Wednesday, December 22, 2010

மறுபடியும் மதவாதிகளுக்கு வெற்றி!

"மன்மதன் அம்பு" படத்தில், கவிஞர் கமலஹாசன் எழுதி, பின்னணிப்பாடகர் கமலஹாசன் பாடிய, அந்தப்பாடலில் வரும் ஒரு சில வரிகளால், கமலஹாசன் இந்துமத நம்பிக்கையை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டி, கடைசியில் அந்தப்பாடலை வெற்றிகரமாக கழட்டிவிட்டார்கள் மதவாதிகள்.

முதலில் செண்சார் போர்ட் இதைக் கண்டுக்கவில்லை என்றதும் "யாருடைய மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன், இந்தப்பாடல் இந்தப் படத்தில் இடம்பெறும்" என்றார் கமலஹாசன். கடைசியில் இவர்கள் அக்கப்போர் தாங்காமல், பணம் போட்டுப் படத்தை எடுத்த தயாரிப்பாளர் எதுக்கு வம்பு னு அந்த பாட்டை தூக்கிடலாம்னு செய்த முடிவை மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொண்டார், கமல்.

நம்ம நாட்டைப்பொறுத்தவரை இன்றுவரை மைனாரிட்டியான பகுத்தறிவுவாதிகளை, மைனாரிட்டியான மதவாதிகள் இதுபோலப் பிரச்சினைகளை உண்டாக்கி வீழ்த்துவது எளிது. கடவுள் நம்பிக்கை உள்ள மக்கள் 80 விழுக்காடுகளுக்கு மேல் உள்ள இந்தியாவில் இந்து மதவாதிகள் சாதாரண இந்துக்களுக்கு ராமா, கிருஷ்ணா, மயிறு, மட்டைனு எதையாவது சொல்லி மதப்பற்றை உண்டாக்கி, பொதுமக்களைத் தூண்டிவிட்டு அவர்கள் காரியத்தை சாதிப்பது காலங்காலமாக நடந்து வருகிறது.

சினிமா என்பது வியாபாரம்னா, ஒரு நடிகன் என்பவன் ஒரு வியாபாரிதான். அதனாலதானோ என்னவோ தன் பிள்ளை டாக்டராகனும், விஞ்ஞானியாகனும், இஞ்சினியராகனும் என்று ஆசைப்படுவனல்ல சினிமா கலைஞன். தன் மகள்/மகனை சினிமாத்துறையில் நடிகனாகவோ, நடிகையாகவோ, இயக்குனராகவோ ஆக்கி கோடி கோடியா சம்பாரிக்கனும்னு நினைப்பவன்ந்தான் முயல்பவந்தான் சினிமாவில் இருக்கும் கலைஞன் . இதில் புரட்சித் தமிழர் சத்யராஜிலிருந்து பகுத்தறிவுவாதி கமலஹாசன் வரை யாரும் விதிவிலக்கல்ல!

சினிமாக் கலைஞன் தன் தொழிலில் வெற்றியடையனும்னா அவனுக்கு பொதுமக்களான ஆத்திகர்களின் ஆதரவு இல்லாமல் முடியாது என்பதை திரும்பத் திரும்ப கற்றுக்கொண்டுதான் வருகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஹிந்துக்கள்தான் வெகுஜன பொதுமக்கள்! அவர்கள் நம்பிக்கையை அனுசரித்துத்தான் சிவாஜி, எம் ஜி ஆர், ரஜினி, கமல் எல்லாருமே போனார்கள், போகிறார்கள். கலைக்கூலியாக வேலை செய்யும் சினிமா கலைஞன், தன் சொந்த கருத்தான பகுத்தறிவு கருத்துக்களை திரைப்படம் மூலமாக அவ்வளவு எளிதில் நம் மக்களிடம் விற்க முடியாது! அது எப்போது சாத்தியம் என்றால், நம் நாட்டில் பகுத்தறிவுவாதிகள் 70 விழுக்காடுகளுக்கு மேலே ஆகும்போது! அது என்னைக்கு நடக்கப் போகுதுனு எனக்குத் தெரியலை!

ஒரு படத்திற்கு "பூஜை போடனும்னு" தயாரிப்பாளர் நினைத்தால் பூஜை போடும்போது கடவுள் நம்பிக்கை இல்லாத அந்த நடிகன் கலந்துகொண்டுதான் ஆகனும். இல்லை, நான் நாத்திகன் என்பதெல்லாம் அவர் தனிப்பட்ட விசயம். கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுப்பவர்கள் பொதுவாக இறை நம்பிக்கையுடன், சில மூடப்பழக்க வழக்கங்களுடந்தான் இருக்காங்க! அதுபோக படம் வெற்றியடையனும் என்பதற்காகவும், போட்ட காசை எடுக்கனும் என்பதற்காகவும் அவர்கள் சில வியாபார, மார்க்கட்டிங் யுக்தியை கடைபிடித்துத்தான் வருகிறார்கள்.

சினிமாவை விடுங்க! இப்போ எல்லாம் பதிவுலகில்கூட பகுத்தறிவுவாதிகளுக்கு பஞ்சமாகிக்கொண்டு வருகிறது. பதிவுலகில் எத்தனை பதிவர்கள் பகுத்தறிவை அள்ளி எறியிறாங்க, சொல்லுங்க? சமீபகாலமாக மதபோதனைகளையோ அல்லது கடவுள் எதிர்ப்பு கொள்கைகளையோ தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் போகக் கற்றுக்கொண்டார்கள் பதிவுலக வியாபாரிகள் பலர்! போங்கப்பா நாத்திகமாவது ஆத்திகமாவது எனக்கு பொழைப்பு ஓடினால் போதும்னு நினைக்கும் பதிவர்கள் பலர் இருக்காங்கனு சொன்னால், அது யாரு யாருனு கேக்காதீங்கப்பா!

10 comments:

  1. கொட்டை எழுத்தில் உள்ளது மதவாதிகளைச் சாடவா? என்ன செய்தாலும் உம்முடைய அஜெண்டாவை விடுவதில்லை. கமல்ஹாசன் மாதிரி பயப்பட நமக்குத்தான் முகம் தெரியாதே?

    ReplyDelete
  2. //யாரு யாருனு கேக்காதீங்கப்பா!//

    மணி அண்ணனா ?

    ReplyDelete
  3. ***குடுகுடுப்பை said...

    கொட்டை எழுத்தில் உள்ளது மதவாதிகளைச் சாடவா? என்ன செய்தாலும் உம்முடைய அஜெண்டாவை விடுவதில்லை. கமல்ஹாசன் மாதிரி பயப்பட நமக்குத்தான் முகம் தெரியாதே?

    22 December 2010 2:27 PM***

    நான் இதை எழுதும்போதே நெனச்சேன். குடுகுடுப்பை வந்து "கொடுப்பாரு"னு!

    கரெக்ட்டா கொடுத்துட்டீங்க!

    ***கமல்ஹாசன் மாதிரி பயப்பட நமக்குத்தான் முகம் தெரியாதே?***

    முகமா முக்கியம்? முகத்தைக் காட்டினால், இந்த "முகத்துக்கு" நீங்க இவ்ளோதான் பேசலாம்னு சொல்லுவாங்க!

    சரி, நான் என்ன சொல்றேன்னா, மெஜாரிட்டி மத நம்பிக்கை உள்ள ஒலகத்திலே இப்படி ஒரு பாட்டை எழுதி அதை வெளியிடாமல் இருந்து இருக்கலாம். வெளியிட்டுவிட்டு பின் வாங்குவதால் மதவாதிகள் சாதித்தது போல இருக்கு எனக்கு. எரிச்சலும் கோபமும் வருது.

    ReplyDelete
  4. ***நசரேயன் said...

    //யாரு யாருனு கேக்காதீங்கப்பா!//

    மணி அண்ணனா ?***

    அவரு வேலையில் பிஸியா இருக்கும்போது இப்படி சாடுறீங்களே?
    வந்து கூடிய சீக்கிரம் ஒரு லிஸ்டை அவரே தருவாரு பாருங்க! அவர் பேரை அதில் அவரு எழுதுவாரானு உங்களுக்குத் தெரியனும் :)))

    ReplyDelete
  5. இன்று இணையத்திலே வரும் சோதிடம்,சாதகம் குப்பைகளைப் படித்து வரும் பட்டம் வாங்கியுள்ள பதிவாளர்களைப் பார்க்கும் போது மத வாதிகள் சூது வெறும் படிப்பினால் மட்டும் மாறிவிடாது என்பது புரிகிறது.பாவம், ஆண்டவன்,எப்படியெல்லாம் ஏமாற்ற வழி வகுத்து மாட்டிக் கொண்டு விட்டார்.அறிவாவது மண்ணாவது,எல்லாம் தொழில் தான்.

    ReplyDelete
  6. ***சி.பி.செந்தில்குமார் said...

    குட் போஸ்ட்***

    நன்றிங்க, செந்தில்குமார். :)

    ReplyDelete
  7. ***Thamizhan said...

    இன்று இணையத்திலே வரும் சோதிடம்,சாதகம் குப்பைகளைப் படித்து வரும் பட்டம் வாங்கியுள்ள பதிவாளர்களைப் பார்க்கும் போது மத வாதிகள் சூது வெறும் படிப்பினால் மட்டும் மாறிவிடாது என்பது புரிகிறது.***

    அது உண்மைதான், சிறுவயதிலேயே பெற்றோர்கள் "ப்ராயின் வாஷ்" பண்ணிவிட்டுடுவாங்க போல!

    ***பாவம், ஆண்டவன்,எப்படியெல்லாம் ஏமாற்ற வழி வகுத்து மாட்டிக் கொண்டு விட்டார்.அறிவாவது மண்ணாவது,எல்லாம் தொழில் தான்.***

    :)

    22 December 2010 5:51 PM

    ReplyDelete
  8. நண்பரே கமலுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்த்திதான். படத்தில் வரும் உரையாடல் ஒன்றை பாருங்கள்.

    மாதவன்: அதென்னய்யா எல்லா கள்ள புருஷங்களும் காவி சட்டைதான் போடுறாங்க?

    கமல்: ஒரு வேலை religion காரணமாக இருக்குமோ என்னவோ? அதேதுக்கு நமக்கு?

    இந்த வசனம் தேவையா?

    ReplyDelete
  9. ***பாலா said...

    நண்பரே கமலுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்த்திதான். படத்தில் வரும் உரையாடல் ஒன்றை பாருங்கள்.

    மாதவன்: அதென்னய்யா எல்லா கள்ள புருஷங்களும் காவி சட்டைதான் போடுறாங்க?

    கமல்: ஒரு வேலை religion காரணமாக இருக்குமோ என்னவோ? அதேதுக்கு நமக்கு?

    இந்த வசனம் தேவையா?
    23 December 2010 4:10 AM ****

    நான் படம் இன்னும் பார்க்கலைங்க, பாலா!

    திரும்பத் திரும்ப படிச்சாலும் இந்த வசனம் ஒரே உளறல் மாதிரி இருக்கு!

    என்னத்தை சொல்ல வர்ராங்கனு தெரியலை ரெண்டுபேருமா சேர்ந்து :)

    ReplyDelete