண முதலைகளான சிகரெட் கம்பனிகளை எதிர்த்து இத்தனை செய்ய முன்வந்ததே பெரிய காரியம் இல்லையா? அவர்கள் செய்ததை பாராட்டாமல் செய்யாததை திட்டுவது சரியாகுமா?

    ReplyDelete
  8. வாங்க அதுசரி.

    ROFTL. எனக்கு அன் அபீஷியல் மிமிக்ரி ஆர்டிஸ்டாகவே மாறிட்டீங்க, நடத்துங்க நடத்துங்க. :)

    11 வயதிலேயே புகையா? அநியாயமா இருக்கு :(

    ReplyDelete
  9. //மொக்கை பதிவுகள் போல, ஒரு நல்ல பதிவுக்கு இது மொக்கை பின்னூட்டமே..மன்னிப்பீர்களாக.. தவிர தம்மடித்தாலும், நல்லதை நாலு பேரு சொன்னா கேக்கணும் என்பதால் உங்கள் கருத்துடன் எனக்கு ஒப்புதலே.//

    மாற்றுக்கருத்தானாலும் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. //
    //மொக்கை பதிவுகள் போல, ஒரு நல்ல பதிவுக்கு இது மொக்கை பின்னூட்டமே..மன்னிப்பீர்களாக.. தவிர தம்மடித்தாலும், நல்லதை நாலு பேரு சொன்னா கேக்கணும் என்பதால் உங்கள் கருத்துடன் எனக்கு ஒப்புதலே.//

    மாற்றுக்கருத்தானாலும் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி.

    //

    பின்ன? நாங்கெல்லாம் ரொம்ப பெருந்தன்மையான, நல்லவய்ங்க...சொல்லலாம், ஆனா உண்மை என்னன்னா, நீங்க சொல்லிருக்கிறது கரீக்டு. "A fact is a fact even if no one likes it".

    அதெல்லாம் ரொம்ப நல்லவய்ங்களா ஏத்துக்குவோம்..ஆனா, செயல்படுத்த தான் மாட்டோம்..ஆமா, தம்மடிச்சிக்கிட்டு தான் இந்த பின்னூட்டத்தை எழுதினேன் :0)

    தம்மடிக்க கூடாதுன்னு பல காரணங்கள் இருக்கிற மாதிரி, தம்மடிக்கிறதுக்கும் பல காரணங்கள் இருக்கு. இப்ப உடனடிக் காரணம் என்னன்னா, இன்னிக்கி(ம்) Dow Jones கும்மி அடிச்சிருச்சி... இனிமே "ASX" ம், Nikkei ம், எப்பிடி கும்மி அடிக்கும்கிறது பிரச்சினை. இல்லாட்டி நான் ஏன் இந்த நேரத்தில ஸிஸ்டம் முன்னாடி உக்காந்து தம்மடிச்சிட்டு இருக்க போறேன்?

    ஆனாலும், தம்மடிக்கிறவய்ங்கள்லாம் மண்டைய போட்ருவாய்ங்கன்ற Fact ஐ ஒத்துக்கதான் வேணும்!

    ReplyDelete
  11. //
    கயல்விழி said...

    11 வயதிலேயே புகையா? அநியாயமா இருக்கு :(

    //

    என்னங்க பண்றது? கஷ்டப்பட்டு காசு சேக்குறதுக்கு அவ்ளோ வயசாயிடுச்சி. இதுக்காக எங்க அப்பாக்கிட்டயா தம்மு வாங்கி தா நைனான்னு கேக்க முடியும்? மனுசன் அவரே அடிக்கிறதில்ல, இதுல நமக்கு எங்க வாங்கி தரப்போறாரு?

    ReplyDelete
  12. நல்ல பதிவு.

    இந்தச் சிகெரெட், குடி இது ரெண்டையும் ஒழிச்சுக்கட்டுனாலே குடும்பச் செலவுக்குத் தேவையான பணம் சுலபமா கிடைச்சுரும்.

    இங்கே நம்மூட்டுலே கோபால் 'அந்தக் காலப் புகை மன்னன்'. தினம் 3 சிகெரெட். போராடிப்போராடி ஒழிச்சுக்கட்டுனேன். இப்ப 26 வருசமாத் திங்கறது உடம்புலே பிடிக்குது.

    ReplyDelete
  13. //தம்மடிக்க கூடாதுன்னு பல காரணங்கள் இருக்கிற மாதிரி, தம்மடிக்கிறதுக்கும் பல காரணங்கள் இருக்கு. இப்ப உடனடிக் காரணம் என்னன்னா, இன்னிக்கி(ம்) Dow Jones கும்மி அடிச்சிருச்சி... இனிமே "ASX" ம், Nikkei ம், எப்பிடி கும்மி அடிக்கும்கிறது பிரச்சினை. இல்லாட்டி நான் ஏன் இந்த நேரத்தில ஸிஸ்டம் முன்னாடி உக்காந்து தம்மடிச்சிட்டு இருக்க போறேன்?

    ஆனாலும், தம்மடிக்கிறவய்ங்கள்லாம் மண்டைய போட்ருவாய்ங்கன்ற Fact ஐ ஒத்துக்கதான் வேணும்!
    //

    சரிங்க, நீங்க தம்மடிச்சதினால் ASX, Nikkei எல்லாம் சரியாயிடுமா என்ன? அதெல்லாம் அப்படியே தான் இருக்கப்போகுது, உங்க நுரையீரல் மட்டுமே பாழாகும்.

    தனிப்பட்ட உதாரணம் கொடுத்ததற்கு மன்னிக்கவும், உயிருக்கே ஆபத்து என்ற போது அஃபெண்ட் பண்ணுவதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.

    ReplyDelete
  14. வாங்க துளசி மேடம்.

    Congratulations, நிச்சயம் பெரிய சாதனை தான். :) :)

    ReplyDelete
  15. //என்னங்க பண்றது? கஷ்டப்பட்டு காசு சேக்குறதுக்கு அவ்ளோ வயசாயிடுச்சி. //

    LOL இதுவேறயா?

    சின்ன வயசிலேயே ரொம்ப விவரமா இருந்திருக்கீங்க. :) :)

    ReplyDelete
  16. சிகரட் குடிச்சா புகை வருமுன்னு தெரியும், இவ்வளவு வருமுன்னு தெரியலை. இதை படிச்சே டென்ஷன் ஆகிடுச்சு ஒரு தம் போட்டுட்டு வரேன் :):)

    ReplyDelete
  17. நல்ல பதிவு கயல்விழி! கல்லூரியில் படிக்கும் பொழுது தான் என் நண்பர்கள் பலர் இந்த பழக்கத்திற்கு அடிமையானார்கள். இது என்னமோ ஒரு fashion statement-ஆக ஆண்மையின் அடையாளச்சின்னமாக கருதப்பட்டது. (என்ன ஒரு முரண்பாடு? இது குடித்தால் ஆண்மை வீரியம் குறையும் என்பது தானே உண்மை! இன்னும் peer pressure, சினிமாவின் தாக்கம் என சில பல காரணங்கள்).

    ஆனால் ஒன்று! புகைப் பிடிப்பவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை இருக்கிறதே...

    1. தனியாக போய் புகைக்க மாட்டர்கள்
    2. மற்றொருவர் புகைக்க அழைத்தால் தட்டாமல் செல்வார்கள்.
    3. விலை உயர்ந்த சிகரெட்டாக இருந்தாலும் -மற்ற விஷயத்தில் கஞ்சன்கள் கூட - பகிர்ந்து புகைப்பார்கள். இத்தகைய ஒற்றுமை எனக்குத் தெரிந்து வேறு எதுவும் கொண்டு வருவதில்லை.

    passive smoking பற்றி ஒரு சுவையான விளம்பரம் ஒன்று - Cowboy ஒருவன் புகைத்த படியே குதிரை மேல் பயணம் எய்து வருவான். திடீரென்று குதிரை செத்து விடும். கீழே "passive smoking kills" என்று ஒரு வரி ஓடும்!!!

    ReplyDelete
  18. //போராடிப்போராடி ஒழிச்சுக்கட்டுனேன்//

    துளசி மேடம் ,
    அந்த பெருமை முழுவதும் நிச்சயம் கோபால் சாரினையே சேரும்.
    எந்த ஒரு ஸ்மொகரும் அவராக மனம்திருந்தி விடவேண்டும் என்று நினைத்து அதற்காக கடுமையாக போராடி மனதை கட்டுபடித்தினால் தான் விட முடியும் .
    அதன் வீரியம் என்னவென்று அதற்க்கு அடிமை ஆனவர்களுக்கு தான் தெரியும் . !!!

    ஆனால் இந்தசட்டத்திற்கு அதரவு தெரிவிப்பவர்கள் அனைவருமே non-smokers என்பது குறிப்பிடத்தக்கது .
    இந்தியாவில் சட்டம் போட்டு எதையும் நடைமுறைக்கு கொண்டுவர முடியாது .

    இதற்க்கு உதாரணமாக பொடா போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தபோதும் தீவிரவாதத்தினை கட்டுப்படுத்த முடியவில்லை.
    பொடா சட்டத்தினை மீறுபவர்களின் எண்ணிக்கை, smokers கணக்கிடும்போது மிகவும் சொற்பமே !
    போலிஸ் காரர்கள் மாமுல் வசூலிக்க மற்றும் ஒரு ஆயுதமாய் இருக்க போவதன்றி இதனால் ஒரு பலனும் விளையப்போவதில்லை !

    இது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்பது எனது கருத்து !

    ReplyDelete
  19. சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாய் இருக்க வேண்டும் .
    விமான நிலையத்தில் smokers zone உண்டு . ஆனால் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இல்லை என்பது கேலிக்கூத்து .
    பொதுவாக சட்டத்தினை மதித்து நடப்பவர்கள் middle class மற்றும் ஏழைகளே !
    பணக்காரன் என்றைக்கு எந்த சட்டத்தினை மதித்து இருக்கிறான் ? அதனால் தான் இப்ப்படி ஒரு clause இந்த சட்டத்தில் வைத்து இருக்கிறார்கள் போலும் !

    ReplyDelete
  20. வணங்கி வரவேற்கத் தக்க ஒரு பதிவு.

    பெண்கள், திருமணமான ஆரம்ப காலம், கர்ப்பகாலம், குழந்தையின் ஆரம்ப காலம் போன்ற சமயங்களில் பிடிவாதம் காட்டினால் ஓரளவு இந்தப்பழக்கத்தை விட வைக்க முடியும் என்று நம்புகிறேன்.

    'எனக்கு இந்த ஸ்மெல் பிடிக்கு" என்று நடிகைகள் சொல்வது போன்ற சினிமாக் காட்சிகள் கொடுமை.

    //பணத்தை விடுங்கள், உடல் நலம் ரொம்ப முக்கியம். புகைப்பதை விட்ட ஒரு வாரத்தில் உடல் நிலை வியப்படைய வைக்கும் அளவுக்கு முன்னேறுகிறதாம். மூச்சு விடுவது சுலபமாவதில் ஆரம்பித்து, தோலின் நிறம் சீரடைவது, சுவை மீண்டும் உணர ஆரம்பிப்பது போன்ற நல்ல மாற்றங்களை உடனடியாக உணர முடியும். புகைப்பிடித்தால் வரும் பின்விளைவுகளும்(withdrawal effects) 10 நாட்களுக்குள் மறைந்துவிடுவதாக தெரிவிக்கிறார்கள். நீண்டகால முன்னேற்றமாக, புகைப்பதை விட்ட அடுத்த ஐந்து வருடத்தில் நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதர புற்றுநோய்கள், இதய நோய்கள் போன்ற பெரிய நோய்கள் வரும் வாய்ப்பு பெருமளவு குறைகிறதாம். புகைப்பிடிப்பவர்கள் தங்களுக்காக இல்லை என்றாலும் மற்றவர்களுக்காகவாவது இந்த பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள். //

    நல்ல வரிகள்.

    ReplyDelete
  21. நல்ல பதிவு கயல்..

    எவ்வளவுதான் அழுத்தி, அழுத்திச் சொன்னாலும் சிகரெட் குடிப்பது எனது உரிமை என்று சொல்லித் தங்களது உடல்நலனைக் கெடுத்துக் கொள்ள நினைக்கும் பதிவர்களை நினைத்தால் கொஞ்சம் கோபம்தான் வருகிறது..

    ஏன் கடைகளில் விற்கிறார்கள் என்ற கேள்விக்கு அரசுகள்தான் பதில் சொல்ல வேண்டும்.

    ஆனால் கடையிலேயே குடிக்காதே.. வீட்டுக்குக் கொண்டு போய் குடி என்கிற வகையில் வீட்டிலும் எதிர்ப்புகள் இருந்தால் அந்த ஒரு சிகரெட்டும் குறையுமே.. அது உடல்நலனைப் பொறுத்தமட்டில் சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே..

    ReplyDelete
  22. எங்க அலுவலகத்தில் நான் வேலை பார்க்கும் துறையில் தற்போது புகைப்பவர் அனைவரும் பெண்கள். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். காரணம் என்னவாக இருக்கும் என்று ஆனால் இன்று வரை என்னிடம் விடை இல்லை, அவர்களிடம் இந்த கேள்வியை கேட்க ஆசை, ஆனால் பயம் எங்கே ஒரு தம் கொடுங்க அப்படின்னு கேட்டு நான் எங்கள் துறையின் முதல் ஆண் புகைப்பாளர் ஆகி விடுவேன் என

    ReplyDelete
  23. இருங்க ஒரு தம்ம போட்டுட்டு வந்திடுறேன்.....பயங்கரமா டென்ஷ்ன் ஆக்கீட்டீங்க‌

    ReplyDelete
  24. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..
    இன்று வெளியே சென்ற போது கார் ஓட்டியபடி சிகரெட் குடுப்பவரையும் ரோட்டில் புகைத்தபடி போவோரையும் பார்த்துக்கொண்டே நினைத்துக்கொண்டேன் ..இவர்களெல்லாம் திருந்துவதற்கு வழி உண்டா என்று....
    சட்டம் இருக்கிறது என்பதற்காக யாரும் பிக்பாக்கெட் அடிப்பதையோ ஈவ் டீஸிங் செய்வதையோ விட்டுவிட்டார்களா என்ன அது போலத்தான் போல..

    ஒரு சிலராவது இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டாலும் நன்மையே...

    ReplyDelete
  25. நன்றி வந்தியத்தேவன்,

    புகைப்பிடித்தலுக்கு முக்கியக்காரணமாக பியர் ப்ரஷரை தான் பலர் குறிப்பிடுகிறார்கள்.

    ReplyDelete
  26. நன்றி நசரேயன். திரும்பவும் புகையா? :(

    ReplyDelete
  27. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருப்புக்கோட்டை பாஸ்கர் அவர்களே. உங்கள் கருத்தில் இருந்து வேறுபட வேண்டியதாக இருக்கிறது.

    புகையை விட வைத்ததின் முக்கிய பங்கு துளசி டீச்சரையே சேரும். நம்புங்கள், தன் கணவரானாலும் நேரம் எடுத்து பேபி சிட்டிங் பண்ணுவதிலும், அக்கறை எடுத்துக்கொள்வதிலும் இந்தியபெண்களுக்க்கு நிகர் வேறு யாரும் கிடையாது, வாழ்க்கையின் பெரும் பகுதியை குடும்பத்தினருக்காகாவே செலவிடுபவர்கள்.

    வெளிநாட்டு பெண்கள் இப்படி இருப்பதில்லை, புகைத்தால் பேசாமல் டிவோர்ஸ் பண்ணுவார்கள்.

    ReplyDelete
  28. இந்தியாவில் சட்டம் என்பது எதில் தான் சமமாக இருக்கிறது? ஒரு உதாரணம் தயவு செய்து சொல்லுங்கள்.

    இந்த கோணத்தைப்பாருங்கள், பணக்காரர்களுக்கு புற்று நோய் வந்தால் கூட நல்ல மருத்துவம் பார்த்து குணமாகும் வாய்ப்பு அதிகம்.

    அடிப்படைத்தேவைகளையே நிறைவேற்ற முடியாத சாமான்ய மனிதர்களுக்கு புற்று நோய் வந்தால்?? அரசு மருத்துவமணையில் கீமோத்தெரெப்பி வசதி உண்டா என்ன?

    சட்டத்தினால் புகைப்பழக்கம் ஒழிந்துவிடும் என்று யாரும் நினைக்கவில்லை, புகைக்கும் வசதி இல்லாததால் 2 சிகரெட் குறைந்தாலும் மகிழ்ச்சியே!

    ReplyDelete
  29. நன்றி சரவணக்குமார்.

    நன்றி ரத்னேஷ். இந்தியப்பெண்களுக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பொறுப்பில் இது தேவை இல்லாத எக்ஸ்ட்ரா பொறுப்பு!

    இப்படி அவர்களுக்கு துன்பம் கொடுக்காமல் தானாகவே புகைப்பதை நிறுத்துவார்கள் என்றால் நலம்

    ReplyDelete
  30. நன்றி உண்மைத்தமிழன்.

    தற்கொலை பண்ணிக்கொள்வது சட்டவிரோதம் என்பதை ஒப்புக்கொள்பவர்கள் தவணை முறையில் தற்கொலை செய்தலை மட்டும் தவறு என ஒப்புக்கொள்ளாதது வியப்பளிக்கிறது

    புகைப்பது என்பது அப்படித்தான், தவணை முறையில் தற்கொலை.

    ReplyDelete
  31. நன்றி குடுகுடுப்பை.

    நன்றி இவன், நிறுத்துவதற்கு குறைந்தபட்சம் கன்சிடர் பண்ணுவீர்கள் என நம்புகிறேன்

    ReplyDelete
  32. நன்றி கயல்விழி முத்துலட்சுமி மேடம்

    பிட்பாக்கெட் அடிப்பவர்கள், பொடா சட்டத்தை மீறுபவர்கள் எல்லாம் சாமான்ய மனிதர்களுள் அடங்கமாட்டார்கள்.

    சாதாரண மனிதர்கள் சட்டத்துக்கு கொஞ்சமாவது பயப்படத்தான் செய்கிறார்கள். சரி போலீஸ் மாமுல் வாங்குவதாகவே இருக்கட்டும்,அதற்கு பயந்தாவது இரண்டு சிகரெட்டுகளை குறைத்தார்கள் என்றாலுமே போதுமே!

    ReplyDelete
  33. வணக்கம் நண்பர்களே...... புகை பிடிப்பது தனி மனித சுதந்திரம் அல்ல.....இது சமுக குற்றம்......இது ஓரு வன்முறை செயல் ...................

    ReplyDelete
  34. சுத்தமான சூழ்நிலையை எதிர்பார்ப்பது
    என் தனிநபர் சுதந்திரம் அல்லவா?
    என் தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு புகைபிடிப்போருக்கு
    என்ன உரிமை உள்ளது?
    நல்ல பதிவு! பாராட்டுகள்!

    ReplyDelete
  35. அருமையான கருத்துக்களை அழகாக கொடுத்திருக்கிறீர்கள் கயல். வரிக்கு வரி வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  36. வாங்க முத்துக்குமார்.

    வாங்க சிவஞானம்ஜி, கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் பெயரை ஏனோ நான் "சிவஞானமணி" என்று முதலில் படித்துவிடுகிறேன்.

    ReplyDelete
  37. நன்றி வெண்பூ, கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. ***முத்துக்குமார் said...
    வணக்கம் நண்பர்களே...... புகை பிடிப்பது தனி மனித சுதந்திரம் அல்ல.....இது சமுக குற்றம்......இது ஓரு வன்முறை செயல் ...................***

    எனக்கென்னவோ முத்துக்குமார் சர்க்காஸ்டிக்கா சொல்ற மாதிரி இருக்கு!

    வன்முறை என்பதெல்லாம் ரொம்ப அதிகம்! முத்துக்குமார் புகைப்பிடிப்பவர்களிடமிருந்து வன்முறையை தூண்டுவதுபோல இருக்கு! LOL!

    ReplyDelete
  40. கயல்விழி நல்ல பதிவு. உங்களோட ஆதங்கத்த அழகா எழுதி இருக்கீங்க. பிரச்சாரத்த கை விடாதீங்க. நாங்களும் ஆதரவு தரோம்.

    **************
    சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாய் இருக்க வேண்டும் .
    விமான நிலையத்தில் smokers zone உண்டு . ஆனால் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இல்லை என்பது கேலிக்கூத்து .
    பொதுவாக சட்டத்தினை மதித்து நடப்பவர்கள் middle class மற்றும் ஏழைகளே !
    பணக்காரன் என்றைக்கு எந்த சட்டத்தினை மதித்து இருக்கிறான் ? அதனால் தான் இப்ப்படி ஒரு clause இந்த சட்டத்தில் வைத்து இருக்கிறார்கள் போலும் !
    **************
    ஹலோ அருப்புகோட்டை,

    உண்மைல முதல ஸ்மோகிங் தடை செய்யப்பட்ட எடம் விமான நிலையம். அதுனால அங்க ஸ்மோகிங் zone தனியா கொண்டு வந்தாங்க. அது தான் இந்தியாவுல உள்ள விமான நிலையத்துல (ஒன்னு ரெண்டுல) ஸ்மோகிங் Zone இருக்கறதுக்கு காரணம்.

    பணக்காரன் எல்லாம் கெட்டவங்க/ சட்டத்தை மதிக்காதவங்க. ஏழை/ மிடில் கிளாஸ் எல்லாம் நல்லவங்க / சட்டத்தை மதிக்கரவங்க. இதையே இன்னும் எவ்வளவு வருஷ காலம் நம்பிக்கிட்டு இருக்க போறீங்க.

    இந்தியாவுல லட்சக்கணக்குல பஸ் ஸ்டாப் / பஸ் நிலையம் / ரயில்வே நிலையம் இருக்கு. அது எல்லாத்துலையும் ஸ்மோகிங் zone வைக்க முடியாட்டி எப்படி கேலிகூத்து ஆகும் ?

    ஆனாலும் பெரிய பஸ் நிலையங்கள் / ரயில்வே நிலையங்கள்ல smoking zone வைக்கறது நல்லதே. இந்தியாவுல ஒரு 25 சதவீதம் மக்கள் புகை பிடிக்கறாங்க. அவங்களோட தேவைய பத்தியும் யோசிக்கணும். அதுவும் இத்தனை நாளாக இருந்த ஒரு சுதந்திரத்தை மாத்தும் போது இதை எல்லாம் கணக்குல எடுத்துக்கிட்டா தான் ஓரளவாவது திட்டத்தை செயல் படுத்த முடியும். அப்படி இல்லாட்டி, இன்னும் ஒரு நாலு அஞ்சி வருஷம் கழிச்சி இன்னும் ஒரு ஸ்மோகிங் தடை சட்டம் வரும். அத பத்தியும் நம்ப பதிவு எழுதிக்கிட்டு இருப்போம்.

    ReplyDelete
  41. அது சரி :-

    சீரியஸ் பதிவுல கும்மி அடிச்சா தான் நல்லா இருக்கும். கும்மி கதிவுல போய் சீரியஸா கருத்து சொல்லணும்.

    அத நீங்க ரொம்ப அழகா புரிஞ்சி வச்சி இருக்கீங்க. அப்புறம் எதுக்கு டிஸ்கி !

    ReplyDelete
  42. புகை பிடிக்கறவங்க யாரும் பழக்கத்த நிரந்தரமா விட்டதா சரித்தரம் இல்ல.

    சில பேரு ரெண்டு நாள், ரெண்டு மாசம், ரெண்டு வருஷம்ன்னு அதிகரிச்சுட்டே போவாங்க. ஆனா திருப்பி ஆரம்பிச்சுடுவாங்க !

    ReplyDelete
  43. நான் புகைப்பிடிப்பவர்களுக்கு சப்போர்ட் பண்னப்போறேன்!

    "பாஸிவ் ஸ்மோக்கிங்" பொதுவாக மக்கள் நம்புவதில்லை.

    * அதை எல்லோரும் மிகைப்படுத்துவதாக பலரும் நம்புகிறார்கள்.

    *எலிகளை பலவந்தமாக ஸ்மோக் பண்ணவைத்து, அவைகளின் நுரையீரலில் புற்று நோய் வருவதை அறிவியலில் கண்டுபிடித்து உள்ளார்கள்.
    அதில் சந்தேகமில்லை.
    ஆனால் பாஸிவ் ஸ்மோகிங் ரொம்ப மோசம்னு (புகைப்பிடிப்பவர்களை விட) என்பது மிகைப்படுத்திய கூற்று என்று நினைக்கிறேன்.

    தன்னைத்தானே அழித்துக்கொள்வது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அது அடுத்தவர்களை பாதிக்கும் என்று தெரியாமல்தான் பலர் இருக்கிறார்கள்.
    So, it will take some time to understand and accept that seriousness of passing smoking!

    ReplyDelete
  44. ****** "பாஸிவ் ஸ்மோக்கிங்" பொதுவாக மக்கள் நம்புவதில்லை.******

    பொதுவா மக்கள் அப்படினா யாருன்னும் சொல்லிடுங்க !

    ReplyDelete
  45. *********** நான் புகைப்பிடிப்பவர்களுக்கு சப்போர்ட் பண்னப்போறேன்! ***********

    இதுக்கு பேரு தான் ஞாநி effect !

    ReplyDelete
  46. வருண்,

    பாஸிவ் ஸ்மோகிங் மூலமா எனக்கு நிச்சயமா தலைவலி வந்து இருக்கு ! அதுனால தான் நான் இந்த சட்டத்துக்கு ஆதரவுக்கரம் கொடுத்தேன். ஸ்மோகிங் அல்லொவ் பண்ற ரெஸ்டாரன்ட் போய் இருந்தா உங்களுக்கு இது டக்குன்னு மண்டைல உறைக்கும். இனிமே இது நடக்காது.

    ReplyDelete
  47. மிக நல்லப் பதிவு கயல்.
    துளசியம்மா சொன்னது போல் புகைப்பவர்களாக மனது வைத்துத் திருந்தாவிட்டால் புகைப் பழக்கத்தை நிறுத்த முடியாது என்பது மிகப் பெரிய உண்மை.

    இதற்கு காரணம் நிக்கோட்டின், இதன் அளவு இரத்தத்தில் குறையும் போது மூளை தூண்டப்படும், இதனால் தானாக அடுத்த சிகரெட்டைப் பற்றவைக்க வேண்டியதுதான். மருத்துவர் புருனோ தனதுப் பதிவில் மிகத் தெளிவாக இதை விளக்கியிருந்தார். இதை சற்று முன் சாப்பிட்டுவிட்டு வரும் போது புகைப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் ஆனால் ஒரு நாளைக்கு மேல தம் அடிக்காம இருக்க முடியல என்று சொன்ன என் நண்பணிடம் விளக்கினேன்.

    ஒரு சிகரெட்டில் நிக்கோட்டினைவிட கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் 20க்கும் மேல் உண்டு. ஆனால் நிக்கோட்டின் மட்டும் தான் மீண்டும் மீண்டும் புகைக்கத்தூண்டும் பொருள். எனவே புகைப் பழக்கத்தை விட முடியாதவர்கள் முதலில் சிகரெட்டிற்கு மாற்றாக நிக்கோட்டின் மட்டும் உள்ள சூயிங்கம், மாத்திரை போன்றவற்றை புகைக்கத்தோன்றும் போது பயன்படுத்த வேண்டும், இதில் நிக்கோட்டின் மட்டுமே உண்டு, அதுவும் ஒரு சிகரெட்டில் இருக்கும் அளவுக்கு அல்ல. நாளடைவில் இது இரத்தத்தில் நிக்கோட்டினின் அளவை குறைத்துவிடும். பின்னர் இந்த சூயிங்கம், மாத்திரை போன்றவற்றின் உதவியில்லாமலும் இருக்க இயலும். ஆனால் இந்த முறையில் புகைப்பதை நிறுத்தவும் முதலில் மனது வைக்க வேண்டும். சூயிங்கம்மை கையில் வைத்துக் கொண்டே, புகைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போது, சூயிங்கம்மை மெல்வதற்குப் பதில் புகைக்க சென்றுவிட்டால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் ?

    நானும் சிலகாலம் புகைத்தவன் தான். ஆனால் அந்தப்பழக்கத்திற்கு அடிமையாகவில்லை. இப்போதும் எப்போதாவது புகைப்பது உண்டு. தொடர்சியாக அல்ல. இப்போது நான் நிக்கோரெட் என்ற சூயிங்கம்மை என் புகைக்கும் நண்பர்களுக்கு பரிந்துரை செய்து அவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்க முயன்று கொண்டிருக்கிறேன். இனிமேல் இதை வாங்கி வைத்துக் கொண்டு அவர்களிடம் செயல்முறை விளக்கம் அளிக்கலாம் என்ற எண்ணமும் உள்ளது. சிங்கப்பூரில் சிகரெட் ஒரு பாக்கெட் 12 டாலர். நம்ம ஊர் காசுக்கு கணக்கிட்டால் 20 சிகரெட் கொண்ட ஒரு பாக்கெட் 384 ரூபாய். ஒரு சிகரெட்டின் விலை 19.20. சிங்கப்பூரில் சிகரெட்டை விட்டால் ஒரு மாதத்திற்கு நம்ம ஊர் காசில் 10 ஆயிரம் சேமிக்க இயலும் என்பது என் கணக்கு.

    இந்தியாவில் பொது இடங்களில் புகைக்கத் தடை விதித்து போடப்பட்ட சட்டத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் பொது இடங்களில் புகைப்பவர்களுக்கு என தனியாக ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்பது என் கருத்து. கடையில் சர்வ சாதாரணமாய் சிகரெட் விற்கின்றார்கள், ஆனால் அதை குடிக்க தடை என்பது மிகவும் முரணாய் இருக்கின்றது. சிங்கப்பூரில் உணவகங்கள், பேருந்து நிறுத்தங்கள், வரிசையில் நிற்கும் இடங்கள், இரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் எல்லாம் புகைக்கத் தடை உள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் புகைப்போருக்கு என தனியாக இடம் இருக்கும், எனவே யாருக்கும் பிரச்சனையில்லாமல் போய்விடும். இது தான் ஒரு சட்டத்தை அமல்படுத்த சிறந்த முறை. அதிகமான கட்டுபாடுகள் விதிமீறலுக்கே வழிவகுக்கும். இரயில்களில் புகைக்கத் தடை பல வருடங்களாக இருக்கின்றது. ஆனால் அவை முழுஅளவில் கடைப்பிடிக்கப்படுகின்றதா? அப்படித்தான் ஆகிவிடும் இந்த சட்டமும். இது விதி மீறல்களுக்கே வழிவகுக்கும், போலிஸ்காரர்களுக்கு வருமானமளிக்கும் மேலும் ஒரு வழியாகிவிடும்.
    ஒருத்தன் இது தீமைன்னு நல்லா தெரிஞ்சு புகைக்கிறான்னா, அவன் மரணத்தை நோக்கி நடக்கிறான்னு தானே அர்த்தம். தெரிஞ்சே போறவனுக்கு சொல்லிப் பார்க்கலாம், அதுக்கும் மேல சட்டத்தால எல்லாம் திருத்தமுடியாது. திருத்தனும்னா மொத்தமா சிகரெட்ட தடை செய்யலாம். ஆனா விற்போம், நீ எல்லா இடத்துலயும் புகைப்பிடிக்க கூடாதுன்னு சொல்றது முரண்பாடான செயல். சரி நீ சாவ நோக்கி போறதுன்னு முடிவுசெஞ்சுட்டா போயிக்க, ஆனா நீ மட்டும் போ, உன்கூட நாலு பேர சேர்த்து கூட்டிக்கிட்டு போகாதன்னு சொல்லலாம். எனவே புகைப்போருக்கு என தனியாக சில இடங்களை ஒதுக்கிட்டா புகைபிடிக்காதவங்க அங்க போக வேண்டியதில்லை. சாவனும்னு போறவன் மட்டும் அங்க போயிக்கட்டும்னு விட்ரலாம் என்பதே என் கருத்து.
    அந்த இடங்களில் புகையோட தீமைகளை விளக்கும் படங்களையும், புகைப் பழக்கத்தில் இருந்து மீள செய்ய வேண்டிய முறைகளையும் விளக்கலாம்.

    உங்க பதிவு அளவுக்கே நானும் பின்னூட்டமிட்டுள்ளேன்.

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. மணிகண்டன்!

    என்னுடைய விவாதம் அது அல்ல!

    சிலர் பாஸிவ் ஸ்மோக்கிங், ஆக்டிவ் ஸ்மோகிங்கை விட மோசம்னு பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்! அது எந்த அளவுக்கு உண்மை என்று கேட்கிறேன்> :)

    நான் படித்தது இங்கே இருக்கு!

    ***Why is passive smoking worse than smoking?

    Best Answer - Chosen by Voters
    Your premise of your question is false. Passive smoking is not worse. There is a recent article that states that the smoke from passive smoke may be more toxic than inhaled smoke; however, this is a different statement than saying passive smoking is worse.

    "the relative health risks from passive smoking are small in comparison with those from active smoking" However, there are health risks when combined with non-smokers.***

    ReplyDelete
  50. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மணிகண்டன் அவர்களே :)

    ReplyDelete
  51. வாங்க ஜோசப், வழக்கம் போல ரொம்ப ஆழமான கருத்து எழுதி இருக்கீங்க, நான் புகைப்பிடித்தலை விட வேண்டும் என்றேனே தவிர அதற்கான வழிகளை எழுதவில்லை. அடுத்த பதிவில் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  52. வருண்,


    *****சிலர் பாஸிவ் ஸ்மோக்கிங், ஆக்டிவ் ஸ்மோகிங்கை விட மோசம்னு பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்! அது எந்த அளவுக்கு உண்மை என்று கேட்கிறேன் ****

    முதல் முறையா இந்த செய்தி கேள்விப்படறேன்.

    எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்கு தெரியல. ஆனா இது வரைக்கும் நானு எந்த ஒரு புகைபிடிப்பவரும் (active smokers) புகைனால வரும் தலைவலில அவதிப்படறத நான் பாத்தது இல்ல.

    ஆனா ஏகப்பட்ட passive smokers அவதி படறத பார்த்தும்/அனுபவித்தும் இருக்கேன்.

    ReplyDelete
  53. //சிலர் பாஸிவ் ஸ்மோக்கிங், ஆக்டிவ் ஸ்மோகிங்கை விட மோசம்னு பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்! அது எந்த அளவுக்கு உண்மை என்று கேட்கிறேன்//

    நான் அப்படி எழுதவில்லை வருண். 30% வரையிலும் புகைப்பிடிக்காதவர்களுக்கும் புற்று நோய் மற்றும் இதய நோய்களை அதிகரிக்கிறது என்று தான் எழுதி இருக்கிறேன். புகைப்பிடித்தவர்களின் பக்கத்தில் இருந்த தண்டனையாக 30% என்பது ரொம்ப அதிகமாக தெரிகிறது. முக்கியமாக கைக்குழந்தைகளை பொது வாகனப்போக்குவரத்தில் கொண்டு வரும் பெண்களை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள், அவர்களை காரில் போக சொல்ல முடியுமா? குழந்தைகளுக்கு இந்த சிகரெட் புகை ரொம்ப ரொம்ப ஆபத்து. புகைப்பிடிப்பவர்களை விட பாஸிவ் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு ஆபத்து அதிகம். SIDS(sudden infant death syndrome) ஏற்பட இதுவும் காரணமாம். இதெல்லாம் படித்தும் தொடர்ந்து புகைப்பவர்களை பார்த்து தான் எனக்கு கோபம் வருகிறது.

    ReplyDelete
  54. //
    SIDS(sudden infant death syndrome) ஏற்பட இதுவும் காரணமாம். இதெல்லாம் படித்தும் தொடர்ந்து புகைப்பவர்களை பார்த்து தான் எனக்கு கோபம் வருகிறது.
    //

    இது உண்மை கயல்.. கர்ப்பமாக இருக்கும்போது புகை பிடிக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் SIDSஆல் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

    http://edition.cnn.com/2008/HEALTH/family/09/12/sids.infants/index.html#cnnSTCText

    ReplyDelete
  55. ***கயல்விழி said...

    நான் அப்படி எழுதவில்லை வருண்.***

    இல்லை, கயல் :-) நீ சொன்னதாக நான் சொல்லவில்லை! :)

    இதுபோல் ஒரு "மிஸ்கண்சப்ஷன்" நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்!

    அதை "அட்ரெஸ்" பண்ணினேன். அவ்ளோதான்! :-)

    ReplyDelete
  56. வெண்பூ

    அம்மாவே நேரடியாக புகைக்கவேண்டும் என்ற அவசியமில்லை, பேசிவ் ஸ்மோக்கிங்கே போதும், குழந்தைகளுக்கு SIDS வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    ReplyDelete
  57. ***முக்கியமாக கைக்குழந்தைகளை பொது வாகனப்போக்குவரத்தில் கொண்டு வரும் பெண்களை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள், அவர்களை காரில் போக சொல்ல முடியுமா? குழந்தைகளுக்கு இந்த சிகரெட் புகை ரொம்ப ரொம்ப ஆபத்து. புகைப்பிடிப்பவர்களை விட பாஸிவ் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு ஆபத்து அதிகம். SIDS(sudden infant death syndrome) ஏற்பட இதுவும் காரணமாம். இதெல்லாம் படித்தும் தொடர்ந்து புகைப்பவர்களை பார்த்து தான் எனக்கு கோபம் வருகிறது.***

    இது உண்மையிலேயே ரொம்ப முக்கியமா அழுத்தி திரும்ப திரும்ப சொல்லவேண்டிய விசயம்!

    ReplyDelete
  58. /**** SIDS(sudden infant death syndrome) ஏற்பட இதுவும் காரணமாம். ****/

    உண்மையா ?

    ReplyDelete
  59. Is SIDS (crib death) caused by smoking?

    No. No valid cause-and-effect relationship between smoking and SIDS has ever been established. In fact, they are simply socio-economic parallels. Put another way, smoking is more common among lower socio-economic families, and so is SIDS. But it does not follow that smoking is therefore a SIDS risk factor. However, it is indisputable along with having a higher rate of smoking, lower socio-economic people are also more likely to use secondhand crib mattresses for babies; and the more times a mattress is used from one baby to the next, the greater is the likelihood that the mattress will generate the toxic gas/es which cause SIDS.

    A single item of epidemiology disproves every medical and physiological proposition for the cause of SIDS: The incidence of SIDS increases with birth order: i.e. second babies in families are more likely to die of SIDS than first babies; and third babies are more likely to die of SIDS than second babies. If the cause of SIDS were medical or physiological, the incidence of SIDS would not be related to birth order. This single item of SIDS epidemiology disproves every medical and physiological proposition for the cause of SIDS.

    The Campaign to Prevent Crib Death has been established to inform parents about the cause of crib death and make readily available BabeSafe Crib Mattress Covers. These covers prevent exposure of the baby to gas/es generated from phosphorus, arsenic and antimony in crib mattresses.

    For further information visit www.PreventCribDeath.com or contact Marie Blomquist at 651.455.4610 or by email at contact@preventcribdeath.com

    Also available is Dr. Sprott’s book, ‘The Cot Death Cover-Up’, which sets out the cause of SIDS and how it was discovered, and also contains results of chemical analysis of infant bedding.

    Notes:
    1. Number derived from three published studies which have reported the incidence of mattress-wrapping in New Zealand: NZ Med J 2000;113:8-10; NZ Med J 2000;113:326-327; Eur J Pediatr 2008;167(2):251-252.
    2. Source of statistics: New Zealand Ministry of Health official SIDS statistics for 1994 to 2005 (inclusive). (Only progress counts of numbers of SIDS cases are available for 2006 and 2007.)
    3. Giftige Gase im Kinderbett (Toxic Gases in Infants' Beds), Zeitschrift fuer Umweltmedizin 2002;44:18-20; Cot Death - Cause and Prevention: Experiences in New Zealand 1995-2004, Journal of Nutritional & Environmental Medicine 2004;14(3):221-232.
    4. Source of statistics: Office of National Statistics (United Kingdom) official SIDS statistics.

    ReplyDelete
  60. http://www.dhh.louisiana.gov/offices/publications/pubs-268/QUESTIONS%20PARENTS%20COMMONLY%20ASK.pdf

    "Smoking while pregnant and around the infants greatly increases the risk of SIDS"


    http://www.abc.net.au/pm/content/2007/s2061354.htm

    "Researchers from Bristol University in the UK found that almost nine out of 10 mothers who lost their baby to SIDS had smoked during pregnancy."

    http://sids-network.org/experts/smok.htm

    "Several studies have demonstrated that passive tobacco smoke also significantly increases the risk for SIDS. The risk for SIDS is increased, in normal birth weight infants, about two-fold with passive smoke exposure and about three-fold when the mother smokes both during the pregnancy and the baby continues to be exposed to tobacco smoke after he/she is born."

    ReplyDelete
  61. டாக்டர் ப்ரூனோவிடம் கேட்டால் இன்னும் தெளிவான பதில்கள் கிடைக்கலாம்.

    ReplyDelete
  62. //போலிஸ் காரர்கள் மாமுல் வசூலிக்க மற்றும் ஒரு ஆயுதமாய் இருக்க போவதன்றி இதனால் ஒரு பலனும் விளையப்போவதில்லை !//
    இதை நான் வழிமொழிகிறேன்.
    மற்றபடி புகைப்பிடிப்பதை சட்டம் ஒன்றும் கட்டுப்படுத்த முடியாது.
    சிகரெட் கம்பெனிகளை ஒழித்தல் அல்லது சிகரெட்டின் விலையை அதிகமாக ஏற்றுதல். இவை நல்ல பலனைத்தரும் என எதிர்பார்க்கலாம்.
    புகைப்பவர் நினைக்காமல் எதுவும் நடந்துவிடாது.
    புகையை ஒழிக்க வழிமுறைகளை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  63. புகை பிடிப்பதை யாரும் சரி என்று சொல்லவில்லை. இந்த சட்டம் சரியானதா என்பதுதான் கேள்வி. முதலிலேயே பற்றாக்குறையாக இருக்கும் போலீஸ் பவர் இதில் இன்னும் வீணடிக்கப்பட்டு வேறு பெரிய குற்றங்கள் பெருகும். மற்றும் ஒரு மத்திய சுகாதார அமைச்சர் என்ற முறையில் இவர் சிகரெட்டைப் பற்றி மர்ரும் கடந்த 5 வருடங்களா கவலைப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

    மேலும் இந்தியாவில் பொது சுகாதாரம் பற்றிய எந்த விழிப்புணர்வும் மக்களுக்கு இல்லை. அதற்கு முதலில் ஏதாவது செய்ய வேண்டும். அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. அந்த மருந்துகளை எவரும் எளிதில் வாங்க முடியும். மருந்துப் பொருட்களில் கள்ள மார்க்கெடும் போலி மருந்துகளும் பெருமளவில் உள்ளது. ஒரு அமைச்சர் இதையெல்லாம் கவனிக்கமல் நடிகர்கள் சிகரெட் பிடிப்பதும் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதும்தான் முக்கியம் என்று செயல்படுவது நகைப்புக்குரியது.

    நான் சொன்னால் நீ செய்துதான் ஆக வேண்டும் என்ற ஆண்டை மனப்பான்மை தான் இதில் எனக்கு தெரிகிறது.

    ReplyDelete
  64. வாங்க தமிழ்ப்பறவை, கருத்துக்கு நன்றி :)

    போலீஸ் மாமூலுக்காவது பயந்து மக்கள் புகைக்காமல் இருக்கலாம் இல்லையா? சட்டத்தால் முற்றிலும் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தாலும் அது வெற்றியே.

    ReplyDelete
  65. நன்றி அமரபாரதி.

    சிகரெட் பிடிப்பது சாதாரணம் இல்லை, மற்ற சமுதாய அவலங்களை விட எந்த அளவிலும் குறைந்ததல்ல. சிகரெட்டின் தீமைகளைப்பற்றி முழுதாக நிறையபேருக்கு தெரியாததால் ஏதோ சாதாரண விஷயத்தை பெரிது படுத்துவதாக நினைக்கிறார்கள்.என்னுடைய பதிவில் நான் சிகரெட்டின் தீமைகளை குறைத்தே எழுதி இருக்கிறேன்.

    போலி மருந்துக்கள், சுகாதாரம் போன்றவையும் நிச்சயமாக கவனிக்கப்படவேண்டியவை தான், இருந்தும் அவை கவனிக்கப்படாததால் புகையையும் கவனிக்க கூடாது என்பது தவறு.

    ReplyDelete
  66. //அவை கவனிக்கப்படாததால் புகையையும் கவனிக்க கூடாது என்பது தவறு.//

    சரி. இதற்கு மேல் பேசினால் அமைச்சரின் மேல் தனிப்பட்ட வெறுப்பு என்பதாகவே பார்க்கப்படும். நாட்டின் முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பும் செயல் இது என்று மட்டும் கூறிக்கொள்கிறேன்..

    ReplyDelete
  67. //சிகரெட்டின் தீமைகளை குறைத்தே எழுதி இருக்கிறேன்// சிகரெட் நன்மை என்று நான் சொல்லவே இல்லை. புது ஜனங்களுக்காக சட்டம் போடுபவர் சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகள் வருவதைத் தடுக்க சட்டம் போட்டிருக்கலாமே. ஒவ்வொரு நடிகரிடமும் கேட்டுக்கொண்டு தானே இருந்தார்?

    ReplyDelete
  68. உண்மை தான் அமர பாரதி. அன்பு மணி செய்திருப்பது போதாது,

    1. சிகரெட் வரிகளை கடுமையாக கூட்டி சிகரெட்டின் விலையை உயர்த்தவேண்டும்.
    2. ஊடகங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளை தடை செய்ய வேண்டும்.
    3. முடிந்தால் கஞ்சா விற்பனை சட்டவிரோதமாக்கியது போல சிகரெட் விற்பனையையும் சட்டவிரோதமாக்கலாம்.

    ReplyDelete
  69. நல்லது கயல்விழி. நன்றாக சொன்னீர்கள்

    //1. சிகரெட் வரிகளை கடுமையாக கூட்டி சிகரெட்டின் விலையை உயர்த்தவேண்டும். // அதனால் கிடைக்கும் வருவாயை புகை ஒழிப்புப் பணிகளுக்கு செலவிட வேண்டும். எப்படி H1B கட்டனத்தை அதிகப்படுத்தி அதன் வருவாயை அடிப்படை கல்விக்கு அமெரிக்கவில் செகவிடுகிறார்களோ அது போல.

    அமெரிக்காவில் என்னுடைய மகன் படிக்கும் பள்ளியில் இருந்து வாரம் ஒரு முறையாவது புகைப் பழக்கத்துக்கு எதிராக அருமையாக ப்ரின்ட் செய்யப்பட்ட துண்டுப் பிரசுரங்களை கொண்டு வருவான். அதைப் போன்று முறையாக செய்யப்பட வேண்டும்.

    ReplyDelete
  70. //
    கயல்விழி said...

    சரிங்க, நீங்க தம்மடிச்சதினால் ASX, Nikkei எல்லாம் சரியாயிடுமா என்ன? அதெல்லாம் அப்படியே தான் இருக்கப்போகுது, உங்க நுரையீரல் மட்டுமே பாழாகும்.

    தனிப்பட்ட உதாரணம் கொடுத்ததற்கு மன்னிக்கவும், உயிருக்கே ஆபத்து என்ற போது அஃபெண்ட் பண்ணுவதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.

    //

    நல்லா கேட்டீங்க..அப்பிடி சரியானாதான் இன்னும் ஒரு ரெண்டு பாக்கிட்டு அடிச்சி முழுசா சரி பண்ணிருவோமே? உங்க ஊரு புஷ்சும், எங்க அண்ணாச்சி பிரவுனும் எதுக்கு பில்லியன் கணக்குல செலவு பண்றாங்க?

    மன்னிப்பெல்லாம் கேக்காதீங்க. தனிப்பட்ட உதாரணம் சொன்னது நான் தான். தவிர நீங்க எதுவும் அஃபென்ஸிவா சொல்லலை.

    தம்மடிக்கிறது பல காரணங்கள் இருக்கு. அதுல இது மாதிரி சில கையறு நிலைகளும் அடக்கம். இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. ஆனால், அது எனக்கு மட்டும் தானா இல்லை அதே காரணம் மற்றவர்களுக்கும் உண்டா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  71. //அரசு மருத்துவமணையில் கீமோத்தெரெப்பி வசதி உண்டா என்ன?//

    உண்டு

    ReplyDelete
  72. கருத்துக்களுக்கு நன்றி அமர பாரதி.

    ஒரு முக்கியமான விஷயம், புகையை கடுமையாக எதிர்க்கிறேனே தவிர, அன்பு மணிக்கோ அல்லது இராமதாஸுக்கோ ஆதரவாக எழுதவில்லை. அரசியல்வாதிகளின் மேல் எனக்கு நம்பிக்கை கிடையாது.

    "என் உரிமை நான் என் வீட்டிலாவது புகைத்தே தீருவேன்" என்பவர்களும் திருத்தப்படவேண்டியவர்களே. பாவம் ஏன் அவர்கள் மட்டும் இப்படி அநியாயமாக சாக வேண்டும்?

    ReplyDelete
  73. //***Why is passive smoking worse than smoking?

    Best Answer - Chosen by Voters
    Your premise of your question is false. //

    யாஹூ பதில்களை நம்ப வேண்டாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்

    --

    நீங்கள் கூட ஒரு கேள்வி கேட்டு, அதற்கு அடுத்த பெயரில் பதில் எழுதி, அதை முதல் பெயரில் தேர்ந்தெடுக்கலாம்

    ReplyDelete
  74. //
    கயல்விழி said...
    உண்மை தான் அமர பாரதி. அன்பு மணி செய்திருப்பது போதாது,

    1. சிகரெட் வரிகளை கடுமையாக கூட்டி சிகரெட்டின் விலையை உயர்த்தவேண்டும்.
    2. ஊடகங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளை தடை செய்ய வேண்டும்.
    3. முடிந்தால் கஞ்சா விற்பனை சட்டவிரோதமாக்கியது போல சிகரெட் விற்பனையையும் சட்டவிரோதமாக்கலாம்.

    //

    வாழ்க ஜனநாயகம் :0)

    நீங்கள் சொல்லும் மூன்றாவது விதியை அமல்படுத்தினால், பல போலீஸ்காரர்களின் ஓட்டு உங்களுக்கு தான். ஒரு புதிய தொழிலையும், மேலும் வருமானத்திற்கும் வழி வகுத்த நீங்கள் தான் நிரந்தர முதல்வர்!

    ReplyDelete
  75. //இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது.//

    என்ன முக்கிய காரணம், சொல்லுங்க அதுசரி. அதற்கும் தீர்வு இருக்கிறதா என்று பார்க்கலாம். (ரொம்ப பர்சனலாக இருந்தால் வேண்டாம்)

    ReplyDelete
  76. //உண்டு//

    அப்படியா??? வியப்பாக இருக்கிறது.

    நன்றி மருத்துவர் புரூனோ.

    ReplyDelete
  77. அதுசரி

    கஞ்சா கடத்தல் மாதிரி சிகரெட் கடத்தல் நடக்கும் என்கிறீர்களா? :)

    கஞ்சா விற்பவரும், வாங்குபவரும் ஏன் இதே ஜனநாயக உரிமையை கேட்கக்கூடாது?

    ReplyDelete
  78. //If the cause of SIDS were medical or physiological, the incidence of SIDS would not be related to birth order.//

    சொதப்பல் வாதம்

    Effect of Rh Incompatability increases with birth order. It is a medical cause.

    Effects of Congenital Syphilis decrease with birth order. It is a medical cause

    --

    மேலே இருக்கும் வாசகம் தவறானது, ஆதாரமற்றது ஏன் சிறுபிள்ளைத்தனமானது என்று அழுத்தமாக கூறுகிறேன்

    ReplyDelete
  79. //நீங்கள் சொல்லும் மூன்றாவது விதியை அமல்படுத்தினால், பல போலீஸ்காரர்களின் ஓட்டு உங்களுக்கு தான். ஒரு புதிய தொழிலையும், மேலும் வருமானத்திற்கும் வழி வகுத்த நீங்கள் தான் நிரந்தர முதல்வர்!//

    சரியா சொன்னீங்க போங்க. போலீஸ்காரர்கள் ஒயின் ஷாப் மாமூல் இல்லாமல் சிகரெட் குடிக்கறதுக்கே கஷ்டப் பட்டுக்கிட்டு இருக்காங்களாம். :-(

    ReplyDelete
  80. //அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது//

    அமெரிக்காவில் தடை செய்யப்பட்டால் அந்த மருந்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டுமா....

    ஏன்

    எதற்கு

    --

    அமெரிக்காவில் உபயோகித்தால் அந்த மருந்தை இந்தியாவில் உபயோகிக்க வேண்டுமா

    ஏன்

    எதற்கு

    ReplyDelete
  81. //போலி மருந்துக்கள், சுகாதாரம் போன்றவையும் நிச்சயமாக கவனிக்கப்படவேண்டியவை தான், இருந்தும் அவை கவனிக்கப்படாததால் புகையையும் கவனிக்க கூடாது என்பது தவறு.//

    வழிமொழிகிறேன்

    ReplyDelete

  82. S&P -95.21 -5.47%

    Nasdaq -95.21 -5.47%

    DJI -678.91 -7.33%



    Bush, Bernanke, Paulson அனைவரும் ஆளுக்கு அஞ்சி பாக்கெட் தம் அடிப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    லண்டனில் பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் ஒரு பாட்டில் ஸ்காட்ச் அடிச்சிட்டு மட்டையாகி விட்டதாக டவுனிங் ஸ்ட்ரீட் செய்திகள் தெரிவிக்கின்றன..

    ReplyDelete
  83. *** புருனோ Bruno said...
    //***Why is passive smoking worse than smoking?

    Best Answer - Chosen by Voters
    Your premise of your question is false. //

    யாஹூ பதில்களை நம்ப வேண்டாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்

    --

    நீங்கள் கூட ஒரு கேள்வி கேட்டு, அதற்கு அடுத்த பெயரில் பதில் எழுதி, அதை முதல் பெயரில் தேர்ந்தெடுக்கலாம்**

    ஓ கே, யாஹூ பதில் ஒரு பக்கம் இருக்கட்டும்.

    நீங்கள், பாஸிவ் ஸ்மோக்கிங், ஆக்டிவ் சஸ்மோக்கிங்கைவிட தீமை விளைவிக்கும்னு சொல்றீங்களா?!

    ReplyDelete
  84. //Bush, Bernanke, Paulson அனைவரும் ஆளுக்கு அஞ்சி பாக்கெட் தம் அடிப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.//

    வெள்ளைமாளிகை அதிகாரிகளிடம் எல்லாம் தொடர்பு இருக்கா? நீங்க விவிஐபி போலிருக்கு :) JK

    ReplyDelete
  85. //அமெரிக்காவில் தடை செய்யப்பட்டால் அந்த மருந்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டுமா....

    ஏன்

    எதற்கு
    //
    டாக்டர் அவர்களே,

    அவை எந்த மருந்துகள் என்று கேட்டிருந்தாலாவது சிறிது சந்தோஷப்படிருப்பேன். மன்னியுங்கள். இந்த பதில் நீங்கள் எந்த கோணத்தில் வாதத்தை எடுத்துச் செல்ல விரும்புகிறீர்கள் என்பதைத் என்று சொல்கிறது.

    ReplyDelete
  86. //
    கயல்விழி said...
    //Bush, Bernanke, Paulson அனைவரும் ஆளுக்கு அஞ்சி பாக்கெட் தம் அடிப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.//

    வெள்ளைமாளிகை அதிகாரிகளிடம் எல்லாம் தொடர்பு இருக்கா? நீங்க விவிஐபி போலிருக்கு :) JK
    //

    ச்சேசே. வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூடல்லாம் எனக்கு ரொம்ப தொடர்பு இல்லீங்க. ஆனா அவங்க பாஸு நமக்கு ரொம்ப தெரிஞ்சவரு.

    நாங்கெல்லாம் ரொம்ப தோஸ்த்து.. புஷ்சுக்கு கோல்ஃப் விளையாட கத்து குடுத்ததே நான் தான். சொன்னா நம்பவா போறீங்க?

    நீங்க விளையாட்டுக்கு கேட்டாலும் நான் வி.வி.ஐ.பி தான். அதாவது, Velai Vetti Illaatha Paiyan :0)

    ஆனா, நான் சொன்ன மேட்டரு உண்மை தான். என்ன செஞ்சாலும் மார்க்கட்டுக்கு இப்பிடி மார்க்கெட் மாற மாட்டேங்குதேன்னு புஷ்சே (மீண்டும்) தம்மடிக்க ஆரம்பிச்சிடுவாரு!

    ReplyDelete
  87. //அமெரிக்காவில் உபயோகித்தால் அந்த மருந்தை இந்தியாவில் உபயோகிக்க வேண்டுமா

    ஏன்

    எதற்கு
    //
    டாக்டர் அவர்களே,

    இப்படி எங்கு சொல்லப்பட்டு இருக்கிறது?

    ReplyDelete
  88. //நீங்கள், பாஸிவ் ஸ்மோக்கிங், ஆக்டிவ் சஸ்மோக்கிங்கைவிட தீமை விளைவிக்கும்னு சொல்றீங்களா?!
    //
    டாக்டர், பதில் ப்ளீஸ்?

    ReplyDelete
  89. //
    கயல்விழி said...
    அதுசரி

    கஞ்சா கடத்தல் மாதிரி சிகரெட் கடத்தல் நடக்கும் என்கிறீர்களா? :)

    கஞ்சா விற்பவரும், வாங்குபவரும் ஏன் இதே ஜனநாயக உரிமையை கேட்கக்கூடாது?

    //

    ஆமா, கேட்டா குடுத்துறவா போறீங்க? தம்மடிக்கிறதுக்கே இந்த கும்மு கும்முறீங்க, இதுல கஞ்சா அடிக்க உரிமை கேட்டா? அவய்ங்க தலையெல்லாம் வெட்டணும்னு யார்னா சொன்னாலும் சொல்வாங்க. அப்புறம் தலை இல்லாம எங்க கஞ்சா அடிக்கிறது??

    சரி, அவங்க சார்பா நான் கேட்கிறேன்.. இயற்கை முறை விவாசாயத்தை ஊக்குவிக்கவும், வறுமையில் வாடும் கஞ்சா விவசாயிகளின் குடும்ப நலனுக்காகவும் அரசு கஞ்சா நல வாரியம் அமைத்து, விளையும் கஞ்சாவை தானே ஒட்டு மொத்த கொள்முதல் செய்து, மக்களின் நலனுக்காக அதை மலிவு விலையில் ரேஷன் கடையில் வழங்க வேண்டும். அதுக்காக ஒரு ரூபாய் வேண்டாம்.. ஒன்றரை ரூபாய் என்றாலும் கஞ்சா குடிமக்களுக்கு ஓக்கே!

    ReplyDelete
  90. புகைப்பிடிப்பதை தடைசெய்தால் அது வேறு பாதையில் கொண்டு சென்றுவிடும்... ஆகவே தான் உலகின் அனைத்து நாடுகளிலும் புகைத்தல் தடைசெய்யப்படவில்லை. (மேலை நாடுகளில் பொதுஇடங்கள் ஆகிய ரெஸ்டுரன்ஸ், வாஷ்ரூம், ஒபிஸ், தியேட்டர் போன்றவைகளில் தடைசெய்ய்பட்டுள்ளன...அதுவும் எனக்கு தெரிந்தவகையில் கடந்த சில வருடங்களாக...) நானே ஒரு நாளைக்கு சுமார் 15 அடிப்பேன் :-) 16 வருடங்களாக ஊதித்தள்ளுறேன் :-)

    -வீணாபோனவன்.

    ReplyDelete
  91. அதுசரி,

    நல்ல வேளை "நான் தான் புஸ்ஸுடைய மருமகனாக்கும்" என்று சொல்லாமல் விட்டீர்களே. அது வரைக்கும் மகிழ்ச்சி( நான் ஐடியா தருகிறேனா?)

    ReplyDelete
  92. வாங்க வீணாப்போனவர். உங்க பெயரை சரியாத்தான் வச்சிருக்கீங்க!

    ReplyDelete
  93. கஞ்சா வேறயா? ஏன் இப்படி எல்லாம்??:(

    அதையாவது விட்டு வைங்க தெய்வங்களே!

    ReplyDelete
  94. //நானே ஒரு நாளைக்கு சுமார் 15 அடிப்பேன் :-) 16 வருடங்களாக ஊதித்தள்ளுறேன் :-)//

    வீணாப் போனவரே, இதுதான் சரியான நேரம். இந்த பழக்கத்தை விட்டுத் தள்ளுங்கள். மனதி உறுதியுடன் நிகோரெட் பேட்ச் மற்றும் கம் போன்றவற்றின் உதவியுடன் இதை விட்டொழியுங்கள்.

    ReplyDelete
  95. //
    கயல்விழி said...
    அதுசரி,

    நல்ல வேளை "நான் தான் புஸ்ஸுடைய மருமகனாக்கும்" என்று சொல்லாமல் விட்டீர்களே. அது வரைக்கும் மகிழ்ச்சி( நான் ஐடியா தருகிறேனா?)

    //

    அட, அது உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா? என்ன தான் வெளம்பரம் வேணாம்னாலும் நம்ம பயக கேக்குறாய்ங்களா? எனக்கு தெரியாம எல்லார்ட்டையும் சொல்லிட்டாய்ங்க போலருக்கு..

    //
    கஞ்சா வேறயா? ஏன் இப்படி எல்லாம்??:(

    அதையாவது விட்டு வைங்க தெய்வங்களே!

    //

    இதையே தாங்க நானும் சொன்னேன்... ஆனா அவய்ங்க நமக்கு வைக்காம அதையும் அடிச்சிட்டாய்ங்க.. நாம யாரு? அப்புறம் சண்டை போட்டு நைட்டோட நைட்டா நமக்கு ஒரு பொட்டலம் (அந்த ஊருல அதுக்கு அப்பிடி தான் பேரு) வாங்கியார சொல்லிட்டோம்ல?

    ReplyDelete
  96. //அட, அது உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா? என்ன தான் வெளம்பரம் வேணாம்னாலும் நம்ம பயக கேக்குறாய்ங்களா? எனக்கு தெரியாம எல்லார்ட்டையும் சொல்லிட்டாய்ங்க போலருக்கு..
    //
    LOL

    புஷ் மருமகன் வந்து கமெண்ட் போடும் அளவுக்கு பாப்புலராகிட்டத நினைச்சா புல்லரிக்குது.

    //இதையே தாங்க நானும் சொன்னேன்... ஆனா அவய்ங்க நமக்கு வைக்காம அதையும் அடிச்சிட்டாய்ங்க.. நாம யாரு? அப்புறம் சண்டை போட்டு நைட்டோட நைட்டா நமக்கு ஒரு பொட்டலம் (அந்த ஊருல அதுக்கு அப்பிடி தான் பேரு) வாங்கியார சொல்லிட்டோம்ல?
    //

    ஏதோ பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வந்தமாதிரி இல்ல சொல்றீங்க? டூப்புக்கும் ஒரு அளவு வேணும் சார்.

    ReplyDelete
  97. //
    ஏதோ பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வந்தமாதிரி இல்ல சொல்றீங்க? டூப்புக்கும் ஒரு அளவு வேணும் சார்.
    //

    அய்ய, உங்களுக்கு மேட்டரே தெரில. அந்த நைட்டு நேரத்துல பிரியாணி வாங்கிறது தாங்க கஷ்டம். வேணும்னா புரோட்டா கெடைக்கும்.. "இப்ப தான் போட்டோம், சூடா இருக்கு பாருங்க" அப்பிடின்னு கூப்டுவாய்ங்க..போயி பாத்தா, அது ஆறி போயி, மழைல நனைஞ்ச கெமிஸ்ட்ரி புக்கு மாதிரி இருக்கும்.. வேற வழி? அதையே தின்னுட்டு வர வேண்டியது தான்..

    அப்புறம், நான் புஷ்சு மருமகன்கிறதுக்காக சார்னு மரியாதையெல்லாம் வேண்டாம். நீங்க பேரை சொல்லியே கூப்பிடுங்க..புஷ்சு ஒண்ணும் கோவிச்சிக்க மாட்டாரு :0)

    ReplyDelete
  98. //அமெரிக்காவில் தடை செய்யப்பட்டால் அந்த மருந்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டுமா....

    ஏன்

    எதற்கு// அமெரிக்காவில் ஒரு மருந்து தடை செய்யப்படுகிறது என்றால் பலப் பல சோதனைகளுக்குப் பிறகு அதன் கெடு பலன்கள் நல் பலன்களை விட அதிகம் என்றான பிறகு அதை தடை செய்வார்கள். இந்தையாவிலும் அரசாங்கம் மக்களுக்காத்தானே செயல்படுகிறது? தடை செய்ய வேண்டியதுதானே நியாயம்?

    தடை என்பது, கேட்ட கமிஷன் கிடைக்காததால் லாட்டரி தடை போலவோ அல்லது பேரம் படியாததால் பான் பராக் தடை போலவோ அல்ல.

    மேலும் நீங்கள் செலெக்டிவான கேள்விகளுக்கு மட்டுமே பதில்களை சொல்கிறீர்கள்.

    ReplyDelete
  99. //ஏதோ பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வந்தமாதிரி இல்ல சொல்றீங்க? டூப்புக்கும் ஒரு அளவு வேணும் சார்.// அவர் சரியாகத்தான் சொல்கிறார் கயல்விழி. அதன் பெயர் பொட்டலம் தான்.

    ReplyDelete
  100. ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போலிருக்கு அமர பாரதி? :)

    You the 100th(பயப்படாதீங்க, 100வது பின்னூட்டம் உங்களுடையது)

    ReplyDelete
  101. //அப்புறம், நான் புஷ்சு மருமகன்கிறதுக்காக சார்னு மரியாதையெல்லாம் வேண்டாம். //

    நெனைப்பு தான் பொழப்ப கெடுக்குது :) :)

    ReplyDelete
  102. தனி: கோச்சுக்கவேண்டாம், ச்ச்சும்மா வெளாட்டுக்கு !!!!

    ReplyDelete
  103. அருமையான பதிவு கயல்விழி. என்னோட பல்கலைகழகத்தில் Take 5 எடுக்கவே அனுமதிப்பாங்க...இதுல்ல கொடுமை என்னன்னா பொண்ணுங்களும் ஆண்களுக்கு ஈடாக புகைப்பது கண் கொள்ளா காட்சி :-)எதில்லெல்லாம் சமத்துவம் பாருங்க :-(

    ReplyDelete
  104. தெளிவான கருத்துகள் கயல்.புகைப்பிடிக்கும் பழக்கம் காலேஜ் நாட்களில் ஆரப்பித்துவிடுகிறது.இதில் பெரிதாக என்னதான் இருக்கிறது எனப்பார்த்துவிடலாமே என்ற அசட்டுத்துணிச்சலில் ஆரம்பிப்பது அப்படியே கடைசிவரை ஒட்டிக்கொள்கிறது.அப்படி ஆரப்பித்த என் நண்பர்களில் சிலர் நாங்கள் பேங்களூர் வந்து ஒரு வீடெடுத்து ஒன்றாக தங்கியிருந்த காலத்தில் அதற்கு அடிமையாக மாறி, செயின் ஸ்மோக்கர்ஸ் ஆக மாறிவிட்டார்கள். சில நாட்கள் மிகவும் தாமதமாக வேலையிலிருந்து நடுஇரவு திரும்பிவந்தப்பிறகு,அடிக்க சிகரெட் இல்லாமல், dust-bin'ல் உள்ள துண்டு சிகரெட்களை எடுத்து அடிக்கும் நிலைக்கு ஆளானார்கள்.
    அதற்குப்பிறகு எங்கள் தொடர்ச்சியான அறிவுரைகளாலும்,கல்யாணம் ஆனவுடன் மனைவியின் கண்டிப்பினாலும் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டார்கள்.அவர்களில் ஒரு நண்பன்,அவன் தந்தை மேல் மிகவும் பாசமுள்ளவன். திடீரென அவர் தந்தை நோய்வாய்ப்பட்டு மறைந்துவிட்டார். அவன் மிகவும் உடைந்துப் போனான்.அவனிடம் உன் தந்தை நினைவாக 'சிகரெட்'பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடு என கூறினோம்.சொன்னால் நம்பமாட்டீர்கள்,அன்று சிகரெட்டை தூக்கிப்போட்டவன்தான்,கிட்டத்தட்ட 6 வருடங்கள் ஆயிற்று,இதுவரை அவன் சிகரெட்டை தொடவில்லை

    ReplyDelete
  105. இது இன்றைய தட்ஸ்டமிழ்.காம் செய்தி.

    //நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள சோழசிராமணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி அமுதா. இவருக்கு 3 வயதில் ஆண் குழந்தையும், 10 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளன.

    இதில் பெண் குழந்தையான ரசிகாவுக்கு ஜேடர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. அதன் பின்னர் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.

    அங்கு குழந்தையின் நிலை மோசமடைந்தது. இதையடுத்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் குழந்தை ரசிகா நேற்று காலை இறந்தாள்.

    பிரேதப் பரிசோதனைக்கு உடலை போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.
    //

    இது ஒரு சமயம் விஷமிகளின் வேலையாக இருக்குமோ. இதற்கு யார் பொறுப்பேற்பது?. இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டாமா? சிகரெட் மட்டும்தான் வாழ்க்கைப் பிரச்சினையா? இது சுகாதார அமைச்சகத்தின் வேலை இல்லையா? சிகரெட் பிடிப்பதை யார் வேண்டுமானாலும் விட்டு விடச் சொல்லி கேட்டுக்கொள்ளலாம். ஆனால் இது போன்ற பிரச்சினைகளில் நடவடிக்கை எடுப்பதற்குத் தானே அரசாங்கம் தேவை?

    ReplyDelete
  106. அருமையான கருத்துக்கள்... நானும் வழிமொழிகிறேன் :)))

    ReplyDelete
  107. வாங்க செந்தழல் ரவி. நோ ப்ராப்ளம்.

    வருக புனிதா. சிகரெட் புகை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறதாம்.

    ReplyDelete
  108. வாங்க செந்தழல் ரவி. நோ ப்ராப்ளம்.

    வருக புனிதா. சிகரெட் புகை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறதாம்.

    ReplyDelete
  109. அமர பாரதி

    என்னை கேட்டால் நான் என்ன பதில் சொல்வது? :) :)

    வருகைக்கு மிக்க நன்றி ஜி. :)

    ReplyDelete
  110. வாங்க மோகன்

    இங்கே ஒருவர் சிகரெட் பழக்கத்தை விடவே முடியாது என்று கருத்து தெரிவித்திருந்தார், அதில் உண்மை இல்லை என்பதற்கு உங்கள் நண்பர் நல்ல எடுத்துக்காட்டு!

    ReplyDelete
  111. //
    கயல்விழி said...
    //இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது.//

    என்ன முக்கிய காரணம், சொல்லுங்க அதுசரி. அதற்கும் தீர்வு இருக்கிறதா என்று பார்க்கலாம். (ரொம்ப பர்சனலாக இருந்தால் வேண்டாம்)

    //

    அது ஒண்ணும் பெர்சனல் எல்லாம் இல்ல. என்னை தெரிஞ்ச எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..ஆனா நான் மட்டும் தான் இப்பிடியா இல்ல நெறைய பேருக்கு இந்த பிரச்சினை இருக்கான்னு தெரியல. அதனால சொல்ல வேண்டாம்னு பாத்தேன்.

    அப்புறம் சொல்லலாம்னு பாத்தா, நீங்க தீர்வு அது இதுன்னு பயமுறுத்திட்டீங்க.

    கொஞ்சம் ரூடா இருந்தாலும், பிரச்சினை என்னன்னா, இப்ப நான் பாட்டுக்கு கிழக்கு பாத்து நடந்து போயிட்டுருக்கேன்னு வையுங்க, அப்ப யார்னா வந்து கிழக்கால தான் போணும், மேற்கு பக்கம் போயிடாதன்னு சொன்னா, திரும்பி கரெக்டா மேற்கு பக்கம் போறது தான் எனக்கு வழக்கம். அது முட்டு சந்தா இருந்தாலும் வேணும்னே போறது... இது தப்புன்னு எனக்கும் தெரியும்.. ஆனா இதுவரை மாத்திக்க முயற்சிக்கலை. இனிமேலாவது முயற்சி செய்யவாவது முயற்சி செய்யலாமான்னு யோசிக்கிறேன்.. :0)

    ReplyDelete
  112. உலகத்தை பாதி சுற்றியவுடன் மேற்கு கிழக்காயிடும், அது சரி! இல்லையா?
    LOL!

    இந்த ஆட்டிடூட் நிறையப்பேரிடம் உண்டுங்க!

    நிறையபேர் ஒருவரை புகழ்ந்தா எனக்குத்தெரிய பலர், புகழப்படுகிறவருடைய கெட்ட பழக்கங்களையும் சொல்லுவார்கள். அவரை கீழே இறக்கப்பார்ப்பார்கள்.
    இதுவும் ஒரு மாதிரி கிழக்கு மேற்குதான்!

    ReplyDelete
  113. //கொஞ்சம் ரூடா இருந்தாலும், பிரச்சினை என்னன்னா, இப்ப நான் பாட்டுக்கு கிழக்கு பாத்து நடந்து போயிட்டுருக்கேன்னு வையுங்க, அப்ப யார்னா வந்து கிழக்கால தான் போணும், மேற்கு பக்கம் போயிடாதன்னு சொன்னா, திரும்பி கரெக்டா மேற்கு பக்கம் போறது தான் எனக்கு வழக்கம். அது முட்டு சந்தா இருந்தாலும் வேணும்னே போறது... இது தப்புன்னு எனக்கும் தெரியும்.. ஆனா இதுவரை மாத்திக்க முயற்சிக்கலை. இனிமேலாவது முயற்சி செய்யவாவது முயற்சி செய்யலாமான்னு யோசிக்கிறேன்.. :0)
    //

    நீங்க மேற்காவே போங்க சாமி, முடிஞ்சா வழியில நாலு சிகரெட் பாக்கேட் வாங்கி ஊதிக்கிட்டே போங்க :) :) JK

    ReplyDelete
  114. //
    வருண் said...
    உலகத்தை பாதி சுற்றியவுடன் மேற்கு கிழக்காயிடும், அது சரி! இல்லையா?

    //

    ஆஹா, இதுல இப்பிடி ஒரு மேட்டரு இருக்கா? விடுங்க..இனிமே நேரா மேற்கா போகாமா, வட மேற்கா போயி, அப்புறம் தென் மேற்கா திரும்பி, அப்புறம் வட கிழக்கா போயி...ச்சே இப்ப நான் எங்க போயிட்டு இருக்கேன்..

    ReplyDelete
  115. //
    கயல்விழி said...

    நீங்க மேற்காவே போங்க சாமி, முடிஞ்சா வழியில நாலு சிகரெட் பாக்கேட் வாங்கி ஊதிக்கிட்டே போங்க :) :) JK
    //

    ஆஹா, இதுக்குத்தான் ந‌ம்ம‌ ர‌க‌சிய‌த்தை யார்க்கிட்ட‌யும் சொல்ற‌துல்ல‌.. ஒழிக்கிற‌துன்னே முடிவு ப‌ண்ணிட்டீங்க‌ளா?? இப்ப‌ நான் பாட்டுக்கு மேற்கா தான‌ போயிக்கிட்டு இருந்தேன்...இப்ப‌ என்னை கிழ‌க்கால‌ போக‌ வ‌ச்சிட்டீங்க‌ளே? முடிஞ்சா நாலு பாக்கெட் வாங்க‌லாம் தான்...வ‌ழியில‌ எதுனா க‌டையிருக்கான்னு பாக்க‌றேன்..

    (அதெல்லாம் விடுங்க‌..இந்த‌ கிழ‌க்கு மேற்கு வெறுப்பில‌ ந‌ம்ம‌ க‌டைப்ப‌க்க‌ம் வ‌ராம‌ இருந்துராதீங்க‌.. இன்னைக்கி விக்கிர‌மாதித்த‌ன் திரும்பி வ‌ந்துட்டான்..புதுசா ஒரு ப‌திவு போட்ருக்கேன். டைம் கெடைச்சா க‌டைப்ப‌க்க‌ம் வாங்க‌!)

    ReplyDelete
  116. நானும் இந்த பழக்கத்தை விட முயற்சித்து கொண்டு தான் இருக்கிறேன்..
    இருந்தாலும் நான் பொது இடத்தில் புகை பிடிப்பது இல்லை..
    தனியாகவோ இல்லை புகைபிடிக்கும் வசதி ( அறை) உள்ள இடத்தில் மட்டும் தான் புகைக்கிறேன்,..
    ஏதோ என்னால் முடிந்தது இது தான்..

    ReplyDelete
  117. விளக்கமான கண்ணோட்டம்..

    அருமையான பதிவு..

    ReplyDelete
  118. அணிமா

    முதலில் உங்களை பாராட்டுகிறேன். புகைப்பழக்கத்தை விட முயற்சிப்பதால் மட்டுமல்ல, உங்களுடைய பொறுப்புணர்ச்சிக்கு. சக இந்திய/ தமிழர்களிடம் இந்த பொறுப்புணர்ச்சி இல்லை என்பது எனக்கு மிகப்பெரிய குறையாக இருக்கும். உங்களுடைய முயற்சிக்காக தனிப்பதிவே போடலாம்.

    ReplyDelete
  119. என் பழைய ரூம்மேட் ஒரு தம்மை எடுத்து, மெதுவா patio'க்கு போய், அழகா பத்தவெச்சு, ரசிச்சு ஒரு இழு இழுத்து, வானத்தை பார்த்து புகை விட்டார்ன்னா, அவர் face'ல ஒரு satisfaction தெரியும் பாருங்க, அடாடாடா!!!. எல்லாத்தையும் தாண்டி, அதுல ஏதோ ஒண்ணு இருக்குங்க... இன்னொருத்தன் இருந்தான், அவனும் இப்படித்தான். அதுவும் பக்கத்து ஏரியா'ல ஒரு இந்தியன் ஸ்டோர்'ல நம்மூரு kings கிடைக்குதுன்னு, 15 மைல் டிரைவ் பண்ணி போய் அதை வாங்கிட்டு வருவான். So main effects, side effects எல்லாம் தெரிஞ்சும் இப்படி பண்றாங்கன்னா, அதுல ஏதோ இருக்குங்க.
    -- McChamy
    (இனிமே பேரை பாத்து சிரிக்கமாட்டீங்கன்னு நினைக்கறேன்)

    ReplyDelete
  120. Here are few things smokers want to say!

    * எனக்கு அது கெடுதல்னு தெரியும். இருந்தாலும் அதில் கிடைக்கும் இன்பம் "வொர்த்" னு நினைக்கிறேன்.
    அதற்காக என்னை சாகப் போகிறவனைப்போல பார்க்கவேண்டாம்! எனக்கு லங் கேன்சர் வரும் முன்னே உங்களுக்கு என்ன வரப்போதோ யாருக்குத்தெரியும்?

    * நாங்க ஒண்ணும் கொலைகாரர்கள் இல்லைங்க. அதுபோல் எங்களைப் பார்ப்பது எரிச்சலாக இருக்கு. நாங்க யாருக்கும் தீமை விளைவிக்க புகை பிடிப்பதில்லை.

    ReplyDelete
  121. நல்ல பதிவு கயல்விழி....
    நானும் இதை விடலாம் என்று முடிவு செய்துள்ளேன் :(((((
    I am not an active smoker..I smoke occasionaly...
    பார்போம்!!! அதையும் விட முடிகிறதா என்று :)))))))
    நான் முதலில் இந்த சட்டத்திற்கு கோபப்பட்டேன். இப்போது உங்கள் பதிவை பார்த்தவுடன் தான் புரிகிறது...மிக்க நன்றி உங்கள் பதிவிற்கு :))))))

    ReplyDelete