Saturday, December 25, 2010

தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!

தமிழன் என்று தலைகுனிய வேண்டிய சில சூழல்கள் இன்று இருந்தாலும், தமிழன் என்று நான் பெருமைப்படவும் பல விசயங்கள் நம்மிடம் இன்னும் இருக்கின்றன..

நான் ஒரு பெங்காளி அம்மாவிடம் பேசிக்கொண்டுயிருக்கும்போது தமிழர்கள் “உயிர்போன உடலை” எரிப்பதும் உண்டு, புதைப்பதும் உண்டு என்று சொன்னேன். உடனே, அந்தம்மா, “ஹிந்துக்களா?” என்றது அதிசயமாக. “ஆமாம் ஹிந்துக்களும் புதைப்பதுண்டு!” என்றேன். உடனே அந்தம்மா “பெங்காளிகளில் ஹிந்துக்களைப் புதைப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை” என்றது. “ஹிந்து முறைப்படி எரிப்பதுதானே நம்ம கலாச்சாரம்?” என்ற கேள்வியைத் தொடுத்தது. “தமிழர்களை ஹிந்துக்கள்னு ஒரு வட்டத்தில் கொண்டுவருவது கஷ்டம்” என்று சொல்லி முடித்தேன்.

“சிறு துளி பெரு வெள்ளம்” என்ற பழமொழியை ஒரு வாதத்தில் சொன்ன போது, என்னுடன் எதிர் வாதம் செய்த தமிழ் நண்பர், வாத எதிர் வாதத்தைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, அது “பல துளி பெரு வெள்ளம் நு வருவதுதான் சரிங்க” என்றார். “ஆமாங்க, இப்போத்தான் இந்தப் பழமொழி ரொம்ப அர்த்தமுள்ளதாக இருக்கு” என்றேன். விவாதம் என்கிற விதண்டாவதத்தில் கிடைக்கும் இலாபம் இதுபோல் இரண்டு தமிழர்கள் ஒரு சில உண்மைகளை உரையாடி தெளிவுபடுத்திக் கொள்வதுதான். விவாதத்தில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் அர்த்தமற்றது! ஒரு தமிழரிடம் இருந்து இன்னொரு தமிழர் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதே முக்கியம்!

“அன்னை வேளாங்கன்னி” மற்றும், “ஏர்வாடி தர்ஹா” போன்ற கிறித்தவ மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு இடங்களுக்கு தமிழர்கள் (இந்துக்கள்) போய் வழிபடுவது, வேண்டுதல்கள் செய்வதெல்லாம் சர்வ சாதாரணமாகத்தான் இருந்தது, இன்னும் இருக்கிறது. தமிழன் என்னைக்குமே மதவெறி பிடித்து அலையவில்லை! எம்மதமும் சம்மதம் என்றுதான் வாழ்ந்துகொண்டு இருந்தான். ஆனால் சமீப காலமாகத்தான் “ராமர் கோயில்” “பாபர் மசூதி”னு பல பிரச்சினைகளை வட இந்தியர்களும், நம்ம ஊர்ல “எங்கே பிராமணன்”னு எழுதிக்கொண்டு தேடிக்கொண்டு திரியும் ஒரு சில விஷப் பார்ப்பணர்களும் உருவாக்கி தமிழர்களை மதவெறியர்களாக்கி ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

அந்தக் காலத்தில் “சங்கராபரணம்”, “ஷோலே” வேறு மொழிப் படங்கள் தமிழ் நாட்டில் சக்கப்போடு போட்டன. சிவாஜி, எம் ஜி ஆர் நடித்த படங்கள் எல்லாம் தமிழ் நாட்டில்தான் நல்ல வருமானம் கொடுத்தன. வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு பெருசா எதுவும் சாதிக்கவில்லை! ஆனால் இன்றைக்கு, சந்திரமுகி, சிவாஜி, தசாவதாரம், அந்நியன், எந்திரன் போன்ற படங்கள் டப் செய்யப்பட்டு பலகோடி ரூபாய்களை ந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழ்ப்படத் தயாரிப்பாளர்களுக்கு வருவாய் ஈட்டுகிறது. முக்கியமாக எந்திரன் (ரோபோ) என்ற பெயரில் ஆந்திர மாநிலத்தில் 2010 ல் #1 படமாக வசூலில் சாதனை புரிந்து இருக்கு!

பி சுஷீலா. ஆர்க் என்கிற சைட்ல பி சுஷீலா பாடிய ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களுக்கு நம்ம மக்கள் பொறுமையாக பாடல்களைக்கேட்டு லிரிக்ஸை எழுதிக் பிரசுரிச்சு இருக்காங்க. இதேபோல் தெலுகு, கன்னடப் பாடல்களுக்கெல்லாம் ஆந்திர, கன்னட மக்கள் நம்மைப்போல் லிரிக்ஸ் எழுதி பிரசுரிக்கவில்லை! என்ன சினிமாப்பாட்டுத்தானே என்ற அலட்சியம் வேண்டாம். பல நல்ல தமிழ்க்கவிதைகளும் இந்தப்பாடல்களில் அடங்கும்.

நாம் தமிழர் என்று பெருமைப்படும் பல விசயங்கள் இன்னும் நம்மிடம் இருக்கத்தான் செய்யுது என்பது ஆறுதலளிக்கும் விசயம். அம்புட்டுத்தான்!

13 comments:

  1. வருண்,

    பல சிறு துளியே பெரு வெள்ளமாக மாறும்

    ஆகவே பல சிறு துளி பெரு வெள்ளம் என்றும் சொல்லலாம்

    அன்புடன்
    அரவிந்தன்
    பெங்களுர்

    ReplyDelete
  2. என் சுவாச காற்றே படத்தில் இருந்து ஒரு கவிதை !!


    பாடல் வரிகள் உபயம் பதிவர் சந்திரவதனா http://cinemapadalkal.blogspot.com/2005/10/blog-post_18.html மற்றும் வெற்றிவேல் http://aalthotabupathy.blogspot.com/2005/07/blog-post_25.html

    ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
    ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
    ஒரு துளி... இரு துளி...
    சிறு துளி... பல துளி...
    பட பட தட தட தட தட
    சட சட சிதறுது

    சின்னச் சின்ன மழைத்துளிகள்
    சேர்த்து வைப்பேனோ
    மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்
    கோர்த்து வைப்பேனோ

    சின்னச் சின்ன மழைத்துளிகள்
    சேர்த்து வைப்பேனோ
    மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்
    கோர்த்து வைப்பேனோ

    சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
    நான் சக்கரவாகப் பறவையானேனோ
    மழையின் தாரைகள் ஈரவிழுதுகள்
    விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

    சின்னச் சின்ன மழைத்துளிகள்
    சேர்த்து வைப்பேனோ
    மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்
    கோர்த்து வைப்பேனோ

    சிறு பூவினிலே விழுந்தால்
    ஒரு தேன்துளியாய் வருவாய்
    சிறு சிற்பியிலே விழுந்தால்
    ஒரு முத்தெனவே மலர்வாய்
    பயிர் வேரினிலே விழுந்தால்
    நவதானியமாய் விளைவாய்
    என் கண்விழிக்குள் விழுந்ததனால்
    கவிதையாக மலர்ந்தாய்

    அந்த இயற்கை அன்னை படைத்த
    ஒரு பெரிய Shower இது
    அட இந்த வயது கழிந்தால்
    பிறகெங்கு நனைவது
    இவள் கன்னி என்பதை இந்த மழை
    கண்டறிந்து சொல்லியது

    சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
    நான் சக்கரவாகப் பறவையானேனோ
    மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
    விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

    மழை கவிதை கொண்டு வருது
    யாரும் கதவடைக்க வேண்டாம்
    ஒரு கறுப்புக் கொடி காட்டி
    யாரும் குடை பிடிக்க வேண்டாம்
    இது தேவதையின் பரிசு
    யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
    நெடுஞ்சாலையிலே நனைய
    ஒருவர் சம்மதமும் வேண்டாம்

    அந்த மேகம் சுரந்த பாலில்
    ஏன் நனைய மறுக்கிறாய்
    நீ வாழ வந்த வாழ்வில்
    ஒரு பகுதி இழக்கிறாய்

    நீ கண்கள் மூடிக் கரையும் போது
    மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்
    நீ கண்கள் மூடிக் கரையும் போது
    மண்ணில் சொர்க்கம் மீளுவாய்

    சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
    நான் சக்கரவாகப் பறவையானேனோ
    மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
    விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

    சின்னச் சின்ன மழைத்துளிகள்
    சேர்த்து வைப்பேனோ
    மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்
    கோர்த்து வைப்பேனோ
    சின்னச் சின்ன மழைத்துளிகள்
    சேர்த்து வைப்பேனோ
    மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்
    கோர்த்து வைப்பேனோ

    ReplyDelete
  3. "தமிழன் பெரிய புடுங்கி" என்று அலட்டிக் கொள்ளும் உங்களைப் போன்ற வீணர்களப் பார்த்துத் தான் தந்தை பெரியார் சொன்னார் "தமிழன் காட்டுமிராண்டி இனம்" என்று.
    அகம்பாவம் பிடித்து அலையும் உங்களைப் போன்றவர்கள் நிறைந்து காணப்படும்,தமிழ்ச் சமுதாயம் இன்னும் எத்தனை பெரியார் அவதரித்தாலும் காட்டுமிராண்டி இனமாகத் தான் உலகத்தால் காணப்படும்.

    ReplyDelete
  4. **அரவிந்தன் said...

    வருண்,

    பல சிறு துளியே பெரு வெள்ளமாக மாறும்

    ஆகவே பல சிறு துளி பெரு வெள்ளம் என்றும் சொல்லலாம்

    அன்புடன்
    அரவிந்தன்
    பெங்களுர்

    25 December 2010 7:30 PM***

    நன்றிங்க, அரவிந்தன் :)

    ReplyDelete
  5. **புருனோ Bruno said...

    என் சுவாச காற்றே படத்தில் இருந்து ஒரு கவிதை !!


    பாடல் வரிகள் உபயம் பதிவர் சந்திரவதனா http://cinemapadalkal.blogspot.com/2005/10/blog-post_18.html மற்றும் வெற்றிவேல் http://aalthotabupathy.blogspot.com/2005/07/blog-post_25.html**

    நன்றி டாக்டர் ப்ரூனோ!

    Merry Christmas! :)

    ReplyDelete
  6. ***periyar said...

    "தமிழன் பெரிய புடுங்கி" என்று அலட்டிக் கொள்ளும் உங்களைப் போன்ற வீணர்களப் பார்த்துத் தான் தந்தை பெரியார் சொன்னார் "தமிழன் காட்டுமிராண்டி இனம்" என்று.
    அகம்பாவம் பிடித்து அலையும் உங்களைப் போன்றவர்கள் நிறைந்து காணப்படும்,தமிழ்ச் சமுதாயம் இன்னும் எத்தனை பெரியார் அவதரித்தாலும் காட்டுமிராண்டி இனமாகத் தான் உலகத்தால் காணப்படும்.

    25 December 2010 8:40 PM***

    தங்கள் கருத்துக்கு நன்றி, பெரியார் :)

    ReplyDelete
  7. என் கணிப்பு இன்றைய வரை சரிதான்.

    ReplyDelete
  8. //என் கணிப்பு இன்றைய வரை
    சரிதான்//

    தமிழனுக்கு எதிரி தமிழ்ன்னா?

    ReplyDelete
  9. உண்மைதான் நண்பா

    ReplyDelete
  10. ***குடுகுடுப்பை said...

    என் கணிப்பு இன்றைய வரை சரிதான்.

    26 December 2010 4:00 PM**

    இன்று வரை? ஆமாம்! :)))

    ReplyDelete
  11. ***Blogger நசரேயன் said...

    //என் கணிப்பு இன்றைய வரை
    சரிதான்//

    தமிழனுக்கு எதிரி தமிழ்ன்னா?

    26 December 2010 4:29 PM**

    வாங்க தள(ல)! :)

    வேற யாரு இதெல்லாம் செய்ய முடியும்? :)

    ReplyDelete
  12. ***இரவு வானம் said...

    உண்மைதான் நண்பா

    27 December 2010 2:51 AM**

    நன்றி, இரவு வானம். :)

    ReplyDelete
  13. பல துளி பெரு வெள்ளம் என்பது மாறி சிறுதுளி பெரு வெள்ளம் என்று ஆகிவிட்டது.

    ReplyDelete