Sunday, October 12, 2008

உருப்புடாதது_அணிமா செய்துக்கொண்டிருக்கும் உருப்படியான காரியம்

ஏதோ என்னால் முடிந்தது இது தான்..நானும் இந்த பழக்கத்தை விட முயற்சித்து கொண்டு தான் இருக்கிறேன்..
இருந்தாலும் நான் பொது இடத்தில் புகை பிடிப்பது இல்லை..தனியாகவோ இல்லை புகைபிடிக்கும் வசதி ( அறை) உள்ள இடத்தில் மட்டும் தான் புகைக்கிறேன்,..

- உருப்புடாதது_அணிமா


மேலிருக்கும் பின்னூட்டத்தை எனக்கு எழுதியவர் பதிவர் திரு.உருப்புடாதது_அணிமா. சக இந்தியர்கள்/தமிழர்களிடம்(எந்த நாட்டில் இருந்தாலும்) நான் 'இல்லையே' என வருந்துவது, அக்கறையின்மை மற்றும் பொறுப்பின்மை. யாராவது எப்படியாவது போகட்டும், என்னுடைய வேலை கெடக்கூடாது என்று நினைக்கும் சுயநலம். பல சமுதாய அவலங்களுக்கும், சுகாதாரக்கேட்டுக்கும் இந்த பொறுப்பின்மையே காரணம் என்று நினைக்கிறேன்.

கோடைகாலத்தில் மின்வெட்டினால் அவதிப்படும் போது எப்போதாவது வரும் மெல்லிய தென்றல் போல அணிமா போன்ற மனிதர்கள் ஆறுதல் அளிக்கிறார்கள். அணிமாவின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை! பாராட்டு வெறும் புகைப்பிடித்தலை விடுவதற்காக மட்டுமல்ல, சமுதாய அக்கறையுடன் செயல்படுவதற்கும் சேர்த்து. வாழ்த்துக்கள் அணிமா!

30 comments:

  1. உருப்படாதது_அணிமாவை நானும்
    வாழ்த்துகிறேன்

    (இம்முறையும் சிவஞானமணி என்றுதான் படிப்பீர்களா?)

    ReplyDelete
  2. என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... என்னை பற்றி(யும்) விளக்கம் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி..
    இதை போல் படிக்கும் போது, கண்டிப்பாக இந்த பழக்கத்தை விட வேண்டும், விட்டு ஆகா வேண்டும் என்றே தோன்றுகிறது,, ( கண்டிப்பாக முயற்சி எடுப்பேன் ..)
    தங்களின் பதிவில் என்னை பற்றி குறிபிட்டதற்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  3. தன்னால் முடியவில்லை எனினும் மற்றவர்கள் திருந்த வேண்டும் என்ற நல்ல எண்ணமும் ..
    பொது இடங்களில் மற்றவர்களுக்கு இன்னல் தரக்கூடாது என்ற நல்ல எண்ணமும் கொண்ட
    அணிமா அவர்களை
    பாராட்டுகிறேன் நானும் ...

    இந்த நல்ல உள்ளத்தை வெளி உலகிற்கு காட்டிய உங்களுக்கும் எனது பாராட்டுக்கள் ..
    திரு கயல் விழி அவர்களே ...

    ReplyDelete
  4. எப்படியும் அணிமா திருந்தினால் மகிழ்ச்சியே... அப்படியே வால்பையனுக்கும் ஒரு பதிவிடுங்களேன்...

    ReplyDelete
  5. என்னையும் மதித்து , என் மேல் அக்கறை கொண்ட உள்ளங்களுக்கு மிக்க நன்றி..
    நன்றி கயல்விழி அவர்களுக்கும்...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் அணிமா அண்ணாச்சி..இனிமே உங்க செலவு பாதியா கொறையும் பாருங்க!

    கயல்விழி,

    நான் உங்கள்ட்ட அப்பவே சொல்லல, நூறு கோடி பேருல, கண்டிப்பா ஒரு ரெண்டு பேராவது யோசிப்பாங்கன்னு.. நான் சொன்னது கரெக்டா ஆயிருச்சி :0)

    (இப்பிடி எல்லாரும் புகையைப் பத்தி தெனம் எட்டு ஷோ ஓட்டும்போது நான் மட்டும் சும்மா இருந்தா சமூக விரோதி ஆயிடுவேன். அதனால, நானும் இதைப் பத்தி ஒரு பதிவு போட்டுட்டேங்கோ!)

    ReplyDelete
  7. அட என்ன எல்லோருமே ஒரே சைடுல எழுதி இருக்காங்க?
    என்னை பொறுத்தவரை, அடிமையாக விட்டால், என்றைக்கோ ஒரு நாள் secondary/primary புகைப்பிடிப்பது எதோ பெரிய குற்றம் மாதிரியோ இல்லை, அப்படி புகை பிடிப்பவர்களை சமூக விரோதிகள் போலோ சித்தரிக்க தேவையில்லை.

    என்றைக்காவது புகையை சகித்து கொள்வதாலும், சில சமயம் கம்பெனி கொடுப்பதாலும் சில நன்மைகள் இருக்கு. முக்கியமாக உங்கள் தொழில் முறையிலோ, அல்லது நட்பு முறையில்லோ உள்ளவர்களுக்கு அந்த பழக்கம் இருக்குமானால்.

    சில மாதங்களுக்கு முன்பு, நான் ஒரு கஸ்டமர் டீம்யை இந்தியா விசிட் அழைத்து வந்த போது, it was so much easy to bond in a short span of time by sharing some smoke. கஸ்டமர் மட்டுமில்லை - உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் கூட. முதல் காரணம், you get to have some true informal time with people, you also come across as someone who is not judgemental on that person's personal choices. of course you have to define your limits and avoid getting addicted. its like social drinking. for me social smoking is fine and it helps. I started about 2 years back so i mean what I say - :)

    ReplyDelete
  8. உருப்படாதது_அணிமாவை நானும்
    வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  9. வாங்க சிவஞானம்ஜி. :)

    ஆமாம், வழக்கம் போல உங்க பெயரை அப்படித்தான் படித்தேன்.

    ReplyDelete
  10. //என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... என்னை பற்றி(யும்) விளக்கம் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி..
    இதை போல் படிக்கும் போது, கண்டிப்பாக இந்த பழக்கத்தை விட வேண்டும், விட்டு ஆகா வேண்டும் என்றே தோன்றுகிறது,, ( கண்டிப்பாக முயற்சி எடுப்பேன் ..)
    தங்களின் பதிவில் என்னை பற்றி குறிபிட்டதற்கு மிக்க நன்றி..
    //

    வாங்க அணிமா. எங்க எல்லாரிடமும் இப்படி ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கும்(சிகரெட் பிடிப்பதை போல ஆப்வியஸாக இல்லை என்றாலும்). ஏதோ அந்த பழக்கத்தைவிட முயற்சி செய்வதே பாராட்டுக்குரியது. எல்லாம் ஒரு சப்போர்ட்டுக்காக தான், உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. //இந்த நல்ல உள்ளத்தை வெளி உலகிற்கு காட்டிய உங்களுக்கும் எனது பாராட்டுக்கள் ..
    திரு கயல் விழி அவர்களே ...
    //

    வாங்க விஷ்ணு, நன்றி.

    புகைப்பழக்கத்தை விட முயற்சிப்பவர்களுக்கு எல்லாம் இப்படி ஆதரவு தரலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

    ReplyDelete
  12. வாங்க கூடுதுறை. வால்பையன் கூட புகைப்பழக்கத்தை விடுகிறாரா என்ன?

    ReplyDelete
  13. //வாழ்த்துக்கள் அணிமா அண்ணாச்சி..இனிமே உங்க செலவு பாதியா கொறையும் பாருங்க!

    கயல்விழி,

    நான் உங்கள்ட்ட அப்பவே சொல்லல, நூறு கோடி பேருல, கண்டிப்பா ஒரு ரெண்டு பேராவது யோசிப்பாங்கன்னு.. நான் சொன்னது கரெக்டா ஆயிருச்சி :0)
    //

    வாங்க அதுசரி :) நீங்கள் சொன்னது சரியே!

    ReplyDelete
  14. //என்னை பொறுத்தவரை, அடிமையாக விட்டால், என்றைக்கோ ஒரு நாள் secondary/primary புகைப்பிடிப்பது எதோ பெரிய குற்றம் மாதிரியோ இல்லை, அப்படி புகை பிடிப்பவர்களை சமூக விரோதிகள் போலோ சித்தரிக்க தேவையில்லை.
    //

    வாங்க சுந்தர். :) அடிமையாகமல் இருப்பது நிறைய மனிதர்களுக்கு சாத்தியம் இல்லை. நீங்கள் நிச்சயம் இதில் exceptionol.

    நீங்கள் சொல்வதில் ஒரு உண்மை இருக்கிறது, புகைப்பவர்களை சமூகவிரோதிகள் போல சித்தரிக்க தேவை இல்லை. தனியே அவர்கள் புகைப்பிடித்தால் விமர்சிக்க கூட தேவை இல்லை. ஆனால் பொது இடத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் விமர்சனத்துக்குரியதே.

    //சில மாதங்களுக்கு முன்பு, நான் ஒரு கஸ்டமர் டீம்யை இந்தியா விசிட் அழைத்து வந்த போது, it was so much easy to bond in a short span of time by sharing some smoke. கஸ்டமர் மட்டுமில்லை - உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் கூட. //

    சிகரெட் கம்பனிகளின் மிகப்பெரிய வெற்றி புகைப்பிடித்தலை சாப்பிடுவது போல ஒருவித சமூக பழக்கமாக மாற்றியது. இது ஒரு பிஸ்னஸ் டெக்னிக் :)

    பான்பராக்குக்கும் இதே டெக்னிக் உபயோகித்தார்கள்.

    ReplyDelete
  15. வாங்க கடையம் ஆனந்த். :)

    ReplyDelete
  16. வணக்கம் ஏன் இன்னும் இணையவில்லை..
    இதில் http://paakeypa.blogspot.com
    அழைப்பு அனுப்பி இருந்தேனே?

    ReplyDelete
  17. //வணக்கம் ஏன் இன்னும் இணையவில்லை..
    இதில் http://paakeypa.blogspot.com
    அழைப்பு அனுப்பி இருந்தேனே//

    சேர்ந்தாச்சு, நன்றி கூடுதுறை :)

    ReplyDelete
  18. //"உருப்புடாதது_அணிமா செய்துக்கொண்டிருக்கும் உருப்படியான காரியம்"//

    என்னது எங்கண்ணன் உருப்படியான காரியமா? முடியல.... என்னால நம்ப முடியல.

    ReplyDelete
  19. //
    கயல்விழி said...


    வாங்க சுந்தர். :) அடிமையாகமல் இருப்பது நிறைய மனிதர்களுக்கு சாத்தியம் இல்லை. நீங்கள் நிச்சயம் இதில் exceptional.
    //

    நானும் சுந்தர் சாரும் சேந்து "நான் அடிமை இல்லை _ பார்ட் டூ" எடுக்கலாம்னு இருக்கோம்.. பெங்களூர் சுந்தர் சார் தான் ப்ரட்யூசர். கதை, த(தி)ரைக்கதை, வஜனம், டப்பாங்குத்து பாடல்கள், குத்தாட்ட அமைப்பு, ஜன்ட பயிற்சி, மேக்கப்பு, சூட்டிங் ஸ்பாட்ல சமைக்கிறது, வெளிப்புற படப்பிடிப்புக்கு வண்டி ஓட்றது... எல்லாம் நான் தான். அஷ்டாவதானின்னு பேரு வாங்கியே தீருவேன்..


    //
    நீங்கள் சொல்வதில் ஒரு உண்மை இருக்கிறது, புகைப்பவர்களை சமூகவிரோதிகள் போல சித்தரிக்க தேவை இல்லை. தனியே அவர்கள் புகைப்பிடித்தால் விமர்சிக்க கூட தேவை இல்லை.
    //

    த‌னிய‌ எப்பிடி த‌ம்ம‌டிக்கிற‌து?

    ப‌குத்துண்டு ப‌ல்லுயிர் ஓம்புத‌ல் ம‌னித‌ருக்கு க‌ட‌னே...அப்பிடின்னு அவ்வையார் சொல்லியிருக்காங்க‌.. நாங்கெல்லாம் அவ்வையாரு (அவ‌ங்க‌ யாருன்னு கேக்க‌ப்ப‌டாது) சொன்ன‌ப‌டி ந‌ட‌க்கிற‌வ‌ங்க‌ :0)

    ReplyDelete
  20. கயல்விழி நான் நிறுத்திவிட்டேன் இந்த ரம்ஜான் நோன்பு இருந்ததில் இருந்து :))

    ReplyDelete
  21. உருப்படாதது_அணிமாவை நானும்
    வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  22. உருப்புடாதது_அணிமா உருப்படியான யோசனையை நானும் கடை பிடிக்க முயலுகிறேன்

    ReplyDelete
  23. தலைக்கு பாராட்டு பட்டம் குடுத்ததற்கு மிக்க நன்றிகள்

    ReplyDelete
  24. இந்தஉசார்லயே தல இது மாதிரி இன்னொரு பதிவையும் போட்டிருக்காரு. அதுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  25. அடுத்த பூச்செண்டு உங்களுக்கு தான் நசரேயன் :)

    ReplyDelete
  26. வருகைக்கு நன்றி சுபாஷ்

    ReplyDelete
  27. உருப்படாதது_அணிமாவின் பொது நலம் பார்த்து சந்தோஷம் அடைகிறது மனம்.
    அடுத்தவங்க மேல இவ்வளவு அக்கறையுடன் இருக்கும் நீங்கள், முதல் அக்கறையை உங்கள் மீது வையங்கள் என தாழ்வன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  28. // புதுகை.அப்துல்லா said...
    கயல்விழி நான் நிறுத்திவிட்டேன் இந்த ரம்ஜான் நோன்பு இருந்ததில் இருந்து :))//

    மெய்யாலுமா?

    ReplyDelete