Friday, December 24, 2010

இன்றைய பதிவுலகில் வினவு, மாற்று, அடுத்து?

சமீபத்தில் பதிவுலகில்தான் எத்தனை மாற்றங்கள்! நெறைய பதிவுகள் எழுதும் "பெரிய" பதிவர்கள் பலர் காணாமல் போய்விட்டார்கள். அதாவது தமிழ்மணம் போன்ற திரட்டிகளான பதிவுலகக் குடும்பத்தில் இருந்து பிரிந்து என் வலைதளமும் நானும் என்று தனிக்குடித்தனம் போய்விட்டார்கள் பல “பெரிய” பதிவர்கள்.

இன்னொரு அதிசயம் என்னனா புதிதாக வரும் பதிவர்கள் வெகு சீக்கிரமே பாப்புளர் ஆகிவிடுகிறார்கள! வலைதளம் ஆரம்பித்து இரண்டு-ஆறு மாதங்களில் எங்கேயே மேலே போயிடுறாங்க! இதெப்படி சாத்தியம்? ஒருவேளை இவர்கள் முன்பே வேறு பெயரில் இருந்த பதிவர்களா? பேரு மட்டும்தான் வேறயா, பதிவர் பழையவர்தானோ? என்கிற பல சந்தேகங்கள் எனக்கு வராமல் இல்லை!

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் தூக்கப்பட்டு, வாசகர் பரிந்துரைக்குமட்டும் பழக்கப்பட்டுப்போன ஒரு சூழலில் சூடான இடுகைகள் மறுபடியும் வந்துவிட்டன! இப்போது வாசகர் பரிந்துரை மற்றும் சூடான இடுகைகளுக்கு சம மதிப்பு உள்ளதுபோல இருக்கு! வாசகர் பரிந்துரைக்கு 10 பதிவர்கள் உதவி போதும் முகப்பில் தெரிய! சூடான இடுகைக்கு மேட்டர் சூடோ இல்லையோ தலைப்பு சூடா இருக்கனும்.

இதுபோக ஒரு பெரிய முன்னேற்றம் என்னனா தமிழில் டாப் 20 வலைபதிவுகள் என்ற தமிழ்மண மதிப்பீடு பல பதிவர்களை ரொம்பவே ஊக்குவிக்குது. இதை வாரா வாரம் மாற்றுவதால் பலருக்கும் இதில் இடம்பெற வாய்ப்புக் கிடைப்பது பெரிய விசயம். தமிழ்மணத்தின் இந்த ஒரு புதிய முயற்சி உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒன்று. இந்த ரேட்டிங் தமிழ்மணத் திரட்டியை பயண்படுத்தும் பதிவர்களுக்கு மட்டுமே மற்றும் தமிழ்மணம் மூலமாக வாசகர்கள் பெறும் ஹிட்ஸை பொறுத்தே என்பது தெரிந்து இருந்தாலும், இது பதிவுகத்தையும், பதிவர்களையும் நெறைய தரமான எழுத்து எழுத ஊக்குவிக்குது. மேலும் தமிழ்மண திரட்டியின் தரத்தை ஒரு படி மேலே தூக்கி வைத்துள்ளது என்பதும் உண்மைதான்.

தனிநபராக எழுதி வந்த பதிவர்கள் பலர் ஒன்றுகூடி குழுமமாக எழுத ஆரம்பித்த முதல் வலைதளம் “வினவு”. வினவின் முன்னேற்றம் மற்றும் பெரிய ஆக்கிரமிப்பு பற்றி பலருக்கு வயிறெரிந்ததென்னவோ உண்மைதான். வினவு பதிவரசியலில் இறங்கி சில பதிவர்களை தாக்கியதால் அவர்களுக்கு பல நண்பர்களும் பல எதிரிகளும் உருவாகி நிற்கிறது இன்றைய நிலையில்.

இப்போது வினவு குழுமம் போலவே “மாற்று” என்று இன்னொரு குழுமம் உருவாகி உள்ளது. வினவுவுடைய வெற்றிப் பாதையில் இன்று மாற்று உருவாகியதுபோல இன்னும் வெகுவிரைவில் பல வலைதளங்கள் குழுமமாக இயங்கப்போவது என்னவோ உண்மைதான்.

இதுபோல் பலபதிவர்கள் ஒரே முகமூடிபோட்டு “வினவு” “மாற்று” என்று ஒரே பேரில் இயங்கும்போது, அதில் அவர்கள் தியாகமும் இருக்கு பல வசதிகளும் அவர்களுக்கு உண்டு! இதுபோல் ஒரு குழுமமாக தமிழர்கள் இணைந்து இயங்குவது ஒரு ஹெல்த்தியான விசயம்தான். ஆனால் கதை, கவிதைனு எழுதினால் எப்படினு தெரியலை?

14 comments:

  1. உங்களுடைய பதிவுலக அனுபவம் எழுத்துக்களில் தெரிகிறது... உங்களைப்போல consistant ஆக எழுதுவது மிகப்பெரிய விஷயம்...

    ReplyDelete
  2. தல: பதிவுலகைப் பொறுத்தவரையில் நான் கற்றுக்குட்டிதான். பெரியவங்க பலர் சும்மா பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காங்க! :)

    ReplyDelete
  3. நல்லா ஆராய்ந்து எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ***சி.பி.செந்தில்குமார் said...

    நல்லா ஆராய்ந்து எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்
    24 December 2010 5:21 PM ***

    ரொம்ப நன்றிங்க, செந்தில்குமார் :)

    ReplyDelete
  5. இதுபோல் ஒரு குழுமமாக தமிழர்கள் இணைந்து இயங்குவது ஒரு ஹெல்த்தியான விசயம்தான். ஆனால் கதை, கவிதைனு எழுதினால் எப்படினு தெரியலை?///

    குழுமமாக இயங்குவது தொடர வேண்டும். அது ஒரு ஆரோக்யமான கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும். ஒருகாலத்தில் சிற்றிதழ்கள் செய்த வேலையை இன்று பதிவிதழ்கள் செய்கின்றன. செய்யட்டும்.

    ReplyDelete
  6. அடுத்து வரவங்களும் பஞ்சாயத்து பண்ணாம இருந்தா சரிதான்

    ReplyDelete
  7. குழும பதிவுகள் தவறு இல்லை, ஆனால் வலையுலகம் தனிமனித கருத்துக்களை சொல்லும் பொது இடம் என்பதை குறைந்துவிட்டது அப்படி சொன்னாலும் அவங்க குழுவிற்குச் சென்று பின்னூட்டமாகச் சொன்னால் தான் கருத்து பரவும் போல.

    நாளைக்கு நடிகர்கள், நடிகைகள் வலைப்பதிவுக்குள் வந்தால் கூட்டமெல்லாம் அங்கு சென்றுவிடும்... வலையுலகின் தனித்தன்மை மாறுகிறது.......காலமாற்றம்னு ஏற்றுக் கொள்ளனும்...இல்லை என்றாலும் வேற வழி இல்லை

    ReplyDelete
  8. நீராருங்கடலுடுத்த ஓகோய்....
    நிலமடந்தைக் கெழிலொழுகும் ஓகோய்...

    சீராரும் வதனமென ஓகோய்.......
    சீரிளமைத் திறம் வியந்து ஓகோய்....

    ஓகோய்..... ஓகோய்....

    ReplyDelete
  9. ***Sindhan R said...

    இதுபோல் ஒரு குழுமமாக தமிழர்கள் இணைந்து இயங்குவது ஒரு ஹெல்த்தியான விசயம்தான். ஆனால் கதை, கவிதைனு எழுதினால் எப்படினு தெரியலை?///

    குழுமமாக இயங்குவது தொடர வேண்டும். அது ஒரு ஆரோக்யமான கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும். ஒருகாலத்தில் சிற்றிதழ்கள் செய்த வேலையை இன்று பதிவிதழ்கள் செய்கின்றன. செய்யட்டும்.

    24 December 2010 8:01 PM***

    குழுமமாக சில பல சிக்கல்கள் உண்டுனு நெனைக்கிறேன். "வினவு" மற்றும் "மாற்று" என்கிற ஆசிரியருக்கு ஒரு ஒரிஜினாலிட்டி இல்லாமல் போய்விடும் என்று தோனுது.

    குழுமத்தில் இருவர் இருந்தாலே கருத்து வேறுபாடு வரும். பலர் சேர்ந்து எப்படி கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருக்க முடியும் எனபது பெரிய கேள்வி!

    மற்றபடி குழுமமாக இயங்குவதில் தவறெல்லாம் ஒண்ணும் இல்லை!

    ReplyDelete
  10. ***Blogger இரவு வானம் said...

    அடுத்து வரவங்களும் பஞ்சாயத்து பண்ணாம இருந்தா சரிதான்

    24 December 2010 8:57 PM**

    இனிமேல் குழும மோதல்கள் அதிகமாகுமா னு பொறுத்திருந்துதான் பார்க்கனும் . :)))

    ReplyDelete
  11. ***கோவி.கண்ணன் said...

    குழும பதிவுகள் தவறு இல்லை, ஆனால் வலையுலகம் தனிமனித கருத்துக்களை சொல்லும் பொது இடம் என்பதை குறைந்துவிட்டது அப்படி சொன்னாலும் அவங்க குழுவிற்குச் சென்று பின்னூட்டமாகச் சொன்னால் தான் கருத்து பரவும் போல.

    நாளைக்கு நடிகர்கள், நடிகைகள் வலைப்பதிவுக்குள் வந்தால் கூட்டமெல்லாம் அங்கு சென்றுவிடும்... வலையுலகின் தனித்தன்மை மாறுகிறது.......காலமாற்றம்னு ஏற்றுக் கொள்ளனும்...இல்லை என்றாலும் வேற வழி இல்லை

    24 December 2010 9:44 PM***

    எந்த மாற்றமும் நம்மை ஒருபடி மேலே கொண்டுபோனால் சரிதான். :)

    ReplyDelete
  12. ***பழமைபேசி said...

    நீராருங்கடலுடுத்த ஓகோய்....
    நிலமடந்தைக் கெழிலொழுகும் ஓகோய்...

    சீராரும் வதனமென ஓகோய்.......
    சீரிளமைத் திறம் வியந்து ஓகோய்....

    ஓகோய்..... ஓகோய்....

    25 December 2010 6:11 AM**

    Merry Christmas! :)

    ReplyDelete
  13. எது எப்படி மாறினாலும் சூடான இடுகையில் இனி வாரம் இருமுறையாவது இருப்பதை மாற்றவே முடியாது.#திறமைசாலி

    ReplyDelete
  14. ***குடுகுடுப்பை said...

    எது எப்படி மாறினாலும் சூடான இடுகையில் இனி வாரம் இருமுறையாவது இருப்பதை மாற்றவே முடியாது.#திறமைசாலி
    25 December 2010 2:53 PM ***

    உங்க தவறான "கணிப்பை" உங்களுக்கு காலம் விரைவில் உணர்த்தும் :)

    ReplyDelete