Monday, October 4, 2010

என்னங்க எந்திரன் இப்படி ஆகிப் போச்சு?!


எந்திரன் படம் வருவதற்கு முன்பே அதற்கெதிராக பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டு திரிந்த பதிவர்களின் முகத்தில் அறைவதுபோல் படம் வந்து இருக்கு! ஆமாங்க நானும் படம் பார்த்துவிட்டேன்! எந்திரனை கரிச்சு க் கொட்டியவர்களுக்கெல்லாம் செம ஆப்புதான் போங்கோ!

குறை சொல்லனும்னு எந்திரன் எந்திரன்னு தூக்கமில்லாமல் திரியும் சில வயித்தெரிச்சல் கோஷ்டிகளும் தேடித் தேடி கஷ்டப் பட்டு எதையாவது பிடிச்சுத்தான் குறை சொல்ல முடியும்! அதிலும் ரஜினியைக் குறை சொல்வது ரொம்ப ரொம்ப கஷ்டம்!

எந்திரன் படத்தைப் பற்றி சில சிறப்பம்சங்களை மட்டும் இங்கே தருகிறேன்.

* ஏர் ஆர் ரகுமானின் இசை ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா வந்து இருக்கு! பாடல்களிலும் சரி, பேக்-க்ரவுண்ட் இசையும் சரி! ஸ்லம் டாக் மில்லியனருக்கு பதிலா இதுக்கு ஆஸ்கர் கொடுத்து இருக்கலாம்! ரசூல் பூக்குட்டிக்கும் பாராட்டுக்கள்!

* சங்கர், ஒரு சயண்ஸ்-ஃபிக்ஷன் கதையை சாதாரண மக்களுக்குக் கூட புரியும்படி அழகா எடுத்து இருக்கிறார்.

* இந்தப் படத்தில் ரஜினிக்கு பஞ்ச் டயலாக் கெடையாது!

* ரஜினி சிகரெட் குடிக்கலை, தண்ணி அடிக்கலை!

* நெசமாவே ரஜினி, "ரஜினி"யாகவே வ்ரவில்லை! ஒரு நடிகனாக, அந்தக் கேரக்டர்களாக்த்தான் வந்து அழகா நடித்துவிட்டுப் போகிறர்ர். அதாவது முள்ளும் மலரும் காளி போலதான் இங்கே வருகிற வசீகரனும், சிட்டியும்! [உலகநாயகனே! னு நம்ம கமல் கதைக்கு சம்மந்தம் இல்லாத சுயசொறிதல் பாட்டு வரிகள் வருவதுபோல பாடல்கள் எதுவும் இதில் இல்லை!.]

* ரஜினி, மூன்று வேடங்களிலும் (விஞ்ஞானி, ரோபாட்-ஹீரோ, ரோபாட்- வில்லன்) தன்னை வித்தியாசப் படுத்தி அம்சமாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ரோபோ ரஜினி நடிப்பை பாராட்டாதவன் மனசாட்சியே இல்லாத கேவலமான ஒருவன் னு அடிச்சு சொல்லலாம்!

* இன்னொன்னு, ரஜினியைவிட எந்தக்கொம்பனும் இந்த கேரக்டரை இவ்வளவு சிறப்பா செய்து இருக்க முடியாது என்று நான் சொல்லல, எல்லா விமர்சகர்களும் சொல்லியிருக்காங்க!

*இணையதளத்தில் இதுவரை வந்த விமர்சனங்கள் எல்லாமே "பாசிட்டிவா"தான் வந்திருக்கு (>90%). குறைந்தது மூன்று ஸ்டார்களாவது கொடுத்துள்ளார்கள்.

* இன்னொரு விசேஷம், சிறுவர்/சிறுமியர் பெண்கள் எல்லோரும் சேர்ந்து உக்காந்து ரசித்துப் பார்க்க முடியும் என்பதுபோல் "அசிங்கமில்லாமல்" படம் வந்திருக்கு.

* தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை, இந்திய சினிமாவில் இதுபோல் ஒரு டெக்லிக்கல் எக்ஸலென்ஸ் இதுவரை வந்ததில்லை!

* ரத்னவேலுவின் ஒளிப்பதிவு பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகளில் நல்லா வந்திருக்கு!

* தேவை இல்லாத வயலெண்ஸ் எதுவும் இல்லைங்க இந்தப் படத்தில்!

* ஐஸ்வர்யா ராய் வரும் எல்லாப்பாடல்களிலும் நடனத்தையும். இவர் நடிப்பையுமே ரசிக்க முடியுது. ஓவராக்ஷன் இல்லாமல் அழகா வந்து நடித்துவிட்டுப் போகிறார். She is certainly hot!

* ஹிந்தி, தமிழ், தெலுகு எல்லாவற்றிலும் வந்த விமர்சனங்கள் எல்லாமே ரஜினியை வானலாவ புகழ்ந்து இருக்கிறது.

* அமெரிக்காவில் முதல் 3 நாட்களில் கலக்சன் 2.1 மில்லியன் டாலராம்! இந்த கலக்சன் சாருக் கானுடைய மை நேம் இஸ் கானின் சாதனையை முறியடிக்கிறது

* மலேசியாவில் முதல் மூனு நாட்கள் கலக்சன் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களாம்! இதுவும் புதிய சாதனை!

* இங்கிலாந்து நாட்டில் முதல் நாள் கலக்சன் மட்டும் 50,000 ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ். வீக் எண்ட் கலக்சன் இன்னும் வரவில்லை!

* ஹிந்தியில் ரோபோ முதல் 3 நாள் கலக்சன் 8 கோடியாம்! இது பெரிய சாதனை இல்லையென்றாலும், பரவாயில்லைனு சொல்றாங்க!

* சென்னையில் முதல் 3 நாள் கலக்சன் 2 கோடிக்கு மேலே! இதுவும் புதிய சாதனை!

* ஆந்திராவில், ஹைதராபாத் ஏரியாவில் மட்டும் (64 திரையரங்குகளில் அரங்குநிறைந்த காட்சியாக ஓடி) 4 கோடி கலக்சன், முதல் மூனு நாட்கள் கலக்சன். இந்தப் படம் தெலுகு மொழியில் சந்தேகமே இல்லாமல் ஒரு ப்ளாக் பஸ்டர்தான்!

படத்தில் குறைகள் இல்லாமல் எப்படி இருக்கும்? குறைனு சொல்லப் போனா, உங்களுக்கு பிடிக்காத அனிமேசன் மற்றும் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்! ஆனால் உங்களுக்குப் பிடிக்காத இவைகள், உங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கும்! ஒரு சில காட்சிகளில் விஞ்ஞானி ரஜினியை குறைத்த தாடியுடன் காட்டி இருக்கலாம்!

மற்றபடி ஒரு தமிழ்ப் படம் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்தைப் பாராட்டலைனாலும் பரவாயில்லை, கரிச்சுக் கொட்டிக்கிட்டு இன்னும் லூசாவே எதையாவது ஒளறிக்கிட்டுத் திரிகிறார்கள் ஒரு சிலர்! அது அவன் தலையெழுத்துனு போக வேண்டியதுதான்!

எந்திரன் சாதனைகளை இன்னும் கொஞ்ச நாட்களில் மறுபடியும் பார்ப்போம்! :)

24 comments:

  1. படத்தோட (திருட்டு) சி.டி. எப்ப வருமுங்க?
    நான் படத்தைப் பாக்க ரொம்ப ஆசையா இருக்கனுங்க. தியேட்டர்ல போயி பாக்கற அளவுக்கு வசதி இல்லைங்கோ?

    ReplyDelete
  2. //தேவை இல்லாத வயலெண்ஸ்//

    தேவையான வன்முறை, தேவை இல்லாத வன்முறைன்னு எல்லாம் இருக்கா?

    அல்லது, ரஜினி புடுங்குறது எல்லாமே தேவையான ஆணின்னு சொல்ல வர்றீங்களா??


    நசரேயனும் நானும் வினவினது வரலையே இன்னும்??

    ReplyDelete
  3. தலைப்பைப் பார்த்து, எந்திரன் உங்களுக்குப் பிடிக்காமப் போச்சோ என நினைச்சேன்:)!

    ReplyDelete
  4. nanbare

    mansatchi thottu sollenga padam semma copy
    delivery scene from three idiots
    climax from godzilla
    final climax from terminator when arnold gets into fire
    apooram oru scientist robot dismandle panna theriyalana eppudinga somme kuppa thottila poturuvaru enna kathala 4 moolam poova

    ReplyDelete
  5. ரஜினி எல்லா படத்திலும் சுயசொறிதல் தான் செய்து கொண்டு இருந்தார், இந்த ஒரு படத்துல செய்யல, அதுக்கு இவளுவு சீனா

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. *** DrPKandaswamyPhD said...

    படத்தோட (திருட்டு) சி.டி. எப்ப வருமுங்க?
    நான் படத்தைப் பாக்க ரொம்ப ஆசையா இருக்கனுங்க. தியேட்டர்ல போயி பாக்கற அளவுக்கு வசதி இல்லைங்கோ?

    4 October 2010 4:46 PM***

    சிரிக்கவும் செய்றேன் சிந்திக்கவும் வைக்கிறீங்க! :)

    Behindwoodsல ஏதோ ஒரு லாட்டரி ட்ரா பண்ணுறாங்கங்க! அதுல எண்டர் பண்ணுங்க, உங்களுக்கு ஃப்ரியா டிக்கட் கெடைக்க வாய்ப்பிருக்குங்க! :)

    ReplyDelete
  8. ***பழமைபேசி said...

    //தேவை இல்லாத வயலெண்ஸ்//

    தேவையான வன்முறை, தேவை இல்லாத வன்முறைன்னு எல்லாம் இருக்கா?

    அல்லது, ரஜினி புடுங்குறது எல்லாமே தேவையான ஆணின்னு சொல்ல வர்றீங்களா??


    நசரேயனும் நானும் வினவினது வரலையே இன்னும்??

    4 October 2010 5:16 PM***

    இந்தப்படத்தில் வயலண்ஸ் இல்லைஉ சொல்ல வந்தேனுங்க, அம்புட்டுத்தான்!

    நீங்க வினவியது மறக்கலை. என்னை விட்டுடுங்களேன், ப்ளீஸ்?

    ReplyDelete
  9. *** ராமலக்ஷ்மி said...

    தலைப்பைப் பார்த்து, எந்திரன் உங்களுக்குப் பிடிக்காமப் போச்சோ என நினைச்சேன்:)!

    4 October 2010 6:37 PM***

    தலைப்பு கொஞ்சம் ட்விஸ்ட் தாங்க! படம் நல்லாத்தான் இருந்ததுங்க! சின்னப் பைய்யன் மாதிரி சிரிச்சேன் ஒரு சில காமெடிக்கு! ரொம்ப நாளாச்சு இப்படி சிரிச்சு! வருகைக்கு நன்றிங்க, ராமலக்ஷ்மி!

    உங்க "இணையதள வீட்டுக்கு" வந்து ரொம்ப நாளாச்சு! :(

    ReplyDelete
  10. ***Blogger BALAJI M said...

    nanbare

    mansatchi thottu sollenga padam semma copy
    delivery scene from three idiots
    climax from godzilla
    final climax from terminator when arnold gets into fire
    apooram oru scientist robot dismandle panna theriyalana eppudinga somme kuppa thottila poturuvaru enna kathala 4 moolam poova

    4 October 2010 7:54 PM***

    கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ண மூர்த்தினு ஒரு மேதாவி இருக்காருங்க. அவர் பின்னூட்டம் படிங்க. கமல் அடிக்கிற காப்பியெல்லாம் தப்பே இல்லைனு சொல்லுறாரு. இதைமட்டும் தப்புனா சொல்லுவாரு? அவர்ட்ட கேட்டா ஏதாவது சப்பைகட்டுவாரு!

    என்னைக்கேட்டீங்கனா, காப்பியடிக்கிரது தப்புதானுங்க, அது நீங்களாயிருந்தாலும் நானாயிருதாலும், யாராயிருந்தாலும்!

    ReplyDelete
  11. ***andygarcia said...

    ரஜினி எல்லா படத்திலும் சுயசொறிதல் தான் செய்து கொண்டு இருந்தார், இந்த ஒரு படத்துல செய்யல, அதுக்கு இவளுவு சீனா

    4 October 2010 10:43 PM***

    அண்ணே ஆண்டி கார்ஷியா!

    ரஜினி படத்தில் சுய சொறிதல் இல்லைனு நான் சொல்லியதை இங்கே காட்டவும்! இந்தப் படத்தில் செய்யலைங்கிறதாங்க சொல்லி இருக்கு! அதியும் சொல்லக்கூடாதுனு நீங்க ஏன் சொல்றீங்கனு தெரியலை!

    அன்புடன்

    -ராபர்ட்-டி-நீரோ

    ReplyDelete
  12. //
    நீங்க வினவியது மறக்கலை. என்னை விட்டுடுங்களேன், ப்ளீஸ்?
    //

    வருண் நீங்க இன்னும் எங்களுக்கு வாய்ப்பே கொடுக்கலை

    ReplyDelete
  13. //ஸ்லம் டாக் மில்லியனருக்கு பதிலா இதுக்கு ஆஸ்கர் கொடுத்து இருக்கலாம்! //

    :):):)

    ReplyDelete
  14. //குடுகுடுப்பை said...
    Why too late vimarasamam?//

    குடுகுடு, மேல ரெண்டு பேர் மன்றாடிட்டு இருக்குறது கண் தெரீல? உமக்கு டெக்சாசு மாடுக மாத்திரந்தான் தெரியுமோ??

    ReplyDelete
  15. பழமைபேசி said...
    //குடுகுடுப்பை said...
    Why too late vimarasamam?//

    குடுகுடு, மேல ரெண்டு பேர் மன்றாடிட்டு இருக்குறது கண் தெரீல? உமக்கு டெக்சாசு மாடுக மாத்திரந்தான் தெரியுமோ??
    //

    some Horses too..

    ReplyDelete
  16. ***குடுகுடுப்பை said...

    Why too late vimarasamam?
    6 October 2010 10:06 AM ***

    என்னங்க படம் பார்த்தது வீக் எண்ட்ல தான். மண்டே விமர்சனம் கொடுத்தாச்சு! முதல் நாள் முதல் ஷோ பார்க்கலை! :)

    ReplyDelete
  17. ***நசரேயன் said...

    //
    நீங்க வினவியது மறக்கலை. என்னை விட்டுடுங்களேன், ப்ளீஸ்?
    //

    வருண் நீங்க இன்னும் எங்களுக்கு வாய்ப்பே கொடுக்கலை

    5 October 2010 7:01 AM***

    விடமாட்டேன் னு சொல்றீங்களா? :))

    ReplyDelete
  18. *** அகில் பூங்குன்றன் said...

    //ஸ்லம் டாக் மில்லியனருக்கு பதிலா இதுக்கு ஆஸ்கர் கொடுத்து இருக்கலாம்! //

    :):):)

    5 October 2010 2:05 PM***

    நெசம்மாவே, ஸ்லம்டாக் மில்லியனர் பாடலகள், பி ஜி எம் மை விட இந்தப் படத்தில் மியூசிக் நல்லாத்தாங்க இருக்கு!

    ReplyDelete
  19. ***பழமைபேசி said...

    //குடுகுடுப்பை said...
    Why too late vimarasamam?//

    குடுகுடு, மேல ரெண்டு பேர் மன்றாடிட்டு இருக்குறது கண் தெரீல? உமக்கு டெக்சாசு மாடுக மாத்திரந்தான் தெரியுமோ??

    6 October 2010 10:30 AM***

    அவரு, என் விமர்சனத்தை விமர்சிக்க வந்திருக்காரு! வீக் எண்டே எதிர் பார்த்து இருப்பார் போல இருக்கு :)

    ReplyDelete
  20. ***குடுகுடுப்பை said...

    பழமைபேசி said...
    //குடுகுடுப்பை said...
    Why too late vimarasamam?//

    குடுகுடு, மேல ரெண்டு பேர் மன்றாடிட்டு இருக்குறது கண் தெரீல? உமக்கு டெக்சாசு மாடுக மாத்திரந்தான் தெரியுமோ??
    //

    some Horses too..***

    அந்தக் குதிரைகள் யாரு யாருனு தெரியலையே! :(

    ReplyDelete
  21. வருண் said...
    ***குடுகுடுப்பை said...

    பழமைபேசி said...
    //குடுகுடுப்பை said...
    Why too late vimarasamam?//

    குடுகுடு, மேல ரெண்டு பேர் மன்றாடிட்டு இருக்குறது கண் தெரீல? உமக்கு டெக்சாசு மாடுக மாத்திரந்தான் தெரியுமோ??
    //

    some Horses too..***

    அந்தக் குதிரைகள் யாரு யாருனு தெரியலையே! :(
    //
    I have a picture of those horses,soon I will upload in my blog,that may clear your doubt.

    ReplyDelete
  22. வருண் said...
    ***பழமைபேசி said...

    //குடுகுடுப்பை said...
    Why too late vimarasamam?//

    குடுகுடு, மேல ரெண்டு பேர் மன்றாடிட்டு இருக்குறது கண் தெரீல? உமக்கு டெக்சாசு மாடுக மாத்திரந்தான் தெரியுமோ??

    6 October 2010 10:30 AM***

    அவரு, என் விமர்சனத்தை விமர்சிக்க வந்திருக்காரு! வீக் எண்டே எதிர் பார்த்து இருப்பார் போல இருக்கு :)

    //
    I expected it. but not to criticize as I know you are a Rajni fan, If Rajni was nadodikal Hero, your opinion on that movie would have been different, but my view on nadodikal wont change for 'Hero';

    ReplyDelete
  23. I am not sure. I liked "pasanga" and wrote a decent review on it. That has won some award now. I was not impressed with naadOdigaL. I think I would not have appreciated even if rajni acted in that role!

    ReplyDelete